Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Episode 17 - Unai Theendum Alaiyaai Naane

Advertisement

அலை – 17

விடிந்து வெகு நேரம் ஆகியும் எழுந்துகொள்ள மனமில்லாமல் படுக்கையிலேயே புரண்டிருந்தாள் நேத்ரா. ரிஷியின் நடவடிக்கையும் பேச்சுக்களும் அவளுள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.

அதிலிருந்து வெளிவர முயன்றாலும் முடியாமல் மீண்டும் மீண்டும் அவனின் நினைவலையில் சிக்கி திண்டாடினாள்.

அவளின் மாற்றம் அப்பட்டமாக அவளின் தோழிகளுக்குமே தெரிந்துதான் இருந்தது. நேத்ராவாகவே சொல்லட்டும் என ரோஷிணி மற்ற இருவரையும் அடக்கிவைத்திருந்தாள்.

வெகுநேரமாக படுத்திருந்த நேத்ராவை கண்ட சைந்தவி, “அக்கா நீங்க இன்னும் காலேஜ் கிளம்பலையா?...” என கேட்டபடி அவளின் முன்னே வந்து நிற்க,

“ஹ்ம் போகனும் சந்து. கொஞ்சம் டயர்டா இருக்கு...” என்று அலுப்புடன் கூறி மறுபுறம் திரும்பி படுத்துக்கொண்டாள்.

எப்போதும் இந்தளவிற்கு நேத்ரா சோம்பி கிடந்து பார்த்திராத சைந்தவி உடனே ரோஷிணியை தேடி சென்றாள்.

“ரோஷிணி அக்கா...” என்றபடி அவளின் அரை வாயிலில் நின்று கதவை மெல்ல தட்ட தலையை வாரியபடி வெளியே வந்த ரோஷிணி,

“என்னம்மா இங்க வந்திருக்க? நேத்ரா கூட்டிவர சொன்னாளா?...”என பின்னலுக்கு கீழே ஹேர்பேண்டை மாட்டினாள் ரோஷிணி.

“நேத்ராக்கா ரொம்ப டயர்டா தெரியறாங்க. இன்னும் எழுந்துக்கவே இல்லை அவங்க. அதான் உங்களை கூட்டிட்டு வரலாம்னு வந்தேன். நீங்க கொஞ்சம் வந்து பார்க்கறேங்களா?...” எனவும் அதில் அதிர்ந்த ரோஷிணி,

“இதோ வந்துட்டேன்மா...” என்று உள்ளே சென்று தன் சுடிதாரின் ஷாலை எடுத்து மேலே போட்டுக்கொண்டு சைந்தவியோடு கிளம்பினாள்.

“என்னாச்சுடா நேத்ரா?...” என வேகமாக பதட்டத்தோடு வந்தவள் நேத்ராவின் கழுத்து நெற்றி என கைவைத்து பார்க்க அது எப்போதும் போலவே இருந்தது.

“என்ன என்னாச்சு? எனக்கொண்ணும் இல்லையே? நீ ஏன் இப்படி பதறி வர?...” என்று சொல்லி எழுந்து அமர்ந்த நேத்ரா ரோஷிணியின் பின்னால் நின்றிருந்த சைந்தவியை பார்த்து,

“சந்து உன் வேலை தானா இது?...” என முறைத்தபடி தன் அறையை பார்த்துவிட்டு,

“எல்லோரும் காலேஜ் கிளம்பிட்டாங்களா? நீ இன்னும் போகாமலா இருக்க சந்து...” என்ற கூறிக்கொண்டே கட்டிலை விட்டு இறங்கி தன்னுடைய பெட்ஷீட்டை மடித்து வைத்தாள்.

“யாரை கேட்கேறீங்க நேத்ராக்கா?...” சைந்தவி புரியாமல் கேட்க,

“நம்மை தவிர இந்த ரூம்ல நூறு பேரா தங்கி இருக்காங்க? யாரை கேட்கறீங்கன்னு புரியாம பார்க்கிற நீ?...” என அதில் சைந்தவி இன்னும் குழம்பினாள்.

“நேத்ராக்கா நம்ம ரூம் மேட்ஸ் ரெண்டுபேருமே ஹாஸ்டல் ரூம் வெக்கேட் பண்ணிட்டாங்க. அந்த சத்யாவோட பிரெண்ட் வெளில ரூம் எடுத்து தங்குறாங்க போல. இவங்களும் கிளம்பிட்டாங்க. ரெண்டு நாள் ஆச்சு நேத்ராக்கா...”

