Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Ennai Ariyum Kaathalan 3

Advertisement

ilakkikarthi

Active member
Member
என்னை அறியும் காதலன் 3

”இதெற்கலாம் காரணம் அவன் தான்... அவன் மட்டுமே... என் மனம் நோகடிப்பதிலும், அதில் அவன், காயத்தை மேலும் மேலும் கீறி இருவரையும் காயப்படுத்துவதில் அவனுக்கு ஒரு நிம்மதி.”


“அவன் இல்லை என்றால், நானும் இல்லை... நான் இல்லை என்றால் அவனும் இல்லை... இது எல்லாருக்கும் தெரிந்தவை தான் இருந்தும், அவனை விட்டு நான் முழுதாக விலக வில்லையே...”


“ஏன் தான் அவன் இப்படி செய்கிறானோ...” தனக்குள்ளே, அழுதுகொண்டு, ஸ்கூட்டியை ஓட்டிகொண்டு வீடு வந்து சேர்ந்தால்.
“அவள் ஹோட்டலுக்கு கிளம்பும் போது இருந்த நிலை வேறு, இதோ இப்பொழுது வந்த நிலை வேறு என அவளின் அன்னையின் மனம் புரிந்துகொண்டது.”


“சாப்பிட்டயா அனு...” அவளின் அன்னை கேட்க.


“சாப்பிட்டேன்... நான் தூங்குறேன்.. என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க..” தாயிடம் கூறிவிட்டு, அவளது அறைக்குள் முடங்கிவிட்டால்.


“அங்கேயே இருந்தால்... தாய் வேறெதும் கேள்வி கேட்டுவிடுவாரோ என்ற பயத்தில் தான் அவள் வேகமாக அறைக்கு சென்றால்.”



“அந்நேரம், அனுவின் அன்னைக்கு போன் வந்தது... “இப்போ தான் வந்தா அனு... இல்லை... எதுவும் என்கிட்ட சொல்லல... நான் காலையில அவகிட்ட பேசிட்டு உங்களுக்கு சொல்லுறேன்.”



“அறைக்குள் நுழைந்த அனுவோ, கட்டிலில் விழுந்து கண்களை மூட்டினால்... “என்ன கண்ண மூட்டிட்டா, நான் உன் நினைப்புல நான் இருக்கமட்டேனு அர்த்தமா... நீ எந்த நிலையில இருந்தலும் நான் உன் காதலுக்கு சொந்தம் தான்...”


“சே... என்ன அவன் நியபகமா இருக்கு,... இது சரி இல்லை...” என அவள் எழுந்து அவளது போனில் அவளுக்கு பிடித்த பாடலை தேடி பிடித்து போட்டால்.”

உள்ளிருக்கும் இதயத்துக்கு
எனை புரியும்
யாருக்குத்‌தான் நாம் காதல்
விடை தெரியும்
காதல் சிறகானாது
இன்று சருகானாது
என் உள் நெஞ்சம் உடைகின்றது
உன் பாதை எது என் பயணம் அது
பனி திரை ஒன்று மறைக்கின்றது
ஏன் இந்த சாபங்கள்
நான் பாவம் இல்லையா
விதி கண்ணாமூச்சி விளயாட
நாம் காதல் பொம்மையா”

அந்த பாடலின் வரியை அவள் திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருந்தால்...”


“ நான் அவளுக்கு என்ன டா செஞ்சேன்... ஏன் என்னைவிட்டு போனா...”



“தெரியலயே மச்சான்... தெரிஞ்சா, இப்படி உன் புலம்பல நான் கேட்டுட்டு இருப்பேனா…”


“எனக்கு தெரியும் டா, அவ என்னைவிட்டு போக மாட்டா... அப்படியே போனாலும், நான் விடமாட்டேன்...”


“அது தான் இந்த ஊருக்கே தெரியுமே டா”



“அவ என் கண்ணு முன்னாடி தான்... ஆனா அவளோட நினைப்பு முழுசும் நான் மட்டும் தான் டா...”



