Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Ennai Ariyum Kaadhalan 4

Advertisement

ilakkikarthi

Active member
Member
என்னை அறியும் காதலன் 4

“எனக்கு பெண்களோட தைரியம் ரொம்ப பிடிக்கும், அது மாதிரி தன் கூட்டுக்குள்ளே இருக்குற பெண்கள், தைரியமா இருக்குற பெண்களை பார்த்து நாமளும் எப்படி தைரியமா இந்த உலகத்துல வாழனும் கத்துக்கனும். ஆண்கள் பெண்களுக்கு ஒரு பாதுக்காப்பா இருக்கனும். நம்ம வீட்டு பெண்கள் வெளிய போனா நாம எப்படி பாதுகாப்பு கொடுக்குறோமோ அது மாதிரி தான்.”


“இப்போ கல்லூரி வாழ்க்கை அழாக இருக்கும், ஆனா அதுக்கு பின்னாடி இருக்குற இன்னொரு வாழ்க்கை நாம வாழ தயாரகனும். என்ன பண்ணலாம், வாழ்க்கையில நாம எதாவது சாதிக்க சிந்திச்சுட்டே இருங்க. அதுக்காக அடுத்தவன், ’இன்னுமா நீ யோசிச்சுட்டு இருக்குற’. கேட்க்குற மாதிரி வச்சுக்காதீங்க.”



”இன்னும் நீங்க வாழ்க்கையில கத்துக்க நிறைய இருக்கு. நாம போற பாதை முட்களும், பூக்களும் நிறைந்து தான் இருக்கும், அதில நீங்க பார்த்து போகனும், முட்களை கடந்து, பூக்கள் நிறைந்த பாதைக்கு நீங்க வந்துட்டாலே வெற்றி தான் உங்களுக்கு. பெஸ்ட் ஃப்யூட்சர் ஓப் யூவர்ஸ் லைஃப்” அவன் தன் உரையை முடித்து கொண்டு அவனது இருக்கைக்கு சென்றான்.”


“இதெல்லாம் நல்லா பேசுடா... ஆனா நேத்து நீ என்ன பேசுனனு கேட்டா மட்டும் சொல்லிடாத... பெண்களை பத்தி இவ்வளவு நேரம் நல்லவன் மாதிரி பேசிட்டு, அவன் காதலியை மட்டும் கிழி கிழினு நேத்து கிழிச்சான்.”



“இவன் உண்மையான முகம் எதுனு எனக்கு தெரியலையே...” என மனதுக்குள் பேசுவதாக நினைத்து வாய்விட்டு சொல்லிவிட்டான்.


“எங்க மாமாவை புரிஞ்சுக்குற அளவுக்கு நீ இன்னும் வரலை.” என அவனுக்கு, பதில் சொல்லிக்கொண்டே வந்தால் தாமரை.


“அது உண்மை தான்... ஆமா நான் மனசுக்குள்ள தான பேசுனேன். உனக்கு எப்படி கேட்டுச்சு.”



“மனசுக்குள்ள பேசுறதா நினைச்சு வெளிய பேசிட்டேங்க” போகிற போக்கில் அவள் சொல்லிசென்றால்.



“இவ எல்லாம் கலாய்க்குற அளவுக்கு நீ இருக்கியடா உன்னை சொல்லனும்.”



“சொல்லிக்கோ, சொல்லிக்கோ... இனியாவது மனசுக்குள்ள பேசனும்னு.” அவனை மீண்டும் கலாய்த்துவிட்டு சென்றால்



“கிளம்பலாம...”



“என்ன மச்சான் அதுக்குள்ளவ பங்ஷன் முடிஞ்சிருச்சு...”



“இல்லை... நான் தான் வேலை இருக்குனு கிளம்பிட்டேன்... இனி கலைநிகழ்ச்சி தான் நடக்கும்...”



“ம்ம்ம்...சரி டா...”



“ நம்ம சீனியர் அன்னைக்கு ஏன் ஹோட்டல் வரலைனு எனக்கு தெரியும்...” வெங்கட் ஆரம்பிக்க.



“என்ன தெரியும் சொல்லு...” துருவ் கேட்க.



