Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Episode - 8 உன்னை உரிமம் எழுதிக் கொள்ள ஊர் உலகம் எதற்கடி ஒற்றை பார்வை போதுமடி!!!

Advertisement

Nilaprakash

Member
Member
கார்த்திக் கைகளில் ஏந்தி வர முகம் சிவந்து மெல்ல கீழிறங்க முயற்சித்தாள்.

வாணியும் ரூபாவும் தங்கள் கொழுந்தனின் வருகையை கண்டு ஒரு நிமிடம் முகத்தில் ஈயாடாது அமர்ந்திருந்தனர்.

" ஐயோ என்னாச்சு ..!"

என்று சத்தமிட்ட மங்கையின் குரலே அவர்களை அதிர்ச்சியிலிருந்து மீட்டெடுத்தது.

" ஒண்ணுமில்ல ங்க கீழே விழுந்துட்டாங்க .."

" அடி ஏதாவது பட்டிருக்கா..."

மங்கை மலரை விசாரிக்க ஒன்றுமில்லை என்பது போல் அவன் கைகளில் இருந்து விலகி ஓடினாள் மலர்.

" இருங்க மாப்பிள்ளை நான் என்னனு பார்த்துவிட்டு வரேன் "

மங்கை உட்செல்லவும் கார்த்திக் செய்வதறியாது தன் அண்ணிகளின் அருகே வந்து அமர்ந்தான்.

" இப்படி ஓடி போற பிள்ளையை தான் நடக்க முடியாது னு தூக்கிட்டு வந்தீங்களா கொழுந்தனாரே "

வீணா பாவனையோடு கேட்கவும் ரூபா சிரிப்பை அடக்க முடியாது கொல்லென சிரித்தாள்.

கார்த்திக் தன் அண்ணியை பார்த்து ஏதோ சொல்ல வாயெடுக்க இளங்கோ வீட்டிற்குள் நுழைந்தான்.

" வாங்க ..வாங்க ..எப்ப வந்தீங்க "

" இப்ப தான் தம்பி வந்தோம்.."

" அம்மா...மா ..கூல்டிரிங்ஸ் ஏதாவது சாப்பிடுறீங்களா "

" இல்லை தம்பி ..அம்மாவை பார்த்தோம் பொண்ணு ஏதோ கீழே விழுந்துட்டா போல .."

" அவ சரியான வாலு .. மரம் ஏறிருப்பா .."

உள்ளே மலரிடம் அதே வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டு இருந்தாள் மங்கை.

" மரம் ஏறினியா .. மாப்பிள்ளை முன்னாடி கீழே விழுந்திருக்க ..அறிவிருக்கா உனக்கு "

" மா .. ஏற்கெனவே வலிக்குது ..இதில நீ வேற திட்டாத மா "

" ஓடி வந்த அப்ப வலி இல்லையா "

வலியாவது ஒண்ணாவது அவன் மார்புச் சூட்டின் இதம் முகம் முழுதும் சிவக்க அவன் கைகள் பட்டு உடல் எங்கும் கூச ..இந்த கால் வலி எல்லாம் எங்கே இருந்தது என்றே தெரியவில்லையே...

மலர் தன் தாயை பார்த்து முறைத்தாள்.

" பின்னே ..ஙே ஙே னு அழுதுட்டு நிக்கட்டுமா "

அவள் குறும்பு பேசவும் அவள் முதுகில் செல்ல அடி அடித்து விட்டு திரும்ப ரூபாவும் வீணாவும் அறையில் நுழைந்திருந்தனர்.

" ரொம்ப அடிங்களா "

வீணா கிழிந்திருந்த அவள் சுடிதாரை நோக்கினாள்.

காம்பவுண்ட் சுவர் மிக உயரமில்லை எனினும் மரத்தின் கிளைகளில் சிலது உரசி சிராய்ப்பு காயம் சின்னதாக இருந்தது. கால் சிறிது வீக்கமிருந்தது.

" இல்லை ங்க இந்த அறுந்த வாலு எப்பவும் செய்யறது தான் ..."

