Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Episode 2.2

Advertisement

Nilaprakash

Member
Member
தன் கண் முன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த நண்பனை கண்டு அர்ஜூன் பிதற்றினாள்.

" ஏண்டா...ஏன் இப்படி பண்ணுன ..எனை விட்டு விட்டு போயிடாதேடா "

" குரு‌‌....அசைவிருக்கு..ப்ளீடிங் ரொம்ப இருக்கு .. சூர்யா..சூர்யா " அவன் நினைவு தப்பாதபடி அவனிடம் பேசிக்கொண்டே முதலுதவி செய்ய தொடர்ந்தான்.

கருணாகரன் தன் தோளில் அழுது அரற்றிக் கொணாடிருந்த மலர்விழியை சுவரில் சற்றே நிறுத்தி விட்டு தன் சாட்டிலைட் ஃபோனில் இராணுவ இருப்பிடத்திற்கு கூப்பிட்டார்.இரும்பு மனிதன் என்றாலும் இரத்த உறவு இல்லாத தன் மகனின் சாவு நெருங்கும் தருவாயில் கைகள் நடுங்க அந்த ஃபோனை இயக்கினார்.

" ராகவா ... அவனுக்கு நிறைய இடத்தில குண்டடி பட்டிருக்கு " அவர் பேசுவதற்கே திணறினார்.
இராணுவ மருத்துவமனையின் தலைமை மருத்துவர் விஜயராகவன் கருணாகரனும் அவரும் ஒரு சேர ராணுவத்தில் சேர்ந்து பின் வேலைகளில் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.
ராகவன் குண்டுகள் உடலில்பாய்ந்த இடத்தை சொல்லவும் கருணாகரன் விளக்கினார்.
" கருணா ..பதட்டமாகாதே ..அவனை அரை மணி நேரத்துல இங்கே கொண்டு வந்துரு..ப்ளட் ரொம்ப ப்ளீடிங் ஆகாம பார்த்துக்க.." அவர் நண்பனுக்கு நிலைமையின் தீவிரத்தை உணர்த்தினார்.

அர்ஜூன் தன்னால் ஆன வரை சூர்யாவின் இரத்த போக்கை நிறுத்த போராடிக் கொண்டு இருந்தான்.

வெளியே குண்டு சத்தங்கள் முழங்கிய படியே இருந்தது .கருணாகரன் ஏதோ சமிக்ஞை குரல் கொடுக்க உள்ளே இரு இராணுவ வீரர்கள் சூர்யாவை அந்த இராணுவ வண்டியில் ஏற்றினர்.பின் இருக்கையில் அர்ஜூன் கருணாகரன் மலர்விழி மூவரும் அமர்ந்திருந்தனர்.

" இன்னும் பத்து கிலோமீட்டர் தாண்டிட்டா இந்த கிராமத்தை தாண்டிரலாம் கர்னல்...அது வரைக்கும் டெடரரிஸ்ட் அட்டாக் எதிர்பார்க்கலாம் " முன்னே வண்டி இயக்கியவன் கருணாகரனுக்கு ரிப்போர்ட் செய்துக் கொண்டே வந்தான்‌.

பாதை கரடுமுரடாக இருந்ததால் வண்டி அசைவில் சூர்யா வலியில் முனகினான்.

" கொஞ்சம் பொறுத்துக்கோ டா.. சூர்யா போயிடலாம் .."
அவன் பேசவே பேசவே அவர்களின் வண்டியை நோக்கி துப்பாக்கிகள் குண்டுகளை சிதற விட்டது

முன்னாலிருந்த இராணுவ வீரன் கத்தினான்.
" கர்னல் இட் ஸ்ம்ஸ் எ டெரரிஸ்ட் அட்டாக் "

அர்ஜூன் வெறி கொண்ட மிருகம் போல் கையில் துப்பாக்கிகளுடன் அந்த வண்டியை விட்டிறங்கி துப்பாக்கி குண்டுகள் வந்த திசையை நோக்கி சுட தொடங்கி னான். அவனுக்கு பின்னால் அரண் போன்று துப்பாக்கி களுடன் இறங்கினார் கருணாகரன்.சில நிமிடங்களுக்கு துப்பாக்கி களின் சத்தம் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை.

அப்போது தான் சூர்யாவின் முகத்தை முழுவதுமாக பார்த்தாள் மலர்விழி.
தன் முன் இரத்த தோய்ந்த முகத்துடன் கிடந்த சூர்யாவின் அருகில் சென்றாள். அவனை முதன் முதலாக பார்த்தது இன்றும் அவள் நினைவில் நிழலாடியது
தன் முன் ஒரு குறுஞ்சிறுப்பும் வசீகர முகமுமாக அவன் நின்று கேட்டவிதம் " ஆமா அந்த மீசைக்காரர் என்ன பண்றார் ? "...அதன் பின் பல நாட்கள் காதலுடன் ஒரே ஒரு முறையேனும் பாரடி எனக் கெஞ்சிய அவன் விழிகள் இன்று குருதி வடிந்த தடங்களுன் மூடியபடியே இருக்கிறது.

