Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

8. மர்ம கிணற்றுக்குள் மரணமோ..!

Advertisement

AMMU ILAIYAAL

Well-known member
Member
சுகுமாறனிடம் பேசிவிட்டு வந்த மூவருக்கும் வெவ்வேறு சிந்தனைகள். அதிலும் கயலுக்கு என்ன மாதிரியான உணர்வு என்று வரையறுக்க முடியாத அளவிற்கு எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது அவளது கைபேசியில் அழைப்புக்கான மணி அடிக்க... சுயம் பெற்றவள் யாரென்று பார்க்க புது நம்பராக இருந்தது. ஒருவித யோசனையோடு கைபேசியை அழுத்தியவளுக்கு.... மறுமுனையில் இருந்து..

"என்ன மேடம் ரொம்ப யோசனை போல.... சீக்கிரமா போன் எடுத்துட்டீங்க. இப்படித்தான் ஒரு அவசரத்துக்கு ஃபோன் பண்ணா லேட் பண்றதா?"

"உங்களுக்கு யார் என்னோட நம்பரை கொடுத்தது?"

"ஹா ! ஹா! பரவாயில்லையே மேடம் ரொம்ப ஷார்ப் தான்...."

"ப்ச்ச்! உங்களுக்கு யார் நம்பர் குடுத்தாங்க ன்னு கேட்டேன்."

"இது என்னடா கொடுமையா இருக்கு.. ஒரு போலீஸ்காரனுக்கு நம்பர் கண்டுபிடிக்கிறதா கஷ்டம். உங்க கிட்ட கொஞ்சி பேச ஒன்னும் நம்பர் வாங்கல... போலீஸ்காரனா மட்டும் தான் பேசுவேன் கவலைப்படாதீங்க."

"நான் எதுக்கு கவலை படனும் மிஸ்டர் கட்டபொம்மன்... நீங்க எப்படி பேசினாலும் என் கிட்ட இருந்து உங்களுக்கு சாதகமான பதில் வராது."

"சரி சரி நம்ம சண்டையை அப்புறம் வச்சுக்கலாம். எனக்கு முக்கியமா ஒரு விஷயம் கேக்கணும் உங்ககிட்ட. அதுக்காக தான் இப்ப கால் பண்ணேன்."

"நமக்குள்ள சண்டை போட கூட எதுவும் இல்லை.."

"கயல் பி சீரியஸ்..."

"சரி என்னன்னு சொல்லுங்க... எதை பத்தி கேக்கணும். "

"இன்னைக்கு நம்ம சுகுமாறனை பார்த்து பேசினோம் இல்லையா.. அதுல சுகுமாரன் மேல ஏதாவது சந்தேகம் வந்துச்சா உனக்கு..." என கட்டபொம்மன் கேள்வி எழுப்ப , இல்ல அண்ணா மேல எனக்கு எந்த சந்தேகமும் வரல. அதேநேரம் அண்ணா எதையோ மறச்சு பேசுறாங்களோன்னு தோணுது... சார்" என்று பதிலளித்தாள் கயல்விழி.

"எதை மறைக்கிறாங்கன்னு ஏதாச்சும் ஐடியா இருக்கா?"

"மறுநாள் அண்ணா அங்க போனதும் வேற என்னமோ நடந்திருக்கு. அதை நம்ம கிட்ட சொல்லாம மறைக்கிறாங்களோன்னு தோணுது சார். அன்னிக்கு எதோ பெருசா நடந்திருக்கு அதனாலதான் அண்ணா அந்த மாதிரி வித்தியாசமா நடந்துக்கிறாங்க. அதாவது..... பொழுது சாஞ்சா நடந்துகிறத சொல்லுறேன். மத்தபடி ஆதியை நினைச்சு அவங்க இன்னமும் வருத்தப்படுறது நல்லாவே புரியுது சார். அண்ணாவைப் பார்த்து பேசினதும் ஏதாச்சும் நம்பிக்கையா தகவல் வரும்னு நினைச்சேன்... இப்போ இருந்த நம்பிக்கையும் போச்சு. அடுத்து என்ன பண்றதுன்னு சத்தியமா தெரியல." என்று கயல்விழி சோகமாக முடிக்க..

