Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

AshrafHameedaT

Administrator
அலை – 19

நேத்ராவிடம் பேசியதும் மனம் முழுவதும் நிர்மலமான ஒரு உணர்வு. தெளிவான மனநிலையோடு வீட்டினுள் இரவு நுழைந்தான் ரிஷி.

நேரே சென்று சாப்பிட அமர்ந்தவன் உண்டு முடித்து வரும் பொழுது சிவராமன் இவனுக்காக காத்திருப்பதை போல தெரியவும் அவரை நோக்கி சென்றான்.

“ஹேட் யூ டின்னர் ரிஷி?...” ரிஷிக்கு பிடித்தவிதமாக தனக்கே உரித்தான கம்பீரகுரலில் கேட்க அவரை மெச்சிக்கொண்டான் ரிஷி.

“பினிஷ்ட் டாட்...” என்றுவிட்டு சாய்வாக அமர்ந்தவன்,

“என்ன கேட்கனும் டாட்? நேத்ராவை பார்த்தீங்களா?...”

சட்டென விஷயத்தை பிடித்துகொண்ட மகனை பார்வையால் பெருமிதமாக வருடியவர் ஆமோதிப்பாக தலையசைத்தார்.

“வாங்க அப்டியே சும்மா ஒரு வாக் போய்ட்டே பேசலாம்...” என தானும் எழுந்து தந்தையும் எழும்ப கைகொடுத்தான். அவனின் கரத்தை பற்றியவாறு எழுந்து அவனுடன் இணைந்து நடக்க ஆரம்பித்தார்.

“திருச்சியில என்னோட பார்த்த பொண்ணு தான் நேத்ரா. நானே எக்ஸ்பெக்ட் பண்ணாதது அவளையே தாத்தா எனக்காக பார்த்திருப்பாருன்றது தான். ஆனா ஒரு விஷயம் அப்பா...” என்றவனை சொல்லிமுடிக்கட்டும் என பார்த்திருந்தார் சிவராமன்.

“நேத்ராவை முதல் முறையா பார்க்கிறப்போ நீங்க நினைக்கிறது போல நான் அவளை விரும்பலை. இதை நான் உறுதியா சொல்லுவேன். ஆனா அவ மேல எனக்கு அப்போ இருந்தே ஏதோ ஒரு க்ரேஸ் இருந்திருக்கனும்...” என சொல்லி,

“ப்ளீஸ் டாட். என்னை புரிஞ்சுக்கோங்க. இதுல நான் எதுவுமே ப்ளே பண்ணலை. நான் எதையும் உங்ககிட்ட இருந்து மறைக்கவும் இல்லை...”

குரலில் அத்தனை தீர்க்கம் நிரம்பி இருந்தது. மனதை மறையாமல் கூறிய மகனை அணைத்து விடுத்த சிவராமன்,

“ஓகே ரிஷி. நீ போய் தூங்கு. ஆனா பாரு நீ அந்த பொண்ணை ரொம்ப படுத்தாம இரு. பாவம் சின்ன பொண்ணு...” என சொல்ல,

“திரும்பவும் ஒரு எக்ஸ்ப்ளநேஷன். நீங்க தாங்குவீங்களோ இல்லையோ நான் டயர்ட் ஆகிட்டேன். சோ உங்க சுமாக்கிட்டையே கேட்டுக்கோங்க சின்னபொண்ணு பத்தி...” என புன்னகை விரவிய முகத்தோடு துள்ளியபடி உள்ளே சென்றான்.

அவனையே பார்த்திருந்தவர் பெரிய யோசனைக்கு பின் தன்னுடைய அண்ணன் உசிதமணிக்கு அழைத்தார் சிவராமன். நான்காவது ரிங்கில் அழைப்பு எடுக்கப்பட,

“என்னப்பா இந்த நேரத்தில? இன்னும் தூங்கலையா நீ?...” அன்பு பெருக்கெடுக்கும் குரலில் அண்ணன் அவர் கேட்க,

“இல்லைங்க அண்ணா. உங்களை தொந்தரவு செஞ்சுட்டேனோ?...”

“ச்சே ச்சே என்ன இது? எம்ட்டு தம்பியாரு பேச எனக்கு என்ன தொந்தரவா போய்டுது? சும்மா கணக்குவழக்கு பார்த்துட்டு தான் இருந்தேன். உன்னோட குரலே வெசனமா கெடக்கே? என்னய்யா?...” என்று வாஞ்சையாக் கேட்டதும் சிவராமன் நெக்குருகிப்போனார்.

“அண்ணே நம்ம ரிஷிக்கு பார்த்திருக்கிற பொண்ணு...” என தயங்க,

“திலகம் போட்டோவை காமிச்சது. அட அத நெனச்சுதான் நீ வருத்தமா இருக்கியோ? நம்ம புள்ளையை பத்தி நமக்கு தெரியுமே. அப்படியே இருந்தாலும் இதுல தப்பென்னைய்யா? அந்த பொண்ணுதான் மருமகளா வரனும்னு கடவுள் சித்தம் இதுவாதான் இருந்திருக்கு...”

