Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
காதல் 8:

“என்ன அமைதியா வர..?” என்றான் முகிலன்.

“எனக்கு பேச விருப்பமில்லை..!” என்றாள்.

“நான் என்ன உனக்கு டிரைவர் வேலை பாக்குறேனா..?” என்றான் எரிச்சலுடன்.

“நான் ஒன்னும் பார்க்க சொல்லலையே..நீங்களாதான வம்படியா ஏத்திட்டு வந்திங்க..!” என்றாள் அவளும் அதே எரிச்சலுடன்.

“ஆமா...வம்பா உன்னைத் தூக்கி வண்டில உட்கார வச்சேன் பாரு..!” என்றான்.

“ஐயாவுக்கு அப்படி ஒரு நினைப்பு இருக்கோ..?” என்று இடக்காய் கேட்க..

“ம்ம் பரவாயில்லையே...பதிலுக்கு பதில் உடனே வருது...பயம் இல்லாம போய்டுச்சு..” என்றான்.

“யாரைப் பார்த்தும் பயப்பட வேண்டிய அவசியம் எனக்கில்லை..” என்றாள் வீராப்பாய்.

“அப்பா சரி..! உனக்கு தான் பயமில்லையே..! என் கூட வண்டியில வர வேற பிடிக்கலை..பேசாம இறங்கிக்க..!” என்றான்.

அவளும் ஒரு வேகத்தில் இறங்கப் போக..அப்போது தான் கவனித்தாள் சுற்றுப் புறத்தை.கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஆட்களும் இல்லை.

இரண்டு புறமும் புட்புதரும்..அதற்கு கீழ் இறங்கினால் கரும்பு தோட்டமும் இருந்தது.

ஏனோ ஆள் அரவமற்ற அந்த அமைதி அவளைத் திகிலடைய செய்ய.. இத்தனை நாள் ரம்யமாய் தெரிந்த அதே இடம்..இன்று பயத்தைக் கொடுத்தது.இருந்தாலும் அவனிடம் பேச ஈகோ தடுக்க...அமைதியாய் இருந்தால்.

“ம்ம் இறங்கு...எனக்கு லேட் ஆகுது..” என்றான்.

ஒரு நிமிடம் இறங்க முயற்சி செய்தவள்...தயங்கி இறங்காமல் இருக்க...

“என்ன இறங்கலையா..?” என்றான்.

“அடுத்த ஸ்டாப்ல இறக்கிவிடுங்க...நான் பஸ்லயே போய்க்கிறேன்..!” என்றாள் கேத்தி விட்டுக் கொடுக்காமல்.

“மாமான்னு சொல்லு..வண்டியை எடுக்கிறேன்..” என்றான் மந்தகாசமாய்.

“மாமனாவது,மச்சானவது..!” என்றாள் வெடுக்கென்று.

“என்னைய மானங்கெட்ட பயன்னு சொல்ல வர..” என்றான் இறுகிய முகத்துடன்.

“நான் எங்க அப்படி சொன்னேன்..!” என்றான்.

“நீ சொன்ன இரண்டு வார்த்தைக்கு அப்பறம் அதுதானே வரும்..” என்றான்.

அவள் அமைதியாய் இருக்க..இதுவரை அவன் மனதில் இருந்த இனிமை காணாமல் போக...வண்டியை விரட்டினான்.அவனின் வேகத்தில் அவளுக்கு தான் பயம் வந்தது.

“கொஞ்சம் மெதுவா போங்களேன் பிளீஸ்..” என்று அவள் சொன்னது அவன் காதில் விழுகவே இல்லை.பயத்துடன் அவனின் சட்டையை இறுகப் பிடித்துக் கொள்ள...அந்த சின்ன தொடுதல்..அவனுடைய கோபத்தை மட்டுப்படுத்தியது தான் ஆச்சர்யம்.

வேகத்தைக் கொஞ்ச குறைக்க...ஆனால் அது மதிக்கு தெரியாமல் போக..அவள் பிடித்த சட்டையை விடாமல் பற்றிக் கொண்டு வந்தாள்.
“இறங்கு மதி..!” என்று அவன் சொல்லும் வரை அவள் அந்த நிலையில் தான் இருந்தாள்.

அவனின் குரலில் கலைந்தவள்...திகைத்தாள்.ஏன் என்றாள் அவன் முதுகில் முகத்தைப் புதைத்திருந்தாள்.