"மேடம் சோகமா இருக்க வேண்டியது நாங்க. நீங்க இல்ல.. இப்ப வரைக்கும் இந்த கேஸ்ல ஒரு தகவலும் கிடைக்காம ராத்திரி நிம்மதியா தூங்க கூட முடியல. இந்த கேஸை முடிக்காம விட்டா மேலிடத்திலிருந்து ஆயிரம் கேள்வி வரும்.. அடுத்து என்ன நடக்கப் போகுது'ன்னு நாங்களே பதட்டமா இருந்தா இவங்க இப்பதான் சோகமா இருக்கன்னு சிரிப்பு காட்டுறாங்க." எனக் கேலி தோனியில் கயலை வார...

அதில் கோபம் கொண்டவளோ... "நீங்கலாம் கடைசி வரைக்கும் இப்படியே மத்தவங்களை கேலி பேச தான் லாயக்கு. போலீஸ்காரங்களா லட்சணமா இந்நேரம் அந்த கேஸை முடிக்காம எங்க பின்னாடி வந்துட்டு இருந்தா இப்படித்தான் நடக்கும். இப்ப கூட கொடுத்த கேஸை இன்னும் கண்டுபிடிக்கலைன்னு கவலைப்படாம மேலிடத்திலிருந்து என்ன கேள்வி வரும்னு கவலைப்படுறீங்க.. உங்கள மாதிரி ஆளு கிட்ட கம்ப்ளைன்ட் கொடுத்த என் தம்பிகளை சொல்லணும்..." என கட்டபொம்மனை திட்டியதோடு நில்லாமல்... அவன் ஏதோ பேச வரும் நேரம் பட்டென அழைப்பை துண்டித்தாள் கயல்விழி.



"என்ன மகி ஏதோ தீவிரமா யோசிக்கிற போல.. என்ன'ன்னு சொல்லு நானும் ஏதாச்சும் யோசிக்கிறேன்" என்று மகியின் நெடுநேர யோசனையை பார்த்து வினவிய தூரனுக்கு,
"புதுசா என்னடா யோசிக்க போறேன்.. எல்லாமே இங்க நடக்கிற விஷயத்தைப் பத்தி தான். எனக்கு என்னமோ சுகுமாறன் அண்ணா சொன்னதுல ஏதோ நெருடலாக இருக்குற மாதிரியே இருக்கு. மறுநாள் அங்க போனதா சொல்றாங்க... ஆனா அவங்களுக்கு ஒன்னுமே ஆகலே. ஏதோ தன்னை அடிச்சதா சொல்றாங்க... அடிச்சது ஏன் கொல்லாம விட்டுச்சு தூரா."

"எனக்கும் நீ சொல்ற பாயிண்ட் சரின்னு படுது மகி. அதுவுமில்லாம எதோ சத்தம் வந்ததா சொன்னாங்க . ஆனா அந்த சத்தம் மனுஷனோட சத்தம் மாதிரி இல்ல ன்னு சொன்னாங்க. அப்போ ராத்திரி நேரத்துல யார் அங்க போனாலும் அந்த சத்தம் கேட்குமா...? அன்னைக்கு ஆதி அக்கா கூட பேசுட்டு இருக்கும் பொழுதும் இதே மாதிரி சத்தம் கேட்டதா சொன்னாங்க... சோ ராத்திரி நேரத்துல அங்க ஏதோ ஒரு சத்தம் கேட்குது. நம்ம போனாலும் கண்டிப்பா கேட்கும். அப்போ அந்த சத்தம் எங்கிருந்து வருதுன்னு நம்மளால ஏன் கண்டுபிடிக்க முடியாது மகி.....?" என தூரன் தன் தரப்பு யோசனையை கூற மகியோ ..... சட்டென எழுந்து நின்று,
"தூரன் அப்போ நம்ம ரெண்டு பேரும் அங்க போனா என்ன ! அதுமட்டுமில்லாம அந்த சத்தத்தை நம்ம ஆதாரமா எடுத்துட்டு வந்து கட்டபொம்மன் சார்கிட்ட கொடுக்கலாம். இல்லையா அந்த சத்தம் எங்கிருந்து வருதுன்னு நம்ம கண்டுபிடிக்க ட்ரை பண்ணலாம். நம்ம அங்க போனா ஏதாச்சும் ஒன்று நிச்சயம் கிடைக்கும்னு தோணுது தூரன்."