“மச்சான்... அப்படி என்ன தான் டா இருக்கு இந்த காதல்ல... நானும் நிறைய பொண்ணுங்களை பார்க்குறேன்... பழகுறேன்... ஆன உன்னை மாதிரி என்னால காதலிக்க முடியலையே...”



“ம்ம்... அதுக்கு முகம் லக்‌ஷ்னம் வேனும்... இப்படி ஓனானுக்கு பேண்ட், சட்டை போட்ட மாதிரி இருந்த நான் என்ன வேற எந்த பொண்ணும் உன்னை திரும்பி பார்க்காது.” ராஜேஷை கலாய்த்துகொண்டே வந்தால் தாமரை.



“பாருடா... அதை ஒரு பூனை குட்டி சொல்லுது...” என அவனும் சேர்ந்தே கலாய்த்தான்.



“ராஜேஷை கண்டுக்காமல்... நேராய் ரகுவிடம் சென்றால்...”



“என்ன ரகு மாமா... நீங்களா இப்படி... நீங்க இந்த மதுரை ஜில்லாவுலேயே பேர் போன வக்கீல்... நீங்க இப்படி குடிச்சுட்டு பேசலாம... பார்க்குறவங்க உங்களை தப்பா நினைக்க மாட்டாங்க”



“என்ன பண்ண சொல்லுற தாமரை... எல்லாத்துக்கும் காரணம் அவ தானே...”



“சரி அவளே இருக்கட்டும்... ஆனா முழுக்காரணம் நீங்க தானே மாமா.”



“ நான் என்ன பண்ணேன்... அவன் அதற்க்கு மேல் என்ன பேசிருப்பானோ... அந்த பேச்சிற்க்கு முற்று புள்ளி வைப்பது போல் அவனது போன் அழைத்தது.”



” அந்த பாடல் கேட்டதும் கொஞ்சம் சமதானம் ஆனான்..., அழைப்பேசி அடித்து முடித்ததும், எழுந்து சென்று முகத்தை கழுவிக்கொண்டு வந்தான்.”



“இங்க எதுக்கு வந்த தாமரை... எதாவது முக்கியமான விசயமா...”



“ஆமா மாமா... என் காலேஜ்ல நடக்குற பங்ஷனுக்கு உங்களை சீப் கெஸ்ட்டா இன்வையிட் பண்ணனும். அதான் நாளைக்கு உங்களை அழைக்க எங்க காலேஜ் ப்ரின்சியும், என்னை சேர்த்து இரண்டு லெக்சர்ஸ் வரோம். எப்போ ஃபீரியா இருப்பீங்கனு சொல்லுங்க அப்போ வரோம்”



“ ஆஃப்டர்னுன் வாங்க... , நீங்க கிளம்பும் போது எனக்கு மெசேஜ் பண்ணு சரியா”



“ஓகே... மாமா... நான் கிளம்புறேன்...”



“சரி... பார்த்துப்போ...”



“ம்ம்ம்... என அவள் தலையாட்டிகொண்டே விடைபெற்றால்”



“அப்பொழுது அவனுக்கு போன் வந்தது... “சொல்லுங்க..”



“ நான் ஹோட்டல் போகலை...”



“போகலைன ஒண்ணும் ஆகாது... உங்க வேலை என்னவோ அதை பாருங்க”



”தாங்க்ஸ்” என தாமரை போனிற்க்கு மெசேஜ் வந்தது.



“இட்ஸ் ஓகே... நாளைக்கு பார்க்கலாம்...” பதில் மெசேஜ் அனுப்பினால்.



“சரி டா நான் கிளம்புறேன்... வா உன்னை வீட்டுல ட்ராப் பண்ணுறேன்.”



“ஓகே மச்சான்... போகலாமே... ராஜேஷை தோலில் தாங்கிகொண்டு சென்றான்.”


