Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Ennai Ariyum Kaadhalan 10

Advertisement

ilakkikarthi

Active member
Member
என்னை அறியும் காதலன் 10

”லைட் பிங்க் கலரில் சுடிதார் அணிந்துகொண்டு, ராகுலை சந்திக்க கீழே இறங்கி வந்தால். ஹாலில் பார்வதியும்,யமுனாவும் அமர்ந்து பேசிகொண்டிருந்தனர். அவர்களிடம் வந்தவள், ‘நான் வெளிய போயிட்டு வரேன்ம்மா...’


“சரி போயிட்டு சீக்கிரம் வந்துரு... அனு”

“ம்ம்... ஐய்யா கிளம்பிட்டாங்களா ம்மா.”

”இல்லை ம்மா... முக்கியமான ஃபைல் பார்த்துட்டு இருக்காங்க...” யமுனா சொல்ல.

“அவர்கிட்ட சொல்லிடுங்க ம்மா.”

“ம்ம்... சரி அனு.”

“அவள், வெளியே சொல்ல தனது காரை இயக்கினால். வரும் வழியில் எல்லாம் ராகுலிடம் எப்படி பேசுவது எனவும், அவன் அதை புரிந்து கொள்வானா எனவும் யோசித்துகொண்டே வந்தால். அவள், காதலன் போனில் அழைக்கும் வரை”.

“காரை ஓரமாக நிறுத்திவிட்டு, அவனது போன்காலை அட்டென் செய்து பேசலானால்.”

“சொல்லு மனு...”

“எங்க இருக்க”

“நான் இப்போ தான் வீட்டை விட்டு கிளம்பி பதினஞ்சு நிமிஷம் ஆச்சு. நீ எங்க இருக்க.”

“நான், கோர்ட்க்கு வெளியே இருக்கேன்...”

“ஓகே, நான் வரேன்... சேர்ந்து போகலாம்.”

”ம்ம்... சரி”

“கோர்ட்க்கு வெளிய நின்றவன் முன் தனது காரை நிறுத்திவிட்டு, கீழே இறங்கினால். ‘வேலை முடிஞ்சத”

“ம்ம்... முடிஞ்சது... நான் ட்ரைவ் பண்ணுறேன்.” அவளிடம் காரின் சாவியை வாங்கினான்.

“அவளும், அவனிடம் கொடுத்துவிட்டு அடுத்த பக்கம் ஏறி அமர்ந்துகொண்டால்.”

“பலமான யோசனையில இருக்குற போல...”

“ம்ம்... ராகுல்கிட்ட எப்படி பேசனும் யோசிக்கிறேன்... எதாவது தப்பா ஆச்சுனா...”

“அவனுக்கு புரியிற மாதிரி சொல்லுவோம்.”

“நீ கோபம் படாம இருக்கனும்”

“என்னை கோபம்படுத்துற மாதிரி அவன் நடந்துக்காம இருக்கனும்”

“என்னை கோபம் படாம இருனு அடிக்கடி சொல்லுவ, ஆனா இப்போ நீ தான் அதிகமா கோபம் படுற.”

“என்ன செய்யுறது... நீ எனக்கு கிடைக்காம போயிடுவியோனு பயம் தான்.”

“ம்ம்ம்...இப்போ புரியுதா அன்னைக்கு எனக்கு ஏற்ப்பட்ட பயம் தான இப்போ உனக்கு வந்திருக்கு.”

“உண்மை தான்”

“இருவருமே கடந்து வந்த பாதைகளையும், நாட்களையும் பேசிகொண்டே வந்தனர். அவனோ, அவளை நினைத்து, உருகிய காதலை பேச. அவளோ, அவனை மறக்க முடியாமல் தவித்த இரவுகளை பேசினால். இருவருமே உணர்ந்துகொண்டார்கள் போல காதல் பிரிவின் வலி இனியும் அனுபவிக்க கூடாதென்று.”

“அவளை பார்த்த பின் தான் அவனது தாடியை கூட மலித்தான். இதை மட்டும் அவனது ஜூனியர்ஸ் பார்த்த இது நம்ம சீனியரா என்று வியந்து போவார்கள். அந்த அளவிற்க்கு அவனது அழகு கூடியது.”