"ஆமாம்! மகி கண்டிப்பா நாம அங்க போனா ஏதாச்சும் கிடைக்கும். அதுவுமில்லாம இத்தனை நாள் வரைக்கும் மத்தவங்க சொன்னதை வச்சு தான் நம்ம ஒவ்வொரு அடியா எடுத்து வச்சிருக்கோம். இப்ப வரைக்கும் நம்ம கண்ணால எதையும் பார்க்கலையே. நம்ம அங்க போனா தான் ஏதாச்சும் உணர முடியும். எனக்கு என்னமோ இந்த முடிவு தான் ரொம்ப சரின்னு தோணுது மகி. இதை நம்ம யார்கிட்டயும் சொல்ல வேண்டாம். சொன்னா ஏதாச்சும் சொல்லி தடுப்பாங்க. மத்தவங்களை நம்பி தயங்கி நிற்கிறதை விட.. நம்மளே களத்துல இறங்கி என்னன்னு பார்த்துடலாம்..." என்று இருவரும் முடிவு செய்து இன்று இரவு அங்கு செல்வதற்கு முடிவு செய்தனர்.


பகல் பன்னிரண்னில் வெயில் உச்சத்தில் இருப்பது போல் இரவு பன்னிரண்டிலும்.... உச்சபட்ச இருட்டை வானமும், நிலவும் தெளித்திருக்க .. ஒருவர் உருவமே இருவராய் தெரிய நடந்துகொண்டிருந்த மகியும் தூரனும் நால்வராய் காட்சியளித்தனர். தங்களை யாராவது பார்க்கிறார்களா என திரும்பி திரும்பி நோட்டம் விட்டுக்கொண்டே வந்த மகியை வெடுக்கென இழுத்துக்கொண்டு மரத்துக்குப் பின்னால் ஒளிந்தான் தூரன்.

தூரன் இழுத்த வேகத்தில் ஒரு நிமிடம் தடுமாறிய மகி... கோபமாக "டேய் எதுக்குடா இப்படி இழுத்த.. கொஞ்ச நேரத்துல உசுரே போயிடுச்சு. நானே யாராவது பாத்துடப் போறாங்கன்னு பயந்து பயந்து வந்துட்டு இருக்கேன். நீ வேற இன்னும் பயமுறுத்துற." என்று சத்தமே வராத குரலில் தூரனை வறுத்தெடுக்க .. அதே சத்தமே வராத குரலில் தூரனும் "எனக்கு ஆசை நட்ட நடு ராத்திரியில உன் கைய புடிச்சு இழுக்கனும்னு. நானே யாரோ வர மாதிரி இருந்துச்சுன்னு பயந்து உன்னை இழுத்துட்டு வந்தா நீ இன்னும் பேசுவ இதுக்கு மேலயும் பேசுவ... "

"ஐயோ யாரு டா வந்தா ? நம்மள பாத்துட்டாங்களா..?"

"இல்ல மகி யாரும் இல்ல. ஆனா யாரோ வந்த மாதிரி இருந்துச்சு..