“சட்டையை மட்டும் தான பிடிச்சேன்..! இது எப்புடி நடந்துச்சு..” என்று யோசித்தபடி இறங்கியவள்...அவனிடம் சொல்லாமல் கூட பள்ளியின் உள்ளே செல்ல...

அவளின் தீண்டலில்..அவனுக்கு தான் பித்து பிடித்த மாதிரி இருந்தது.

“டேய் முகிலா..! நீ போய் இன்னைக்கு பேஷன்ட்டை பார்த்த மாதிரி தான்..!” என்று தனக்குத் தானே சிரித்துக் கொண்டவன்...கலைந்திருந்த முடியை சரி செய்து விட்டு..வண்டியை ஸ்டார்ட் செய்ய..

அது வரை அவனின் செய்கைகளை தூரத்தில் இருந்து பார்த்திருந்தாள் மதி.அவனுக்கு ஒரு நன்றி கூட சொல்லவில்லையே என்று எண்ணியவள் அவனை நோக்கித் திரும்ப...அப்போதுதான் அவன் தன் முடியை படிய வைத்துக் கொண்டிருந்தான்.ஏனோ அந்த காட்சி மதியையும் அறியாமல் மனதில் வந்து பசை போட்டு ஒட்டிக் கொண்டது.

“என்ன பண்ணிக்கிட்டு இருக்க மதி..? அவனைப் போய் பார்த்துட்டு இருக்க..? முன்னாடி நடந்தது எல்லாம் மறந்து போயிடுச்சா..?” என்று மனசாட்சி கேள்வி கேட்க...ஒரு நிமிடம் இளகிய அவளது மனம்..மீண்டும் பாறாங்கல்லாய் கனத்தது.

அங்கே மதியின் வீட்டிலோ...மனோகரனை வறுத்து எடுத்துக் கொண்டிருந்தார் பார்வதி.

“யாரைக் கேட்டு மதியை அவன் கூட வண்டியில அனுப்புனிங்க..?” என்று பார்வதி கடிந்து கொள்ள..

“சொன்னா புருஞ்சுக்கோ பார்வதி...ஆபத்துக்கு பாவமில்லை..! புள்ள ஸ்கூலுக்கு போக வேண்டாமா..? பஸ்சும் வரலை...அதான்..” என்று அவர் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க...

“பஸ் வரலைன்னா..இன்னைக்கு ஒரு நாள் வீட்டில கூட இருந்துட்டு போறா..? அதுக்காக அவன் கூட அனுப்பனுமா..?” எங்க..

“புரியாம பேசாத பார்வதி..! புள்ள வேலைல சேர்ந்தே பத்து நாள் தான் ஆகுது...அதுக்குள்ள விடுப்பு எடுத்தா நல்லாவா இருக்கும்..” என்று சொல்ல..

“அது சரிதான்...இருந்தாலும் இதுவே பின்னாடி பிரச்சனையா மாறிட கூடாதுல்ல..!” என்றார்.

“ஏன் பார்வதி..? என்னைவிட முகிலன் மேல உனக்கு தான் உசுரு..இப்ப ஏன் இப்படி மாறிட்ட...?” என்றார்.

“காரணம் தெரிஞ்சுகிட்டே தெரியாத மாதிரி கேட்காதிங்க...! யார் மேல பாசமா இருந்தாலும்...அவங்களா..என் பொண்ணான்னு பார்க்குறப்ப..என் பொண்ணும்,அவ வாழ்க்கையும் தான் பெருசு..!” என்றார்.

“மதி வாழ்க்கைக்கு என்ன தான் பதில் வச்சிருக்க..?” என்றார் சோர்ந்தவராய்.

“அவளுக்கு விதி என்ன வச்சிருக்கோ..அது படி தான் நடக்கும்.நம்ம கைல என்ன இருக்கு..?” என்றார் பார்வதி.

“நான் சரியா இருந்திருந்தா...நம்ம பொண்ணுக்கு இவ்வளவு பிரச்சனை வந்திருக்காதுல..? ஒரு அப்பாவா நான் மதிக்கு ஒண்ணுமே செய்யலை..!” என்று அவர் வருந்த..

“நான் தான் சொல்லிட்டேனே..! நம்ம கைல எதுவும் இல்லை..! விதி என்ன வச்சிருக்கோ அதான்.அதனால் கண்டதையும் யோசிக்காம போய் வேலையைப் பாருங்க..!” என்று சொல்ல...மனோகரனுக்கு தான் நெஞ்சை அறுத்தது.இருந்தாலும் அவர் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
“யம்மா..யம்மா...!” என்றபடி வீட்டினுள் நுழைந்தான் துரைப்பாண்டி.