“கடவுள் சந்நிதியிலையே நம்ம கண்ணுல ரிஷியோட வூட்டம்மாவை காமிச்சது நம்ம குலசாமி விருப்பம் போல. ஐயாக்கிட்ட இது எதுவும் பேசிட்டு இருக்காத...”

தனது தம்பியின் தயக்கத்தை போக்கி தன் தோளில் அவரை தயங்காமல் தாங்கிக்கொண்டார் உசிதமணி.

“சந்தோஷமா கல்யாண சோலியை பார்ப்போம். வார வெள்ளிக்கிழமை நாள் நெறஞ்சு இருக்காம். நிச்சயத்துக்கு தேதி குறிக்க தேவகோட்டை ஜோசியர் வீட்டுக்கு வராரு. ஐயா நாளைக்கு உனக்கு சேதி சொல்லனும்னு சொல்லிட்டு இருந்தாரு. பார்த்து கிளம்பி வாங்க...” என்றவர்,

“சாப்பிட்டையா?...” என,

“ஆச்சுண்ணே...”

“அப்போ போய் படு. தம்பிக்கிட்ட இப்படி முகத்தை வச்சுக்காதே. நம்ம புள்ள மனசும் வாடிடும்ல...” என சொல்லி அழைப்பை துண்டித்துவிட சிவராமனுக்குதான் இன்னமும் குற்றவுணர்வாக போயிற்று.

“எப்படியும் தன் அண்ணனிடமாவது இந்த விஷயத்தை சொல்லிவிடவேண்டும். இல்லையென்றால் என்னையே என்னால் மன்னிக்க இயலாது...” என நினைத்துக்கொண்டார்.

நாள்குறிக்கும் விஷயம் சசுமங்கலியிடம் சிவராமன் கூற அந்நேரமென பார்த்து ரிஷியின் ஜோசியரை கரெக்ட் செய்யும் பேச்சு நினைவு வந்து அவருக்கு சிரிப்பை மூட்டியது. ஆனாலும் ரிஷிக்கு இதை தெரியப்படுத்த மறக்கவில்லை அவர். அவனும் தனக்கு வாய்ப்பாக ஆவன செய்தும்விட்டான்.

நேத்ராவின் திருமணம் பற்றிய செய்தி தோழிகள் நால்வருக்கும் சொல்லப்பட அனைவரும் மகிழ்ந்துபோயினர். நால்வர் குழுமில் ஐவராக சைந்தவியும் இணைந்துகொள்ள அவர்களின் கொண்டாட்டத்திற்கு அளவில்லாமல் போனது.

பெரியசாமியை பற்றி தோண்டித்துருவி விசாரிக்காமல் அவளாக சொல்லட்டும் என விட்டுவிட்டனர்.

ஆகிற்று ஒருமாதம் கடந்துவிட்டது. எப்படி தாண்டினாள் என்பது இன்றளவும் அவளுக்கு தெரியவில்லை.

தோழிகளோடு சூழ்ந்து இருந்தாலும் தனக்குள் ஒரு தனிமை அதில் வெறுமை என உள்ளுக்குள் ஓய்ந்துகொண்டிருந்தாள். அவளின் விழிகளில் தெரிந்த வெறுமையில் துணுக்குன்றான் ரிஷி.

இவளது ஹாஸ்டல் ரூம் மாற்றப்பட்டது. தோழிகள் ஐவரும் ஒரே அறையில் இருப்பதை போல ஏற்பாடானது.

எப்படி இப்படி என எதையும் ஆராயும் மனநிலை ரோஷிணியை தவிர்த்து வேறு எவருக்கும் தோன்றவில்லை.

இது எதிலும் ரிஷி இருப்பான் என எண்ணமுடியாத அளவிற்கு கச்சிதமாக காயை நகர்த்தினான் ரிஷி. ஆனாலும் ரோஷிணியின் சந்தேக பார்வை ரிஷியை தொடர்ந்துதான் இருந்தது.

அதை அவன் உணர்ந்தாலும் எதையும் கண்டுகொண்டதாக காட்டிக்கொள்ளாமலே நாட்களை நகர்த்தினான். என்னதான் அவர்களை தவிர்த்தாலும் நேத்ராவை தன் கண்பார்வையிலேயே தான் வைத்திருந்தான்.

எந்த சூழ்நிலையிலும் அவளுடன் பேசவோ அவள் முன் எதிர்ப்படவோ முயலவில்லை. ஆனாலும் இவன் விழிகளுக்குள் அவள் பிம்பம் ஊஞ்சலாடியபடி.