தன்னை காட்டிக் கொடுத்த அம்மாவை முறைத்து விட்டு மலர் அவர்களைப் பார்த்து அசடு வழிந்தாள்.

" பார்த்து மலர்..கல்யாண பொண்ணு கொஞ்சம் ஜாக்கிரதையா இரு "

" நல்லா சொல்லுங்க ...சொன்னா கேட்டா தானே "

மலர் தன் தாயை பார்த்து முறைத்தாள் ‌.

" அப்படி எல்லாம் இல்லங்க.. கொஞ்சம் கால் வழுக்கிருச்சு .."

" நிச்சய புடவைக்கு அளவு ஜாக்கெட் வாங்க வந்தோம் .."

மங்கை பதில் சொன்னாள்.

" இருங்க .. இருங்க ..ஏ மலர் அந்த ரெமி கல்யாணத்திற்கு தைச்சிருந்தியே அந்த ஜாக்கெட் எங்கே ..."

" பீரோல இரண்டாவது செல்ஃப் ல இருக்கு "

பெண்கள் மூவரும் பேசிக் கொண்டு இருக்க வெளியில் இளங்கோ கார்த்திக் ன் வேலை யை பற்றி விசாரித்துக் கொண்டு இருந்தான்.

" ஜெர்மன் ல தான் ஃவொர்க் பண்றீங்களா .."

" இல்லங்க ..நாங்க அஞ்சு ஃப்ரெண்ட்ஸ் சென்னை ல லேப் ஆபிஸ் வைச்சிருக்கோம்..எங்க ரிசர்ச் ப்னான்சியல் க்ராண்ட் ஜெர்மன் பாராமெடிக்கல் கம்பனி .. அடிக்கடி ரிசர்ச் ஓரியண்ட் ஆ போக வேண்டி இருக்கும் "

" என்ன மாதிரியான ரிசர்ச் "

" மரபணு மாற்றங்கள் சம்மந்தமான நோய் அப்பரம் தீர்வு ..அப்படி "

முதலில் இப்படி விளக்கம் கொடுப்பதே அவனுக்கு பிடிக்காது ..உள்ளே அவள் எப்படி இருக்கிறாள் என்பதை அறியும் ஆவல் அவன் கண்களை நொடிக்கு நூறு முறை அந்த அறையை நோக்க வைத்தது


இளங்கோ அதை படித்தவன் போல

" வர்றீங்களா மலரை பார்த்துவிட்டு வருவோம் "

" மலை ஏறினாலும் மச்சினன் தயவு வேண்டும் னு சும்மாவா சொன்னாங்க .."

"மச்சான் என்ன கேட்டீங்க "

இளங்கோ அவனின் முகமாற்றத்தைக் கண்டு சிரித்தே விட்டான்.

" இருங்க மாப்ளே .‌.."

என்று சொல்லி மலரின் அறையை நோட்டமிட்டு கார்த்திக் ஐ வருமாறு சைகை காட்டினான்.

கார்த்திக் அதற்காகவே காத்திருந்த வன் போல் நடப்பதற்கு முயற்சித்து ஓட்டத்தை பிடித்தான்.


மலர் கார்த்திக் ஐ கண்டதும் மௌன விரதம் இருப்பவள் போல் தலை குத்தி அமர்ந்திருந்தாள்.

இளங்கோ அவள் அருகில் வந்து காதில் கிசுகிசுத்தான்.

" நீ இவ்வளோ நல்லவளா .. அடேங்கப்பா என்ன அடக்கம்...பவ்யம் "

தன் அண்ணனின் கையை நன்றாக கிள்ளி விட அவன் கத்தினான்.

" என்னாச்சு.. என்னாச்சு "

" ஒண்ணுமில்ல ஒண்ணுமில்ல கார்த்திக் அது பொண்ணோட அண்ணண் .. பொண்ணு இல்ல பதறாதீங்க "

வாணி சொல்லவும் பெரியவர்கள் புன்னகைத்துக் கொண்டனர்.