சைந்தவி சொல்ல இதை எப்படி கவனியாமல் விட்டோம் என்ற யோசனைக்குள் இறங்கியவள் தன் தோழியை பார்க்க ரோஷிணியின் பார்வையை எதிர்நோக்கமுடியாமல் தடுமாறினாள் நேத்ரா.

ரோஷிணியோ வாய் திறந்து எதையும் கேட்கவில்லை. ஆனால் அவள் கண்களோ,

“சுற்றிலும் நடப்பவற்றை உணரமுடியாமல் நீ எந்த உலகில் சஞ்சரிக்கிறாய்? எதையும் உணரமுடியாமல் எது உன்னை தடுக்கிறது?...” என்ற பார்வையால் அமைதியாக நேத்ராவையே ஊடுருவி பார்க்க அதை தாங்கமுடியாமல்,

“நா....நான் போய் குளிச்சிட்டு வரேன்....” என்று கூறி கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியேறினாள்.

ஷவரின் அடியில் நின்ற நேத்ராவின் உள்ளமோ வெம்மை குறையாமல் தகித்தது. ஏன் இப்படி ஆகிவிட்டேன்? சுற்றத்தில் என்ன நடக்கிறது என்பதை உணரமுடியாத அளவிற்கு எது தன்னை ஆட்டிப்படைக்கிறது?

என்ன யோசித்தும் கிடைத்த விடையோ ரிஷியின் முகத்தையே எடுத்து காண்பித்தது. இது எப்படி சாத்தியம்?

இன்னமும் அவனை தனக்கு பிடிக்காத பட்சத்தில் எப்படி இது? இல்லை அவனின் பார்வைகளும் பேச்சுக்களும் தான் தன்னை குழப்பியடிக்கின்றன.

அவன் பார்வையில் படர்ந்துகிடக்கும் வசீகரத்தில் தன் மனம் சிக்கித்தவிப்பதை உணர்ந்தாலும் இதை ஏற்கவே கூடாது என்னும் பிடிவாதத்தில் மனதை இறுக்கிபிடிக்க நினைத்தாள்.

கண்ணாடி போல தெளிவாக இருந்த தன் இதயத்தில் இப்படி கல் எரிந்து செல்வானென கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை.

“நேத்ராவிடம் நடக்காது. முதல்ல அவனை பார்க்கிறதை அவாய்ட் பண்ணனும். பார்த்தா தானே இப்படி அவன் நினைப்பிலேயே மூழ்கிபோக வைக்குது. முதல்ல கட்டுமரத்தை தூக்கி காவேரில போடனும்...”

நினைக்கையில் சுருக்கென்று தைத்தாலும் அதையே தனக்குத்தானே திரும்ப திரும்ப சொல்லியபடி உள்ளத்தில் பதித்துக்கொண்டாள்.

“இன்னும் ஒரே வருஷம் தான், படிப்பை முடிச்சிட்டு கட்டுமரத்துக்கு ஒரு கும்பிடு. அவன் காலேஜ்க்கு ஒரு கும்பிடு. கிளம்பி போய்ட்டே இருக்கவேண்டியது தான். ஆண்டாளுக்கும் ஆவின் பாலுக்கும் அதுக்கப்பறம் இருக்கு வேடிக்கை...”

தாயையும் தந்தையையும் நினைக்கையிலேயே மனம் தானாக கனிந்து இளகியது. அனைத்தையும் ஒருவழியாக நினைத்து முடிக்கவும் மனதினுள் ஒரு தெளிவு பிறக்க விறுவிறுவென குளித்து முடித்தாள்.

உடலை துவாலையால் துடைத்துமுடிக்கவும் தான் தான் எடுத்துவந்த உடுப்பை பார்த்து தலையில் அடித்துக்கொண்டாள்.

சுடிதாரின் டாப்பையும், லாங் ஸ்கர்ட்டையும் அள்ளிக்கொண்டு ஓடிவந்திருப்பதை உணர்ந்து தன்னையே கடிந்துகொண்டவள் இதை போட்டுக்கொண்டு போனால் பார்ப்பவர்கள் மத்தியில் கேலியாக நிற்க நேரிடுமே என தன் பக்கெட்டை கவிழ்த்தி அதில் அமர்ந்துகொண்டாள்.

