Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Ennai Ariyum Kaadhalan 9

Advertisement

ilakkikarthi

Active member
Member
என்னை அறியும் காதலன் 9

“கல்லூரியின் இறுதி வருடத்தில் இருந்தால் அனுபாரதி... காதலனுக்காவே அவள் டெல்லி சென்று படிக்க வேண்டிய படிப்பை, சென்னையில் படித்தால். அவனுக்காவே, ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தால்.”


“அடுத்து என்ன பண்ணப்போற மலர்... எம்.பில் படிக்க போறையா, இல்லை வேலையா...” பாரதி கேட்க.


“இன்னும் எதுவும் டிசைட் பண்ணலை டி... ஊருக்கு போய் தான் முடிவு பண்ணனும். நீ என்ன பண்ணப்போற?” மலர், பாரதியிடம் கேட்க.

“கல்யாணம் தான்... என் மனுகூட...”


“அடிப்பாவி… நான் அதை கேக்கலை... அடுத்து என்ன படிக்க போறேனு கேட்டேன்.”


“எனக்கு படிக்க ஆசை தான்... ஆனா மனுகிட்ட கேக்கனும்... அவங்களுக்கும் வேலை கன்பார்ம் ஆச்சுனா இங்க படிப்பேன்... இல்லைனா பார்க்கலாம்.”

“ம்ம்... சரி...” எதிர்கால திட்டத்தை பற்றி பேசிக்கொண்டே போக, பாரதியை அழைத்துகொண்டே வந்தான் ராகுல்.


“பாரதி... நில்லு...” அவளின் முன் வழி மறைத்து நின்றான்.


“என்ன...”

“தாங்க்ஸ் பாரதி...”

“எதுக்கு”


“நேத்து எனக்கு நடந்த ஆக்ஸிடண்ட்ல, என்னை காப்பாத்துனக்கு.”


“ஓ... உங்க இடத்துல வேற யாரவது இருந்திருந்தாலும், நான் உதவி செஞ்சிருப்பேன். இனிமே பார்த்துப்போங்க.” அவனுக்கு இலவசமாக அறிவுரை சொல்லிவிட்டு நகர்ந்து செல்ல போகையில்.

“உன்கிட்ட முதல் முறை அப்படி நடந்துகிட்டதுக்கு சாரி... இனி நாம ஃப்ரண்ட்ஸ்.” என அவன் கையை நீட்டினான்.

“அவளோ, ஓகே, ஃப்ரண்ட்ஸ்... நான் கிளம்புறேன்.” மலரோடு பேசிகொண்டு சென்றுவிட்டால்.


“எப்ப டி, நடந்தது அவனை காப்பாத்துனது... இதெல்லாம் புதுசா இருக்கு... அவன் பார்வையும் சரி இல்லை... பார்த்து இருந்திக்கோ பாரதி.”


“நேத்து, ஷாப்பிங்க் பண்ண போயிருந்தேன். அப்போ, இவன் கார்ல ப்ரேக் பிடிக்கலை போல, நேரா மரத்துல மோதிட்டான். நல்ல வேளை நான் அந்த பக்கமா போயிட்டு இருந்தேன்... கூட்டமா இருக்கறதை பார்த்து நான் இறங்கி போய் பார்த்தேன். தலையில லேசா அடிப்பட்டு மயக்கமா இருந்திருக்கான்.”

“ஒரு சிலர் ஹெல்ப் பண்ணி அவனை நான் தான் ஹாஸ்பிட்டல சேர்த்தேன். அப்புறம் அவன் ஃப்ரண்ட்க்கு போன் பண்ணி நான் சொல்லிட்டு, அவன் வந்த பின்னாடி கிளம்பிட்டேன்.” நடந்ததை சொல்லிமுடித்தால்.


“ உதவி பண்ணறது தப்பில்லை ஆனா, அந்த உதவினால உனக்கு பிரச்சனை வந்திருக்கூடாது பாரதி.”


“என்ன டி சொல்லுற.”


“என் யூகம் சரின்னா, அவன் உன்னை காதலிக்க ஆரம்பிச்சுட்டான் பாரதி.” மலர் சொல்ல.


