Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Epsiode 18 - Unai Theendum Alaiyaai Naane

Advertisement

AshrafHameedaT

Administrator
அலை – 18

மாலை மயங்கும் வரை மதிய உணவையும் மறந்து தனக்குள் உழன்றுகொண்டிருந்தான் ரிஷி.

நேத்ராவை தான் மிகவும் அலைக்கழிக்கிறோம் என்பதை உணர்ந்தாலும் அவளை கண்டதும் தன் கட்டுப்பாடெல்லாம் கட்டவிழ்ந்து அவளின் காதலியில் சரிவதை உணர்ந்து செய்வதறியாமல் குழம்பி நின்றான்.

தன்னிடம் பாதுகாப்பில் பெண்ணொருத்தியின் மனதை கலைத்து தான் விளையாடிக்கொண்டிருக்கிறோம் என்பதை நினைக்கவே ஆற்றாமையாக இருந்தது.

காதல் மனம் அவளிடத்தில் தன்னுடைய அணுகுமுறை சரி என்றும், கல்லூரியின் நிர்வாகியாக பார்த்தால் தவறென்றும் மாற்றி மாற்றி அவனை அமிழ்த்த இனி நேத்ராவிடம் தான் எப்படி நடந்துகொள்வது முடிவெடுக்க முடியாமல் திணறினான்.

வீட்டிலிருந்து அழைப்பு வரும் வரை தனக்குள் யோசித்து யோசித்து களைப்பாய் இருந்தவனுக்கு தாயின் குரல் கொஞ்சம் மலர்ச்சியை கொடுத்தது. உடனடியாக கிளம்பி வீட்டை அடைந்தவன் சுமங்கலியை இழுத்துக்கொண்டு தன்னறைக்குள் நுழைந்தான்.

“என்னாச்சு ரிஷி? நான் கால் பண்ணினப்போ கூட நீ பதில் பேசாம கட் பண்ணிட்ட?...” என்றபடி நிற்க அவரை இழுத்து அமரவைத்தவன் அவரின் மடியில் படுத்துக்கொண்டான்.

“இன்னைக்கு என்ன பண்ணின ரிஷி?...” மகனின் அலைப்புருதலை சரியாக கணித்து சுமங்கலி கேட்க,

“நான் பண்ணினது சரியா தப்பான்னு எனக்கு தெரியலை மாம். நான் அப்படி பண்ணியிருக்க கூடாது. ஆனா என்னால என்னை கண்ட்ரோல்ல வச்சுக்க முடியலை. என்னை மீறி ஒரு ஷக்தி என்னை அவகிட்ட கொண்டுபோய்டுது...”

உள்ளடக்கிய குரலில் ஒருவித தயக்கத்தோடு தாயிடம் கூற,

“எதுவானாலும் ப்ரீயா பேசு ரிஷி. உன்னை டிஸ்டர்ப் செய்யற உனக்கே தவறோன்னு சந்தேகம் வர ஒரு விஷயம் நிச்சயம் தவறா தான் இருக்கனும்...”

அவரின் உறுதியான பேச்சில் அதிர்ந்த ரிஷி,

“மாம்...” என எழுந்து அவரின் முகம் பார்க்க சுமங்கலிக்கு பரிதாபமாக போயிற்று. அவனையே பரிவாக பார்த்தவர்,

“இல்லை ரிஷி நான் உன்னை தப்பு சொல்லலை. சில விஷயங்களுக்கான காரணங்களும் நியாயங்களும் இடத்துக்கு தகுந்தது போல மாறுபடும். நீ எங்க என்ன பண்ணினனு சொன்னா தான் என்னால எதுவும் பேச முடியும்...”

ஒரு நொடி தயங்கினாலும் முதல்நாள் நேத்ராவின் பெற்றோரிடம் திருமணத்தை ஒரு வருடம் தள்ளிவைக்க சொல்லியதையும் தான் தான் மாப்பிள்ளை என்பதை அவளுக்கு தெரியப்படுத்த வேண்டாம் என்பதையும், தனக்கும் நேத்ராவிற்கும் இடையில் நடந்த முட்டல்கள் என அனைத்தையும் கூறிமுடித்தான்.

