Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Hostel pasanga adikura koothae thanni thaan..

Vanamalar nalla galatta aalu thaan neeyum..

Rishi ku paarka pora ponnu nethra va
 
அலை – 8

நேத்ராவிடம் மொக்கை வாங்கிய சூடு தணியாமல் இருந்தவனின் உள்ளத்தில் மேலும் நெருப்பை பற்றவைக்கவென இருந்தது வருகையும் அவன் தாங்கி வந்த செய்தியும். வீட்டினுள் கோபமாக நுழைந்தவன் சுமங்கலியை தேடினான். அதே நேரம் தந்தை சிவராமன் வீட்டில் இருக்கவே கூடாதென்ற வேண்டுதலோடு. காரியமே கெட்டுவிடுமே.

“மாம்...” வீடே அலறும் படி கத்தியவனின் கூச்சலில் அடித்துப்பிடித்து ஓடிவந்தார் சுமங்கலி.

“வாட் இஸ் திஸ் ரிஷி?...” கண்டிப்பாக கேட்டவரை,

“அதை நான் கேட்கனும் மாம்...” கொஞ்சமும் குரலை தாழ்த்தாமல் கத்த,

“டோன்ட் ஷவுட்...” என்றவர்,

“வா ஆபீஸ் ரூம் போய் பேசிப்போம் எதுவானாலும்...”

அவனின் கை பிடிக்க வர அவரை தவிர்த்து தாண்டிக்கொண்டு அந்த அறைக்கு சென்றான். செல்லும் அவனையே பார்த்தவர் கிட்சன் நோக்கி சென்றார்.

அவனின் கோவத்தை குறைப்பதற்காக குளிர்ந்த முலாம்பழச்சாறை தயாரிக்க ஆரம்பித்தார். அவரின் பின்னே மீண்டும் வந்தவன்,
“மாம் இங்க நான் கூப்ட்டிட்டு இருக்கேன். நீங்க கிட்சனுக்கு போனா என்ன அர்த்தம்?...”

கோவத்தை அடக்கிய குரலில் பல்லைகடித்துக்கொண்டு கேட்க அவனை ஒரு பார்வை அழுத்தமாக பார்த்தவர் சமையல் செய்ய உதவியாய் இருக்கும் பெண்ணிடம் திரும்பி,

“சாலா ப்ரிட்ஜ்ல இருந்து மில்க்மெய்ட் டின்னை எடு...” என சொல்லி பழத்தை சிறிதாக நறுக்க ஆரம்பித்தார்.

தாயின் பார்வையிலேயே கொஞ்சம் அடங்கியவன் வேறு வழியில்லாமல் காலை உதைத்துக்கொண்டு மீண்டும் அலுவலக அறைக்குள் நுழைந்தான்.

“அம்மா தம்பி ரொம்ப கோவமா போகுது...” சாலா சொல்ல,

“தெரியாமலா? அதெல்லாம் தெரியும். நீ ஐஸ் க்யூப்ஸ் எடுத்து வெளில வை...” கடமையே கண்ணாக ஜூஸ் தயாரித்து தங்கள் இரண்டு பேருக்கும் எடுத்துக்கொண்டவர்,

“சாலா ஜூஸ் இன்னும் இருக்கு. நீயும் குடிச்சிட்டு வேலையை பார்...” சொல்லி ரிஷியை பார்க்க செல்ல அவனோ இன்னமும் கோபம் மட்டுபடாமல் இங்குமங்கும் நடந்துகொண்டிருந்தான்.

சுமங்கலியை பார்த்ததும், “மாம்...” என ஆரம்பிக்க அவனை கையமர்த்தி தடுத்தவர்,
“இதை குடிச்சு முடி. ரெண்டாவது பேசுவோம்...” என்று சொல்லி தன்னுடைய க்ளாஸை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்.

ரிஷியும் ஒரே மடக்கில் ஜூஸை காலி செய்துவிட்டு சுமங்கலி குடித்துமுடிக்க காத்திருக்க அவரோ பொறுமையாக குடித்து முடித்த பின்னே மகனை பார்த்தார்.

“இப்போ சொல்லு. என்ன உனக்கு அவ்வளோ டென்ஷன்? என்னைக்குமே நம்மோட மனநிலையை மத்தவங்க கணிக்கிற அளவுக்கு நாம நடந்துக்க கூடாது ரிஷி...”

