Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

CHAPTER 2 : TTV

Advertisement

Krishnanthamira

Well-known member
Member
This should have been registered earlier. A huge bucket of thanks to @பிரியா மோகன் மோகன் and @Sivapriya akkazz for helping me to find the perfect app for Tamil typing. Without their help, I would have stuck in figuring out the apps and you guys would have definitely missed my writer avatar.??





இந்துமதி இல்லம்


“உன்னில் நான் ஒரு பாதியென தெரியாதோ
அன்பே நீ அதை சொல்லுவது ஏன் புரியாதோ”



இந்த பாட்டு கேட்டவுடன் அவள் நியாபகமே.
அவன் கல்லூரியில் முதுநிலை படிக்கும் போது பார்த்த அவள்.
காலேஜ் கல்சுரல்சில் அவள் பாடிய போது இந்த பாடல் அவனை வேற விதமாய் தாக்கியது. அவன் அது பாடல் மட்டும் என்று நினைத்தான். இப்போதும் கூட அப்படி தான் நினைக்கிறான்.
ஆனால் அது பாடல் மட்டும் அல்ல என்று இவன் உள்ளமே எடுத்து சொல்லும் நாள் கூடிய விரைவில் வருகின்றது.
அதை இவனும் அவளும் ஆவலுடன் எதிர்கொள்வார்களா என்பது ஐயமே.

>>>>

“என்னடி சொல்ற? ஆமாண்டி அவ இன்னிக்கு காலைல ஓடி போய்டாலாம். என் சித்தி வீடு அவ வீடுபக்கத்துல தான இருக்கு. கூச்சல் கேட்டு இவங்க போய் என்ன னு பாத்தப்ப தான் தெரிஞ்சுதாம். எங்க சித்தி ஒடனே எனக்கு போன் போட்டு அவ யாரு கூட ஓடிப் போனானு எனக்கு தெரியுமா னு கேட்டாங்க. எனக்கு பக்குனு ஆயிடுச்சு. இவ போனதுக்கு நம்ம பேர இழுத்து விட்ருவாங்களோ னு ஒரு பயம் வந்துட்டு.”

“ஆமா இல்லைனா மட்டும் நீ பயப்படமாட்ட.”

“ஹிஹி” என்று சமாளித்தாள் ஓவி
.
“பவித்ரா வா டி இப்படி செய்தது! அவ வீட்டு சூழ்நிலைல இதெல்லாம் அவளுக்கு தேவையா?” என்றே அவர்கள் சண்டையில் கலந்துக்கொள்ளாமல் கவலைப்பட்டாள் தமிழ்.

“சூழ்நிலை பார்த்து காதலிக்க முடியுமா? காதல் ஒரு உன்னத உணர்வு. அது ஒரு காட்டாறு வெள்ளம். நம்மளுக்கே தெரியாம நம்மள அடிச்சுட்டு போய்டும். அப்படிப்பட்ட காதல் எப்ப வரும் எப்படி வரும்னு யாருக்கு தெரியாது. வந்துட்டா அதுகிட்ட இருந்து யாராலையும் தப்பிக்க முடியாது.” என்று நேற்று இரவு பார்த்த படத்தின் டையலாக்கை ஏற்ற இறக்கத்துடன் சொல்லி முடித்தாள் இவர்களின் இன்னொரு தோழி.

“நேத்து நீதானே என் சொந்தம் படம் பாத்தியா?”

“ஹிஹி ஆமாம் தமிழு. நீயும் பாக்கணும் சொல்லிட்டு இருந்த அல்லவா!”

“கிளைமாக்ஸ் என்னாச்சு? நானும் பாத்துட்டு இருந்தேன். அப்படியே தூங்கிட்டேன் .”

“இது இப்ப ரொம்ப தேவையா? என்னை ஒழுங்கா கதை சொல்ல விடுங்க டி.”

