Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Episode - 6 முகம் பதியா முதல் காதல்

Advertisement

Nilaprakash

Member
Member
மலர் இரவு தூக்கம் தொலைத்ததன் விளைவாக காலையில் வெகு நேரம் உறங்கிக் கொண்டு இருந்தாள்.சமையலறையில் இருந்து அலாரம் சத்தம் வந்தது.

" இன்னும் எவ்வளவு நேரம் தூங்குவ ஏ மலர் எந்திரி .."

" மா ..ஏன்மா கத்தற ..நைட் தூக்கமே வரல "

தாயின் சத்தம் எழுப்பி விட சோம்பலுடனே முகம் கழுவி விட்டு சமையலறைக்குள் நுழைந்தாள்.

"சோம்பேறி கழுதை ...கூட்டு குடும்பத்தில வாக்கப்பட போற .. சமையல் ஒரு மண்ணும் தெரியாது .."

" நான் வேணா உன்னையும் சேர்த்தி கூட்டிட்டு போயிடவா "

அவள் கண்சிமிட்டி சிரிக்கவும் ..

" ஆமா இங்க ரெண்டு இருக்கே ..என்ன செய்ய .."

" அப்ப உனக்கு போற ஐடியா இருக்கு .."

மங்கையின் செல்ல சலிப்புக்கு செழியன் மறுகேள்வி கேட்கவும் மலர் சத்தமாக சிரித்தாள்.

இளங்கோவும் பேச்சின் இடையில் நுழைந்து தாயை கேலி செய்ய தொடங்கினான்.

" ஏன் மா .. எனக்கு வேற இன்னும் கல்யாணம் ஆகல ..இப்படி விட்டுட்டு போறேங்கற ..இந்த மாமியார் ஃபோஸட் எல்லாம் வேணாமா உங்களுக்கு "

" எல்லாம் உன்னால..காலங்காத்தால எத்தனை வம்பு இழுக்கற.."

தாயின் செல்ல அடிக்கு விலகி ஒடினாள் மலர்.

அவள் சென்ற பின் செழியன் தன் மனைவியிடமும் மகனிடமும் பேச அமர்ந்தார்.

" மங்கை .. இன்னும் ரெண்டு நாள் ல நல்ல முகூர்த்தம் வருது ..வெத்தலை பாக்கு மாத்திட்டு கல்யாணத்தை ரெண்டு மாசத்துல வச்சுக்கலாமா "

" ஏங்க பையன் வீட்ல..நாம ஏதோ அவசரப்படறோம் நினைக்க மாட்டாங்களா "

" சொன்னதே .. கரிகாலன் தான் மங்கை .. பையன் எப்ப வேணா ஜெர்மனி போவான் ..அதனால சீக்கிரம் முடிச்சிடலாம் ங்கறான் "

மங்கை தன் மகனை நோக்கினாள்.

" சரிப்பா .... மாப்பிள்ளை வீட்ல சொன்ன மாதிரியே பண்ணிடலாம் "

மங்கை கடவுளிடம் வேண்டிக் கொண்டாள்.மலரோ தன் மனதில் அவனின் முகத்தை நினைவு கூர இயலாது தன்னுள்ளே கேள்வி கேட்டு கொண்டாள்.

" மீண்டும் அவனை கண்டு விட்டால் இந்த மனம் அவனை இதயத்தில் செதுக்கி கொள்ளுமா ?? "




அதே நேரம் தன் தோழியின் கேள்விக்கு பதில் சொல்ல வழியின்றி திரு திரு வென முழித்துக் கொண்டு இருந்தான் கார்த்திக்.

" மனுஷனாடா நீ ! இந்த ஜெர்மன் கார்ன் கிட்ட மாட்டி விட்டு ஊருக்கு போய் ஒரு மாசமா டேரா போட்டு இருக்க "

" ஜெனி இன்னும் ரெண்டு நாள் ல வந்தர்ரேன ..சமாளி டி ப்ளீஸ் "

" அட்லீஸ்ட் ரிசர்ச் அப்டேட் ஆவது கொடுக்கறீயாடா ..அவன் ஆயிரம் கேள்வி கேட்கறான் "

" ஜெனி .. சரண் இருக்கான் ல "

" மண்ணு ..அவன் லவ்வரை பார்க்க போய் நாலு மணி நேரம் ஆச்சு ... இன்னும் வரல ..இதில இவனுக வேற நொய் பொய் னு ..எனக்கு னு வாய்ச்சது பாரு ..."

" சரி சரி ..சமாளி டி ..உன் ஹப்பி கு உன் வீட்டு பப்பி கு எல்லாத்துக்கும் சேர்த்து ட்ரீட் வைக்கிறேன் "

" சரி சரி வந்து தொலை .."

அவள் ஃபோனை வைத்ததும் ஏதோ தீவிரமாக முடிவெடுத்து விட்டதாக தன் ரிசர்ச் பேப்பர்களுடன் அமர்ந்தான்.

தன் அறையில் மனைவியுடன் அமர்ந்திருந்தார் கரிகாலன்.

