Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

8. Ivan Vasam Vaaraayo!

Advertisement

தமிழ் கூறிய பொய் சரியா? தவறா?

  • சரி

    Votes: 4 100.0%
  • தவறு

    Votes: 0 0.0%

  • Total voters
    4

Annapurani Dhandapani

Well-known member
Member
8. இவன் வசம் வாராயோ!


"குமாரண்ணே.. இன்னிக்கு ஓவராயிடுச்சு.. போதும்.. வா.."

"டேய் சின்னா.. இழுடா.. ஒழு முக்கியமாழ வேழ இழுக்குடா.. நீ போ.." என்று சொல்லிக் கொண்டே மேலும் இரண்டு தம்ப்ளர்களை தன் வாயில் சரித்துக் கொண்டான் குமார்.

"நீ என்ன வேலை பண்ணப் போறன்னு தெரியும்.. வேணாம்ண்ணே.. உனக்காக வீட்ல அண்ணி, புள்ளைங்கல்லாம் இருக்கு.. அண்ணிக்கு துரோகம் செய்துடாத.."

"டேய்.. உங்க நொண்ணிய நா கை உழ்ட்டுழ மாழ்ட்டன்.. எழ்த்தன பேழ் வந்தாழும் அவதான் எம்பொண்டாட்டி.." என்று கண்களில் போதையுடன் அசிங்கமாக எதையோ சொல்லி மேலும் கொஞ்சம் ஊற்றிக் கொண்டான்.

"வேணாம்ண்ணே.." என்றான் அந்த சின்னா.

"ஒன் வேழயப் பாழ்த்துட்டு போழா.." என்று கோபமாகக் கூறி சின்னாவைத் தள்ளிவிட்டான் குமார்.

கீழே விழுந்த சின்னா, எழுந்து தன் சட்டையை உதறிக் கொண்டு,

"இந்தக் குடியாலதான் நம்ம அப்பன், பெரியண்ணன் எல்லாம் போய்ச் சேர்ந்தானுங்க.. இப்ப நீயும் அந்த லிஸ்ட்லதான் போய் சேருவேன்னு அடம் புடிச்சா எப்டி.. இதுல பொம்பள பொல்லாப்பு வேற.. உன்னல்லாம் வெஷம் வெச்சு கொன்னா கூட தப்பில்ல.." என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்து வெளியே போய் யாருக்கோ அழைத்தான்.

அவன் சொன்னதை சட்டை செய்யாத குமார், அந்த சுற்றையும் முடித்துவிட்டு அடுத்த சுற்றைத் தொடங்கியிருந்தான்.

சின்னா, தன் இருசக்கர வாகனத்தை உதைத்து விரட்டினான். சில நிமிடங்களில் ஒரு வீட்டு வாசலில் நின்றவன்,

"அண்ணீ.." என்று குரல் கொடுக்க, வீட்டினுள்ளிருந்து பால்வாடியின் மூத்த ஆசிரியை தேவகி ஓடி வந்தாள்.

"தம்பி.. நீங்க சொன்னது உண்மையா?" என்று பதட்டத்துடன் கேட்டாள்.

"ஆமா அண்ணி.. அண்ணன் தண்ணியடிச்சிட்டு அந்த டீச்சர் பேர சொல்லி உளறிகிட்டிருந்ததா பார்ல வேல பண்ற சின்ன பையன் போன் பண்ணி சொன்னான். நானும் போய் அண்ணன் பேசினத கேட்டேன்.. அண்ணன் பெரிசா எதோ ப்ளான் போட்டிருக்கு.. நா எடுத்து சொல்லி தடுத்து பார்த்தேன்.. அது என்ன தள்ளி வுட்டுட்டு இன்னும் கொஞ்சம் ஊத்திகிச்சு.. இன்னிக்கு அந்த டீச்சர அண்ணன் எதாவது பண்றதுக்குள்ள நாம அவங்கள காப்பாத்தணும்னுதான் உங்களுக்கு போன் பண்ணேன்.. அவங்க நம்மள நம்பி வந்திருக்காங்க.. அவங்கள நாம பத்திரமா காப்பாத்தியே ஆகணும்.. வாங்க.." என்றான் சின்னா.

