Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

KUK 19

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் 19

மூவரையும் அதிர வைத்து விட்டு கூல்லாக நின்றிருந்தான் ராம்.

மைதிலி எதையும் முகத்தில் காட்டாது நிற்க, ரிஷி மூச்சை இழுத்து பிடித்து கொண்டு நின்றான்.

பின்னோக்கி நடக்க தொடங்கி இருந்த கௌதம், வெளிக்கதவை நெருங்கி கொண்டிருந்தான்.

"என்ன ஆச்சு? ராம் என்ன சொல்றான்னு புரியலயே?" என விஷ்வநாதன் மீண்டும் கேட்க, ஒருவரும் பேசாது இருப்பதை கண்ட ராம், "நான் எதும் கஷ்டமான கேள்வி கேட்டேனா? இப்படி முழிக்குறீங்க?" என்றான் கிளுக்கி சிரித்து.

'வாய மூடுடா குரங்கு' என வடிவேலு மாடுலேஷன்னில் சொல்ல வேண்டும் போல இருந்தது ரிஷிக்கு.

"ரிஷி ரூம்ல இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்த போட்டோ இருக்கே! தம்பி அதை சொல்லுறாரு போலயே!" என அறிவாளி வரதன் சொல்ல, வேக வேகமாக தலை கழண்டு விழும் அளவுக்கு அதை ஆட்டி, அவர் கண்டுபிடிப்பை ஆமோத்திதான் ரிஷி.

"ஹாஹா இதை தான் சொல்றானா ராம்!" என சத்தமாக சிரித்தார் விஷ்வநாதன்.

விஸ்வநாதன் சிரிப்பதை கண்ட கௌதம், 'ஒன்னும் பிரச்னை இல்லை போலயே' என நினைத்து கொண்டு, வாசலில் இருந்து குடு குடுவென ஓடி வந்து மைதிலி அருகில் நின்றான். விஷ்வநாதன் எதற்கு சிரிக்கிறார் என்றே தெரியாமல், அவருடன் சேர்ந்து சிரித்து வைத்தான் கௌதம்.

சட்டென சிரிப்பை நிறுத்திய விஷ்வநாதன், "ஆமா? நீங்க ஏன் தம்பி வாசல் வரை போய்ட்டு வந்தீங்க?" என்றார்.

"ஹீ ஹீ.... அதுவா!!!!...அது என்னன்னா!?" என யோசனையாய் இழுத்தவன், உடனே "என்னோட ஒரு செருப்பை காணோம்.. அதான் தேடிட்டு வந்தேன்!" என்றான் பளீரென.

அவன் காலில் இரண்டு செருப்பும் இருப்பதை பார்த்த அனைவரும், அவனை ஒருமாதிரி பார்க்க, அதற்கும் தன் அக்மார்க் புன்னகையை வீசியபடி நின்றிருந்தான் கௌதம்.

"நானும் அதே செருப்பை தான் தேடிட்டு இருக்கேன்..." என்றான் ரிஷி பற்களை கடித்தபடி.

"எதுக்கு?" என கேட்ட கௌதமிற்கு, சில வினாடியில் அவன் சொன்னது 'எதற்கு' என்பது புரிய கப் சிப் என வாயை மூடி கொண்டான்.

"ஏங்க?! வாசலிலேயே நிற்க வைக்குறீங்கலே! உள்ளே கூப்புடுங்க...." என்றார் லட்சுமி முறையாய் ஆரத்தி எடுத்ததும்.

உள்ளே நுழைந்ததும் ஹாலில் இருந்த சோபாவில் எல்லோரும் அமர, கிச்சன் வாசலில் கண்ணீர் திரையிட நின்றிருந்த ரமா பாட்டியை பார்த்ததும், “பாட்டீ!!” என ஆசையாய் ஓடி சென்று கட்டிக்கொண்டான் ராம்.

அங்கிருந்த உணவு மேசையில் பாட்டியுடன் ராம் அமர்ந்து கொள்ள, ரிஷியும் அவனுடன் நின்றான்.

யார் தொடங்குவது என புரியாமல் அங்கு சில நிமிடங்கள் மௌனத்தில் கழிந்தது.

அந்நிலையை கலைத்த மைதிலி, "பூஜை ரூம் எங்க இருக்கு?" என்றாள்.

"நான் ஒரு மடச்சி... நானே இதை செஞ்சுருக்கணும்... வாம்மா.. வந்து விளக்கு ஏத்து!!" என அழைத்து சென்றார் லட்சுமி.

