Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Episode 6 - Unai Theendum Alaiyaay Naane

Advertisement

AshrafHameedaT

Administrator
அலை – 6

சத்யாவிற்குள் சர்வமும் அடங்கியது. இப்படி மாட்டிக்கொள்வோம் என அவள் நினைக்கவே இல்லை. ரஞ்சனி அந்தளவிற்கு தைரியமூட்டியிருந்தாள். நிச்சயம் இந்த முறை நேத்ரா சிக்கிக்கொள்வாள் என சொல்லியிருந்தாள் ரஞ்சனி.

அவள் கொடுத்த உற்சாகத்திலும் நம்பிக்கையிலும் நேத்ரா மீதிருந்த எரிச்சலிலும் உடனே ஒப்புக்கொண்டவள் வார்டனிடம் போட்டும் கொடுத்துவிட்டு எதையோ சாதித்துவிட்ட மிதப்பில் வந்து நின்றாள்.

வந்தவள் நேத்ராவின் தோரணையில் மிரண்டே விட்டாள். இதையா அவள் எதிர்பார்த்தாள்?
நேத்ரா அவரையே முறைக்க சைந்தவியின் பின்னே ஒண்டினாள் சத்யா.

“மேடம் கொஞ்சம் வெளில வரீங்களா?...” நேத்ராவின் குரலே வேறு மாதிரி கடினமாக மாறி இருந்தது.

எத்தனை மிரட்டினாலும், எவ்வளவு சீண்டினாலும் நேத்ராவின் குரலில் இத்தகைய வேற்றுமை என்றுமே நிகழ்ந்ததில்லை. இன்று அந்த வேறுபாட்டை அனைவருமே உணர்ந்தனர்.

“உன்னோட அல்ப ஆசை நிறைவேறிடுச்சா?...” வனமலர் சாட,

“உனக்கு இதெல்லாம் தேவையா சத்யா? என்ன வேலை பார்த்திருக்க?...” சைந்தவியின் பேச்சை காதில் வாங்கினாலும் சத்யா சிந்தனை வேறு.

என்னதான் நேத்ராவின் முகத்தை பார்த்தாலும் மொபைல் எப்படி சிக்காமல் போனது? என்ற கேள்வி மண்டைக்குள் குடைச்சலை குடுக்க அது சத்யாவின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

அதை உணர்ந்தார் போன்றே கட்டிலை விட்டு இறங்கி வந்த நேத்ரா நேராக சத்யாவின் பின்னால் அவளுடைய கப்போர்டை திறந்து சில ஆடைகளுக்கு நடுவிலிருந்து மொபைலின் ஒவ்வொரு பாகங்களாக எடுத்தாள்.

அதை பார்த்து கண்களை விரித்த சத்யா மானசீகமாக தலையில் அடித்துக்கொள்ள அவளை எள்ளலாக பார்த்த நேத்ரா மொபைலை ஒன்றொன்றாக சேர்த்து ஆன் செய்ததும் அது அழைப்பு வந்ததற்கான ஒளி, ஒலியை எழுப்பியது.
எடுத்து பார்த்தவள், “ஹரிஷ்...” என முணுமுணுக்க பரபரவென ஆனாள் சத்யா.

“நேத்ராக்கா, ஹரிஷ் கால் பண்ணிருக்காங்களா?... படபடப்பாக கேட்க அதற்குள் மீண்டும் கால் வந்தது அவனிடமிருந்து. சட்டென காலை கட் செய்தவள் சத்யாவை தாண்டி நடக்க,

“ஏன் நேத்ராக்கா கட் செய்தீங்க?...” கொஞ்சம் வேகமாகவே கேட்டுவிட,
“என்ன அதிகாரம் தூள் பறக்குது? இது என்னோட மொபைல் நான் கட் செய்தேன்...” அமர்த்தலான குரலில் கூறியவள்,

“நீ செஞ்ச வேலைக்கு உன்னை கட்டையால அடிக்காம போன் காலை கட் பண்ணினதோட விட்டேன்னு சந்தோஷப்படு...”
ஹரிஷிடமிருந்து மீண்டும் அழைப்பு வர சத்யாவின் தவிப்பு அதிகமாகியது. பின்னே மாதத்திற்கு ஒருமுறை தானே அழைப்பான். இதை இழக்க முடியுமா? அதுவே அவளை நேத்ராவிடம் விவாதிக்க வைத்தது.

