Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

KPUK -2

Advertisement


அத்தியாயம் 2:




தன் ஆசை மகளின் தலையை மென்மையாக வருடி கொடுத்த பூபாலன் தனக்கு முன்பாக நிழலாட நிமிர்ந்து பார்த்தவர் அங்கு அய்யனார் தோற்றத்தில் நின்று கொண்டிருந்த தன் மருமகனை கண்டதும் அவர் மரியாதை நிமித்தமாக எழ, அவர் மடியில் தலை வைத்து படுத்திருந்த நிறைமதி "என்னாச்சுப்பா எதுக்காக இப்ப எந்திரிக்கிறீங்க?"என்று தூக்கம் கலையாத தன் கயல் விழியை திறந்து கேட்க, அவளை அப்படியே தன் இரு கைகளிலும் அள்ளிக் கொண்டான் அவன்.



சிறுபிள்ளை போல தன்னை கைகளில் தூக்கிக் கொண்ட மாமனை நிறைமதி பார்க்க, அவனோ அவளை பார்க்காமல் பூபாலனை பார்க்க அவன் பார்வையின் பொருள் இன்னதென உணர்ந்து கொண்ட பூபாலன் மகள் அறையை விட்டு வெளியில் செல்ல, தந்தை தன்னை விட்டு செல்லவும் சிறுபிள்ளை போல் "மாமா கிட்ட என்னை தனியா விட்டுட்டு போகாதீங்க நீங்களும் இங்கேயே இருங்க ப்பா.." என்றழைக்க,மருமகன் முன்னிலையில் மகள் சொன்ன வார்த்தை எல்லாம் அவர் காதில் கேட்கவில்லை போலும்.



அப்படியே அவளைத் தூக்கிக் கொண்டு சென்றவன் பாத்ரூமுக்குள் விட்டு வெளியில் கதவை சாத்த அதில் மிகவும் கோபம் கொண்ட நிறைமதி உள்ளிருந்து கதவை தட்டினாள்.



"டேய் மாமா ஒழுங்கு மரியாதையா கதவை திறந்துவிடு இல்ல நான் குளிக்கவும் மாட்டேன் காலேஜ் போகவும் மாட்டேன் நீயும் எங்கேயும் போகவும் முடியாது.."என்று கத்தியபடி இரு கைகளையும் கொண்டு தன்னால் முடிந்தவரை கதவை படபடவென தட்டினாள்.



அவள் செயலில் மிகவும் கோபம் கொண்டவன் சற்றும் தாமதிக்காது கதவை திறந்து விட்டு "உனக்கு இன்னும் அஞ்சு நிமிஷம் டைம் அதுக்குள்ள குளிச்சு முடிச்சுட்டு வெளியில் வரலைன்னா நான் உள்ள வந்துடுவேன்.. உன் கை இரண்டையும் கட்டி போட்டுட்டு உன்னை குளிக்க வைக்க எனக்கு தெரியும்? அரை மணி நேரம் எனக்கு லேட்டானாலும் பரவால்ல என்ன மாமா நான் உன்னை குளிக்க வைக்க தயார் நீ ரெடியா?"என்றவன் சட்டை பட்டனை கழட்ட, அவன் செயலில் அத்தனை நேரம் கத்திக் கொண்டிருந்தவள் கப்சிப் என அமைதியாகிவிட்டாள்.



முதல் இரண்டு பட்டனை அவன் கழட்டியதுமே அந்த பக்கம் திரும்பி நின்று கொண்டவள் "ஒன்னும் தேவை இல்ல எனக்கு குளிக்க தெரியும் நீங்க ஒன்னும் ஆணியே புடுங்க வேணாம் முதல்ல வெளிய போங்க.."என அவள் சொன்னதை கேட்டு அந்த இறுக்கமான முகத்தில் ஒரு புன்னகை மெல்லிய வினாடிக்குள் வந்து போனது.



அந்தப் புன்னகையை காண அவளுக்கு கொடுப்பணை இல்லை போலும்!!



"நோ உனக்கு தெரியாதா? நீ எதை செய்யக்கூடாதுன்னு சொல்லுவியோ அதை மட்டும் தான் நான் செய்வேன்னு எனக்கு இப்ப ஆசை வந்துடுச்சு கண்டிப்பா அதை நான் செய்யத்தான் போறேன்.."என்றவன் அவளுக்கு பின் பக்கமாக நெருங்கி நின்று அவள் கழுத்து பக்கத்தில் மூச்சுவிட, அவனது அனல் மூச்சுக்காற்று அவள் உயிர் வரை சென்று தீண்ட கண்கள் தன்னால் மூடிக்கொண்டது.



அந்த நிமிடம் அவளது உலகம் மொத்தமும் ஸ்தம்பித்து போக, அங்கு அவனும் அவளும் மட்டுமே!!



அவளுக்கு பின்னால் நின்றவனோ கைகளில் ஒரு சொட்டு நீரை எடுத்து அவள் முகத்திற்கு முன்பாக கொண்டு சென்றவன் அவள் நெற்றியில் தண்ணியை விட, அவன் ஊற்றிய நீர் அவள் நாசியை தாண்டி இதழ்களை தீண்ட பாவையவள் அதற்கும் மேலும் தாங்க இயலாது அப்படியே அவன் மீது சாய்ந்து விட்டாள்.


