Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

KPUK -3

Advertisement

அத்தியாயம் மூன்று:


"அங்க பாருடி மதி வந்துட்டா.."



"ஏண்டி உனக்கு வர்றதுக்கு எதுக்கு இவ்வளவு நேரம் உனக்காக நாங்க எவ்வளவு நேரம் வெயிட் பண்ணிட்டு இருக்கது?"என்று கோபமாக கேட்ட சிவரஞ்சனியை பாவமாக பார்த்து வைத்தாள் மதி.



"ஆனா உன்ன.. இப்படி பச்ச குழந்தை மாதிரி பரிதாபமா ஒரு பார்வை பார்த்து அப்படியே மனச கரைக்கிற வித்தையை நீ எங்கே தான் கத்துக்கிட்டியோ? சின்ன புள்ள கூட உன்கிட்ட தோத்து தான் போகும்.."என்று சிவரஞ்சனி முறைத்தவாறு சொல்ல,"ஆமாண்டி நீ சொல்றது ரொம்ப சரிதான் சின்ன புள்ள கூட என்கிட்ட தோத்து தான் போகும்,ஏன்னா..நானே ஒரு குழந்தை தான் அப்புறம் எப்படி நான் உங்களை மாதிரி எல்லாம் பேச முடியும் சொல்லு.."என்றவளை கண்டு தலையிலடித்துக் கொண்டாள்.



"ஏய் வாங்கடி இப்படியே நின்னு பேசிகிட்டு டைம் வேஸ்ட் பண்ணாம.."என்று பிரியா முதலில் செல்ல, அவளைப் பின் தொடர்ந்து சிவரஞ்சனி நிறைமதி இன்னும் சில நண்பர்கள் சென்றார்கள்.



முதலில் அவர்கள் சென்றது என்னவோ மிக பெரிய உணவகமான ரூபிக்கு தான்.



உணவை நன்றாக சாப்பிட்டு முடித்துவிட்டு அங்கேயே அமர்ந்து அவர்கள் கல்லூரி கதைகளை எல்லாம் பேசி முடித்துவிட்டு அடுத்தபடியாக அனைவரும் தியேட்டருக்கு சென்றார்கள்.



தியேட்டரில் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஷாருக்கான் நடிப்பில் உருவான "பதான்" திரைப்படம் ஓடிக்கொண்டிருக்க,அதை தன்னை மறந்து ஆவலாக ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் நிறைமதி.



அதில் தீபிகா படுகோன் வரும் இடங்களில் எல்லாம் தன்னை மறந்து தன்னை அந்த இடத்தில் வைத்து பார்க்க ஆரம்பித்தாள்.



படத்தில் ஹீரோயினுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்ததால் தீபிகா வரும் இடங்களெல்லாம் ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து மகிழ்ச்சியாக பார்ப்பதை கண்டு அவள் மனதுக்குள் இன்னும் நடிப்பின் மீதான ஆசையை அதிகரித்தது.



'கமான் மதி நீயும் இதே மாதிரி ஒரு நாள் ஸ்கிரீன்ல பிளே ஆவ.. அன்னைக்கு இதே போல எல்லாரும் உன்ன கைத்தட்டி அவங்களோட கதாநாயகியா கொண்டாடுவாங்க..'என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவள் படத்தோடு அப்படியே ஒன்றி போனாள்.



"என்ன பகலவன் உன்னை எப்ப வர சொன்னா எப்ப வர? உன்கிட்ட எத்தனை தடவை சொன்னேன் இன்னிக்கு டவுனுக்கு பிரச்சாரம் பண்ண போகணும் இதே போல இன்னும் சில இடங்களில் எல்லாம் பிரச்சாரம் பண்ணனும்..நான் அத்தனை தூரம் சொல்லியும் நீ இவ்வளவு லேட்டா வந்தா அதுக்கு என்ன அர்த்தம்?"என்று கட்சியின் மேலாளர் கேட்க, அவரை கூர்மையாக பார்த்தான் பகலவன்.



அவனின் கூர்மையான பார்வையில் மேலாளர் வாய் தன்னால் மூடிக்கொண்டது.



"இங்க பாருங்க எலக்ஷன் வர ஆறு மாசத்துக்கு முன்னாடி எல்லாம் செஞ்சிட்டு மக்க கிட்ட போயி ஆறு மாசத்துல செஞ்ச நல்லதை அஞ்சு வருஷத்துக்கு செஞ்சது போல பேசி காட்டி எல்லாம் ஓட்டுவாங்க எனக்கு தெரியாது..இந்த அஞ்சு வருஷத்துல எம்எல்ஏவா இந்த மக்களுக்கு என்னால முடிஞ்ச எல்லாத்தையும் நான் செஞ்சு முடிச்சிட்டேன் இதுக்கு மேல யாருக்கு ஓட்டு போடணும்னு அவங்களோட விருப்பம் தான்..யார்கிட்டயும் போய் கூல கும்பிடு போட்டு கைய கால கும்பிட்டு ஓட்டு கேட்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது.. நா முக்காவாசி இந்த பிரச்சாரத்துக்கு ஒத்துக்கிட்டதுக்கு காரணமே என்னை நம்பி எனக்கு கீழே இருக்கிற ஆளுகளுக்காகத்தான்.."