“என்கிட்ட சொன்னா, அப்போ பார்த்துகலாம்... இப்போ நாம கிளம்பலாம்.” மலரின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தால்.


“ராகுல், அந்த கல்லூரியில் படிப்பை முடித்துகொண்டு, மும்பையில் மேல் படிப்பை படிக்க சென்றுவிட்டான். இடையில் பாரதியின் மீது வந்த புரிதல் தள்ளி வைக்கப்பட்டது. ஒரு வருடம் கழித்து தாய், தந்தையை பார்க்க வந்தவன், அப்படியே ஃப்ரண்ட்ஸையும் பார்க்க வந்தான். அப்படி வரும் போது தான் அவனுக்கு விபத்து நேர்ந்தது.”


“அவன் நண்பன் சொல்லி தான் தன்னை காப்பாற்றியது யார் என தெரிந்தது ராகுலுக்கு. அன்று, பாரதியின் மீது இருந்த புரிதல் தான் ரகுவிடம், ராகுல் சண்டையிட்டது. ஆனால் அந்த புரிதல் தான் இன்று காதலாக அவனுக்கு தோன்றியது. அதனால் தான் அவன் அடிப்பட்டதையும் பொருட்ப்படுத்தாமல் அடுத்த நாளே அவளை பார்த்து நன்றி சொல்ல வந்தான்.”

“கல்லூரியின் வாசலில் மனுவிற்க்காக அவள் காத்திருந்தால் பாரதி. ஆனால் அவளை அழைத்து செல்ல அவளின் தந்தை சிவபாலன் வந்துவிட்டார்.”


“தந்தையின் காரை பார்த்ததும், அவளுக்கு ஆச்சர்யம்... எப்பொழுதும், வீட்டுக்கு வந்து தன்னை பார்த்துவிட்டு செல்லும் தந்தை இன்று கல்லூரிக்கு வந்திருக்கிறார் என்று.”


“ஐய்யா... என்ன நீங்க வந்திருக்கேங்க... என் காலேஜ்க்கு.”


“ஊருக்கு கிளம்பிட்டேன் அனு... உன்னை பார்த்துட்டு அப்படியே கிளம்பலாமுனு நினைச்சு வந்தேன். வா அனு உன்னை வீட்டுல ட்ராப் பண்ணிட்டு அப்பா ஏர்போர்ட்க்கு போய்கிறேன்.”


“சரிங்க ஐய்யா... போகலாம்...” காரில் ஏறி அமர்ந்ததும், மனுவிற்க்கு ’அப்பாவுடன் நான் கிளம்பிவிட்டேன், நாளை பார்க்கலாம்,’ என அவனுக்கு மெசேஜ் அனுப்பினால்.


“அவளின் படிப்பை பற்றியும், அடுத்து என்ன படிக்கலாம் என அவளின் தந்தை அவளிடம் பேசிகொண்டே வந்தனர். வீடு வந்ததும் மகளுடன் வீட்டிற்க்குள் சென்றார்.”


“என்னங்க... எதுவும் மறந்துட்டேங்களா...” யமுனா கேட்க.


“அனுவ வீட்டுல விட்டுட்டு போகலாம் வந்தேன் யமுனா... நான் கிளம்புறேன் அனு...” இருவரிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டார்.

“தந்தைய வழியனுப்பிவிட்டு தனது அறைக்கு சென்றால் அனு. அறைக்குள் நுழைந்தது முதல் வேலையாக மனுவிற்க்கு தான் போன் செய்தால்.”


“ரிங் போய்கொண்டே இருந்ததை தவிர அவன் எடுக்கவில்லை. இரண்டு, நான்கு என அவள் அழைத்துகொண்டே இருந்தால் ஆனால் அவன் எடுக்கவில்லை.”


“இறுதியாக அவனுக்கு, ‘வேலை முடிந்துவிட்டால் உடனே கால் செய்யவும், நான் காத்திருக்கிறேன்’ என மெசேஜ் செய்துவிட்டு கீழே சென்றால்.