”ரெண்டும் சீனியர்ஸும், இதை விட நல்ல ஹோட்டலுக்கு போயிருப்பாங்க…”வெங்கட் சொல்ல.



“துருவ், ஆனந்த் வெறி ஆனார்கள். அவன் மீது.”




“ஓகே...ஓகே கூல்”



“சீனியர்க்கு லவ் ப்ராப்லம் அதுமட்டும் எனக்கு நல்லா தெரியும்” ஆனந்த் சொன்னான்.



“உனக்கு எப்படி தெரியும்.”



“அவரை நல்லா கவனிச்சு பார்த்தா தெரியும்... புது கேஸ் விசயமா கிளைண்ட்ஸ் ஒருத்தர் நம்ம சீனியர் அஹ பார்க்க வந்திருந்தாங்க. அப்போ அவருக்கு ஒரு போன் கால் வந்தது... அந்த பக்கம் என்ன சொன்னாங்கனு எனக்கு தெரியாது. ஆனா சீனியர் செம டென்ஷன் ஆயிட்டாரு.”




“அதுகடுத்து சீனியர் கேஸ் போட வந்த கிளைண்ட்ஸ கூட கவனிக்காம எழுந்து போயிட்டார்.” அவன் சொல்லிமுடித்தான்.



“வேற யாராவது போன் பண்ணிருப்பாங்க. அது கொஞ்சம் முக்கியமா இருந்திருக்கலாம்... இதுல எப்படி லவ் ப்ராப்லம் வரும்” துருவ் கேட்க.



“ சீனியர் பக்கத்துல நான் தான் இருந்தேன்... அந்த புது கேஸ் விசயமா டீடைல்ஸ் நான் தான் எழுதிட்டு இருந்தேன்... அப்போ அவரோட போன்ல அபினு பேர் போட்டு அந்த போன் கால் வந்தது.” அவர்களுக்கு விளக்கமாக கூறினான் ஆனந்த்.



“ நீ சொல்லுறதை பார்த்த லவ் ப்ராபலாமவே இருக்கட்டும், ஆனா ஏன் ரெண்டும் சீனியரும் ஹோட்டல் வரலை இப்போ அது தான் முக்கியம்.” வெங்கட் பழைய படி ஆரம்பிக்க.




“அது தெரியலை... ஆனா நம்ம சீனியர் பத்தி ஒருத்தருக்கு நல்லா தெரிஞ்சுருக்கும் அவர்கிட்ட மட்டும் தான் நாம உண்மைய வாங்க முடியும்” என துருவ் கூறினான்.



“யாரு அது...”



“ராஜேஷ் சீனியர் தான்... வேற யாரு”



“ஆமா டா... அவன் என்கிட்ட எல்லாம் உண்மையும் சொல்லிட்டு தான் மறு வேலை பார்ப்பான்...” அவர்கள் பேச்சை கேட்டுகொண்டே, அதற்க்கு பதில் சொல்லிகொண்டே உள்ளே வந்தான் ராஜேஷ்.



“சீனியர் நீங்களா... இவ்வளவு நேரம் நாங்க பேசுனதை கேட்டேங்களா...” என ஆனந்த் கேட்க.



“ஆமா நீங்களும், ராணுவ ரகசியம் பேசுறேங்க அதை நான் ஒளிஞ்சு கேட்டுட்டு இருக்கேன்... போங்கடா...” அவனை பற்றி பேசும் போது தான் உள்ளே வந்ததை சொன்னான்.



“ஏன் சீனியர் அன்னைக்கு ஹோட்டல் வரலை” ஆனந்த் கேட்க



“அதை நான் சொன்னா, எனக்கு வேலை நிலைக்காது... அதனால அது ரகசியம்.” அவர்களிடம் சொலிக்கொண்டு வேலையை பார்க்கலானான்.



“பள்ளி வளாகத்தையும், மாணவர்கள் வகுப்பறையையும், சரியாக பதினொரு மணியளவில் விசிட் செய்தபடி நடந்து சென்றால் அனு... அவள் மன எங்கிலும் யோசனை மட்டுமே... ஐயாவிடம் பேசி ஒரு வாரம் கடந்த நிலையில் இன்னும் அவர் தன்னை அழைக்கவில்லையே என்று.”