எத்தேர்ச்சையாக எதிர்பட்டாலும் கவனியாதது போலவே கடந்துவிடுபவனின் மனம் அவளிடம் ஒருநொடியாவது மண்டியிட கெஞ்சத்தான் செய்யும்.

எப்பொழுதும் போல் சிரித்தமுகமாகவே வளையவரும் நேத்ரா தான் உள்ளுக்குள் பொங்கிவரும் தவிப்பை அவனின் ஒதுக்கத்தை ஒருவித ஆற்றாமையோடு வெளிவராமல் விழுங்கிகொள்வாள்.

அதிலும் ரிஷியின் பார்வை இவளை கொல்லாமல் கொன்றதென்னவோ உண்மை தான்.

நேத்ராவை காணும் பொழுதெல்லாம் முன்பின் அறியாதவள் போன்ற ஒரு உணர்வில்லா வெற்றுபார்வையை செலுத்த அது நேத்ராவினுள் நஞ்சென இறங்கி நெஞ்சமெல்லாம் வலியை பரப்பியது.

“நேத்ரா இப்போலாம் நீ ஏன் எதையோ பறிகொடுத்ததை போலவே இருக்க?...” என வனமலர் கூட கேட்டுவிட அன்றிலிருந்து தன்னை முன்பை விட பிஸியாகவும் கலகலப்பாகவும் குறும்பாகவும் மாற்றிக்கொண்டாள்.

ரோஷிணிக்கு அவளது அமைதியின் காரணம் தெரிந்திருந்தாலும் அவளிடம் அதைப்பற்றி கேட்கவும் இல்லை, வேறு எவருடமும் பகிரவும் இல்லை. அதற்கு காரணம் நேத்ராவின் தற்போதைய சிறு மலர்ச்சி.

ஆம். ரிஷியின் பாராமுகமும் தன் காதலும் கொடுத்த சோர்வை பெரியசாமியுடனான நட்பு அழகாய் கடக்கச்செய்தது.

அவனுடனான தோழமையில் உண்மையில் நேத்ரா மகிழ்ந்துதான் இருந்தாள். எதையும் அவனிடம் பகிர்ந்துகொள்ளும் அளவில் அவர்களின் நட்பு நாளுக்குநாள் முன்னேறியவண்ணம் தான் இருந்தது.

முதல்நாள் திருமணம் பற்றி பேசியவன் அதன் பின் அதை மறந்தவன் போல பொதுவான விஷயங்களையும் தங்கள் ரசனைகளையும் பற்றி மட்டுமே எந்தவித நிர்பந்தமும் இன்றி பகிர்ந்துகொண்டனர்.

முதலில் தயக்கத்தோடு அவனிடம் பழக ஆரம்பித்தவள் பின் அவனின் அழைப்பை விரும்பியே ஏற்றாள். எல்லைகளை தண்டாத அவர்களின் பேச்சு புரிதலில் ஆரம்பித்து அவர்களின் நட்பு என்னும் மலர் மலர்ந்து மனம் பரப்பியது.

முதல் முதலில் அவனின் குரலில் ஏற்பட்ட தடுமாற்றமும் தள்ளாட்டமும் அதன் பின்னான பேச்சில் சிறிதும் இல்லாது போனது நேத்ராவிற்கு.

அவளை அவன் புரிந்துகொண்டானோ, இல்லை தன்னை வெளிப்படுத்திவிடக்கூடாது என்னும் கவனம் கொண்டானோ அந்த வசியக்குரல் அதன் பின் நேத்ராவை அடையவே இல்லை. வெகு சாதாரணமான குறும்பான பேச்சுக்கள் மட்டுமே அவனிடம் அவளிடத்தில்.

எத்தனை பேச்சுக்கள் வார்த்தை பரிமாற்றங்கள் இருந்த போதும் பெரியசாமியுடனான தன் திருமண ஏற்பாட்டை எப்படி தவிர்ப்பது என்ற சிந்தனை இல்லாமல் இல்லை.

ஆனாலும் அதை செயல்படுத்த ஏனோ தோன்றவும் இல்லை. தோன்ற பெரியசாமியான ரிஷி விடவில்லை. திருமணம் பற்றிய பேச்சுக்கள் இருந்தால் தானே வாக்குவாதமும் ஏற்படவும் மறுப்பும் சொல்ல?

இன்னும் ஒரு வருடம் முழுதாக உள்ளதே? அதற்குள் வழி ஒன்று கிட்டாமலா போய்விடும் என்னும் அலட்சியம் ஒருபுறம் இருந்தாலும் பெரியசாமியின் நட்பை இழக்க ஏனோ மனம் வரவில்லை.

அந்தளவிற்கு அவளின் ஆத்மார்த்தமான உற்ற தோழனாகவே மாறிவிட்டான் ரிஷி பெரியசாமியாக. தோழனாக மட்டுமே.

மாதங்கள் உருண்டோடி இதோ இன்று அந்த கல்லூரியின் ஆன்வெல் பங்க்ஷன்.