சிறிது நிமிடத்தில் கதவு தட்டும் ஓசையில் காதை கூர்மையாக்க ரோஷிணிதான் வந்திருந்தாள்.

“இன்னும் எவ்வளவு நேரம் தான் பாத்ரூம்லையே உட்கார்ந்திக்கிறதா உத்தேசம்? இந்தா உன் ட்ரெஸ். போய்ட்டுக்கிட்டு சீக்கிரமா காலேஜ் வர வழியை பாரு. நான் க்ளாஸ்க்கு போறேன். உனக்கு ப்ரேக்பாஸ்ட்டும் நானே வாங்கிவச்சிடறேன்...”

ரோஷிணி கொண்டுவந்திருந்த தன்னுடைய சுடிதாரை கதவின் மீது இருந்து எடுத்தவள் அதை அணிந்துவிட்டு மீண்டும் முகம் கழுவ பைப்பை திறந்தாள். அதுவரை கருத்தில் படாமல் இருந்த அந்த பைப்பை இப்போது நிதானமாக பார்த்தாள்.

“கட்டுமரம் ரொம்பத்தான் உஷார் நீ. உடைச்சது நாந்தான்னு தெரிஞ்சும் என்னை சும்மாவிட்டிருக்க. அத்தோட இனி உடைக்க முடியாதளவுக்கு பைப்பை மாத்திட்ட. சரியான கேடி...” என சொல்லியவளின் இதழ்களில் அழகாய் ஒரு மென்னகை மலர்ந்து பரவியது.

இந்த நிகழ்வும் நொடிப்பொழுது தான். “திரும்பவும் முதல்ல இருந்து ஆரம்பிக்காதே நேத்ரா...” மைண்ட்வாய்ஸ் முறுக்க,

“அவன் கேடினா நான் கேடிக்கும் கேடி. ரொம்ப பொல்லாதவளாக்கும். என்கிட்டே அவன் வேலை நடக்காது...” சிலிர்த்துக்கொண்டு கிளம்பியவள் கல்லூரியை நோக்கி சென்றாள்.

வழியிலேயே அவனின் கார் வளாகத்தினுள் நுழைவதை பார்த்தவள்,

“ம்ஹூம், இப்படியே போனா இவன் வேணும்னே என்கிட்டே வம்பு செஞ்சு என்னோட மைண்ட் ஃபுல்லா இறங்கிடுவான். அவன் பேச, நான் திருப்பி பேசன்னு அப்புறம் நான் தான் டென்ஷன்ல சுத்திட்டு இருக்கனும். நாம பார்க்காதமாதிரியே போய்டுவோம். எதற்கு வம்பு?...” என்று அதன் எதிர் திசையை நோக்கி நடந்தாள்.

“தக்காளி எங்கையோ தப்பிச்சு ஓடற மாதிரி இருக்கே?...” காரினுள் இருந்த ரிஷி சரியாக அவளை கண்டுகொண்டவன் முகத்தில் சிரிப்பு பொங்கியது.

வியர்க்க வியர்க்க வேகமாக தன்னுடைய வகுப்பினுள் நுழைந்தவள் எதிரே வந்த ஆனந்தின் மீது இடித்துக்கொண்டாள்.

“சாரி சாரி ஆனந்த்...” என்று படபடக்க அவளை வித்யாசமாக பார்த்த அவளின் நண்பன்,

“ஹேய், கூல் நேத்ரா. உனக்கு என்னாச்சு? நீ இப்படியெல்லாம் பிஹேவ் பண்ணமாட்டியே? ஏன் இவ்வளோ ரெஸ்ட்லஸா இருக்க?...” கவலை தோய்ந்து கிடந்தது அவனின் குரலில்.

“இல்லை ஆனந்த். அதெல்லாம் இல்லை...” என வேகமாக கூறி அவனை தவிர்த்து தன்னுடைய இருக்கையில் அமர்ந்தாள்.

நேத்ரா வந்ததிலிருந்து அவளையே பார்த்துக்கொண்டிருந்த தோழிகள் மூவரும் இன்னமும் குழம்பினர்.

ஏற்கனவே ரோஷிணி காலையில் நேத்ரா நடந்துகொண்டதை பற்றி கூறியிருக்க இப்போதும் நிதானமில்லாத நேத்ராவின் செய்கை அவர்களை வருந்த செய்தது.