“வழியில் வந்த ஆசிரியர்கள் அவளுக்கு விஷ் செய்ய... அவளோ அதை கவனிக்காமல் யோசனையுடனே நடந்து சென்றால்.”



“விசிட் முடித்து தனது அறையில் அமரும் போது அவளது பார்வைக்கு முகவரி இல்லாத கடிதம்... யோசனையுடன் அதை பிரித்து படித்தால்... “ கீழ்கண்ட முகவரியில் ஒரு பெண் குழந்தை அனாதையாக உள்ளது... அந்த முகவரிக்கு சென்று அந்த குழந்தையை ஒரு ஆசிரமத்தில் சேர்த்துவிட்டு உனது பள்ளியில் அதற்கான படிப்பை அந்த குழந்தைக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” படித்து முடித்தவள் உடனடியாக அதை செயல்டுத்தினால்.”




“அந்த குழந்தையின் இருப்பிடத்தை அடந்த பொழுது அவளது நெஞ்சம் துடித்து போனது... ஓவ்வொரு வீட்டின் முன் நின்று யாசகம் கேட்க்கும் அந்த குழந்தையை பார்க்கும் போது அவள் நினைத்தது ஒன்று மட்டுமே “இதற்க்கு தான் இந்த குழந்தை பூமியில் படைத்தாயா என கடவுளிடம் கேட்டால்”.



“ ஐந்து வயது இருக்கும் அந்த குழந்தைக்கு, பிச்சை எடுக்கும் வயாதா இந்த குழந்தைக்கு??”



“யாரும் அந்த குழந்தைக்கு சாப்பாடு போடவில்லை... அந்த குழந்தையின் அருகில் செல்ல போகையில், வெறொரு குழந்தை அதன் அருகில் சென்று அந்த குழந்தை தன்னிடம் உள்ள பிஸ்கட்டை கொடுத்து சென்றது.”


“அந்த குழந்தையிடம் சென்று, “ அம்மா, அப்பா... எங்கம்மா..”



“அம்மா, செத்து போச்சு, அப்பா, அம்மாவ நினைச்சுட்டே குடிச்சு குடிச்சு செத்து போச்சு... என் அத்தை, மாமா சித்தி, யாரும் என்னை சேத்துக்கல... அதான் இப்படி வீடு வீடா போய் சாப்பாடு கேட்குறேன்.”



“என் கூட வரயா... உன்னை ஒரு நல்ல வீட்டுக்கு அழைச்சுட்டு போறேன். அங்க உன்னை மாதிரி நிறைய பசங்க இருக்காங்க அவங்க கூட நீ சாப்பிடலாம், விளையாடலாம், படிக்கலாம்...”



“ம்ம்... சரி... ஆனா என்னை யாரு படிக்க வைப்பா...”


“ நான் படிக்க வைக்குறேன்... வரயா என்கூட”


“ம்ம்ம்… சரி”


”அந்த குழந்தையை அழைத்துகொண்டு, ஆசிரம்மத்திற்க்கு சென்று, முறையாக குழந்தை சேர்த்துவிட்டு, அந்த குழந்தையின் படிப்பு, மற்றும், செலவுகளை தான் ஏற்பதாக சொல்லிவிட்டு. அந்த குழந்தைக்கு தேவையாக உடைகள், இதர பொருள்களை அந்த குழந்தையை பார்ப்பவரிடம் வாங்கி கொடுத்துவிட்டு, நாளை குழந்தையுடன் தனது பள்ளிக்கு வருமாறு சொல்லிவிட்டு வந்தால்.”



“இதை எல்லாம் அவன் ஒளிந்து நின்று பார்த்துகொண்டிருந்தான். அவள் செய்ததை அவனே செய்திருக்கலாம், ஆனால் அப்படி செய்தால் அவள் தன்னை மீண்டும் வெறுக்கும் நிலைக்கு கொண்டு வந்துவிடுவாள்.”


