Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kadhal valam Vara Episode 8 Precap Text

Advertisement

AshrafHameedaT

Administrator
Part 1

மனோ அவளுக்கு முயன்றவன் சுவிட்ச் ஆப் என்று வந்தது. உடனே ராஜராஜனிற்கு அழைத்தான், அதுவும் சார்ஜ் இல்லாமல் ஆப் ஆகியிருந்தது. கொஞ்சமும் யோசிக்கவில்லை... கரிஷ்மாவிடமும் அம்மாவிடமும் ஒரு அவசர வேலை என்று கிளம்பிவிட்டான்.

அவன் அழைத்த அதே நேரம் சுவாமிநாதனும் தமிழ்செல்வனும் ராஜராஜனிற்கு அழைக்க அவர்களுக்கு சுவிட்ச் ஆப் என்று வர, அவர்களுக்கும் இருப்பு கொள்ளவில்லை.

Part 2

“’போடா பொறுக்கி...’ னு என் பையனை பார்த்து... அதுவும் அடிப்பளாமா அந்த பொண்ணு? அதையும் விட போஸ்டர் அடிச்சு என் வீட்டு பொண்ணுங்களை ஒட்டுவாளாமா? யாருன்னு காட்டுறேண்டா உங்களுக்கு...!”

“அப்பா இருந்தார்... அவர் நாம எதுவும் எதிர்க்க வேண்டாம்னு சொன்னதால, எனக்கும் உன்னை நண்பன் ன்னு நினைச்சு கொஞ்சம் நாள் பழகினதால தான் பேசாம விட்டுடேன். இனி முடியாது. தேவையில்லாத பிரச்சனை வேண்டாம். இல்லை நான் செஞ்சு தான் ஆவேன்னு நீ சொன்னா... பார்த்துக்கலாம்!”

Part 3

கேட்டை திறந்து உள்ளே வந்தனர். அந்த சத்தத்தில் கூட அவன் அசையவில்லை எனவும் பயந்து அருகில் விரைந்து வந்தார் தமிழ்செல்வன்.

அருகில் வந்ததும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது தெரிய, “தூங்கறான் ண்ணா!” என்றார்.

“என்னடா இப்படி ஆள் வந்த சத்தம் கூட தெரியாம தூங்கறான்.. அதுவும் வெளில வேற தூங்கறான்...”

Part 4

கேட் திறக்கும் சத்ததிலேயே அங்கை விழித்துக் கொண்டாள்.

இப்போது பேச்சு சத்தம் இப்படி அருகில் கேட்கவும் தூக்கம் கலைய... திரும்பி அப்பாவையும் பெரியப்பாவையும் பார்த்தவன், “வேகமாய் எழுந்து என்னப்பா இங்க எதுவும் பிரச்சனையா?” என

அந்த நேரம் சரியாக மனோவின் கார் வந்து விட்டது.


Part 5

“அவ பைன் தான்... ஆனா இனி சூழ்நிலைகள் அப்படி இருக்குமான்னு தெரியலை...” என்று முகம் இறுகியவனாய் ராஜராஜன் சொல்ல

“ஏன்... உங்களுக்கு பயமா?” என்று சொல்ல

“எங்களை பார்த்தா உனக்கு பயப் படற மாதிரி தெரியுதா? உண்மையா எங்க முன்னாடி எவனும் பேச மாட்டான்... எவனுக்கும் பேசற தைரியம் கிடையாது”

Part 6

“உங்கம்மாவோட வாழ்க்கை அவங்களை ஒன்னும் பாதிக்கலையே , இவளை பாதிச்சா அதுக்கு நாங்க பொறுப்பா ?”

“அதாவது ஒரு விஷயம் செஞ்சா அதோட விளைவுகளை எதிர்கொள்ள தான் வேணும். நான் செய்ற மாதிரி தான் செய்வேன்... ஆனா நீ என்னை பேசக் கூடாதுன்னா அது எப்படி? பேச முடியாத அளவுக்கு பயம் வேணுமாம்...”

“ஊர் வாயை எல்லாம் மூட முடியாதுங்க. அவங்க பேசறது நம்மை கொஞ்சமும் பாத்க்காதுனு தெரிஞ்சா தான் நிறுத்துவாங்க... நம்மை அது பாதிக்குதுன்னு தெரிஞ்சா பேசிட்டே தான் இருப்பான் !”


எண்ணமும் ஆக்கமும்
மல்லிகா மணிவண்ணன்

 
Top