“இது என்ன பழக்கம் ரிஷி? நீ விரும்பின ஓகே. அதுவும் வீட்ல பார்த்த பொண்ணா இருந்ததால எல்லாமே சரியா முடிஞ்சு கல்யாணம் வரை பேசி முடிச்சாச்சு. ஆனா ஒரு வருஷம் கழிச்சு தான் கல்யாணம்னு யாரையும் கேட்காம நீயா முடிவெடுத்திருக்க?...”

“மாம், அவ இப்போ தான் செக்கன்ட் இயர் தான் படிக்கிறா. படிக்கிற பொண்ணை எப்படிம்மா?...”

“உனக்கு இப்போதான் தெரியுதா அவ படிக்கிறான்னு? உடனே பேசி முடிங்கன்னு அவ்வளோ குதிச்ச அன்னைக்கு. ஸார் கிட்நாப் வரைக்கும் ப்ளான் போட்டீங்க? அப்போலாம் தெரியலையோ?...” நக்கலாக கேட்க,

“மாம் நாம வேண்டாம்னு சொன்னதும் அவங்க வீட்ல வேற மாப்பிள்ளை பார்த்து பிக்ஸ் பண்ணிட்டா அதுக்கப்றம் நிறைய ஸ்டன்ட் நடத்த வேண்டியதாகிடும்னு தான் ரிஸ்க் எடுக்க வேண்டாமேன்னு உங்களை பேச சொன்னது...”

“அட பாவி. ஆனாலும் உனக்கு ரொம்ப வாய் கூடிருச்சு ரிஷி. சரி. எதோ பண்ணிட்ட விடு. நீ முடிவெடுத்து அவங்ககிட்ட சொல்லி என்ன செய்ய? பெரியவர் நல்ல நாளா பார்த்து நிச்சயத்துக்கும் கல்யாணத்துக்கும் தேதி குறிக்க ஜோஸியரை வரவழைக்கனும்னு சொல்லியிருக்காரே...” என,

“தேவகோட்டை ஜோஸியர் தானே. அவரை எப்படி கரெக்ட் பண்ணனுமோ அப்படி பண்ணிடுவேன்...” என அசால்ட்டாக கூற,

“காதல்னு ஒன்னு உனக்குள்ள வந்தாலும் வந்துச்சு நீ முழு கிரிமினலா மாறிட்டு வர ரிஷி. எனக்கு இன்னுமே பயமா இருக்கு. இவ்வளோ ப்ராப்ளம்ல பெரிய ப்ராப்ளம் நேத்ரா. அவ சம்மதிப்பான்னு எப்படி நினைக்கிற?. பேசாம உண்மையை சொல்லிடு ரிஷி. அவங்க வீட்ல பேசட்டும். நிச்சயம் கேட்பா...” என,

“ம்ஹூம் ஒத்துக்க மாட்டாம்மா அவ. எனக்கு தெரியும் அவளை...”

“ஏன்? ஏன்? மாட்டேன்னு சொல்லிடுவாளா அவ? உன்னை பிடிக்கலைன்னு சொல்ல என்ன இருக்கு?...”

“அவ சொல்லுவாம்மா...” சலிப்பான குரலில்.

“அதான் ஏன்?...”

“அவ அவ்வளோ திமிர்பிடிச்சவ. பிடிவாதக்காரி...”

“உன்னை விடவா?...”

“ஈகோவோட மறு உருவம் அவ...”

“உன்னை விடவா?...”

“செம்ம கெத்தா இருப்பா?...”

“உன்னை விடவா?...”

சுமங்கலியை திரும்பி முறைத்து பார்த்தான் ரிஷி. அதற்கெல்லாம் அசருவாரா அவனின் தாய்.

“உண்மையை சொன்னா கசக்குதோ? நீ பண்ணாத பிடிவாதமா? திமிரா?...” என சீண்ட,

“மாம் இது இப்போ முக்கியமா?...” என கடுப்பானான்.

“இல்லையா பின்ன? நீ மட்டும் அத்தனை பேரையும் ஆட்டிவைக்கலாம். ஆனா உன்னை ஒருத்தி ஆட்டிவைக்கிறான்னு சொன்னா கேட்க முடியலையோ?...”

“இப்போ பிரச்சனை இது இல்லை. என்னை முழுசா சொல்ல விடுங்க மாம்...” என்றவன் இன்றைக்கு நடந்த விஷயத்தை கூறவும் கொதித்துப்போனார் சுமங்கலி.

