Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kadhal romeo 2

Advertisement

Ruxshana

Member
Member
காதல் ரோமியோ 2

குழப்பத்துடன் கல்லூரிக்குள் நடந்து கொண்டிருந்தான் ஷாஹித் , இத்தனையும் செய்தது யார் ? என்று தெரியவில்லை

யோசனையாய் நடந்து கொண்டிருந்தவனின் செவிகளில் எட்டியது ஒரு பெண்ணின் குரல் , " நீங்க ஷாஹித் தான " அவளை குழப்பத்துடன் பார்த்தவன் "

"ஆம் " என்றான்

உடனே அந்த பெண் ஒரு மஞ்சள் நிற ரோஜாவை அவன் கைகளில் கொடுத்து விட்டு சென்றாள் , குழப்பத்துடன் அந்த ரோஜாவை பார்க்க அதில் " H " என்ற எழுத்து தொங்கிக்கொண்டிருந்தது .

பின்பு காலேஜ் வாசலில் உள்ள வாட்ச்மன் அங்குள்ள மாணவ மாணவிகள் அனைவரும் அவனிடம் வித விதமான நிறத்தில் ஒற்றை ரோஜாவை நீட்டினர்.

இப்படியே அவன் போகும் இடம் எல்லாம் கொடுக்க , அனைவரும் அவனை வித்தியாசமாய் பார்த்தனர் . அதில் எரிச்சல் அடைந்தவன் ஒரு மரத்தடியில் உள்ள பெஞ்சில் உட்காந்தான் , கையில் வைத்து இருந்த அந்த மொத்த பூக்களின் அடுக்கை பக்கத்தில் வைத்தவனின் விழிகள், இப்போது எரிச்சலில் இருந்து அந்த பெண்ணை சந்தித்தே ஆக வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது .

அந்த வரிசை படுத்திய பூக்களின் கீழ் தொங்க பட்டு இருந்த மொத்த எழுத்துக்களையும் சேர்த்து பார்த்தால்

HAPPY VALENTINE DAY ???

ஷாஹித்திற்கு அதை ரசிக்காமல் இருக்க முடியவில்லை , மனதில் ' யாரடி பெண்ணே' 'ஏன் என்னை இந்த அளவுக்கு காதல் செய்கிறாய் '.

இப்படி மனதினுள் கேள்வி என்ற பெயரில் அவளிடம் காதல் வசனம் பேசி கொண்டிருக்கும் போது அவனுடைய கிளாஸ் மேட் டேவிட் வந்தான்

" ஷாஹித் உனக்கு கால் , உங்க அம்மா தான் " அப்போது தான் நியாபகம் வந்தது மொபைல்லை ஹாஸ்டலில் மறந்து வைத்து விட்டு வந்த மடத்தனத்தை , கையால் தலையில் தட்டி கொண்டவன் டேவிட்டிடம் போன்னை வாங்கி கொண்டான் .

" அம்மா என்ன விஷயம் ஏதாவது அவசரமா"

" டேய் அவசரம் இருந்தா தான் போன் பண்ணனுமா , நீ என் கிட்ட பேசி ஒன்றை நாள் ஆச்சு" என்று சொல்லி கொண்டு பொய் கோபத்தோடு முறுக்கி கொண்டார் அவன் தாய் .

" சாரி மா மன்னிச்சுடு என் செல்லம்_ல உனக்கு கால் பண்ணலாம் என்று எடுத்தேன் பட் சின்ன வேலை மறந்துட்டேன்", என்று ஷாஹித் செல்லம் கொஞ்ச .

இப்போது குழந்தையை அவனிடம் சண்டை போட்ட ஆயிஷா (ஷாஹித் அம்மா ) ஒரு தாயாய் மாறி " சாப்பிட்டியா பா " என்றார்.

ஒவ்வொரு அம்மாவும் தூரமாய் இருக்கும் பிள்ளைகளிடம் கேட்கும் அன்பான ஏக்கமான கேள்வி , எந்த வித பிரதிபலனும் இல்லாமல் தனக்காகவே வாழும் தாய் கிடைப்பது கடவுளின் வரம் .