“இல்லை நேத்ராக்கா நீங்க இப்டி செய்யாதீங்க...” சத்யா இறைஞ்சுதலுடன் கேட்க நேத்ரா பொங்கிவிட்டாள்.

“செய்யாதீங்கவா? இனி உனக்கு செய்யறதுனா செய்வினை மட்டும் தான் செய்வேன்...” திமிராக கூறியவள்,

“என்னை என்னனு நினைச்ச நீ? உங்களுக்கு யாருக்கு எப்போ போன் பண்ணணும்னாலும் என் போன் தேவை. இந்த நேத்ராவின் தயவு தேவை. இன்னைக்கு இன்னொருத்தர் தூண்டிவிட்டதும் உனக்கு எனக்கே ஆப்படிக்கனும்னு தோணிருச்சுல...”

“ம்ஹூம் இது சரிப்படாது. இனி யாருக்கும் என் மொபைல்ல இருந்து எந்த இன்கமிங்கும் கிடையாது. அவுட் கோயிங்கும் கிடையாது. உங்களுக்கு போய் ஹெல்ப் பண்ணனும்னு எனக்கென்ன தலையெழுத்தா?...”
“அக்கா தெரியாம செய்துட்டேன்க்கா. சாரி சாரி. ரஞ்சனி மேம் தான் உங்களை மாட்டிவிட சொன்னாங்க. அவங்க பேச்சை கேட்டு நானும்...”

“அவங்க என்ன சொன்னாலும் கேட்டுடுவியா நீ? அவங்களா உன் ஆளு போன் செய்ததும் கொண்டுவது தராங்க? அவங்களா அவசரத்துக்கு வீட்டுக்கு கால் பண்ணனும்னா உங்களுக்கு தன்னோட மொபைல் கொடுத்து ஹெல்ப் பன்றாங்க?...”
சத்யாவை மட்டுமல்லாது மற்றவர்களையும் பார்த்து கேட்க அனைவரும் அமைதியாக நின்றனர்.

நேத்ரா சொல்வது போல அவளுடைய மொபைலில் தான் அவசரத்திற்கு வீட்டினருக்கு பேசிக்கொள்வர் மூவரும். சத்யா தன் காதலன் ஹரிஷ்க்கு பேசவேண்டும் என கூற மறுக்காமல் கொடுத்தாள் நேத்ரா.

“உன்னோட ஆளுகூட கடலைபோட என் போன் குடுத்தேன் பாரு என்னை சொல்லனும். எப்பவும் எந்த நேரம்னு பார்க்காம செஞ்சதுக்கு நல்ல. நல்ல...”

“நீ ஏன் இப்டி செஞ்சன்னு எனக்கு தெரியாம இல்லை. போன மாசம் அவன் கால் பண்ணும்போது நீ இல்லைனா நான் என்ன செய்ய? நீ திரும்ப பேசனும்னு கேட்டப்போ குடுக்கமுடியாத சூழ்நிலை எனக்கு. அதுக்கு என்னமும் செய்வியா நீ?...”

அதற்கு மேல் பேச முடியாமல் திரும்பி கொண்டவள் தன்னை நிதானித்துவிட்டு சத்யாவின் புறம் திரும்பி,
“இங்க பாரு இனிமே உன் ஆள் எனக்கு கால் பண்ண கூடாது. மீறி பண்ணினா நீ ஆளை மாத்திட்டன்னு கொஞ்சமும் யோசிக்காம சொல்லிடுவேன்...” மிரட்ட,

“ஹைய்யோ நேத்ராக்கா...” சத்யா பதற,

“உனக்கெல்லாம் தயவு தாட்சண்யமே பாக்கமாட்டேன். உதவி செஞ்சவங்களுக்கு உபத்திரவம் செய்ற உன்கூட பேசறதே எனக்கு அசிங்கம். திரும்ப என்கிட்ட எப்பவும் பேசிடாத...” எச்சரித்துவிட்டே சென்றாள் நேத்ரா.

“உனக்கிது தேவைதான் சத்யா. அந்தக்கா என்னதான் நம்மளை சீண்டிட்டே இருந்தாலும் நமக்கொரு உதவின்னு போய் நின்னா யோசிக்காம எப்படி செய்வாங்க. இப்படி பண்ணிட்டியே நீ...” என சைந்தவி திட்ட குறுகிப்போய் நின்றாள் சத்யா.

அநியாயமாக ரஞ்சனியின் சூழ்ச்சி வலையில் சிக்கி குற்றவாளியாய் நின்றுவிட்டோமே என்ற ஆற்றாமை மனதை அரிக்க தலையை பிடித்தபடி அமர்ந்துவிட்டாள்.