ரிஷியிடம் ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை. அங்கிருந்து எழுந்து செல்ல முயல அவரை கை பிடித்து தடுத்து நிறுத்தியவன்,

“என்னை ரெண்டு வார்த்தையாவது திட்டிட்டு போங்க மாம். ரொம்ப கில்டியா பீல் பன்றேன்...” கேன்சல் குரலில் கேட்டாலும் சுமங்கலியால் அவனை திட்ட கூட முடியவில்லை.

“மாம், நான் பண்ணினதுக்கு எனக்கு...”

“விடு ரிஷி. நீ செஞ்சது மிகப்பெரிய தப்பு. என்ன சொல்லி உன்னை திட்டினாலும் என் மனசு ஆறாது. காலேஜ்ல அதுவும் எக்ஸாம் டைம்ல அந்த பொண்ணோட மனசை கலைச்சு எழுதவிடாம பண்ணினது உனக்கு அவ்வளோ ஈஸியா தெரியுதோ?...” தாயின் குற்றச்சாட்டில் தலைகுனிந்து நின்றான் ரிஷி.

“உன்கிட்ட இதை நான் எதிர்பார்க்கலை ரிஷி. நீ காதலிக்கிறது தப்புன்னு நான் சொல்லவரலை. அதுக்குன்னு இடம் பொருள்னு இல்லையா? அதுவும் அவளோட விருப்பம்னு ஒன்னு...” என்று நிறுத்தியவர்,

“அட போடா...” என்று தொப்பென்று கட்டிலில் அமர்ந்தார்.

நேத்ராவினால் ஏற்கனவே அழுத்தத்தில் இருந்தவன் மனம் இன்னும் கனம் தாளாமல் அழுந்தியது.

அவனின் அமைதியும் இறுகிய முகமும் சுமங்கலியை யோசனைக்குள்ளாக்க அவனை தொட்டு நிமிர்த்தியவர்,

“அவ சின்ன பொண்ணு ரிஷி. உன்னோட ஏஜ்க்கும் அவ ஏஜ் கம்மி இல்லையா?...”

“என்ன இல்லையா? அவ ஒன்னும் சின்ன பிள்ளை இல்லை. இப்போ அவ போஸ்ட் கிராஜுவேஷன் படிச்சிட்டு இருக்கவேண்டியது. சின்ன வயசுலையே இல்லாத வம்பையும் ஊர் பஞ்சாயத்தை இழுத்து வச்சு ஒரு ஸ்கூல்லையும் உருப்படியா படிக்காம முதல் மூணு வருஷம் அதுலயே வேஸ்டா போய்டுச்சு. தெரியுமா?...” என்க,

“உனக்கெப்படி இது தெரியும்?...” என ஆச்சர்யமாக சுமங்கலி கேட்க,

“தெய்வ மச்சான். அனய் தான் சொன்னான். நேத்து நைட்டே அவன்கிட்ட பேசிட்டேன். அப்போ கிடைச்சது தான் இந்த நியூஸ் எல்லாம்...”

“கட்டிக்க போறவளை தவிர மத்த அத்தனை பேரையும் கரெக்ட் பண்ணிடு. நீ என்ன சொன்னாலும் சரி ரிஷி ...” என்றவர் அவனின் முகம் இன்னமும் கடுமையாக இருக்க,

“ரிஷி, நான் என்ன சொல்ல வரேன்னு கொஞ்சம் புரிஞ்சுக்கோ...” என அவரை கையமர்த்தி தடுத்து,

“ஐ நோ எவ்ரித்திங் மாம். நான் பண்ணினது தப்புதான். ஐ அன்டர்ஸ்டேன்ட். இனிமே என்னுடைய சிறு பார்வை கூட அவளை டிஸ்டர்ப் செய்யாது. அதுக்குன்னு நான் அவளை விட்டு விலகியும் இருக்கமாட்டேன். என்னால அது முடியவும் முடியாது...” என்றவன்,

“நான் வெளில போய்ட்டு வரேன்...” என கிளம்ப அவனுடைய மொபைலில் ஏதோ அழைப்பு வந்தது.

