Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Ennai Ariyum Kaadhalan 6

Advertisement

ilakkikarthi

Active member
Member
என்னை அறியும் காதலன் 6

“மச்சான்... உன் முகத்துல இவ்வளவு சந்தோஷத்தை நான் பார்த்ததே இல்லை டா... எனி குட் நீயூஸ்” ராஜேஷ் ரகுவிடம் கேட்க.


“எஸ்”


“ நான் சொல்லவா... இல்லை நீயே சொல்லுரையா மச்சான்” என அவன் கேட்க.


“ஃப்ர்ஸ்ட் நீ சொல்லு அது சரியானு பார்க்குறேன்.”


“ம்ம்... கொஞ்சம் நேரம் யோசித்தவன், ரகுவிடம் ‘ தங்கச்சி இருக்குற இடத்தை நீ கண்டுபிடிச்சுட்ட...” அவன் சொல்ல

“உடனே அவன் முகம் வாடியது... இல்லை என அவன் தலையசைக்க”


“ராஜேஷ் முகம், வாடியதை பார்த்தவன், இதழில் ரகசிய புன்னகையை அவனுக்கு தெரியாமல் மறைத்தான்.”


“அது இல்லையா... மச்சான்... சாரி டா இப்போவும் உன்னை நான் மனசு கஷ்ட்டப்படுத்துறேன்.” தேவையில்லாமல் நண்பனை கஷ்ட்டப்படுத்திவிட்டமோ என அவன் நினைக்க.


“டேய், நீ என் நண்பன் டா... நீ போய் இப்படி பேசலாம...”

“சரி அது இல்லைனா வேற என்ன குட் நீயூஸ் மச்சான்”


“என் காதலி கிடைச்சுட்டா...”


“அடப்பாவி அதை தான டா நானும் சொன்னேன்...”


” நீ சொன்னதை கொஞ்சம் யோசிச்சுப்பாரு,”அவன் சொன்ன வர்த்தையை யோசிக்க சொல்ல.


“ஆமா... நான் இருக்குற இடத்தை கண்டு பிடிச்சுட்டாயனு கேட்டேன்...”


“ம்ம்ம்… ”


“இப்போ எங்க இருக்கு தங்கச்சி... நல்லா இருக்கா”


“ம்ம்... என்னை மறந்துருனு அவ என்கிட்ட ஈசியா சொல்லிட்டு, அங்க என் நினைப்புல அவ இருக்குறா.”


“பாவம்... டா தங்கச்சி... அதுக்கு என்ன கஷ்ட்டமோ... நீ சொல்லு எப்படி தங்கச்சி கிடைச்சா”


“என் ஃப்ரண்ட் ஆர்யன் மூலமா தான் தகவல் எனக்கு கிடைத்தது, ஆனா அவளுக்கு இப்போ வரைக்கு என் நினைப்பு தான்... ஆனா அவளை தேடி நான் போனா என்னைவிட்டு இன்னும் தூரமா போயிடுவா அதான் எப்படி அவளை பார்க்குறது யோசிக்குறேன்..”


“மச்சான் பேசாம அவங்க அம்மா, அப்பா மூலம நீ போய் நடந்ததை எல்லாம் சொல்லு... அவங்களே உன்னையும், தங்கச்சியயும் சேர்த்து வைப்பாங்க” அவன் யோசனை சொல்ல.


“அவங்க அப்பா யாரு இப்போ வரைக்கும் எனக்கு தெரியாது... அவ ஃபேமிலி பேக் கிரவுண்ட் என்னனு கூட இப்போ வரைக்கு எனக்கு தெரியாது.”



“அடப்பாவி... லவ் பண்ணுற பொண்ணுக்கிட்ட அப்படி என்ன தான் பேசுன...”



“டேய் நான் அவகிட்ட கொஞ்சம் நேரம் தான் பேசுவேன்... அப்படியே பேசுனாலும் அவளுக்கு என்கிட்ட அதிகம் பேசுறதே என்னை பத்தி தான் பேசுவா. சில நேரம் குழந்தையா பேசுவா… சில நேரம் எனக்கே அட்வைஸ் பண்ணுவா... கடைசியா பேசுனதுகூட முதல் முறையா சண்டை தான் ரொம்ப நேரம் போட்டா.”