தன் அனுமதியின்றி தன் மீது அவன் கை படாது என்பதை புரிந்து வைத்திருந்தவள் அவளாகவே முன்வந்து அவன் கைகளோடு தன் இரு கைகளையும் பிணைத்து கொண்டவள் அவன் கைகளை அப்படியே முன்னே கொண்டு வந்து தன் இடையோடு சுற்றிக்கொண்டவள் சுகமாக அவன் பரந்த மார்பில் சாய்ந்து கொண்டாள்.


அவளை தவிக்க வைக்க வேண்டும் என்று பக்கத்தில் வந்தவன் நிலைமை தான் இறுதியில் தவிப்புக்குள்ளானது.



அவனது தவிப்பை அவனது ஸ்பரிசம் அவளுக்கு சொல்லி விட அவள் இதழ்களில் ஒரு குறுநகை மலர்ந்தது.



அவனை இன்னும் தவிக்க விட வேண்டும் என்ற அவள் ஆசை அதிகமாக தன் இரு கால்களையும் அவன் இரு கால்கள் மீது வைத்து இருவருக்கும் இடையில் காற்று கூட புக முடியாத அளவுக்கு அவனோடு நெருங்கி நின்றவள் தலையை சற்று நிமிர்த்தி அவன் முகத்தை பார்க்க என்ன முயற்சித்தும் அவன் முகத்தில் இருந்த உணர்வுகளை அவளால் அவதானிக்க இயலவில்லை.



அவன் முகத்தையே ஓரிரு நொடிகள் பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் ஆண்மைக்கு அழகு சேர்க்கும் விதமாக அமைந்திருந்த மீசையை கண்டதும் அவளுக்குள் இருந்த ஆசை வெளிவந்தது.



அவனை விட்டு பிரிந்தவள் கைகள் இரண்டும் அந்த மீசையை அவன் முகத்தில் இருந்து பிய்த்து விடுவது போல் இழுக்க,"வலிக்குது விடு காலேஜுக்கு டைம் ஆகுது பாரு சீக்கிரம் கிளம்பு நானும் கிளம்பனும்.."என்றவன் அவள் கைகளை தன் மீசையிலிருந்து எடுத்துவிட்டு ஓரடி பின்னே செல்ல, அவனை விடாமல் அசந்த நொடியில் அவன் கைகளைப் பிடித்திழுத்தவள் அப்படியே நெருங்கி சட்டைகளை கழட்டி விட்டிருந்த அவன் பரந்த மார்பில் தன் முகத்தை புதைத்துக் கொள்ள அவனுக்கே உரிய வாசம் அவளை பித்துக் கொள்ள செய்தது.



அவனது வாசம் இன்னும் இன்னும் வேண்டுமென்று மனமும் உடலும் ஆர்பரிக்க, அவனுக்குள் புதைந்து விடுவது போல் அழுத்தமாக புதைந்து கொண்டே போனாள்.



இப்படியே அவளிடம் மயங்கி நின்றால் நிச்சயம் தன் சுயத்தை தொலைத்து விடுவோம் என்று அவளிடம் மயங்கிய உணர்ச்சிகளை சிரமப்பட்டு கட்டுப்படுத்தியவன் அவளை விட்டு ஈரடி பின்னே விலகி நின்றான்.


 
தாயை பிரிந்த குழந்தை போல் அவனை அவள் ஏக்கமாக பார்க்க, அந்தப் பார்வை அவனை உள்ளுக்குள் கொல்லாமல் கொன்றாலும் வேறு வழி இல்லாமல் அவளுக்காக அதை தனக்குள்ளையே போட்டு புதைத்துக் கொண்டவன் அவளை கோபமாக முறைத்து பார்த்தான்.







"இங்க பாரு மணி என்ன ஆச்சுன்னு பாரு?இப்படியே எவ்வளவு நேரம் இருக்கிறதா தான் உத்தேசம் சீக்கிரம் கெளம்பு எனக்கு வேலை இருக்கு.."







"நான் பாட்டுக்கு செவனேன்னு தானே இருந்தேன் நீங்க தானே தேவையில்லாம என்ன தூக்கிட்டு வந்து பாத்ரூம்குள்ள விட்டதோட இல்லாம என்னையும் குளிக்க வைக்கிறதா சொன்னீங்க! எனக்கு இப்ப ஆசை வந்துடுச்சு உங்களோட சேர்ந்து நானும் குளிக்க ரெடி.."என்றவள் அவனைப் பார்த்து கண்ணடித்துவிட்டு தன் சட்டையின் முதல் பட்டனை கழட்ட, அவள் செயலில் அவளை முறைத்து பார்த்தவன் விறுவிறுவென வெளியில் வந்து பாத்ரூம் கதவை அடித்து சாத்த, கதவையும் தாண்டி சத்தமாக கேட்டது அவள் சிரிக்கும் ஓசை.







அவளிடம் விறைப்பாக நின்று கொண்டிருந்தவன் வெளியில் வந்ததும் இழுத்து வைத்திருந்த மூச்சை விட்டு தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டான்.