“அடிங்க நம்ம தோழி வாழ்க்கை உனக்கு கதையா?” என்று அவளை அதட்டினாள் தமிழ்.

“அதா விடு டி நீ சொல்லு ஓவி. என்ன ஆச்சு அதுக்கப்புறம்?அவ யாருக்கூட தான் வீட்ட விடு போனா?”
மற்றவள் ஆகிய பைந்தமிழை ஒரு பார்வை பார்த்துக் கொண்டு மீதி அவள் அறிந்தவற்றை கூற ஆரம்பித்தாள்.

“அந்த மெக்கானிக் பையன் இருக்கான் ல.”

“அடி மெக்கானிக்கு ஏது டி பையன். அவனே ஒண்டி கட்டை. அவன் கூடவா இவ ஓடி போனா?” என்று வியக்கத்தக்கக் கேள்வியைக் கேட்டு அனைவர் முகமும் பார்த்தாள் கவி, இன்னொரு தோழியாகப்பட்டவள்.

“ குறுக்க குறுக்க பேசாம சொல்றத கேளு.”

“ அப்ப நீ கேள்வி கேக்க முடியாத படி சொல்லு.”

“ரெண்டு பேரும் பேசாம இருங்கடி சீனியர் பையன் வர்றான்.” என்று அவர்களை அடக்கினாள் பைந்தமிழ்.

“சீனியருக்கு கூட பையன் இருக்கானா?”

“இவளை நாலு சாத்து போடு தமிழு.” என்றாள் ஓவி கவியைப் பார்த்து முறைத்துக்கொண்டே.

ஒரு சகிக்கமுடியாத முகபாவனையைக் கொடுத்து அவர்களை கலவரப்படுத்தி, சீனியர் மீது அவள் பார்வையை வைத்தாள்.
அங்கு சீனியர் என்று விளிக்கப்பட்டவன் விக்ரம்.

அசரடிக்கும் அழகு. தாடி இருந்து அதை மழித்து இப்பொது அது திரும்ப வளர்வதை குறிப்பது போல் ஒரு தாடி. மலையாளி நிறத்தில் மஸ்கது அல்வா போல் இருப்பான் சும்மா வேணும் இங்கு வருகிறானா இல்லை வேலையாய் வருகிறானா என்று பார்த்திருந்தாள் ...இல்லை என்றாலும் பார்த்திருப்பாள். அவனை அவ்வப்போது, அவன் அவளை பார்க்காத போது, இவள் பார்வை அவனை பார்க்கும். பார்வைக்கு பெயர் கொடுக்கவில்லை. ஆனால் அதன் விலாசம் மாறுவதில்லை. அவனிடம் மட்டுமே. exclusive eye contact

அவனும் பார்த்திருந்தான் அவளை தான். அவளைப் பார்க்கத்தான் இங்கு வருகிறான். அவளிடம் பேசத்தான் அவன் நீண்ட நெடிய கால்கள் வேகமாய் நடைப் போட்டன.

மூன்று பேரும் எப்போதும் ஒட்டிக் கொண்டே சுத்துவதால் இவனால் டக்கென்று அவளிடம் நெருங்க முடிவதில்லை. மற்றவர்கள் போல் இவள் நண்பி கூட்டம் இவனை நெருங்க முயற்சிப்பது கூட இல்லை.
இன்று தான் இவாளின் கிளாஸ் தோழி ஓடிப் போய் கல்யாணம் செய்ததாய் கேள்விபட்டான். அதைப் பற்றிக் கேட்பது போல் அவளிடம் பேச தான் இப்படியான ஒரு வேக நடை.

“என்னடி ஒரு தென்றல் புயல் ஆகி வருதே மாதிரி இம்புட்டு பாஸ்டா சீனியர் நம்மள நோக்கி வர்றாரு. என்ன விஷயமா இருக்கும். ஏதும் காம்படிஷன் இருக்கா இப்ப.”