"இல்ல தம்பி எனக்கு அது நல்லாவே தெரியும் ஏதோ ஒரு கோபத்தில் பேசிட்டேன் அதுக்காக இப்படி எல்லாம் பேசாதே.."



"கொட்டின வார்த்தையை அள்ள முடியுமா? நீங்க பேசின வார்த்தை எதுவும் எனக்கு புடிக்கல.. எங்க ஊர் மக்களுக்கு நல்லது பண்ணனுங்கற ஒரே காரணத்துக்காக தான் இப்ப நான் எலக்சன்ல நிக்கிறேன் இல்லாட்டி நீங்க பேசுன பேச்சுக்கு எல்லாம் போய்கிட்டே இருப்பேன்.."



"ஐயையோ அப்படியெல்லாம் பண்ணிடாத தம்பி உன்னை நம்பித்தான் நான் நிறைய செலவு பண்ணியிருக்கேன்.."



"உங்க கிட்ட நான் செலவு பண்ண சொன்னதா எனக்கு ஞாபகம் இல்லை..இது என்ன சினிமாவா நான் ஹீரோவா நடிச்சா தான் எல்லாரும் வந்து படம் பார்ப்பாங்கன்னு அடம் புடிக்க! இது அரசியல் யார் நின்னாலும் மக்களுக்கு தேவை அவங்களுக்கு நல்லது செய்கிற ஒருத்தர் தான்.. ஏன் நீங்களே கூட இந்த எலக்சன்ல நின்னு மக்கள் மத்தியில் நல்ல பேர் வாங்கி ஜெய்க்கலாம் எம்எல்ஏ ஆகலாம் ஏன் நீங்க விருப்பப்பட்டா முதலமைச்சர் கூட ஆகலாம் நான் அப்படி இல்லை.."



"சரிப்பா நான் ஏதோ ஒரு கோபத்தில் தெரியாமல் பேசிட்டேன் என்னை மன்னிச்சிடு.."என்று அவர் வாயில் அந்த வார்த்தைகள் வந்த பிறகு அமைதியாகிவிட்டான் பகலவன்.



"சரி இங்க பாருங்க என்ன விட வயசுல பெரியவங்க நீங்க மன்னிப்பு கேட்க அவசியம் கிடையாது.. நான் போய் என் வேலையை பார்க்கிறேன்.."என்ற பகலவன் டவுனில் அவன் துவங்கி இருந்த புதிய ஆவின் பாலகத்தை பார்வையிட சென்றிருந்தான்.



அவன் இதை செய்தது என்னவோ அரசாங்க பணத்தில் இருந்து தான்.



இதில் வரும் லாபம் மொத்தமாக அரசாங்க கணக்கில் தான் கொண்டுவரப்படும்.



வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைத்தது போல் ஆயிற்று.



குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடிக்கும் பாலில் கலப்பட பொருள் கலப்பதை தடுத்தது போல் ஆயிற்று.
(அவன் இந்த பாலகத்தை தொடங்குவதற்கு முன்பாகவே முதலில் போட்ட கண்டிஷன் இதில் எந்தவிதமான கலப்படமும் கலக்கக் கூடாது என்பதுதான்) ஒருவேளை அவனை மீறி அவர்கள் செய்தாலும் அத்தனையும் அவன் காதுக்கு சென்று விடும். அவன் காதுக்கு செய்தி போய்விட்டது என்றால் நிச்சயம் தங்களுக்கு அவன் கொடுக்கும் தண்டனையை நினைத்து பார்க்க முடியாது அவனோடு சேர்ந்து அதில் பணத்தை போட்டவர்களும் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டார்கள்.



அந்த தொழிற்சாலையில் முக்கால்வாசி பணிக்கு அமர்த்திய அத்தனை பேரும் நேர்மையானவர்கள் தான்.



"எனக்கு இதெல்லாம் கொஞ்சம் கூட சரியா படலைங்க ஐயா நம்ம கட்சியில அடுத்த செயலாளர் பொறுப்பு உங்ககிட்ட தான் வர இருக்குது.. நீங்க நெனச்சா இவனையெல்லாம் இந்த கட்சியில் இருந்து தூக்கிட்டு உண்டு இல்லாம பண்ண முடியும்.. உங்களையே எதிர்த்து பேசிட்டு போறான் அவன நீங்க எதுவும் பண்ணாம அமைதியா பேசுறீங்க.."



