Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Episode 13 - Unai Theendum Alaiyaai Naane

Advertisement

Evlo valarndhalum oru chinna mutham koduthu appa va correct pannitaan rishi..

Hoste room ku varadhu konjam too much thaan.. nethra enna irundhalum corres ipadi pesurathu thappu
 
அலை - 13

“ரிஷி கனவு கண்டது போதும். பீ சீரியஸ். தாத்தாவை இந்த வீக்கெண்ட் போய் பார்த்திட்டு வந்திடு. என்ன பேசனும்னு ஒருதடவைக்கு நாலு தடவை நல்லா யோசிச்சுக்கோ...” சுமங்கலி தன் போக்கில் கூறிக்கொண்டிருக்க ரிஷி அதை கவனித்தான் இல்லை.

சோபாவில் நன்கு சாய்ந்து உதடுகளில் உறைந்த புன்னகையோடு விழிகளில் கனவு ஊர்வலம் மிதக்க வேறுலகில் சஞ்சரித்துக்கொண்டிருந்தான். அவனின் கையில் வலிக்காமல் கிள்ளி வைத்தார்.

“ஏன் மாம் என்னை டிஸ்டர்ப் பன்றீங்க?...” பெரிதாக வலித்துவிட்டதை போல கையை வறட்டு வறட்டென தேய்த்துவிட்டுக்கொண்டான் ரிஷி.

“அது சரி. நீ இப்படி கனவுலையே உன் கல்யாணத்தை முடிச்சிடலாம்னு முடிவு பண்ணிட்ட போல? எனக்கென்ன?...” சேலை தலைப்பை உதறிக்கொண்டு சுமங்கலி எழுந்துவிட,

“நோ நோ மாம். என்ன சொன்னீங்க? முதல்ல இருந்து சொல்லுங்க. அப்படியே எனக்கொரு ஐடியா குடுங்களேன் ப்ளீஸ்...”கெஞ்சலாக கேட்க,

“உன் அப்பாக்கிட்ட முதல்ல விஷயத்தை சொல்லுவோம். அதுக்கப்பறமா நாம தாத்தாக்கிட்ட பேசலாம். இன்னைக்கு செவ்வாய் கிழமை. இந்த வீக்கென்ட் அங்க போவோம். இதைத்தான் சொன்னேன்...” என,

“அதென்ன வீக்கெண்ட்? இன்னைக்கே மீசையை பார்க்க போவோம். கெட்டப் கெட்டப்...”

ரிஷியின் அவசரத்தை பார்த்து ஆவென வாயை பிளந்த சுமங்கலியை அசந்த நேரத்தில் இழுத்துக்கொண்டு காரில் ஏற்றி துரைச்சாமியின் மாளிகைக்கு புறப்பட்டேவிட்டான் ரிஷி.

“அப்பாவுக்கு சொல்லனும் ரிஷி. உன்னோட இந்த அவசரத்துக்கு அவர் கோபப்படுவார். அப்பா எப்படி பேசனும்னு சொல்றாரோ அது போல தாத்தா மூட் பாத்து பேசுவோம் ரிஷி...”

நிலைமையை புரிந்துகொள்ளாமல் மகன் பிடிவாதமாக இருக்கிறானே என்கின்ற கவலை அவரை வாட்டியது.

எந்த ஒரு முடிவிலும் நிதானமாக செயல்படுபவன் அவனின் வாழ்க்கையில் எடுக்கவேண்டிய முக்கியமான முடிவிற்கு இந்தளவிற்கு வேகம் காட்டுவது கொஞ்சம் திகிலை கூட தந்தது தாயவருக்கு.

காரைக்குடியை நெருங்கியதும் சிவராமனுக்கு மொபைலில் அழைத்து இன்ன விபரம் என சொல்லாமலே மொட்டையாக தாத்தா வீட்டிற்கு வருமாறு சொல்லிவிட்டு வைத்துவிட அவர் என்னவோ ஏதோ என பதறிக்கொண்டு ரிஷி வரும் நேரத்திற்கு சரியாக வந்து சேர்ந்தார்.

“என்ன சுமா என்னாச்சு ரெண்டு பேரும் இவ்வளோ தூரம் திடீர்னு கிளம்பி வந்திருக்கீங்க?...” மகனை தாண்டி மனைவியிடம் சிவராமன் கேட்க ரிஷிக்கு புசுபுசுவென பொங்கியது.

“வரசொன்ன நான் இங்க கல்லாட்டம் நிக்கிறேன். இவரு என்கிட்டே கேட்டா என்னவாம்? முதல்ல இந்த அப்பாக்கிட்ட இருந்து அம்மாவை நாடு கடத்தனும்...” இரக்கமே இல்லாமல் கருவினான்.