தேவகி சின்னாவின் வண்டியில் ஏறிக் கொள்ள, வண்டியை நிரஞ்சனாவின் குடிசைக்கு விட்டான் சின்னா.

நிரஞ்சனா தன் குடிசை வாசலில் முன்னும் பின்னும் நடந்தபடியே தன் குழந்தையைத் தோளில் போட்டு தட்டி தூங்க வைத்துக் கொண்டிருந்தாள்.

தேவகி அரக்கப்பரக்க வந்து தன் வீட்டு வாசலில் இறங்குவது கண்டு குழப்பமாய் அவளைப் பார்த்த நிரஞ்சனா,

"என்ன டீச்சர்? என்னாச்சு?" என்று கேட்க,

"நிரஞ்சனா.. நீ ஒடனே இங்கேந்து போம்மா.. எது நடக்கக் கூடாதுன்னு நா பயந்தேனோ அது நடந்துடும் போலிருக்கு.." என்றாள் தேவகி.

"என்ன டீச்சர் சொல்றீங்க? எனக்கொண்ணும் புரியல?"

"ஐயோ.. இப்ப எதயைும் சொல்ல நேரமில்ல.. உனக்கும் உன் குழந்தைக்கும் பெரிய ஆபத்து இருக்கு.. நீ உடனே இங்கேந்து கிளம்பு.." என்றாள் தேவகி மீண்டும்.

"திடீர்ன்னு என்ன போக சொன்னா நா எங்க போவேன் டீச்சர்?" என்று நிரஞ்சனா கேட்டாள்.

"இதுல ஒரு அட்ரஸ் இருக்கு.. என்னோட மாமாவோட அட்ரஸ்.. சென்னைல இருக்காரு.. நா ஏற்கனவே உன்னப்பத்தியும் குழந்தைய பத்தியும் அவர்கிட்ட நிறைய சொல்லியிருக்கேன்.. நீ அவர்கிட்ட போய்டு.. அடுத்து என்ன பண்ணனும்னு அவர் உனக்கு சொல்வாரு.."

"ஆனா நா ஏன் போகணும்.."

"ஏன்னா இங்க உனக்கு ஆபத்து இருக்கு.."

"இன்னும் என்ன ஆபத்து எனக்கு வந்துடும்னு நீங்க பயப்படறீங்க டீச்சர்.."

தேவகியைப் பார்த்து நிரஞ்சனா கேள்வி கேட்க, தேவகியோ நிரஞ்சனாவின் குடிசைக்குள் நுழைந்து எதையோ தேடினாள்.

"ரஞ்சனி டீச்சர்.. நீங்க கேக்கறது நியாயமான கேள்விதான்.. எங்கண்ணன் தவறான எண்ணத்தோட உங்கள தேடி வந்துகிட்டிருக்கான்.. அவர் கிட்டேந்து உங்கள காப்பாத்தணும்னுதான் நாங்க உங்கள இங்கேந்து போக சொல்றோம்.." என்றான் சின்னா.

"இங்க உங்கண்ணன்.. வெளிய உங்கண்ணன மாதிரி இன்னும் எத்தன பேரோ.. நா இப்டியே ஒவ்வொருத்தருக்கும் பயந்துகிட்டு ஓடி ஔிஞ்சுகிட்டே இருக்கணுமா.. என்ன வந்தாலும் சரி.. நா இங்கேந்து போக மாட்டேன்.. உங்கண்ணன் வந்தா செருப்பால அடிக்கணும்னு நானும் நெனச்சிகிட்டுதான் இருக்கேன்.." என்றாள் நிரஞ்சனா கோபத்துடனும் ஆற்றாமையுடனும்.

"ஐயோ.. நீ மட்டும் தனியா இருந்தா பரவால்ல.. உன் கையில இந்த குழந்தை இருக்கே.. இதோட பொறுப்பு உனக்கு இருக்கே.. இதுக்காகவாவது நீ நல்லபடியா இருக்கணும்ல.. அதான் சொல்றேன்.. பேச நேரமில்ல.. நீ போம்மா.." என்று சொல்லிக் கொண்டே குடிசையிலிருந்து வெளியே வந்த தேவகி, நிரஞ்சனாவின் கையில் ஒரு பையை மாட்டினாள்.