”அன்னை கொடுத்த உணவை சாப்பிட்டு முடித்துவிட்டு, அன்னையுடன் சிறிது நேரம் செல்லம் கொஞ்சி, அவரிடம் ஒப்படைத்த பள்ளி கணக்குகளை அவள் சரிப்பார்த்து கொண்டிருந்தால்.”


“போதும், அனு அந்த கணக்கு எல்லாம் நான் பார்த்துகிறேன்... நீ போய் உன் ப்ரஜெக்ட் வேலைய பாரு... இன்னும் மூனு மாசம் தான் இருக்கு உன் காலேஜ் முடிய... இனி எக்‌ஷாம்க்கு வேறு நீ படிக்கனும்.”


“அதெல்லாம் எனக்கு சாதராணம் ம்மா... இந்த கணக்கு சரியா வரலை அதான் என்னனு பார்க்குறேன்.” அவள் சொல்ல.

“அந்த கணக்கு வழக்கு நோட்டை, அவளிடம் இருந்து வாங்கி, அவளை படிக்க அனுப்பி வைத்தார்.”

“அறைக்குள் நுழைந்ததும், மனுவின் போன் அவளை அழைக்க. ஓடி போய் அதை அட்டென் செய்தால்.”

“எங்க போன... எத்தனை போன், மெசேஜ் பண்ணியும் பதில் இல்லை. ரொம்ப வேலையா?”

“ஆமா... இப்போ தான் முடிஞ்சது... உன் மெசேஜ், போன் கால் இப்போ தான் பார்த்தேன் அதான் உடனே போன் செஞ்சேன். வீட்டுக்கு வந்திட்டயா...”

“ம்ம்ம்... வந்து சாப்பிட்டு, இதோ படிக்க போறேன். நீ?”

“இனி தான் சாப்பிடனும், நாளைக்கு மீட் பண்ணலாம்...”


“இல்லை மனு... நாளைக்கு ப்ரஜெக்ட் வேலையா வெளியே போறேன். அதனால சண்டே மீட் பண்ணலாம்”


“ஓ... சரி... எங்க போனாலும் எனக்கு ஒரு மெசேஜ் மறக்காத பாரதி. சேஃப் அஹ போயிட்டு வா...”

“ம்ம்... சரி... நீ போய் சாப்பிடு... ஃப்ரீ ஆகிட்டு நைட் போன் பண்ணு.”


“ம்ம்... ஓகே டி” அவனிடம் பேசி முடித்த பின் தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது.


“இப்படியாக அவர்களின் காதலின் பயணமும், வாழ்க்கையும் அழகாக போய்கொண்டிருந்தது. அவள் கல்லூரியின் இறுதி வாரத்திலும், இவன் அண்ணனின் கல்யாணத்திலும் பிசியாகவும் இருந்தனர். மனு, பாரதியை அண்ணனின் கல்யாணத்திற்க்குகான முதல் அழைப்பிதலை அவளுக்கு தான் கொடுத்தான். கல்யாண நாளும், அவளின் தேர்வும் ஒரே நாளில் இருந்ததால் அவளால் வரமுடியவில்லை என அவனிடம் சொல்லிவிட்டால்.”


“அவனும் அதை ஏற்றுகொண்டு அவளை படிப்பில் கவன செலுத்துமாறு கூறிவிட்டு அண்ணின் கல்யாணத்திற்க்கு ஊருக்கு சென்றுவிட்டான் ஒரு வாரத்திற்க்கு முன். அவன் இல்லாத நாட்களை தன் படிப்பில் கவனத்தை செலுத்தினாலும், அவனது நினைவுகள் அவளின் நெஞ்சில் ஓரத்தில் இருக்க தான் செய்தது.”


“இறுதி தேர்வை முடித்துக்கொண்டு கல்லூரியைவிட்டு வெளியே வரும் போது மனு அவளுக்காக காத்துகொண்டிருந்தான். அவனை பார்த்ததும் வேகமாக அவனிடம் நடந்து சென்றால்.”


“எப்போ வந்த மனு... அண்ணா கல்யாணம் நல்லபடியா முடிஞ்சதா... அண்ணி எப்படி இருக்காங்க.”


” எல்லாருமே நல்லா இருக்காங்க... நீ ஏன் இப்படி இருக்க...”


