Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Ennai Ariyum Kaadhalan 5

Advertisement

ilakkikarthi

Active member
Member
என்னை அறியும் காதலன் 5

”இந்தா... உனக்கு பிடிச்ச பூரி, மட்டன் குருமா” அவனிடம் தான் கொண்டு வந்த ஹாட் பேக்கை கொடுத்தால் பாரதி.


“வாவ்... நீ கண்டிப்பா சமைச்சிருக்க மாட்ட... அத்தை கைப்பக்குவம் தான.” அவளை கேலி செய்தான்.


“உனக்கு கொண்டுவந்தை பெரிசு... இதுல நான் சமைச்சு சார்க்கு எடுத்துட்டு வரனுமா...”


“அடிப்பாவி... அப்போ நமக்கு கல்யாணம் ஆனாலும் நீ சமைக்க மாட்டியா…”


“ஆமா... நீ எதுக்கு இருக்குற... நீ சமைச்சு போடு நான் சாப்பிட்டு எப்படி இருக்குனு சொல்லுரேன்”

“ம்ம்ம்... சரி அப்படியே செய்யுறேன்... சமைச்சு போட்ட மாமாவுக்கு என்ன கொடுப்ப...”


“ம்ம்... மாமாவ மாதிரியே ஒரு க்யூட் பாப்பாவ நான் பத்து மாசத்துல பெத்து கொடுப்பேன்...”


“ம்ம்... தேறிட்ட பாரதி...”


“எல்லாம் தங்கள் காதல் செய்த மாயம்”



“ஓகே... என்ன இன்னைக்கு ஸ்பெல் டே... உன் பிறந்த நாளும் இல்லை... என்னது கிடையாது... அப்புறம் என்ன.”


“ அப்பா, ஊருல இருந்து வந்திருக்காங்க... அதான் அம்மா ஸ்பெலா பண்ணிருக்காங்க...”


“ஓகே... மாமானார் ஊருக்கு வந்ததுனால எனக்கு நல்ல சாப்பாடு கிடைச்சிருக்கு... சரி நான் ஆஃபீஸ் கிளம்புறேன். நீ காலேஜ் கிளம்பு”


“இன்னும் டைம் இருக்கே மனு... கொஞ்சம் நேரம் இரேன்…”



“ஆனா எனக்கு இல்லையே... ஈவ்வினிங்க் மீட் பண்ணலாம்...”


“ஒரு வாரம் கழிச்சு இப்போ தான் வந்திருக்க... வந்த உடனே வேலையா”


“இல்லை பாரதி கொஞ்சம் வேலை அதிகம்... அதுவுமில்லாம அண்ணாவுக்கு பொண்ணு பார்த்து, கல்யாணம் பிக்ஸ் பண்ணிட்டாங்க அதுக்கான வேலையும் சேர்ந்துருச்சு அதான் உன்னை மீட் பண்ண வர முடியலை”


“வாவ்... எப்போ கல்யாணம்”


“டேட் இன்னும் பிக்ஸ் பண்ணலை...”


“அப்போ அடுத்து நம்ம கல்யாணம் தான மனு... ஐ ஜாலி, ஜாலி...”


“ஓய்... ஐயா இன்னும் செட்டில் ஆகலை...”



“ம்ம்...கொஞ்சம் நேரம் என்னை ஹாப்பியா இருக்க விட மாட்ட”


“ நீ வாழ்க்கை முழுசும் ஹாப்பியா இருக்கனும் தான், மாமா நினைக்குறேன் புரிஞ்சுக்க டி”


“சரி... சரி... ஈவ்வினிங்க் மீட் பண்ணலாம்... பாய்” அவனிடம் சொல்லிக்கொண்டு கல்லூரிக்குள் நுழைந்தால்.


“கல்ல்லுரிக்குள் நுழைந்து அவள் சென்றதை பார்த்துவிட்டு, பைக்கை திருப்ப முயன்றவன் முன் வந்தான் ராகுல்.”


“அவளுக்கும், உனக்கும் என்ன சம்மந்தம்... நீயும் அவளும் காதலிக்குறேங்களா...” ராகுல் கேட்க


“அதை தெரிஞ்சுட்டு நீ என்ன பண்ண போற... வழிய விடு...”மனு அலட்சியமாக சொல்ல


“ நான் கேட்டதுக்கு பதில் சொல்லு...” விடாபடியாக கேட்க


“ஆமா, நானும் அவளும், காதலிக்குறோம்... எங்க காதல் இப்போ, நேத்து வந்தது இல்லை... அஞ்சு வருஷமா காதலிக்குறோம் போதுமா”


“எவ்வளவும் தைரியம் இருந்தா, அவளை காதலிக்குறேனு என்கிட்ட சொல்லுவ...”