" பூரணி நாளை மறுநாள் பொண்ணை பேசி முடிச்சு நிச்சயம் பண்ணிட்டு வந்திருவோம் .. ரெண்டு மாசத்துல கல்யாணம்"



அவர் சொல்லவும் அன்னபூரணி ஆச்சர்யமாக பார்த்தாள்.

" என்னங்க சொல்றீங்க ... இவ்வளவு சீக்கிரம் "

" ஆமா பூரணி ..உன் கடைக்குட்டி பையனை நம்ப முடியாது.. ஏதாவது தகிடுதித்தம் பண்ணுவான் ... "

" அதுவும் சரி தான் ..அந்த வாலு செஞ்சாலும் செய்யும் "

" நீ அவனை கூட்டிட்டு வா நான் பேசிக்கறேன்"

தன் வேலையை முடித்து லேப் டாப் ஐ மூடி சோம்பல் முறிக்கையில் அன்னபூரணி வந்தாள்.

" அப்பா உன்கிட்ட பேசனும் ன்றார் "

" மிலிட்டரி ...என்னவாம் மா .. அதான் காலையிலேயே சொல்லிட்டேனே "

" வாடா ..னா.. ஆயிரம் கேள்வி கேட்கறான்"

அன்னபூரணி தன் மகனை அழைத்து வந்தாள்.அவனை கண்டதும் கரிகாலன் நேரடியாகவே கேட்டார்.

" இங்க பாருடா பொண்ணு வீட்ல போய் பிடிக்கலை னு சொன்னா நான் இனி கல்யாண பேச்சு எடுக்க மாட்டேன் னு ‌...உன் அண்ணிகளை விட்டு பேசினவன் நீ ..இப்ப கல்யாணம் பேச சரிங்கற .. பேசிட்டு அப்புரம் மாட்டேன் சொல்லி அந்த பொண்ணோட வாழ்க்கையில விளையாடிராத "

" அப்படி எல்லாம் இல்லை.. எனக்கு அந்த பொண்ணு பிடிச்சிருக்கு "

" அப்ப நாளை மறுநாள் நிச்சயம் பண்ணிடலாம் "

" அப்பா .. இவ்வளவு சீக்கிரம் "

" சரி விடு ‌‌.. உனக்கு இஷ்டமில்லை வேற இடம் பார்க்க சொல்லி பொண்ணு வீட்ல சொல்லிடறேன்"

"உண்மை யில் இந்த மிலிட்டரி சோல்ஜரா இல்லை டெரரிஸ்ட் ஆ என்ன டிமாண்ட் "

அவன் மனதில் கோபம் கொப்பளித்தாலும் வராத புன்னகையை முகத்தில் பூசிய படி

" சரி ..அரேஞ் பண்ணுங்க ..பட் நிச்சயம் முடிச்சுட்டு போனனா .. கல்யாணத்துக்கு தான் வருவேன் ..லீவு இல்ல "



" துரை கல்யாணத்துக்கு வந்தா போதும்.. கல்யாண வேலை எல்லாம் நானும் உன் அண்ணன் களும் பார்த்துப்போம் "

தன் அப்பாவின் குணம் அவனுக்கு தெரியும் தன் முடிவுகளை நிறைவேற்றுவதில் கை தேர்ந்தவர் .அவள் வரும் முன் தன் ரிசர்ச் ஐ முடித்து விட்டு அவளுடனான ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழலாம் என்று இருந்தான்.இனி அதற்கு வாய்ப்பில்லை.

சற்று நேரம் தன் அண்ணண் குழந்தைகளிடம் பேசி விளையாட சென்றான்.

" டேய் தருண் ..‌சித்தப்பா கூட பாக்ஸிங் வரீயா "

" வேணாம் சித்தப்பா ‌.நீயே பாவம்..எப்ப பார்த்தாலும் தாத்தா கிட்ட திட்டு வாங்கிட்டே இருக்கே "

" உனக்கு ம் தெரிஞ்சு போச்சா டா "

அவன் பேசிக்கொண்டு இருக்கையில் ரூபாவும் வீணாவும் ஏதோ தீவிரமாக பேசிக் கொண்டு வந்தனர்.

அன்னபூரணி மருமகள் கள் இருவரிடமும் விஷயத்தை சொல்லி பொண்ணுக்கு நிச்சய புடவையும் பொண்ணு வீட்டுக்கு சென்று அளவு ஜாக்கெட் மும் வாங்கி வர பணித்திருந்தாள்.

" என்ன அண்ணீஸ் யாரை கவிழ்க்க இவ்வளவு வேகமா போறீங்க "

" அது ஒண்ணுமில்ல கொழுந்தனாரே ...அந்த அப்பாவி பொண்ணு வீட்டுக்கு போய் கொஞ்சம் ஆறுதல் சொல்லிட்டு வரலாம் னு இருக்கோம் "

இருவரும் கோரஸாக கூற ..

" என்னதுதுதுது ... பொண்ணு வீட்டுக்கு போறீங்க ளா...ஆஆஆஆ"

அவன் கேள்வியும் முக பாவனையும் பெண்கள் இருவரையும் வெகு நேரம் சிரிக்க வைத்தது.
 
Last edited:
என்ன இது ரெண்டு மாசத்தில்
கல்யாணமா
அண்ணிங்க கூட மலர்
வீட்டுக்கு போவானா??
 
Top