Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Episode 2 - Unai Theendum Alaiyaai Naane

Advertisement

அலை – 2
வளம் கொழிக்க வைக்கும் ஆறான காவிரி ஆறு கரைபுரண்டோடும் திருச்சி மாநகரின் பிரசித்தி பெற்ற மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் தெய்வீக மணம் கமழ மலை மேல் கம்பீரமாக வீற்றிருந்தது.

பதட்டத்துடன் மீண்டும் படிகளில் ஏறினாள் நேத்ரா முகத்தில் தீவிரத்துடன் கீழே விழிகளால் துழாவியபடி.
சற்றுமுன் மனதில் ஒருவித இதத்தோடு தழுவிய ஈரமான மலைகாற்றின் குளுமை இப்போது உடலில் வியர்வையை அள்ளியிறைத்தது. படபடக்கும் விழிகளால் வேகவேகமாக ஆராய்ந்து வந்தவளை பின்னால் இருந்து யாரோ,
“எக்ஸ்க்யூஸ்மி மிஸ்...” என அந்த குரலுக்கு திரும்பினாள்.

அழுத்தமான குரலோடு கண்ணியமான பார்வையோடு நெடுநெடுவென்ற உயரத்தோடு வாட்டசாட்டமான களையான முகத்தோடு எவரையும் கவரும் அழகோடு கனகம்பீரமாக நின்றவனை நொடியில் எடைபோட்டவள்,

“என்ன?...” என ஒற்றை வார்த்தையில் கேட்க அவனோ,

“உங்க பேர் என்ன?...” என்றான். அவளுக்கிருந்த எரிச்சலில்,

“யோவ் மிஸ்டர், என் பேர் என்னவா இருந்தா உனக்கென்ன? பாராட்டுவிழாவா நடத்தப்போற?. போயா...” என கடுத்துவிட்டு மீண்டும் புசுபுசுவென மூச்சுவிட்டபடி படிகளில் ஏற,

“மிஸ் நேத்ரா, உங்க வோட்டர் ஐடி கார்ட், ஏடிஎம் கார்ட் பவுச் வேண்டாமா?...” என கேட்ட நொடி மேலே ஏறிக்கொண்டிருந்தவள் தடதடவென கீழே இறங்கி அவனருகில் வந்தவள்,

“ஒஹ் காட். பவுச் உங்ககிட்ட தான் கிடைச்சதா? தேங்க்ஸ். தேங்க்ஸ். ப்ரெண்ட்கிட்ட இருந்து போன் வந்ததா, அதை பேக்ல இருந்து எடுக்கறப்போ பவுச் விழுந்துடுச்சு போல. தேங்க்ஸ்...” என்றபடி வாயெல்லாம் பல்லாக புன்னகை முகத்தோடு வந்து நின்றாள்.

“ரிலாக்ஸ் மேடம். இதெல்லாம் கவனமா வச்சுக்கோங்க...” என சொல்லி அவளிடம் பவுச்சை கொடுத்தவன் வேகமாக நகர அவனை தொடர்ந்து ஓடினாள் நேத்ரா.

“என்ன பாஸ் நீங்க, ஒரு நிமிஷம் நில்லுங்க? எவ்வளோ பெரிய ஹெல்ப் பண்ணிருக்கீங்க எனக்கு. நான் ஒரு தேங்க்ஸ் கூட சொல்லலை. அதுக்குள்ளே ஓடறீங்களே?...” என சொல்ல,

“இல்லை பரவாயில்லை. நான் வரேன்...” என நகர்ந்தவனை மீண்டும் வழிமறித்தவள்,
“ஸ்யப்பா, கொஞ்சம் நில்லுங்க மிஸ்டர் பழம். எனக்கு ஏற்கனவே மூச்சுவாங்குது. உங்களை துரத்திட்டு வேற வரனுமா நான்?...” என்றவள் அழைப்பில் திகைத்து பார்த்தான்.

“முதல்ல ஒரு சாரி கேட்டுக்கறேன். என் பேரை கேட்டதும் உங்களை ரோட் சைட் ரோமியோன்னு நினச்சு திட்டிட்டேன். அடுத்து தேங்க்ஸ், என்னோட கார்ட்ஸ் எல்லாம் பத்திரமா குடுத்ததுக்கு...” என கூற,
“சொல்லியாச்சுல நான் கிளம்பறேன்...” கத்தரித்தான் அவன்.