பூஜையறையில் விளக்கேற்றி விட்டு, தன் மாமனார் மாமியார் புகைப்படத்தின் முன் ராமுடன் விழுந்து வணங்கினாள் மைதிலி. அடுத்து தன்னிடம் தான் ஆசிர்வாதம் பெறுவார்கள் என எண்ணி மிதப்புடன் நின்ற லக்ஷிமியை தாண்டி சென்று சோபாவில் அமர்ந்தாள் மைதிலி.

முன்பு போல் அதே இடங்களில் வந்து அமர்ந்தனர் அனைவரும்.

"உன் பேரு என்னம்மா?" என பேச ஆரம்பித்தார் விஷ்வநாதன்.

"மைதிலி... மைதிலி ஸ்ரீராம்..." நிமிர்வுடன் சொன்னவளை இமைக்காமல் பார்த்தனர். மருந்துக்கு கூட புன்னகை இன்றி 'எட்டியே நில்' என்ற பாவனையில் இருந்தாள் மைதிலி.

"ம்ம்ம்.. பொருத்தமான பேரு.. அப்பா அம்மா என்ன பண்ணுறாங்க?" என அடுத்த கேள்வியை தொடுத்தார் விஷ்வநாதன்.

"என் சின்ன வயசுலயே தவறிட்டாங்க..."

அதற்கு ஒரு அனுதாப பார்வையை அவர்கள் வீச, அதற்கும் தனக்கும் தொடர்பே இல்லை என்பதை போல பார்த்தாள் மைதிலி.

சரியாக அந்நேரம் உள்ளே வந்த சந்தோஷ், கார் சாவியை அங்கிருந்த டீப்பாய் மீது வைத்துவிட்டு "டேங்க் பில் பண்ணிட்டேன் சார்" என்றான் பொதுவாய்.

சந்தோஷை பார்த்ததும் ராமோ, “நீயும் இங்கதான் இருக்கியா?” என கேட்க வாயை திறக்க, திறந்த வாயில் கேசரியை நிரப்பி அவனை பேசவிடாமல் தற்காலிகமாய் தடுத்தான் ரிஷி.

கௌதமை கண்ட சந்தோஷ், 'இவன் இன்னும் போலயா?' என ஜாடையில் ரிஷியிடம் கேட்க, 'இல்ல' என வெளிப்படையாகவே தலையில் அடித்து கொண்டான் ரிஷி.

இதை கண்ட கௌதமின் நரம்புகள் புடைக்க, " நாங்க வந்தே ஒரு மணி நேரம் ஆச்சு... பக்கத்துல இருக்க பெட்ரோல் பங்க் போய்ட்டு வர இவ்ளோ நேரமா உனக்கு?" என சந்தோஷிடம் கேட்டுவிட்டு, "இவன மாறி சோம்பேறி எல்லாம் எதுக்கு அங்கிள் வேலைக்கு வச்சுக்குறீங்க?" என விஸ்வநாதனிடம் முறையிட்டான்.

கௌதமை கண்டு தன் பற்களை மட்டுமே கடிக்க முடிந்தது சந்தோஷால்.

"நீங்க சொன்னா மாத்திடலாம் தம்பி!" என அவர் சொல்லவும், "யோசிச்சு சொல்றேன்.. அதுவரைக்கும் இருக்கட்டும்!" என பெருந்தன்மையாய் சொன்னான் கௌதம்.

"சரிங்க தம்பி... ட்ராவல் பண்ணுனது களைப்பா இருக்கும்... நீங்க எல்லாம் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோங்க...

ரிஷி? எல்லாருக்கும் அவங்க அவங்க ரூம்ம காட்டு...." என பணிந்தார் விஷ்வநாதன்.

ரிஷி அவர்களை அழைத்துக்கொண்டு மாடிக்கு செல்ல, கௌதம் கண்களில் சந்தோஷ் முறைத்துக்கொண்டு நிற்பது விழுந்தது.

"அங்கிள்!? அங்க சும்மா நிக்குறானே டிரைவர் பாய், அவனை என் லக்கேஜ் எல்லாம் தூக்கிட்டு என் ரூம்க்கு வர சொல்லுங்க..." என அதிகாரமாக சொல்லிவிட்டு சென்றான் கௌதம்.

"அதான் தம்பி சொல்றாருல? எல்லாத்தையும் தூக்கிட்டு போ..." என சந்தோஷை அனுப்பிவைத்தார் விஷ்வநாதன்.