அந்தப் பையைப் பார்த்ததும் நிரஞ்சனாவால் எதுவும் பேச முடியவில்லை.

அதற்குள் அக்கம் பக்கத்து வீட்டிலுள்ளவர்கள் அங்கே கூடி விட, தேவகி அவர்களில் முன்னால் நின்றிருந்த ஒருவனைப் பார்த்து,

"பீட்டர்! டீச்சர பெரிய பஸ் ஸ்டான்டில வுடணும்! ஆட்டோ எடுப்பா.." என்று சொல்ல,

"பஸ் வேணாம் அண்ணி.. செல்வம் லோட் ஏத்திட்டு இப்டிதான் க்ராஸ் பண்றான்.. அவன இங்க வரச்சொல்லிருக்கேன்.. இப்ப வந்துடுவான்.." என்றான் சின்னா.

அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஒரு சரக்குந்து (லாரி) வந்து நின்றது. அதிலிருந்து ஒருவன் இறங்கி வந்து தேவகியிடம் மரியாதையுடன் வணக்கம் சொன்னான்.

"செல்வம்! நீ சென்னைக்குதானே போற.. இவங்கள நாளைக்கு இந்த அட்ரஸ்ல இறக்கி வுட்டுடுப்பா.." என்றாள் தேவகி.

"என்னாச்சு டீச்சர்?"

"ப்ச்.. என்னத்த சொல்ல.. வேலியில்லா பயிர மேய பாவிங்க கிளம்பிட்டானுங்க.." என்றாள் கம்மிய குரலில்.

அவள் குறிப்பிடுவது அவளுடைய புருஷனைத்தான் என்று அங்கிருந்த அனைவருக்குமே தெரியுமாதலால், அனைவருமே அமைதி காத்தனர்.

"ஹூம்.. படிச்சவனுங்களே இப்டிதான்.. கட்டின பொண்டாட்டிய வச்சி வாழாம.. வுட்டுட்டு ஓடிடறது.. இல்லன்னா அத்து வுட்டுடறது.." என்று ஒரு கிழவி அங்கலாய்த்தாள்.

"ஒண்ணும் பயப்படாதீங்க டீச்சர்.. இவங்களும் என் தங்கச்சி மாதிரி.. இவங்கள பத்திரமா கொண்டு போய் நீங்க சொன்ன அட்ரஸ்ல வுட்டுடறேன்.." என்றான் லாரி ஓட்டுனர் செல்வம்.

நிரஞ்சனா தன் குடிசைக்குள் சென்று குழந்தைக்குத் தேவையான பால் புட்டி துணிமணி குழந்தைக்கு மேலே போர்த்தும் துண்டு போன்றவற்றை எடுத்து தேவகி தன் கையில் மாட்டிய பையில் அடைத்துக் கொண்டு, வந்து லாரியில் ஏற முற்பட, லாரியின் பின்னாலிருந்து தமிழ் கீழே குதித்து முன்னால் நடந்து வந்தான்.

தமிழைப் பார்த்த நிரஞ்சனாவுக்கு சில நிமிடங்கள் ஒன்றும் புரியவில்லை. அவள் அவனை வைத்த கண் வாங்காமல் பார்க்க, அவனும் அவளையே பார்த்தான்.

இன்னும் நிரஞ்சனா லாரியில் ஏறாமல் நிற்பதைப் பார்த்த தேவகி, அவளை உலுக்கினாள்.

"சீக்கிரம் ஏறு நிரஞ்சனா! அந்தாள் வந்துடப் போறான்.."

அதற்குள் செல்வம் தமிழின் அருகில் வந்து,

"சார்! அர்ஜன்ட்டா பர்சனல் வேல வந்திருச்சு சார்.. அதான் ஊருக்குள்ள வண்டிய வுட்டேன்.. மேல ஏறு சார்! கிளம்பலாம்.." என்றான்.