“அடுத்த நாள்ல இருந்து அவளை நான் பார்க்கவே இல்லை டா... அப்போ தொலைஞ்சு போனவளை இப்போ தான் என் கைக்கு கிடைச்சா.”


“என்ன தான் இருக்கு இந்த காதல்ல... ரொம்ப உருகுற மச்சான் நீ”


“ நீ காதலிச்சு பாரு அப்போ தெரியும் என் நிலைமை” அவனிடம் சொல்லிகொண்டு கிளம்பினான் அவனின் காதலியின் தந்தை கண்டறிய.


“அந்த பையன் பேரு என்னம்மா... இப்போ எங்க இருக்கான்...”


“அம்மா... அவங்க பேரு ரகு... அவங்க இப்போ எங்க இருக்காங்கனு எனக்கு தெரியாது ஆனா அவங்க என் நியாபகத்துல தான் இப்போ வரைக்கும் இருக்காங்க.”


“அவங்களை கடைசியா பார்த்தது எங்களுக்குள்ள சண்டை வந்த அன்னைக்கு தான்... அதுகடுத்து நான் ஊருக்கு வந்துட்டேன்...”


“ ஐயாக்கிட்ட சொல்லிப்பாரும்மா... அந்த பையனை பத்தி விசாரிக்க சொல்லலாமா”


“அம்மா... மீண்டும் தயங்கினால்”


“என்ன பாப்பா...”

“ஐயாக்கு என் காதல் தெரியும்... ஆனா ஐயாக்கு விருப்பம் இல்லை.”


“ஏன்... என்னாச்சு யமுனா... ஐயாக்கு ஏன் விருப்பம் இல்லை” யமுனாவிடம் கேட்டார்.


“எனக்கும் தெரியலை அக்கா... அவங்க என்கிட்டயும் எதுவும் சொல்லலை அக்கா.”


“அம்மா, நான் இருக்கேன் பாப்பா... உனக்கு அந்த பையனோட தான் கல்யாணம் நடக்கும்... ஐயாவும் இதுல சம்மதிப்பாங்க... சரியா.”


“இல்லைம்மா... எனக்கு அவங்க கூட நடக்குற கல்யாணம் வேண்டாம்” அவள் குண்டை தூக்கி போட.


“இம்முறை பார்வதியும், யமுனாவும், சேர்ந்தே அதிர்ந்தார்.”


“ஏன் டாம்மா... ஏன் வேண்டாம்”


”அவங்களை நான் தான் என்னை தேடி வரகூடாதுனு சொல்லிட்டேன் ம்மா... நானும் அவங்களை தேடி வரமாட்டேனு சொல்லிட்டேன்…”


“அவங்களுக்கு என் மேல காதல அதிகமா இருந்திருந்தா என் வார்த்தையை மீறி என்னை தேடி வந்திருக்காலமே... ஆனா அவங்க வரலை... நானும் அவங்களை தேடி போகமாட்டேன் ம்மா.” அவள் அழுதுகொண்டே சொல்ல.


“என்ன பாப்பா... காதல்ல இது எல்லாம் சாதாரணம்... இன்னேரம் அந்த பையன் உன்னை பத்தி யார்கிட்டயாவது விசாரிச்சுட்டு இருக்கும்... கூடிய சீக்கிரம் உன் முன்னாடி வருவாரு அப்போ என்ன பண்ணுவ நீ”


“அவள் புரிந்துகொண்டால் ஆனால் அவன் என்னை தேடி வருவானா? என அவள் யோசிக்க,”


“அவங்க என்னை தேடி வரமாட்டாங்க ம்மா... அப்படியே வந்தாலும் அவங்களுக்கு மேரேஜ்க்கு இன்வைட் பண்ண வருவாங்க.” அவள் கோவத்தில் சொல்ல.


“அந்த பையன் வரும் போது பார்க்கலாம்... அப்போ நீ என்ன செய்வனு நான் பார்க்குறேன்.”


“ நான் கிளம்புறேன் யமுனா... ஃபிளைட்க்கு டைம் ஆச்சு...” ஊருக்கு சொல்லும் அன்னையை பார்த்துகொண்டிருந்தால்.

“இன்னும் ஒரு நாள் இருந்திட்டு போகலாமே ம்மா.” அன்னையின் மடியில் படுத்துகொண்டே கேட்டால்.