ஊரையே ஆட்டி வைக்கும் அவனை ஆட்டி வைக்கும் ஒரே ஆள் இந்த பூமியில் உண்டு என்றால் அது அவள் மட்டும் தான்.







இதற்கு மேலும் இங்கேயே நின்று கொண்டிருந்தால் உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது ஒன்றை தன் கட்டுப்பாட்டையும் மீறி செய்து விடுவோம் என்று பயம் கொண்டவன் அவளால் ஏற்பட்ட உணர்வுகளை அடக்குவதற்காக இரு கைகளையும் மடக்கி வைத்தவன் விரல்கள் ஐந்தையும் ஒன்றாக சேர்த்து மடக்கி, தன் மனதில் எழுந்த உணர்வுகள் அத்தனையும் ஒருசேர குறைப்பதற்கு பெரும் பாடுபட்டு போனான்.







அவளிடம் அவன் நெருங்காமல் இருப்பதற்கான ஒரே காரணம் இது மட்டும் தான்.







அவளிடம் நெருங்கினால் நிச்சயம் அவன் உணர்வுகள் அவனையும் மீறி அவளை ஆட்கொண்டு விடும் என்கிற பயம் ஒன்று மட்டும் தான் இன்று வரை அவளுக்கு சாதகமாக இருக்கிறது.







இங்கு வெளியில் கலவரமாக நின்று கொண்டிருந்த தீபாவும் காமாட்சியும் உள்ளே என்ன நடக்கிறது என தெரியாமல் கையை பிசைந்து கொண்டு நிற்க, அவர்கள் நினைத்தது போலவே நிறைமதி சத்தம் போடும் சத்தம் கேட்க, உள்ளே இருப்பவன் இவர்கள் உள்ளே வந்தால் நிச்சயம் ஏதாவது ஒன்று செய்து விடுவான் என்று அங்கேயே இருக்க சரியாக வெளியில் வந்தார் பூபாலன்.







"என்னங்க நீங்க மட்டும் வெளியில் வர்றீங்க! நீங்க உள்ள இருக்க தைரியத்துல தானே நான் வெளியில் நின்னுகிட்டு இருந்தேன்.. அந்தப் பொண்ணு தேவை இல்லாமல் மருமகனை சீண்டி விடப் போறா.. எப்ப பாத்தாலும் இவளுக்கு அவனை வம்பு இழுக்கிறது வேலையா போச்சு பாவமாக இருக்குது அவனைப் பார்த்தா.."என்று வருத்தமாக தீபா சொல்ல, மனைவியின் சோகத்தை கண்டதும் அவர் பக்கத்தில் வந்த பூபாலன் மனைவியின் தோள் மீது கைகளை போட்டு தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவர் "நீ கவலை பட இதுல ஒண்ணுமே இல்லை கண்ணம்மா.. அவ அவனோட சொத்து நம்ம எல்லாரையும் விட அவனோட உயிரே நம்ம பொண்ணுதான் இன்னும் சொன்னா புள்ளையை பெத்த நம்ம ரெண்டு பேரையும் விட நம்ம பொண்ணுக்கு அவன் எப்பவுமே ஒரு படி கூட தான்.."எனவும் கணவனை கண்கலங்க பார்த்தார் தீபா.







"எனக்கு புரியுதுங்க ஆனா மனசு கேக்க மாட்டேங்குது அவனைப் பார்க்கவே ரொம்ப பாவமா இருக்குது.. இதுக்கெல்லாம் நான்தான் காரணமா இருப்பேன்னு தோணுது போன ஜென்மத்துல என்ன பாவம் பண்ணோமோ இந்த ஜென்மத்துல அது நம்மளை ஆட்டி படைக்குது.."என்றவர் கண்களில் சொட்டுநீராக கண்ணீர் இறங்க, தன் உயிரான மனைவியின் கண்ணீரை கண்டதும் துடித்துவிட்டார் பூபாலன்.







"இங்க பாரு கண்ணம்மா உன்கிட்ட நான் பல தடவை சொல்லி இருக்கேன் நான் உயிரோட இருக்க வரை உன் கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவே கூடாது.. நிச்சயம் எல்லாம் சரியாகும் எல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்கு தான் இந்த கொஞ்ச நாள் போயிடுச்சுன்னா அதுக்கப்புறம் லைப் லாங் நமக்கு எப்பவுமே சந்தோஷம்தான்.."







"இருந்தாலும்.."என்று மேலும் பேசப்போன மனைவியின் வாயில் விரலை வைத்து அடைத்தார் பூபாலன்.







தன் நாத்தனாரும் அவர் கணவரும் பேசிக் கொண்டிருப்பதை கண்டு நாகரீகமாக அடுப்படிக்கு சென்று விட்டார் காமாட்சி.







இங்கு நிறைமதி இருந்த அறை கதவை திறந்து கொண்டு வெளியில் வந்தான் அவன்.







அவனைப் பார்க்க பார்க்க தீபா மனதுக்குள் துயரம் கடலலையாய் ஆர்ப்பரித்தது.