ஆனால் தமிழோ, நிரஞ்சனாவைப் பார்த்து,

"என்ன இதெல்லாம்.. இப்டிலாம் கஷ்டப்படணும்னு உனக்கு தலையெழுத்தா?" என்று கேட்க,

"யார் நீங்க? இதெல்லாம் எதுக்கு நீங்க கேக்கறீங்க?" என்று நிரஞ்சனா பதிலுக்குக் கேள்வி கேட்டாள்.

"பரவால்ல.. இந்த ஒரு வருஷத்தில என்னப் பார்த்து பதில் கேள்வி கேக்கற அளவுக்கு தைரியம் வளர்ந்திருக்கு!" என்றான் வியப்புடன்.

அதற்குள் தேவகி அவனருகில் வந்து,

"ஏங்க? யாருங்க நீங்க? இவ கிட்ட உங்களுக்கென்ன பேச்சு வேண்டியிருக்கு?" என்று கோபமாகக் கேட்டாள்.

"நானா.." என்று கேட்டுக் கொண்டே, தன் கைப்பேசியில் ஒரு புகைப்படத்தைக் காட்டி,

"நா இவ புருஷன்!" என்றான் தமிழ் தெளிவாக!

இதைக் கேட்ட நிரஞ்சனா அதிர்ந்தாள். அதற்கு மேலே தேவகி அதிர்ந்தாள்.

தேவகி, அவசரமாக அவனுடைய கைப்பேசியை வாங்கிப் பார்க்க, அதில் நிரஞ்சனா கயல்விழி, முகிலன் மற்றும் முத்தழகியுடன் நின்றிருக்கும் புகைப்படம் இருந்தது.

"என்னங்க.. விளையாடறீங்களா.. இதுல நீங்க இல்லையே.." என்று சந்தேகமாகக் கேட்டாள் தேவகி.

"அட என்னங்க நீங்க.. இது என் தங்கச்சி குடும்பம்.. இது எங்க கல்யாணம் ஆன புதுசுல எடுத்தது.. இத நாந்தான் எடுத்தேன்.. நா எடுத்த போட்டோல நா எப்டி இருப்பேன்.." என்று நீட்டி முழக்கி கூறிக் கொண்டே,

"அடுத்த போட்டோவ பாருங்க.." என்றான் தமிழ்.

தேவகி அடுத்த போட்டோவை பார்க்க, அதில் நிரஞ்சனாவும் தமிழும் அருகருகே நின்றபடி சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

இப்போது நிரஞ்சனா அவசரமாக அதை வாங்கிப் பார்த்துவிட்டு காற்று போன பலூனாய் அவனுடைய கைப்பேசியை அவனிடமே நீட்டினாள்.

தேவகி நிரஞ்சனாவிடம் கண்களால் அப்படியா என்பது போலக் கேட்க, அவள் வேறு வழியின்றி ஆமாம் என்று ஒப்புதலாய்த் தலையாட்டினாள்.

"என்னா சார்.. பாத்தா படிச்சவன் மாதிரி இருக்க.. கட்டுன பொண்டாட்டிய வுட்டுட்டு ஓடிட்ட.." என்று செல்வம் கேட்க,

"தப்புதாங்க.. புத்தியில்லாம நடந்துகிட்டேன்.. இவள விட்டுப் பிரிஞ்சப்றம்தான் வாழ்க்கைன்னா என்னன்னு புரிஞ்சது.. அன்னிலேர்ந்து இவள தேடிட்டிருக்கேன்.. நல்ல வேளை இன்னிக்கு எனக்கு கிடைச்சிட்டா.." என்றான் தமிழ்.

தேவகி தமிழின் அருகில் வந்து,

"உங்கள தயவு செஞ்சு கெஞ்சி கேக்கறேன்.. இவ ரொம்ப வேதனைகளை அனுபவிச்சிட்டா.. நித்தம் ஒரு நாடகம்.. தினம் தினம் ஒரு போராட்டம்னு ஆயிடுச்சி இவ வாழ்க்கை.. இனிமேலயாவது இவள பத்திரமா பாத்துக்கோங்க.. ப்ளீஸ்.." என்றாள்.

"கண்டிப்பா.. இனிமே இவள நா பத்திரமா என் கண்ணுக்குள்ள வெச்சி பாத்துக்கறேன்.." என்றான் தமிழ்.