ரோஜாவண்ண லெஹெங்காவில் அழகுற தேவதையென மனம் கொள்ளை கொள்ள நடமாடியவளின் புறம் கண்களை திருப்பாமல் இருக்க அவள் மேல் விழி பதிக்காமல் நடக்க வெகுவாக சிரமம் கொண்டான்.

“இதென்ன அவஸ்தை? இத்தனை நாட்களை விட இன்று அவனை சோதிக்கவென ஓயாமல் தன் முன்னால் தென்படுவது தற்செயலா இல்லை வேண்டுமென்றா என புரியாமல் தன் கட்டுப்பாடுகளில் இருந்து இடறித்தான் போனான் கொஞ்சமே.

தன் மீது பட்டு மீளும் அவனின் பார்வைக்கனைகளை உள்வாங்கிக்கொண்டாலும் அதன் பிரதிபலிப்பு எதுவுமின்றி நடந்துகொண்டாள் நேத்ரா.

இனி தன்னை ரிஷி பாதிக்காதவண்ணம் இதயத்தை வேலியிட்டு அமர்த்திய பின் ஓரளவிற்கு தெளிவாகவும் இருந்தாள்.

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அவளளவில் மிக சந்தோஷமான மனநிலையில் தான் சுற்றிக்கொண்டிருந்தாள்.

தன்னுடைய தோழிகள் பட்டாளத்தோடு மேலும் சில கூட்டத்தை கூட்டியபடி அந்த கல்லூரி வளாகத்தையே கலகலப்பால் கிடுகிடுக்க வைத்துக்கொண்டிருந்தாள்.

ரிஷியின் குடும்பத்தோடு உசிதமணி, திலகாவும் அவர்களோடு காவேரியின் குடும்பமும் சேர்ந்து வர ரிஷிக்கு அது பிடிக்கவில்லை எனதரு அவனின் முகமே காட்டியது.

“மாம், என்ன இது பங்க்ஷனுக்கு எதுக்கு அவங்க வீட்ல இருந்து வந்திருக்காங்க?...” என சுமங்கலியிடம் காய்ந்தான்.

“ரிஷி கண்ட்ரோல் யுவர் செல்ஃப். அப்பாதான் இன்வைட் பண்ணியிருக்காங்க. நம்ம அவங்களுக்கு ரெஸ்பெக்ட் குடுத்துதான் ஆகனும். போய் அத்தை மாமாவை பார்த்து பேசு...” என அவர்களின் புறம் தள்ளினார்.

திலகாவோடு அவர்களை நோக்கி ரிஷி செல்ல இவனின் வருகையை கண்ட காவேரி,

“அப்பா என்னோட ப்ரெண்ட் இங்கதான் பிஜி பன்றா. நான் போய் அவளை பார்த்துட்டு வரேன்...” என்றபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.

அவள் செல்வதை கண்டு நிம்மதியான உணர்வில் தன்னுடைய அத்தை மாமாவை பார்த்து பேசிக்கொண்டே உள்ளே அழைத்து சென்றான் ரிஷி.

தன்னுடைய தோழிக்கு கால் செய்த காவேரி அவளை தன்னை பார்க்க வருமாறு சொல்லிவிட்டு அங்கேயே காத்திருக்க அப்போதுதான் நேத்ராவை கண்டாள்.

பார்த்ததும் வெறுப்பிலும் கோபத்திலும் அவளை எரிப்பதை போல கண்டுவிட்டு மறுபுறம் திரும்பிக்கொண்டாள். அவள் கோபத்தில் எண்ணெய்யூற்றுவதை நேத்ராவின் அழகு இவளை பொறாமைக்குள்ளாக்கியது.

சுமங்கலி திலகாவிற்கு நேத்ராவின் போட்டோவை அனுப்பியதும் அவர்களின் குடும்பத்தில் அது ஒரு சுற்று சுற்றித்தான் வந்தது. அப்படி இருக்கையில் காவேரிக்கு தெரியாமலா போய்விடும்?

நேத்ராதான் ரிஷியின் எதிர்கால மனைவி என்பதை அறிந்ததும் சுறுசுறுவென ஏறியது அவளுள். காதலே கூடாதென்று கட்டுப்பாட்டை ரிஷி மட்டும் உடைக்கலாமோ என்னும் கோபம் வன்மமாக தொடங்க கிளம்பிவிட்டாள் தத்தா வீட்டிற்கு.

சென்ற நேரம் உசிதமணியும் அங்கிருக்க அவரிடம் நியாயம் கேட்கிறேன் பேர்வழி என்று வாங்கிக்கட்டிக்கொண்டது தான் மிச்சம். கடுமையாக எச்சரித்தே அனுப்பினார் உசிதமணி காவேரியை. அதில் இவளுக்கு இன்னமும் கோபம் கூட.