கணவரை விட்டுவிட்டு அவனிடம் வந்தவர் அவன் கைகளை பிடித்துக் கொண்டவர் கண்களில் கண்ணீர் நில்லாமல் வழிய, எப்போதும் போல் அவர் கண்ணசைவில் அவர் மனதில் உள்ளதை படித்தான் அவன்.







பகலவன் என்னும் நாமம் கொண்ட நம் கதையின் கதாநாயகன்.







"என்னை மன்னிச்சுடு பவன் என் மனசு ரொம்ப குற்ற உணர்ச்சியில் தவிக்குது நான் மட்டும் அவசரப்படாமல் இருந்திருந்தா இது நடக்காமல் இருந்திருக்கும்.."என்றவரை அழுத்தமாக பார்த்த பகலவன் "அவ என்னோட பொண்டாட்டி எனக்கு இந்த உலகத்துல அவளைத் தவிர வேறு எதுவும் முக்கியமில்லை அவ மட்டும் தான்.."என்றவன் அவர் கைகளில் ஒரு அழுத்தம் கொடுத்து விட்டு, கூடத்தில்லிருந்த சோபாவில் அமர்ந்தவன் செல்போனை எடுத்து அன்றைய மார்க்கெட் நிலவரங்கள் அனைத்தையும் பார்வையிட ஆரம்பித்தான்.







செல்போனில் அவன் மூழ்கி போக அவன் சொன்னது போலவே ஐந்து நிமிடங்களில் குளித்து முடித்து தயாராகி வெளியில் வந்தாள் நிறைமதி.







சோபாவில் அமர்ந்து செல்போனை நோண்டி கொண்டிருந்த தன் கணவனை கண்டு அவள் கண்களில் காதல் மிகுந்து காணப்பட்டது.







"ஓய் மாமா இந்த டிரஸ் பார்க்க எனக்கு எப்படி இருக்கு?"என்றவள் அவனுக்கு முன்பாக வயலட் நிறத்தில் அணிந்திருந்த அனார்கலியை அவனுக்கு முன்னும் பின்னும் ஆட்டியபடி கேட்க, பால் போன்ற நிறத்தில் இருந்த பெண்ணுக்கு அந்த உடை இன்னும் அழகு சேர்ப்பது போல் அமைய பகலவன் நிலைமை சொல்லவும் முடியாது போனது.







"என்ன மாமா உங்க கிட்ட தானே கேட்டுகிட்டு இருக்கேன் எந்த பதிலும் சொல்லாம அமைதியா இருக்கீங்க! நீங்க ஒன்னும் சொல்லாம அமைதியா இருக்கறதை பார்த்தா உங்களுக்கு இது பிடிக்கல போல இருக்கே.. சரி வெயிட் பண்ணுங்க நான் போய் வேற டிரஸ் மாத்திட்டு வரேன்.."என்று அங்கிருந்து செல்லப் போனவளின் கைகளை பிடித்து அவசரமாக தடுத்து நிறுத்தினான் பகலவன்.







"உனக்கு என்ன எந்த டிரஸ் போட்டாலும் பாக்குறதுக்கு அப்படியே ஏஞ்சல் மாதிரி தான் இருப்ப! சரி சரி மணி இப்பவே ஒன்பதரை ஆயிடுச்சு வழக்கம்போல இன்னைக்கு காலேஜ்க்கு லேட்டா தான் போக போற.."எனவும் நாக்கை துருத்தி அவனுக்கு பழிப்பு காட்டினாள் அவனது உயிர் தேவதை.







அவள் செயலில் உள்ளுக்குள் அவன் சிரித்துக் கொண்டாலும் வெளியில் எப்போதும் போல் விறைப்புடன் இருக்க எந்தவிதமான உணர்வுகளையும் வெளி காட்டாமல் இருக்கும் தன் காதல் கணவனை கோபத்தோடு பார்த்தபடி சாப்பிடுவதற்காக சென்றாள்.







அவளுக்காக காத்துக் கொண்டிருந்த பகலவன் சாப்பாடு மேஜையில் சென்று அமர, மேஜை மீது அனைத்து உணவுகளும் பரப்பப்பட்டிருந்தது.







எப்பொழுதும் அவன் அந்த வீட்டில் சாப்பிடுவது ஒரே நேரம் மட்டும்தான் அதுவும் காலையில் மட்டும் தான்.







அவன் இப்பொழுது தங்கி இருப்பதும் வேறொரு இடத்தில் தான்.







நிறைமதி ஒருத்திக்காக மட்டுமே அந்த வீட்டிற்கு அவன் வருகிறான்.







மேஜையிலிருந்த உணவுகளை அவள் தட்டில் அவனே ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து எடுத்து வைக்க, கணவன் மீது வைத்திருந்த கண்பார்வையை அகற்ற முடியாமல் அவனை பார்வையாலையே கபளிகரம் செய்து கொண்டிருந்தாள் பகலின் மதி.







"என்னைய பார்த்துகிட்டு இருந்தது போதும் சாப்பாட்டை பார்த்து சாப்பிட ஆரம்பி லேட் ஆகிட்டு இருக்கு சீக்கிரம்.."







"நீங்க சாப்பிடலையா?"







"நான் போற வழியில் ஏதாவது சாப்பிடுக்கிறேன் சாப்பிடு.."