“என்னடா..? எதுக்கு இப்ப யம்மா யம்மான்னுட்டு வர..?” என்று திலகா நொடிக்க...

“என்னமோ அந்த முகிலன் பய தான் ஊர்ல உத்தமன்ற மாதிரியும், நாங்கள்லாம் எதுக்கும் லாயக்கு இல்லாதவங்க அப்படின்ற மாதிரியும் பேசுனிங்க..!இதுல துர்காவுக்கு டாக்டர் மாப்பிள்ளை பார்த்து பேசி முடுச்சுட்டோம்ன்னு பெருமை பீத்தினிங்க....இப்ப தான் பார்த்துட்டு வரேன் அவன் லட்சணத்தை...” என்றான்.

“என்னடா துரை சொல்ற..?” என்ற திலகாவுக்கு அடிவயிறு கலங்க..

“தன்னை விட அவன் உசத்தி..” என்று சொன்னதில் கடுப்புடன் இருந்த துரைப்பாண்டி..இது தான் சாக்கென்று தான் பார்த்த விஷயத்தை புட்டுப் புட்டு வைத்தான்.

அந்த முகிலன் பய...அந்த வண்ண மதியை பைக்ல வச்சு கூட்டிட்டு போய்கிட்டு இருக்கான்மா...அவ என்னமோ அவனுக்கே பிறந்த மாதிரி ஒட்டி உரசி உட்காந்திருக்கறதும்...அவன் என்னமோ ஏதோ ரம்பை ஊர்வசியைப் பார்த்தவன் மாதிரி..மயக்கத்துல வண்டி ஓட்டுறதும்..அந்த கொடுமையை என்னன்னு சொல்லுவேன்..! என்றான்.

“என்னடா தம்பி சொல்ற....நிஜமாவா..?” என்று திலகா நம்பாமல் கேட்க..

“அட ஆமாம்ம்மா....இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முந்தி தான் பார்த்துட்டு வரேன்..! இதுல அவன் என் தங்கச்சிக்கு மாப்பிள்ளையா..? விட மாட்டேன்மா..விடவே மாட்டேன்..!” என்று உறும..

“டேய் லூசுப்பயலே..! வாயை வச்சுகிட்டு சும்மா இருடா..! நானே எப்படியாவது இந்த கல்யாணத்தை முடிச்சு போடணும்ன்னு குறிக்கோளோட இருக்கேன்..இவன் என்னடான்னா..?” என்று அவர் இழுக்க..

“என்னம்மா சொல்ற..அதுக்குன்னு அவனையா..?” என்று துரை வெகுண்டு பேச..

“அவனுக்கு என்னை குறையை கண்ட...ராஜா மாதிரி இருக்கான்..! தேடுனாலும் கிடைக்காது நமக்கு.அவன் மட்டும் நம்ம வீட்டுக்கு மாப்பிள்ளை ஆகிட்டான்னு வையி...நீயும் டாக்டருக்கு மச்சினன் ஆகிடுவ...உனக்கு பொண்ணு தேடுறது சுலபம்டா..” என்று திலகா தன திட்டத்தை கூற..
“அவன் தயவுல நான் பிழைக்கிறதா..?” என்று துறை கேட்க..

“இல்லைன்னாலும்..இவரு பெரிய கலெக்டர் உத்தியோகம் பார்க்குறாரு... அப்படியே பொண்ணுங்க நான் நீன்னு போட்டி போடுதுங்க..! போடா போடா போக்கத்த பயலே..!” என்று திலகா பேசிக் கொண்டிருக்க..

“நாளைக்கே எனக்கு சொத்தைப் பிரிச்சு விடு..நானும் விவசாயம் பண்ணி பெரியாளா வரத்தான் போறேன்..! அதையும் நீ பாக்கதான போற..!”என்றபடி அவன் செல்ல...

அவன் சொன்ன விஷயத்தை யோசித்தார் திலகா.முகிலன் கூட மதியா..? என்ற கேள்வியே..அவருக்கு நெருப்பை அள்ளிக் கொட்டியது.
முகிலனிடம் இந்த விஷயத்தைப் பேச முடியாது என்று அவருக்கு தெரியும்.அதானால் யாரிடம் பேசினால் இதைத் தடுக்கலாம் என்ற விஷயமும் அவருக்குத் தெரியும்.