ரிஷியை பார்க்க வந்திருந்த நேத்ராவின் பெற்றோர் அவளிடம் என்ன சொல்லி திட்டினார்களோ? ரிஷி அவர்களிடம் என்ன ஏற்றிவிட்டானோ? என நினைத்து ரிஷியின் மீது கோபம் கொண்டனர்.

அவர்களை பொறுத்தவரை நேத்ராவின் இந்த மனநிலைக்கு காரணம் ரிஷி நேத்ராவின் பெற்றோரை வரவழைத்து பேசியது தான் என எண்ணிக்கொண்டனர்.

“என்னடி என்னையே வச்ச கண்ணு வாங்காம சைட்டடிச்சிட்டு இருக்கீங்க?...” மூவரின் கலவரப்பார்வையை சரியாக கண்டுகொண்ட நேத்ரா அவர்களை இலகுவாக்கும் பொருட்டு பேச,

“ஹ்ம் இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்கியா அதான் பார்த்தோம். முதல்ல இதை சாப்பிட்டு கொஞ்சம் புக்ல கண்ணை ஓட்டு. நெக்ஸ்ட் க்ளாஸ் அன்னலட்சுமி க்ளாஸ். இன்னைக்கு டெஸ்ட் இருக்குல. மறந்துட்டியா?...”

ரோஷிணியின் கையில் இருந்த பாக்ஸை பிரித்து அதிலிருந்த பூரி கிழங்கை வேகமாக உண்டவள்,

“அதெல்லாம் ஞாபகம் இல்லாமலா? எல்லாம் இருக்கு. என்ன ஒன்னு, அன்னு கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் ஆபீசர். யூனிட்ஸ் எல்லாம் கம்ப்ளீட் பண்ணிட்டோம் தானே. டெஸ்ட்டாவே இருந்தாலும் ரொம்பவே கஷ்டமா குடுக்கும். பாப்போம்...”

இயல்பாக இருப்பதாக காட்டிக்கொண்டு மொத்த பூரிக்கிழங்கையும் காலி செய்தவள் ரோஷிணியோடு கணக்கில் கவனமானாள்.

அடுத்த வகுப்பிற்கு அன்னலட்சுமி வந்ததுமே தான் தயார் செய்து எடுத்துவைத்திருந்த வினாக்களை ஜெராக்ஸ் செய்து எடுத்து வந்திருந்தவர் அனைவருக்கும் கொடுத்துவிட்டு தன்னிடத்தில் அமர்ந்தார்.

வகுப்பறையே குண்டூசி விழுந்தால் கூட கேட்குமளவிற்கு அப்படி ஒரு நிசப்தம்.

அரைமணி நேரம் சென்றிருக்கும் ஆன்சர் பேப்பரில் கவனமாக இருந்த நேத்ராவின் காதுகளில் ரிஷியின் குரல் விழ அதுவரை மட்டுப்பட்டிருந்த மனது படபடக்க ஆரம்பித்தது அவள் அனுமதி இன்றியே.

ரிஷியை பார்த்ததும் எழுந்துசென்று வாசலுக்கு சென்று பேசிய அன்னலட்சுமி சில நிமிடங்களுக்கு பின் அங்கிருந்து சென்றுவிட ரிஷி உள்ளே நுழைந்தான்.

அவனை கண்டதும் அனைவரும் எழுந்து நிற்க,

“ஸ்டூடன்ஸ் நீங்க எக்ஸாம் கண்டினியூ பண்ணுங்க. உங்க மேம்க்கு சின்ன வொர்க். அதுவரை நான் உங்களை பார்த்துப்பேன்...” என கூறி நாற்காலியில் சாவகாசமாக அமர்ந்தான்.

நேத்ராவின் கைகள் ஏனோ வேலைநிறுத்தம் புரிய அவனின் குரல் கேட்டும் நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

“கட்டுமரம் கிராதகா வேணும்னே என்னை டென்ஷனாக்கவே வந்திருக்கான். நேத்ரா கண்டுக்காதே...” என சொல்லிகொண்டாலும் அவன் புறம் திரும்ப சொல்லிய மனதை கட்டுப்படுத்த வெகு பிரயத்தனப்பட்டாள்.