“நான் நல்லா தான் இருக்கேன்... எக்‌ஷாம் நடந்ததுல கொஞ்சம் அதில பிசியா இருந்துட்டேன்.”


“சரி வா... கிளம்பலாம்...” அவளை பைக்கில் ஏற்றிக்கொண்டு, அவன் தங்கி இருக்கும், வீட்டுக்கு அழைத்து சென்றான். இதுவே அவனது வீட்டுக்கு வரும் முதல் முறை”


“அம்மா, அப்பா, எப்போ வருவாங்க வீட்டுக்கு...”

“அடுத்த வாரம்... வா உள்ள போகலாம்...”

“கல்யாணம் போட்டோ போன்ல இருக்கா... நான் பார்க்கனும் மனு. நீ என்ன ட்ரெஸ் போடுருந்த... நான் எடுத்துகொடுத்த செர்வானியா... இல்லை, அம்மா எடுத்துகொடுத்ததா.”

“அதை நீயே பாரு...” என அவளிடம் போனைகொடுத்துவிட்டு அவளுக்கு ஜுஸ் எடுத்து வர சென்றான்.

“அவன், அன்னை எடுத்துகொடுத்த ட்ரெஸை முதல் பாதியிலும், அவள் எடுத்துகொடுத்த ட்ரெஸை அடுத்த பாதியிலும் போட்டு இருந்தான். அவளும் ஏற்கனவே சொல்லி தான் விட்டால். அம்மா எடுக்கும் உடையை தான் அன்று போட வேண்டும் என. ஆனால் இவன் தான் அவளிடம் வேறு உடை எடுக்க வேண்டும் என அவளை அழைத்துகொண்டு போய் எடுத்து வந்தான்.”

“ஒவ்வொரு போட்டோவிலும் அவன் மற்றும், அவனின் குடும்பத்தார்களும் சேர்ந்து எடுத்ததும், பிற்பாதியில் அவன் மட்டும் இருக்கும் போட்டோவும் இருந்தது.”


“போட்டோ முடிந்து, வீடியோ பகுதியில் அவன் குடும்பத்தில் இருக்கும் தாத்தாவும், அவனின் தந்தையும் பேசியது பற்றி இருந்தது. அதை க்ளிக் செய்து ஓட விட்டால்.”

“அந்த வீடியோவில், அதில் இருந்தது ‘ நல்லபடியா மூத்தவன் கல்யாணம் முடிஞ்சது. அடுத்து ரஹ்மானுக்கு தான்... அவனுக்கும் பெரிய லாயர்க்கிட்ட சீனியரா வேலையும் பார்க்குறான். எல்லாம் அல்லாஹ் செய்யத நன்மை தான் இல்லை முஜுபுர்.”

“ஆமா... மாமா...,”


“இனி அடுத்து, சின்னவனுக்கு முடிக்கனும், அவனுக்கு முடிச்சிட்டா நானும், பெனாசிரும் நிம்மதியா இருக்கும்.”


“எனக்கு தெரிஞ்ச உறவுல ஒரு பொண்ணு இருக்கு, பொண்ணு அம்சமா இருக்கும், நம்ம பையனுக்கு ஏத்த மாதிரி தான் டாக்டர் படிப்பு படிச்சிருக்கு... ரொம்ப நல்ல குடும்பம். நம்ம பையனுக்கு வேனா அந்த பொண்ண பார்க்கலாமா முஜுபுர்.” அந்த தாத்தா கேட்க.

“அவன் கிட்ட நான் பேசிப்பார்க்குறேன் மாமா.”


“ரொம்ப நல்லது… நல்ல முடிவா சொல்லுப்பா” அவர் சொல்லிவிட்டு எழும் போது அதை வீடியோ எடுத்துகொண்டிருந்தான் ஒரு சிறுவன்.

“ அந்த சிறுவனிடம் இருந்து யாரோ அந்த போனை வாங்கினர். அத்தோடு அந்த வீடியோ முடிந்தது... இதை பார்த்துகொண்டிருந்த பாரதியோ, கோவமாக அந்த போனை தூக்கி எரிந்தால். அந்த போன் சுவரில் பட்டு சில்லு சில்லாக உடைந்தது.”

