Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

KUK 20

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
இன்னும் நாலு அத்தியாயங்களோட கதை முடிவுக்கு வரபோது! கதை முடியும்போது படிச்சுக்கலாம்ன்னு யாராவது இருந்தா ஸ்டார்ட் பண்ணுங்க!!! :)

அத்தியாயம் 20

தன் பெற்றோர் பேசுவதை புரிந்துகொள்ள முடியாமல் குழம்பிய முகத்துடன் அமர்ந்திருந்தான் ரிஷி.

"சாப்பிடாச்சுன்னா போய் படு" என விஷ்வநாதன் கடுமையாய் சொல்லவும் அரை மனதுடன் எழுந்து மாடிக்கு சென்றான்.

அவன் அறைக்கு சென்று உறங்க தோன்றாமல், நேரே சென்று ராமின் அறை கதவை தட்டிவிட்டு காத்திருந்தான் ரிஷி.

கதவை திறந்த மைதிலி, "வா ரிஷி! நானே உன்னை கூப்பிடனும்ன்னு நினைச்சேன்... ராமோட லேப்டாப் பாஸ்வேர்ட் தெரியுமா உனக்கு? எனக்கு மெயில் செக் பண்ணனும்..." என கேட்டாள்.

"ம்ம்ம் ஒரு நிமிஷம் அக்கா... சார்ஜ் போட்டுக்கோங்க, ரொம்ப நாளா அப்டியே இருக்கு!!" என அவள் கேட்டதை செய்து முடித்து அவள் கைகளில் லேப்டாப்பை கொடுத்தான் ரிஷி.

அதை வாங்கி படுக்கையின் மீது வைத்துவிட்டு, "சொல்லு ரிஷி.. என்கிட்ட என்ன சொல்லனும்ன்னு வந்த?" என்றாள்.

"அக்கா? உங்களுக்கு எப்படி?"

"இந்த நேரத்துல, எதுவும் முக்கியமான விஷயம் இல்லாம நீ எதுக்கு வர போற!? என்னனு சொல்லு?"

"எனக்கு என்னனு சரியா தெரியல அக்கா. நீங்க போனதும் அம்மா உங்களை காட்டி அப்பா கிட்ட ஏதோ பதட்டமா சொல்ல வந்தாங்க... அப்பா எனக்கு தெரியும்ன்னு சொல்லி அம்மாவை அடக்கிட்டாரு... "

"இவ்ளோதானா? ஒன்னும் இருக்காது... சும்மா சொல்லிருப்பாங்க.. நீ போய் தூங்கு" என அலட்டிக்கொள்ளாமல் சொன்னாள் மைதிலி.

"அக்கா... அவங்க ரொம்ப கோவமா இருக்காங்க... ஒருவேளை நீங்க இங்க வந்த நோக்கம் தெரிஞ்சுருக்குமோ?"

"தெரிஞ்சா என்ன? பார்த்துக்கலாம்..."

"இருந்தாலும் உங்களுக்கு இவ்ளோ தைரியம் ஆகாது அக்கா... எதுக்கும் நம்ம எச்சரிக்கையாவே இருப்போம்... குட் நைட் அக்கா..." என சொல்லிவிட்டு நகர்ந்தான்.

அவன் நகர்ந்ததும் லேப்டாப்பை கையில் எடுத்தவள் இன்பமாய் அதிர்ந்தாள்.

"ரிஷி? இங்க வாயேன்...!!! குயிக்..." மைதிலியின் குரலில் வேகமாய் வந்தான் ரிஷி.

"என்னாச்சு அக்கா?"

"இங்க பாரு! இது எப்படி?"

லேப்டாபின் திரையை பார்த்த ரிஷிக்குமே அதிர்ச்சியான குழப்பம் தான். ஏனெனில் மடிக்கணினியின் திரையை அலங்கரித்திருந்தது மைதிலியின் கருப்பு வெள்ளை ஓவியம்.

"இது எப்படின்னு தெரியலையே!!!" என குழப்பத்துடன் சொன்னான் ரிஷி அதையே உற்று நோக்கியபடி.