விட்டால் இன்னும் என்ன நினைத்திருப்பானோ அதற்குள் சிவராமன் மகனை திரும்பி பார்க்க,

“மகனோட கல்யாண விஷயத்தை வாசல்லையே வச்சு பேசனுமாப்பா?...” மிதப்பாக கேட்டுவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான்.

சிவராமன் அதிர்ச்சியில் நிற்க அவரை அழைத்துக்கொண்டு அவனின் பின்னாலேயே வேகமாக வந்த சுமங்கலி அங்கிருந்த பணியாளரிடம் பெரியவரை கேட்க துரைச்சாமி வயலுக்கு சென்றிருப்பதாக கூறி சென்றார்.

நெஞ்சில் கைவைத்து கொஞ்சம் ஆசுவாசமானவர்,

“என்னங்க குடிக்க கொஞ்சம் ஜில்லுன்னு ஏதாவது எடுத்துட்டு வரேன். நானே வந்து உங்கக்கிட்ட விளக்கமா எல்லாம் சொல்றேன்...” என்றுவிட்டு உள்ளே சென்று மூவருக்கும் மண்பானையிலிருந்து குளிர்ந்த நீரை ஊற்றி மோர் கரைத்து கொண்டுவந்தார்.

அந்த வெயிலுக்கு இதமாக இருக்க குடித்துக்கொண்டிருக்கும் பொழுதே அதே பணியாள் திரும்பி வந்து,

“பெரியய்யாவுக்கு தாக்கல் சொல்லியனுப்பிட்டேனுங்க சின்னய்யா. இன்னும் செத்த நேரத்துல வந்துடுவாங்க. பெரியம்மா தூங்குறாங்க...” என மிக பணிவோடு கூறி தன் வேலை முடிந்தது என நகர்ந்துவிட்டார்.

“இப்போவாச்சும் என்ன சேதின்னு சொல்லுதீகளா?...” சிவராமன் நெற்றிக்கண் திறக்காத குறையாக முறைப்போடு கேட்டார்.

அவர் மகனோ வெகு நிதானமாக அவரை பாதாதி கேசம் வரை பார்த்துவைக்க அதில் இன்னமும் சினம் ஏறியது சிவராமனுக்கு.

பார்மல் பேண்டும் அதற்கு பொருத்தமாக டர்க்இன் செய்த ஷர்ட்டுடன் டை கட்டிய அவரது தோற்றம் ரிஷியை கவர்ந்தது. அந்த உடுப்பிற்கும் சிவராமனின் பேச்சிற்கும் சற்றும் சம்பந்தம் இல்லாமல் போனதற்கு தான் அந்த பார்வை பார்த்தான்.

“என்னவே பார்வை பலமாருக்கு? கேட்டதுக்கு பதில் சொல்லாம என்ன சுமா உம்ட்டு மவனுக்கு என்னவாம்? என்னைய இப்படி பாத்துவைக்கான்?...” சிவராமன் கேட்க,

“அது எப்படிப்பா இந்த வீட்டுக்குள்ள காலடி வச்சதும் உங்க ஸ்லாங் அப்டியே சேஞ் ஆகிடுது? இன்னை வரைக்கும் அதுக்கான விடை எனக்கு கிடைக்கவே இல்லை...” என,

“என்னதான் உடுப்பு மாறினாலும் நான் இந்த மண்ணுல பிறந்த கிராமத்தான் தான். நான் இப்படித்தான் இருப்பேன். உன் உடம்பில ஓடற ரத்தமும் இதே கிராமத்து வாசம் தான். நீ பிறந்ததும் இங்க தான் மறந்துடாதே. உனக்குள்ளும் அந்த கிராமத்தான் தான் இருக்கான்...” என பிரசங்கம் ஒன்றை நடத்தி,

“இப்போ இது ரொம்பவும் முக்கியம் பாரு. விஷயத்தை சொல்லு...” நேரம் ஆக ஆக டென்ஷன் தலைக்கேறியது சிவராமனுக்கு.

“நீங்க ஏன் வொரி பண்ணிக்கறீங்க? நான் தான் என்னன்னு சொல்றேன்னு சொன்னேன்ல. வாங்க நாம ரூம்க்கு போய் பேசுவோம்...”

எழுந்து பக்கவாட்டில் இருந்த அறை நோக்கி சென்ற சுமங்கலியை சிவராமன் பின் தொடர ரிஷி வேண்டுமென்றே அவரை முந்திக்கொண்டு தாயின் தோளில் கைபோட்டபடி சென்றான்.

“எனக்கு இவன் போட்டியா?. என்னா ஒரு அலும்பு இவனுக்கு?...” விரிந்த புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது மகனின் சிறுபிள்ளைதனத்தால்.