“அவள் தூக்கி எரியும் போதே மனு வந்துவிட்டான். அவளது கோவத்தை பார்த்தவன், ‘ஹே ஏன் டி என் போன் அஹ் உடைச்ச.” அவன் கேட்க.

“உன் மண்டை உடைச்சிருக்கனும், ஆனா என் கையில அந்த இருந்ததல நீ தப்பிச்ச.”

“என்ன டி ஆச்சு உனக்கு.” அவள் முன் ஜூஸை வைத்துவிட்டு கேட்டான்.

“உனக்கு பொண்ணு பார்க்க போறாங்களாமே, என்கிட்ட சொல்லவே இல்லை.” அவள் நக்கலாக கேட்க.

“லூசு மாதிரி பேசாத... யாரு சொன்னா.”

“அதான் அந்த வீடியோவில இருந்ததே... டாக்டர் பொண்ணு பார்க்க போறாங்களாம்.”


“அந்த வீடியோல இருந்த அதுக்கு நான் பொறுப்பா... போட்டோ எடுத்து முடிச்சதும், என் பெரியம்மா பையன் போன் வாங்கிட்டு போயிட்டான். அவன் எடுத்திருப்பான்.”

“ஓ... அப்போ அதுக்கு, உனக்கும் சம்பந்தமில்லை...”

“இல்லை டி...”

“உன் பேரு தான ரஹ்மான்... அப்போ அந்த வீடியோல உன் பேரு தான் சொன்னாங்க. உன் அப்பாக்கிட்ட ஒரு தாத்தா பொண்ணு இருக்கு, அந்த பொண்ண உனக்கு மேரேஜ் பண்ணலாமுனு சொன்னாங்க. உன் அப்பாவும் பார்க்கலாம்னு சொல்லுறாங்க. இதுக்கெல்லாம் என்ன காரணம்.”


“இங்க பாரு பாரதி... தப்பா புரிஞ்சுகிட்ட பேச கூடாது. என் அப்பா, அப்படி பொண்ணு பார்க்கனும் இருந்தா என்கிட்ட சொல்லிருப்பாங்க. நீ எதாவது கற்பனை பண்ணாதே...”

“ஆமா , நான் கற்பனை பண்ணுறேன்... அந்த வீடியோ நீ பார்த்திருந்தா இப்படி பேசிருக்க மாட்ட.”
“அதுக்குள்ள தான் போன் உடைச்சிட்டயே அப்புறம் என்ன.”

“அப்போ உனக்கு பொண்ணு பார்க்குறாங்கனு சொன்னதுக்கு கோவம் வரலை, அந்த போன்ல இருக்க வீடியோவ பார்க்க முடியலைனு தான் உனக்கு கோவம்.”

“ப்ச்... இப்போவும் புரியாம பேசாத... யார் என்ன சொன்னாலும் நான் தான் உனக்கு, நீ தான் எனக்கு...” அவள் அருகில் அவளை நெருங்கி நின்று கையை பிடித்துகொண்டு கூறினான்.

“எனக்கு பயமா இருக்கு... உன் அப்பா சொன்ன மாதிரி அந்த பொண்ணு தான் உனக்கு கல்யாணம் பண்ணிக்க சொன்னா?”

“அப்படியெல்லாம் நடக்காது...”

“நடந்தா?...” அவள் பிடியில் நிற்க.

“அவனது கோவம் அதிகமாகியது. ஹே எவ்வளவு முறை சொல்லுறது நடக்காதுனு... மத்த பொண்ணுங்க மாதிரி தான என்னையும் சந்தேகப்படுற. போடி...” என அவளின் கையை உதறிவிட்டு ஜன்னல் பக்கம் நின்றுகொண்டான்.

“அவளோ, அவனுக்கு ஈடாக, ‘நான் மத்த பொண்ணுங்க மாதிரி உன்னை சந்தேகப்படுறேனா? உன்னை உருகி உருகி காதலிச்சேன்ல எனக்கு வேணும்... எல்லாம் பொண்ணுக்கும் இருக்குற பயம் தான் எனக்கும், அது உனக்கு புரியாது... என்னை வேற ஒருத்தனுக்கு நிச்சயம் செய்யும் போது அப்போ உனக்கு வரும் வலி தான் இப்போ எனக்கு இருக்கு.”