அதன் பின் கொஸ்டின் பேப்பரின் ஒரு எழுத்தும் கண்ணுக்கு தெரியவில்லை. எழுந்து சென்றுவிடுவோமா என்னும் எண்ணத்தை அவளின் ஈகோ அடியோடு சாய்த்தது.

“என்ன இவனுக்கு பயந்து நீ ஒதுங்கி செல்வதா?...” என கேட்ட மனசாட்சியில் வீம்பாக அமர்ந்திருந்தாள்.

யாரின் பார்வையும் தன்னை ஒன்றும் செய்யமுடியாது. எந்த சூழ்நிலையிலும் தடுமாறவே மாட்டேன் என எண்ணியபடி மனதை ஒருமுகப்படுத்தி ஆன்சர் பேப்பரில் கவனமானாள்.

பத்து நிமிடங்கள் சென்ற பின் எழுந்த ரிஷி இங்கிருந்து கிளம்பத்தான் போகிறான். இதோ சென்றுவிடுவான் என்னும் நேத்ராவின் எண்ணத்தை தவிடுபொடியாக்கி அந்த வகுப்பறையை வலம் வந்தான்.

அனைவரின் அருகிலும் நின்று பார்வையிட்டவன் நேத்ராவின் அருகில் கூடுதலாக சில நொடிகள் செலவிட்டான்.

அவனின் அருகாமையில் மூச்சு முட்ட தத்தளித்தவள், “கிட்ட வராதே. தள்ளி போ தள்ளி போ...” என மனதிற்குள் ஜபித்து தன்னை சபிக்கவே ஆரம்பித்தாள்.

அவன் வந்து நின்றவுடன் எழுதிய இடத்திலேயே நின்ற பேனா முனை அவன் அங்கிருந்து அகலும் வரை ஒரு இஞ்ச் கூட அடுத்த எழுத்தை எழுத நகரவில்லை. அதை ரிஷியும் உணர்ந்துகொண்டான்.

நேராக சென்று மீண்டும் அமர்ந்தவன் தன் லேசர் பார்வையால் நேத்ராவை துளைக்க நேத்ராவும் உணர்ந்தாள்.

“என்னைய்யா அவாய்ட் பன்ற தக்காளி. இப்போ என்ன செய்வ?...” என்றபடி அவளையே பார்த்திருந்தவனில் விழிகளில் அவள் மீதான அத்தனை நேசம் கொட்டிக்கிடந்தது.

மெல்ல அவனை நிமிர்ந்து பார்க்க அவனின் பார்வையில் காதல் சொட்டியது. இருக்கும் இடம் மறந்து சுற்றிலும் இருப்பவர்களை மறந்து அவனையே பார்க்க அவளின் விழிகளை சிறைபிடித்தான் ரிஷி.

நாற்காலியில் நன்றாக சாய்ந்தமர்ந்து ஒரு கையால் மேவாயை தாங்கியபடி கண்கள் கனிய, உதடுகள் இளஞ்சிரிப்பில் நெளிய, அவனின் பார்வை ஊர்வலம் இவள் முகத்தை தாண்டி வேறெங்கும் கடக்காமல் பார்த்தது பார்த்தபடி அவன் அமர்ந்திருந்த விதம் நேத்ராவை பெரிதும் கவர்ந்தது.

தன்னுடைய மொத்த காதலையும் விழிவழியே அவளுக் கடத்த விழைய விழிவிசை ஈர்ப்பின் வேகம் தாளாமல் நேத்ராவின் கண்களுக்குள் உள்ள தவிப்பில் ரிஷிதான் உறைந்துபோனான்.

பெண்ணவள் தடுமாற்றத்தை சரியாக கணித்தவன் அப்போதே அவளிடம் தன்னை வெளிப்படுத்தி அவளை ஆறுதல்படுத்தினால் என்னவென்ற வேகம் பிறக்க அவனின் மனதின் ஓட்டத்தை படிக்கமுடியாமல் திகைத்து அமர்ந்திருந்தாள் நேத்ரா.

“இது என்ன புதுவகையான உணர்வு?...”

“சரியில்லை நேத்ரா. உன்னை மொத்தமாக சாய்த்துவிடும் இந்த உணர்வு...”

“இல்லை, நான் அந்தளவிற்கு பலவீனமானவள் இல்லை. இது கொஞ்சம் எனக்கு பிடிச்சுதான் இருக்குது...”