" சாப்பிட்டேன் அம்மா " என்று சொல்லி கொண்டிருக்கும் போதே காலேஜ் பெல் அடித்தது .

" சரி பா பெல் அடிச்சிட்டு , நீ கிளாஸ்க்கு போ, நான் நைட் உனக்கு கால் பண்ணுறேன் அஸ்ஸலாமு அலைக்கும்"

தாயிடம் பேசி முடித்தவன் மனதில், இப்போது சிறு துளி கூட அந்த முகம் அறியா பெண் இல்லை . அவனுக்கு இருக்கும் குறிக்கோளில் இந்த காதலுக்கு இடம் இல்லை .

சிறு வயதில் ஷாஹித்தின் அப்பாவிற்கு வலிப்பு வர அதில் இருந்து இப்போது வரை படுக்கை வசம் தான் , ஆயிஷாவின் அயராது உழைப்பு தான் இப்போது வரை அந்த குடும்பத்தை பார்த்து கொண்டிருக்கிறது .

பனிரெண்டாம் வகுப்பை முடித்து வந்தவன் வேலை செல்கிறேன் என்றவனையும் 'வேண்டவே வேண்டாம் ' என்று பிடிவாதம் பிடித்து இப்போது ஷாஹித் அவரின் வெற்றியால் எம்.பி.ஏ (m.b.a) இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருக்கிறான் .

அம்மாவின் வேலை பளுவை குறைக்க வேண்டும் , நிம்மதியான தூக்கம், அப்பாவிற்கு ஆரோக்கியம் இல்லை என்றாலும் அம்மாவுடன் செலவழிக்க நேரம் கொடுக்க வேண்டும் . அதற்கு நான் வேளையில் அமரவேண்டும் என்ற குறிக்கோள் தான் ஷாஹித் மனதில் எப்பொழுதும் ....

எல்லா நடுத்தரவர்கத்தின் குறிக்கோளும் ஆசைகளும் தான் ஷாஹித்திடம் இருந்தது அதில் சுயநலம் இருக்காது , தனக்கு என்கிற பாங்கு இருக்காது , முழுக்க முழுக்க நம் அன்பானவர்களுக்கான சமர்ப்பணம் .

(ஐயோ ரொம்ப பேசுறேன்_ல இப்படி தாங்க எல்லாரும் சொல்லுவாங்க மைக் கிடைச்சா ஓட்ட வாய் மாறி பேசிட்டே இருப்பா ?? )

போன்னை டேவிட்டிடம் கொடுத்து விட்டு தான் லைப்ரரி செல்வதாக குறிக்கொண்டிருந்தான் ,

அப்போது அங்குள்ள ஒரு சீனியர் குரூப் இவன் காது பட பேசினர் " அங்க பார் மச்சான் அவன் தான் ஷாஹித் , வந்ததுல இருந்து ஒவ்வொருத்தனும் பூ கொடுத்து கிட்டே இருக்கானுங்க டா , இவனுக்கு பெரிய மன்மதன் என்று நினைப்பு "

அந்த குரூப் லீடர் போல் இருப்பவனோ "சரியான பிலே பாய் டா பொண்ணு கிட்டயும் வாங்குறான், பையன் கிட்டயும் வாங்குறான் ஒரு வேலை ****...." என்று அந்த வார்த்தையை சொன்னவன்

" டேய் எல்லாரும் அவங்களோட கற்பை பத்திரமா பார்த்துக்கோங்கடா பொண்ணுக்கு மட்டும் இல்லை, பையன்களும் உஷாரு " என்று சொல்லி நக்கலாய் சிரிக்க .

அங்குக்குள்ள வால்கள் எல்லாம் கோரஸாக " உஷாரய்யா உஷாரு உஷாரய்யா உஷாரு" என பாட அதில் கோபமடைந்த ஷாஹித், அந்த லீடரான ரவியை எட்டி உதைத்து விட்டான் .