உள்ளே நுழைந்ததும் சுமங்கலி கூறிய விஷயத்தில் அப்புன்னகை துடைத்துவிட்டதை போல ஆனது சிவராமனுக்கு.

“என்ன விளையாடறீங்களா ரெண்டு பேரும்?...” என ரிஷியையும் சுமங்கலியையும் திட்டி தீர்த்துவிட்டார்.

மகனிற்காக கணவரின் பேச்சுக்களை காதில் வாங்கி மௌனியாக சுமங்கலி அமர்ந்திருக்க ரிஷியோ யாரோ யாரையோ திட்டுகிறார்கள் என்பதை போன்ற பாவனையோடு காதை குடைந்துகொண்டிருந்தான்.

அவனின் செயலில் வெகுண்ட சிவராமன் பல்லைக்கடித்தபடி,

“சுமா உன் மகனுக்கு என்ன ஒரு மெட்டுமத்தனம் பார்த்தியா? நான் இப்படி கத்திட்டு இருக்கேன். கொஞ்சமாச்சும் காதுல வாங்கறானா பாரு?...”

சிவராமன் மேல்மூச்சு வாங்க ருத்ர மூர்த்தியாக அவதாரமெடுத்திருக்க ரிஷி காது குடைந்துகொண்டிருந்த பேப்பரை எடுத்துவிட்டு,

“நீங்க பேசினது எனக்கு தேவையில்லாத விஷயம். இதையெல்லாம் என் காது கேட்காது. காது பிஸி...” மீண்டும் விட்ட வேலையே தொடர்ந்தான்.

ரிஷியை நிமிர்ந்து பார்த்த சுமங்கலி பார்வையாலேயே கெஞ்ச அவனோ அதை கூட கண்டுகொள்ளவில்லை என்பது தான் பரிதாபம்.

“இவனுக்கு பேச வந்துட்டு இப்படி வாங்கிக்கட்டிட்டு இருக்கேன். கொஞ்சமாச்சும் இறங்கி வந்து பேசறானா?...” சுமங்கலி இப்படி நினைத்திருக்க,

“எத்தனை நான் கெஞ்சியிருப்பேன். என்னோட கரியர், என் ஆம்பிஷன் எவ்வளோ முக்கியம்னு நான் எடுத்து சொல்லியிருப்பேன். அப்போலாம் நீங்க கேட்டீங்களா? அனுபவிங்க...” சமயம் பார்த்து அருமை மிகு புதல்வன் பழிவாங்கினான்.

“என்னால அய்யாக்கிட்ட இதை பத்தி பேசமுடியாது. இவனை அந்த பொண்ணை மறந்துட்டு வேலையை பார்க்க சொல்லு. இன்னும் கொஞ்ச நாள் போகவும் அய்யா வேற பொண்ணை பார்ப்பாங்க. அப்போ இவனை வாயை மூடிட்டு சரின்னு தலையாட்ட சொல்லு...” முடிவாக சிவராமன் கூறிவிட,

“இதுவும் உங்க அய்யா பார்த்த பொண்ணுதானே...” இருக்கையிலிருந்து வேகமாக எழுந்து ரிஷி கேட்க,

“அதைத்தான் நீ வேண்டாம்னு சொல்லிட்டியே. இது முடிஞ்சு போன விஷயம். அதுவும் இல்லாம காதல் அது இதுன்னு அய்யாக்கிட்ட போய் நிக்க என்னால முடியாது. நீயும் அப்படி நிக்க கூடாது. காதல் கல்யாணம் நம்ம குடும்பத்துக்கு ஒத்துவராது...”

“எல்லாம் ஒத்து வரும். நீங்க பேசற விதமா பேசுங்க. அதெல்லாம் தானா ஒத்துவரும்...”ரிஷியும் தந்தையின் பிடிவாதத்திற்கு கொஞ்சமும் சளைக்காமல் முரண்டுபிடிக்க,

“முடியவே முடியாது. அய்யா இப்ப வந்து கேட்டா நான் எதாச்சும் சொல்லி சமாளிச்சுக்கறேன். நீங்க ஒண்ணும் பேசவேண்டாம்...”

“இதுதான் உங்க முடிவாப்பா?...”

“எத்தனை தடவை சொல்றது. இதுதான் முடிவு. உனக்காகன்னு சொல்லி இன்னொருக்க அய்யாக்கிட்ட பேசி அந்த பாலகிருஷ்ணன்கிட்ட பொண்ணை குடுங்கன்னு போய் நிக்க முடியாது...”

“ஓகே அப்போ என்னோட முடிவை நீங்க கேட்டுக்கோங்க. என் வாழ்க்கையை பத்தின உங்க அக்கறையை விட உங்கப்பா கௌரவம் தான் முக்கியம்னு நீங்க நினைக்கிறப்போ நான் என் எதிர்காலத்தை எனக்கு பிடிச்சது போல வச்சுக்க சுயநலமா யோசிக்கிறதுல தப்பில்லை தானே?...”