“ நீ தான கேட்ட, அவளுக்கு எனக்கும் என்ன சம்மந்தம்னு... அப்புறம் அந்த டீக்கடைக்காரன்கிட்டயா சொல்ல முடியும் போடா…” அவனை அலட்சியப்படுத்திவிட்டு, பைக்கை எடுத்துகொண்டு சென்றுவிட்டான் மனு.


“இருடா... இதுக்கெல்லாம் ஒரு முடிவு நான் கொண்டு வரேன்...” பழி தீர்க்கும் வெறியில் இருந்தான்.


“பாரதி, உனக்கு பிடிக்கும்னு நான் மைசூர் பாக் கொண்டு வந்திருக்கேன்... எடுத்துக்கோ” மலர், பாரதியிடம் பாக்ஸை கொடுத்தால்.


“என்ன டி, வீட்டுல விசேசமா...”



“ஆமா... அக்கா மாசமா இருக்கா...”


“வாவ் நான் வாழ்த்துனேனு சொல்லு டி... ஃப்ரீயா இருந்தா வீட்டுக்கு வரேன்...”


“ம்ம்... ஓகே டி...”


“பாரதி, நான் ஒன்னு கேட்க்கனும்”


“என்ன.”


“தினமும் ப்ரதர் வந்து காலேஜ்ல உன்னை ட்ராப் பண்ணுறாங்களே, உன் வீட்டுக்கு தெரிஞ்சா என்ன பண்ணுவ.”


“இவர் தான் உங்க மருமகன்னு சொல்லுவேன்.”


“அடிப்பாவி... அவ்வளவு தைரியமா...”


“ஆமா... என் அம்மாக்கும், என் அப்பாக்கும் என்னை ரொம்ப பிடிக்கும், அப்போ எனக்கு பிடிச்சது அவங்களுக்கும் பிடிக்கும்.”


“பிடிக்கலைனா... என்ன பண்ணுவ...”


“அவங்க சமாதானம் ஆகுற வரைக்கு நானும் மனுவும் வெயிட் பண்ணுவோம்.”



“ நம்பிக்கை அதிகம் போல ப்ரதர் மேல.”


“ கண்டிப்பா... என்னை விட அவனை நான் அதிகமா நம்புவேன்.”


“அப்போ ட்ரீட் கொடு...”


“என் மேரேஜ் பிக்ஸ் பண்ணட்டும் உனக்கு தான் ஃப்ர்ஸ்ட் ட்ரீட். இப்போ நம்ம படிக்கலாம.”


“ஓகே சூயர்”


” வீட்டின் முன் கார் வந்து நிற்க்கும் ஓசை கேட்டு, யமுனா வாசலுக்கு சென்றார். காரில் இருந்து இறங்கியவரை பார்த்ததும் அவருக்கு மகிழ்ச்சி அதிகமாகியது. ஓடி போய் அவரை வரவேற்றார்.”


“ அக்கா... வாங்க... எப்படி இருக்கீங்க...,” என பார்வதியை வரவேற்றார்.


“ நல்லா இருக்கேன் யமுனா... நீ எப்படி இருக்க... ஏன் மெலிஞ்சுட்ட” தங்கையை பாசமா விசாரித்தார்.


“அப்படி ஒன்னும் மெலியல அக்கா, நல்லா இருக்கேன்... வாங்க உள்ள போய் பேசலாம், கனி, அக்கா பேக் எல்லாம் எடுத்துட்டு வா” வேலை செய்பவரிடம் சொல்லிவிட்டு, அக்காவை அழைத்து சென்றார்.


“உக்காருங்க அக்கா, நான், டீ எடுத்துட்டு வரேன்...”


“அப்புறம் டீ சாப்பிடலாம் யமுனா... பாப்பா எங்க... நான் வரேனு அவளுக்கு தெரியுமா...” அவர்க் கேட்க.


“அனு உள்ள தூங்கிட்டு இருந்தா அக்கா... நைட் முழுவதும், உங்களுக்கு பிடிச்சா சமையல் பண்ணனும், உங்களை அவ ஸ்கூல்க்கு கூப்பிட்டு போய் காட்டனும் நிறையா பேசிட்டு இருந்தா.”


“வாங்க அவ ரூம்க்கு போகலாம்...” அவரை அழைத்து சென்றார்.