"சரி.. சரி.. அதான் எல்லாம் நல்லபடியா முடிஞ்சிடுச்சுல்ல.. பேசிட்டிருக்காதீங்க.. அண்ணன் வந்துடும்.. நீங்க கௌம்புங்க.." என்றான் சின்னா.

"இருங்க சார்.. உங்கண்ணன் கிட்ட நா ரெண்டு வார்த்த பேசிட்டுதான் போகணும்.." என்று தமிழ் கூறிக் கொண்டிருக்கும் போதே அங்கே குமார் வந்துவிட,

தேவகியையும் சின்னாவையும் பார்த்து முறைத்துக் கொண்டே அவன் நிரஞ்சனாவின் அருகில் வந்தான்.

"என்னா ழீச்சரு.. பையெழ்லாம் மாட்டிகிழ்ட்டு எங்க கிழம்பிட்ட.. துணைக்கு நா வேணா வழ்ட்டா.." என்றான் குழறலுடன்.

இதைக் கேட்ட அங்கிருந்த அனைவருக்குமே கோபம் வர, தமிழுக்கோ கொலை வெறியே வந்தது.

அவன் தன் கை விரல்களை மடக்கி முட்டியை அழுந்தத் தேய்த்துக் கொண்டு குமாரின் அருகில் வர, அதற்குள் நிரஞ்சனா குமாரின் கன்னத்தில் பளார்! என்று அறைந்திருந்தாள்.

"நீ துணைக்கு வர வேண்டியது எனக்கு இல்ல.. உன்ன நம்பி தேவகி டீச்சரும் உன் பொண்ணுங்களும் இருக்காங்க.. அவங்களுக்கு எப்பவும் உன் துணை வேணும்ங்கறதால ஒரு அறையோட நா நிறுத்திக்கறேன்.. இல்லன்னா.. நடக்கறதே வேற.." என்றாள் கோபமாக!

இதைப் பார்த்த அனைவரும் விக்கித்துப் போக, தமிழோ, ஹூம்.. எப்டி சிரிப்பும் குறும்புமா குழந்தை மாதிரி இருந்தா.. இப்ப இப்படி முழுசா வேற மாதிரி மாறி நிக்கறாளே.. என்று திகைத்தான்.

பலர் முன்னிலையில் ஒரு பெண்ணிடம் அடிவாங்கிய அவமானத்தில் கோபமடைந்த குமார், போதை முழுதும் இறங்கிய நிலையில் நிரஞ்சனாவின் கையைப் பிடித்து இழுக்க, அவனை மேலும் அறைந்த நிரஞ்சனா,

"நீல்லாம் அடங்க மாட்ட! வேணாம் போய்டு.. நா அடிச்சா நீ செத்துடுவ.." என்று கூறிவிட்டு விருட்டென்று லாரியின் முன்புறத்தில் ஏறி அமர்ந்தாள்.

"யேய்.. என்னையே அடிச்சிட்டல்ல.." என்று அவன் நிரஞ்சனாவைப் பிடிக்க முயல,

தமிழ் அவனைப் பிடித்து,

"ஒரு பொண்ணுட்ட அடி வாங்கினது அவமானம் இல்ல.. உன்ன நம்பி இருக்கற பொண்ணுங்களுக்கு உன்னால ஒரு அவமானமும் வராம பாத்துக்கணும்.. அதான் பெரிசு.. போ.. அந்தம்மா முகத்துக்காகதான் இங்க இருக்கறவங்கல்லாம் உன்ன ஒண்ணும் பண்ணாம இருக்காங்க.." என்று சொல்லிவிட்டு அவனுடைய சட்டையை நீவி விட்டு நகர,

செல்வம் சென்று ஓட்டுனர் இருக்கையில் ஏறி அமர்ந்தபடியே,

"சார்.. ஏறுங்க.. மணியாகுது.." என்றான்.

"டேய்.. நீ யாருடா.. இவ்ளோ நாளா அவளுக்காக ப்ளான் போட்டேன்.. இப்ப நீ வந்து கூட்டிட்டு போற.. நீ யாருடா.." என்று குமார் தமிழைப் பிடித்து கேள்வி கேட்டான்.