மைதிலியும் தன் கண்ணை திரையில் இருந்து பிரிக்காது அதையே பார்த்தடி நின்றாள்.

"அக்கா? இங்க பாருங்க... ராமோட கையெழுத்து... இதை அவன்தான் வரைஞ்சுருக்கான் போல...." படத்தின் கீழே இருந்த கையெழுத்தை காட்டி ஆச்சரியமாய் சொன்னான்.

"ஐ கான்ட் பிலீவ் திஸ் ரிஷி! என்னை முன்னாடியே ராம்க்கு தெரியுமா? எனக்கு அவனை பார்த்தமாறி நியாபகமே இல்லையே!? நான் அவனை மறந்திருப்பேனோ ரிஷி?" ஆச்சர்யமும் படப்படப்புமாய் கேட்டாள் மைதிலி.

அந்நேரம் குளியல் அறையிலிருந்து ராம் வெளிவர, அவனிடம் ஓடி சென்றவள், "ராம்? என்னை உனக்கு முன்னாடியே தெரியுமா? ஹேவ் வி மெட் பிபோர்? நம்ம பேசிருக்கோமா?" என அடுக்கடுக்காய் கேட்டாள்.

"அக்கா? அவனுக்கு இப்போ ஒண்ணுமே தெரியாது... அவன்கிட்ட கேட்டா எப்படி சொல்லுவான்?" என ரிஷி நிதர்சனத்தை சொல்லவும் காற்று போன பலூன் போல ஆனாள் மைதிலி.

"கண்டிப்பா உங்களை அவனுக்கு தெரிஞ்சுருக்கும் அக்கா... எங்கயோ பார்த்துருக்கான். என்கிட்ட கூட சொல்லல பாருங்க...!!!!" என ஆச்சர்யமாய் சொன்னான் ரிஷி.

"என்ன மையு?? என்னாச்சு!!!" என மைதிலியை கேட்டான் ராம்.

"ராம்? இது உன்னோட லேப்டாப். இதுல என் போட்டோ இருக்கு... நீதான் வரைஞ்சுருக்க... உன்னோட சைன் இருக்கு... உனக்கு ஏதும் நியாபகம் வருதா? யோசிடா!!" என மைதிலி சொன்னதும் யோசிப்பதை போல தாடை தட்டியவனை எதிர்பார்ப்புடன் நோக்கினாள் மைதிலி.

"போ மையு.. நியாபகம் வரல..." என சொல்லிவிட்டு மெத்தையில் 'பொத்' என விழுந்து கொண்டான்.

அவனை முறைத்து கொண்டு நின்றவளை பார்த்து, "ஹாஹா... நான் தான் சொன்னேன்ல அக்கா!!! விடுங்க... பையன் உங்களை பார்த்ததும் விழுந்துட்டான் போல... என்கிட்ட கூட சொல்லாம மறைச்சுட்டான்... சரி ஆனதும் இருக்கு அவனுக்கு... சரி அக்கா.. நான் கிளம்புறேன்.. குட் நைட் ராம்!!" என சொல்லிக்கொண்டு நகர்ந்தான் ரிஷி.

அவன் சென்றதும் மடிக்கணினி திரையில் ஒளிர்ந்த தன்னையே பார்த்து கொண்டு மெத்தையில் அமர்ந்து இருந்தாள் மைதிலி.

‘நினைவு திரும்பினால் எங்கே தன்னை மறந்துபோவானோ என்ற பயம் அவள் அடிமனதில் கரையானை அரித்துக்கொண்டிருக்க, ஒரே நொடியில் அத்தனையும் சிதறி தூள்தூளானதை போல இருந்தது. ‘என் ராம் என்னை பிரிய மாட்டான்’ என்ற நம்பிக்கை வானளவு உயர்ந்தது.

படுத்திருந்த ராம், மெல்ல எழுந்து அமர்ந்திருந்தவளின் பின்புறமாக நகர்ந்து அவன் கழுத்துவளைவில் முகம் வைத்தான்.

"மையு!!" மோனநிலை கலையாது இருந்தாள்.

"சொல்லு ராம்....!"