கட்டிலில் கிடந்ததை எடுத்து அவனிடம் கொடுக்கையில் அதில் இருந்த நேத்ராவின் புகைப்படம் தெரிந்தது. ரிஷி வேகமாக மொபைலை வாங்க வர,

“நேத்ரா தான் போய் பார்த்து பேச தடா போட்டுட்ட. போட்டோவ கூடவா காண்பிக்க கூடாது?. உன்னை மாதிரி என்னால அவளை கடத்தி வந்தெல்லாமா பார்க்கமமுடியும்?...” என பாவம் போல சுமங்கலி கேட்க அதில் சட்டென சிரித்தவன்,

“மாம் நீங்க இருக்கீங்களே? வாட்ஸ் அப் ல நான் உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன். அப்டியே உங்க ஹஸ்பன்ட்க்கும் காமிச்சிடுங்க...” என,

“போட்டோவிலேயே பார்த்தா போதுமா நேர்ல எப்போ பார்க்கிறதாம்?...” மீண்டும் தொடங்க,

“மாம் ஆன்வெல் பங்ஷன்ல பார்க்கலாம்...” என அசால்ட்டாக கூற,

“அவ்வளோ நாள் கழிச்சா? அதெல்லாம் முடியாது...” பிடிவாதமாக கூற,

“நீங்க தானே சொன்னீங்க. அவளை டிஸ்டர்ப் செய்யற எதையும் நான் பண்ணகூடாதுன்னு. இப்போ நீங்களே இப்படி பிடிவாதம் பிடிக்கிறீங்க?...”

“ஆன்வெல் பங்ஷன்ல மட்டும் நாங்க பார்த்தா மட்டும் அவ டிஸ்டர்ப் ஆகமாட்டாளோ?...” என இடக்காக கேட்க,

“ஆன்வெல் பங்ஷன்ல நீங்க தான் அவளை பார்க்க போறீங்க. நேத்ராவுக்கு நீங்க யார் என்னனு தெரியபோறது இல்லை. நான் கிளம்பறேன்...”

பதிலை எதிர்பாராது தன்ன கார் சாவியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.

-----------------------------------------------------------------------------------------

ரிஷியின் மனதை நேத்ரா அலைகழித்துக்கொண்டே இருந்தாள். நிம்மதியின்று மனம் அலைபாய கண்களை மூடி சயனித்து இருந்தான் ரிஷி. ஒருமணிநேரம் ஆகிற்று தன் பண்ணைக்கு வந்து.

அங்கிருந்த கயிற்றுக்கட்டிலில் படுத்திருந்தவனின் எண்ணம் முழுவதும் நேத்ராவே ஆக்ரமித்திருந்தாள். அவளை எப்படி சமாதானம் செய்வது என யோசித்து யோசித்து தலைவலித்தது தான் மிச்சம்.

“எனக்கு கொஞ்சம் ஒய்வு குடேன்...” என அவனின் மூளையே சூடாகி கத்தி கூப்பாடிட்டது.

“நான் இன்னைக்கு அப்படி நடந்திருக்க கூடாது. அவ முகமே கலங்கி சிவந்திருச்சு...” தனக்குள் மருகினான்.

தன் மொபைலின் ஓசையில் கவனம் சிதறியவன் எடுத்து பார்க்க அது வேறொரு புதிய எண்ணாக இருந்தது. தாயிடம் பேசிகொண்டிருக்கும் பொழுதும் இதே எண்ணிலிருந்து அழைப்பு வந்த ஞாபகம் வர அதற்குள் அழைப்பு நின்றுவிட்டிருந்தது.

மொபைலின் உள் நுழைந்து பார்க்க ஏற்கனவே நான்கு முறை அழைப்பு வந்து மிஸ்ட்காலில் இருந்தது.

யாரும் முக்கியமானவராக இருக்கு கூடுமோ என எண்ணி தானே அதற்கு அழைத்தான்.

“ஹலோ மிஸ்டர் பெரியசாமி, நான் நேத்ரா பேசறேன். உங்களுக்கு எத்தனை முறை நான் கால் பன்றது? ஒருமுறை கூட கால் அட்டன் செய்யவே இல்லை நீங்க...”

படபடவென பட்டாசாய் பொரிந்து குற்றம் சாட்டும் குரலில் பேசியது சாட்சாத் நேத்ராவே. இன்பமாய் அதிர்ந்தான்.

தன்னை கட்டிவைப்பதும் கட்டவிழ செய்வதும் அவள் ஒருத்தி மட்டுமே என்பதை சுகமாய் உணர்ந்தான்.

பேசகூடாது என முடிவெடுத்த மனம் அவளிடம் பேசசொல்லி அடம்பிடிக்க சற்றுமுன் எடுத்த முடிவென்ன இப்போது அவளின் குரலை கேட்டு அவளிடம் பேச துடிப்பதென்ன?