“ஏதோ சொல்ல தான அவரே வர்றாரு. அவர்கிட்டயே கேட்ருவோம்.” என்று தமிழ் கூறி முடிக்கவும் அவன் அவர்களை நெருங்கவும் சரியாக இருந்தது. ஒரு விதத்தில் அதுவரை எல்லாமுமே சரியாய் இருந்தது.

“ஹாய் சீனியர்.”

ஹப்பா சீனியர் னு சொன்னா. அண்ணானு சொல்லிருந்தா கதையே கந்தல் ஆகி இருக்கும். இவன் ஜூனியர் ஆக இருந்த வரை அண்ணா என்று தான் ஆண்களைக் கூப்பிட வேணும் என்று ரூல் இருந்தது. இவன் சீனியர் ஆக வந்தது முதல் அதை நிர்வாகம் தளர்த்தி விட்டது.இவனால் எல்லாம் அல்ல. அது தானாய் நடந்தது. இல்லை இல்லை அவனால் நடந்தது. இவளிடம் அவனை பற்றியும் பேச வேண்டும். இந்த மும்மூர்த்திகள் அவன் சொல்வதை எப்படி எடுத்து கொள்வார்களோ. இவன் ஒரு வகையில் நடந்தவற்றால் பாதிக்க பட்டான் என்றால் அவன் ஒரு வகையில்.

இவள் பேசியது கண்டு மற்ற இருவருக்கும் ஆச்சரியமே. யாருக்கும் விக்ரம் மேல் பயம் என்று ஒன்று இல்லை என்றாலும் கவி இப்படி ஹாய் சொன்னது போல் சொல்ல முனைந்ததில்லை. அவள் சொன்னதை விட விக்ரமைப் பார்த்து சொன்னது ஏதோ உணர்த்தியது. இந்து யாரும் சிறுவர் அல்லவே. ஆனால் பார்வைகள் பலவிதம் என்றும் சும்மா சொல்லி வைக்கவில்லையே. ஒரு பக்கம் இப்படி ஏதோ அவர்களுக்குள் இருப்பதாய் சொன்னது. இன்னொரு பக்கம் ஒரு ஹாய்க்கு இத்தனை அக்க போறா என்றும் இருந்தது.
ஏதும் கண்டிப்பாக இல்லை ஆனால் ஏற்படலாம் என்று அனுமானித்து அமைதி காத்தனர் மற்ற இருவரும்.

“ஹாய் ஓவி..."

பக்கென்று சிரித்துவிட்டாள் ஓவி. ஓடி பொய் திருடனை பிடித்தவன் ஒருவன் ஒய்யாரமாய் மெடல் வாங்கியவன் ஒருவன் என்பது போல் ஹாய் சொன்னது கவி இவன் பதில் சொல்வதோ ஓவி க்கு.அதுவும் ஓவியா என்பதை சுருக்கி ஓவி வேறு.
இதழ் தமிழுக்குமே விரியத்தான் செய்தது. கவியின் கண்கள் விரிந்ததில் நம்மாளு சுதாரித்துவிட்டார்.(இப்ப சுதாரிச்சு என்ன பயன்)

“ஹாய் கவி, ஓவி, தமிழ்”

“ஹாய் சீனியர்”

மற்றவர்களுக்கு தலையசைப்பு கொடுத்துவிட்டு கவி புரம் நோக்கி , “உங்க கிளாஸ் தானா அந்த பொண்ணு.”

“எந்த பொண்ணு?”

“வீட்ட விட்டு ஒரு பொண்ணு ஓடிப்போச்சாமே”

“ஆமா சீனியர்” என்றாள் ஓவி.

“பவித்ரா பத்தி ஏன் கேக்குறீங்க” என்றாள் பைந்தமிழ்

“அதுவும் எங்ககிட்ட” என்று அவன் குரல்வளையை பிடிக்காத குறையாய் அவனை திணற வைத்தாள் கவி. கவிதாயினி

“எல்லாம் ஒரு கணக்குக்கு தான்.”