"சரி வாங்க நானும் அப்போ உங்க கூடவே போற வழியில் சாப்பிடுகிறேன் உங்களுக்கு வேற லேட் ஆயிடுச்சுன்னு சொல்றீங்க வாங்க.."







"டென்ஷன் பண்ணாத ஒழுங்கா உட்கார்ந்து சாப்பிடு.."







"முடியாதுன்னு சொன்னா முடியாது தான் மாமா நீங்க சாப்பிடுங்க நானும் சாப்பிடுறேன்.."என்று அவனைப் போலவே அடம் பிடித்து அவனை சாப்பிட வைத்தாள்.









தான் மெதுவாக சாப்பிட்டால் தான் அவன் நன்றாக சாப்பிடுவான் என்று உணவை மெதுவாக சாப்பிட ஆரம்பித்தாள் மதி.







அவளின் வயிறு நிறைவதை தவிர அவனுக்கு வேறொன்றும் இந்த உலகில் பெரிதில்லை.







தான் நன்றாக சாப்பிட வேண்டும் என்பதற்காகத்தான் அவளும் மெதுவாக சாப்பிடுகிறாள் என்பதை உணர்ந்து வைத்திருந்தவன் அவளுக்காகவே நன்றாக உண்ண ஆரம்பித்தான்.







இருவரும் சாப்பிட்டு முடிக்க நேரம் பத்தை கடந்திருந்தது.







கடிகாரத்தையும் மனைவியையும் பார்த்தபடி பகலவன் வெளியில் செல்ல, நிறைமதி தன் பேக்கை எடுத்து மாட்டிக்கொண்டு வீட்டிலிருந்த அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்ப மருமகன் இருந்ததால் அமைதியாக இருந்த தீபா அவன் வெளியே சென்றதும் மகளைப் ஒரு பிடி பிடித்து விட்டார்.







"ஏண்டி உன்னை எத்தனை மணிக்கு வந்து எழுப்பி விட்டேன்! பவன் உள்ள வரும்போது இன்னைக்கு முக்கியமான விசயமா டவுனுக்கு போகணும்னு சொல்லிக்கிட்டு தான் வந்தான்.. போதாதுக்கு எலக்ஷன் வேற இன்னும் ரெண்டு வாரத்துல இருக்கு கழுத்துக்கு மேல அவனுக்கு வேலை இருக்கும்போது வேணும்னே இப்படி இங்க உட்கார வச்சு அவன் நேரத்தை எதுக்கு வேஸ்ட் பண்ற?"ஆதங்கமாக கேட்ட தாயை சிறு புன்னகையுடன் பார்த்தாள் அவரது மகள்.







"எனக்கு தெரியும் ம்மா மாமாவுக்கு நிறைய வேலை இருக்குன்னு எனக்கும் நல்லாவே தெரியும்.. கண்டிப்பா அவரு வேலை வேலைன்னு கொஞ்சம் கூட ஓய்வெடுக்காம அது பின்னாடியே தான் ஓடிக்கிட்டு இருப்பாரு.. அவருக்கு வேலை முக்கியம்னா எனக்கு என் புருஷன் தான் முக்கியம் என்னதான் நாங்க ரெண்டு பேரும் பிரிஞ்சு இருந்தாலும் அவர் என்ன பண்றாருன்னு எனக்கு தெரியும் நான் என்ன பண்ணிக்கிட்டு இருக்கேன்னு அவருக்கும் தெரியும்..என் கூட இருக்கும் போது மட்டும் தான் அவர் எந்தவிதமான டென்ஷனும் இல்லாமல் சந்தோஷமா இருப்பார் அப்போ அவர் ஒரு இடத்துக்கு போகும்போது கொஞ்சம் லேட்டா போனாலும் எனக்கு அதப்பத்தி எல்லாம் கவலை இல்லை என் புருஷனை எதிர்த்து கேள்வி கேக்குற அதிகாரம் யாருக்குமில்லை.. அவரை ஆட்டி வைக்கிற ஒரே மந்திரம் நான் மட்டும்தான்..அவர் அந்த இடத்துக்கு போறத விட என் கூட இருக்கும்போது சந்தோஷமா இருக்கிறது தான் எனக்கு முக்கியம் ம்மா நான் போயிட்டு வரேன்.."என்று தாயின் கன்னத்தை தட்டி விட்டு செல்ல, தன் செல்ல மகள் பெரிய பெண் போல் பேசிவிட்டு செல்வதை கண்டு வியப்புடன் நின்று கொண்டிருந்தார் தீபா.







பூபதியும் காமாட்சியும் தங்கள் மகன் தங்கள் சொந்த வீட்டிலேயே வேறொருவன் போல் வந்து விட்டுச் செல்வதை வேதனையுடன் பார்க்க அவன் தங்கை சௌமியா தன் அண்ணன் தன்னை கூட கண்டு கொள்ளமால் எப்பொழுதும் நிறைமதி பின்னாடியே சுற்றிக் கொண்டிருப்பதை எரிச்சலோடு பார்த்தபடி பள்ளிக்கு கிளம்பினாள்.