“ஹலோ நேத்ரா...” பேசியேவிட்டான். மனதினுள் அப்படி ஒரு நிம்மதி அதுவரை இருந்த அலைபுறுதல்கள் அனைத்தும் அடங்கி அப்படி ஒரு ஆறுதலாக இருந்தது.

“ஹலோ மிஸ்டர் பெரியசாமி. நான் பேசறது கேட்குதா?...” மீண்டும் ரிஷியின் பதிலில்லா மௌனம் அவளை கத்தலில் விட,

ஏற்கனவே ரிஷியின் மீது கோபம் தான் மனம் புரிந்த அதிர்ச்சி என்றிருக்க மாலை அறைக்கு வந்ததும் ஹாஸ்டல் வார்டன் ரூமில் அனய்யின் கால். அது தொடர்ந்து தன் திருமணம் பெரியசாமியுடன் உறுதியான பேச்சு என்று அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

“யாரை கேட்டு இந்த முடிவெல்லாம் எடுக்கிறார்கள்? என்ன நினைச்சிட்டு இருக்கான் அந்த பெரியசாமி?...” என்ற கடுப்பில் ரிஷிக்கு அழைத்துவிட்டாள்.

“ஹ்ம் நல்லா கேட்குது. சொல்லுங்க...” அதுவரை இருந்த கலக்கம் போய் ஒருவித மயக்கம் குடிகொண்டது அவனின் குரலில்.

ரிஷிக்கோ இது தன் குரலா என்பதில் சந்தேகமே வந்திருக்க நேத்ரா எங்கே கண்டுபிடிப்பது இது ரிஷிதான் என்று?

குழைவாய் கேட்ட அந்த காந்தகுரல் அவளுக்குள் எதையோ தட்டி எழுப்ப என்னவென உணரமுடியாமல் குழம்பினாள்.

“என்னை கேட்டுட்டு நீங்க அமைதியாகிட்டீங்க நேத்ரா?...” மீண்டும் வசியக்குரல் அவளை வாரி சுருட்டியது.

“என்ன இது யாரென்றே தெரியாத, இதுவரை பார்த்திராத ஒருவனின் குரல் தன்னை மனம் பிறழ வைக்கிறதே...” என தலையை பிய்த்துக்கொண்டாள்.

“நீங்க பெரியசாமி தானே?...” வார்த்தைகள் தந்தியடிக்க மீண்டும் கேட்டாள்.

ரிஷிக்கு புரிந்துவிட்டது இனி நேத்ராவை எப்படி அணுகுவது என்று.

“எஸ் நான் பெரியசாமியே தான். சொல்லுங்க நேத்ரா. என்ன விஷயமா கால் பண்ணிருக்கீங்க? நம்ம மேரேஜ் பத்தியோ?...”

கல்யாணம் என்ற வார்த்தையில் அதுவரை இருந்த குழப்பம் நீங்க சட்டென தெளிவான ஒரு உணர்வு.

“ஆமாம். நான் தான் உங்களை பிடிக்கலைன்னு சொன்னேனே? நீங்களும் எங்க வீட்ல பேசி கல்யாணத்தை நிறுத்திட்டு இப்போ திரும்ப முதல்ல இருந்து நீங்களே ஆரம்பிக்கிறேங்க? என்ன நினச்சிட்டு இருக்கீங்க?...” அவள் வெடிக்க,

“இதுதான் என் தக்காளி. இது தாண்டி எனக்கும் வேணும். உன்னோட இந்த பட்பட்பட்டாஸ் பேச்சு. ஐ லவ் இட். இதை நான் கேட்டு கேட்டுதான் இல்லை இல்லை நீ என்னை கேட்கவச்சு கேட்கவச்சு தான் முழுக்க என்னை பைத்தியமாக்கி வச்சிருக்க...” மந்தகாச புன்னகை ஒளிர்ந்தது அவனது இதழ்களில்.

“ஹலோ என்ன கேட்டதுக்கு பதில் சொல்லாம சைலன்ட் ஆகிட்டீங்க? என்ன நான் பேசறதை கேட்டு பயந்துட்டீங்களா?...” என,

“விட்டா இவ திரும்ப என்னை பழமாக்கிடுவா. ரிஷி களத்துல குதிச்சிடு...”