"சரி வா தூரன் ரொம்ப நேரமா இங்க நிற்கிறது நல்லது இல்ல . சீக்கிரமா அங்க போயிட்டு யாருக்கும் தெரியாம திரும்பி வந்துடனும். " இருவரும் 40 நிமிட நடை பயணத்திற்குப் பிறகு அடைந்தனர்.... ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் அந்த மரங்கள் நிறைந்த கிணற்றுப் பகுதிக்கு.

வந்த இருவர் மனதிலும் சொல்ல முடியாத பயமும், நடுக்கமும் இருந்தது என்னவோ உண்மை. பகலில் பார்த்த இடம் இப்பொழுது ஏதோ வித்தியாசமாக காட்சியளிப்பது போல் பிரமை தோன்றியது இருவருக்கும். எதுவும் பேசிக் கொள்ளாமல் இருவரும் கிணற்றை நோக்கி நகர...

....
...
...

கேட்டது இருவருக்கும் அந்த சத்தம்.. கேட்ட நொடி திடுக்கிட்டு ஆளுக்கு ஒரு பக்கம் திரும்ப... தூரனின் தலையில் பலமாக ஏதோ ஒன்று விழுந்தது. விழுந்த வேகத்தில் தூரன் கத்திக்கொண்டே மகியின் கை பிடித்து மேலே பார்க்க.... மரங்கள் இல்லாத வெட்ட வெளியான நிலவே தெரிந்தது தூரன் கண்ணுக்கு. தூரனின் அலறலில் பதறிய மகி... "தூரன் என்னாச்சு.."

"ஒன்னும் இல்ல மகி. என்னமோ மேல விழுந்த மாதிரி இருந்துச்சு பார்த்தா ஒன்னுமில்ல..."

"தூரன் என்னமோ சரி இல்ல.... ஆபத்து இருக்கிற இடத்துல நம்ம நிக்கிறோம்ன்னு நினைக்கிறேன். இங்க இருந்து போறது இனி சுலபமில்லை. இங்க இருந்து நம்ம எப்படியாது தப்பிக்கனும். முடியலையா ஒருத்தராவது வெளியே போகணும். அப்போதான் இங்க நடக்கிறதை எல்லாருக்கும் தெரியப்படுத்த முடியும். என்ன நடந்தாலும் அது என்னன்னு தெரியாம போகக்கூடாது..." என மகி பேசி முடிக்கும் நேரம்............

காலில் தடைப்பட்டது ஒரு மனிதனின் மண்டை ஓடு. ஏதோ என நினைத்து பார்த்த மகிக்கு அந்த மண்டையோடு தெரிய இரண்டடி பின்னால் நகர்ந்தான். இதை எதிர்பார்க்காத தூரனும் மகியின் கையை விட்டுவிட்டு.. வேறு திசையில் நகர்ந்து செல்ல இருவரும் பிரிந்ததை உணர்ந்த அந்த உருவம்..... இப்பொழுது சத்தமாக சிரிக்கத் தொடங்கியது.

எதுவும் புரியாமல் முழித்த இருவரும்... ஒருவரை நோக்கி ஒருவர் வர நினைக்க நடுவில் வந்து நின்றது................
கிணற்றில் நீர் எடுக்க உதவும் சனல் கயிறு. இதை எதிர்பார்க்காத இருவரும் திரும்பவும் அலறியடித்து நகர, நகர்ந்த தூரனின் கால்களை கட்டிக் கொண்டு வேகமாக இழுத்து சென்றது. கயிறு கால்களில் மாட்டிக்கொண்ட நொடி... தூரன் மண்ணில் விழ, இழுத்த இழுப்பிற்கு அடித்து செல்லப்பட்டான்.