"யோவ் வாய மூடுயா நீ பேசுனது மட்டும் அவன் காதுக்கு போனா அம்புட்டு தான் உன் நிலைமை.. கட்சியில எப்ப யாரு எந்த இடத்துக்கு வருவாங்கன்னு யாருக்குமே தெரியாது.. இப்ப போறானே இவன் சொன்னா முதலமைச்சர் அந்த பதிவியை இவனுக்கு விட்டுக் கொடுத்து அந்த இடத்துல இவனை தூக்கி உட்கார வச்சிடுவார்..அவரோட அத்தனையும் இவனுக்கு அத்துபடி இவனை பகைச்சுக்கிட்டு கட்சியில என்ன பண்ண?"



"என்னமோ ஐயா நீங்க பேசுறது எதுவும் எனக்கு விளங்கல.. கட்சியோட முதலமைச்சர் உங்க பெரியப்பா தானே?அவருக்குன்னு புள்ள குட்டி எதுவும் இல்லை அப்ப அடுத்து அவர் உங்களை தானே அவருடைய வாரிசா அறிவிச்சு அவருடைய பதவிக்கு உங்கள நிக்க வைப்பாரு.."



"அதெல்லாம் ஒரு மண்ணும் கிடையாது என் பெரியப்பா சரியான நேர்மை வாதி அந்த ஆளுக்கு நேர்மையாக இருக்க எல்லாரையும் ரொம்ப பிடிக்கும் அதுலயும் போனானே இந்த பகலவன் இவன் சொன்னா நான் முன்னாடி சொன்னது போலவே முதலமைச்சர் பதவிய விட்டுட்டு இவனை உட்கார வச்சுடுவார்.. இவன் ஆட்டம் எல்லாம் இந்த எலக்சன் முடியுற வரைக்கும் தான்.. என் பெரியப்பன் முதலமைச்சராக இருக்கிறவரை அவர எதுவும் பண்ண முடியாது..எலக்சன் முடிய ரெண்டு நாள் இருக்கும்போது அவரை போட்டு தள்ளிட்டு அனுதாப ஓட்டு வாங்கி நான் முதலமைச்சரா உட்காருறேன் அதுக்கப்புறம் அவரோட சாவுக்கு காரணம் இவந்தேன்னு இவன் மேல பழியை போட்டு ஜெயிலுக்குள்ள தள்ளிட்டு தான் மறு வேலை பார்ப்பேன்.."என்ற மேலாளரை கண்டு புன்னகைத்தான் அவரது அல்லக்கை.



அவர்கள் இருவரும் மட்டும் தான் பேசிக் கொண்டார்கள். ஆனால் அந்த செய்தி ஒன்று கூட அச்சு பிசகாமல் பகலவன் காதில் சரியாக சென்று விழுந்தது.



அனைத்தும் அவனுக்கு தெரிந்தாலும் எதையும் தெரியாதது போல் காட்டிக்கொண்டு டவுனுக்கு வந்த வேலை முடிந்ததும் அடுத்தபடியாக பிரச்சார வேலைகளை பார்க்க ஆரம்பித்தான்.



"மூணு மணி நேரம் போனதே சுத்தமா தெரியல படம் நல்லா இன்ட்ரஸ்டா இருந்துச்சி ஹீரோயின் சூப்பரா லீட் கேரக்டர் பண்ணி இருக்காங்க.."என்று சிவரஞ்சனி நடிகையை பாராட்டி சொல்ல, அவர்களோடு நின்று கொண்டிருந்த நிறைமதி வேறொரு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்க அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்பது கூட அவளுக்கு தெரியவில்லை.



"இதோ ஆரம்பிச்சிட்டாடி நம்ம ஹீரோயின் மறுபடியும் கனவுலகத்துல சஞ்சரிக்க ஆரம்பிச்சுட்டா.. இவள அப்பப்ப நம்ம வழிக்கு கொண்டு வரது தான் பெரிய வேலையா இருக்கு போ.."என்று சலித்த படி பிரியா சொல்ல, அவள் சொன்னதைக் கேட்டு மற்றவர்கள் சிரித்தார்கள்.



"அடியே கனவு கண்டது போதும் கொஞ்சம் நினைவுலகத்துக்கு வா.."என்று அவள் தோள்பட்டையில் கில்ல,"ஆ ஆ"என்று கைகளை தேய்த்து விட்டபடி தோழியை முறைத்து பார்த்தாள் நிறைமதி.



"இப்ப எதுக்குடி என்ன கிள்ளுன?"



"ஹான் நல்லா தூங்கிக்கிட்டு இருந்தா அதான் உன்னை எழுப்பி விட்டேன்.."



"லூசு யாராவது நின்னுகிட்டு தூங்குவாங்களா?"



"அப்ப இவ்வளவு நேரம் நாங்க என்ன பேசிக்கிட்டு இருந்தோம் நீ தூங்கல முழிச்சிக்கிட்டதானே இருந்தா சொல்லு.."என்ற பிரியாவின் கேள்விக்கு திருதிருவென திருவிழாவில் காணாமல் போன குழந்தை போல் முழிக்க, அவளைப் பார்த்து சத்தமாக சிரித்து விட்டார்கள்.