வீரராகவன் பாண்டியம்மா இருவரும் கூட தங்கள் பேரன் வீட்டில் மூன்றாவது மனிதன் போல் வந்து விட்டு செல்வதை கண்டு மனம் வருந்தி தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.







அவர்களால் இப்பொழுது வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்..







அங்கிருந்த அனைவரின் கைகளையும் கட்டிப் போட்டிருந்தது விதி.







அங்கே அவன் இருந்தால் நிச்சயம் அவன் உணர்வுகள் அத்தனையும் இழந்து நடைப்பினமாகத்தான் வாழ வேண்டும் என்ற ஒரே காரணத்தினால் தான் அவனை அந்த வீட்டில் இதுவரை யாரும் தங்க சொன்னது கிடையாது.







கார் பக்கத்தில் பகலவன் நிறைமதிக்காக காத்துக் கொண்டிருக்க, அவனது பக்கத்தில் வந்தவள் அவன் கார் அருகில் நிற்பதை கண்டு முகத்தை சுளித்தாள்.







அவள் முகச்சுழிப்பிற்குமான காரணம் அவனுக்குமே நன்றாக தெரிய காரை விடுத்து அருகில் இருந்த பைக்கில் சென்று ஏறி அமர்ந்தவன் அதை ஸ்டார்ட் செய்து ஹெல்மெட்டை மாட்டிக் கொள்ள, தான் சொல்லாமலேயே தன் ஒற்றை கண்ணசைவில் அனைத்தையும் கண்டுபிடிக்கும் கணவனின் மீதான அவள் காதல் இன்னும் கூடித்தான் போனது.







அவன் இரு தோள்பட்டையிலும் கை வைத்தபடி ஏறி அமர்ந்தவள் கைகள் அவன் புஜங்களுக்குள் நுழைந்து தோள்பட்டையை சுற்றி வளைத்தது.







"டேய் மாமா இந்த ஹெல்மெட் உன் கூட பேசறதுக்கு எனக்கு டிஸ்டர்பன்ஸா இருக்கும் கழட்டி வச்சிடு அப்பறமா போட்டுக்கலாம்.."என கண்ணாடி வழியாக அவள் முகத்தை பார்த்தவன் அவள் சொன்னது போலவே ஹெல்மெட்டை கழட்டி முன்னால் வைத்துக் கொள்ள இப்பொழுது அவள் தாராளமாக அவன் தலைக்கு அருகில் தன் முகத்தை புதைப்பதற்கு வசதியாக இருந்தது.







ஆரம்பமானது அவர்களது இனிய பயணம்.





"டேய் மாமா நேத்து காலேஜ்ல என்ன நடந்துச்சு தெரியுமா?"என்று ஆரம்பித்தவள் கல்லூரி வரும் வரையில் பேச்சை தொடர,அனைத்துக்கும் சிறு சத்தம் கூட செய்யாமல் அமைதியாக கேட்டு பயணம் செய்து கொண்டிருந்தான் பகலவன்.







"அப்புறம் இன்னைக்கு ஏன் காலேஜ் லேட்டா வரேன்னு தெரியுமா மாமா.. இன்னைக்கு காலேஜ் கிடையாது பிகாஸ் காலேஜ் நேத்தோட முடிஞ்சிடுச்சு இன்னைக்கு பிரண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து பார்ட்டி வைக்கிறாங்க அதுக்கு என்னையும் இன்வைட் பண்ணி இருக்காங்க போகாம இருந்தா அவ்வளவு நல்லா இருக்காது.."எனவும் அவளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் இருந்தான் பகலவன்.







அவன் பதில் சொல்லாமல் அமைதியாக இருப்பதிலேயே அவனுக்கு அனைத்து உண்மைகளும் தெரிந்து விட்டது என்று அமைதியாகிவிட்டாள் நிறைமதி.







அத்தனை நேரம் அவள் பேச்சு அவனுக்கு அவளுடனான நெருக்கத்தை பெரிதும் ஏற்படுத்தி தர, அவள் அமைதி இப்பொழுது அவனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.







அத்தனை நேரம் வாயை மூடிக் கொண்டிருந்தவன் அவள் அமைதி தாங்க முடியாமல் வாயை திறந்தான்.







"உன்ன பத்தின ஒவ்வொரு அப்டேட்டும் என் காதுக்கு அப்பப்ப வந்துடும் ஆனா உனக்குன்னும் ஒரு பிரைவசி இருக்கு அதுல ஒரு குறிப்பிட்ட எல்லை வரை தான் நான் வர முடியும் அதுக்கு மேல வர முடியாது.."







"இப்படி எல்லாம் பேசாதீங்க மாமா எனக்கு கண்டிப்பா கோபம் வந்துடும் உங்களுக்கே தெரியும் எனக்கு உங்கள தாண்டி வேறு எதுவும் இந்த உலகத்தில் முக்கியம் கிடையாது அது எதுவா இருந்தாலும்.."