யாரும் எப்படியும் போகட்டும் என்று நினைத்தலும் ஏனோ இந்த சம்பந்தம் அவளை எரிச்சலுக்குள்ளாக்கியது. இது விஷயமாக வீட்டில் பேச்சு அடிபடும் போதெல்லாம் அங்கிருந்து எங்காவது ஓடிவிடத்தான் நினைத்தாள்.

“ஹேய்ய்ய்ய்....” என்ற ஆர்ப்பாட்டமான குரலில் பதறி திரும்பியவள் மேலும் அதிர்ச்சியானாள். அங்கே முகம்கொள்ளா புன்னகையோடு நேத்ரா.

“என்னை தெரியலையா? நான் நேத்ரா. நாம ஏற்கனவே திருச்சியில மீட் பண்ணியிருக்கோம்...” தன்னை ஞாபகப்படுத்த முயல அவளை வெறித்தாள் காவேரி.

“ஹைய்யோ காவேரி உங்களை நான் இங்க பார்ப்பேன்னு சத்தியமா நினைக்கவே இல்லை. யூ ஆர் சோ பியூட்டிஃபுல். உங்க மொபைல் தாங்களேன் நாம ஒரு செல்பி எடுத்துப்போம்...”

நேத்ராவின் பேச்சில் சத்தியமாக காவேரி தான் குழம்பி போனாள்.

“தான் இவள் மேல் கொண்ட கோபம் என்ன? இப்பொழுதும் இவளை கண்டு பற்றி எரியும் தன் உணர்வு புரியாமல் விளையாடுகிறாளே? இவள் நிஜமாகவே தன்னை புகழ்கிறாளா இல்லை கலாய்க்கிறாளா?...” என யோசனைக்குள்ளானாள்.

நேத்ரா தன்னிடம் பேசியது பாராட்டா பரிகாசமா என புரியாத குழப்பத்தின் உச்சிக்கே சென்றாள் காவேரி.

அவளை யோசிக்கவிடாமல், “இந்த ட்ரெஸ் உங்களுக்கு ரொம்பவே ஆப்ட்டா இருக்கு. உங்களுக்கே உங்களுக்குன்னு ரொம்ப பொருத்தமாவும்...” நேத்ராவின் குரலில் உண்மையான சில்லாகிப்பு தெரிய கொஞ்சம் சிலிர்த்துத்தான் போனாள் காவேரி.

சௌந்தர்யமான அழகில் மிளிர்ந்து தன்னையே பொறாமை கொள்ளவைக்கும் அழகோடு இருந்தவள் தன்னை அழகி என பாராட்டவும் காவேரியின் கோபமெல்லாம் பகலவன் தீண்டிய பனியாய் மறைந்துபோனது.

நேத்ராவின் மீது லேசாக துளிர்விட தொடங்கிய நல்லெண்ணம் அவளிடம் பேச தூண்டியது.

“தேங்க்ஸ்...” வாயெல்லாம் புன்னகையாக காவேரி கூற,

“ஹைய்யோ சிரிக்கிறீங்களே? செமையா இருக்கீங்க நீங்க ஸ்மைல் பன்றப்போ...” என கூறி மேலும் காவேரியை பனிக்கூட்டத்தின் நடுவில் நிற்கவைத்தாள் நேத்ரா.

“போட்டோ எடுப்போம்னு சொன்னீங்களே? வாங்க...” என்று நேத்ராவை தானாகவே அழைக்க தன்னுடைய தோழிகளை அறிமுகம் செய்து அனைவரும் சேர்ந்து ஒரு செல்பி எடுத்துக்கொண்டனர்.

சில நிமிட பேச்சுக்கள் வளர்ந்ததும், “உங்க ட்ரெஸ் கூட உங்களுக்கு அழகா இருக்கு. நீங்க இன்னைக்கு என்ன போட்டியில கலந்துக்கறீங்க நேத்ரா?...” என கேட்க,

“என்ன போட்டியில நாங்க கலந்துக்கறதா? நோ வே...” என்றவள்,

“நாங்க போட்டியில கலந்துக்கிட்டா யார் வேடிக்கை பார்க்கறது? யார் கலாய்க்கிறது? யார் மார்க் போடறது? நமக்குன்னு இருக்கிற எங்களையும் நம்பி குடுத்திருக்கிற பெரிய பொறுப்பை தட்டிக்கழிக்கிறது பெரிய தவறு இல்லையா?...”

முகத்தை சாய்த்து விழிகளில் குறும்பு மின்ன காவேரியிடம் கேட்க அவள் வாய்விட்டே சிரித்துவிட்டாள். நேத்ராவின் பேச்சு காவேரியை பெரிதும் கவர்ந்தது.

ஒரே ஒருமுறை பார்த்த தன்னை ஞாபகம் வைத்து எந்தவித பந்தாவும் இல்லாமல் பேசும் நேத்ராவை தனிப்பட்ட முறையில் அவளுக்கு நிரம்பவும் பிடித்து போனது. அவளிடம் நட்பு பாராட்டவே ஆசைகொண்டாள் காவேரி.