சிறிது நேரத்தில் அனைவரும் கிளம்ப அவளிடம் பேச முடியாத ஏக்கத்துடனே கிளம்பினான் கார்த்திக் ‌‌.

" சரி பார்க்கவாது விட்டார்களே .. அதுவும் அள்ளி அணைத்து தூக்கி..அடேய் கார்த்திக் இன்னைக்கு நைட் தூக்கம் ஸ்வாஹா ..."

அவன் எண்ணங்களில் மூழ்கியிருக்க வீணா மறுபடியும் அவனை ஓட்டினாள்.

" தம்பி ..தம்பி..எங்களை நம்பி மூணு உசிர் இருக்கு..கனவிலே கார் ஓட்டி எங்களை "

அவள் சைகை காண்பிக்கவும் கார்த்திக் அவர்களை பார்த்து முறைத்தான்.

" அவளை பார்க்க கூட்டிட்டு வந்தீங்க ன்ற ஒரே காரணத்திற்காக உங்களை சும்மா விடறேன் "

என்பது போலிருந்தது அவன் பார்வை .

கார் நேராக ஒரு பெரிய பேக்கரியில் நின்றது.ரூபாவும் வீணாவும் ஒருவரை ஒருவர் பார்க்க காரை விட்டு இறங்கியவன் சிறிது நேரத்தில் இரண்டு பெரிய பைகளில் தீனி பாக்கெட் களுடன் வந்தான்.

ரூபா கேள்வியாக பார்க்க

" நான் பிள்ளைகளுக்கு தீனி வாங்க தான் காரை எடுத்தேன் "

அவன் சொல்லி விட்டு காரை ஓட்ட அண்ணிகளின் சிரிப்பு நிற்க வெகு நேரமானது.



அன்றைய இரவு மலருக்கு ஆணின் முதல் தீண்டல் எவ்வளவு தகிக்கும் என்பதை எடுத்து சொல்வதற்கெனவே வந்தது.

அவளின் தூக்கம் கெடுத்தவனும் அதே நிலையில் தன் கை விரல்களை நோக்கி விட்டு லேப் டாப் ஐ நோக்கினான்.

ஒரு புறம் ஜெனி அவன் கழுத்தை நெரித்துக் கேட்டாள்

" டேய் ஒரு வாரத்துல ரிப்போர்ட் அனுப்பனும் டா ..பன்னி ".

மறுபுறம் முகத்தை கைகளால் மூடி

" எனை மீண்டும் ஒருமுறை அணைத்துக் கொள்ளேன் "

என்று நின்றிருந்தாள் மலர்‌.

ஒரு நொடி தாமதியாது அவன் மனக்குதிரை தன் மனம் திருடிய வளை கைகளில் ஏந்தி தட்டான் சுற்றத் தொடங்கியது.

இலட்சியமாவது மண்ணாவது.. திடுக்கிட்டு தன் மனதில் தோன்றிய வார்த்தைகளை மீண்டும் எண்ணி எண்ணி தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான்.

மறுநாள் முழுக்க அவன் மனம் ஒரு வித தீவிர யோசனையில் ஆழ்ந்திருந்தது.மலரின் மனம் மீண்டும் அவனை காணப் போகும் மறு நாளுக்காக இன்றைய நாள் இரக்கமில்லாமல் ஏன் இவ்வளவு மெதுவாக நகர்கிறது என நொந்துக் கொண்டாள்.

அவர்களின் நிச்சய நாள் விடிந்தே விட்டது .

கார்த்திக் ஒரு அழகான மெரூன் சர்ட் சந்தனக் கலர் பேண்ட் அணிந்து இருந்தான்.அவனின் நிறத்திற்கு வெகு எடுப்பாக இருந்தது ‌.

மூன்று கார்களில் குடும்பம் முழுவதும் மலரின் வீட்டின் முன் இறங்கியது.ரூபா வீணா பட்டுச் சேலை யில் தட்டுகளுடன் நடந்து சென்றனர்.

