Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Chandraayan-02

Advertisement

Charithraa.AR

Tamil Novel Writer
The Writers Crew
1572c702e1fc9f3df2f1e6804ea7d7bf copy.jpgசந்திராயன் பேசுகிறேன்!!!



நான்- சந்திராயன்!

நீங்கள் உழைத்ததன்

பயனாய்-

நிலவு நோக்கி

நீந்திய எனக்கு-

சோலர் ப்ரோக்ராம்மிங்கின்

விஞ்ஞானிகள்

சொல்லிக்கொடுத்த

Coding யாதெனில்,

Departure Geographical Zone-

பூமி என்பதோர்

பூகோளம்!

நீர்நிலங்காற்றென

இம்மூன்று மியைந்து

இயற்கை வரைந்திட்ட

பூக்கோலம்!!



ஆயினும்

அண்டங்கடந்து வருகையில்-

ஆயிரம் மாற்றம் என்னில்!

ஆக்சிஜன் கண்ட வானில் -வெறும்

ஆலைப்புகை கண்ணில்!

வற்றிய நதிகள்-

வறண்ட நிலங்கள்-

கான்கிரீட் காடுகள்-

அறுபட்ட மரங்கள்-

ஆண்ட்ராய்டால்

துருபட்ட மனங்கள்- பெண்

சிசுவையும்

புணரும்

உணர்வற்ற பிணங்களென்று

இதுவல்ல-

எனக்குச்சொன்ன

Departure Geographical Zone!



எனவே

தொடர்புகள்

துண்டித்து-



இவை ஏதுமில்லா

நிலவில் கொஞ்சம்

இறங்கிக்கொள்கிறேன்!

அப்படியே-

வியர்வை சிந்தி

எனையனுப்பிய

விஞ்ஞானிகளுக்காய்-கொஞ்சம்

இரங்கிக்கொள்கிறேன்!!

--

அதுவரை-

கவலை வேண்டாம்.

பிரிக்க முடியா

பிறையும் சிவனும்

ஒருநாள்

நிச்சயம் இணையும்!

இன்றுதிர்த்த கண்ணீர்

அன்று-

ஆனந்தமாய் நனையும்!!
 

Advertisement

Top