“என்னதான் உனக்கு கோவம் இருந்தாலும் அதை நம்ம வீட்ல வேலை செய்யிறவங்க வெளில உன்னோட பழகறவங்கன்னு எல்லோருக்கும் இப்படித்தான் காமிச்சு குடுப்பியா?...”

சுமங்கலியின் பேச்சில் உள்ள உண்மை சுட தன்னை தான் நடந்துகொண்டதை உணர்ந்தான்.

“தான் என்றைக்கும் இந்தளவிற்கு நிதானம் தவறியதில்லையே...” நினைத்தவன் சுமங்கலியிடம் சொல்லியும் விட,
“அதை நானும் கேட்கலாமே? இதுவரை செய்யாத தவறை இப்போ ஏன் செய்யற?...”

அவரின் கேள்வியில் கண்ணிமைக்கும் நொடியில் மனதிற்குள் நேத்ரா வந்து செல்ல மீண்டும் கடுமையை பூசியது அவன் முகம்.

“என்ன ரிஷி உன் ப்ராப்ளம்?...” தாயின் குரல் கனிவாக கேட்டதும் கொஞ்சம் இலகுவானவன்,

“மாம் தாத்தா எனக்கு பொண்ணு பார்த்திருக்கிறாராம். தினேஷ் வந்து காலேஜ்ல சொன்னான். எனக்கு சுத்தமா பிடிக்கலைமா. இப்போ மேரேஜ் பண்ணிக்கற கண்டிஷன்ல என்னோட மைண்ட் இல்லை...”

“ஓஹ் இதுதான் உன் ப்ராப்ளமா? இதை ப்ராப்ளம்னு கூட சொல்லமுடியாது...” என்றவரிடம் முறைத்து,

“உங்களுக்கு இது ப்ராப்ளம் இல்லை. ஆனா எனக்கு இருக்கு. இப்போ மேரேஜ் வேண்டாம்னா வேண்டாம் தான்...” உடும்பாய் நிற்க,
“நீ லவ் பன்றியா ரிஷி...”

“ஹைய்யோ மேரேஜ் வேண்டாம்னா உடனே இதுவா தான் இருக்கும்னு எல்லா டிபிகல்ட் பேரன்ட்ஸ் மாதிரி நீங்களும் நினைக்காதீங்க மாம்...” அத்தனை சலிப்பு குரலில்.

“இப்போ உடனே கல்யாணம்னு யார் சொன்னா? உனக்கும் கல்யாணம் செய்துவைக்கிற வயசாகிடுச்சே. தாத்தா ஒரு ப்ரபோசல் கொண்டு வந்திருக்காங்க. இது யூஸ்வலா எல்லா பேமிலிலையும் நடக்கிறதுதானே?...”

சாதாரணம் போல் பேசியவருக்கு எப்படி புரியவைக்க என ரிஷி திருதிருத்தான். ஏனோ திருமணம் என்றதும் சுத்தமாக மனதிற்கு ஒப்பவில்லை.

“தினேஷ் என்ன சொன்னான் ரிஷி?...” முகம் தெளியாமல் குழப்பத்திலும் பிடித்தமின்மையிலுமே ரிஷி உழல அவனை தெளிவுபடுத்த எண்ணினார்.

“அதான் சொன்னேனே. எனக்கு பொண்ணு பார்திருக்காங்கன்னு...”

“அதை மட்டும் தானே சொன்ன. வேற என்ன சொன்னான்னு சொல்லு...” அதில் எரிச்சலானவன்,

“ஏன் மாம் இப்டி ஒன்னோன்னுத்துக்கும் எதிர்கேள்வி கேட்டுட்டே இருக்கீங்க. இரிட்டேட்டிங்கா இருக்கு...” ரிஷியின் இந்த பேச்சில் திகைத்தவர்,

“ரிஷி ஆர் யூ ஆல்ரைட்?...” கவலையான முகத்தோடு சுமங்கலி கேட்டதும் சுதாரித்தவன்,

“அந்த வாயாடி பேசினதுல அம்மாவை ஹர்ட் பண்ணிட்டேன். இன்னும் இவளால நான் என்னவெல்லாம் செய்ய இருக்கேனோ?...” தன்னையே கடிந்துகொண்டான்.

“அச்சோ சாரி மாம். டென்ஷன்ல ஏதோ டங் ஸ்லிப் ஆகி...” இறைஞ்சுதலாக கேட்க அப்போதும் அமைதியாகவே இருந்தார் அவனின் முகம் பார்த்து.