“ஆனாலும் தப்பு நேத்ரா. இந்த வியூகத்திலிருந்து விலகி வா...”

“விலக தோன்றா வசியம் இதில் இருக்கிறதே...”

“அது உன்னை மொத்தமாக அமிழ்த்திவிடும். உன்னை அவன் ஜெயித்துவிடுவான்...”

“இல்லை அப்படி நடக்காது...”

“நடக்கும் நிச்சயம் நடக்கும். அவனின் பார்வையிலிருந்து விலகு...”

“முடியவே இல்லை. என்னால் அவன் கண்களைவிட்டு வேறெங்கும் பார்வையை திருப்பமுடியவில்லை...”

நேத்ரா அறியாமலேயே ரிஷியின் மீதான அவளின் சலனம் கொஞ்சமாக வலுப்பெற துவங்கியது.

ஒரு முடிவிற்கு வரமுடியாமல் மனதிற்கும் புத்திக்குமான போராட்டத்தில் அலைகழிக்கப்பட்டு வெகுவாக களைத்துப்போனாள்.

நேத்ரா மொத்தமாக செயலிழந்த நொடி சிலீர் என்ற சப்தம் அனைவரையும் திரும்பிப்பார்க்கவைத்தது.

அதுவரை இருவர் மட்டுமே சுழன்ற உலகத்தின் மாயவலை அறுபட்டு நேத்ராவும் ரிஷியும் தன்னிலையடைந்தனர்.

சப்தம் என்னவென்று யாரென்று பார்க்க ரோஷிணி எழுந்துநின்றாள்.

“ஸாரி ஸார். என்னோட பாக்ஸ் தான். கை தவறி கீழே விழுந்துடுச்சு...” எனவும் ஒரு தலையசைப்புடன் அமர்ந்து எழுதுமாறு கையை காட்டிவிட்டு மீண்டும் அனைவரையும் பார்க்க ஆரம்பித்தான் ரிஷி.

கோபமாக அமர்ந்த ரோஷிணியின் மனம் நேத்ராவின் மீது பெரும் கோபம் கொண்டது.

தற்செயலாகத்தான் ரிஷியை நிமிர்ந்துபார்த்தாள் ரோஷிணி. அவனின் பார்வையிலும் அதில் வெளிப்பட்ட நேசத்திலும் துணுக்குற்றவள் தன் வகுப்பில் அவன் யாரை இப்படி பார்த்துவைக்கிறான் என அவன் பார்வை செல்லும் திக்கில் திரும்பிப்பார்க்க அதிர்ந்தேவிட்டாள்.

அதனினும் பெரிய அதிர்ச்சி தவிப்பும் கலக்கமுமாக அவனையே வைத்தகண் வாங்காமல் நேத்ராவும் பார்த்திருக்க இதை இப்படியே விட்டால் சரிவராது என்றெண்ணியே தன் டிபன்பாக்ஸை வேண்டுமென்றே கீழே தள்ளினாள்.

தேர்வில் நேத்ராவின் கவனம் சிதற ரிஷியை முறைத்துப்பார்த்தாள் ரோஷிணி. அவளை சரியாக கண்டுகொண்டவன் என்னவென பார்வையால் கேட்க இவனிடம் பேசி எதுவும் ஆகப்போவதில்லை என அமைதியாக தலையை குனிந்துகொண்டாள்.

இந்த டெஸ்ட்டை சரியாக நேத்ரா கம்ப்ளீட் செய்யாவிட்டால் அன்னலட்சுமியிடம் அவள் என்னவெல்லாம் பேச்சு வாங்கவேண்டியிருக்குமோ என எண்ணும் பொழுதே ரோஷிணிக்கு பதைபதைத்தது.

நேத்ராவினால் அதன் மேலும் அந்த தேர்வை நிறைவு செய்யமுடியும் என தோன்றவில்லை.

சிலநொடிகலேனும் அவனின் பார்வையில் கட்டுண்டு நின்ற தன் நிலையை வெறுத்தாள். அவனை வெறுத்தாள். அவனின் பார்வையை வெறுத்தாள். மொத்தத்தில் தன்னையே வெறுத்து நின்றாள்.