“அதுசரி. எதிலையும் கலந்துக்காம இருக்க இது ஒரு காரணமா?...” என,

“நீங்க உங்க மாம்ஸை பார்க்க அதான் எங்க கரெஸ் ஸார். அவரை பார்க்க காலேஜ் பங்க்ஷனை காரணம் காட்டி வரும் போது நாங்க இதை காரணம் சொல்லக்கூடாதா?...” என நேத்ரா விளையாட்டுப்போக்கில் கூறிவிட காவேரியின் முகம் மாறியது.

“எனக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகிருச்சு நேத்ரா...” என நேத்ராவின் முகம் பெரும் அதிர்வை உள்வாங்கியது. ரத்தபசையின்றி வெளுத்த முகத்தை நொடியில் மறைத்து புன்னகைத்தவள்,

“வாவ், சூப்பர் போங்க. வாழ்த்துக்கள். ரிஷி ஸார் ரொம்ப லக்கி...” என காவேரியின் கைகளை பிடித்து குலுக்க நேத்ராவின் வெளிறிய முகத்தை காவேரி புரியாமல் பார்க்க ரோஷிணி கவலையாக பார்த்தாள்.

“இவளுக்கு என்னவாகிற்று?...” என்ற யோசனையோடு,

“நேத்ரா நீங்க தப்பா புரிஞ்சிட்டீங்க. என்னோட பியான்சி பேர் மனோஜ்...” என்க நேத்ராவின் விழிகளில் மின்னல்கள் பல கோடிட, முகம் நொடியில் வர்ணஜாலத்தையும் காட்டியது.

“என்ன என்ன சொல்றீங்க?. நீங்க...” என கேட்க அதற்குள் காவேரியின் தோழி அவளை தேடி வந்திருந்தாள்.

“ஓகே நேத்ரா ஸியு. கேட்ச் யூ லேட்டர்...” என்றபடி நகர பிரம்மையில் சிக்கியதை போல் அப்படியே நின்றிருந்தாள்.

அதற்குள் அன்னலட்சுமி இவர்களை அழைப்பதாக ஒரு பெண் வந்து கூப்பிட அவர்களை அனுப்பிய நேத்ரா கேண்டீன் நோக்கி சென்றாள்.

யோசனையினூடே செல்ல எதிரில் வந்தவனை கவனியாமல் நடக்க அவனோ வழிமறித்தான். அவனை கண்டதும் ஹைய்யோவென்றானது நேத்ராவிற்கு.

“ஹாய் நேத்ரா. யூ லுக் கார்ஜியஸ் யா...” என வழிய அவனிடமிருந்து தப்பித்தால் போதும் என்று,

“தேங்க்ஸ் சுபாஷ்...” என நகர,

“உன்கிட்ட சொல்லனும் நேத்ரா. நான். ம்க்கும். ஐ லவ் யூ...” என்று ஒரு பொக்கேயை அவள் புறம் நீட்ட எரிச்சலாகியது நேத்ராவிற்கு.

தன்னுடைய கல்லூரியில் எம்.காம் முதலாம் வருடம் பயிலும் மாணவன் அவன். வெகு நாட்களாக அவள் பின் அவன் திரிவதை உணர்ந்தே ஒதுங்கியே இருந்தாள்.

“நேத்ரா என்ன சைலண்டா அப்டியே ஸ்டன் ஆகி நின்னுட்ட?...” என்று அவளருகில் நெருங்க அவனின் கையிலிருந்த சிவப்பு வண்ண ரோஜா பூங்கொத்து சட்டென பறிக்கப்பட்டது.

திரும்பினால் அங்கே ருத்ரனாய் ரிஷி. கோபக்கனல் அனலென நேத்ராவை சுட்டாலும் அவளோ அவனை பார்த்துவிட்டு வேறுபுறம் திரும்பிக்கொண்டாள்.

“இதுக்குத்தான் நீ காலேஜ் வந்தியா மேன்? கோ தட் சைட்...” என மிரட்ட அவனின் விழிச்சிவப்பில் மிரண்டுபோன மாணவன் அங்கிருந்து இருக்கும் தடம் தெரியாமல் ஓடியேவிட்டான்.

நேத்ராவின் புறம் திரும்பியவன், “நாளை மறுநாள் என் ரூம்ல வந்து பாரு. நீ வர. வரனும்...” என வார்த்தைகளை பல்லிடுக்கிடையில் கடித்துத்துப்பியவன் அங்கிருந்து நகர்ந்துவிட்டான்.

“அட போடா கட்டுமரம். நீயும் உன் ஸீனும்...” என எண்ணாமல் இருக்கமுடியவில்லை நேத்ராவால்.