“அவளின் அறையில் சென்று உறங்கும் மகளை விழி அசைக்காமல் பார்த்துகொண்டே இருந்தார். டெடி பியர் பொம்மையை கட்டிபிடித்து தூங்கும் மகளை காண்கையில் இன்னும் சிறு குழந்தையாக தெரிந்தால் அவர் கண்ணுக்கு.”


“அவள் அருகில் அமர்ந்து, தலையணையில் இருக்கும் அவளது தலையை தன் மடியில் வைத்துகொண்டு தலையை கோதிவிட்டார். மகளை அருகில் பார்க்கையில் கண்ணீர் அதிகமாக வந்துவிட்டது.”


“பார்வதியின் தோளை அழுத்தி, அவரை சமாதானம் செய்தார் யமுனா”.


“பார்வதியின் கண்ணீர்த்துளி, அனுவின் மீது விழுந்தது... தன் மேல் நீர்த்துளி விழுந்ததும், அனு கண்விழிக்க ஆரம்பித்தால்...”

“தான் தலை வைத்து படுத்திருப்பது தலையணை இல்லை என்பதும் மட்டும் அவளுக்கு நன்றாக தெரிந்தது... வேகமாக எழுந்தால் அவரின் மடியில் இருந்து...”


“ஏன் பாப்பா எழுந்திருச்சுட்ட... படும்மா இன்னும் கொஞ்சம் நேரம்” அவர் பாசமாக சொல்ல...


“எப்படிம்மா... இருக்கீங்க...” அவரை கட்டியணைத்துகொண்டு கேட்டால்.


“ நல்லா இருக்கேன் பாப்பா... நீ எப்படி இருக்க...”


“அம்மா நல்லா பார்த்துகுறாங்க யமுனாவை பார்த்துகொண்டே சொன்னால்... எப்போம்மா வந்தீங்க”


“இப்போ தான் வந்தேன்... சரி குளிச்சுட்டு வா... நாங்க கீழ வெயிட் பண்ணுறோம்.”

“இதோ அஞ்சு நிமிஷத்துல வரேன்...” வேகமாக குளியல் அறைக்குள் நுழைந்தால்.


“அன்னையை கண்ட சந்தோஷத்தில் அன்று முழுவதும் அவருடனே இருந்தால்... இந்த முறை பார்வதியிடம் உணவு தட்டை கொடுத்து அவரே, அனுவிற்க்கு உணவூட்ட சொன்னார்.”


” ஆனால் அனுவோ, யமுனாவையும் பக்கத்தில் அமர வைத்து, அவரின் மடியில் கால் வைத்து, பார்வதியின் மீது சாய்ந்துகொண்டு, கதை பேசியபடியே மகளுக்கு அன்று மதிய உணவை ஊட்டினார் பார்வதி.”


”அன்று முழுவதும் அவர்களுடனே நேரத்தை செலவழித்தா. ஓவ்வொரு நிமிடமும் அவளுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. அப்பொழுதும் அவள் ஐயா இருந்தால் நல்லா இருந்திருக்குமே என்று அவள் நினைத்தால்.”


“ரொம்ப ஹாப்பிய இருக்கும்மா... என் ரெண்டு அம்மாவோட நான் இன்னைக்கு புஃல்லா இருந்திருக்கேன்... ஆனா ஐயா தான் இல்லை... ஐயாவுக்கு என்மேல இன்னும் வருத்தமா ம்மா.” பார்வதியிடம் கேட்க.


“கொஞ்சம் இருக்கு... ஏன் பாப்பா கல்யாணம் வேண்டாமுனு சொல்லுற.”


“ம்மா... அவங்களை என்னால மறக்க முடியலை அம்மா”


“யாரு பாப்பா...”



"அது ..... அது ம்மா”


“காதலா பாப்பா”


“ம்ம்... ஆமா ம்மா...”


அதே நேரம் சென்னையில்:

”எப்படியாச்சும் அவளை கண்டுபிடிக்கனும்... இனியும் அவளை பிரிஞ்சு என்னால இருக்க முடியாது டா... நீ தான் எனக்கு உதவனும்”

“பேமஸ் லாயர் நீ... என்கிட்ட உதவி கேக்குற... உன்னால முடியாததா டா” அவன் தோழன் ஆர்யன் கேட்க.

“ நான் அவளை தேடுறேனு மட்டும் தெரிஞ்சா, என்னைவிட்டு இன்னும் தூரமா போயிடுவா டா”

“அப்படி என்ன தான் சண்டை உங்களுக்குள்ள...”


“அவ, என்மேலையும், நான் அவ மேலையும் வைச்சுருக்க காதல் தான் எங்களை பிரிச்சுருச்சு...”

அவள் வருவாளா??

 
Top