உணர்வுகளில் தாக்கம் தாளாமல் தலையை தாங்கிக்கொண்டு மேஜையில் சாய,

“வாட் ஹேப்பண்ட் நேத்ரா?...” என்ற ரிஷியை நிமிர்ந்து பார்த்தவள் அவனின் அக்கறையில், மீண்டும் கண்டுகொண்ட வசியப்பார்வையில், மயிலிறகாய் வருடும் விழி தீண்டலில் நேத்ரா மூச்சு விடவே திணற,

“வேண்டாம். இவனால் தான் நான் அடிக்கடி கலங்கி நிற்கிறேன். இவன் தனக்கு வேண்டவே வேண்டாம். என்னை பலகீனப்படுத்தும் அவனின் பார்வையும் வேண்டாம்...”

அவன் மீது தன் மனம் சாய்ந்துவிட்டதை அந்த நொடி உணர்ந்துகொண்டாள் நேத்ரா மிகுந்த வேதனையோடு.

“பொருந்தா நேசம். கைகூடா காதல்...” கசப்பாக முணுமுணுத்தது அவளின் இதழ்கள்.

முயன்று தன்னை நிலைப்படுத்தியவள் எழுதியவரை மடித்து அந்த விடைத்தாளை வேகமாக அவனிடம் கொண்டு கொடுத்தவள் அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

அவளின் தவிப்பிலும் தன்னை குற்றஞ்சாட்டும் பார்வையிலும் ரிஷிக்குமே பெரும் குற்றவுணர்ச்சியாக போனது.

முதல்நாள் நல்லவன் போல் அவளின் பெற்றோரிடம் தான் பேசியதென்ன? இன்று தன்னை தவிர்க்கிறாள் என அறிந்து வேண்டுமென்றே அவளை வம்பிளுக்கவென வந்து அமர்ந்து அவளின் கவனத்தை சிதறடித்ததென்ன என தன் மீதே மிகுந்த கோபமானான்.

சிறுபெண்ணின் மனதில் சலனத்தை ஏற்படுத்தியதை நினைத்து அவனாலே அவனை மன்னிக்கவே முடியாமல் போனது. அவள் தனக்கு வேண்டும் தான். அவளின் காதலும்.

ஆனால் அவனின் சிறு பார்வையை கூட ஏற்கமுடியாமல் நேத்ரா தனக்குள் போராடிய அந்த சில நொடிகளிலேயே அவளின் மனதில் தான் நுழைந்துவிட்டோம் என்று புரிந்துபோனது ரிஷிக்கு.

ஆனாலும் இந்த அவளின் போராட்டம் அவனுக்கு மிகுந்த வலியையும் கொடுத்தது. அவளின் படிப்பிற்கு தான் இடைஞ்சலாகி போனதை எண்ணி வருந்தியவன் நேத்ராவை பார்த்து பேச விரும்பினான்.

அன்னலட்சுமிக்கு அழைத்தவன் அவன் கொடுத்த வேலையை நாளை நிதானமாக பார்க்குமாறு சொல்லி வகுப்பிற்கு வர சொல்லியவன் நேத்ராவை தேடி உடனே சென்றான்.

யாருமற்ற தனிமையில் மரத்தினடியில் நிராதரவான தோற்றத்தில் ஓய்ந்துபோய் நேத்ரா அமர்ந்திருக்க அவளின் தோற்றம் ரிஷியின் காதல் கொண்ட உள்ளத்தை கசக்கி பிழிந்தது. அவளை நோக்கி வேகமாக சென்றவன்,

“நேத்ரா...” அவனின் அழைப்பில் சட்டென திரும்பியவள் விழிகளை சுருக்கி அவனை முறைத்தாள். அதை கண்டுகொள்ளாமல் ஒதுக்கியவன்,

“ஏன் பாதி எக்ஸாம்ல எழுந்து வந்திட்ட?...” என,

“அதை உங்ககிட்ட நான் சொல்லனும்னு அவசியமில்லை ஸார். எனக்கு பிடிக்கலை நான் எழுதலை...”

“இது கரெக்ட் ரீசனில்லை..” பிடிவாதமாக நகராமல் நின்றான்.

நேத்ராவிற்கு அவனின் இந்த பேச்சு சுத்தமாக பிடிக்கவில்லை. அவனின் அருகாமையில் நழுவத்துடிக்கும் அவளின் மனதை அதட்டி அரட்டி அடக்கிவைத்தாள்.