“அட இருங்களேன் பாஸ். உங்க பேரை கூட சொல்லாம போனா எப்படி? என்னோட பேர் உங்களுக்கு தெரிஞ்சிருக்கே மிஸ்டர் பழம்...”என நேத்ரா வம்பாக நிற்க அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு பின் பொருட்படுத்தாது கடந்து சென்றான் அவன்.

“பழம் சரியான பழமா இருக்கும் போல. ஆளுக்கும் கேரக்டருக்கும் கொஞ்சமும் பொருத்தமில்லை...” என தனக்குள் மதிப்பிட்டுக்கொண்டே அவனின் பின் கீழிறங்கி சென்றாள் காத்திருக்கும் தன் தோழி ரோஷிணியை காண.
நேத்ரா மெல்ல கீழிறங்கும் பொழுதே முன்னவன் போன வேகத்தில் மேலே வருவதை கண்டு அப்படியே நின்றாள்.

“ஹாய் பழம், என்னாச்சு எதையோ பார்த்து பயந்து இப்படி தலைதெறிக்க ஓடி வறீங்களே?...” என நக்கலாக கேட்க அவளை பார்த்து நிற்கும் பொழுதே அவனின் பின்னால் இன்னொரு பெண் வருவதையும் கண்டுகொண்டாள்.

“இதான் மேட்டரா? என்ன பாஸ் லவ்வா?...” மீண்டும் அவனை வம்பிழுக்க அவளுக்கு பதில் சொல்லாமல் கடக்க நினைத்தவனால் அது முடியவில்லை.

“ரிஷி மாமா, என்கிட்டே இருந்து உங்களால தப்பிக்கவே முடியாது. இன்னைக்கு எனக்கொரு முடிவு தெரிஞ்சே ஆகனும். எப்போ என்னை கட்டிப்பீங்க?...” என அவனை மறித்து நின்றாள் ரிஷியின் முறைப்பெண் காவேரி.

அத்தோடு நில்லாமல் நேத்ராவை காட்டி, “யார் இவங்க? இவங்களோட உங்களுக்கென்ன பேச்சு?...” என சந்தேகமாக கேட்க ரிஷியின் முகம் எரிச்சலும் கொஞ்சம் பிடித்தமின்மையுமாக காவேரியை வெறித்தது.
நொடியில் சூழ்நிலையை புரிந்த நேத்ரா தனக்கு உதவியவனுக்கு உதவுவதாக நினைத்து வாயை விட்டாள்.

“சந்தேகமே வேண்டாம் பொண்ணே. நானும் இவரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பறோம். இவரை பார்க்கத்தான் நான் இங்க வந்தேன்...”
காவேரியை பார்த்து அசால்ட்டாக பிட்டை போட்டவள் அப்போதுதான் ரிஷியின் பேயறைந்த முகத்தை பார்த்தாள். அவனின் வெளிறிய முகத்தை கண்டு மெல்ல கண் சிமிட்டி புன்னகைக்கவும் செய்தாள்.

நேத்ராவின் பேச்சில் அழுகை வெடிக்க காவேரி அழுதுகொண்டே கீழே இறங்கி நூற்றுக்கால் மண்டபம் நோக்கி ஓடினாள். அதுவரை அதிர்ச்சியில் உறைந்து நின்றவன்,

“ஹலோ நீங்க யார்னே தெரியாது எனக்கு. எவ்வளோ தைரியம் இருந்தா இப்படி ஒரு பொய்யை சொல்லிருப்பீங்க?...” என எகிற,

“ஏன் நான் சொல்லும் போது அந்த புள்ளைக்கிட்ட அப்டிலாம் இல்லைன்னு சொல்லவேண்டியது தானே?...” நேத்ரா கிடுக்கிபிடி போட திகைத்து நின்றான் ரிஷி.

