Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Ennai Ariyum Kaadhalan 7

Advertisement

ilakkikarthi

Active member
Member
என்னை அறியும் காதலன் 7

“ஊஞ்சலில் அமர்ந்து பூ தொடுத்துக்கொண்டிருந்தார் யமுனா. மகளை பற்றிய யோசனை தான் அவருக்கும், ஆனால் ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலை. இனி கடவுள் தான் உதவ வேண்டும் என அவர் நினைத்துகொண்டு பூ தொடுத்து கொண்டிருக்கும் போது வீட்டின் வாசல் முன் கார் வந்து நின்றது.”


“கார் நின்ற ஓசையில் அவர் நிமிர்ந்து பார்க்க, சிவபாலன் காரில் இருந்து இரங்கி வந்துகொண்டிருந்தார். யமுனாவின் யோசனையோ, இன்று வருவதாய் அவர் தன்னிடம் கூறவில்லையே என்று.”


“நேராக யமுனாவிடம் வந்தவர் “அனு வீட்டுக்கு வந்துட்டாளா யமுனா” கேட்டார்.


“இல்லைங்க இன்னும் வரலை... ஏன் எதாவது முக்கியமான விசயமா”


“ஆமாம்...” அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அனு வீட்டிற்க்குள் நுழைந்தால்.

“ஏதோ யோசனையில் இருந்தவளை, சிவபாலனின் குரல் கலைத்தது.”

“வேலை முடிஞ்சதா அனு...”

“வேலை முடிஞ்சது ஐய்யா... எப்போ வந்தீங்க... எப்படி இருக்கீங்க” தந்தை வந்த மகிழ்ச்சியில், அவளது யோசனை விடைபெற்றது.


“ நான் நல்லா இருக்கேன்... இப்போ தான் வந்தேன்...”


“என்மேல இன்னும் வருத்தமா ஐயா” அவள் கேட்க.


“இல்லை ம்மா... உன்மேல எனக்கு ஒரு வருத்தமும் இல்லை... “


“அப்போ ஏன் என்கிட்ட பேசவே இல்லை...”கொஞ்சம் கோவமாய் கேட்க


“வேலை அதிகமா இருந்ததும்மா... அதான் பேச முடியல்லை... இன்னைக்கு என் நண்பர், அவனோட வீட்டுக்கு நம்ம குடும்பத்தை டின்னர்க்கு இன்வையிட் பண்ணிருக்கான். நீ எப்போ வருவேனு அம்மாக்கிட்ட கேட்டு இருந்தேன் நீ வந்துட்ட.”


“இன்னும் ஒரு மணி நேரத்தில நாம அவன் வீட்டுக்கு போகனும். ரெடியாகிட்டு வாம்மா... “ மகளிடம் சொல்லிவிட்டு யமுனாவிடம் திரும்பினார்.


“யமுனா எனக்கு ஒரு டீ கொடு... அப்படியே நீயும், கிளம்பு யமுனா...”


“சரிங்க... இதோ கொண்டுவரேன்.”

“அனு போய் ரெடியாகு... அம்மா... காஃபி கொண்டுவரேன்.” அவளை ரூம்மிற்க்கு அனுப்பி வைத்தார்.”

“சரி ம்மா”

“ஹலோ... ஆர்யன்...”

“சொல்லு் டா, ரகு...”

“என்ன டா... அவ அப்பா யாருனு உனக்கு தெரிஞ்சதா...”

“சாரி டா... சொல்ல மறந்துட்டேன்... அவங்க அப்பா பேரு சிவபாலன், அவருக்கு ரெண்டு மனைவி... லேண்ட் பிஸ்னஸ் பண்ணறாங்க... அதோட அவருக்கு சொந்தமா ஒரு காலேஜ், ரெண்டு ஸ்கூல் இருக்கு.”


“இவங்களுக்கு ஒரே பொண்ணு... அந்த பொண்ணும் அவங்க அப்பா நடத்துற ஸ்கூல்க்கு ஹெட்மிஸ் அஹா வேலை பார்க்குறாங்க... இப்போ அவரு சென்னையில இருக்காங்க.”


“ஓகே டா... இனி நான் பார்த்துகிறேன் அட்ரெஸ் மட்டும் செண்ட் பண்ணு டா”


“இதோ ஒன் மினிட் ல அனுப்புறேன் டா” அவன் போனுக்கு அவளது தந்தையின் முகவரியை அனுப்பி வைத்தான்.


“உங்க நண்பர் பாஸ்கரன் தான ஐயா...”