அவர்கள் தன் கண்ணில் இருந்து மறைந்ததும் கணவர் அருகே வந்த லட்சுமி, " கிணறு வெட்ட பூதம் கிளம்புன மாறி, ராமை விரட்டிட்டு சொத்தை அபகரிசுக்கலாம்ன்னு பார்த்தா, போனவன் பொண்டாட்டி, மச்சான்னு படையோட வந்து நிக்குறான்! என்னங்க இது புதுசா?" என கேட்டார்.

"எனக்கும் என்ன செய்யுறதுன்னு புரில... விட்டு பிடிப்போம்..." என்றார் யோசனையாய். பின்பு வரதனிடம், "வரதா! நீ நம்ம மூர்த்திக்கு கால் பண்ணு... இங்க நடக்குறதெல்லாம் சொல்லி, இன்னைக்கு நைட் வீட்டுக்கு வர சொல்லு" என்றார்.

"சார்... அவன் எதுக்கு?"

"சொன்னதை மட்டும் செய்" என்ற அவர் கோவ குரலில் அடங்கிப்போனான் வரதன்.

"உன் லக்கேஜ்ஜ நீ தூக்க மாட்டியா? பெரிய மஹாராஜாவாடா நீ?" அறைக்குள் நுழைந்ததும் கதவை தாழிட்டுவிட்டு கையிலிருந்த பையை தூக்கி வீசினான் சந்தோஷ்.

"ஓய் டிரைவர் பையா? என்ன சவுண்டு ஏத்துற? என் மாமா கிட்ட சொன்னா உன் சீட்டு கிழிஞ்சுடும். தெரியுமுள்ள?" அங்கிருந்த நாற்காலியில் கால் மேல் கால் போட்டபடி ஒய்யாரமாக அமர்ந்துகொண்டு கேட்டான் கௌதம்.

"டேய் உன்ன........" என அடிக்க சென்றவனை தடுத்து நிறுத்தினான் ரிஷி. "ஹே விடு சந்தோஷ்... இவன் கடக்குறான்... இதுக்கே கோவப்படுற! இவன் வாசல்ல என்ன பண்ணான் தெரியுமா?" என புலி பதுங்கிய கதையை அவன் எடுத்து சொல்ல, கௌதமை ஏற இறங்க பார்த்துவிட்டு, "இதெல்லாம் ஒரு பொழப்பா?” என்றான் சந்தோஷ்.

"ஏய் என்ன கொஞ்சம் விட்டா ஓவரா போறீங்க? நான் எதுக்கு காலைல அப்படி எஸ்கேப் ஆக ட்ரை பண்ணேன் தெரியுமா?" என்றான் கௌதம்.

"எதுக்கு?" என ரிஷியும் சந்தோஷம் கோரஸ்ஸாக கேட்க, "ஹான்.. அப்படி கேளு.... இப்போ விஷ்வநாதன் கிட்ட மாட்டிருந்தோம்னு வையேன்!? எப்படி தப்பிக்க முடியும்? அதான் நான் அவருக்கு தெரியாம நைசா எஸ்ஸாகி வெளில போய்ட்டு ஆளுங்களை கூட்டிட்டு வரலாம்னு நினைச்சு விவரமா போனேன்! எப்படி என் முன்யோசனை?" என்றான் காலரை தூக்கிவிட்டு.

ரிஷியும் சந்தோஷும் கடுப்பேறிய முகத்துடன், அவனை ஏதோ சொல்ல வர, அதுவரை பால்கனியில் ராமுடன் அமைதியாய் நின்றிருந்த மைதிலி, "சரி சரி பேசுனதெல்லாம் போதும். சந்தோஷ் நீ கீழ போ. ரிஷி நீயும் கிளம்பு. சந்தேகம் வரமாறி நடக்க வேண்டாம்" என்றாள்.

"சரிங்க அக்கா... யோவ்?? நீயும் கிளம்பு. உனக்கு பக்கத்து ரூம்..." என கௌதமிடம் சொன்னான் ரிஷி.

"வர வர மரியாதையே இல்ல... ம்ம்ம்" என சொல்லிக்கொண்டு எழுந்து நின்றான் கௌதம்.

கதவை திறந்த சந்தோஷை பார்த்து, "டேய் டிரைவர் பையா, என் லக்கேஜ்ஜ கொஞ்சம்..." அவன் சொல்லிமுடிப்பதற்குள் "அடிங்கககக... மறுபடியும்" என சொல்லிக்கொண்டு ஓடி வந்த சந்தோஷிடம் இருந்து இலாவகமாய் விலகி அந்த அறையிலேயே அங்கும் இங்கும் ஓடினான் கௌதம்.