“ஏன் சீனியர் அந்த பொண்ண கணக்கு பண்ண நினச்சீங்களா இல்ல கணக்கு எடுக்குறீங்களா” என்று கவி அவளை அதட்டியதற்கு பழி வாங்க நினைத்தாள் ஓவி.

“ஹாஹா இல்லை பொண்ணுங்க கல்யாணம் பண்றது எப்போவும் காதலிச்சவனா இருக்காதே அதான் confirm பண்ணிக்கலாம்னு”

“ஆம்பளைங்க எல்லா பொண்ணுங்களையும் காதலிய பாத்தா இப்படி தான் தெரியும்.”

“அப்ப தப்பு பொண்ணுங்க மேல இல்லன்னு சொல்லுறியா?”

“ஆண் வர்க்கம் சித்தரிக்கிற அளவு நாங்க மோசக்காரங்க இல்லன்னு சொல்லுறேன்.”

“ஏதோ ஒரு கொலைக்கும் நூறு கொலைக்கும் ஒரு தண்டனை தான. மோசக்காரங்களுக்கும் சுமார் மோசக்காரங்களுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கு.”

புசு புசு என்று கோவம் கொப்பளித்தது அவர்களுக்கு.

அதிலும் கவியைப் பற்றி கேக்கவும் வேண்டுமா?இவனை என்ன செய்தால் தகும். என்னிடமே வந்து பெண்களைப் பற்றி இப்படி சொல்லுறானே. அதிலும் இவள் சொன்ன வார்த்தையை வைத்தே மடக்கி விட்டானே. இவள் எதையோ நினைத்து சொல்ல போக அவன் அதை வேறொரு அர்த்தம் கொண்டு கொலைகாரன் ரேஞ்சுக்கு கொண்டு சென்றுவிட்டானே என்று அவள் லுடோவில் நம்மளை மட்டும் வெட்டும் போது ஏற்படும் சோகம் கொப்பளிக்க அவனை பார்த்தாள்.

அவள் ஆதங்கம் அனலாய் அவனை பொசுக்கியதை அவன் அறிவான்.
ஆனால் என்ன செய்ய அனைவரும் போல் அவனுக்கும் அவளை இம்சித்து பார்ப்பதில் தான் ஆர்வம் அதிகம்.
ஆர்வத்திற்கு ஆகாரமாய் இது வரை சந்தர்ப்பம் தான் அமையவில்லையே தவிர மற்ற படி அவனும் காதலன் தானே.

“பழைய கான்செப்ட் சீனியர் இப்பலாம் பொண்ணுங்க புரிஞ்சுகிட்டாங்க அவங்க உருகி உருகி காதலிச்சாலும் காதலனோ இல்ல அப்பாவோ யாரோ ஒருத்தர் கல்யாணத்துக்கு ஒத்துக்கப் போறது இல்லை. அதான் பழகுறதுக்கு முன்னாடியே தெளிவா சொல்லிடுறாங்க.
நண்பனா இருக்கணும் என்று நினைச்சா வா இல்லைனா பழக்கம் நமக்குள்ள வேணாம்னு.”

“இதை எத்தனை பேரு பின்பற்றுறாங்கன்னு நீ நினைக்குற.”

“யாரு பின்பற்றுறாங்களோ இல்லையோ நாங்க பண்ணுறோம். இதுவரை அப்படித்தான் பண்ணி இருக்கோம்.”