“மாம், தாத்தா பொண்ணு பார்த்திருக்கிறதா மட்டும் தான் சொல்லிருக்கார். மத்த விபரம் எல்லாம் வீட்ல போய் கேட்டுக்க சொல்லிருக்கார். அடுத்த வாரம் ரெண்டு நாள் ப்ரீ பண்ணிக்க சொன்னாராம்...”

வேறெங்கோ பார்த்துக்கொண்டே கூறி முடிக்க சரியாக சிவராமனும் சுமங்கலிக்கு மொபைலில் அழைத்தார். அவரிடம் பேசி முடித்த சுமங்கலி அடுத்ததாக துரைச்சாமிக்கு அழைத்து பேசி முடித்து ரிஷியிடம் வந்து அமர்ந்தார்.

“பொண்ணு நமக்கு தூரத்து சொந்தம் தானாம் ரிஷி. நம்ம குடும்பத்துக்கு பொருத்தமா அமைதியான நல்ல பொண்ணாம். தாத்தாவே விசாரிச்சுட்டாங்க போல...”

“மாம்...”

“இரு நான் சொல்லி முடிச்சிடறேன். இது சும்மா ஒரு பார்மாலிட்டி தானே. போய் முதல்ல பொண்ணை பாரு. அவங்க பேமிலியோட பேசு. உனக்கு பிடிச்சா ப்ரசீட் பண்ணலாம். பிடிக்கலைனா ட்ராப் பண்ணிடலாம்...”

“ஆர் யூ சூர்...” நம்பாமல் கேட்க,

“கண்டிப்பா. உன்னோட விருப்பம் இல்லாம நீ சொல்லாம நிச்சயம் எதுவும் நடக்காது...” அவனின் சீண்டல் பார்வையில் சிலிர்த்தவர்,
“உன் கல்யாண விஷயத்துல மட்டும் தான்...” என சுமங்கலி தெளிவாக்க வாய்விட்டே சிரித்துவிட்டான்.

“எப்போ போகனும்னு முதல்லையே சொல்லிடுங்க மாம்...”

“இன்னும் ரெண்டு வாரத்துல சிவராத்திரி வருது. அதுக்கு முன்னாடி போகவேண்டி இருக்கும். அவங்களுக்கும் தோது பார்க்கனும்ல...”
“ஓகே மாம். உங்க மேல உள்ள நம்பிக்கையில போறேன்...” என எழுந்துகொள்ள,

“டேய் டீட்டயில்ஸ் கேட்டுட்டு போயேண்டா...” அவனை இழுத்து பிடித்து உட்கார்த்தி,
“பொண்ணோட அப்பாவும் அம்மாவும் வொர்க் பன்றாங்க. ஒரு பொண்ணு ஒரு பையன். சென்னைல இருக்காங்க...”

சென்னை என்றதும், “ என் ஊர் காஞ்சிபுரம்...” என நேத்ராவை முதல்முதல் பார்த்தபோது அவள் கூறியது சம்பந்தமே இல்லாமல் ஞாபகத்திற்கு வந்தது. நொடியில் இனிப்பும் கசப்புமாய் ஒரு புரியாத உணர்வு.

“பொண்ணு ஊர் காஞ்சிபுரமா?...” வாய் உளற,

“இல்லையே சென்னைன்னு தானே தாத்தா சொன்னாங்க...” சுமங்கலியின் குரலில் தன்னை மீட்டவன்,

“இல்லையில்லை. சென்னை பக்கத்துல தானே காஞ்சிபுரம் இருக்கு. அது ஞாபகம் வந்துச்சு...” திடீரென தொண்டை அடைக்க சமாளித்தான்.

எதிலிருந்தோ விலகிச்செல்லும் வலி. அது விருப்பமாயும் விருப்பமில்லாமலும் அவனை சுழற்றியடிக்க திணறினான்.

“ஏன் நீ அந்த ஊர் போய்ருக்கிறயா? உனக்கு தெரிஞ்சவங்க யாரும் அந்த ஊர்ல இருக்காங்களா?. இவ்வளோ டிஸ்டர்ப் ஆகற?...”

சுமங்கலியின் முகத்தில் இருந்த யோசனை ரிஷிக்குள் அபாயமணி அடித்தது.
Nice
 
“நத்திங் மாம். நான் போனதில்லை. ஆனா கேள்விபட்டிருக்கேன்...” என்றுவிட்டு,

“பொண்ணு பார்க்க போன்னு மட்டும் சொல்றீங்க? பொண்ணு போட்டோவை காட்டலை...” அவரின் சிந்தனையை மாற்றவென கேட்க,

“அதுசரி. உன் தாத்தாவை பத்தி தெரியாதா? அவருக்கு இப்படி போட்டோ காமிக்கிறது பிடிக்காதுன்னு...”