டேவிட் அவனை பிடித்து கொள்ள அங்குள்ள வால்களோ ரவியை பிடித்து கொண்டனர்
அடிக்காமல் இருக்க .

அதில் ஒருவனோ " ரவி பிரின்சிபால் வர டைம் ஏற்கனவே நம்மளை பத்தி கம்பளைண்ட் போய் இருக்கு அந்த பெண்ணாள் இனி வேண்டாம்" என்று சொல்லியவன் அங்கிருந்து அகற்றி கூட்டி சென்றான் .

" ஏன் மச்சான் சும்மா இருந்தவனை சொறிஞ்சி விட்டு , இப்போ அடியும் வாங்கிட்டு எங்களையும் அடிக்க வேணாம் என்று சொல்லிட்ட" ,என்று அந்த குழுவில் ஒருவன் கேட்க .

" எல்லாம் ஒரு பிளானிங் (planning) தான், அன்னைக்கு நான் அவளை ராகிங் பண்ணேன் என்று என்னை அடித்ததும் இல்லாமல் பிரின்சிபால் கிட்ட போட்டு கொடுத்தால் , இன்னைக்கு இந்த ஷாஹித் நம்ம பேசுனதை மனதில் வைத்து அவளை திட்டி அசிங்க படுத்துவான் "

" அதான் எனக்கு வேண்டும் " என்று சொல்லி அகங்காரமாய் சிரித்தான் .

அவன் கூறியது போலவே ஷாஹித் அந்த பெண்ணின் மேல் கட்டுக்கடங்காத கோவத்தில் இருந்தான் . ஒவ்வொருத்தரையும் பிடித்து அந்த பெண்ணை பற்றி கேட்டு கொண்டிருந்தான் .

அவனுடைய கோபம் சில நொடிகளில் சில்லி சில்லியாய் உடைய போகிறது என்பது அவனுக்கு தெரியவில்லை . ஆனால் விதிக்கு ஒன்று தெரிந்தது மோதல் தான் காதலில் முடியும் என்ற பழமொழி...

தன்னுடைய காதல் அத்தியாயம் தொடங்கி விட்டது என்பது தெரியாமல் அனைவரிடமும் கேட்ட விபரங்களை வைத்து கேன்டீன் சென்றான் ஷாஹித்.

அந்த இடத்தில் தனக்கு பூ கொடுத்த பெண்ணிடம் அங்குள்ளவர்களை காட்டி அடையாளம் கேட்க , அவள் ஒரு திசையில் தனது ஆள்காட்டி விரலை நீட்டினாள் .

அங்கு பார்த்தவனின் கண்களுக்கு தெரிந்தது சிறுபிள்ளை போல் கையில் மொபைல்லை வைத்து அதை ஆட்டி ஆட்டி ஓடும் சனாவை தான் , அவள் ஓடும் போது பறக்கும் அவள் துப்பட்டாவும் காதில் ஆடும் ஜிமிக்கியும் தனி அழகாய் இருந்தது.

பால் நிறத்தில் கொஞ்சமே கொஞ்சம் குங்குமம் கலந்த நிறம் .. தமிழ் செய்யுளில் வருவது போல் " பால் மேனி உடையவள் " என்ற வரி நியாபகம் வந்தது ஷாஹிதிற்கு.

ஒரு நிமிடம் தன் மனது போகும் திசையை நினைத்து தன்னையே நொந்தவன், கோபத்தை இழுத்து பிடித்து அவளிடம் சென்றான் . முதலில் " ஹலோ " என்று அழைத்தவன் அவள் திரும்பி பார்க்காமல் இருக்கவும் .

அந்த பெண்ணின் மூலம் பெயர் தெரிந்து கொண்டவன் " சனா " என்றழைத்தான்.

அப்போதும் அவள் விளையாட்டு மும்முரத்தில் இருந்ததால் வேறு வழி இல்லாமல் அவள் தோள் தொட்டு அழைத்தான் .