"கமான் மதி எல்லாருடைய வாழ்க்கையிலும் அவங்க அவங்களுக்குன்னு ஒரு பிரைவசி இருக்கு.. ஒரு குறிப்பிட்ட எல்லை வரை இருந்துட்டோம்னா ஹஸ்பண்ட் வைஃப் அண்ட் எந்த ரிலேஷன்ஷிப்பா இருந்தாலும் அதுல காம்ப்ளிகேஷன் வராது..ஓவரா எல்லா இடத்திலும் உரிமையை எடுத்துக்கும்போது எல்லா விஷயத்தையும் நம்ம கிட்ட சொல்லனும்னு எதிர்பார்க்கும் போது ஏதாவது ஒரு விஷயத்தை அவங்க நம்ம கிட்ட சொல்லாம இருந்தா கண்டிப்பா அந்த ஏமாற்றம் நமக்கு பெரிய கோபத்தை உண்டு பண்ணி தேவையில்லாத பிரச்சனையை கொடுக்கும்.."







"நீங்க என்ன சொன்னாலும் எனக்கு அது தேவையில்லை மாமா உங்களுக்கே நல்லா தெரியும் எனக்கு நீங்க மட்டும் தான் இந்த உலகத்துல ரொம்ப முக்கியம் அவ்வளவுதான்.. என் வாழ்க்கையில உங்களுக்கு தெரியாத ரகசியம் எதுவும் இருக்காது இருக்கவும் கூடாது.. என்னுடைய எல்லா விஷயமும் உங்களுக்கு கண்டிப்பாக தெரியும் எனக்கு நீங்க முக்கியமா இருந்தாலும் என்னோட ஆசைக்கும் மதிப்பு கொடுத்து நீங்க விலகி இருக்கீங்க.. எனக்கும் அது நல்லாவே தெரியும் மாமா அந்த விஷயம் எனக்கு ரொம்பவே முக்கியம் என்னால அதையும் விட முடியாது.. முடியாதுன்னு சொல்றதை விட முடியலன்னு சொல்றது தான் கரெக்ட்டா இருக்கும்.."என்றவள் அவன் முதுகில் தன் முகத்தை புதைத்துக் கொள்ள, அவள் சொன்னது அவனுக்கும் பெரும் துயரை தான் கொடுத்தது.







அவர்கள் இருவரும் சேர்ந்து வாழும் வாழ்க்கையில் எந்த இடத்திலும் அவள் கனவு சிதைந்து போகக்கூடாது என்பது அவனுடைய எண்ணம்.







இன்று வேண்டாம் என்று தோன்றும் விஷயம் காலப்போக்கில் ஏன் செய்யாமல் விட்டோம் என்று நிச்சயம் அவள் மனதை ரணப்படுத்தும் என்பதை முன்பே அறிந்து வைத்திருந்தவன் அவளுக்காகவே அனைத்தையும் இப்பொழுது வரை ரகசியமாக வைத்திருக்கிறான்.







அவள் சொன்னது போலவே அவளுடைய அத்தனை ரகசியமும் அவனுக்கு நன்றாகவே தெரியும்.







அவனை வேட்டையாட கழுகு போல் காத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் அவனுடைய பலவீனம் அவள் தான் என்று யாருக்கும் தெரிய கூடாது.







தெரியக்கூடாது என்பது பற்றி எல்லாம் அவனுக்கு கவலை கிடையாது.







அவனால் அவளுக்கு ஏதாவது பிரச்சினை வந்துவிட்டால் அதைவிட மோசமான விஷயம் அவனுக்கு வேறு எதுவுமில்லை.







பைக்கை கல்லூரி வாயிலில் முன்பாக நிறுத்தினான்.







மிக விரைவிலேயே பயணம் முடிந்து விட்டது போல் தோன்றியது நிறைமதிக்கு.







தொடக்கம் என்று எது ஒன்றுக்கும் இருக்கும் போது முடிவு என்று நிச்சயம் ஒன்று இருக்கும் அல்லவா?







அந்த முடிவு! அதுதான் இப்பொழுது அவர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சனையே.







வண்டியிலிருந்து இறங்கியவள் அவன் முகத்தையே பார்க்க அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.







"சரி மாமா நாங்க பிளான் பண்ணது மாதிரி காலேஜ்ல இருந்து தான் எல்லாரும் ஒண்ணா வெளியில போறோம்.. இதுக்கு மேல ப்ரெண்ட்ஸ் எல்லாரும் என்னை பிக் பண்ணிடுவாங்க.. நீங்க கவலைப்படாம போய் உங்க வேலைய பாருங்க நேரத்துக்கு கண்டிப்பா சாப்பிடணும் மதியானம் நான் போன் பண்றேன்.."என்றவள் அவனுக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை சிரமப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டாள்.







"ஏய் அங்க பாருடி நம்ம ஊரு எம் எல் ஏ பாக்குறதுக்கு எவ்வளவு அழகா இருக்காரு நிஜமாலுமே அவரோட அத்தை பொண்ணு ரொம்ப கொடுத்து வெச்சவ தான்.. இல்லாட்டி இப்படி தினமும் அவர் கூட வந்து இறங்க முடியுமா? பாக்குறதுக்கு எவ்வளவு அழகா இருக்காரு இந்த மாதிரி ஒருத்தர் தான் கண்டிப்பா எனக்கு புருஷனா வரணும்.."