தன்னை கலாய்த்து நண்பர்கள் சிரிப்பதை பார்த்து "போங்க எல்லாரும் என்ன கிண்டல் பண்றீங்க.."என்றவள் சிறுபிள்ளை போல் தரையில் ஒரு காலை உதைத்து கோபமாக திரும்பி நிற்க, அவளை சமாதானம் செய்ய ஆரம்பித்தார்கள் அவள் நண்பர் குழு.



"சரி சரி எல்லாரும் ரொம்ப சொல்றீங்க..இதுக்கப்புறம் நம்மளே ஆசைப்பட்டாலும் இந்த நாள் எல்லாம் வாழ்க்கையில் திரும்பி வராது எல்லாரும் நல்லா என்ஜாய் பண்ணுவோம்.."என்றபடி நிறைமதி அவர்களோடு சேர்ந்து தள்ளு வண்டியில் விற்று கொண்டிருந்த ஐஸ் கிரீமை சாப்பிடுவதற்காக சென்றார்கள்.



அன்றைய பொழுது அப்படியே கலைந்து செல்ல மாலைப்பொழுதும் புலர்ந்தது.



"ரஞ்சனி உன்கிட்ட நான் சொன்னது என்ன ஆச்சுடி?"



"நீ கவலைப்படாத மதி நீ ஆசைப்பட்டது போலவே என் மாமா கிட்ட நான் பேசிட்டேன் அவர் உன்னை பத்தி யோசிக்கிறதா சொன்னார்.."



"கண்டிப்பா நம்ம நினைக்கிறது நடந்திடும் இல்ல நான் ஆசைப்பட்டது கிடைக்குமா?"



"கவலைப்படாத நம்புவோம் நம்பிக்கை அதானே எல்லாமே நல்லதா நடக்கும்.. நீ உன் மாமா பையன் எம் எல் ஏ தானே? அவரோட பவர வச்சு நீ இப்படி என்கிட்ட கெஞ்சி கேட்கிறதை தாராளமா கெஞ்சாமலையே யார்கிட்டயும் மறைந்து மறைந்து தெரியாம பண்ணாம தைரியமா பண்ணலாமே!"



"இல்லடி அது சரிப்பட்டு வராது மாமாவுக்கு நான் இந்த விஷயம் பண்றது பிடிக்கல இருந்தாலும் என்னோட சந்தோசத்துக்கு குறுக்க வரக்கூடாதுன்னு இருக்காரு.. அவர தர்ம சங்கடமான சூழ்நிலையில தள்ள நான் விரும்பல நம்மளோட ஆசையை நிறைவேற்றிக்க நம்ம தான் போராடனும் அடுத்தவங்க மேல திணிக்க கூடாது.. நான் மாமாவை தொந்தரவு செய்ய தயாரா இல்லை உன்னால முடிஞ்சா உதவி பண்ணு இல்லன்னா நான் வேற ஏதாவது பண்ணிக்கிறேன்.."

 
"சரி சரி கோபப்படாதடி நான் இப்ப என்ன சொல்லிட்டேன் இப்படி கோபப்படுற! கண்டிப்பா இன்னும் ஒரு வாரத்துல உனக்கு நியூஸ் சொல்றேன்.."என அங்கு வந்தார்கள் அவர்களது மற்ற நண்பர்கள்.



"என்ன எங்களுக்கு தெரியாம ரெண்டு பேரும் தள்ளி வந்து ரகசியம் பேசிக்கிட்டு இருக்கீங்க.."என்று இருவரையும் சந்தேகமாக பார்த்தபடி பிரியா கேட்க,"அதெல்லாம் ஒன்னும் இல்லடி நம்ம காலேஜ் லைஃப் இன்னையோட ஒரு முடிவுக்கு வந்துடுச்சு.. இதுக்கடுத்து யார் யார் என்னென்ன பண்ண போறீங்க?"என்று நிறைமதி அழகாக பேச்சை மாற்றி விட,பிரியா வந்ததை மறந்து நிறைமதி சொன்னதைக் கேட்டு கண்கள் கலங்க தன் நண்பர் பட்டாளத்தை பார்க்க அனைவர் கண்களிலும் கண்ணீர் தான்.