நேத்ராவோடு வந்த வனமலர், “நீ ஏண்டி அவளை சும்மா விட்ட. நல்லா நாலு அரை விட்டிருக்க வேண்டிதானே? ஆளும் மூஞ்சியும். பாக்க சாது மாதிரி இருந்துட்டு என்ன வேலையெல்லாம் பண்ணிருக்கா...”

வனமலரால் தாங்கமுடியவில்லை. நேத்ராவின் இரக்க குணம் இப்படி பட்ட துரோகிகளையும் அடையாளம் காணாமல் இருக்கிறதே என ஆதங்கப்பட்டாள். தேவையான உதவிகளையும் பெற்றுக்கொண்டு உதவியவர்களின் முதுகில் குத்தும் இந்த பழக்கம் என்றைக்குத்தான் குறையுமோ?

இவர்கள் வரும் போதே ரோஷிணி எதிர்வர, “இவளை பாரு ரோஷி. அந்த பொண்ணை சும்மா விட்டுட்டு பேசிட்டு வந்திருக்கா. டிஸ்கஸ்டிங். நானா இருந்தா நடக்கிறதே வேற. இவ என்னடான்னா? ப்ச்...” பொரிய,

“அடங்குடி, நீவேற அவளுக்கு கொம்பு சீவிட்டு...” மலரை அதட்டல் குரலில் கூறிய ரோஷிணி,
“நேத்ரா, என்ன பீல் பன்றையா?...” அவள் முகம் பார்த்து வினவ,

“என்னது பீலிங்கா? நீ வேற, நான் எதுக்கு அந்த சில்லி கேர்ள் செஞ்சதுக்கு பீல் பண்ணனும். அந்தளவுக்கு அவ வொர்த் கிடையாது. இந்த நேத்ரா மைண்ட்ல நிக்கிறதுக்கு கூட அவளுக்கு தகுதி கிடையாது...” சிலிர்த்துக்கொண்டாள்.

“பின்ன எதுக்கு இப்படி வந்து நிக்கிற?...”

“நான் எங்க நின்னேன். நீயா தான உன் ரூம்க்கு வந்துட்டுருந்தவளை வழிமறிச்சு பேசிட்டு இருக்க...” ரோஷிணியை வார அவள் முறைக்க,

“இந்த ராசு அண்ணாக்கிட்ட மிஸ்டர் கட்டுமரத்தை பத்தின டீட்டயில்ஸ் கேட்ருந்தேன். இன்னும் ஒன்னும் சொல்லலை. அதான். சரி நீ ரூம்க்கு போ. நான் போய் பாத்து பேசிட்டு வரேன்...”

“ஒண்ணும் தேவையில்லை. ராகி போய்ட்டு வந்துட்டா. நீ வா நம்ம ரூம்ல போய் பேசலாம்...”

“அது நம்ம ரூம் இல்லை. உன் ரூம்...” நேத்ரா வாயாட,

“தெரியுது, நம்ம போய் ரூம்ல பேசலாம்ன்ற மீனிங்ல சொன்னேன்...” ரோஷிணி திருத்த,

“அதத்தான நானும் சொன்னேன்...” நேத்ராவை அடிக்கவே கிளம்பிவிட்டாள் வனமலர்.

“நோ நோ அமேஸான். ஆக்ஷன்லாம் வேண்டாம்...’ என சொல்லி சிட்டாக பறக்க இருவரும் அவளின் அலும்பில் புன்னகைத்து மலரின் முகம் தெளியாததை கண்ட ரோஷிணி,

“என்ன மலர்? இன்னும் கோவமா இருக்க போல?...” என்க,

“கோவப்பட்டு என்ன செய்ய? நீ தான் அவளை ஒன்னும் சொல்லவேண்டாம்னு சொல்லிட்டியே...”

“அவளை தானே எதுவும் செய்ய விடகூடாதுன்னு சொன்னேன். நாம செய்யவேண்டாம்னு சொல்லலையே...” எனவும் வனமலரின் முகம் பளிச்சிட்டது.

“சொல்லு சொல்லு. என்ன பண்ணலாம்? அவளை இப்படியே விடமாட்டேன் நான். நமக்கப்றம் இந்த காலேஜ்ல சேர்ந்து நம்ம புள்ளைக்கிட்டாயே அவ தேவைக்கு நின்னுட்டு கேட்பார் பேச்சை கேட்டு நம்ம ப்ரெண்டை காட்டிக்குடுப்பா? எட்டப்பி. என்ன ஒரு திண்ணக்கம் இவளுக்கு?...”