"ஏய் இவர் கூட இப்ப சும்மாதான் இருக்காரு நீ இவருக்கு ரூட் விட்டு பாரு அதுவும் நம்ம ஊரு எம் எல் ஏ.. பணத்திலும் அவங்க சலச்சவங்க கிடையாது இவருக்கு நம்ம ஊர்ல ரொம்ப நல்ல பெயர் இருக்கு.. இவரை மட்டும் கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கும்டி..

ஆனா உனக்கு முன்னாடி கண்டிப்பா நான் முந்திடுவேன் நான் மட்டும் அல்ல நம்ம காலேஜ்ல நிறைய பொண்ணுங்க அவருக்கு விதவிதமா கடலை போட்டு பாக்குதுங்க மனுஷன் தவம் செஞ்ச முனிவர் மாதிரி எதுக்கும் மசியவே மாட்டேங்கிறார்.."என்ற இரு பெண்களின் பேச்சு பகலவன் நிறைமதி இருவர் காதிலும் தெளிவாக கேட்டது.







அந்த பெண்கள் பேசியதை கேட்டு மிகவும் கோபம் கொண்ட நிறைமதி தன் கணவனை பற்றி எப்படி இந்த பெண்கள் இப்படி எல்லாம் பேசலாம்? அதுவும் அவன் மனைவி தான் பக்கத்தில் இருக்கும் பொழுது தன்னுடைய உடமையை இவர்கள் எல்லாம் எப்படி ரசித்து பார்க்கலாம்?என்று கோபம் வர, அவர்களிடம் கோபமாக சென்றாள்.







"ஏய் யாரை பார்த்து கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறீங்க? அவர் யாரு தெரியுமா உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் கண்ணு முன்னாடியே அவரை இப்படி வர்ணிச்சு பேசி கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்லுவீங்க.."என்று கேட்க, எம்எல்ஏவின் அத்தை பெண் என்பதால் அந்த இரு பெண்களும் துடுக்காக பேச நினைத்தாலும் வாயை அடக்கி பேசினார்கள்.







"என்னதான் அவர் எம்எல்ஏ வா இருந்தாலும் உங்களோட மாமா பையனா இருந்தாலும் அவர் இன்னும் சிங்கிளாகவே இருக்கார் அப்ப நாங்க அவரை கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கிறதில் என்ன தப்பு இருக்கு? எல்லாத்துக்கும் மேல அழகா இருந்தா ரசித்து பார்க்கிறது தப்பா மேடம்?"என்று அந்த பெண்களில் ஒருத்தி இவளிடமே கேள்வி கேட்க, நிறைமதிக்கு வந்த கோபத்தில் அவள் கன்னத்தில் அறைந்து விடும் வேகம் தான்.







"யாரை பார்த்து சொன்னீங்க? அவர் யார் தெரியுமா அவர் என்னோட.."







"நிறைமதி.."என்ற பகலவன் குரல் அவள் பின்னிருந்து கேட்க சொல்ல வந்ததை வெளியில் சொல்ல முடியாமல் தன் வாய்களுக்குள்ளேயே அடக்கிக் கொண்ட நிறைமதி அவசரத்தில் உண்மையை உளறிவிட நினைத்த தன் மடத்தனத்தை எண்ணி தன் தலையில் அடித்துக் கொண்டவள் அந்த இரு பெண்களையும் கோபமாக முறைத்து பார்த்து விட்டு பகலவன் பக்கத்திலேயே வந்தாள்.







அந்த இரு பெண்களும் அவளது மாமா பையன் என்பதால் அவனை திருமணம் செய்து கொள்ளப் போகிறாள் போலும் அதனால் தான் இப்படி கோபம் கொள்கிறாள் என தங்களுக்குள்ளேயே கிசுகிசுத்து கொண்டவர்கள் எம்எல்ஏவின் அத்தை பெண்ணை பகைத்துக் கொள்ளும் அளவிற்கு தைரியம் இல்லாததால் அவளை மனதுக்குள்ளயே திட்டி விட்டு அங்கிருந்து சென்றார்கள்.







தவறு செய்த குழந்தை போல் தன்னை பார்த்து முழித்துக் கொண்டிருந்த மனைவியை கண்டதும் பகலவன் கோபம் எல்லாம் பனித்துளியாய் கரைந்து போனது.







தன் கோபம் கரைந்து விட்டது என்பதை அவள் உணர்ந்து கொண்டால் இதே போல் வேறு யாரிடமாவது உளறி விடுவாள் என்று கோபம் கொள்வது போல் நடித்தான்.







இன்று அவன் பக்கத்தில் இருந்ததால் அவளை உண்மையை சொல்ல விடாமல் தடுத்துவிட்டான்.







இதே போல் எப்பொழுதும் அவள் பக்கத்தில் அவன் இருக்க முடியுமா?







இதேபோல் ஒரு சூழ்நிலை வரும்பொழுது அவள் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொண்டாகத்தான் வேண்டும்.







"கண்ட்ரோல் யுவர் செல்ப் நிறைமதி பூபாலன்.."என்று அழுத்தமாக சொன்னவன் தன் பைக்கை எடுத்துக் கொண்டு சென்று விட, அவன் சொன்னதை கேட்டு அவள் கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் துளி கோடாக இறங்கியது.




 
Top