அவன் அப்புறம் நகரவும் கல்லூரியில் தெரிந்தவரிலிருந்து இதை அகண்ட அனைவரும் இதையே கேட்க நேத்ரா நொந்து நூடுல்ஸ் ஆனது தான் மிச்சம்.

துக்கம் விசாரிப்பதை போல சிலரும், சுபாஷே உனக்கு ப்ரப்போஸ் பண்ணிட்டானா? என்று சிலரும், நேத்ராவையே வாயடைக்க வச்சு ப்ரப்போஸ் பண்ணிருக்கான் என்று சிலரும் அவர்களின் விருப்பம் போல கொளுத்திவிட எங்காவது தனியாய் போய்ட்டா தேவலை என்றானது நேத்ராவிற்கு.

இன்னும் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்க நேரமிருக்க யாரின் தோழிகளின் வருகையும் தெரியாததால் அவர்களை தேடி இவள் செல்ல அறுவை கேஸ் என்றழைக்கும் பெண்ணொருத்தி நேத்ராவை தேடி வந்துகொண்டிருந்தாள்.

நிமிடத்தில் மூக்குடைப்பதை பதில் சொல்லிவிட நேத்ராவால் முடியும் தான். இன்றைய மனநிலை அவளுக்கு ஈடுகொடுக்காமல் போக்குக்காட்ட அறுவையிடமிருந்து தப்பி அன்னலட்சுமியை தேடி ஸ்டாப்ஸ் ரூம் பக்கம் வந்திருந்தாள்.

“ஹைய்யோ ராமா இந்த கொசுத்தொல்லை தாங்கலையே ராமா?...” என புலம்பிக்கொண்டே திரும்பி திரும்பி பார்த்து வந்தவள் எதிரில் இருப்பவரை கவனியாது சத்தமாக சொல்லிவிட அவர் அதிர்ந்துபோய் நின்றிருந்தார்.

“ஹைய்யோ திரும்பவும் இவரா?. கட்டுமரம் ரிலேஷன் வேறையாச்சே...” என தலையில் கைவைத்து அவரை நெருங்கினாள்.

“ஸார் ரொம்ப ரொம்ப ஸாரி ஸார். நான் வேணும்னு சொல்லலை. அங்க ஒரு ரம்பம் என்னை தேடிட்டு இருக்கு. அவளை தான் சொன்னேன். ஆனா ஏனோ நான் இதை சொல்லும்போதெல்லாம் நீங்க வந்து நிக்கிறீங்க. என்ன டிசைனோ தெரியலை ஸார்?...”

அவரருகில் வந்து மெல்லிய குரலில் பாவமாக சொல்லிய நேத்ராவை கண்டு மனதில் புன்னகைத்த சிவராமன் முகத்தில் காண்பித்துக்கொள்ளாமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.

“ஹப்பாடா...” என்று திரும்பிய நேத்ரா மீண்டும் ரிஷியை கண்டாள் அக்கினி ஜ்வாலையாய் அவன்.

“இவன் வேற அப்பப்ப வந்து அய்யனார் சிலை மாதிரி முறைச்சு பார்த்துட்டே ஷாக் குடுக்கிறது? இப்ப எண்ணத்தை சொல்ல வந்திருக்கானோ?...” என ஆயாசமானது.

அவனிடம் பேச்சுக்கொடுக்காமல் அவனை தாண்டி செல்ல அவளை தடுக்கவென கையை பிடித்தான்.

“ஏய்...” என,

“இன்னொருதடவை ஏய்ன்னு சொன்னீங்க நல்லா இருக்காது சொல்லிட்டேன். என்னை என்னனு நினைச்சீங்க? எனக்குன்னு பேர் இருக்கு. உங்க காலேஜ்ல படிச்சா நாங்க என்ன உங்களுக்கு சர்வன்ட்டா? இல்லை அடிமையா?...”

பொரிந்து தள்ளிய நேத்ராவை கோபம் குறையாமல் தான் பார்த்திருந்தான் ரிஷி. ஆனால் இன்னும் அவளின் கை அவனின் பிடியிலேயே இருக்க அது பிடிக்காதவள்,

“கையை விடுங்க ஸார். எதுவானாலும் டச் பண்ணாம பேசுங்க...” என்ற வார்த்தையில் தானாக தன் பிடியை தளர்த்தி அவளை விட்டு விலகி நின்று,

“அவர் யாருன்னு தெரியுமா உனக்கு?...” என ரிஷி கோபமாக கேட்க,

“அதை தெரிஞ்சு எனக்கொண்ணும் ஆகப்போறதில்லை ஸார். எனக்கு போகனும் வழியை விடுங்க...” நேத்ரா பிடிவாதமாக அங்கிருந்து நகரவிழைய,

“நேத்ரா முதல்ல இப்படி அக்கம் பக்கம் பார்க்காம பேசறதை நிறுத்து. அவரோட வயசென்ன? கொஞ்சம் மரியாதை குடுத்தா நல்லா இருக்கும்...” கோபத்தோடு உறுமினான்.

