Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

CHAPTER : TTV

Advertisement

Krishnanthamira

Well-known member
Member
“என்னடா பண்ணி வச்சுருக்கீங்க?” “ஒரு கணக்கு கூட ஒழுங்கா போடல. இப்படியே போனா எக்ஸாம்ல மார்க் இல்ல முட்டைதான் வரும்.”
“ஏண்டா அவனுங்க என்ன ias பரீட்சை யா எழுதுறாங்க... எழுதுறது ஸ்கூல் பரீட்சை அதை கூட ஒழுங்கா செய்ய மாட்டாங்களா?”
“நம்ம எப்படி ஸ்கூல் ல பாஸ் ஆனோம்?” இமையை தூக்கி அவன் கேட்டதில் ஒரே அசிங்கமா போச்சு எபக்ட் விக்ரமிற்கு.
என்னடா இது இன்றைய நாளே சரி இல்லையே. அவ என்னடா னா பிரண்ட்ஸ் வச்சு பிரண்ட்ஸ் சோனில் போற்றுவேன் என்று மிரட்டுகிறாள். இவன் என்னடா என்றால் ஸ்கூல் கதையை அவுத்து விடுவேன் என்று அரட்டுகிறான். இவன பெஸ்ட் ப்ரண்டாவும் அவளை காதலியாகவும் அடைய எத்தனை ஜென்மம் பாவம் பண்ணினேனோ எனக்கே தெரியலையே பகவானே.
இப்போதைக்கு வேற வழி இல்லை சரணாகதி நீயேனு சரண்டர் ஆகிடுவோம் அப்ப தான் அங்க ஏறி நிக்குற மாரியாத்தாவ கீழ இறக்க முடியும்.
“சொல்லுடா ஏன் பதில் பேசாம நிக்குற?
“சொல்லுங்க ஏன் பதில் பேசாம நிக்குறீங்க?” பார்வதியின் குரலுக்கு சண்முகவேலுவிடம் பதில் இல்லை. அவரின் கேள்விகளுக்கு கடவுளிடம் பதில் இல்லை. இந்த விந்தையான சூழ்நிலை அவரின் நிதானத்தை சிறிது சிறிதாக குறைத்து கொண்டு வந்தது.
என்னடா ஏதோ வைவாக்கு வந்த எக்ஸ்டெர்னல் மாதிரி சொல்லு சொல்லுனுட்டு இருக்க?
“சும்மா பதில் சொல்லு சொல்லுனு நச்சரிக்காத? நான் உன்னை தொட்டு தாலி கட்டுனவன் டி. என்கிட்ட போய் அவளை கல்யாணம் பண்ணு இவள பண்ணு னு சொல்றியே புத்தி கெட்டுப் போச்சா உனக்கு?” பொறுமையாய் பேச நினைத்தவர் பொரிந்து தள்ளினார்.
“என் புத்தி கெட்டு போகலைங்க. உடம்பு கெட்டு போச்சு. அது சிதைஞ்சு போய் கிடக்கு” என்று கூறி கதறி அழுதார்.
“கூறு கெட்டதனமா பேசாத பாரு.நான் இன்னொருத்திய கட்டிகிட்டா மட்டும் நம்ம வாழ்க்கைல எல்லாம் சரி ஆயிடுமா? நம்ம பொண்ண பத்தி கொஞ்சமாச்சும் யோசிச்சு பாத்தியா டி. இதெல்லாம் பாக்குற கேக்குற வயசா அவளுக்கு.விட்ரு டி. நாங்க தாங்கமாட்டோம். உன் உடம்பு ரணத்த விட நீ இப்படி பேசும் போது தான் எங்க மனசு ரொம்ப காயப்படுது.”
“நானும் பழம் மாப்பிள்ளை.”
“டேய் எனக்கு பதில் சொல்லுனு சொன்னா அங்க படிக்கிற பசங்களோட விளையாண்டுட்டு இருக்க.” என்று கத்தினான் சேதுபதி.
சேதுபதி தனேந்திரன்.
“இப்ப ஏன் இப்படி கத்துற ? ஒரேடியா படிச்சுட்டே இருந்தா மூளை சூடாகி உருகிடும். அப்பப்ப இப்படி ரிலாக்ஸ் பண்ணிகணும்” என்று கிளாஸ் எடுப்பவனிற்க்கே கிளாஸ் எடுத்தான் நம் விக்ரம்.
“தயவு செஞ்சு இப்படிலாம் அந்த பொண்ணு முன்னாடி பேசிடாத டா. உன்னை நிராகரிக்க கூட தகுதி இல்லாதவன் னு சொல்லிட போகுது..”
“அதை ஏன்டா கேக்குற? அவ இந்நேரம் அதை எப்படி செய்யலாம் னு தான் யோசிச்சுட்டு இருப்பா?”
சோகமாய் இயம்பியவனிடம் ஒரு சந்தேக பார்வையை வீசிக்கொண்டே, “ ஏன் இப்ப என்ன பண்ணி வைச்ச? நீதான் இதயம் முரளி மாதிரி காதல சொல்லாமலே காதலிக்கிறவன் ஆச்சே. அப்படி தள்ளி நின்னு கூடவாடா பிரச்சனை பண்ணிட்டு வருவ”
“ஹலோ நாங்க இன்னிக்கு அவகிட்ட பேசிட்டு வந்துட்டேன்.”
அப்புறம் என்ன? எங்க இருந்து தைரியம் வந்துச்சு?
“தைரியம் லம் ஸ்டாக் ல தான் இருக்கு ஆனா அந்த மூவர் படை தான் என்று விக்ரம் சொல்ல சொல்ல சேதுபதிக்கு ஒன்று தான் தோன்றியது. இவன் இந்த ஜென்மத்தில் காதலித்து கல்யாணம் செய்துக் கொள்ளப் போவது இல்லை. எப்படியும் அவனோடு சேரந்து விக்ரமிற்கும் சந்நியாசம் வாங்கிவிட வேண்டியது தான் என்று.