வனமலர் அடங்காமல் ஆக்ரோஷம் கொள்ள,
‘அவளை மட்டுமில்ல, அந்த ரஞ்சனி மேமையும் சேர்த்தே கவனிச்சிடுவோம். படிக்கிற பொண்ணுக்களுக்கு படிப்பை சொல்லிகுடுங்கன்னா இவங்க போட்டுகுடுக்கிற கிரிமினல் வேலையை சொல்லிகுடுக்காங்க. சேர்த்து இருக்கு ரெண்டு பேருக்கும்...”

ரோஷிணியும் வனமலரும் சேர்ந்து பேசி முடிவெடுத்து அதை செயல்படுத்தும் வழிகளை பற்றி பேசிக்கொண்டே நேத்ராவை பின்பற்றி சென்றனர்.
 
அங்கே ராகினியை கட்டிக்கொண்டு நேத்ரா நிற்க அவர்களை இழுத்து நிறுத்தியவர்கள்,
“என்னமோ பாத்து பன்னெண்டு வருஷம் ஆனா மாதிரி ரொம்பத்தான் பாயற?. அடக்கி வாசிங்கடி. இப்போ விஷயத்துக்கு வாங்க...” பொரிந்தாள் வனமலர்.

அதற்குள் ராகினி ரிஷியை பற்றி கூறியிருக்க இருவரும் என்னவென கேட்கும் போது,
“ஒண்ணும் வேலைக்காகிற விஷயம் எதுவும் இல்லை.நம்ம சுமங்கலி மேம் பையன் தான் இந்த கட்டுமரம்...” என நேத்ரா கூற.

“ஹ்ம் இதை தெரிஞ்சு நீ என்ன செய்ய போற?...”

“எல்லாம் ஒரு பொதுஅறிவை வளர்த்துக்கத்தான் அமேஸான்...” கண்சிமிட்டி ஒரு புன்னகை வேறு நேத்ராவிடம்.

“நல்லா வளர்க்கற போ...” ராகினி சொல்ல,

“எதுக்கு இந்த தேவையில்லாத வேலை நேத்ரா? அவர் வந்த நாளே நம்மளை முறைச்சுட்டார்...” ரோஷிணி கவலையாக,

“பெரிய அவர். சும்மா இரு ரோஷி. இதை இப்படியே சும்மா விட்டா நம்ம கெத்து இந்த காலேஜ்ல என்னாகறது?...” ராகினியின் பேச்சில் அவளை முறைத்த ரோஷி,

“உங்களை வச்சுக்கிட்டு ஆணிகூட புடுங்க முடியாதுடி. இதுல இவளை எங்க அடக்க?...” நேத்ராவை கை காண்பித்து ரோஷிணி கூற,

“ஆமா எப்ப பாத்தாலும் கட்டைய போடறது. ப்ச்...” ராகினி முணங்க அவளை கண்டுகொள்ளாமல் நேத்ராவிடம் திரும்பிய ரோஷிணி,

“மகாராணிக்கு என்ன யோசனை?...”

“ஐடியா. பேசாம காவேரியை கட்டுமரத்துக்கு திருப்பி பாய்ச்சினா என்னவாம்?...” கைகளை சொடுக்கிட்டு குதூகலமாக நேத்ரா மொழிந்தாள்.

காவேரி யார் என்றே மற்றவர்களுக்கு தெரியவில்லை. திருதிருவென முழித்து புரியாத பாவனையை முகத்தில் காட்ட தலையில் அடித்துக்கொண்ட நேத்ரா,

“விடிய விடிய கதை கேட்டு காக்கமுட்டை படத்துக்கு கண்ணதாசன் பாட்டு அவார்ட் வாங்கினார்ன்ற கதையாகிபோச்சே?...” என எரிச்சலாக கூறியவள்,

“எத்தனை தடவை சொல்லிருப்பேன் என்னோட கனவை பத்தி. அவளை எப்டி மறப்பீங்க? அவளாலதான நான் பழத்தை பாத்து பழம் கட்டுமரமாகி...” தலையை தாங்கி கோவம் போல் அமர்ந்துகொண்டாள்.

“பழத்தை பாத்ததுக்கு காரணம் அவளா? இவளை மொத்துங்கடி...” மூவரும் நேத்ராவை நடுவில் விட்டு ரவுண்டு கட்ட அடிபாடிகளுடன் கூட இடிபாடும் சேர நேத்ராவை மொத்திவிட்டனர்.