நிறைமதியும் கண்களில் வழிந்த தண்ணீரை துடைத்துக் கொண்டவள் "ஏய் இப்ப எதுக்கு எல்லாரும் பீல் பண்ணிக்கிட்டு இருக்கீங்க? நம்ம என்ன இப்படியாவா இருக்க போறோம் இனிமே நம்ம லைஃப் நம்ம இஷ்டப்படி தான் இருக்கும் எப்ப வேணும்னாலும் எல்லாரும் மீட் பண்ணலாம்.. இதே மாதிரி மாசத்துக்கு ஒரு தடவை இல்லனா வருஷத்துக்கு ஒரு தடவை எல்லாரும் இன்னைக்கு வந்து செலிப்ரேட் பண்ணது போலவே ஹோட்டல் பார்க் பீச் தியேட்டர்னு ஒரு நாள் ஃபுல்லா என்ஜாய் பண்ணுவோம் யார் கேட்க போறாங்க!நம்ம காலேஜ்ல லைஃப்ல நம்ம திரும்பி பார்க்கும்போது அதுல நமக்கு சந்தோசம் மட்டும் தான் இருக்கணும் எதுக்காகவும் நம்ம யாரும் பீல் பண்ண வேண்டாம்.."என்றவள் பேச்சு மற்றவர்களுக்கு ஊக்கத்தை கொடுக்க, அவள் சொன்னது போலவே மற்றவர்களும் வருடத்திற்கு ஒரு முறையாவது அனைவரும் ஒன்றாக கூடி இதே போல் ஒரு நாள் முழுவதும் சந்தோஷமாக இருப்போம் என்று சபதம் எடுத்துக் கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.



"எப்படி மாமா கரெக்டா நான் எங்கே இருந்தாலும் தேடி கண்டுபிடித்து என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போக வந்துடுறீங்க.."நிறைமதி கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் அவளை அமைதியாக பார்த்தான்.



"வாய தொறந்து பதில் சொன்னா வாயில இருக்க அத்தனை முத்தும் கொட்டிடும்.."என்று அவனை திட்டியவள் காரில் ஏறி அமர்ந்தாள்.



முன்னால் டிரைவர் காரை ஓட்ட பின்னால் அமர்ந்திருந்தவன் அலைபேசி எடுத்து அந்த பக்கம் யாருக்கோ அழைத்தான்.



"ஆமா அப்படியே செய்ங்க நான் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவேன் நைட்டு நான் சொன்னது போல எல்லா வேலையும் முடிங்க.. எலக்சன் இன்னும் ரெண்டு வாரம் தான் இருக்கு அதுக்குள்ள இருக்கிற எல்லா வேலையும் முடிச்சுடுங்க.. எலக்சன் முடிஞ்சதுக்கு அப்புறம் ஆட்சி யார் பக்கம் வேணும்னாலும் போகலாம் நம்ம இருக்கும்போதே செஞ்சு முடிச்ச எல்லாத்தையும் முழுசா முடிச்சுடனும் அரைகுறையாக விட்டுட்டு போகக்கூடாது.."என்றவன் போனில் தீவிரமாக பேசிக் கொண்டிருக்க,காரில் ஏறி அமர்ந்தது முதல் அவனை பார்த்துக் கொண்டிருந்த நிறைமதி அவன் போனில் தீவிரமாக பேச அவனை தொந்தரவு செய்யாமல் அமைதியாக இருந்தாள்.



அதே நேரம் அவன் கடைசியாக சொன்ன வார்த்தை அவள் மனதை பதம் பார்த்தது.



அவளும் இப்படி தானே அரைகுறையாக விட்டுவிட்டு அவனை விட்டு விலகி நிற்கிறாள்.



அவளின் ஆசையை நிறைவேறுவதற்காக அவன் அவளை விட்டு தள்ளி நிற்க அவனின் ஆசை நிறைவேற வேண்டும் என்பதற்காக அவனை விட்டு அவள் தள்ளி நிற்கிறாள்.



அவளது ஆசை தான் அவனது ஆசையும் கூட..



தன்னுடைய கனவுகளுக்காக தான் அவன் தள்ளி நிற்கிறான் என்பதை உணர்ந்து வைத்திருந்தவள் அவனுக்காக தன் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று தானே இந்த திருமண பந்தத்தில் இருந்து இருவரும் தள்ளி தள்ளி நிற்கிறார்கள்.



அவளாவது குடும்பத்தோடு இருக்கிறாள்.



அவன் அப்படி அல்லவே.



போனில் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தவன் "ஒரு நிமிஷம் அப்படியே லைன்ல இருங்க.."என்றவன் செல்லை மியூட்டில் போட்டுவிட்டு "கார நிப்பாட்டுங்க முருகன் அண்ணா பாப்பாவுக்கு புடிச்ச பஞ்சுமிட்டாய் விக்குது பாருங்க வாங்கிட்டு வந்து குடுங்க.."என்றவன் தன் பரிசில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுக்க அதை அவசரமாக மறுத்தார் முருகன்.



"அய்யய்யோ வேணாம்ங்க தம்பி என்கிட்டயே பணம் இருக்கு இது என்ன ஆயிரம் கணக்கிலையா வரப்போகுது மிஞ்சி போனா 50 ரூபாய் வரப்போகுது நானே பாப்பாவுக்கு வாங்கிட்டு வந்து தரேன்.."



"இல்லன்னா அவளுக்கு எதுவா இருந்தாலும் நான் மட்டும் தான் செய்யணும்.. அது எதுவா இருந்தாலும் சரி இந்தாங்க பாப்பாவுக்கு ஒன்னு வாங்கிட்டு அப்படியே உங்க பசங்களுக்கும் சேர்த்து வாங்கிட்டு வாங்க.."என்றவன் அவரிடம் 100 ரூபாய் தாள் ஒன்றை கொடுத்துவிட்டு மீண்டும் போனில் கவனமானான்.