“ஆமா... அனு”

“அவங்களை இதுக்கு முன்னாடி நான் பார்த்துருக்கேனா...”

“ஏன் டா... இரண்டு முறை பிஸ்னஸ் பார்ட்டில மீட் பண்ணிருக்கோமே... உனக்கு நியாபகம் இல்லையா”


“தெரியலை ஐயா... மே பீ இருக்கலாம்...” சொல்லிவிட்டு அவள் வேடிக்கை பார்த்துகொண்டே வந்தால்.


“வாசலிலே காத்திருந்தார் போல் அவர்கள் இருக்கும் இடத்திற்க்கு வந்து வரவேற்க வந்தனர்.”


“வா சிவா... வாம்மா... யமுனா...” என பாஸ்கரனும், அவரது மனைவியும் வரவேற்க.”


“இதான் என் ஒரே பொண்ணு அனு...” அவர் அறிமுகப்படுத்த.


“அவளோ, அவர்களின் பாதம் தொட்டு வணங்கினால்.”


“நல்லா இரும்மா... உள்ள வாங்க எல்லாரும்.” அவர்களை அழைத்து சென்றார்.

“அறிமுகப்படலம் முடிந்து அவரவர் தொழில் பேச்சும், உலக நடப்பையும் பேசிக்கொண்டிருந்தனர் இருவீட்டு தந்தையரும். யமுனாவும், பாஸ்கரனின் மனைவி அருள்மெழியும் வீட்டு நடப்புகள் பற்றி பேசி
கொண்டிருந்தனர்.”



“தனித்துவிடப்பட்ட அனுவோ, வீட்டை சுற்றிப்பார்க்க எழுந்து சென்றால். சுவரில் இருந்த ஓவியம் அவள் கண்ணுக்கு புலப்பட்டது. அதில் ஒரு பெண் தன் காதலனை எண்ணி உருகி கரைகிறாள்... அவளின் காதலனோ, அதனை ஒளிந்து நின்று ரசித்து கொண்டிருக்கிறான். இதை அறியாத அந்த பெண் அவனின் வருகைக்காக காத்திருப்பது போல் இருந்தது அந்த ஓவியத்தில்.”


“அந்த ஓவியத்தை பார்த்ததும் அவளுக்கு இன்றுகாலையில் நடந்தது தான் நினைவிற்க்கு வந்தது. எப்படி தெரியும் அவனுக்கு நான் இருக்கும் இடம். தன் மீது காதல் இருக்க போய் தானே அவன் என்னை தேடி வந்துள்ளான்... இந்த ஓவியத்தில் அந்த பெண் இருப்பதை போல் தானே நானும் அவனின் வருகைக்காக காத்திருந்தேன்... அவனும் என்னை ஒளிந்து நின்று ரசித்தானா நான் வேதனைப்படுவதை...”



“இன்னும் எத்தனை வருசத்துக்கு என்னை விட்டு தூரமா போக போற பாரதி...”


“இது அவன் குரல் தானே... அவன் வந்துவிட்டானா என்னை தேடி... என் மீது காதல் அவனுக்கு இருக்கிறதா... அன்று அம்மா சொன்னது போல் அவன் என்னை தேடி வந்துவிட்டான் போல.” என அவள் மகிழ்ச்சியில் குரல் வந்த திசையை நோக்கினால்.”


“மெதுவாக அவளை நோக்கி வந்தான்... என்றும் அவனின் நடை அவளை கண்டால் நிதானமாக அவளை வசிகரிக்கும் நடை தான் இன்றும் அவளை நோக்கி நடந்து வந்தான்.”


“அவளின் அதிர்ச்சியை பார்த்து இவனுக்கு மகிழ்ச்சி தான்... அவன் முன்னால் சுடிதார் மட்டுமே அணிந்திருப்பாள்... ஆனால் இன்று ஷிப்பான் சேலையில் மிகவும் அழகாக இருந்தால். சேலைக்கு ஏற்றார் போல் காதில் ஆண்டிக் நகையும், கழுத்தில் மெல்லிய தங்க நகையும் அணிந்திருந்தால். மூன்று வருடத்திற்க்கு முன் பார்த்த பாரதி வேறு இப்பொழுது பார்க்கும் பாரதி வேறு அவன் கண்ணுக்கு.”


“எப்படி இருக்க... பாரதி...” அவளின் அருகில் வந்து கேட்டான்.


“ரொம்ப சீக்கிரம் கேட்டுட்டேங்க மனு...” கண்ணில் நீர் வழிவதை தடுக்க முடியாமல் அவள் அவனுக்கு பதில் கூறினால்.