விக்ரம் பேச்சு வேறு விதமாய் திரும்புவதை விரும்பவில்லை.அதில் ஏதோ அவள் தன்னை குறிப்பிடுகிறாள் என தெரிந்தது. உறவே ஆரம்பிக்கா நிலையில் இந்த உள்குத்து பேச்சு இவனுக்கு அவசியமா என தோன்றியது. அவனுக்குமே சற்று சங்கடத்தை தான் குடுத்தது. படக்கென்று இப்படி பேசி இருக்க கூடாதோ. நம் பார்வையில் அவர்கள் இதை பார்க்கவேண்டும் என்று நினைத்தது அதிகப்படியோ என அவன் எண்ணம் கொஞ்சம் லேட்டாய் எடுத்து உரைத்தது.

வடிவேலு போல் அவன் மண்டையும் இதை அப்பவே சொல்றதுக்கு என்ன என்று வெம்பி வெதும்ப, அதுவோ சித்தப்பாவிடம் ஐஸ்கிரீம் வாங்கி தின்னும் குழந்தைபோல் பழிப்பு காட்டி நின்றது.

இங்கு இவர்கள் மூவருமே வெவ்வேறு சிந்தனையில் சிக்குண்டு நின்றனர்.

ஒவிக்கோ பேச்சு எங்கோ தொடங்கி எங்கோ முடிந்து நிற்கிறதே என்று இருந்தது. கலாட்டவாய் ஆரம்பித்த பேச்சு இப்படி இந்த ரூபம் எடுக்கும் என்று அவள் என்ன ஜோசியமா அறிந்திருந்தாள்.

தமிழோ விக்ரம் பேச்சை துளியும் ரசிக்கவில்லை. எதற்கு எடுத்தாலும் பெண்களை சொல்லும் சமூகத்தைச் சார்ந்தவனா இந்த விக்ரம். அறிமுகம் மட்டுமே உள்ளவன் என்றாலும் ஏதோ ஒரு சம்பந்தம் உருவாக போகிறது என்ற எதிர்பார்ப்பில் நின்றவளுக்கு கவியை நினைத்து கொஞ்சம் கலக்கமே.

இவ்வாறான பேச்சுகளை வலுவாக எதிர்ப்பவள் இல்லை என்றாலும் அவனின் பேச்சு குடுக்கும் அர்த்தங்கள் ஆயிரம் ஆகிறதே. பெண்களை மதிக்காதவன் இல்ல என்று இவன் மேல் இருந்த பின்பத்தில் விரிசல் கோடுகள் விழுந்து விட்டது. அது இவர்கள் எல்லோர் வாழ்க்கையையும் முக்கியமாக கவியின் வாழ்கையை எப்படி பாதிக்கும்.

>>>>>>

கவி தன் கண்களை அழுந்த தொடைத்து விட்டாள். இவ்வளவு நேரம் பஸ்ஸில் ஜன்னல் ஓரம் உக்காந்து வந்தது ஒரு விதமாய் பிசுபிசுப்பையும் எரிச்சலையும் கொடுத்தது.
ஏன்தான் இவ்வளவு தொலைவில் கல்லூரி கட்டி வைத்தானோ அந்த டின் கேன் மண்டையன் என்று அவள் எண்ணாத நாள் இல்லை. பெற்றவரை சொல்லணும் இந்த கல்லூரியில் தான் படிக்கோணும் என்று அடம்பிடித்து சேர்த்துவிட்டுவிட்டார்.இப்போது அவதிப்படுவது அவள் தான் அல்லவா!

வந்தவுடன் குளிக்க பிடிக்கவும் இல்லை குளிக்காமல் இருக்கவும் முடியவில்லை. வெயில் தான் அந்த போடு போடுகிறதே.

“அம்மா தண்ணி பிடிச்சு வைக்கலையா?”

தோளில் துண்டுடன் மடித்து கட்டிய நைட்டியுமாய் நின்ற மகளை கண்டவுடன் தான் இன்று தண்ணி பிடித்து வைக்கலையே என்ற எண்ணம் தோன்றியது.
இவர்கள் வீட்டில் கருப்பு தண்ணீர் டேன்க் தான். ஆதலால் சாயங்காலம் ஆனதும்கூட தண்ணீர் சூடாகவே இருக்கும். எனவே இவளுக்கு மாலை குளியலுக்கு மாலதி தண்ணீர் பிடித்து வைத்து விடுவார். இன்று வேலை மிகுதியில் மறந்து விட்டார்.அதை வெளியில் சொல்லிவிட்டால் அவர் எப்படி அம்மா தி பாஸ் ஆவர்?