சந்தேக பார்வையோடு திரும்பியவள் கண்களை அவளால் நம்ப முடியவில்லை. இமை மூடாமல் அவனை பார்த்து கொண்டிருந்தாள் , " என்ன " என்ற வார்த்தை தொண்டைக்குள் இருந்து வெளியில் வரவில்லை , கமலஹாசன் படத்தில் ரேவதி சொல்வது போல் வெறும் காத்து தான் வந்தது ...

" உங்களுக்கு வேற ஆளே கிடைக்கலையா நான் தான் கிடைச்சேனா "என்று கோப தீயாய் அவன் எரித்து கொண்டிருக்க .

நம் கதாநாயகியோ செய்யுளில் தலைவன் கடல் கடந்து வணிகம் செய்து , பல மாதம் கழித்து திரும்பி வரும் பொழுது , தலைவியிடம் இருக்கும் ஏக்க பார்வை போல் பார்த்துக்கொண்டிருந்தாள் சனா . ?

" காதல் ராணி என்று நினைப்பா எனக்கு இது எல்லாம் பிடிக்காது , நீ லைலா நான் மஜ்னு , நீ ஜூலியட் நான் ரோமியோ என்று உன்கூட கடலை போட வேற ஆளை பார்த்துக்கோ " என்று எரிமலையாய் வெடிக்க .

இப்போது தான் சனாவிற்கு சுற்று புறம் உரைத்தது , அவளை சுற்றி பார்க்க எல்லோரும் இவளை தான் பார்த்து கொண்டிருந்தனர் . அதில் மனது சுருங்கிவிட அவனை எதிர்த்து பேச போக அவன் விட்டால் தானே ...

" எனக்கு பார்த்தவுடன் காதலில் நம்பிக்கை இல்லை , தெளிவா சொல்லணும் என்றால் காதலில் நம்பிக்கையே இல்லை, உனக்கு வந்தது கூட லவ் இல்லை ஜஸ்ட் அ அட்ராக்க்ஷன் (attraction ) (காதல் இல்லை ஈர்ப்பு தான் ) " , தாறுமாறாக பேசி விட்டு இடத்தை விட்டு அகன்றான் .

கொஞ்ச தூரம் சென்ற பிறகு தான் நடந்ததை நினைத்து பார்த்தான் ' கொஞ்சம் பொறுமையை பேசி இருக்கலாமோ ' என்று தோன்றியது .

இந்த மூளை இப்படி தான் சரியான முட்டாள் எல்லாம் கொட்டிவிட்டவுடன் நல்ல அறிவுரையை கொடுக்கும் .

அவன் மனமோ மீண்டும் ' பொண்ணுடா ஏதோ பிடிச்சிருக்கு பூ கொடுத்தா , அதுக்காக எல்லார் முன்னாடியும் இப்படி தான் திட்டுவியா , அவளுடைய குணம் கேட்டு போய்டாது , அங்கே உள்ளவர்கள் முன்னால் '

அவன் மூளையோ ' ஹேய் மனமே நீ எனக்கு மனமா இல்லை அவளுக்கா ' என்று கிண்டல் செய்தது .

இப்படி மனதிற்கும் மூளைக்கும்
வாக்குவாதம் நடக்க பின்னால் இருந்து ஒரு குரல் ,

"ஷாஹித்", அவள் தான் அவளே தான் என்று திரும்பி பார்க்காமல் அவனாகவே நினைத்து கொண்டு நடந்தான், ஓடினான் என்று சொல்லலாமோ .

"ஹேய் நில்லு "

அவனோ யாருக்கு வந்த விருந்தோ என்று நடக்க ,

"நில்லு டா ",

' என்னது டா வா வேணாம் ஷாஹித் மாட்டிக்காத நடத்துகிட்டே இரு ' என்று மனம் கூப்பாடு போட வேகத்தை கூட்டினான் .

" டேய் ரோடு சைடு ரோமியோ நில்லு டா" என்று சனா கத்த சடன் பிரேக் போட்டு கால்கள் தன்னால் நின்றது .


தொடரும்
 
Top