“இல்லை பாப்பா... காலேஜ்ல இப்போ எக்ஸாம் நடக்குது... இந்த ஒரு நாள் ஆச்சும் உன் பக்கத்துல இருக்கனும் தோனுச்சு அதான் கிளம்பி வந்தேன்... இன்னொரு முறை ஒரு வாரம் இருக்க மாதிரி அம்மா வரேன்.” மகளை சமதானம் செய்ய.


“அவ ஏங்கி போய்டுவாக்கா... இன்னைக்கு ஒரு நாள் இருக்கலாமே” யமுனாவும் சொல்ல.


“இல்லை யமுனா... நான் கிளம்புறேன்...”


“மகளிடம், ஐயாக்கிட்ட நான் பேசுறேன் பாப்பா.. மனசுல எதை போட்டும் குழப்பிக்காத...”


“சரி ம்மா...” இருவரிடமும் விடை பெற்றுகொண்டு காரில் ஏறினார்.


“தன் அன்னையிடம் பேசியதை நினைத்த படியே மறுநாள் பள்ளிக்கு புறப்பட்டால்...”


“தான் ஆசிரமத்தில் விட்ட குழந்தையை அழைத்துகொண்டு அவளது பள்ளிக்கு வந்த அந்த ஆசிரமத்தின் தலைவரை பார்த்தால்.”


”அந்த குழந்தையின் எதிர்காலம் வரை உள்ள படிப்பு செலவு, மற்ற இதர செலவுகளை தான் ஏற்றுகொள்வதாகவும் அவள் சொன்னால், இதே மாதிரி உள்ள குழந்தையின் நிலையை பார்த்து கண்ணுக்கு தெரியாமல் உதவும் மனிதர்கள் இன்றளவிலும் உள்ளார்கள்.”


“அந்த ஆசிரமத்தின் தலைவரை வழியனுப்பிவிட்டு, தானே அந்த குழந்தையை அழைத்துகொண்டு அந்த குழந்தையின் வகுப்பறை நோக்கி சென்றால்.”


“இது தான் உன் கிளாஸ்... இங்க உனக்கு நிறைய ஃப்ரன்ட்ஸ் கிடைப்பாங்க... நீ சமத்தா படிக்கனும்... நான் அப்போ அப்போ உன்னை பார்க்க வரேன் சரியா ராகவி.”


“ம்ம்... சரி...”


“அந்த வகுப்பின் ஆசியரை அனுகி, இவள் இந்த பள்ளியின் புதிதாக சேர்ந்துள்ள மாணவி என அவருக்கு அறிமுகப்படுத்திவிட்டு, அந்த குழந்தையை பார்த்துக்கவும், என அவரிடம் கூறிவிட்டு வந்தால்.”


“ பாப்பா ஒரு பையனை விரும்புறது உங்களுக்கு தெரியுமா?” பார்வதி, சிவபாலனிடம் கேட்க.


“தெரியும் பாரு”


“என்கிட்ட நீங்க ஏன் சொல்லலை”


“அப்போ நீ காலேஜ் ப்ரோக்ராம்க்காக வெளியூரில் இருந்தம்மா... அதான் உன்னை டென்ஷன் பண்ண வேண்டாமுனு நினைச்சேன்.”


“இப்போ நான் டென்ஷன் இல்லாம இருக்கேன்... இப்போ சொல்லுங்க... பாப்பா காதலுக்கு ஏன் சம்மதிக்க மாட்டேறேங்க”

“எனக்கு அந்த பையனை பிடிக்கலை அதான் வேண்டாமுனு சொன்னேன்.”


“ஆனா நம்ம பாப்பாக்கு பிடிச்சுருக்கே... அவளுக்கு பிடிச்சது தான இப்போ வரைக்கு நாம பண்ணுறோம். அப்போ அவளுக்கு பிடிச்சதை நாம செஞ்சு கொடுக்கனும்”


“என்னால முடியாது பாரு”


“அதான் ஏன்?? சொல்லுங்க”


“ஏன்னா... அந்த பையன் நம்ம மதம் இல்லை”

“எனக்கு புரியலைங்க”


“அந்த பையன், ஒரு முஸ்லீம்... எப்படி கல்யாணம் பண்ணி கொடுக்க முடியும்... நம்ம அந்தஸ்து என்ன... அவன் அந்தஸ்து என்ன... கொஞ்சம் யோசி...”