“போய்ட்டு அவர்கிட்ட பேசி ஒரு அரைமணி நேரம் இருக்குமா? ஊர் வம்பை உலக்கையில போட்டு இடிச்சு வாய்ல மென்னுட்டு வந்துட்டு அந்த பொண்ணையா காரணம் சொல்ற?...”

ரோஷிணி நேத்ராவின் கன்னத்தில் இடிக்க அவ்விடம் சிவந்துவிட்டது. கொஞ்சம் அதிகமாகத்தான் அடித்துவிட்டோமோ என பதறி,

“அச்சோ செல்லக்குட்டி சாரிடா. சாரி. ரொம்ப அடிச்சுட்டோமோ? சாரி, சாரி...”

நேத்ராவை கட்டிக்கொண்டு ரோஷிணி கொஞ்ச காதில் புகைவராத பார்த்த ராகினியும், வனமலரும் கப்பலே கவுந்துடுச்சு நமக்கென்ன? அவர்களும் சேர்ந்து கட்டி உருள அவர்களை விட்டு எழுந்த நேத்ரா,

“லூசுகளா பூரிக்கு மாவு பிசையிறது போல பிசஞ்சுட்டு சாரியம் சாரி. நான் என் ரூம்க்கு போறேன்...” வேண்டுமென்றே முறுக்கிக்கொள்ள மீண்டும் ஒரு கேன்சல் கொஞ்சல் சமாதானம்.

கவித்துவமான ஒரு நட்பை பெற்ற நால்வருமே நட்பிற்கு புது இலக்கணம் படைத்தனர். தாயாய், மகளாய், சகோதரியாய், ஆசானாய் வழிகாட்டியாய் என அவர்களுக்குள் அனைத்து உறவுகளையும் உள்ளடக்கி இருந்தனர்.

“போதும் போதும். ஓவரா இருக்கு உங்க கொஞ்சல். அந்த பொண்ணு அவ்வளோ அழகு தெரியுமா? செம பிகர். இந்த கட்டுமரத்துக்கு தான் கொஞ்சமும் ரசனையே இல்லை...” நேத்ரா சலித்துக்கொள்ள,

“இதுக்கும் நீ சொல்றதுக்கும் என்னடி சம்பந்தம்?...”

“அட அமேஸான் , காதல்னா சும்மாவா? அது ஒரு தனி உலகம். காதலிக்கிறவங்க அவங்க லவ்வர்கிட்டதான் அதிகமான கான்சன்ட்ரேஷன் வச்சுப்பாங்க. மைண்ட் ஃபுல்லா செம்ம பீலிங்க்ல இருப்பாங்க...”

“நேத்ரா இந்த விளக்கம் எனக்கு தேவையா?...” ராகினி

“இரு கூழ்வண்டி, அவசரப்படாத. கட்டுமரம் கான்சன்ட்ரேஷன் காவேரி ஆத்துப்பக்கம் போய்ட்டா நமக்கு டென்ஷனே இல்லைல. திரும்பவும் இந்த காலேஜ்ல நம்ம ராஜ்ஜியம் தான்...” சுடிதார் காலரை தூக்கி பெருமையாக சிரிக்க,

“நீ எக்ஸ்ட்ரீம்க்கு திங்க் பன்ற நேத்ரா. இது நமக்கு தேவையில்லாத வேலை. வேண்டாம் விட்டுட்டு...” ரோஷிணி எச்சரிக்க,

“அவர் மட்டும் ஓவர் ரூல்ஸ் கொண்டுவரலாமா நமக்கு. ஒரு ப்ரைவேசியே இல்லாம. மூச்சு முட்டுது. சுமங்கலி மேம் கூட இந்தளவுக்கு ஸ்ட்ரிக்ட் கிடையாது. அப்போலாம் காலேஜ் ஒழுங்கா நடக்காம தலைகீழாவா நடந்துச்சு...”

“அதானே. சூப்பர்ப்பா...” வனமலர் கைதட்டி ரோஷிணியிடம் கடும் முறைப்பை இலவசமாக வாங்கிக்கொண்டாள்.

ரிஷி கல்லூரி பொறுப்பை எடுத்ததில் இருந்து அதிகப்படியான கட்டுப்பாடுகள் மிகையான கெடுபிடிகள் என மாணவர்கள் முதல் பணியாளர்கள் வரை அனைவருக்குமே கொஞ்சம் சிரமமாக தன இருந்தது.