ராமிற்கே இவர்கள் செய்கையில் பொறுமை பறக்க, "இப்போ வெளில போறீங்களா இல்லயா? இதுக்கு தான் இவனை துரத்திவிடுன்னு சொன்னேன் மையு... இப்போ பாரு... இம்சை...." என கத்தினான்.

“ராம்? இப்படி பேசக்கூடாது!” மைதிலி கண்டிக்கும்போதே, அங்கிருந்து தெறித்து ஓடிய இருவருடன், கௌதமும் வெளியேற, "அண்ணா? எல்லாம் இப்படி பேசுறாங்கன்னு வருத்தப்படாதீங்க அண்ணா!" என்றாள் மையு.

"அட போமா! இந்தமாறி பேசி சிரிக்க ஒரு குடும்பம் இல்லையேன்னு ஏங்குறவன் நான்... இவங்க எல்லாம் என்னை அடிச்சே துரத்துனாலும் நான் தப்பா நினைக்கமாட்டேன்.... நீ போ!!" என சிரித்து விட்டு சென்றான் கெளதம்.

மாலை நேர குட்டி தூக்கம் கலைந்து எழுந்தபோது இருள் சூழ்ந்திருக்க அருகில் இருந்த ராமை எழுப்பினாள் மையு.

"ராம் எழுந்துக்கோ... சாப்பிட்டுட்டு தூங்கலாம்...."

'ம்ம்ம்' என்றானே தவிர எழுந்திரிக்கவில்லை. அந்நேரம் இன்டெர்காம் ஒலிக்க, "சாப்பிட வாங்கம்மா.." என்றார் லட்சுமி.

ராமை இழுத்துக்கொண்டு கீழே சென்று அமர்ந்தாள் மைதிலி. தனக்கு முன் அங்கு அனைவரும் இருப்பதை கண்டு மெலிதாய் புன்னகைத்தாள்.

"அடடே வா மூர்த்தி..." என அப்போது வந்த அவர்கள் குடும்ப டாக்டர்ரை வரவேற்றார் விஷ்வநாதன்.

ஒரு நொடி அவரை பார்த்த மைதிலி, பின் உணவிடம் கவனத்தை திரும்பினாள்.

மூர்த்தி, "ராம்? இப்போ உடம்பு எப்படி இருக்கு?"

ராம் ஒன்றும் சொல்லாமல் மைதிலியை பார்க்க, அவள் 'சொல்லு' என்பதை போல் ஜாடை செய்தாள்.

இவர்கள் பார்வை பரிமாற்றத்தை மற்றவர் கவனிக்காமல் இல்லை.

'ஒரு வார்த்தை பேசக்கூட அவகிட்ட அனுமதி கேக்குற அளவுக்கு ஆச்சா!?' என உள்ளுக்குள் புகைந்தார் விஷ்வநாதன்.

"நல்லா இருக்கேன்" என சொல்லிவிட்டு குனிந்து கொண்டான்.

"சாப்பிட்டு முடிச்சதும் ஒரு டெஸ்ட் பண்ணிடலாம் சார்... இப்போ எப்படி இருக்கான்னு பார்ப்போம்..." என விஷ்வநாதனிடம் சொன்னார் மூர்த்தி.

"தேவையில்லை..." என்றாள் மைதிலி பட்டென்று.

"ஏம்மா வேண்டான்னு சொல்ற? இவர் நம்ம பேமிலி டாக்டர்தான். ஒரு டெஸ்ட் பண்றதுல ஒரு தப்பும் இல்லையே!" என்றார் விஷ்வநாதன்.

"ராம் ஹெல்த்ல இப்போ நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கு. அதனால எந்த டெஸ்ட்யும் தேவையில்லை"

"ஓஓ!!! " என இழுத்த விஷ்வநாதன் மூர்த்தியை பார்க்க, 'தெரிஞ்சுருக்குமோ!?' என்ற கேள்வியை தாங்கி நின்றது அவர் முகம்.

விஸ்வநாதன், "ராமை எந்த டாக்டர் கிட்ட காட்றம்மா?"

"என் அண்ணா கௌதம் கிட்ட தான்"

"ஹோ!! கௌதம் டாக்டரா"

'போச்சு... ஏதும் கண்டுபுடிச்சுருப்பானோ?' மூர்த்தியும் வரதனும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

"ஆமா, நியூரோலோஜிஸ்ட்"

"அப்படியா தம்பி? உங்களை பார்த்தா டாக்டர் மாறியே இல்ல... ஹீரோ மாறி இருக்கீங்க...!!" என பனிகட்டியை தூக்கி அவன்மீது வைத்தார் மூர்த்தி.