“அதெல்லாம் இல்லைங்க. என்ன சொல்றதுன்னு தான் யோசிச்சிட்டு இருக்கேன்...” என,

“இதுல யோசிக்க என்ன இருக்கு? இப்படி ஒரு நிலையில்லாத நேரத்துக்கொரு முடிவெடுக்கிற உங்களை எப்படி நான் கல்யாணம் செய்துப்பேன்னு நினைக்கிறீங்க? நெவர்...” ரிஷியை பேசவே விடாமல் நேத்ராவே பேச,

“நான் சொல்றதையும் கொஞ்சம் கேளுங்க நேத்ரா...”

“நீங்க என்ன சொன்னாலும் என் மனசு மாறாது. நீங்க வேற பொண்ணை பார்க்கிறது தான் உங்களுக்கு நல்லது...”

“அதை நீங்க சொல்லக்கூடாது. கல்யாணத்தை நிறுத்தனும்னு நான் நினைக்கவே இல்லை. நீங்க சொன்னதால தான் நான் உங்க வீட்ல அப்படி சொன்னேன். ஆனா அதில இருந்தே என்னால வேற எதிலையும் கான்சன்ட்ரெட் பண்ணவே முடியலை...” என்றவன் ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டு,

“எனக்கு உங்களை ரொம்பவே பிடிச்சிருக்கு நேத்ரா...” அவனது பேச்சில் நேத்ராவின் இதயத்தில் தாளம் தப்பியது.

“என்னால உங்களை விட்டுகுடுக்க முடியலை. இதையெல்லாம் விட நம்ம வீட்டு பெரியவங்க நம்ம கல்யாணத்தை ரொம்பவே விரும்பறாங்க. அவங்களுக்கு இதை விட நாம என்ன சந்தோஷத்தை கொடுத்துவிட முடியும்?...”

ரிஷியின் பேச்சுக்கள் இன்னும் நீண்டது. அவளை யோசிக்கவிடாமல் செய்ய என்னவெல்லாம் பேசவேண்டுமோ அதை தன்மையாகவே பேசினான் பேசினான் பேசிக்கொண்டே இருந்தான்.

ரிஷியின் பேச்சில் வார்த்தைகளற்ற மௌனத்தில் சங்கமித்திருந்தாள் நேத்ரா. அவனுக்கு என்ன பதில் பேசுவதென்றே தெரியவில்லை.

“நேத்ரா நீங்க ரொம்ப கன்ப்யூஸ் ஆகியிருக்கீங்கன்னு நினைக்கிறேன்?...” நன்றாக குழப்பிவிட்டு கேள்வியும் கேட்டான்.

“எனக்குன்னு வந்து சேர்றானுங்களே?...” நேத்ராவிற்கு எங்காவது போய் முட்டிகொண்டாள் தேவலாம் போல ஆனது.

“ஓகே நாம இப்போ மேரேஜ் பத்தி எதுவும் பேச வேண்டாம். என்னை ஒரு நல்ல ப்ரெண்டா நினைச்சுக்கோங்க. இன்னும் கல்யாணத்துக்கு ஒரு வருஷம் இருக்கு. அதை நினைச்சு இப்போவே நீங்க வொரி பண்ணிக்காதீங்க...” என,

“நான் முன்னபின்ன தெரியாதவங்களை ப்ரெண்ட் லிஸ்ட்ல வச்சிக்கறது கிடையாது...” அவனின் மூக்கை உடைக்க,

“நான் முன்ன பின்ன தெரியாதவன் இல்லை நேத்ரா. உங்க வீட்ல என்னை நல்லாவே தெரியும். உங்களுக்கு மாப்பிள்ளையாவே என்னை சூஸ் பண்ணிருகாங்கன்னா என் மேல உள்ள நம்பிக்கை தானே?...” அவளின் அலட்சியத்தை அலட்சியம் செய்துவிட்டு.

“வார்த்தை பிழை மன்னரே...” என்றபடி மைண்ட்வாய்ஸ் குறுக்கிட்டு,

“அவங்க எங்கடா சூஸ் பண்ணினாங்க? ஆப்ஷனே இல்லாம நீ தான் சூஸ் பண்ண வச்ச...” என அடித்து சொல்ல அதை கண்டுகொள்ளாதவன்,

“உங்களை எதுக்கும் நான் போர்ஸ் பண்ணவே மாட்டேன் நேத்ரா. இப்போதைக்கு நாம நல்ல ப்ரெண்ட்ஸ். என்னை நீங்க தெரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க. உங்களை பத்தி எனக்கும் ஓரளவுக்கு தெரியும். இன்னும் தெரிஞ்சிக்க நானும் ட்ரை பன்றேன்...”