முருகன் அவன் சொன்னது போலவே காரை ஓரமாக நிறுத்திவிட்டு ரோட்டுக்கு அந்த பக்கமாக இருந்த பஞ்சுமிட்டாய் வாங்குவதற்கு சென்று விட்டார்.



தீவிரமாக பேசிக் கொண்டிருந்த நிலைமையிலும் கூட, இந்த இடத்தை கடந்து செல்லும் பொழுது தனக்கு பிடித்த பஞ்சுமிட்டாய் எப்போதாவது விற்கும் பொழுது அவனிடம் ஆசையாய் வாங்கி வர சொல்லி அவள் உண்டதை நினைவு வைத்து அப்பொழுதும் அதை மறக்காமல் அதுவும் அவன் செலவில் மட்டும் தான் தனக்கு எதுவானாலும் செய்வேன் என்று சொன்னதைக் கேட்டு ஒரு மனைவியாக பூரித்து போய் விட்டாள்.



நயன விழிகள் அவன் மீதான காதலில் போதை கொள்ள, கண்களாலையே அவனை தனக்குள் அணு அணுவாக ரசித்து மெய் மறந்து அவனே சர்வமும் என்று பார்த்துக் கொண்டிருக்க, அவள் பார்வையின் பொருள் அறியாதவனா அவன்!



அந்தப் பார்வையின் பொருள் என்னவென்று அவனுக்கு நன்றாகவே தெரிந்தாலும் தெரிந்து கொள்ளாதது போல் போனில் இன்னும் தீவிரமாக பேச ஆரம்பித்தான்.



தன்னை வேண்டுமென்றே பழிவாங்க இப்படி செய்கிறான் என்று அவன் மீது கோபம் வர, சட்டென்று அவன் கைகளில் வைத்திருந்த போனை பிடுங்கி ஆப் செய்தவள் அவன் கன்னத்தில் ஆசைப்பட்டது போலவே ஒரு முத்தம் வைத்திருந்தாள்.



ரொம்ப முக்கியமான விஷயம் பேசிக் கொண்டிருந்த பகலவன் நிறைமதி செயலில் ஒரு நிமிடம் அதிர்ந்து பின் அவள் செயலில் மிகவும் கோபம் கொண்டவன் சற்றும் யோசிக்கவில்லை அவள் கைகளில் இருந்த போனை வாங்கிக் கொண்டு காரிலிருந்து இறங்கி விட்டான்.



அவன் காரில் இருந்து இறங்கவும் பதட்டமாக நிறைமதியும் காரிலிருந்து இறங்க, அவளை திரும்பி பார்க்க கூட பிரியப்படாதவன் மீண்டும் மொபைலை ஆன் செய்து அந்த நபரிடம் பேச ஆரம்பித்தான்.



"இல்லை தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுங்க இப்ப அவங்க எப்படி இருக்காங்க?"என்று கேட்க,முதன்முதலாக அவன் வாயிலிருந்து வேறொருவரிடம் மன்னிப்பு கேட்பதை கண்டு அதிர்ந்து போனாள்.



எப்பொழுதும் இவள் இப்படி செய்யும் பொழுது கண்டும் காணாது இருப்பவன் இப்பொழுது காரில் இருந்து இறங்கி அவள் முகத்தைக் கூட பார்க்காமல் வேறொருவரிடம் மன்னிப்பு கேட்பதை கண்டும் அவன் முக்கியமான விஷயம் பேசிக் கொண்டிருப்பதை அப்போது தான் உணர்ந்து கொண்டாள்.



தன் அவசர புத்தியால் அவனை இந்த நிலைமைக்கு தள்ளிய தன் மீது கோபம் கொண்டாள்.



இதற்குள் முருகன் பஞ்சுமிட்டாய் வாங்கிக் கொண்டு வர,"நீங்க காரை எடுத்துக்கிட்டு போங்க நான் வெளியில வேலை இருக்கு அப்படியே போறேன்.."என்றவன் மனைவியை திரும்பியும் பாராமல் போனை மீண்டும் காதில் வைத்து பேசியபடி சென்று விட்டான்.



அவன் செயலில் மனதுக்குள் பெருத்த அடி வாங்கினாள் அவள்.



'என்னதான் தப்பு செஞ்சு இருந்தாலும் இரண்டு திட்டு திட்டி இருக்கலாமே கோபம் வந்தா அடிச்சு இருக்கலாம் அதை விட்டுட்டு எதுக்கு இப்படி போயிட்டாரு..'என்று மனதுக்குள் புலம்பி கொள்ள, அவனால் உன்னை தண்டிக்க முடியுமா? என்று அவள் மனசாட்சி அவளிடமே கேள்வி கேட்க, அதற்கு பதில் இல்லை அவளிடம்.