தூரன் வேகமாக இழுத்துச் செல்லப்படுவதை உணர்ந்த மகியோ, தன் நண்பனை காப்பாற்ற செல்ல... அவனையே பார்த்தவண்ணம் பின்னால் நின்றிருந்த உருவம் அவன் முன்னால் வந்து நின்றது.
வந்து நின்ற உருவத்தின் மேல்... சகித்துக்கொள்ள முடியாத துர்நாற்றம் அடிக்க வாயையும், மூக்கையும் பொத்தியபடி... பின்னால் நகர்ந்தான் மகி. அவன் பின்னால் நகர நகர அவனையே நெருங்கிய அந்த உருவம்.... ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இல்லாமல் மகியின் கழுத்தில் கத்தியை பாய்ச்ச பார்க்க.... சுதாரித்த மகியோ , விலகி நிற்க நினைத்து தன்னையே அறியாமல் தடுமாறி விழுந்தான்.

விழுந்தவன் மேல் விழுந்த அந்த உருவமும்..... அவனின் கழுத்தை நெறிக்க ஆரம்பித்தது. நேரம் செல்ல செல்ல மகியால் தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாற ஆரம்பித்தான்.

அங்கே இழுத்துச் செல்லப்பட்ட தூரனோ... அசுர வேகத்தில் எதிரில் இருந்த மரத்தில் பட்டென அடிக்கப்பட்டான். அடிக்கப்பட்டதும் கீழே விழுந்த தூரனுக்கு தலையிலிருந்து ரத்தம் வர ஆரம்பித்தது. தன் ரத்தத்தை தொட்டுப் பார்த்த தூரனுக்கு... அதிர்ச்சியில் எழுந்து நிற்க தோணாமல் அப்படியே மரத்தின் மீது சாய்ந்தவாறு அமர்ந்தான். அவன் அமர்ந்து அடுத்த நொடி... மீண்டும் அந்தக் கயிறு அவன் கால்களை இறுக்கிய வண்ணம் இழுத்துச் சென்றது. வழியில் கிடந்த கல்லில் கண்டபடி முகமும் உடம்பும் காயப்பட... ஏற்கனவே தலையில் வழிந்த ரத்தம் அவனை பலவீனமாக்க , அந்தக் கயிறு சொல்படி சென்றுகொண்டிருந்தான் தூரன். சிறிது நேரத்திலே... அந்தக் கயிறு கிணற்றில் தூரனை தள்ளிவிட.. .... கால்கள் கட்டப்பட்ட நிலையிலும் தப்பிக்க வழி தேடினான். இனி தூரனால் தப்பிக்க முடியாது என்று உணர்ந்த உருவமோ... அங்கிருந்து சிரித்துக் கொண்டே சென்றது.

இங்கே மகியின் நிலைமை மிகவும் மோசமாகியது. தன்னை மூச்சு விட முடியாமல் கழுத்தை நெறிக்கும் உருவத்தை... தடுக்க வழி தெரியாது தரையில் கை வைத்து துடித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது மகியின் கைக்கு குச்சி ஒன்று கிடைக்க... குச்சியை அந்த உருவத்திற்கு தெரியாமல் எடுத்தான். முகம் எது உடம்பு எதுவென தெரியாத அளவிற்கு இருந்த அந்த உருவத்தின் ஒருபகுதியில் குத்தினான். இதை எதிர்பார்க்காத உருவமோ ஆஆஆ... என அலறி அடித்துக்கொண்டு மகியின் கால் இருக்கும் பகுதியில் தலைவைத்து விழுந்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மகி எந்திரிக்க... அந்த உருவமும் சுதாரித்துக்கொண்டு... மகியின் கால்களை தரதரவென இழுத்து சென்று மரத்தில் ஓங்கி அடித்தது. அடித்த வேகத்தில் மகிக்கு மயக்கம் வந்திருக்க..... தான் வெற்றி பெற்ற களிப்பில் அந்த உருவமோ...... அங்கிருந்த கடப்பாரையால் மகியின் தலையில் ஓங்கி அடிக்க சென்றது.