திலகா நேராக சென்றது...முகிலனின் அப்பா பெரியசாமியிடம் தான்.

“என்னம்மா திலகா சொல்ற..? முகிலனா கூட்டிட்டு போனான்..?” என்றார் மீண்டும் மீண்டும் நம்ப முடியாதவராய்.

“அட ஆமாண்ணே..துறை வந்து சொன்னானே..! நம்ம முகிலன் மருமவன் மேல எந்த தப்பும் இருக்காதுண்ணே..எல்லாம் அந்த மேனா மினுக்கிக பண்ற வேலையா இருக்கும்ண்ணே...அந்த பார்வதி தான் மகளுக்கு சொல்லிக் குடுத்திருப்பா..!” என்று திலகா ஏகத்தும் பேசிக் கொண்டிருக்க..

பெரியசாமிக்கோ நம்பவே முடியவில்லை.முகிலன் அந்த அளவிற்கு கோபத்தில் இருந்தான் அவர்கள் மேல்.அவனுடைய இந்த திடீர் மாற்றத்துக்கான காரணம் தான் அவருக்குத் தெரியவில்லை.

“நீ போம்மா...! நான் என்னன்னு கேட்குறேன்..!”என்றபடி திலகாவை அனுப்பியவருக்கு கண்களில் ஆனந்த கண்ணீர்.அவர் நினைத்ததும் அது தானே.தான் செய்த ஒரு தவறு பல பேரின் வாழ்க்கையில் விளையாடியதை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.ஆனால் ஏதோ ஒரு வகையில் சின்னதாய் அவருக்கு புரிந்திருந்தது.அவருக்கும் மதி என்றால் கொள்ளைப் பிரியம்.

ஆனால் முகிலனுக்குப் பிடிக்காதோ என்று அமைதியாய் இருந்தார்.முன்னால் பல விஷயங்களில் அவனைக் கட்டாயப்படுத்தி காயப்படுத்தியது போதும் என்று தான்...இப்பொழுது எல்லாம் அவர் அவன் விருப்பமின்றி எதையும் செய்வதில்லை.

ஒருவேளை மதிதான் அவனுடைய விருப்பம் என்றால்..முதலில் மகிழ்ச்சி அடைபவர் இவராகத்தான் இருப்பார்.

இந்த விஷயத்தை முதலில் தன் மனைவி மலரிடம் சொல்ல வேண்டும் என்று எண்ணியவர்...வீட்டிற்கு சென்று...மலரிடம் கூறினார்.
ஆனால் அவரோ எந்த மாறுதலும் காட்டாமல்..முகத்தை இருக்கமாய் வைத்திருக்க...

“என்ன மலர்..? உனக்கு சந்தோசம் இல்லையா..?” என்றார்.

“எனக்கு சந்தோசம் தான்..ஆனா பார்வதி மதினி ஒத்துக்க மாட்டாக...! அவங்கள பத்தி தான் உங்களுக்கு தெரியுமே..?” என்று சொல்ல..

“அதெல்லாம் பார்த்துக்கலாம் விடு..!” என்று அவர் சொல்ல..

“இல்லங்க..! நாம திலகா மதினிக்கு வேற வாக்கு குடுத்துருக்கோம்..துர்காவை மருமகளா ஆக்கிக்கிறோம்ன்னு..இப்ப பார்த்து இப்படின்னு சொன்னா...அவக மனசு நோகாதா..?” என்றார் மலர்.

“யாரைப் பத்தியும் எனக்கு கவலை இல்லை...நான் செஞ்ச தப்பை சீர் செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு..அதை நான் விட மாட்டேன்..!” என்று பெரியசாமி திட்டவட்டமாக உரைக்க..

மலருக்கு தான் என்ன செய்வதென்று புரியவில்லை.இத்தனை வருடங்களில் பார்வதி ஒரு முறை கூட பேசவில்லை.இப்போது போய் நின்றால் என்ன சொல்வார் என்ற தயக்கம் மலருக்கு மேலோங்க..

“முகிலனுக்கு இல்லாத உரிமையா..உடமை பட்டவனே அவந்தான..” என்று அவரின் மனம் ஒரு பக்கம் அழுத்தம் கொடுக்க...

“பைக்கில் ஒரு உதவிக்காக சென்ற விஷயம்..இந்த அளவிற்கு வந்து நின்றது.இதுவே கிராமம்.எதையும் சாதரணமாக எடுத்துக் கொண்டு போகும் ரகமில்லை.அன்பைத் தவிர.