“தைரியத்தை பத்தி நீங்க சொல்லாதீங்க பாஸ். அந்த பொண்ணை பார்த்ததும் ஓடிவரும் போது எங்க போச்சு உங்க தைரியம்? யார்க்கிட்ட தைரியமிருக்கான்னு கேட்டீங்க? ஏதோ எனக்கு ஹெல்ப் செஞ்சீங்கன்னு உங்களை காப்பாத்திவிட்டா ரொம்பத்தான் ஓவரா பேசறீங்க?...”

அவளும் பதிலுக்கு சூடாக குடுக்க அமைதியாக நின்றான். ஆனாலும் உள்ளுக்குள் உதறல் தான். காவேரியின் வேகத்தில் கொஞ்சம் கவலை தான் இவனுக்கு. யாரிடம் என்ன சொல்லி வைப்பாளோ என நெற்றியை அழுத்தமாக தேய்த்து நின்றான்.
“ஒரு உண்மையை சொல்லவா பழம்?...” கேள்வியாக கேட்டவளை என்ன என்பது போல ஏறிட்டு பார்க்க,

“உங்களை பார்த்தா பாவமா இருந்துச்சு. ஆனா உங்களை விட அந்த புள்ளையை பார்த்தா பயங்கர பாவமா போச்சு. இப்படி ஒரு பழத்துக்கிட்ட இருந்து அந்த புள்ளையை எஸ்கேப் செஞ்சு விடனும்னு தான் டக்குன்னு வாய்ல வந்ததை சொல்லிட்டேன்...”

“இனி நீங்க யாரோ, நான் யாரோ. டேக் இட் ஈஸி பழம்...” என்க ரிஷியின் இதழோரம் சிரிப்பு வெடி பற்றிக்கொண்டது. மனம் கொஞ்சம் இலகுவானது போல தோன்ற,

“யார் நீங்க?. அதென்ன என்னை பழம்னு கூப்பிடறீங்க?...” என்றான் உதட்டில் புன்முறுவல் பூக்க.

“உங்க முகத்துல தான் தெரியுதே பாஸ் நீங்க அப்படி ஒரு பழம்னு. அதான். அதுவும் இல்லாம நீங்க முதல்ல உங்க பேரை சொல்லிருந்தா நான் இப்டி கூப்பிட்டிருக்கவே மாட்டேன்...” என்றவள் தன்னை பற்றி கூற ஆரம்பித்தாள் அவனை பேசவிடாமல்.
Nice
 
“என் பேர் உங்களுக்கே தெரியுமே. ஊர் காஞ்சிபுரம். படிக்கிறது பிஎஸ்சி மேத்ஸ் செக்கென்ட் இயற். அதுவும் புதுக்கோட்டையில இருக்கிற இத்துப்போன ஆர்ஜே காலேஜ்ல. ஹாஸ்டல்ல தான் தங்கியிருக்கேன்...” என படபடவென பேசியவள் ரிஷியின் முகமாற்றத்தை கவனிக்கவில்லை.

“சென்னை, காஞ்சிபுரத்துல இல்லாத காலேஜா?. புதுக்கோட்டைக்கு தேடி வந்துருக்கீங்க? ஒன்னுக்கொண்ணும் சம்பந்தமே இல்லையே...” என,

“நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டை நாய்க்கு தான் கிடைக்கனும்னு விதி இருந்தா அதை யாரால மாத்தமுடியும்?...” நேத்ரா பேசிய வியாக்கியானம் ரிஷிக்கு ஒன்றும் புரியவில்லை.

“அடடா நீங்க பழம்ன்றதை நான் மறந்துட்டேன் பாருங்க. அதாவது காஞ்சிபுரத்துல பிறந்த நான் புதுக்கோட்டைக்கு வந்து இந்த இத்துப்போன காலேஜ்ல தான் படிக்கனும்னு என் தலைல எழுதியிருக்கு பழம். அதை சொன்னேன்...”

அவளின் விளக்கத்தில் இவன் முகம் தான் விளக்கெண்ணையை விழுங்கியது போல மாறியது. எங்காவது முட்டிக்கொள்ளலாம் போல வெறி பிறக்க அதற்குள் திலகவதி வந்து சேர்ந்தார் காவேரியோடு,
“ரிஷி காவேரி சொல்றது உண்மையா என்ன?...”