தந்தைக்கும் மகனிற்குமான வாக்குவாதத்தில் செய்வதறியாமல் தவித்து நின்ற சுமங்கலி ரிஷியின் பேச்சில் கலங்கிப்போனார்.

ரிஷியின் பிடிவாதத்தை தான் வீட்டிலேயே பார்த்தவராகிற்றே. இப்போது என்ன சொல்ல போகிறானோ?

ஏற்கனவே அவனின் ஆசையை அழித்து கல்லூரி பொறுப்பில் அமரவைத்த கோபம் குறையாமல் தணலாக தகித்து இருப்பவன் இப்போது அதை கணவனின் பேச்சு பெரும் தீயை உண்டாகிவிட்டதை உணரத்தான் செய்தார்.

சிவராமனுக்கும் இதே எண்ணம் தான். தாய் தந்தை இருவரும் அவனையே பார்த்திருக்க அவனோ,

“இந்த கல்யாணம் வீட்ல பேசி பெரியவங்க நிச்சயம் பண்ணி கல்யாணம் நடக்கனும்னு நினச்சேன். ஆனா அது முடியாது போல...” பாவம் போல உச்சுக்கொட்டிவிட்டு,

“நீங்களா நடத்தி வச்சா அது அரேஞ்ச்டு மேரேஜ். நானா பண்ணிக்கிட்டா அது கிட்நாப் மேரேஜ். எது எப்படியோ கல்யாணம் கண்டிப்பா நடந்தே தீரும். மேரேஜ் பண்ணிக்கிட்டு அவளை தூக்கிட்டு மும்பைக்கு போய்டுவேன்...”

ப்ளைட்டில் பறப்பதை போல வலது கரத்தை வான் நோக்கி காண்பிக்க சிவராமனும் சுமங்கலியும் பீதியில் உறைந்து நின்றிருந்தனர்.

“என்னடா கடத்தல்னு சொல்றானேன்னு பார்க்கறீங்களா? வேற என்ன செய்ய? உங்களுக்கு நான் டைம் கொடுத்தா அவகிட்டயே போய் என்னை பத்தி நான் சொன்னதை பத்தி வத்தி வைப்பீங்க...”

“எனக்கு தான் ரிஸ்க். ஆனாலும் ரஸ்க் சாப்பிட நான் ரெடி தான். இனி யார் பேச்சையும் கேட்க மாட்டேன்...” அடாவடியாக ரிஷி கூற அவனின் அழிச்சாட்டியம் அளவில்லாமல் போனது.

“ரிஷி என்ன இது மிரட்டல்? அதுவும் அப்பாக்கிட்டையே?. நான் தான் பொறுமையா இருன்னு சொன்னேன்ல...”

“எதுவரைக்கும் மாம்? பேசாம இருங்க. அப்பா அவங்க அப்பாதான் முக்கியம்னு எதுவும் பேசமாட்டேன்னு சொல்லிட்டார். அப்போ நான் தானே என் வாழ்க்கையை பார்த்துக்கனும்...” என,

“அதுக்கு?...”

“இவங்க பேச மாட்டாங்க. நான் கெத்தா இருந்ததுக்கு அவளோட அப்பா பொண்ணு எனக்கு தரது டவுட் தான். பேசாம காலேஜ்ல ஒரு அர்ஜன்ட் மீட்டிங் வச்சு எல்லோர் முன்னாடியும் வச்சு தாலி கட்டிடறேன்...”

ரிஷி என்னவோ சிவராமனை இதற்கு எப்படியாவது சம்மதிக்க வைத்துவிட வேண்டும் என்று தான் இந்தளவிற்கு இறங்கி பேசுகிறான். அது புரியாத சுமங்கலிக்கு அப்படி ஒரு கோபம் வந்தது ரிஷியின் மேல்.

“உன்னை இப்படியா ரிஷி நான் வளர்த்தேன்? நம்மளை நம்பி தானே காலேஜ்க்கு பொண்ணுங்களை அனுப்பி வைக்கிறாங்க. பொறுப்புள்ள பதவியில இருக்கிற நீயே இப்படி பேசினா உன் மேல எப்படி நம்பிக்கை வரும்?...”

சுமங்கலியால் கலங்கிய கண்களை கட்டுபடுத்தவே முடியவில்லை. அத்தனை பாரமாக இருந்தது அவர் நெஞ்சம். அதே கனத்தோடு அவனை நிமிர்ந்து பார்க்க அவனோ அழவேண்டாம் என்பதை போல சைகை காட்டி கண் சிமிட்டி,

“சும்மா லுளுலாய்க்கு...” என பழிப்பு காட்டி புன்னகைத்தான். ஆனாலும் அவனுள் பெரும் ஆயாசமாக இருந்தது.