சென்ற உருவத்தின் தலை ஒரு கயிற்றால் இறுக்க பட்டிருக்க.... என்ன நடந்தது என்று புரியாமல் அந்த உருவம் பின்னால் திரும்பிப் பார்த்தது.... பார்த்தது தான் தாமதம் அந்த உருவத்தின் எதிரில் நின்ற தூரனோ சட்டென இரும்பைக் கொண்டு ஓங்கி அடித்தான்.




சிறிது நேரத்துக்கு முன்பு...

கட்டப்பட்ட நிலையில் உடலில் உள்ள ரத்தம் நீரில் கலந்து உயிருக்குப் போராடும் தூரனை... பதற்றமாக எட்டிப்பார்த்த அந்த நபர் வேகமாக கிணற்றின் உள்ளே குதித்து..... தூரனின் கால்களில் சுற்றியுள்ள கயிற்றை அகற்றிவிட்டு மேலே கொண்டு வந்தார் . வெளியில் எடுத்து வரப்பட்ட தூரனுக்கு எந்த சுயநினைவும் இல்லாமல் போக.. வேக வேகமாக அவன் கன்னத்தில் தட்டி எழுப்பினார் அந்த நபர். விழித்ததும் தூரனுக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. பின் ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்து , தன்னை யாரோ காப்பாற்றி இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கண்ணை வெகுவாக விரித்துப் பார்க்க.... எதிரில் இருந்த நபரை கண்டு அதிர்ச்சி ஆகினான்.

அவனின் அதிர்ச்சியை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் ஓங்கி ஒரு அரை விட்ட அந்த நபர்... "கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா. மனசுல என்ன பெரிய வீரன்னு நினைப்போ.. ஆபத்தை நீங்களே தேடி வந்திருக்கீங்க. நான் மட்டும் வரலைன்னா இந்நேரம் நீ செத்துப் போயிருப்ப. நாளைக்கு ஊரே உன்னுடைய பிணத்தை பார்த்து இன்னமும் பயந்து நடுங்கி இருப்பாங்க. உண்மையை கண்டுபிடிக்கிறேன்னு வந்து உன்னோட உண்மையை தொலைத்துடாத. என்னை இங்க பார்த்ததை யார்கிட்டயும் சொல்லக்கூடாது. அதேமாதிரி அவங்கள எதுவும் பண்ணாம தப்பிக்க விடு.. இது அவங்கள பிடிக்கிற நேரம் இல்ல. இங்க நடந்ததை எதையும் வெளியே சொல்லாத. அங்க மகி உயிருக்கு போராடிட்டு இருக்கான். சீக்கிரமா போய் காப்பாத்து. உன்னை அடிச்ச அந்த உருவத்தை நான் கட்டையால் அடித்து மயக்கமடைய வைச்சிட்ட. அந்த உருவம் எந்திரிக்க கொஞ்ச நேரம் ஆகும் . அதுக்குள்ள மகியை காப்பாத்தி கூட்டிட்டு ஓடிரு. மகியை தாக்குற அந்த உருவத்து கிட்ட இருந்து தப்பிக்க வேண்டியது உன் பொறுப்பு. இவ்வளவு தூரம் யாரு கிட்டையும் சொல்லாம வந்ததற்கான தண்டனை அது. உயிர் வாழ ஆசை இருந்தா உன் நண்பனை காப்பாத்தி இங்கிருந்து அழைச்சிட்டு போ...." என வேகவேகமாக தூரனை எழுப்பி மகியிடம் அனுப்பிவிட்டு அந்த நபர் சத்தமில்லாமல் அங்கிருந்து வெளியேற .... அவரை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு தன் நண்பனிடம் வந்தான் தூரன்.