“அப்போ நேர்ல பார்த்து பிடிக்கலைனா மட்டும் ஒத்துப்பாராக்கும். பார்த்துட்டே இருங்க. பார்த்துட்டு வந்துட்டேன்றதனால என்னை கட்டாயப்படுத்தி தாலிகட்ட சொன்னா அப்பாவுக்கு கட்டி வச்சு உங்களுக்கு ஆப்பு வச்சிடுவேன்...”

“ராஸ்கல் எனக்கே ரிவீட்டா?...” அவனை துரத்த அவரிடமிருந்து தப்பித்து,

“ஓகே மாம் நான் என் ரூம்க்கு போறேன்...” என்றபடி ஓடிவிட்டான்.

ஏனோ இந்த சம்பந்தம் தகைந்துவிடவேண்டும் என அவரின் உள்மனம் ஆசை கொண்டது. ஆனால் ரிஷியின் மனநிலை அதை ஏற்க வேண்டுமே? நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்?????
--------------------------------------------------------------------​
சத்யாவிற்கு உலகமே தட்டாமலை சுற்றியது. நேற்று துவைத்துப்போட்ட உடைகள் அனைத்தும் காற்றில் பறந்து தரையில் மிதிபட்டு மீண்டும் அழுக்காகி இருந்தது. இன்றுமட்டுமல்ல என்றைக்கு நேத்ராவை மாட்டிவிட ரஞ்சனிக்கு துணைபோனாளோ அதற்கு பின் தான் இது போன்ற சம்பவங்கள் அரங்கேற ஆரம்பித்தது.

முதுகு ஒடிய துவைத்து உலர்த்திய துணிகளில் சில பல மீண்டும் அழுக்காகி துவைக்கும் நிலைக்கு வந்து நிற்கும்.
குளிக்க செல்லும் இடத்தில் வரிசையில் நிற்கையில் வேண்டிமென்றே தனக்கு பின்னால் வந்த பெண்கள் அவளை முந்திக்கொண்டு சென்று குளித்து வர இவள் காரணம் கேட்டால் வேண்டுமென்றே சண்டைக்கு வந்தனர்.

இது அனைத்தும் வேண்டுமென்றே செய்வது தன என தெளிவாக தெரிந்தவளால் எப்படி சரி செய்வது என புரியவில்லை.
நேத்ராவிடம் சென்று பேச பயமாக இருக்க சில நாட்கள் பொறுத்தவள் எதுவானாலும் பேசி பார்ப்போம் என்னும் முடிவிற்கே வந்துவிட்டாள்.

தங்களுடைய அறையில் நேத்ராவிற்காக காத்திருக்க வெகு நேரம் சென்ற பின்னே நேத்ரா வந்து சேர்ந்தாள்.
தன் பின்னால் சத்யா வந்து நிற்பதும் தன்னிடம் ஏதோ பேச நினைத்து தயங்குவதுமாக இருப்பதை புரிந்தாலும் நேத்ரா கண்டுகொள்ளவே இல்லை.

தன் வேலைகளை முடித்து கட்டிலில் அமர்ந்து இழுத்து போர்த்த ஆரம்பித்ததும், “நேத்ராக்கா...” என அவசரக்குரலில் கூவினாள் சத்யா.

“நேத்ராக்கா ப்ளீஸ் கொஞ்சம் பேசனும். நீங்க கூட பேச வேண்டாம். ஆனா நான் இதை உங்ககிட்ட சொல்லியே ஆகனும். ப்ளீஸ் ப்ளீஸ்...” அழுகை குரலில் பேச எரிச்சலான நேத்ரா,

“ஏய் சந்து. இவ எதுக்கு என் காலுக்கு கீழே உட்கார்ந்துட்டு ஒப்பாரி வைக்கிறா? காண்டாகுது. என்னனு கேட்டு சொல்லு. தூங்கனும் நான்...”

சத்யாவின் முகத்தை கூட பார்க்காமல் சைந்தவியை இடை நிறுத்தி பேச,

“சத்யா அதான் அக்கா சொல்ல சொல்லிட்டாங்கள. என்ன உன் பிரச்சனைன்னு அழுகாம டக்குன்னு சொல்லு...” என உந்த,

“நான் என்ன கோர்ட்டா நடத்திட்டு இருக்கேன். போற வர்ற எல்லாருக்கும் பஞ்சாயத்து பண்ணி வைக்க. என் பஞ்சாயத்தே ஊர் எல்லை வரைக்கும் நிக்குது...” என சலித்து சைந்தவியை பார்த்து.