தமிழ் அவனை முறைத்துவிட்டு, தேவகியைக் காட்டி,

"அந்தம்மாவுக்கு நீ என்ன வேணுமோ அது தான் நானும் அவளுக்கு.." என்று சொல்லிக் கொண்டே அவனுடைய பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு லாரியில் முன்புறத்தில் நிரஞ்சனாவின் அருகில் உரிமையுடன் அமர்ந்தான்.

குமார் தன் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு அங்கிருந்து போனான்.

தமிழும் நிரஞ்சனாவும் நடந்து போகும் குமாரையே பார்த்துக் கொண்டிருக்க, தேவகியும் மற்றவர்களும் அவர்களுக்கு கையசைத்து விடையளிக்க, செல்வம் வண்டியை கிளப்பினான்.

நிரஞ்சனாவின் மனதில் புயலடித்துக் கொண்டிருந்தது.

திரும்பவும் ஒரு ஓட்டம்! இது பயிற்சிக் களமா? யுத்த களமா?

நா பொறந்ததுலேர்ந்தே எனக்கு எல்லாம் வித்யாசமாதான் நடக்குது.. அம்மா அம்மாவா நடந்துக்கல.. அண்ணன் அண்ணனா நடந்துக்கல.. புருஷன் புருஷனா நடந்துக்கல.. இப்ப புள்ளை.. என்று ஒவ்வொன்றாக நினைத்துக் கொண்டே வந்தவள், பிள்ளை என்று நினைத்ததும் அனிச்சையாக அழத் தொடங்கி, பின் தன்னைத் தானே கட்டுப் படுத்திக் கொள்ளும் முயற்சியாக தன் குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டாள்.

ஆனால் அவளையும் மீறி அழுகை வெடித்துவிட, சத்தமில்லாமல் குலுங்கி அழுதாள்.

வண்டியில் ஏறியதிலிருந்தே அவளை கவனித்துக் கொண்டே வந்த தமிழ், அவள் குலுங்கி அழுவதைக் கண்டவுடன், சட்டென்று குழந்தையோடு சேர்த்து அவளைத் தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.

அவள் அதிர்ந்து விலக முற்பட, அவன் ஆறுதலாய் அவளுடைய தோளில் தட்டிக் கொடுத்தான்.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டே வண்டி ஓட்டிக் கொண்டிருந்த செல்வம்,

"கவலப்படாத தங்கச்சி! சாருக்கு உம் மேல ரொம்ப அன்பிருக்கு! ஏதோ புத்தி கெட்டுப் போய் உன்ன விட்டு பிரிஞ்சிட்டாரு.. எதையும் மனசில வச்சிக்காதமா.. எல்லாம் சரியாகிடும்.." என்றான் செல்வம்.

நிரஞ்சனா தன் அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு தமிழிடமிருந்து நகர்ந்து அமர்ந்தாள்.

அவளுடைய யோசனை மீண்டும் தொடர்ந்தது.

இப்ப இவன் எனக்கு புருஷன்னு சொல்லிட்டு என்ன கூட்டிட்டு போய்ட்டிருக்கான். என்ன பண்ண காத்துகிட்டிருக்கானோ?

ஆனா கல்யாணம் ஆகி அந்த வீட்ல மூணு மாசம் இருந்தேனே.. அந்த முகிலண்ணா கயலண்ணி மட்டும் எனக்கு ஃப்ரண்ட்ஸா கிடைக்கலன்னா.. நா அன்னிக்கே செத்திருப்பேன்.. இவ்ளோ தூரம் நா உயிரோட இருக்கேன்னா, அது முகிலண்ணாவும் கயலண்ணியும் கொடுத்த ஆறுதலும் தைரியமும்தான்.

பாக்கலாம்! இந்த ஓட்டம் என்னை எங்க கொண்டு போய் நிறுத்துதுன்னு பாக்கலாம்! என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள்.

குழ்தை பசியில் சிணுங்கத் தொடங்க, செல்வம் வண்டியை ஒரு ரோட்டோரத்து சிற்றுண்டியில் நிறுத்தினான்.