“இப்படி நீங்க மதம், சாதி, சமூகம் பார்த்த நாம வாழ முடியாது. எனக்கு என் மகள் சந்தோஷம் தான் முக்கியம்... நியாபகம் இருக்கட்டும்”


“அவளுக்கு ஒரு நல்லது நடக்கனும்... அது அவளுக்கு பிடிச்சதா இருக்கனும்... நான் காலேஜ் கிளம்புறேன்...” அவரிடம் சொல்வதை சொல்லிவிட்டு கிளம்பினார்.


”நில்லு பார்வதி…” என வாசல் வரை சென்றவரை தடுத்து நிறுத்தினார்.


“அவரோ திரும்பி பார்க்காமல் அவர் சொல்லுக்கு மரியாதையாக அதே இடத்தில் நின்றார்”


“ என் மகளுக்கு நான் பார்க்குற பையன் தான் மாப்பிள்ளை. நான் சொன்ன பையனுக்கு தான் என் பொண்ணு கழுத்த நீட்டுவா... இதை யாரலும் மாத்த முடியாது.” என அவரும் கண்டிப்பாக சொல்லிவிட்டு அவரின் அறைக்கு சென்றார்.


“பார்வதியோ, கல்லூரி வந்தும் மகளை பற்றியே யோசித்துக்கொண்டிருந்தார். அவருக்கு என்ன செய்வது என தெரியவில்லை. மகளின் ஆசையை நிறவேற்றுவதா? இல்லை கணவரின் பிடிவாதத்தை மாற்றுவதா... என புரியாமல் தவித்தார்.”


“ அண்ணே, இந்த ஸ்கூலோட ஹெட்மாஸ்டர் அஹ் பார்க்கனும்... எப்போ வருவாங்க.” என அங்கு வேலை பார்க்கும் வாட்மேனிடம் கேட்டான் ரகு.”


“ஸ்கூல் ஆரம்பிக்க இன்னும் நேரம் இருக்கு தம்பி... நீங்க எதுக்கு எங்க சின்னம்மாவ பார்க்கனும்.”


“சின்ன வேலை அண்ணே... அதான் அவங்களை பார்த்து பேசனும்.”


“அப்படியா தம்பி... இன்னும் கொஞ்சம் நேரத்துல வந்திருவாங்க தம்பி உள்ள இருங்க...” பள்ளிக்கு வரும் குழந்தைக்களுக்கு கேட் திறந்துவிட்டு கொண்டே அவனுக்கு பதில் அளித்தார்.


“அவனும் உள்ளே நுழைந்து, பள்ளியின் தலைமை ஆசிரியரின் அறைக்கு முன் காத்திருந்தான்.”


“டாட், எனக்கு இந்த பொண்ணு தான் பிடிச்சிருக்கு... எனக்கு ஓகே. அம்மாக்கும், உங்களுக்கும், ஓகேனா எனக்கும் ஓகே டாட்”
“பொண்ணோட அப்பா, என் க்ளோஸ் பிரண்ட்... அந்த பொண்ணை கூட இரண்டு முறை அவங்க ஃபேமிலியோட பார்த்திருக்கேன். எனக்கும், அம்மாக்கும் அந்த பொண்ணை பிடிச்சிருக்கு நீ ஓகே சொல்லிட்டா நெக்ஸ்ட் எங்கேஜ்மெண்ட், அடுத்து மேரேஜ் தான் ராகுல்.”


“எனக்கு ஓகே டாட்...” அவன் பதிலில் மகிழ்ச்சியடைந்தவர் அவரின் நண்பருக்கு போன் செய்து பேச ஆரம்பித்தார்.


“இனி உன்னை மிஸ் பண்ணமட்டேன் அனு...” அவன் மனதில் சொல்லிக்கொண்டான்.


“பள்ளியின் வளகாத்தில் தனது வண்டியை அதன் இடத்தில் நிறுத்திவிட்டு, அவளின் அறைக்கு செல்லப்போகையில், ‘இன்னும் எத்தனை வருஷத்துக்கு என்னைவிட்டு விலகி இருக்க போற பாரதி” அவனின் குரலால் அவளது நடை நின்றது.”



அவள் வருவாளா??



 
மிகவும் அருமையான பதிவு,
இலக்கிகார்த்தி டியர்
 
Last edited:
Top