"அம்மா வண்டியில் ஏறி உட்காருங்க ஐயாவுக்கு தெரிஞ்சா திட்டுவாரு இந்தாங்க இதை வாங்கிக்கோங்க.."என்று முருகன் சொல்ல, அவன் பின்னாடியே செல்ல வேண்டும் என்ற மனதை கட்டுப்படுத்திக் கொண்டு வேறு வழி இல்லாமல் காரில் ஏறி அமர்ந்தாள்.



வீடு வந்து சேர்ந்ததும் காலையில் உற்சாகத்துடன் கிளம்பி போனவள் அப்படியே அதற்கு நேர்மாறான மனநிலையோடு வீட்டிற்குள் நுழைந்தவள் எதிர்பட்ட தாயிடம் "அம்மா எனக்கு தலை ரொம்ப வலிக்குது என்ன டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் நான் போய் தூங்குறேன்.."என்றவள் கண்கள் அழுகைக்கு தயாராக, தீபாவை நிமிர்ந்து பார்த்தால் நிச்சயம் அவர் கண்டுபிடித்து விடுவார் என்று அவர் முகத்தை பார்க்காமல் தலையை பிடித்தபடி தன் அறைக்குச் சென்று கதவை சாத்திக் கொண்டாள்.



தீபாவும் இனி நண்பர்களோடு சேர்ந்து மகிழ்ச்சியாக இருக்க முடியாது அதனால் இப்படி இருக்கிறாள் போலும் என்று நினைத்துக் கொண்டு சாதாரணமாக விட்டு விட்டார்.



தன் அறைக்குள் வந்தவள் புகைப்படத்தில் கம்பீரமாக நின்று கொண்டிருந்த கணவன் புகைப்படத்தை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டவள் "எதுக்காக மாமா இப்படி என் மேல இவ்வளவு அன்பாய் இருக்கீங்க?இந்த அன்பு இது ஒன்னு தானே உங்களையும் என்னையும் சேரவிடாமல் தடுத்துகிட்டு இருக்கு இதுக்கு நான் என்ன பண்ண போறேன்?"என்று வாய்மொழியாக கேட்டவள் புகைப்படத்தில் பேருக்காக கூட சிரிக்காமல் விறைப்பாக நின்று கொண்டிருந்த கணவனை வேதனையுடன் தான் அவளால் பார்க்க முடிந்தது.



அன்று அவள் செய்த செயல் தான் அது.



அவள் தான் அவனிடம் அன்று அதை விரும்பி கேட்டாள்.



அவள் எதை கேட்டாலும் உடனடியாக கொடுத்து விடுபவன் அன்றும் அவள் கேட்டதை மறுக்க முடியாமல் உயிர் காதல் வலியுடன் திருப்பி கொடுத்து விட்டான்.



எந்த கனவுகளுக்காக அன்று அத்தனை வலிகளையும் வேதனைகளையும் தாங்கிக் கொண்டு அவனிடமிருந்து
அதைப் பெற்றுக் கொண்டாளோ இன்று அந்த கனவுகளை நினைக்கும் பொழுது வேதனையாக வந்து தொலைத்தது.



தன் கனவுகளுக்காக ஒருவனை உயிரோடு கொன்று விட்டதை எண்ணி அவள் மனம் வேதனையில் துடித்தது.




தன் அறையில் விட்டத்தை வெறித்து பார்த்தபடி நிறைமதி படுத்திருக்க, நேரம் நள்ளிரவு பொழுதையும் தாண்டி சென்றிருந்தது.



எதைப்பற்றியும் கவலையில்லாமல் பகலவன் பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தவள் உறக்கம் தொலைந்து போக, மேலே ஓடிக்கொண்டிருந்த காத்தாடியை வெறித்து பார்க்க, அவளை கலைப்பது போல் இசைத்தது அவளின் அலைபேசி.



இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று யோசித்தபடி போனை எடுத்து பார்க்க திரையில் தோன்றிய எண்ணை கண்டதும் அத்தனை நேரம் இருந்த மனசுனக்கம் அத்தனையும் காணாமல் போக, அவன் புகைப்படத்தோடு அலைபேசி எண் வரவும் சற்றும் தாமதிக்காமல் ஆன் செய்து காதில் வைத்தாள்.



"என்ன மாமா! ஏதாச்சும் முக்கியமான விஷயமா இந்த நேரம் போன் பண்ணி இருக்கீங்க.."



"எப்படி இருக்க? சாப்டியா?"



"இல்ல மாமா.."என்று அவனிடம் பொய் சொல்ல மனம் வராமல் உண்மையை சொல்லிவிட்டாள்.



நிச்சயமா அவள் இப்படி செய்வாள் என்று அவன் எதிர்பார்த்த ஒன்றுதான். கண்களை மூடி திறந்தான்.



"அப்படியே பால்கனி வா."