மகியை தாக்கிய உருவத்தை ஓங்கி அடிக்க.. அதுவும் பதிலுக்கு தூரனை அடிக்க... சூழ்நிலையை உணர்ந்த தூரன் தன் நண்பனை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில்... அங்கிருந்த கடப்பாரையால் திரும்பவும் பலம் கொண்டு அந்த உருவத்தின் கையில் அடித்து விட்டு மகியை எழுப்ப சென்றான்.


அந்த உருவமோ வலியிலும் இனிமேல் இங்கே இருப்பது தனக்கு ஆபத்து என்பதை உணர்ந்து... அங்கிருந்து மெல்ல மெல்ல நகர்ந்து சென்றது.

ஓடிய உருவத்தின் கால்களோ...வலி தாங்க கமுடியாமல் சோர்ந்து தரையில் உட்கார...அங்கே மயங்கிய நிலையில் இருக்கும் மற்றொரு உருவத்தை பார்த்து மேலும் அதிர்ச்சியாகியது. பின் மெதுவாக அந்த உருவத்தை எழுப்பி, என்னவென விசாரிக்க... "டேய் எல்லாம் உன்னால வந்தது. நீ சரியா செய்யாம இப்போ நான் அடி வாங்கி இருக்கேன். அந்த தூரன் நாய நான் கிணத்துல தான் தூக்கி போட்டுட்டு வந்தேன்... எப்படி தப்பிச்சு மேலே வந்தான்னு தெரியல. பின்னாடி இருந்து என்ன வேகமா அடிச்சுட்டான். நானும் வலியில அப்படியே மயங்கி விழுந்துட்டேன் போல..." என்று பற்கள் கடித்து எதிரில் இருந்த உருவத்திடம் கூற,

"ஏண்டா ஒருத்தன அடிச்சு கிணத்துல தூக்கிப் போட கூட உனக்கு துப்பு இல்லையா? இதுல நீ எல்லாம்.................... நீ அவனை ஒழுங்காக கிணத்துல போடாம விட்டதால தப்பிச்சு வந்து உன்னை அடிச்சதும் இல்லாம என்னையும் சேர்த்து அடிச்சிட்டான். இதுல மகியும் எழுந்தா பிரச்சனை பெருசாகிடும்னு நானும் தப்பித்து வர வேண்டியதா போச்சு. நீயோ இல்ல நானோ அவங்க கண்ணுல மாட்டி இருந்தோம்... நம்ம இத்தனை வருஷ திட்டம் தவிடு பொடியாகி இருக்கும். இருந்தாலும் இவ்வளவு தைரியமாக வந்து நம்மளையே அடிச்சுட்டு தப்பிச்சு போன அவங்கள சும்மா விடவே கூடாது....

இவனுங்கள வேற தப்பிக்க விட்டுட்டோமே நாளைக்கு ஊருக்குள்ள போய் என்ன சொல்லுவாங்களோ..."

நம்ம அடிச்ச அடியில அவனுங்க எந்திரிக்கவே ரெண்டு நாள் ஆகும்.. அதுக்குள்ள அவங்க சொன்னாலும் நம்ப முடியாத அளவுக்கு ஏதாச்சும் பண்ணியே ஆகணும். முதல்ல இங்க இருந்து போலாம் வா... இங்க இருக்கிறது அவ்வளவு நல்லது இல்லை.....

"ஆமா அப்படியே நமக்கு அடி கம்மி பாரு... நம்ம எந்திரிக்கவே ஒரு நாள் ஆகும்.... வா...டா... பேசாம" என்று பேசியபடி வந்த வழி நோக்கி நடக்கும் அவ்விரு உருவத்தின்.... முதுகையே பார்த்திருந்து மெல்ல சிரித்தது.....

நல் உருவம்...
 
Nice update ma. Andha 3 uruvathuku name vaima.

இருக்கு சகி.... அடுத்த பதிவு போட்டுட்டேன் பாருங்க .ஒரு உருவத்தோடு பேரு தெரிஞ்சிடும். நன்றி ???????????????????
 
Top