“ம்கூம்... இது ரொம்ப லேட்... உன்னை தேடி நான் நாயா அழஞ்சேனு மட்டும் பொய் சொல்லமாட்டேன்... ஏன்னா நீ சொன்ன வார்த்தைக்காக தான் மூனு வருஷம் உன்னை பார்க்காம இருந்தேன். இனியும் உன்னைவிட்டு என்னால இருக்க முடியாது.”


“அடிக்கடி நான் சென்னை வந்தாலும் உன்னை எங்காவது பார்க்க முடியுமானு தான் காத்திருப்பேன்... ஆனா உன் அட்ரெஸ் எனக்கு தெரியாது... என் ஃப்ரண்ட் மூலமா தான் உன் ஸ்கூல் அட்ரெஸ் கிடைச்சது.”


“என்னை முதல் முதலா எங்க பார்த்தேங்க மனு” அவள் கேட்க.


“அவனோ, யோசிக்காமல் பதில் சொன்னான் ‘மதுரை மீனாட்சியம்மன் கோவில் முன்னாடி ஒரு குழந்தைகிட்ட பதிலுக்கு பதில் சண்டைபோட்டுட்டு இருந்த. அப்போ நீ மெரூன் கலர் சுடிதார் அதுல சின்ன சின்னாத பூக்கள் இருக்கும்.”


“அவள் கண்கள் ஆச்சர்யமாக அவனை பார்த்தது.”


“அவனோ தொடர்ந்து... ‘ உன்னை நான் இரண்டாவது முறை பார்த்தது சென்னையி்ல் கடற்காரையில. மூன்றாவது முறை உன்னை பார்த்தது உன் காலேஜ்ல...உன்கிட்ட நான் காதல் சொல்லும் போது நீ காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் படிச்சுட்டு இருந்த... நான் காதல் சொன்ன தேதி 26 ஜூலை 2014... நீ என்கிட்ட காதல் சொன்னது 26 செப்டம்பர் அதே வருஷம். நாமா காதலிக்க ஆரம்பிச்சு இந்த வருஷத்தோட எட்டு வருஷம் ஆச்சு... நாம பிரிஞ்சது வேற சூழ்நிலை. ஆனா நாம காதலிக்குறது இப்பவும் நிஜம்.” அவன் சொல்லி முடிக்க.


“அவளோ, அவனின் நெஞ்சில் சாய்ந்துகொண்டு அழ ஆரம்பித்தால். ‘சாரி... சாரி... மனு... எங்க என்னை மறந்துட்டனு நினைச்சுட்டேன்.” அவள் அழ... அவனோ அவளை சமாதானம் செய்தான்.


“ஹேய் ரிலாக்ஸ் பாரதி... நான் உன்னை ஹர்ட் பண்ணனும் சொல்லலை. நம்ம காதல் எவ்வளவு உண்மையானதுனு உனக்கு புரிய வச்சேன் ஓகே.”


“பாரதி இது ஸ்கூல்... உன்னை கண்ட்ரோல் பண்ணிக்கோ...” அவன் சொன்னது தான் தாமதம் வேகமாக அவனிடம் இருந்து விலகி சுற்றிப்பார்த்தால். யாரவது தங்களை இந்த நிலையில் பார்த்தால் என்னவாவது. நல்ல வேளை யாரும் இங்கு இல்லை.”


“ நாம நாளைக்கு மீட் பண்ணலாம் பாரதி. இது தான் நான் தங்கி இருக்குற ஹோட்டல். ஃப்ரீயா இருந்தா வா. நானும் முக்கியமான கேஸ் விசயமா வந்திருகேன். நாளைக்கு பார்க்கலாம்.” அவளிடம் விடைபெற்றுகொண்டு சென்றான்.


“அவளோ, அவன் கொடுத்த ஹோட்டல் கார்டை கையில் வைத்துகொண்டு, அவனையே பார்த்திருந்தால். இவனிடம் எதுவும் மாறவில்லை... இவனும் மாறவில்லை...” நினைத்துகொண்டு அன்றைய வேலையை பார்க்க சென்றால்.


“பிடிச்சிருக்கா?” அவளின் சிந்தனையில் தான் இருக்கிறால் என தெரியாமல் அவன் கேட்டான்.


“அவளோ, காதலனின் நினைவில் இருந்ததால், யார் கேள்வி கேட்பது என தெரியாமல் ‘ம்ம்... ரொம்ப பிடிச்சிருக்கு” அவளும் பதில் சொல்ல.