“எனக்கு விருப்பமில்லாத யாரை பத்தியும் நான் தெரிஞ்சிக்கவிரும்பலை. தெரிஞ்சுக்கவும் மாட்டேன் மிஸ்டர் பெருசு. நீங்க முடிஞ்சா உங்க மனசை மாத்திக்க பாருங்க...” கறாராக கூற,

“நான் உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கனுமே? கேட்கட்டுமா?...” என பீடிகை போட,

“ம்ம்ம்...” என்றாள்.

“நீங்க வேற யாரையாவது விரும்பறீங்களா? ஐ மீன் யு பாஃல் இன் லவ்?...”

அவனின் கேள்வியில் திடுக்கிட்டு போனாள் நேத்ரா. நொடியில் மனக்கண்ணில் ரிஷி அழகாய் புன்னகைத்தான். தலையை உலுக்கிக்கொண்டவள்,

“நோ இது பப்பி லவ். சின்ன அட்ராக்ஷன் அவன் மேல. இது லவ் எல்லாம் இல்லை...”

மனதிற்குள் சொல்லிக்கொள்வதாக நினைத்து வாய்விட்டே கூற ரிஷி அதிர்ந்து போனான்.

“அடிப்பாவி நான் என்ன நாலாம் வகுப்பு படிக்கிற பையனா பப்பியை வச்சு லவ் பண்ண?. என்னோட காதலை நான் எந்த ரேஞ் ல வச்சிருந்தா இப்படி பொசுக்குன்னு பப்பின்னு சொல்லிட்டாளே?...” என மனதிற்குள் நொந்து போனான்.

நேத்ரா தன் சிந்தனையில் இருக்க ரிஷியின் குரல் கலைத்தது அவளை.

“யார் அவங்க? உங்களை அட்ராக்ட் பண்ணின அவரை பத்தி நானும் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமேன்னு கேட்டேன்...” குறும்புத்தனம் தலைதூக்க.

“அது முடிஞ்சு போனது. அதை தெரிஞ்சு நீங்க என்ன பண்ண போறீங்க?...”

“முடிஞ்சு போன ஒண்ணுக்காக நீங்க ஏன் மேரேஜை அவாய்ட் பண்ணனும் நேத்ரா?...” என வலையை வீசினான்.

“ஸ்யப்பா பெருசு சரியான இம்சை நீங்க. நான் ஏன் அதுக்காக மேரேஜை அவாய்ட் பண்ணனும்? நான் நிச்சயமா கல்யாணம் பண்ணிப்பேன்...”

“ஒஹ் ரியலி...” பரிகாசமாக கேட்க,

“டெஃபனட்லி...” என்றாள் உறுதியாக.

“அப்போ என்னை கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே? நீங்க விரும்பவரை விட உங்களை விரும்பறவரை கல்யாணம் பண்ணிக்கிட்டா உங்க வாழ்க்கை சிறப்பா இருக்கும்...”

“நான் படிச்சிட்டு இருக்கேன் பெருசு. படிப்பை முடிச்சு தான் மேரேஜ் எல்லாம்...” என சொல்லி வகையாக மாட்டினாள்.

“அதை தான் நானும் சொல்றேன். நமக்குமே படிப்பு முடியவும் தான் மேரேஜ் டேட் பிக்ஸ் பண்ணுவாங்க. என்னை நீங்க மறுக்க இப்போ எந்த ரீசனும் இல்லையே?...”

வாயடைத்துத்தான் போனாள் நேத்ரா. “அங்கே சுற்றி இங்கே சுற்றி அவன் வரவேண்டிய இடத்திற்கு தன்னையும் சேர்த்தல்லவா கூடிவந்துவிட்டான்...”

“நீங்க சரியான ஆளுதான் பெருசு...” என சொல்லி நேத்ரா சிரிக்க அவளின் குரலில் இறக்கை இல்லாமல் பறந்தான் ரிஷி.