பெற்ற தந்தையையே சமாளிக்க முடியவில்லையே என நினைக்கும் போது மலைப்பாகவும் இருந்தது.

தன் ஆசையை நிறைவேற்றிக்கொள்வதற்காக எத்தனை தரம் தாழ்ந்து பேசிவிட்டேன்? அவனுக்கே அவனை நினைத்து அசிங்கமாகவும் தோன்றியது. அதற்காக மானசீகமாக தந்தையிடம் மன்னிப்பையும் யாசித்தான்.
Nice
 
ஆனாலும் தாயின் பார்வையில் ஒரு நொடி தோன்றிய கலக்கம் அவனை அசத்துப்பார்த்தது. அடாவடியாக பேசினாலும் தான் அப்படி செய்வேனா? தன் மீதான நம்பிக்கை நொடியில் ஆட்டம் கண்டுவிட்டதோ? என கசப்பாக நினைத்தான்.

ஆனாலும் அவன் பின்வாங்க முயலவில்லை. ஒரு அடி பின்னால் எடுத்துவைத்தால் நேத்ரா தனக்கு கிடைக்காமல் போய்விடுவாளோ என அஞ்சினான்.

எதிலும் நிதானமாக இருக்கும் ரிஷியின் இந்த தடுமாற்றம் நேத்ராவிடம் மட்டுமே. பிடிக்கவில்லை பிடிக்கவில்லை என்ற மனது இன்று அவளின் மீது பித்தாகி கிடப்பதை ஐயம் திரிபற உணர்ந்தே இருந்தான்.

தாயை நிமிர்ந்து தவிப்பாக பார்க்க முதலில் ரிஷியை முறைத்து பின் அவன் தவிப்பை புரிந்து அமைதியான சுமங்கலிக்கு இதை எப்படி யாருக்கும் பாதகமில்லாமல் சமாளிக்கவென யோசிக்க அதில் நூல் கிடைக்க அப்படியே சிவராமனிடமும் கூறினார்.

ரிஷியின் பேச்சிலிருந்தே எத்தனை தீவிரமாக அப்பெண்ணை நேசிக்கிறான் என்பதை உணர்ந்தாலும் மகனின் பேச்சின் தாக்கம் கொடுத்த அதிர்வை அவரால் ஜீரணிக்கமுடியவில்லை.

“என்ன? என்னை அய்யாக்கிட்ட பொய் பேச சொல்றியா?...”சுமங்கலியிடம் சிவராமன் எகிற,

“நம்ம பிள்ளையோட வாழ்க்கைங்க. அவனோட சந்தோஷத்தை விட நமக்கு எதுவும் முக்கியமில்லைன்னு சொல்றேன்...”

“அதனால?...” கூர்மையாக கேட்க,

“பொய் எல்லாம் சொல்ல வேண்டாம். அவன் காதலை பத்தி சொல்லாம இருந்தா போதும்...”

தன்மையாக பேசிய சுமங்கலி மேலும் மேலும் அவரை பேசியே கரைத்து ரிஷியை இழுத்து நிறுத்தியவர் அவனிடம் கண்ஜாடை காண்பிக்க அவனோ பச்சக்கென சிவராமனின் கன்னத்தில் ஒரு இச் பதிக்க மொத்தமாக கவிழ்ந்துவிட்டார் சிவராமன்.

ஏற்கனவே கரைந்து குழைந்து நின்றிருந்தவர் வெகு வருடங்களுக்கு பின் மகனின் நெருக்கமும் போனஸாக ஒரு அழுத்தமான முத்தம் கிடைக்க மொத்தமாக உருகிவிட்டார்.

“சரி அய்யாக்கிட்ட பேசிப்பாக்கறேன்...” என வாய் சொன்னாலும் மகனை ஆதரவாக தழுவிக்கொள்ளவும் மறக்கவில்லை அவர்.

இவர்கள் அறையை வெளியில் வந்து இன்னும் சில நிமிடங்கள் காத்திருக்க வந்துவிட்டார் துரைச்சாமி. வேகமாக எழுந்து நின்ற சிவராமன் டர்க்இன் செய்த சட்டையை வெளியே இழுத்துவிட்டு கழுத்தில் மாட்டியிருந்த டையை கழட்டி கீழே வைத்த பின் தான் நிமிர்ந்தார்.

ரிஷிக்கு தான் தலையில் அடித்துக்கொள்ள வேண்டும் போல ஆனது. “இவரை திருத்தவே முடியாது...” என மனதில் நினைத்துக்கொண்டான்.