“என்னை விட்டுவிடேன்...” என இதயமோ அரற்ற அதை கொஞ்சமும் வெளிக்காட்டாமல்,

“அப்படியே காரணம் வேற இருந்தாலும் இது உங்ககிட்ட சொல்லனும்னு அவசியம் இல்லை...” முகத்திலட்டித்ததை போல சொல்ல,

“நல்லா படிக்கிற பொண்ணு இப்படி பாதி எக்ஸாம்ல எழுந்து வந்தா என்ன அர்த்தம்? அந்த அக்கறையில் தானே கேட்டேன். எந்த சூழ்நிலையிலையும் படிப்பிலிருக்கிற கவனம் சிதறவே கூடாது...” என்றவனை எரித்துவிடுவதை போல பார்த்தாள் நேத்ரா.

கல்லூரியை பொறுத்தவரை நேத்ராவின் விஷயங்கள் அனைத்தும் அத்துப்படி ரிஷிக்கு. அவளின் ஹெச்ஓடி மூலம் தெரியவந்த அவளின் படிப்பின் விகிதமும் பாராட்டும் படியாகவே இருந்தது.

“என் கவனம் சிதறினதுக்கு காரணமே நீதானேடா. இப்போ வந்து வியாக்கியானம் பேசற?...” இதை அப்படியே சொல்லிவிட அவளின் வாய் பொடுபொடுவென வந்தது.

“நான் நல்லா படிச்சா என்ன? படிக்கலைனா என்ன? என்னை விட்டுடுங்க ஸார். ப்ளீஸ். எனக்கு மனசு சரியில்லை. அதான் எழுதமுடியலை. போதுமா?...”

ரிஷியிடமிருந்து தப்பிக்கும் மார்க்கம் தெரியாமல் அவனிடம் காய்ந்துவிட்டு மேலும் அங்கிருந்தால் இன்னும் ஏதாவது உளறிவிடுவோமோ என அஞ்சி எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.

சிலநாட்களாக அவனால் அலைக்கழிக்கப்பட்ட உணர்வுகளால் இன்று தன் மனதின் விருப்பத்தை அதன் போக்கை உணர்ந்ததும் மொத்தமாக உணர்ச்சிக்குவியலாய் மாறியிருந்தவளுக்கு தன் மீதே ஆத்திரம் மேலோங்கியது.

வேக நடைபோட்டு செல்லும் அவளையே பார்த்திருந்தவன்,

“நிச்சயம் என்னால உன்னை விடமுடியாதுடா. என்னை விட்டு விலகனும்னு நீ நினைக்கிறதை கூட நான் அனுமதிக்கமாட்டேன். யூ ஆர் மைன் நேத்ரா...”

“உனக்குள் நான் வந்துட்டேன்னு எனக்கு தெரிஞ்சிருச்சுடி ராட்சஸி. ஆனா உன்னோட பாழாப்போன ஈகோ அதை ஒத்துக்கவிடமாட்டிக்கு. உன்னோட காதலை கண்டிப்பா ஒருநாள் நீயே சொல்லுவ. அதுக்காக நான் காத்திட்டு இருப்பேன் நேத்ரா...”

“நானா என் காதலை சொன்னாலும் இப்போ நீ ஒத்துக்கற நிலமையில இல்லைடி. அதுக்காக சொல்லாமலோ, உன்னை விட்டு விலகியோ போய்டுவேன்னு கனவுல கூட நீ நினைக்காதே...” சிறு முறுவலோடு பார்த்தபடி அங்கேயே நின்றான்.

அவளை போர்த்தியிருக்கும் கோபமெனும் மேகம் நிச்சயம் ஒருநாள் விலகும் என்று நம்பினான்.

இரவின் கருமையில் இருள் என்னும் திரையை விலக்கி கொள்ளை கொள்ளையாக வெளிவரும் நட்சத்திர கூட்டம் போல என்றாவது ஒருநாள் நேத்ராவினுள் பிடிவாதம் என்னும் மனத்திரையால் மூடிவைத்த தன் நேசம் நிலவென சுடர்விட்டு ஒளிரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று காத்திருக்க ஆரம்பித்தான் ரிஷி.

அவனின் ஆசை அவ்வளவு எளிதில் நிறைவேற போவதில்லை என்பதும் அவனுக்கு தெரியாது. நேத்ராவும் அவ்வளவு எளிதானவள் இல்லை என்பதையும் அவன் உணராது போனான்.

அலை தீண்டும்...

Wonderful
 
Nice
 
Top