“ஹோட்டலில் நுழைந்து ராகுல் இருக்கும் டேபில் அருகில் அவர்கள் இருவரும் சென்றனர். முன்பே அவள் ராகுலிடம் பேசி இன்று சந்திக்க வேண்டும் என கூறினால். அவனும் ஒப்புக்கொண்டான். அவனை பீச் ரெஸ்ட்ராண்ட்க்கு அவள் வரசொன்னால்.”


“அவளுக்கு முன்பே அவன் வந்திருந்தான். தன் அருகில் நிழல் ஆடுவதை பார்த்து, தன் முன் நிற்ப்பவரை நிமிர்ந்து பார்த்தான்.”

“ஹாய்... வந்து ரொம்ப நேரம் ஆச்சா” என அவன் பேரை சொல்லாமல்.

“ஹாய்... அனு...” அவனும் வரவேற்ப்பாக பேச.

“அவளோ, பக்கத்தில் இருக்கும் ரகுவை திரும்பி பார்த்தால். யாரை பார்க்கிறால் என அவனும் அவள் கண்கள் செல்லும் திசையை பார்க்க.”

“ரஹ்மான்...” என அவனுக்கு அறிமுகபடுத்த.

“தெரியும்...”

“அவளோ ஆச்சர்யமாக, எப்படி என அவனை பார்த்தால்.”

“ஓகே, சிட்...”

“எப்படி பேச்சை ஆரம்பிப்பது என தெரியாமல், அனு ரகுவை பார்க்க. அவனே ஆரம்பித்தான்.”

“ராகுல், உங்ககிட்ட பேசனும் சொன்னது எங்க...” அவன் ஆரம்பிக்க.

“உங்க காதலை பத்தி... தான”

“அவனோ, ஆமா...” எந்தவித அதிர்ச்சியும் இல்லாமல்.

“அவளுக்கு அதிர்ச்சி தான்... ஆனால் இவர்கள் இருவரும் பழகியது போல் பேசிக்கொண்டிருந்தனர்.

“எனக்கு தெரியும் உங்க காதலை பத்தி ஆல்ரெடி அனுவோட அம்மா என்கிட்ட பேசிட்டாங்க. இன்னைக்கு எனக்கு நீ மீட் பண்ணனும் சொல்லும் போதே இது தான் யூகிச்சேன்... அதே மாதிரி தான்.”

“ஆனா உடனே என்னால நிறுத்த முடியாது. எல்லார் முன்னாடியும் உங்க இரண்டு பேருக்கும் தான் என்கேஜ்மெண்ட் நடக்கும். அதுவும் எங்க என்கேஜ்மெண்ட் டேட் பிக்ஸ் பண்ண அதே இடத்துல. அதுக்கு நான் பொறுப்பு.”

“எப்படி நடக்கும்... அப்பாக்கு இதுனால எந்த அவமானமும் வராதுல.” அவள் கேட்க.

“அதெல்லாம் வராது... என் அப்பாக்கிட்ட நான் பேசிடுவேன் அவரும் லவ் மேரேஜ் தான்... அதனால உங்க காதலை அவரு சேர்த்து வைப்பாங்க.”

“அப்பாவ நினைச்சா தான் பயமா இருக்கு... அவரோட சம்மதம் தான் எனக்கு முக்கியம் அவருக்கு பிடிச்சு தான் எங்க கல்யாணமும் நடக்கனும்”.

“தேவையில்லாம பயப்படாத... எல்லாம் நல்லபடியா நடக்கும்.” ராகுல் அவளுக்கு நம்பிக்கை கொடுக்க.

“தாங்க்ஸ் ராகுல்...” நீயாவது எங்க காதலை புரிஞ்சுகிட்டதுக்கு.

“உண்மையான உங்க காதல் தான் ஜெயிக்கனும்... அதுக்கு நான் தடையா இருக்க கூடாது.” அவர்களிடம் இருந்து விடைபெற்று அவன் சென்றுவிட்டான்.