“வந்து நேத்ராக்கா...” நேத்ராவின் இரக்கத்தை சம்பாதித்தே ஆகவேண்டி மீண்டும் அழ,

“இதுதானா இவ டக்கு. சந்து நீ கேட்டுட்டு மெதுவா நேரம் கிடைக்கிறப்போ சொல்லு...” மீண்டும் போர்த்திய நேத்ராவை தடுத்த சத்யா,

“அழலைக்கா ப்ளீஸ். சொல்றதை கேட்டுடுங்க...” அனைத்தையும் சொல்லி முடித்து மீண்டும் விசும்ப,

“ஓஹ் இவளை பழிவாங்க நான் இதை செய்யறதா இவ நினைக்காளோ? சொல்லிவை சந்து. நான் நினைச்சு பாக்கக்கூட விரும்பாத ஒருத்தி இவ. இந்த சீப் பாலிட்டிக்ஸ் எனக்கு வராது. எதுவானாலும் நேருக்கு நேர் தான்...”

“ஹைய்யோ அக்கா நான் உங்களை சொல்லலை. உங்களோட ப்ரெண்ட்ஸ்...”

அதுவரைக்கும் சத்யாவின் முகத்தை கூட பார்க்க விருப்பமற்று சைந்தவியிடமே பதில் பேசிக்கொண்டிருந்தவள் எரிமலையாகிவிட்டாள்.

சத்யாவை நேருக்கு பார்த்து, “என்ன சொன்ன? என்னோட ப்ரெண்ட்ஸ் இதை செய்றாங்களா? அவங்களுக்கு வேற வேலை இல்லை பாரு. அவங்க உன்னை வச்சு செய்யிற அளவுக்கு நீ பெரியாளா?...” அவளின் கோபத்தில் வாயடைத்து போனாள் சத்யா.

“உன்னை மாதிரி சில்லி மைண்ட்னு நினைச்சியா அவங்களை. உன் மென்டாலிட்டி தான் அது. என் ப்ரெண்ட்ஸ் பத்தி பேசின பார்த்துக்கோ...”

இவ்வளவும் நடந்திருக்க கிடைத்த கேப்பில் சைந்தவி ராகினிக்கு அழைத்துவிட்டாள். நேத்ரா பேசிக்கொண்டிருக்கும் போதே மற்ற மூவரும் வந்துவிட,

“நீங்க வேணும்னா நேரா கேட்டுப்பாருங்க நேத்ராக்கா நான் சொல்றது உண்மையா பொய்யான்னு...” மீண்டும் சத்யா கூற,

“அடச்சீ நான் எதுக்கு என் ப்ரெண்ட்ஸ்கிட்ட கேட்கனும். நீ இவ்வளோ பேசியும் பேசாம நின்னுட்டு இருக்காங்களே அதுலயே தெரியும் எனக்கு. உன்னை மாதிரி முதுகுல குத்த தெரியாது எங்களுக்கு...”

“தப்பு செஞ்சா நேருக்கு நேரா சொல்லுற துணிச்சல் எங்களுக்கு இருக்கு. செஞ்ச தப்பை ஒத்துக்கற தைரியம் இருக்கு. உன்னை மாதிரி பச்சோந்தின்னு நினைச்சியா?...”

“சொல்லு உனக்கு தைரியம் இருந்தா ட்ரெஸ் இப்டி ஆனதை யார் செஞ்சான்னு வேணும்னா உனக்கு தெரியாம இருக்காது. மத்ததை யார் செஞ்சா? இவங்க மூணு பேர்ல. சொல்லு பாப்போம்...”

எப்படி சொல்வாள்? இந்த மூணு பேரை தவிர ஹாஸ்டல் பிள்ளைகள் பாதி பேர் தன்னிடம் இப்படி நடந்துகொள்வதை சொன்னால் யாரேனும் நம்புவார்களா? நிச்சயம் இல்லை.

சத்யாவை போட்டு வார்த்தையால் வாட்டிவிட விட்டால் போதும் என சத்யா தன்னுடைய கட்டிலுக்கு சென்று படுத்துவிட்டாள்.

“யார்க்கிட்ட உன் வேலையை காட்டற?...” விடாமல் நேத்ரா குதிக்க அவளை இழுத்துக்கொண்டு வெளியே வந்து நின்றனர் அவள் தோழிகள்.