வந்ததும் வராததுமாக திலகவதி கேட்க அப்போது பேச்சுவாக்கில் நேத்ரா ரிஷியின் மிக அருகில் நின்றதை ரிஷி கவனிக்க தவறி இருந்தாலும் வந்ததும் திலகவதி அதை கவனித்துவிட்டார்.

ரிஷி பதில் கூறும் முன் கேட்ட கேள்வியை தொங்கலில் விட்ட அவனின் பெரியம்மா உசிதமணியை அழைக்க செல்ல ரிஷிக்குதான் படபடப்பு கூடியது.

“ஹய்யோ இந்த அழுகுணி மொத்த குடும்பத்தையும் இங்க கூட்டிருவா போலவே?. ஏற்கனவே கழுத்தை நெறிக்கும் பிரச்சனை...” என கலக்கமாக நிற்க,

“ஹய்யோ பழம். நீங்க ஒன்னும் பயப்படாதீங்க. எனக்கு எவ்வளோ பெரிய ஹெல்ப் நீங்க பண்ணிருக்கீங்க. உங்களை காப்பாத்த வேண்டிய கடமை எனக்கும் இருக்கு. உங்களுக்காக இதை கூட செய்யமாட்டேனா? இப்படி ஒரு பழுத்த பழமா இருக்கீங்களே?. நான் நேத்ராவாக்கும்...”

தன்னையே பெருமை பீற்றிக்கொள்ளும் நேத்ராவை கண்டு சுவற்றில் முட்டிக்கொள்ளலாம் போல வந்தது ரிஷிக்கு.
இவளுக்கென்ன தெரியும் என் குடும்பத்தை பற்றி. இன்றோடு முடிகிற விஷயமா இது? ஏன்தான் இவளுக்கு உதவி செய்தோமோ என நொந்துகொண்டான்.

அவனின் எண்ணப்போக்கு புரியாமல் விடாமல் தொனதொனத்துக்கொண்டே இருக்க அவனால் அவளை தாண்டி செல்லமுடியவில்லை.

“நான் யார் என்னனு தெரியாம என் கிட்ட உங்க டீட்டயில்ஸ் எல்லாம் கொஞ்சமும் பயமில்லாமல் சொல்றீங்க?...” அவளை கொஞ்சம் மிரட்டினால் நகர்ந்துவிடுவாள் என்று கேட்க,
“உங்களை பார்த்தாலே தெரியுது பாஸ். நீங்க அப்படி இல்லைன்னு. ஆனா அதுக்காக நான் சொல்லலை. எனக்கென்ன பயம்? உங்களால என்னை என்ன செஞ்சிட முடியும்?...” என கொஞ்சம் திமிராகவே கூறினாள் நேத்ரா. அயர்ந்து நின்றது ரிஷிதான்.

“ரிஷி...” என சப்தமாக அழைத்துக்கொண்டே அவனின் தந்தை சிவராமன் வந்து நிற்க அடுத்த என்கொயரியா என அலுத்துக்கொண்டவள் அவனின் தந்தை என தெரியாமலே,
“ஹைய்யோ ராமா, இந்த கொசுத்தொல்லை தாங்கலையே?...” என எதிரே நிற்பவரை பார்த்து நேத்ரா கூற ரிஷிக்கு அந்த நேரத்திலும் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.

ராமனுக்கோ, “இங்கு என்ன நடக்கிறது? யார் இந்த பெண்? அதுவும் அவனோடு மிக நெருக்கமாக? தன் மகன் என்ன செய்துகொண்டிருக்கிறான்?...” கேள்விகள் கட்டுக்கடங்காமல் பெருகியது அவருக்கு.

புரியாமல் நேத்ராவையும் ரிஷியையும் மாறி மாறி பார்க்க அதற்குள் ரிஷியின் பெரியப்பா உசிதமணியையும், முருகானந்தத்தையும் அழைத்துக்கொண்டு காவேரி வர பதட்டம் நொடியில் தொற்றியது ரிஷியை.
பிரச்சனை கைமீறும் அபாயம் தென்பட நேத்ராவை திரும்பி கடுமையிலும் கடுமையாக முறைத்தான்.