எவ்வளவு காலங்கள் மாறினாலும்..சில விஷயங்கள்..சில இடங்களில் இன்னமும் மாறாமல் தான் இருக்கிறது.அது பழி செயலாக இருந்தாலும் சரி...புண்ணிய செயலாக இருந்தாலும் சரி.

மதியையும்,இவர்களையும் பத்தி யோசித்தவர்கள்...திலகாவைப் பற்றி யோசிக்கவில்லை.

அன்று மாலை பள்ளியை விட்டு திரும்பிய மதிக்கு..ஏனோ காலையில் நடந்த விஷயங்கள் நியாபகத்து வர..அவளையும் மீறி அவள் முகத்தில் ஒரு மெல்லிய இணக்கம்...நீண்ட நாட்களுக்குப் பிறகு.

பேருந்து ஜன்னலில் தலை சாய்த்திருந்தவளின் மனதில் வண்ண வண்ண கனவுகள்.

ஒரு காலத்தில் கனவுலகிலேயே சஞ்சரித்தவள் வண்ண மதி.அவளைச் சுற்றிலும் மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருந்த நாட்கள்.துருதுருப்பும்,வேடிக்கைத்தனமும் நிறைந்திருந்த நாட்கள் அவை...இன்று நினைத்தாலும் கிடைக்காத நாட்கள்.

“என்னை நிஜமாவே உனக்கு பிடிக்கலையாடி..? இல்லை பிடிக்காத மாதிரி நடிக்கிறியா..?

ஆனா எனக்கு நீ வேணும் மதி..! இப்பவும்,எப்பவும் நீ வேணும் மதி..புருஞ்சுக்கோ..! வா..கல்யாணம் பண்ணிக்கலாம்...
எனக்கு எப்பவும் நீ என்கூடவே இருக்கணும்..எனக்காகவே இருக்கணும்...என்னை மட்டுமே நினைக்கணும்....அந்த முத்துப் பய உன் நினைப்பில் கூட வரக் கூடாது.

மீறி வந்தான்..அவனை கொலை பண்ண கூட தயங்க மாட்டேன்...! என்ற முகிலனின் கண்களில் அத்தனை ஆக்ரோஷம்.
அவளின் பயந்த முகம் பார்த்து...

“பயப்படாத..! அப்படி நடக்கத்தான் நீ விட மாட்டியே..! நீ தான் என் கூடவே இருப்பியே..? அப்பறம் ஏன் பயப்படுற...என் மதி..என் வண்ண மதி..! என்றபடி அவளை இறுக்கி அணைக்க....

“வேண்டாம் மாமா..விடு மாமா..!” என்று மதி பிதற்ற..

“ஏம்மா...ஏம்மா பொண்ணு..” என்று அருகில் இருந்தவர் மதியைத் தட்ட...

“ங்காம்...” என்று கனவில் இருந்து முழித்தவள்....பக்கு பக்கென்று முழிக்க...

“என்னம்மா தனியா புலம்பிட்டு வர...! நீ இறங்க வேண்டிய இடம் வந்துடுச்சு..! அங்க கண்டக்டர் கத்திட்டு இருக்கார் பாரு..!” என்று சொல்ல...வேகமாய் எழுந்தவள்...அடித்துப் பிடித்துக் கொண்டு இறங்கினாள்.

இறங்கின பிறகு தான் அவளுக்கு மூச்சே வந்தது.பேருந்து ஜன்னலில் தலை சாய்த்தது தெரியும்.அதற்குள் ஒரு தூக்கமும் தூங்கி..ஒரு கனவும் கண்டு... என்று தன்னை நினைத்தவளுக்கு ஒரே வெட்கமாகிப் போனது.

ஆனால் கனவின் தாக்கம் மட்டும் குறைந்தபாடில்லை.அதை இப்போது நினைத்தாலும்...அவளுக்கு வியர்த்தது.




 
மணி முகிலன்.... வண்ணமதி.. முத்து மாமா என்ன விட்டு போகாதேன்னு பாடுவான்னு நினைச்சேன்.. ஆமா இப்போ முகிலன் மாமாவா ஆகிடுச்சா.. டாக்டர் சார்.. நீங்க யாருக்கு வைத்தியம் பார்த்தாலும் சரி.. உங்களுக்கு மருந்தெல்லாம் மதி தான் போல
 
Top