விழிகள் சிவக்க கர்ஜித்த அவனின் கோபமுகம் நேத்ராவை கலவரப்படுத்தியது.

ஆனாலும் அதை காட்டிக்கொள்ளாமல், “நான் எப்படி பேசனும்னு நீங்க ஒன்னும் எனக்கு லெசன் எடுக்க வேண்டாம். எனக்கு தெரியும் யார்க்கிட்ட எங்க எப்படி பேசனும்னு...” இன்னும் பொரிவதை நிறுத்தவில்லை அவள்.

“அவர் என் அப்பா. இந்த காலேஜ் சேர்மன்...” என்றதும் நேத்ரா ஒரு நொடி திகைத்தாலும்,

“ஸோ வாட்?...” திமிராக கேட்க அவளை அமைதியாக பார்த்தவன்,

“அவர் பேர் சிவராமன்...” என்றதும் தான் புரிந்தது அவளுக்கு.

சட்டென வாய்விட்டு சிரித்தேவிட்டாள். அவளின் சிரிப்பின் காரணம் புரியாமல் முறைத்த ரிஷி,

“நான் என்ன சொல்லிட்டு இருக்கேன். நீ சிரிக்கிற? ஆர் யூ மேட்...” என கொந்தளிக்க அவளுக்கு மேலும் சிரிப்பு பொங்கியது.

தான் ஒவ்வொரு முறையும் அவரிடம் சொல்லிய விதத்தை நினைத்துப்பார்த்து நினைத்துப்பார்த்து சிரித்தாள்.

“ஹைய்யோ ராமா இந்த கொசுத்தொல்லை தாங்கலையே...”

மீண்டும் சொல்லி பார்த்து நேத்ரா சிரிக்க முதல் முதலில் தன் மருமகளை பார்க்கையில் அவள் நடந்துகொண்ட விதத்தில் தன் தந்தை என்ன நினைப்பாரோ என்று அவளிடம் கோபித்தவன் இன்று வெகு நாட்களுக்கு பின் நேத்ராவின் புன்னகை முகத்தை கண்டதும் ரிஷியின் கோபமெல்லாம் பறந்து மனம் லேசானது.

“உங்க அப்பா பேர் சிவராமன். ஹா ஹா ஹா ராமா. ஹா ஹா ஹா...” என வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தாள்.

தான் சொல்லிய பொழுதுகளில் அவரின் முகம் மாறிய விதத்தை எண்ணி எண்ணி சிரித்தவள் ரிஷியின் பார்வையை கவனிக்க தவறினாள்.

சில நிமிடங்கள் அங்கேயே அவளை பார்த்தபடியே அசையாமல் நின்றிருக்க அவ்விடம் தேடி வந்துவிட்டாள் ரோஷிணி.

ரிஷியின் ரசனையான பார்வையும் நேத்ராவின் சிரிப்பும் கண்ணில் பட,

“நேத்ரா இங்க என்ன பன்ற?...” என அதட்டி,

“வா பங்க்ஷன் ஆரம்பிச்சுடுச்சு. நாம ஸ்டேஜ் போவோம்...” என அவளை இழுக்காத குறையாக அழைத்து சென்றவள் திரும்பி ரிஷியை கலவரமாக பார்த்தாள் ரோஷிணி.

அவளின் பயத்திற்கு எதிர்மாறாக நேத்ராவையே பார்த்திருந்த ரிஷியின் இதழ்களில் புன்னகை நெளிந்தது.

“நேத்ரா யூ கான்ட் அன்டர்ஸ்டேன்ட் ஹவ் மச் ஐ லவ்யூ. தக்காளி யூ கில்லிங் மீ பேபி...”என விழிகளில் கிறக்கத்துடன் முணுமுணுத்தது.




அலை தீண்டும்...
 
:love::love::love:

அக்கம் பக்கம் பார்க்காமல் பேசுறது ???
ரிஷி-பெரியசாமி குரல் தெரியலையா நேத்ராக்கு.......
சீக்கிரம் கல்யாணம் பண்ணிடுடா ரிஷி........
கொசு தொல்லையை விட உங்க ரெண்டு பேர் லொள்ளு ரொம்ப அதிகமா இருக்கு.......
மாமனாரையே கலாய்க்கிற நீ பெரிய ஆளுதாம்மா......
 
Last edited:
தக்காளி வர வர உனக்கு
கொலஸ்ட்ரால் அதிகமாகி
சேட்டை ஜாஸ்தியாகிருச்சு
உன்னைய கசக்கி பிழிஞ்சு
சாறு எடுத்திட வேண்டியதுதான்
மாமனாரையே நீயி கலாய்க்கிறியா நேத்ராப் பெண்ணே
ஹா ஹா ஹா
 
Last edited:
Top