வந்தவர்களை ரிஷி தயக்கமாக பார்க்க நேத்ராவோ தன்னை எரித்துவிடுவது போல பார்த்துக்கொண்டிருந்த காவேரியை பார்த்து சிநேகமாக குறுநகை புரிந்தாள்.

அதை கண்ட உசிதமணி காவேரியை செல்லுமாறு பணித்துவிட்டு இவர்கள் புறம் திரும்பியவர்,
“ரிஷி, உன்னோட தேர்வு என்னைக்குமே தப்பிப்போகாதுன்னு எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. எதுவானாலும் வீட்டுக்கு போய் பேசிப்போம். பொது இடத்துல எதுவும் வேண்டாம். அப்பா கோவப்படுவார்...” என கூற,

“ஆமா, எங்க எல்லோருக்குமே உன் விருப்பம் தான் முக்கியம். இந்த பொண்ணை பத்தின விவரத்தை வீட்ல போய் பேசி முறையா எல்லாம் நடத்துவோம். நீயும் வீட்டுக்கு போம்மா. நாங்க சீக்கிரமே ஒரு நல்ல முடிவோட உன் வீட்டுக்கு வரோம்...”
அவர்கள் ஏற்கனவே முடிவெடுத்தது போலவே கூற இப்போது அரண்டு போவது நேத்ராவின் முறையானது.

“என்னது வீட்டுக்கா? செத்தேன். ஆனாலும் பழம், உங்க குடும்பமே இப்படி பழமா இருப்பாங்கன்னு நான் நினைக்கவே இல்லையே. நல்ல குடும்பம்பா...” என மனதிற்குள் அலறியவள்,

“ஹைய்யோ அங்கிள் அவசரப்படாதீங்க. இவர் யாருன்னே எனக்கு தெரியாது. இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் ஒரு ஹெல்ப் பண்ணினார். பதிலுக்கு நானும் ஒரு ஹெல்ப் பண்ணினேன். தட்ஸ் ஆல்...”

மூவரும் பேந்த பேந்த விழிக்க நடந்ததை சுருக்கமாக கூறிய நேத்ரா,
“இவருக்கு அந்த பொண்ணை ஏத்துக்க முடியலை போல. அந்த பொண்ணு ரொம்ப கட்டாயப்படுத்துறது போல தோணுச்சு எனக்கு. அதான் அப்படி சொன்னேன். உங்க வீட்டு பொண்ணு. நீங்க தான் சொல்லி புரியவைக்கனும்...”

படபடவென பேச வேண்டியதை பேசியவள் அங்கிருந்து கிளம்ப அவளை அழைத்த உசிதமணி,
“தவறா நினைக்காதேம்மா. நாங்க அவசரப்பட்டு பேசிட்டோம்...” என கூற,

“அச்சோ அதெல்லாம் பரவாயில்லை அங்கிள். நான் கிளம்பறேன்...” என சொல்லிவிட்டு அடித்துபிடித்து வேகமாக அவர்களின் பார்வையில் இருந்து மறைந்தாள்.

“நேத்ரா, இந்தா பொண்ணே...” என அவர்கள் அழைக்கும் குரல் கேட்க,
“இல்லை, இல்லை. நான் வரமாட்டேன்...”என முணங்கிக்கொண்டே பதறி விழித்தவள் தான் கண்டது கனவென புரியவே சில நொடிகள் பிடித்தது அவளுக்கு.

“ச்சை இம்சை புடிச்ச கனவு. இந்த பத்துநாளா படுத்தி வைக்குது...” என எழுந்து அமர்ந்து முகத்தை அழுந்த துடைத்து நிமிர அருகில் சைந்தவி நின்றிருந்தாள்.

“ஓஹ் ஹாஸ்டல்ல இருக்கோமா?...” என நினைத்தவள் சைந்தவியை பார்த்து,
“என்ன இங்கயே நிக்கிற? அதான் எழுப்பிட்டேல. போய் உன் வேலையை பாரு...” என்று விரட்டிவிட்டு அருகில் இருந்த பாட்டில் தண்ணீரை எடுத்து பருகினாள்.
Nice
 

Advertisement

Top