"என்னடா நான் சொல்றதை கேட்டுட்டு இருக்கியா இல்லையா??"

"கேட்டுட்டு தான் டா இருக்கேன். என்ன பண்ணி வைச்சிருக்க நீ?"

"நான் இதெல்லாம் செய்யணும்னு நினைச்சு செய்யலைடா"

"நினைச்சு செய்யலையா? இனிமே அந்தப் பொண்ண நினைச்சுக் கூட பார்த்திடாத?"

விக்ரமின் முகம் காற்றுப் போன பலூனாய் சுருங்கவும்.

"இப்ப இப்படி மூஞ்சி வைக்கிறவன் அங்க ஏன் இப்படி பேசி வைச்ச?"

"சொல்லு நிஜமாவே நீ அந்தப் பொண்ண மட்டும்தான் பார்க்குறியா? இல்ல கூட இருக்க ஓவி சாவி எல்லாத்தையும் சேர்த்தே பாக்குறியா?" என்ற அவனின் அதட்டலில்,

"டேய் என்னடா சொல்லுற? நான் அப்படிலாம் செய்வனா?" என்று அதிர்ச்சியுடன் விக்ரம் அலறினான்.

"அப்புறம் என்ன கூந்தலுக்கு அந்த மத்த பொண்ணுங்களை ஓவி காவினு கூப்பிட்டு வந்திருக்க." விக்ரமை தன் புறம் திருப்பி அவன் கண்களுக்குள் பார்வையை பொதிந்து, "உன் ஆளு பேரை சுருக்கி கூப்பிட்டா லாஜிக் இருக்குன்னு ஏத்துக்கலாம். சுத்தி இருக்க மத்த பொண்ணுங்க பேரை அதுவும் முதல் தடவை பேசும் போதே சுறுக்கி செல்லமா கூப்பிட்டு வைச்சா உன் காதல் கதை கந்தல் தான் டா."

"டேய் எனக்கு என்ன அவளுங்க பேரு மேல ஆசையாடா... கவி அப்படித்தான் அவங்களையெல்லாம் கூப்பிடுவா அவளை பாலோ பண்ணி நானும் இதை பாலோ பண்ணிட்டேன்."

“அதாவது நீ உன் ஆளை பாலோ பண்ணி அவ அவளோட பிரண்ட்ஸ் எப்படி கூப்பிடுறாளோ அப்படி கூப்பிட்டு இருக்க."