வந்தவர்களை வரவேற்று அவர்களோடு அமர சுமங்கலி வேகமாக அடுக்களைக்குள் சென்று அவருக்கு தண்ணீர் எடுத்துவந்து கொடுத்துவிட்டு ஓரமாக ஒதுங்கி நின்றார்.

தன் தாயின் இடத்தில் நேத்ராவை வைத்து பார்த்த ரிஷிக்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை. “அவளாவது தண்ணி கொண்டுவந்து குடுக்கிறதாவது?...” மனக்கண்ணில் விரிந்த அந்த காட்சியில் திளைத்திருந்தான்.

சம்பிரதாய பேச்சுக்கள் முடிந்து, “அய்யா முக்கியமான ஒரு விஷயம் பேசலாம்னு வந்தேம்ங்க...” என சிவராமன் ஆரம்பிக்க ரிஷியுனுள் எதிர்பார்ப்பு கலந்த படபடப்பு தொற்றியது.

புருவத்தை உயர்த்தி பார்வையாலேயே என்னவென துரைச்சாமி கேட்க,

“நம்ம ரிஷிக்கு சென்னையில ஒரு இடம் சொன்னீங்களே அய்யா. அதை பத்தி பேச...” என்றவரை மறித்து,

“அதைப்பத்தி பேச என்ன இருக்கு? அவருக்குத்தான் அது சரிப்பட்டு வராதுன்னு சொல்லிட்டாரே?...” துரைச்சாமியின் பேச்சில் ரிஷிக்கு தான் கோபம் கொப்பளித்தது.

“மீசை இதுதான் சாக்குன்னு மேளம் வாசிக்குது. முழுசா கேட்டுட்டு பேசவேண்டியது தானே?...” என முணுமுணுப்பாக அமர்ந்திருக்க,

“அது ஏதோ அவசரப்பட்டு சொல்லிட்டு இப்போ நம்ம வீட்ல நீங்க சொல்லி நம்ம பேச்சை மீறிட்டோமேன்னு விசனத்துல இருக்கான்...”

சிவராமன் சொன்னதும் ரிஷியை ஆராயும் பார்வை பார்த்தார் துரைச்சாமி.

“இவன் அப்படியெல்லாம் கவலைபடற ஆளில்லையே?. நம்ப முடியவில்லை, இல்லை.இல்லை...” என்பதை போல பார்த்துவைக்க,

ரிஷியோ முகத்தை கவலையாக வைத்துக்கொண்டு, “ஹ யார்க்கிட்ட? நாங்க மாராத்தான்லையே மாங்காய் பறிக்கிறவனுங்க. எங்ககிட்டையேவா?...”

நினைத்தைதை வெளியில் காண்பிக்காமல் நடிப்புத்திறமையை கிடைத்தது சாக்கென்று செவ்வனே காட்டினான். அவன் காதல் கை கூட வேண்டும் இல்லையா?

“இப்போ என்னப்பா செய்யனும்னு சொல்ற?...” துரைச்சாமி இறங்கி வந்து பேச,

“அதான் அய்யா. பாலகிருஷ்ணன்கிட்ட நீங்க திரும்ப பேசுங்க. ஜாதகம் அமோகமா பொருந்திருக்கு, நல்ல இடம்னு நீங்க தானே சொன்னீங்க? இதை விடவேண்டாம்னு நானும் சுமாவும் பிரியப்படறோம்...”

“பார்ரா தக்காளிக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தமாமே? உண்மையை புட்டு வச்சிருப்பாரு போல ஜோசியரு...” தன் போக்கில் நினைத்து மகிழ்ந்தான் ரிஷி.

சிறிது நேரம் அமைதியாக இருந்தவர் ரிஷியை ஆழ்ந்து பார்க்க அசால்ட்டாக இருந்தவன் அலார்ட் ஆறுமுகமாகி மீண்டும் பழைய வேஷத்திற்கு முகத்தை மாற்றியவன்,

“இவர் வேற பொசுக்கு பொசுக்குன்னு என்னை நோட்டம் விடறது. மீசை இது சரியில்லை...” அப்பாவியாக முகத்தை வைத்து அமர்ந்திருந்தான் உள்ளுக்குள் கொதித்துக்கொண்டு.

“சரிப்பா, நான் திரும்ப பேசிப்பார்க்கறேன்...” என சொல்லி ரிஷியின் வயிற்றில் ஜில்லென்ற அரைலிட்டர் ரோஸ்மில்க்கை ஊற்றினார்.

வந்த வேலை முடிந்ததை போல எழுந்த ரிஷி நாயகியம்மாவை ஒரு முறை சென்று பார்த்துவிட்டு அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பியவன் நேராக நேத்ராவை பார்க்க சென்றான்.

கல்லூரியில் அவளை காணாது போக வேறொரு வேலையை தானே உருவாக்கிக்கொண்டு ஹாஸ்டல் நோக்கி விறுவிறுவென சென்றான்.