”அன்று சனிக்கிழமை..., ‘ம்மா... காஃபி கொடுங்க...’



“இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கிருக்கலாமே அனு...” காஃபி கொடுத்தபடி கேட்க.



“இல்லைமா... தூக்கம் வரலை...”


“உனக்கு பிடிச்ச, பனியாரம் பண்ணிருக்கேன்... காஃபி குடிச்சிட்டு போய் குளிச்சுட்டு வா சாப்பிடலாம்.”


“ம்ம்... சரிம்மா..., அம்மா... ஐயா உங்களுக்கு போன் பண்ணாங்களா?”


“இல்லையேம்மா... ஏன்”


“ஐயா என்கிட்ட பேசி ஒரு வாரம் ஆக போகுது...” சோகமாக சொன்னால்.



“அவள் அருகில் அமர்ந்து, தலையை கோதியபடி அவளிடம் ‘அவருக்கு உன் கல்யாணத்தை பார்க்கனும்... ஆனா உனக்கு பிடிக்கலை, அதனால கொஞ்சம் வருத்தமா இருக்கலாம். கொஞ்சம் நாள் போன பின்னாடி, அவரே உன்கிட்ட பேசுவாங்க. அப்படி பேசும் போது கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னா, அவருக்கு இன்னும் சந்தோஷமா இருக்கும்.’ கணவனின் மனதில் நினைத்தை மனைவி, மகளிடம் கூறினார்.


“என்னால அவனை மறந்துட்டு கல்யாணம் பண்ண முடியாதும்மா...”


“என் கையில எதுவும் இல்லைம்மா... பார்வதி அக்காகிட்ட உன் மனசுல என்ன நினைக்கிறையோ அதை அவங்ககிட்ட சொல்லு.”



“அம்மாக்கிட்ட என்னால தைரியமா பேச முடியாதும்மா...”


“தைரியமா ஸ்கூல்ல நடத்துற பொண்ணு... அம்மாக்கு பயப்படலாமா... அதுவுமில்லாம, நாளைக்கு பார்வதி அக்கா வரங்காம்மா... உன்னைப்பார்க்க”


“என்கிட்ட இப்போ சொல்லுறேங்கம்மா... எப்போ போன் பண்ணாங்க”


“அக்கா தான் எனக்கு இன்னைக்கு காலையில போன் பண்ணாங்க.”

“என்னாச்சு... அமைதியா இருக்க...”


“அம்மாக்கு இப்போ தான் என்னை பார்க்கனும் தோணுச்சா”


“அவங்களுக்கு நிறைய வேலை இருக்கும், நீ ஸ்கூல் நடந்த்துற, அவங்க காலேஜ் நடத்துறாங்க உன்னைவிட அவங்களுக்கு தான் அதிகாம வேலை இருந்திருக்கும்...” அவளை சமாதனம் செய்தார்.


”என்ன மச்சான் என்னை கூப்பிட்டுருக்க...”


“ நான் சென்னை கிளம்புறேன்... வர்ரதுக்கு இரண்டு நாள் ஆகும்... அதனால ஆஃபீஸ் பார்த்துக்கோ, கிளைன்ட்ஸ் வந்தாங்கனா, நீ பார்த்து, பேசு... ஜுனியர்ஸ் பார்த்துக்கோ...”


“முக்கியமான வேலையா டா”

“ஆமா”

“என்ன முக்கியமான வேலை மச்சான்...”

“ம்ம்... என் லவ்ர பார்க்க போறேன்...”


“ஓ... என்னது... டேய் என்ன டா சொல்லுற...”


“ நீ தான கேட்ட முக்கியமான வேலையானு... அதான் சொன்னேன்”


“டேய் கோர்ட் விசயமா போறயானு கேட்டேன் டா..”


“அதுவும், இருக்கு... அதைவிட முக்கியமான வேலையும் இருக்கு. என்னை கேள்வி கேட்டே கொல்லாத டா... நான் கிளம்புறேன் நீ ஆஃபீஸ பார்த்துக்கோ. நான் வரேன்.” அவனிடம் சொல்லிகொண்டு கிளம்பினான்.

அவள் வருவாளா??

 
Top