மங்கை சுற்றியிருந்த குடும்பங்களின் ஆச்சர்ய பார்வையை கொஞ்சம் பயத்துடனே அணுகினார்.செழியனும் மங்கையும் சம்மந்தி வீட்டை வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர்.

கரிகாலன் முகம் முழுக்க கம்பீரத்தையும் சந்தோசத்தையும் சேர்த்து வைத்திருந்தார்.அன்னபூரணி தன் மகனை கண்களாலேயே திருஷ்டி சுற்றி போட்டு கொண்டு இருந்தாள்.

மலர் சபைக்கு வணக்கம் சொல்லி கார்த்திக் அருகே அமர வைக்கப்பட்டாள்.

கார்த்திக் கு அவளின் அருகாமை ஆசைகளின் மதகையை உடைக்க தொடங்கியது.பரபரத்த விரல்களை கட்டுபடுத்தி அமர்ந்திருந்தான்.

" எதிரே அமர வைத்தால் என்ன ‌‌..இவளை இப்ப பார்க்கவும் முடியல தொடாம இருக்கவும் முடியல ...சத்திய சோதனை "

அவனின் குரல் கேட்டு விட்டது போலவும் நிச்சய சேலை அணிந்து வர ரூபாவும் வீணாவும் அவளை அழைத்து சென்றனர்.

கார்த்திக் கு ஃபோன் வந்த வண்ணம் இருந்தது.கரிகாலன் முறைப்பை தவிர்த்தப்படி பேசிக் கொண்டு இருந்தான் கார்த்திக்.

அவன் பேசிக் கொண்டே நிமிர அந்த வெந்தய நிற பட்டுச் சேலையில் பதுமை என வெளி வந்தாள் மலர்.அவன் பேச மறந்தான் உலகம் மறந்தான்..என்ன அழகடி இது ..என்னை தூக்கி போட்டு தாக்கும் அழகு.‌..

மலர் அவன் கண்களில் தேங்கியிருந்த காதலை மொத்தமும் கொள்ள முடியாது முகம் சிவந்து தலை குனிந்தாள்.

ரூபா கார்த்திக் ன் காதில் படு வண்ணம் நெட்டி முறித்தாள் ‌. தன் அண்ணியை பார்த்து புன்னகைத்தான் கார்த்திக் .

சிறிது நேரத்தில் சம்பிரதாயங்கள் முடிய இரு மாதங்களில் திருமண தேதி குறிக்கப்பட்டது.‌

இரு வீட்டாரும் மனத் திருப்தியுடன் திருமண பேச்சை முடித்தனர்.

ரீனா தன் தோழியின் காதில் கேட்டாள்

" ஏன்டி அவர் ஃபோன் நம்பர் வாங்கினாரா "

மலர் இல்லை என்பது போல் தலையசைத்தாள்.கரிகாலன் தன் மருமகள்களிடம் சொல்லியே வைத்திருந்தார் அவனை முடிந்த அளவு திருமணம் வரை பெண் வீட்டாரிடம் அதிகம் பேசாதிருக்க செய்ய வேண்டும் என்று.‌

தன் மகன் அவர்களிடமே பேசி திருமணத்தை இரு வருடம் ஒத்திப் போட செய்யும் அழுத்தக்காரன் என்பதை அறிந்தே இருந்தார் எனவே அதற்கான வாய்ப்பை உருவாக்கதவாறு பார்த்துக் கொண்டார்.

நிச்சயம் முடிந்த அன்று இரவு கார்த்திக் சென்னை செல்வதாக இருந்தது.கொஞ்சம் விரைவாகவே கிளம்பினார்கள்.

மலரை மீண்டும் ஒருமுறை காதலோடு நோக்கினான் அதில் ஆயிரம் அணைப்புகளும் முத்தங்களும் பொதிந்து இருந்தது.

மலர் தன் வாழ்வின் மிக மிக இன்பமான நாள் அதுவென தன் டைரியில் எழுதி முடித்தாள்.














 
Top