அத்தனை அழுத்தமும் பனியென விலகி மனம் லேசானதை போன்ற ஒரு உணர்வு. அவளன்றி தன்னை ஆக்கவும், ஆட்கொள்ளவும் வேறு எவராலும் முடியாது. ஒருவித இதம் சூழ்ந்தது அவனின் உள்ளமெல்லாம்.

தாய் தந்தையரின் நினைவில் சில நொடிகள் யோசனையில் ஆழ்ந்தாள். என்ன முடிவெடுப்பது என்று எந்த மார்க்கமும் பிடிபடாமல் போக,

“என்ன சொன்னாலும் சுத்தி சுத்தி ஆரம்பிச்ச இடத்திலேயே யூடர்ன் போட்டு வந்து நிக்கிறீங்க. எனக்கு மேரேஜ்ல இப்போதைக்கு இன்ட்ரெஸ்ட் இல்லையே. இப்போ என்னதான் செய்றது பெருசு?...”

இது நேத்ராவின் சுபாவம் கிடையாது. அவளது முடிவுகள் அனைத்தும் அவளுடையதாகவே இருக்கும். முதன் முதலாக அடுத்தவரிடம் கேட்கும் நிலைக்கு தள்ளியது ரிஷியே.

குழப்பத்தில் இருந்தவளை இப்போது பெரியசாமியாகி இன்னுமின்னும் குழப்பினான்.

“மத்த எல்லா கவலையையும் விட்டுடுங்க நேத்ரா. நமக்கின்னும் நேரம் இருக்கு. முதல்ல நாம நல்ல ப்ரெண்ட்ஸா இருப்போம். அப்பாவும் பிடிக்கலைனா நான் உங்களை கம்பல் பண்ணமாட்டேன். ட்ரஸ்ட் மீ நேத்ரா...”

அவனது பேச்சில் சரி என்பதை தவிர வேறேதும் மறுத்துப்பேசமுடியாத மனநிலையில் தான் இருந்தாள்.

“ஓகே பெருசு. இப்போதைக்கு உங்க ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அக்ஸப்ட். பட எப்போ நீங்க உங்க லைனை க்ராஸ் பன்றீங்கன்னு தெரியுதோ அப்போ கொஞ்சமும் யோசிக்காம ப்ளாக் பண்ணிட்டு போய்ட்டே இருப்பேன். உங்க நம்பரையும், உங்க ப்ரண்ட்ஷிப்பையும்...” கெத்தா கூற,

“இதுக்கொண்ணும் குறைச்சலில்லை...” என மனதுக்குள் குறும்பாய் சிரித்துக்கொண்டான்.

“தேங்க்ஸ் நேத்ரா. பை...” அவனிதழ்களில் இளநகை நெளிய வைத்துவிட்டான்.

உணர்வு மேலீட்டால் ரிஷியின் குரலே கரகரத்து போய் இருந்தது. மீண்டும் வசியக்குரல் தன் மனதை அசைத்துப்பார்க்க நேத்ராவால் தன் மனதையே யூகிக்கமுடியாத குழப்பமேகம் சூழ்ந்துகொண்டது.

“அவன் குரலே இப்படித்தானா? இல்லை தனக்குத்தான் இப்படியெல்லாம் தோன்றுகிறதா?...” என யோசித்து யோசித்து தலையை பிய்த்துக்கொண்டது தான் மிச்சம்.

நேத்ராவிடம் பேசிமுடித்தவன் மொபைலில் இருந்த அவளுடைய போட்டோவை இமைக்கவும் மறந்து பார்த்துக்கொண்டிருந்தான் ரிஷி.

தான் பண்ணுவது சரியா என்ற எந்த சந்தேகமும் இல்லை அவனுக்கு. காதலில் அனைத்தும் சரியே என்னும் இடத்தில் நின்றான்.

“நீ எனக்கு இல்லைனா நான் நானே இருக்கமாட்டேன் நேத்ரா...” உணர்வுபூர்வமாய் சொல்லியவன் மொபைலை மார்பில் வைத்து அழுத்திக்கொண்டான்.

அலை தீண்டும் ...
 
:love::love::love:

என்னடா ??? ??? சொல்றா உன் ஆளு.......

பேசியே கவுத்துட்டியே.......
ஆனாலும் படிக்கிற புள்ளையை படிக்கவிடாமல் பண்ணுற........
அவ உன்னை வச்சி செய்யப்போறா........
Enjoy ?‍❤️‍??‍❤️‍?
 
Last edited:
Top