“இனி, உன்னை நான் பார்க்கமாட்டேன்... நீயும் என்னை தேடி வராத. மீறி என்னை தேடி நீ வந்தா நான் உன்னைவிட்டு தூரமா தான் போவேன்... குட் பை” அவன் திரும்பி பார்க்காமல் அவள் வீட்டை விட்டு வெளியேரி சென்றால்.

“வரும் வழியெல்லாம் அவளின் கண்ணீர் நிற்க்கவில்லை. அவளின் உண்மையான காதலின் அன்பை பார்த்து மேகமும் மழை சிந்தியது அவளுக்கு ஈடாக. மழையின் நனைவதை கூட பொருட்படுத்தாமல் தன்னை பார்த்து மற்ற பெண்களுக்கு சமமாய் பேசிவிட்டானே என்று தான் அவளின் கவலை.”

“ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட ஒரே தொடுதல் மனம் வேண்டுதே
முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம் அது நித்தம் வேண்டும் என்று வேண்டுதே
வேர்வை பூத்த உந்த சட்டை வாசம் இன்று ஒட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே
கேட்குதே…
பாறையில் செய்தது என் மனம் என்று தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர்விட்ட கொடியாய் நீ நெஞ்சில் முளைத்துவிட்டாய்”


“மகள் ஏன் மழையில் நனைந்துகொண்டு வருகிறால் என யோசித்துகொண்டே தாயின் உள்ளம் அவளுக்கு தலையை துவட்ட துண்டை எடுக்க சென்றது.”


“ஏன் அனு... மழையில நனைஞ்சு வந்திருக்க... காய்ச்சல் வேற உனக்கு வந்திரும்... இரு அம்மா, காஃபி எடுத்துட்டு வரேன்.” அவர் உள்ளே செல்ல. இவளோ, தாயின் முன் கண்ணீரை காட்டாமல் தன்னை தேற்றிகொண்டால்.

“கல்லூரியின் இறுதி தேர்வை முடித்துக்கொண்டு, அவள் கோவையில் மேற்படிப்பு படிக்க சென்றால். மலரும், அவளின் காதலனுக்காக பேசினால் ஆனால் அவளின் மனநிலையோ அதை தாண்டி சென்றுவிட்டது. வேறு வழியின்றி மலரும், அவளின் சொந்த ஊருக்கு சென்றுவிட்டால்.”

“கோவையில் படிப்பை முடித்துகொண்டு, தனது அன்னையின் கீழ் செயல்படும் பள்ளியை தானே எடுத்து நடத்துவதாக தந்தையிடம் சொல்ல, அவரோ, மகளின் ஆசைக்கு ஒப்புக்கொள்ள. அன்று முதல் அவன் நினைவே வராத படி அவள் அந்த பள்ளியிலேயே தன் மனதை மூழ்கடித்தால்.”


“அவனோ, அவள் வெளியில் சென்றதை பார்த்து அவள் பின்னாடி செல்ல முயன்றான். ஆனால் அவளின் கோபம் அவனை தடுத்தது. அவள் சொல்லிய சொல் மாறமாட்டால், மீறி நான் இப்போது சென்று அவளை தடுத்தால் அவள் இன்று இருந்தே தன் கண்ணில் படாதவாறு சென்றுவிடுவாள். அதனால் அவள் கோபம் குறையும் பொழுது அவள் முன் போகலாம்.” என முடிவெடுத்துகொண்டு அவன் சென்றான்.


“இருவருமே ஒருவர் மீது ஒருவர் அதிக காதல் சுமந்துகொண்டு வாழ்பவர்கள் தான்... ஆனால் அவர்களை பிரித்து வைத்து அந்த காதலின் வலிகளை உணர வைக்க விதி செய்யும் ஒரு காதல் விளையாட்டு. இதில் அவன் காதலை அவள் உணர்வாளா? இல்லை அவள் காதலை அவன் உணர்வானா?”

அவள் வருவாளா???
 
Top