“விடியலில் :
“ம்மா... நான் ஸ்கூல் கிளம்புறேன்...” அவள் சொல்லிகொண்டே வாசல் பக்கம் போக... அங்கு அவளுக்கு முன் ஐயா அமர்ந்திருந்தார்.



“ஐயா... என்னை தேடி வீட்டுக்கு வந்துட்டேங்களா... சொல்லிருந்தா நானே வந்திருப்பேன்ல...”




“இருக்கட்டும்மா... உனக்கு சிரமம் கொடுக்க கூடாதுனு தான் நானே உன்னை தேடி வந்தேன்...”



“சொல்லுங்க ஐயா...”



“நேத்து ஹோட்டலுக்கு போனதை பத்தி எதுவும் சொல்லலையேம்மா...”



“ஐயா... ஹோட்டல்க்கு போனேன், மாப்பிள்ளைய பார்த்தேன்... ஆனா எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் இல்லை...”



“ஏன் ம்மா... மாப்பிள்ளைய பிடிக்கலையா... இல்லை கல்யாணத்தை பிடிக்கலையா…?”



“இரண்டுமே ஐயா...” தயங்காமல் கூறினால்.



“ காரணம் சொல்லும்மா...”



“அவளோ அமைதியாக இருந்தால்...”



“இன்னும் அவனை மறக்கலையாம்மா...” அவளின் மனதை அறிந்துகொண்டே கேட்டார்.



“கண்களில் நீர் வழிந்து கன்னத்தை தழுவியது... அதை பார்த்தவர்... அவளின் முகத்தை நிமிர்த்து கண்ணீரை துடைத்துவிட்டார்.” அவரின் பாசமும் அவளுக்கு பிடிக்கும் ஆனால் அதற்க்காக அவளின் வாழ்க்கையை விட்டுகொடுக்க முடியுமா??



“என்னைக்குமே நீ கண் கலங்க கூடாது... உனக்குனு ஒரு வாழ்க்கை அமைஞ்சா எங்களுக்கு சந்தோஷம்… அதான் மாப்பிள்ளை பார்த்தேன்.”



“எங்க கடைசிகாலம் உன் கல்யாணத்தை பார்த்து முடிச்சா நாங்க சந்தோஷமா கண் மூடுவோம்... சீக்கிரம் ஒரு நல்ல முடிவா சொல்லும்மா...”



“ அதுவரையிலும், தந்தை, மகள் பாசத்தில் இடையிடாமல் ஓரமாய் நின்று பார்த்திருந்தவர், அவர் கிளம்பும் நேரம் அவரின் முன் வந்தார்.”



“சாப்பிட்டு போகலமே...”



“இல்லை யமுனா... என் மகளே சாப்பிடலை நான் சாப்பிட்டு என்ன பண்ணப்போறேன். நான் கிளம்புறேன்...” அவர்களிடம் சொல்லிகொண்டு கிளம்பினார்.


“எப்பவும் போல, அவள் முன் உணவு தட்டை கொண்டுவந்து, அவளுக்கு ஊட்டி விட்டார்.” அவள் தாயின் பாசமும் புரிந்தது. ஆனால் அவருக்கு தெரியாததா அவளின் மனநிலை.



“மனு... மனு சாரி... நான் பண்ணது தப்பு தான்... அதுக்காக ஏன் இப்படி பண்ணுற.”



“ உனக்கு நான் சொன்னது நியாபகம் இருக்கா..? இல்லையா?”


“ இருக்கு மனு...”


“அப்போ ஏன் கோவப்பட்ட...”


“அது... அது... என்னையும் மீறி கோவம் வந்துருச்சு...”



“ உன்னை மீறி எப்படி வரும், உன்னை மீறி கோவம் வருதுனு தெரிஞ்சா அதை கன்ட்ரோல் பண்ணனும்”



“கோவம் வருதுனு தெரிஞ்சா எப்படி கண்ட்ரோல் பண்ண முடியும்.”



“ஓ... எப்படி கண்ட்ரோல் பண்ண முடியும்னு என்கிட்ட விளக்கம் கேட்க்குற...”