குழந்தைக்கு பால் வாங்கிக் கொடுத்த தமிழ், நிரஞ்சனாவுக்கும் சாப்பிட எதையோ வாங்கிக் கொடுத்து அவளை கட்டாயப் படுத்தி உண்ண வைத்தான்.

தன்னுடைய தேவைகளைப் புரிந்து கொண்டு நடந்த தமிழை சந்தேகமும் பயமும் கலந்த மனநிலையுடன் பார்த்திருந்தாள் நிரஞ்சனா.

இந்த டிரைவர் முன்னாடி இவன் என்னை இப்டி பாத்துக்கற மாதிரி நடிக்கறானே.. சென்னை போய் எப்டி நடந்துப்பானோ.. கடவுளே.. நீ ஆடற ஆட்டத்தில நாந்தான் பந்தா (ball).. நீ எந்தப் பக்கம் வீசறியோ அங்க போய் விழறேன்.. நீ அடுத்த அடி அடிக்கற வரை அங்கயே கெடக்கறேன்.. என்று தனக்குள் நினைத்து நொந்து கொண்டாள்.

நிரஞ்சனாவும் தமிழும் சாப்பிட்ட பின் குழந்தைக்கு பாட்டிலில் பால் வாங்கிக் கொண்டு வண்டியில் ஏறி அமர்ந்தனர்.

செல்வம் சீரான வேகத்தில் வண்டியை ஓட்டிக் கொண்டிருக்க, வயிறு நிறைந்ததால் குழந்தை மெல்ல உறங்கத் தொடங்க, நிரஞ்சனா குழந்தையை அணைத்தபடியே கண்களை மூடிக் கொண்டு பின்னால் சாய்ந்து அமர்ந்தாள்.

உடல் அசதியினாலும், சில்லென்று வீசும் காற்றினாலும் அவள் தூங்கி விட, அவளையும் அறியாமல் தமிழின் தோளில் தலை சாய்த்தாள். குழந்தையைப் பிடித்திருந்த பிடி லேசாகத் தளர்ந்தது.

அவன் அவளுடைய கையிலிருந்து மெதுவாக குழந்தையை வாங்கிக் கொண்டு, அவளுக்கு வசதியாக அமர்ந்து கொண்டான்.

அவள் நன்றாக உறங்கத் தொடங்கினாள்.

அவன் தீவிரமாக எதையோ சிந்தித்தபடி அமர்ந்திருந்தான்.

திடீரென ஏதோ தோன்றியவனாய், தன் கைப்பேசியை எடுத்து நிரஞ்சனாவுடன் தான் சென்னை வந்து கொண்டிருப்பதாக முகிலுக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினான்.

அவன் இப்போது உறங்கும் நேரம்; அதனால் இதைப் பார்க்காமல் போய்விடுவானோ என நினைத்து ஒரு முறை அவனை அழைத்துவிட்டு பின் அழைப்பை துண்டித்தான்.

தமிழ் நினைத்தது போலவே முகில் இவனுடைய அழைப்பினைப் பார்த்து விட்டு பின்னர் இவன் அனுப்பிய குறுஞ்செய்தியைப் படித்துவிட்டு அதற்கு பதிலும் அனுப்பினான்.

"சரி! நீ சொன்ன மாதிரியே அப்பா அம்மா, அத்த மாமா கிட்ட சொல்லி உன் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிடறேன்! நீ பத்திரமா வந்து சேரு..." என்று!



இதை நிரஞ்சனா ஒத்துக் கொள்ளுவாளா?


- தொடரும்....

 
அட ஹீரோ திடீர்ன்னு வந்து நிற்கிறார்...... எப்படியோ காப்பாத்திட்டார்......
 
தமிழு கரெக்டா போய் காப்பாத்திட்டே,
பாவம் நிரஞ்சனா, இன்னும் சோதனை இருக்கா, இல்லை இனிமேலாவது அவ நிம்மதியா இருப்பாளா, எல்லாம் தமிழ் கையில இருக்கு ???
 
நல்லா இருக்கு
கல்யாணம் இவ ஒத்துக்குவாளா
 
Top