மற்றவர்களுக்கே அப்படியென்றால் இருக்கின்ற கட்டுப்பாடுகளையே தவிடுபொடியாக்க தவிக்கும் நேத்ராவின் துறுதுறுப்புக்கு கடிவாளமிடுவதை ரிஷி செய்ய நினைத்தால் பொறுமை காப்பாளா? பொங்கியேவிட்டாள்.

“இது ரொம்ப ஓவர் நேத்ரா. இது அவரோட காலேஜ். அவங்க இதை இன்னும் முன்னேத்தனும்னு நினைக்கிறதுல என்ன தப்பு?...” ரோஷிணி ரிஷிக்கு பரிந்து பேச,

“என்ன வக்காலத்து வாய்க்கால தாண்டுது? அடங்கு. எனக்கு ஓவர் ரூல்ஸ் போடற யாரா இருந்தாலும் அது ஒசாமா பின்லேடன் தான்...” சிலிர்த்தெழுந்தாள் நேத்ரா.

“என்னமும் பண்ணித்தொலை. நான் லைப்ரரி கிளம்பறேன்...” ரோஷிணி கிளம்ப,

“வா அமேஸான், நாம கொட்டிக்க போலாம். சோறுதான் முக்கியம்...” ராகமாய்.

நேத்ரா கூறிய பாவனையில் வாசல் வரை சென்ற ரோஷிணியே சிரிப்பை அடக்கமுடியாமல் திரும்பி வந்து நேத்ரா முதுகில் மொத்தினாள்.

“எப்போ பாரு விளையாட்டு இவளுக்கு...” அனைவருமே வாய்விட்டு சிரிக்க அவ்விடமே ரம்யமாய் மாறிப்போனது.
அந்த சுகந்தமான சூழ்நிலையை கலைப்பது போல் நேத்ராவின் மொபைல் சிணுங்கியது.

பார்த்தவள் முகம் கோபத்தை தத்தெடுக்க மொபைலை அனைத்து தூர வீசி எறிந்தாள்.

யாரும் எதுவும் பேசவில்லை. சில நொடி அமைதிக்கு பின் ரோஷிணியே மற்றவர்களை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட கொஞ்சம் மனநிலை மாறியது நேத்ராவிற்குள்.

--------------------------------------------------------------------------------
பத்து நாட்கள் கழித்து, ஹாஸ்டல் ரூமில் மிதமான இசையில் ஒலித்த ஒரு பாடலுக்கு நேத்ராவின் அட்டகாசமான ஆட்டத்துடன் கச்சேரி களைகட்டியது.

ராகினியும் வனமலரும் விசில் அடிப்பது போல பாவனை செய்ய ரோஷிணி சப்தமே கைதட்டினாள். ஒருமணிநேரம் இப்படியே ஆடலுடன் பாடலும் சேர்த்து பட்டையை கிளப்பியபடி இருந்தனர்.

சடாரென கதவு திறக்கும் ஓசையில் திரும்பி பார்க்க வார்டன் யசோதா மூக்குகண்ணாடியை சரிசெய்தபடி இவர்களை மிதப்பாக பார்த்து வைக்க நேத்ராவின் முகம் அலுப்பாக மாறியது.

“போயும் போயும் நீதானா?...” என்பதை போல கண்டுகொள்ளாமல் திரும்பி நிற்க யசோதைக்கு பற்றிக்கொண்டு வந்தது.

“இரு உன்னை இன்னைக்கு மொத்தமா சேர்த்து வச்சு கவனிச்சுக்கறேன்...” எனும் பார்வை பார்க்க,

“என்ன செய்வாய் என்னை? பிரின்ஸிபால் மேம்கிட்ட தானே போய் கம்ப்ளைன்ட் செய்வீங்க. அதுக்கு பின்னால நான் பார்த்துப்பேன்...” நேத்ராவின் பார்வை பதிலடி கொடுத்தது.

அதில் யசோதையின் முகம் கறுக்க விளைவு நேத்ரா தன் தோழிகளுடன் ரிஷியின் முன்னால் நின்றாள்.
“இதற்கு தானே காத்திருந்தேன். வாடி வா வச்சிக்கறேன் உன்னை...” ரிஷியின் பார்வையில் தெரிந்த அக்னியில் நேத்ராவின் முதுகுவடம் ஜில்லிட்டது.

அலை தீண்டும்...
 

Advertisement

Top