“ நீ தானே, கண்ட்ரோல் பண்ண சொன்ன, அதான் கேட்டேன்.”



“இப்படி புத்திசாலியா பேசிட்டா எல்லா சரியாகாது... எதுக்கு உன் காலேஜ் சீனியர் அறைஞ்ச...”


“அவன் உன்னைப்பத்தி தப்பா பேசுனான்... அதான் அடிச்சேன்...”


“சரி என்னை தான பேசுனான்... அவன் எல்லாம் ஒரு ஆளுனு அவனை அடிச்சுருக்க...”



“யாரா இருந்தா எனக்கென்ன... அவன் உன்னை தப்பா பேசுனா அடிச்சேன்.”



“அவனோ இனி என்ன சொன்னால் இவள், புரிந்துகொள்வாள் என சோர்வாகி போனான்.”



“அவனின் சோர்வை பார்த்து அவளுக்கு தான் ஒரு மாதிரி ஆகிவிட்டது.”



“இனி இப்படி பண்ணமாட்டேன் மனு... என்னை நம்பு...”



“ நீ கோவப்படுறதுல தப்பில்லை ஆனா, உனக்கு பிரச்சனை வர்ர மாதிரி கோவப்படாத...”



“சரி... கோவப்படமாட்டேன்... ஓகே...”


“இது எத்தனை நாளைக்குனு பார்க்குறேன்...” அவளுடன் அந்த கடற்கரை ஓரம் நடந்துகொண்டே, அவர்களின் காதல் மொழிகளை பேசிகொண்டே சென்றனர்.”



“அவளின் காதல் அவனுக்கு பிடிக்கும், அதுவும் அவன் மீது உயிராய் இருக்கு அவளை அவனுக்கு பிடிக்காமல் போகுமா?”
“என்னை நேத்து புல்லா, கடற்கரையில் ஒரே லவ்சு போல..”


” நீ தான் நேத்து காலேஜ் வரலையே... அப்பறம் எப்படி உனக்கு தெரியும்.”



“தெரியும்... அது மட்டுமில்லை… “ என மலர், பாரதியின் காதில் ரகசியமாய் ஏதோ சொல்ல… அதற்க்கு பாரதி…”



“சீ... நீ எங்க உருப்பட போற...” மலரை அடிக்க துரத்திகொண்டே ஓடினால்.”



“மலரோ, வகுப்பறைவிட்டு வெளிய ஓட... அவளை பிடிக்கும் மும்பரத்தில் எதிரில் வந்தவன் மீது மோதிவிட்டால்.”



“சாரி... சாரி… என சொல்லிகொண்டே அவனை பார்த்தவள் முகம் சுளித்து நின்றால்.”


“இப்போ இடிச்சதுக்கு சாரி கேட்ட, நேத்து அடிச்சதுக்கு யாரு சாரி கேட்ப்பா..”


“ஏய்... அவள் விரல் நீட்டி கோவமாய் ஏதோ சொல்ல போக” அப்பொழுது நினைவுக்கு வந்தது அவனது முகம்.


“எதுவும் பேசாமல் அவள் நகர போக, அவனோ...”


“என்னை அடிச்சேல... உன்னை நான் பழிவாங்கம விடமாட்டேன்… “ அவளிடம் சொல்லிவிட்டு நடந்து சென்றான்.


“ஆமா... இவன் என்னை பழிவாங்க போறானா... பார்க்கலாம்... சாதரணமாக எடுத்துகொண்டு அவள் மலரை தேடி சென்றால்.”

அவள் வருவாளா?? ???
 
Super......
But dialogues ellaam varisaiyaaga irukku pa....enge,endha idathil appadinu mention panna vendama?
Aduthu yaarukkulla pesikkiraanga nu puriya vendama?
College scenes poyittu irukkum podhu lawyers conversation aduthu varuthu.......konjam paarthu correct pannidunga.
 
Top