"இதோ வரேன் மாமா.."என்றவள் ஜன்னலை திறந்து விட,அங்கு சாலையில் காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு அதில் சாய்ந்து ஒய்யாரமாக அலைபேசியை காதில் வைத்த படி நின்று கொண்டிருந்தான் பகலவன்.



அவனை அங்கு கண்டதும் சூரியனை கண்ட சூரியகாந்தி பூவை போல அவள் முகம் மலர்ந்து விகசிக்க, தூரத்தில் நின்று கொண்டிருந்தவனுக்கும் அவள் முக அசைவுகள் ஒன்று ஒன்றும் நன்றாகவே தெரிந்தது.


"அதான் இப்ப என்னை பார்த்தாச்சே.. இதுக்கப்புறம் என்ன போய் சாப்பிடு.."



"இல்ல மாமா நீங்க வாங்க அப்பதான் நான் சாப்பிடுவேன்.."என கேட்டுக் கொண்டிருந்தவன் கண்களை மூடி திறக்க அவன் கண்கள் ரத்த நிறம் பூசிக் கொண்டது.



"வேண்டாம் மதி தேவையில்லாத பிரச்சினையை நீ உருவாக்குகிற.."



"அது எது வந்தாலும் சமாளிக்க நீங்க இருக்கும் போது எனக்கு எந்த கவலையும் இல்லை எந்த பிரச்சினையை வேண்டுமானாலும் உங்களுக்காக நான் உருவாக்க தயார்.."



"இல்ல நான் கிளம்புறேன் நான் வந்து இருக்கவே கூடாது.."என்றவன் அலைபேசியை துண்டிக்க போக,"இப்ப மட்டும் நீங்க போன கட் பண்ணீங்க இந்த இடத்தை விட்டு நான் அசையவே மாட்டேன் கொட்டுற இந்த பனியில இன்னைக்கு ஃபுல்லா இங்க மட்டும்தான்.."என்று அவனையே மிரட்ட, அவனுக்கு வந்த கோபத்தில் காரை வேகமாக ஓங்கி உதைத்தான்.



அதுவே சொல்லியது அவன் கோபத்தின் அளவை.



அவள் எதை கண்டும் பயப்படவில்லை அவனை கண்டு அவள் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை.



"ரொம்ப கோபப்படாதீங்க நீங்க வரிங்களா? இல்ல நான் வரவா?"


"என்னை நீ ரொம்ப அலைய விடுற!"



"கமான் மாமா ப்ளீஸ் எனக்காக.."என்றவளின் வார்த்தையை மறுக்கும் தைரியம் அவனுக்கில்லை.



"சரி சீக்கிரம் கிளம்பி வா வரும்போது உங்க அம்மாகிட்ட சொல்லிட்டு வா.."என கூண்டுக்குள் இருந்து பறக்கும் கிளியாக சந்தோசமாக அவன் சொன்னது போல் விறு விறுவென உடை மாற்றியவள் கீழே வந்து உறங்கிக் கொண்டிருந்த தாயை எழுப்பி அவரிடம் சொல்லிவிட்டு வெளியில் வந்தாள்.



இங்கு காரில் சாய்ந்து நின்று கொண்டிருந்தவன் செல்போனை நோண்டிக்கொண்டிருக்க, சாதாரண பனியனும் முட்டிக்கு மேல் ஏற்றிவிட்ட கால் சட்டையும் அணிந்து கொண்டு கண்களில் கருப்பு கண்ணாடியை மாட்டிக் கொண்டு காரில் சாய்ந்து நின்றபடி போனை நோண்டிக் கொண்டிருந்தவனை கண்டதும் எப்போதும் போல அவள் மனம் மயங்கித்தான் போனது.



அதேபோல் அவள் வருகையை உணர்ந்து தலையை உயர்த்திப் பார்த்த பகலவன் கையில்லா சட்டையும் முட்டியை தொடும் அளவிற்கான குட்டை பாவாடையும் அணிந்து குளிர் தெரியாமல் இருப்பதற்காக மேலே மெல்லிய ஷால் ஒன்றையும் அணிந்து சுருள் சுருளான கேசம் காற்றில் அசைந்தாட,விழிகளில் காதலுடன் தன்னையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தவளை அவனும் ரசனையுடன் பார்த்தான்.



அவன் ரசனையான பார்வையை அவன் கண்ணாடி மறைத்துவிட அவளுக்கு அது தெரியாமலேயே போனது.



எதையும் காட்டிக் கொள்ளாமல் அவள் பக்கத்தில் வந்ததும் காரில் ஏறி அமர்ந்தவன் அவள் அடுத்த பக்கம் ஏறி அமர்ந்ததும் அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் காரை ஸ்டார்ட் செய்தான்.


அதே நேரத்தில் அவனை பொறிவைத்து பிடிக்க காத்திருந்த சில வேடர்களும் அவனை அறியாமல் அவனை பின் தொடர ஆரம்பித்தார்கள்.

 
Top