'சும்மாவே ஆடுவான்' என ரிஷி முணுமுணுப்பதை கண்டு வாயை மூடி சிரித்தான் ராம்.

அப்போது வரை 'சோறே சொர்க்கம்' என தன் வேலையில் மூழ்கி இருந்த கௌதம், தன்னை அவர் "ஹீரோ" என சொல்லக்கேட்டு இல்லாத டீசர்ட்டின் காலரை கெத்தாக தூக்கி விட்டான்.

பந்தாவாக, "ஆட்சுவலி, ரெண்டு மூணு ஹிந்தி படத்துக்கு ஹீரோவா நடிக்க என்னை கேட்டாங்க... பட் நான் ஸ்டடீஸ்ல பிஸியா இருந்தனால கமிட் ஆக முடில" என்றான் கௌதம்.

ரிஷி மேலே கையை ஆட்டிக்கொண்டு, “சூ, சூ! இந்த வெள்ளைக்காக்கா தொல்லை தாங்கல” என்றான் நக்கலாய்.

விஸ்வநாதன், "அப்படியா? எங்க படிப்பு முடிச்சீங்க?"

"எடின்பர்க்ல..." என சொல்லிவிட்டு ஒரு பூரியை ரெண்டாய் புட்டு வாயில் திணித்து கொண்டான் கௌதம்.

"எடின்பர்க்கா? நம்ம ராம் கூட அங்கதான் படிச்சான்! உங்களுக்கு அவனை தெரியுமா?" என்றார் விஸ்வநாதன் அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாய்.

வாயில் அடைத்த பூரி தொண்டைகுழியில் இறங்காது நின்றுகொள்ள, சிரமப்பட்டு அதை உள்தள்ளியவன், "இல்ல அங்கிள், எடின்பர்க்ல போய் படிக்கணும்னு ஆசை... ஆனா குடும்ப சூழ்நிலை... போக முடில... " என வருத்தமாய் சொல்வதாய் சமாளித்தான் கௌதம்.

"ஓ!" அவன் சொன்னதை நம்பியதை போல கேட்டுக்கொண்டனர்.

மைதிலி அலைபேசி ஒலி எழுப்ப, அனைவர் கவனமும் அங்கே சென்றது.

"சொல்லுங்க அங்கிள். நான் நல்லா இருக்கேன்.

ம்ம்ம்.. ராமும் நல்லா இருக்கான். அப்படியா? என் மெயில்க்கு அனுப்புங்க. நோ ப்ரோப்ளம் அங்கிள், ஐ வில் டூ இட்! ம்ம்ம் bye அங்கிள்....."

பேசிவிட்டு மொபைலை வைத்தவள், ஒன்றும் பேசாது உணவை தொடர, "யாரும்மா போன்ல? சொந்தமா?" என்றார் லட்சுமி அறிந்துக்கொள்ளும் நோக்கில்.

"என்னோட கார்டியன்"

"ஓ! எங்க இருக்காரு?"

"மும்பைல எங்க பிசினஸ் பார்த்துக்குறாரு"

"பிசினஸா? என்ன பிசினஸ் பண்றீங்க?" என குறுகிட்டான் வரதன்.

"மைதிலி இண்டஸ்ட்ரீஸ்"

ராம், கௌதம் மைதிலியுடன் எழுந்துகொள்ள, செல்லும் அவர்களையே பார்த்திருந்தனர் நால்வரும்.

"சார்..... ரெண்டு லட்டு தின்ன ஆசையா? என்ன பார்க்குறீங்க? செம்ம பிளான் இருக்கு சார் என்கிட்ட... யோகம் தான் நமக்கு..." என கண்களில் ஆசை மின்ன கேட்டான் வரதன்.

என்ன திட்டம் என தெரிந்துகொள்ள காதை பட்டை தீட்டியபடி அமர்ந்திருந்தான் ரிஷி.

செல்லும் மைதிலியை பார்த்திருந்த லக்ஷிமி திடீரென, "என்னங்க... அவளை நல்லா பாருங்க... அவ...!" என என்னவோ பதட்டமாய் சொல்ல தொடங்கியவரை அடக்கினார் விஷ்வநாதன்.

"சும்மா இரு!!! உனக்கே புரியும்போது எனக்கு புரியாதா?"

அவர் கண்களில் குரோதம் அதிகரித்தது.

-தொடரும்...
 
Super

Top