“நீ உப்பு தண்ணீர்ல போய் குளி.” “கேள்விக்கு பதில் சொல்லாம சொலுசன் சொல்ல சொல்லி உன்ன கேக்கல ம்மாவ்.”

“இப்ப என்னடி? ஆமாம் தண்ணி பிடிக்க மறந்துட்டேன். இது ஒரு குதம? என்னமோ கொலைகாரன விசாரிக்கிற மாதிரி விசாரிக்கிற . போ போய்சீக்கிரம் குளிச்சுட்டு இந்த லட்டுவை லாலி வீட்ல கொடுத்துட்டு வா.”

“ நீ சொன்ன வேலைய நாங்க செய்யலைனா எவ்ளோ கத்துற? அதையே மாதிரி எங்களுக்கும் இருக்கும். இப்ப ஆச்சும் புரிஞ்சு நடந்துக்க? எல்லாம் சிவகாமிய சொல்லணும். பிள்ளைய வளத்துருக்கா பாரு.”

“அப்படி சொல்றா என் பட்டுகுட்டி.” என்றபடியே உள்ளே வந்தார் மாலதியின் மணாளன்.

"வந்துட்டாரு ல நாட்டாமை மகன். உங்க மம்மியையும் தான் சொல்லணும். பெத்த பிள்ளையை தான் ஒழுங்கா வளர்க்கலைனா கல்யாணம் பண்ணி மகன் கூட்டிட்டு வந்த மருமகளையும் இப்படி வளர்த்து வச்சுருக்காங்க. வரட்டும் நானு ட்ரைனிங் கொடுக்குறேன்."

“என்னடா ம்மா அப்பாவ பாத்து இப்படி சொல்லிட்ட? அப்பாவும் அப்பத்தாவும் பாவம் இல்லையா? நாங்கலாம் கிராமத்துக்காரங்க பாப்பா அதான் சூது வாது இல்லாம வளர்ந்துட்டோம்.”

“நீங்க என்ன என்னை வச்சு அம்மா குடும்பத்த டேமேஜ் செய்ய பாக்குறீங்க னு எனக்கு தெரியுது. இதுக்கு எல்லாம் நா சிக்க மாட்டேன். சிறுத்தை சிக்கும் சில்வண்டு சிக்காது.”
வாயாடியபடியே வளவு பக்கம் செல்லும் மகளை பார்த்து நின்றவர், “ என்னமா வாய் பேசுறா இல்ல இந்த குட்டி” என்று தன் மூலம் உலகுக்கு வந்த சின்ன உயிரைக் கண்டு சிலாகித்து நின்றார்.

ஆனால் அவர் அறியாதது வந்தவுடன் ஆர்வக்கோளாரில் அவர் சிதறவிட்ட சில்லறைகள் அவரை சீர் செய்ய காத்து நிற்கின்றது என்பதே.



நன்றி இதுவரை ஸ்க்ரோல் or வாசித்து வந்ததுக்கு.
அது என்னை போன்றவங்களுக்கு வேற லெவல் உணர்வு கொடுக்கும்.
நம்மளையும் ஒருத்தங்க மதிச்சு நம்ம வார்த்தைகள படிக்கிறாங்க அப்படிங்கற விஷயமே ஒரு பெரிய பூஸ்ட்.
hope I am doing justice to your allocated time on this space.
Have a great evening with your family and friends.
 
வாயை வெச்சிகிட்டு சும்மா இருந்திருக்கலாம் நம்ம சீனியர்! ???
 
Top