அவனிற்கு அப்போதே அவளை பார்த்துவிடவேண்டும் என்கிற உந்துதல் அவனை அலைகழிக்க அவளின் அறைக்கே சென்று கதவை தட்டினான்.

உறங்கி எழுந்த தோற்றத்தோடு கலைந்த கேசத்தோடு எழிலோவியம் என வந்து நின்றவளை அள்ளிக்கொள்ளவிழைந்த கைகளை கட்டிக்கொண்டு அவளையே பார்த்தபடி நிற்க அவனின் பார்வையில் கொந்தளித்தவள்,

“என்ன ஸார்? இங்க எதுக்கு வந்தீங்க?அதுவும் கேர்ள்ஸ் ஹாஸ்டலுக்கு. என்கிட்டே இந்த வேலை வச்சுக்காதீங்க? நான் அவ்வளோ சொல்லியும் உங்களுக்கு எவ்வளோ...”

மேலும் எதுவோ சொல்லும் முன் வார்டனும் இன்னும் இரண்டு ஆண்களும் வந்து நின்றனர். ஒன்றும் புரியாமல் நேத்ரா பார்க்க உள்ளுக்குள் அவளை ரசித்தபடி,

“நீங்க போய் செக் பண்ணுங்க...” தனக்கு பின்னால் நின்ற இருவரை உள்ளே அனுப்பி வைக்க அவர்களை உள்ளே விடாமல்,

“இருங்க. யார் இவங்க? எதுக்காக ரூம்க்குள்ள வராங்க?...” கறாராக கேட்டுவைத்தாள்.

“நேத்ரா இவங்க எலக்ட்ரீஷியன்ஸ். நம்ம ஹாஸ்டல் ரூம்ல எர்த் ஷாக் இருக்குன்னு கம்ப்ளைன்ட் வந்திருக்கு. அதான் கரெக்டா இருக்கா, எதுவும் லூஸ் காண்டேக்ட் இருக்கான்னு பார்க்க தான் வந்திருக்காங்க...”

வார்டன் யசோதா விளக்கம் சொல்லிய பின் அவர்களை உள்ளே அனுமதித்தவள் வேலை செய்பவர்களை உன்னிப்பாக கவனித்து பார்த்தாள். அவர்கள் அனைத்தையும் செக் செய்து வெளியேற,

“நீங்க அங்க வெய்ட் பண்ணுங்க. நான் வரேன்...” என்ற ரிஷியின் கண்கள் காதலில் நேத்ராவிடம் கவிபாட அதற்கு மாறாக வார்த்தைகளில் கோபத்தை நிறுத்தி அவளை சீண்டினான்.

“காலேஜ் டைம்ல இங்க என்ன ஓபி அடிச்சுட்டு இருக்க?. காலேஜ்க்கு படிக்க வந்தியா இல்லை நல்லா தூங்கி ரெஸ்ட் எடுக்க வந்தியா?...” வேண்டுமென்றே கடுமையாக அவளிடம் கேட்டவன்,

“என்ன வார்டன் இதுதான் நீங்க ஹாஸ்டலை கவனிச்சுக்கற லட்சணமா? ஹாஸ்டல் ஸ்டூடன்ஸ் எல்லாரும் க்ளாஸ்க்கு போயாச்சான்னு டெய்லி நீங்க செக் பண்ணலையா?...” யசோதாவிடம் கடுமையை காட்ட,

“ஐயோ ஸார், நான் காலையில செக் பண்ணத்தான் செஞ்சேன். இவ எப்போ வந்தான்னு எனக்கு தெரியலை...” நடுங்கிக்கொண்டே பதில் சொல்லிய யசோதா,

“இதுவரை வழக்கம் இல்லாத வழக்கமா இவரு ஹாஸ்டலுக்குள்ள வந்ததும் இல்லாம இப்படி தாளிக்கிறாரே? நான் என்ன கனவா கண்டேன்? இவரு வருவாருன்னும், இப்போ பார்த்து இந்த நேத்ரா ரூம்ல இருப்பான்னும்...” மனம் குமைந்தார்.

“ஹலோ ஸார், ரொம்ப அதிகமா பேசாதீங்க. எனக்கு கொஞ்சம் ஹெல்த் சரியில்லை. அதான் ரூம்க்கு வந்துட்டேன். சந்தேகம்னா என்னை ரெஸ்ட் எதுன்னு அனுப்பிவச்ச அன்னலட்சுமி மேம்க்கிட்ட கேட்டுப்பாருங்க...”

பட்டாசாய் நேத்ரா பொரிந்தாலும் அவள் முகத்தில் தெரிந்த களைப்பு அவள் பொய் சொல்லவில்லை என்பதை எடுத்துக்காட்டியது. வேகமாக யசோதாவை நோக்கி திரும்பினான்.

