Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Episode 1

Advertisement

Nilaprakash

Member
Member
ஒரு முறையேனும் பாரடி உயிர் கொள்கிறேன்
நிலா பிரகாஷ்
அத்தியாயம் 1
அன்றும் அழகாய் விடிகிறது அந்த இளஞ்சிவப்பு சூரியனின் இனிய விடியல் ..அதனையே தன் பெயராக கொண்டிருக்கும் சூர்யாவுக்கு அன்று ஏனோ இனிமையான கனவு போலும் எப்பொழுதும் அதிகாலையில் தூக்கம் விழிப்பவன் அன்று ஏனோ உறக்கத்தில் இருந்து விழிக்க மனமில்லாது படுக்கையில் புரண்டு படுத்தான்..
சூர்யா ஒரு சுய விவரம் ..வயது இருபத்தெட்டு.. தாய் தந்தை கிடையாது..அதற்கு பதிலாக தைரியம் மட்டும் அதிகம் கொடுத்திருந்தான் இறைவன்.. அவனுக்கான உலகம் மிக சிறியது..அவன் நண்பன் அர்ஜூன்..அவன் வளர்ப்பு தந்தை ஃபாதர் விக்டர் .‌அவனுடைய குரு கருணாகரன் ..வேறு எவரையும் அவன் எல்லைக்குள் அவன் அனுமதித்ததில்லை .. ஆஜானுபாகுவான தோற்றம்..அகன்ற மார்பும் உடற்பயிற்சி செய்து செய்து முறுக்கேறிய கட்டுமஸ்தான உடல் என யாரையும் வசீகரிக்கும் அழகு ..
ஒரு வழியாக கனவின் பிம்பம் தெளிய மணியை பார்த்ததும் தூக்கம் வந்த சுவடின்றி காணாமல் போனது .மணி ஐந்தரை.
தூங்கிக் கொண்டு இருந்த நண்பனை கீழே தள்ளி" டேய் எந்நிரிடா..குரு இன்னைக்கு ஆஜர்..பின்னி எடுத்துடுவார்" என்றான்.
" ஏண்டா அந்த ஆளுக்கு மனசாட்சி இருக்கா இல்லையா அஞ்சரை மணிக்கு டான் னு வந்தரரார் ..இம்சை " அர்ஜூன் எரிச்சலுடன் எழ அவன் தலையில் தட்டி " ஒழுக்கமா எந்திரி ..இல்லை சோறு கிடைக்காது " என்றான் சூர்யா.
இருவரும் இராணுவ வீரர்கள்.காலை பயிற்சிகள் மேற்கொள்ள ஆயத்தமாகி ரன். சூர்யா வின் திறமை அவனை தீவிரவாத எதிர்ப்பு பிரிவின் சிறப்பு அதிகாரி ஆக முன்னேற்றி இருந்தது.அந்த நிலையை அடைய அவன் பெற்ற வலிகள் அதிகம்.ஒவ்வொரு முறையும் அவன் பிறப்பு ஏளனப்படுத்தப்படும் போது எல்லாம் அவன் கோபம் அவனைக் கொன்று தின்னும் போதெல்லாம் அவனை தாங்கி பிடித்து வழிநடத்தியவர் கர்னல் கர்ணாகரன்.இன்று வரை அவர் தான் அவனின் குரு.
அர்ஜூனும் சூர்யாவும் பயிற்சிக்கு செல்ல முதன் முதலாக பயிற்சி கருணாகரன் இன்றி முடிந்தது." என்னடா இம்சை ஐ காணாம் " அர்ஜூன் அர்ஜூன் கு அவர் எப்போதுமே இம்சை தான்.சூர்யா வுக்கு ஏதோ நெருடியது. முதல் முறையாக மூன்று மாதங்கள் விடுமுறை எடுத்திருக்கிறார் . பின் நேற்று தான் பணிக்கு வந்திருக்கிறார். அவர் விடுமுறையில் செல்வது மிக அபூர்வம். அதிலும் இவ்வாறு .. அவனின் எண்ணக் குதிரைகள் மேலும் ஒடுவதற்குள் அர்ஜூன் அதற்கு கடிவாளமிட்டான் " உட்ரா ..உட்ரா ..உன் குருவை சாயங்காலம் போய் பார்க்கலாம் ..வயசாகுது இல்ல சிங்கத்துக்கு".
சூர்யா பகலில் பயிற்சி முழுவதும் தங்கள் ஆயுதங்களை பரிசோதித்தப்படியே சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.மாலை வந்ததும் அந்த இராணுவ குடியிருப்பில் கருணாகரனின் இல்லம் தேடி சென்றே விட்டான். காலிங் பெல்லை அழுத்தியப்படியே ஒரு கையை தனது செல் போனில் பார்வை ஐ பதித்தபடி நின்றிருந்தான்.கதவு திறந்ததும்.‌ ‌‌.." ஆமா மீசைக்காரர் என்ன பண்றார் ..என்ன சாப்பாடு ..பசிக்குது " என்றபடியே நிமிர்ந்தான்.விழி நிறைய மிரட்சியை தேக்கிய படி செதுக்கி வைத்த பதுமை போல் ஒரு தேவதை நின்றிருந்தாள்.