" சூர்யா .. சூர்யா .." வாழும் போது வரம் கேட்டு கெஞ்சிய வன் காதுகளில் சாகும் போது காதலோடு வரம் தர அழுகிறாள் அவன் தேவதை .வண்டி கிளம்பி போக தொடங்கியது.

அந்த மனித மிருகங்களை கொன்று விட்டு உள்ளே வந்த அர்ஜூன் சூர்யா முன் அழுது கொண்டு இருந்த மலர்விழியை கோபத்துடன் தள்ளினான் .

" ஒரே ஒரு முறை அவனை இப்படி பார்த்திருந்தா அவன் இந்த சூசைடல் ஆப்ரேஷன் கு ஒத்திருக்க மாட்டானே டி ..உங்களுக்கு எல்லாம் ஒருத்தன் செத்து தான் காதலை புரிய வைக்கனும் ல "

வண்டி வேகமாக முன்னோக்கி சென்றது. சிறிது நேரத்தில் இராணுவ ஆம்புலன்சில் மருத்துவ குழுவோடு வந்தார் கருணாகரனின் நண்பர் விஜயராகவன்.

சூர்யா ஆம்புலன்ஸல் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டான். மருத்துவமனையில் தன் நண்பனிடம்

" ராகவா .. உனக்கு தெரியும் ல அவன் அவன் என் மகன்.." அழுகையை கட்டுப்படுத்த முடியாது கதறினார் " எப்படியாவது காப்பாத்தி ரா ."

எத்தனை சாவுகளை பார்த்திருப்பான் வீரனாக .. அவனுக்கு அடிப்பட்ட போது கூட இவ்வளவு அழுததில்லை


அவர் தோளில் தட்டி ஆறுதல்படுத்தி விட்டு அந்த ஆப்ரேஷன் தியேட்டரில் நுழைந்தார் ராகவன் .

இரு மணி நேரமா இரு யுகங்களா என தெரியாத அளவுக்கு மூவருக்கும் நிமிட முள் நகர்ந்து நின்றது.

" கருணா ..அடி பலம் ..வலி மிகுதியில அவன் மூளை கோமாவுக்கு போற ஸ்டேஜ் ‌... நாளைக்கு உள்ள நினைவு திரும்பல னா...உசிருக்கு உத்தரவாதமில்லை "

அதை கேட்டதும் மிகுந்த சத்தத்துடன் அலறினாள் மலர்விழி " சொன்னேனே பா .. வேண்டாம் வேண்டாம் னு கேட்கலியே இந்த மூளியை காதலிக்காதீங்க னு சொன்னேனே "

மலர்விழி தற்போது வரை மிகுந்த கோபத்துடன் பார்த்த அர்ஜூனின் விழிகளில் முதல் முறையாக பரிதாபம் மேலிட்டது.அவன் அறிவான் அந்த பெண்ணின் வலி மிகுந்த காதலை , இழப்பை , சோகத்தை தேக்கி வைத்திருந்த அந்த டைரியை அவன் வாசித்திருக்கிறான் ‌. எந்த பெண்ணும் உயிருள்ள பிணமாகும் வலி அது ..பாவம் அவள் ..அந்த டைரி

தொடரும்
 
அருமையான பதிவு நிலா சகோதரி...

பிழைத்து வந்திரு சூர்யா..
மலர்விழி ரொம்ப கஷ்டபட்டுடா போல...ஆதலால் தான் அவன் காதலுக்கு ஒத்துக் கொள்ள வில்லையா?!?!
அப்படி அவள் வாழ்வில் என்ன நேர்ந்தது?!!!விடை தெரிய கார்த்திருக்கிறோம்....
 
Nice epi dear.
Katha romba sogama than poguthu....
Pavam ellavarum kayunnu ,me also soooooo sogam.
Avalu widow va? avanum love pani irrupan pola .so sad.
Nalla irruku katha aana intha Leenu vuku over sogam udambukku aagathey?? Enthu seyaan?
 
Nice epi dear.
Katha romba sogama than poguthu....
Pavam ellavarum kayunnu ,me also soooooo sogam.
Avalu widow va? avanum love pani irrupan pola .so sad.
Nalla irruku katha aana intha Leenu vuku over sogam udambukku aagathey?? Enthu seyaan?
தொடக்கத்திலேயே முடிவு பண்ணிட்டா எப்படி லீனு மேம் ..next episode படிச்சுட்டு இதே சொல்றீங்களா னு பார்க்கறேன் ??
 
ரொம்ப கஷ்டம் தான்
இந்த பதிவு
மலர்விழிக்கு என்ன நடந்தது
 
Top