அவன் திரும்பிய வேகத்தில் வெலவெலத்த வார்டன் யசோதா இரண்டடி பின்னால் நகர்ந்துகொண்டே,

“இப்போ என்ன சொல்ல போறாரோ...” என பம்மி நிற்க,

“என்ன வேலை பார்க்கறீங்க வார்டன்? பெத்தவங்களை விட்டுட்டு இங்க வந்தி தனியா இருக்கிற ஹாஸ்டல் ஸ்டூடன்ஸ நாம தான் பேரன்ட்ஸ் மாதிரி பார்த்துக்கனும். இவங்களுக்கு உடம்புக்கு முடியலைன்னா நம்ம காலேஜ் டாக்டரை கூட்டிட்டு வந்து காண்பிக்க வேண்டியது தானே?...” என்றவன்,

“ம்ஹூம் நீங்க உங்க வேலையை சரிவர செய்யறதில்லை. இதுதான் உங்களுக்கு லாஸ்ட் வார்னிங். இனிமேலாவது பொறுப்பா இருங்க. டாக்டரை வரவழைச்சு இந்த பொண்ணை காண்பிங்க...”

ரிஷி சொல்லி முடித்ததும் தப்பித்தேன் பிழைத்தேன் என்று யசோதா ஓட்டமெடுக்க அவரை பார்த்து நேத்ரா சிரித்துவிட்டாள்.

“தக்காளி...” இதுவரை கேட்டிராத உயிரை உருக்கி உள்ளுக்குள் ஊடுருவும் குரலில் ரிஷி அழைக்க விதிர்விதிர்த்துப்போய் நேத்ரா அவன் புறம் திரும்பினாள்.

“டேக் கேர்...” என்றவன் அவளின் கன்னம் வருட கை நீட்ட சட்டென சுதாரித்தவள் அறைக்கதவை மிக வேகமாக அறைந்து சாத்தி கதவில் சாய்ந்து நின்றாள்.

“என்ன இது? யாராகினும் ஒரு எல்லைக்குள் நிறுத்திவிடும் தன்னால் இவனின் அருகாமையை தவிர்க்க முடியவில்லையே...” அப்படியே சாந்தவாக்கில் அமர்ந்து முகத்தை மூடிக்கொண்டாள்.

கதவின் வெளிப்புறம் நின்றவனுக்கோ கிஞ்சித்தும் கோபமின்றி ஒரு உல்லாச மனநிலை தோன்றியது.

சண்டைக்கோழியாய் சிலிர்த்துக்கொண்டு கோபத்தில் அவள் தன்னை மிஞ்ச மிஞ்ச அதில் மின்னித்தெறிக்கும் அழகு அவளிடம் விஞ்சிக்கிடந்து ரிஷியை தலைகீழாய் திருப்பிப்போட்டது.

அவள் மீது கோபத்தை மட்டுமே இழுத்து பிடித்திருந்த பொழுதுகளில் கூட அவளை மறந்திராதவன் காதலில் திளைத்திருக்கும் இப்பொழுதுகளில் அவளை நினைக்க சொல்லவா வேண்டும்?

“தக்காளி நான் உன்னை நெருங்கிட்டே இருக்கேன். யூ ஆர் மைன்...” இதழ் விரிந்த புன்னகையோடு மெல்ல முணுமுணுத்து மனதில் உற்சாகம் பூக்க நகர்ந்தான்.

உள்ளிருந்த நேத்ராவிற்கோ இவன் வேண்டுமென்றே ஹாஸ்டலுக்கு வருகிறான் தன்னை சீண்டவே என்பது திண்ணம்.

“ஹாஸ்டலுக்கே வந்து என்கிட்டே ஜொள்ளவா வர. கட்டுமரம் இரு, இனி உன்னை தலையால தண்ணிகுடிக்க வைக்கிறேன்?...”

தன்னை இப்படி அறைக்குள் அடைந்து கிடக்க செய்தவனை அடுத்து என்ன செய்வது என முடிவெடுத்துவிட்டாள் நேத்ரா.

கல்லூரியில் இருந்து நேராக ரிஷி சென்றது அவ்வூரின் உள்ள பெரிய லாட்ஜின் அறையின் வாசலில்.

அழைப்பு மணியை அழுத்திவிட்டு காத்திருந்தவன் கதவு திறந்ததும் முகம் முழுக்க புன்னகையோடு அவரை பார்த்து அழைத்தான்.

“மாமா...” என முகம் கொள்ளா சிரிப்போடு அழைக்க பாலகிருஷ்ணனோ ரிஷியின் வருகையில் முதலில் அதிர்ந்து பின் குழம்பி நின்றார்.



அலை தீண்டும்...
Nice
 
Top