யார் இந்த பதுமை அவன் பேச்சற்று நின்றான்..அது அவள் அழகினாலா இல்ல பயத்தினாலா என்று உள்ளிருந்து சிவகாமி சத்தமிட்டார் " யாரு சூர்யாவா ? "எப்போதும் அந்த குரலில் தாய்மை நிறைந்து இருக்கும்.கருணாகரன் சிவகாமி தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.இருவரும் ஒருவரை ஒருவர் குழந்தை களாய் கருதி காதலிக்கும் பேறு பெற்றவர்கள்.. எனினும் சிவகாமியின் கண்களில் சூர்யாவும் அர்ஜூனும் மகன்களாகவே தெரிந்தனர்...அந்த பதுமை பேசுமா என சூர்யா மீண்டும் நோக்கினான். " ஏண்டா இம்சைக்கு இவ்வளவு அழகான பெண்ணா வாய்பில்லை யே மச்சான்..ஒரு வேளை பெருசு நார்த் ஈஸ்ட் பார்ட்ஸ் " அவனை திரும்பி முறைத்து விட்டு திரும்புவதற்குள் அந்த தேவதை தடம் தெரியாது மறைந்திருந்தாள்." வாங்கடா உள்ளே .‌..இப்ப தான் பலகாரம் பண்ணேன் எடுத்துட்டு வரேன் " தாய் அறியா இருவருக்கும் ஒரு பிடி சோறு ஊட்ட அவள் எப்போதும் இருந்து இருந்தாள். பிள்ளை பேறு அறியாத அன்னையர்களின் பாசம் அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும்.
" அம்மா .. சீக்கிரம் பசிக்குது .."அர்ஜூன் கேட்டதும் அந்த வார்த்தைக்கு மயங்கினவளாக இன்னும் துள்ளலோடு சமையலறைக்குள் ஓடினாள்.
" குரு எங்கம்மா ..? டிரெயினிங் வரல ? " அவன் வார்த்தையின் தேடல் விழியின் தேடலில் இருந்து வேறுபட்டிருந்தது.
" கொஞ்சம் சுருதில இருக்கார்.. நீங்க சாப்பிடுங்க டா "
" சுருதிலயா ..இன்னைக்கா‌‌...வீக் டேஸ்..இம்சைக்கு என்னாச்சு ? "அர்ஜூன் அந்த பலகாரத்தை வாயில் தினித்தப்படியே கேட்டான்.
" கொஞ்சம் மனசுக்கு கஷ்டமா இருக்குன்னார்.. ரெண்டு நாள் லீவு கேட்டார்". சொந்த ஊர் போய் வந்த கதை பேசினாள் அவள் வாங்கி வந்திருந்த தீனிகளை எல்லாம் டப்பாக்களில் அடைத்து இரவு உணவு உண்ட பின் அவர்களை வழியனுப்பினாள். சூர்யாவின் கண் தேடலில் தான் பார்த்தது பிரமையோ என்கிற அளவுக்கு அவன் கண் முன் ஒரு நொடி நின்ற அந்த தேவதை இருக்கிற சுவடே அவ்வீட்டில் இல்லாதிருந்தது.
அவளைப் பற்றி அம்மாவிடம் கேட்க மனமில்லாது அவனது அறைக்கு திரும்பினான்‌‌ . அன்று இரவு இரக்கமில்லாது அவனது உறக்கத்தை திருடியது அந்த பதுமை யின் முகம்..அவள் முகம் துடைத்து வைத்த குத்துவிளக்கு போல் அழகாக ஆனால் ஒளியற்று இருந்தது ..அவ்வளவு அழகான பெண்ணிற்குள் அப்படி என்ன வலியிருக்கும் ..மனது பிசகுகையில் விழிகளுக்கு ஏது விடுமுறை ..நிசப்தமாய் அந்த இரவு இரக்கமற்று அவனை வஞ்சித்தது..
....தொடரும்
 
நல்லா இருக்கு ஆரம்பம்
நிலா பிரகாஷ் வாழ்த்துக்கள்மா
???
 
நல்லா இருக்கு ஆரம்பம்
நிலா பிரகாஷ் வாழ்த்துக்கள்மா
???
நன்றிங்க ..Kindle Amazon ல் எனது கதை ..எனக்கென வந்த தேவதையே free download இன்றும் நாளையும் அதனையும் படித்து விமர்சனங்கள் எதிர்பார்க்கிறேன்..??
 
Top