“அப்போ மேரேஜ் சீக்கிரம் வச்சுக்கலாமா அனுபாரதி” இம்முறை சிந்தனையில் இருந்து வெளிவந்தவள், தனது பெயரை முழுதாக சொல்லி அழைப்பவரை திரும்பி பார்த்தால்.


“ஹாய்... அனுபாரதி...”

“அனுவோ...ராகுல்... அதிர்ச்சியாக அவனை பார்த்தால்... சென்னையில் தான் படிக்கும் கல்லூரியில் சீனியராக இருந்தவன் தான், தனது தந்தையின் நண்பரின் மகனா?... இவனை கடைசியாக பார்த்தது கூட நினைவில்லை. ஆனால் இவனுக்கு எப்படி என்னை இன்றளவிலும் நினைவிருக்கிறது.”


“ஹல்லோ... மேடம்...” அவள் முன் சொடக்கு போட்டு அவளை நிகழ்காலஹ்திற்க்கு கொண்டு வந்தான்.


“ஹான்... சொல்லுங்க சீனியர்...”


“காலேஜ் டைம்ல தான் நான் உனக்கு சீனியர்... இப்போ நாம ஃபேமிலி ஃப்ரண்ட்ஸ்... எப்படி இருக்க”


“ஐயம் ஃபைன்... நீங்க”


“ ஃபைன்..., நான் அரைமணி நேரமா பார்க்குறேன் இந்த ஓவியத்துல அப்படி என்ன இருக்குனு பார்க்குற.”


“இந்த ஓவியம் நல்லா இருக்கு அதான் பார்த்துட்டு இருந்தேன். எங்க வாங்குனது.”

“ஆர்ட் கேலரில நான் வாங்குனேன்... அம்மாக்கு ஃப்ரசண்ட் பண்ண.”


”ரொம்ப அழகு இந்த ஓவியம்”


“உன்னைவிட இல்லை”


“என்னது?”

“இல்லை… அந்த ஓவியம் உன்னைவிட அழகுனு சொன்னே.

“எந்த ஓவியத்தையும் ஒரு பொண்ணு கூட கம்பேர் பண்ணாதீங்க... அந்த ஓவியம் வரைஞ்சவங்க மனநிலையில ஆயிரம் கற்பனைகள் இருக்கலாம்... அதுக்கு ஈடா எந்த உயிர் உள்ள பொருளும் சமம் ஆகாது” அவள் ஒரு விளக்கம் கொடுக்க.


“அவனோ ஆச்சர்யமாக அவளை பார்த்தான்...”

“கீழே நமக்காக வெயிட் பண்ணுறாங்க போலாம...” அவன் அழைக்க... இருவரும் கீழே இரங்கி வந்தனர்.


“இவன் தான்மா என் பையன், ராகுல்விக்னேஷ்... , என் கம்பெனி, அப்புறம் அவன் சொந்தமா ஆரம்பிச்ச கம்பெனியும் சேர்த்து பார்த்துட்டு இருக்கான். உனக்கு என் பையனை பிடிச்சிருக்காம்மா” பாஸ்கரன் கேட்க.


“அவளுக்கு புரியவில்லை... இவர் எதற்க்கு அவனை பார்த்து பிடித்து இருக்கானு கேக்குறாங்க” அவள் தன் தந்தையை பார்க்க.


“அவரோ... அனு, உனக்கும், ராகுலுக்கும் தான் மேரேஜ் பண்ண நாங்க முடிவு பண்ணிருக்கோம்” அவளுக்கு அதிர்ச்சியை தந்தார் அவளின் தந்தை.


“அவளோ, தந்தையை அதிர்ச்சியாக பார்த்தால்... யமுனாவிற்க்கும் இது அதிர்ச்சி தான். ஆனால் அவரை மீறி இங்கு எதுவும் பேச முடியாத சூழ்நிலை.”


“பாஸ்கரா எனக்கு பிடிச்சிருந்தாலே என் பொண்ணுக்கு பிடிக்கும் டா... என் பொண்ணு என் பேச்சை மீற மாட்டா... அதனால சொன்ன தேதில என் பொண்ணுக்கும், உன் பையனுக்கு நிச்சயம்... அடுத்து வர்ர முகூர்த்ததுல கல்யாணம்.” சிவபாலன் மேலும் ஒரு அதிர்ச்சியை அவளுக்கு வைத்தார்.

அவள் வருவாளா??
 
Top