“என்ன இப்போ ஹாப்பியா...” ரகு கேட்க.

“ம்ம்...ஆனா அப்பா” அவள் ஆரம்பிக்க.

“கண்டிப்பா ஒத்துப்பாங்க... பயம் வேண்டாம் உனக்கு.”

“ம்ம்... சரி கிளம்பலாம்...”

“இருவரும் அந்த ஹோட்டலைவிட்டு வெளியேறி, கடற்கரைக்கு சென்றனர்.”

“நாளைக்கு என்கேஜ்மெண்ட்க்கு ட்ரெஸ் எடுக்க போறாங்களாம்.”

“சரி போய் எடுத்துட்டுவா...”

“விளையாடத மனு”

“நான் விளையாடலை... சீரியஸா போய் ட்ரெஸ் எடுத்துட்டு வா... நம்ம என்கேஜ்மெண்ட்க்கு.” அவன் விளக்கமாக சொல்லவும் தான் அவளுக்கு புரிந்தது.

“ம்ம்...சரி்”

”என்னாச்சு ராகுல்... ஏன் அமைதியா இருக்குற.” அவனது தந்தை கேட்க.

“அப்பா... எனக்கு இந்த என்கேஜ்மெண்ட் வேண்டாம்.”

“ஏன்?”

“அனு, வேற ஒரு பையனை விரும்புறா அதுவும் எட்டு வருஷமா. இதுக்கிடையில நான் அவளை கல்யாணம் செய்யறது ரொம்ப தப்பு.”

“ஆனா, சிவா என்கிட்ட இதைபத்தி எதுவும் சொல்லலையேப்பா...”

“நான் சொல்லுறேன்ல ப்பா... நடக்க போற என்கேஜ்மெண்ட் பங்ஷன்ல, அனுக்கும்,ரஹ்மானுக்கு தான் என்கேஜ்மெண்ட் நடக்கனும்.”

“சரி ராகுல்... ஆனா உன் காதல்”

“என்னோட காதல் ரொம்ப தப்பு ப்பா. அடுத்தவன் காதலி மேல லவ் வர்ரது ரொம்ப தப்பு ப்பா நான் உணர்ந்துட்டேன்.” மகன் தவறை உணர்ந்துகொண்டதில் அவருக்கு மகிழ்ச்சி தான். அவருக்கும் ஏற்கனவே தெரியும் அனு காதலிக்கிறால் என்று, பார்வதி தான் முதலில் ராகுலின் தந்தையிடம் பேசியது. அது போலவே ராகுலிடம் பேசினார்.

“ஐய்யா...” சிவபாலனின் ஆஃபீஸ் கதவை தட்டிவிட்டு உள்ளே சென்றால்.

“வா அனு... இன்னும் தூங்காம என்ன பண்ணுற... மணி பத்தாக போகுது”.

“எனக்கு ஒன்னும் தெரியனும் ஐய்யா.”

“என்னம்மா...”

“ரகுவ ஏன் உங்களுக்கு பிடிக்கலை.”

“பிடிக்கிறதுக்கு ஆயிரம் காரணம் சொல்லலாம். ஆனா பிடிக்காததுக்கு காரணம் சொல்ல முடியாது அனு.”

“கடைசிவரைக்கு உங்க பிடிவாதத்துல இருந்து இறங்கமாடேங்களா ஐயா.”

“மாட்டேன் என்பது போல இருபக்கமும் தலையசைக்க.” அவள் சோர்ந்து போனால்.

“சோர்வுடனே, அந்த அறையைவிட்டு வெளியேறினால்.”

“மகளின் சோர்வை பார்த்ததும் அவருக்கு ஏன் தான் இந்த சோதனையை கொடுத்தாய் என கடவுளிடம் கேட்டார். ‘என் மகளோட ஆசையை நான் நினைச்சா நிறைவேத்த முடியும் ஆனா, அவளோட ஆசைய இப்படி மண்ணோடு மண்ணா நான் புதைக்க போறேனே... இதுக்கு தான் என் மகளை நான் வளர்த்தேனா.