“ராத்திரி நேரத்துல எதுக்குடி அவகிட்ட மல்லுக்கு நிக்கிற?...” ரோஷிணி கேட்க நடந்ததை நேத்ரா கூறவும் வனமலர்க்கு புரிந்தது.

“நம்ம செய்யலைன்னு எனக்கு தெரியும்டி. ஆனா நமக்காக யார் செய்யறான்னு தெரியலை...” நேத்ரா யோசனையாக,

“அதொண்ணுமில்லை செல்லக்குட்டி. நம்ம பர்ஸ்ட் இயர் பசங்க அன்னைக்கு நடந்ததை பத்தி என்கிட்டே கேட்டாங்க. நானும் எதார்த்தமா உனக்கு நடந்த அநியாயத்தை அதுங்க காதுல ரொம்ப கவலையோட போட்டுவச்சேன்...”

“அடிப்பாவி...” ராகினி வாய் பிளக்க,

“பாசக்கார பயபுள்ளைங்க. ரெண்டு பேர்க்கிட்ட தான் சொன்னேன். ஆனா இப்படி இன்னைக்கு வரைக்கும் வச்சு செய்யும்ங்கன்னு நான் என்ன கனவா கண்டேன்...”

கைகளை தட்டி கன்னத்தில் வைத்து வானத்தை பார்த்த வனமலரின் பாவனையில் சிரித்துவிட்டனர் அனைவரும்.
“கொளுத்திவிட்டுட்டு இங்க கொஞ்சிட்டு இருக்கியே உன்னை...” நேத்ரா சிரித்தபடி அவளை முதுகில் போட,

“போதும் மலர். ட்ரெஸ் வாஷ் பன்றது எவ்வளோ கஷ்டம்னு நமக்கு தெரியும் தானே. அதுவும் அவ நம்மை விட சின்ன பொண்ணு. இதுவரைக்கும் செஞ்சது போதும்...” ரோஷிணி கூற,

“கோபால் நான் என்ன செய்வேன் கோபால்? சொல்லாமல் கொள்ளாமல் இந்த ரோஷி அன்னை தெரசாவா ஆஜராகிட்டாங்க கோபால். நான் எப்படி இதை சமாளிப்பேன் கோபால்?...”

நெற்றியில் கைவைத்து சரோஜா தேவி வனமலர் போல நடித்துக்காட்ட அவ்விடம் அடக்கமாட்டாமல் வெடித்து சிதறியது சிரிப்பு மத்தாப்பில்.

“போதும் போதும். நைட்ல இவ்வளோ சத்தமா சிரிக்க கூடாது...” என சொல்லிய ராகினியாலும் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.

“அட நிறுத்துங்கடி. மலர், நீ அந்த புள்ளை யாருன்னு பாத்து சொல்லிடு. இனிமே சத்யாவுக்கு இது மாதிரி யாரும் தொல்லை குடுக்க கூடாது. பாத்துக்க...”

“ஒன்றா இரண்டா பிள்ளைகள் எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா”...” நம்பியார் குரலில் கையை பிசைந்துகொண்டு மலர் கேட்க ரோஷிணி ஓடியேவிட்டாள்.

“ஆளை விடு, சிரிச்சு வயிறெல்லாம் வலிக்குது...” என ராகினியும் கழன்றுகொள்ள நேத்ராவிடம் திரும்பிய வனமலர்,
“குட்நைட் பேபி...”அவளை அணைத்து பின் விட்டு சென்றாள்.

தானும் சென்று கட்டிலில் படுத்தவள் காலையிலிருந்து நடந்தவற்றை மனம் அசைபோட ரிஷியின் பேச்சில் வந்து நிலைகுத்தி நின்றது.

“என்னவெல்லாம் பேசிட்டான். நான் அவ்வளோ ஈஸியா? எதுவானாலும் வேண்டாம். எனக்கு நினைக்கவே எரிச்சல் எரிச்சலா இருக்கு. இனி என் வழிக்கே அவன் வந்துவிட கூடாது. என் கண்ணுல அவனை காட்டாதே கடவுளே...”

உறுதியாக முடிவெடுத்து வேண்டுதலோடு சற்றுமுன் நடந்தவற்றை நினைக்க உதடுகளில் குறுநகை தவழ உள்ளமெல்லாம் இறகை போல் இலகுவாக பறக்க நிம்மதியான உறக்கம் தழுவியது நேத்ராவிற்கு.

அலை தீண்டும்...
Nice
 
Top