"ஓ யெஸ் "என்று விக்ரம் சிலாகிக்க...

"மேய்ச்சது எருமை அதுல என்ன உனக்கு பெருமை."

"அப்படியில்ல மச்சான்... முதப்புலையே அவளும் நானும் ஒன்னுனு காட்டிக்கிட்ட மாதிரி இருக்கும்னு நினைச்சேன்."

"போடா டேய்.

“அந்த நினைப்பது நனைப்பது எல்லாத்தையும் மூட்டை கட்டி வைச்சுரு.

வேற என்னலாம் பேசி வைச்சா முழுசா சொல்லு...."

அவன் பேசிய அனைத்தையும் விம் போட்டு விளக்க , சேதுவின் அருகே ஒரு சின்ன குரல்,

" ண்ணாவ் இது இதுக்கெல்லாம் சரிபடாது. நீ வான்னா "

என்று ஒரு வாண்டு அவனிடம் படிக்கின்ற இல்லை டைம் பாஸாக இங்கு வரும் வாண்டு அட்வைஸ் கொடுத்துக்கொண்டிருக்க...

"அடேய் இப்பத்தாண்டா புரியுது உங்கம்மா எதுக்கு உன்னை இங்க கொண்டு வந்து விடுறாங்கன்னு...நான் கூட சீரீயல் பாக்க விடமாட்டேங்கிறப் போலனு தான் நினைச்சேன். ஆனா நீ.. ஒண்ணாங்கிளாஸ் கூட தாண்டல...பேச்சை பாரு...விஷம்..." விக்ரம் இந்த குட்டி வாண்டின் பேச்சை கேட்டு பொங்கி ட்யுஷன் அனுப்பும் தாய்மார்களின் ரகசியங்களை புட்டு புட்டு வைக்க,

"சும்மா இருடா...அவன் அப்படியே அவன் அம்மாகிட்ட போய் ஒப்பிப்பான்"

"செய்வியா டா ... செய்வியா டா.." என்றுக்கூறிக் கொண்டே அவனைத் தூக்கி போட்டு விளையாட்டு காண்பித்தான் விக்ரம்.

"விக்கி , என்னதான் உன் உணர்வுகள் சரின்னாலும் நீ அந்த பொண்ணுங்ககிட்ட அப்படி பேசியிருக்கக் கூடாதுடா. அவங்க உன் காதலியும் அவளோட நண்பர்களும் அவங்களை சொல்ற மாதிரி தான நீ பேசியிருக்க. ஒரு பொண்ணை மதிக்காதவனை எப்படி அந்த பொண்ணு காதலிக்கும்னு நினைக்கிற. நம்மகிட்ட பொண்ணோ பொண்டாட்டியா எதிர்ப்பாக்குறது மரியாதையைத்தான். அப்படி இருக்கப்ப முதல் சந்திப்புலையே இப்படியெல்லாம் என்கிட்ட எதிர்ப்பாக்காதனு சொல்லுற மாதிரி இருக்கு நீ பண்ணி வைச்ச வேலை."

"இல்லடா. நான் அப்படி நினைச்சுலாம் எதுவும் பேசலை. நான் உண்மையா இருக்கணும் நம்ம கோட்பாடை அவங்க புரிஞ்சுக்கணும்னு நினைச்சு பேசினேன். அது ஏனோ இப்படி ஆயிடுச்சு. "

"சரி விடு. நடந்தது நடந்துப் போச்சு. இன்னொரு சான்ஸ் கிடைச்சா விட்டுடாத. இப்ப வா காபி போட்டு தர்றேன்"

"நீ போய் காபி போடு நான் இவனுங்களை பாத்துட்டு இருக்கேன்."

சரி என்னவோ பண்ணு என்பதாய் சேதுபதி கீழே சென்றுவிட,
விக்ரம் ட்யூசன் படிக்கும் வாண்டுகளிடம் கலாட்டா செய்து கலாய் வாங்கிக் கொண்டு இருந்தான்.

" 2k கிட்ஸ் வாய் ரொம்ப தான்யா இருக்கு. " என்று ஒரு புலம்பல் வேறு தனியே.
>>>>>>>

Thank you so much
 
Top