“நான் மதுரை கிளம்புறேன் பாரதி.”

“என்ன திடீர்னு... இன்னும் ரெண்டு நாளுல என்கேஜ்மெண்ட் நமக்கு.”

“அப்பா, அம்மா, அண்ணா, அண்ணிய கூப்பிட்டு வரேன்...அப்படியே முக்கியமான கேஸ் இருக்கு அதை முடிச்சு கொடுக்கனும். என் ஜூனியர்ஸ் பார்த்துப்பாங்க தான் இருந்தாலும் நானும் அவங்க கூட இருக்கனும் நினைப்பாங்க.”

“கண்டிப்பா வந்துருவேல மனு.”

“வரமா எங்க போக போறேன்... வா கோவிலுக்கு போயிட்டு என்னை ஏர்போர்ட்ல ட்ராப் பண்ணிடு.” அவளை அழைத்துகொண்டு கோவிலுக்கு சென்றான்.

“இருவரும் அந்த அம்மனின் முன் தங்களது வேண்டுதலை முன்வைத்தனர். அவனோ, நான் உங்களை கையெடுத்து கும்பிட்டது இல்லை, ஆனா எனக்கு என் பாரதி வேணும். இது தப்பா சரியானு எனக்கு தெரியாது. ஆனா இதை நான் செஞ்சே ஆகனும் அப்படி செஞ்சா தான் பாரதி எனக்கு சொந்தமா இருப்பா.” என வேண்டியவன், கண் திறந்து தனது பக்கதில் இருக்கும், பாரதியை பார்த்தான். அவளோ, கர்மசிரத்தையாக வேண்டிகொண்டிருந்தால்.


“இது தா சந்தர்ப்பம் என, அவள் முன் தான் வாங்கி வைத்த தங்கத்தாலியை அவள் கழுத்தில் போட்டுவிட்டான். தன் கழுத்தில் எதோ போடுவது போல உணர்வை உணர்ந்தவள் கண் திறந்து பார்த்தால்.”

“ரகு அவள் கழுத்தில் தாலியை போட்டு முடித்து, அவளது நெற்றியில் குங்குமம் வைக்கும் போது தான் அவள் உணர்ந்தால் கழுத்தில் தாலி ஏறியதை. அவள் அதிர்ச்சியாக அவனை பார்க்க.”

“அவனோ, சாரி பாரதி... எனக்கு இதை தவிர வேறெதும் தோனல... உன் அப்பாவுக்காக நம்ம காதலை இழக்க முடியாது. அதான் உடனே உன்னை மேரேஜ் பண்ணிகிட்டேன்.”

“என் மனசு சரி இல்லை... எதோ ஒன்னு நடக்க்க போகுது. அதுல நான் உன்னை பிரிஞ்சிட்டா... இல்லை நீ என்னைவிட்டு போனா...? அதுக்கு தான் இந்த கல்யாணம்.”

“செயின் மாடல் தான்... யாருக்கும் தெரியாது... உன் கழுத்துல இருக்குறது தாலினு... இப்போ நான் நிம்மதியா கிளம்புவேன். வா போகலாம்.”

“அவளோ, அவன் சொல்வதையெல்லாம் கதை போல் கேட்டுகொண்டிருந்தால்... அவளால் என்ன செய்ய முடியும் தாலி போட்டவன் அவள் காதலன் ஆச்சே... அதனால் அவள் எதுவும் பேச முடியவில்லை. அவனை ஏர்போர்ட்க்கு கொண்டுவந்து விடும் வரையில் அவள் எதுவும் பேசவில்லை அவனிடம்.”

“இப்படி அமைதியா இருந்தா நான் ஊருக்கு எப்படி போக முடியும்.”

“அவனுக்காக, முகத்தில் பொய்யான புன்னகையை வரவழைத்துகொண்டு அவனை வழியனுப்பி வைத்தால்.”

”மதுரை போயிட்டு மெசேஜ் பண்ணுறேன்... பை” அவளுக்கு விடைகொடுத்துவிட்டு உள்ளே சென்றான்.

அவள் வருவாளா??
 
Top