"என்னோட கோச்சிங் கிளாஸ் முடிஞ்சுருச்சா?"

"எந்த கிளாஸ்?"

"ம்ச்.. போ மையு.. எப்பபாரு மறந்து போற! கோச்சிங் கிளாஸ் முடிச்சுட்டு தான் என்னை கிஸ் பண்ணனும்னு சொன்ன தானே முன்னாடி?"

"போடா!!!"

"ம்ஹும்.. ம்ஹும்ம்...."

அதற்கு மேல் ஏதும் சொல்லாது ராம் தன்னை எங்கே பார்த்திருக்க கூடும் என்ற எண்ணத்திலேயே இருந்தாள் மைதிலி. அந்த எண்ணமே ஒருவித மயக்கத்தை கொடுத்தது அவளுக்கு.

கழுத்து வளைவில் வைத்திருந்த தன் முகத்தை மெல்ல அசைத்தான் ராம். அவன் சீராக்கப்பட்ட மீசை, அவளுக்கு குறுகுறுப்பு மூட்ட, மெல்ல நெளிந்தாள். கண்களை திரையில் இருந்து விலக்காமலே!

தன் வலது கையால் அவள் இடையையும், இடது கையை அவள் கழுத்தின் கீழும் வைத்து தன்னோடு இறுக்கமாய் சிறைசெய்துகொண்டான் ராம்.

கழுத்திருலிருந்த தன் முகத்தை அவள் மேல் உரசியபடியே நிமிர்த்தியவன், அவன் கூச்சத்தில் நெளிவதையும் பொருட்படுத்தாது, அவளது வலப்புற காது மடலில் ஊதியபடி, தன் கூர்மூக்கால் உரசினான்.

"ரா...ம்....." தன் காதுக்கே கேட்காத அளவுக்கு மெதுவாய் அழைத்தாள் மையு, கண்களை மூடியபடி.

அவளுக்கு பதிலாய் "ம்ம்ம்" என சொன்னபடி தன் இரு கைகளால் அவளை மேலும் இறுக்கினான் ராம்.

மடியில் இருந்த மடிக்கணினி நழுவி கீழே விழுந்தது.

"ரா.....ம்......"
அவள் மேலும் சிணுங்க, அவனுக்கு இடையுறாய் இருந்த அவள் குழலை, நகர்த்தி முன்பக்கம் அனுப்பிவிட்டு, திரை விலக்கிய பளிங்காய் இருந்த அவள் பின்னங்கழுத்தில் அவன் முகம் புதைத்து கொண்டான் ராம்.

அறையின் குளுமையையும் மீறி இருவர் உடலிலும் வெப்பம் தகிக்க, நடுக்கம் தாளாமல் அவன் மீதே சாய தொடங்கினாள் மைதிலி.

மடியில் விழுந்தவளை கையோடு ஏந்தி, முகம் நோக்கியவன், மூடிய அவள் விழிகளில் இதழ் பதித்து நிமிர்ந்தான்.

அவள் கைகள் அவன் கழுத்தோடு மாலையாய் கோர்த்திருக்க, அவள் முகம் அவனுக்கு வெகு அருகில் இருந்து இம்சித்தது.

கண்களை மூடிக்கொண்டு அவனோடு ஒன்றியிருந்தவளை மேலும் இறுக்கிக்கொண்டவன், அவள் கன்னத்தோடு தன் கன்னம் இழைத்தான். இருவர் அணைப்பும் காற்றுக்கும் வழி விடாமல் இறுக தொடங்க, ராம் கண்கள் அவளின் சிவந்த அதரங்களை கண்டுகொண்டது.

அவளின் கீழுதடு, அவனிடம் ஏதோ கதைக்க, அதனிடம் பதில் சொல்ல அருகில் விரைந்தான்.
இருவருக்கும் இடையே நூலளவு இடைவெளி மட்டுமே இருக்க, அதை நிரப்பும் வேகத்தில் அருகே சென்ற நேரம்...!

"படார் ... படார்... படார்......."

கதவின் மீது விழுந்த தொடர்ந்த மூன்று அடி, நிசப்தமாயிருந்த அந்த அறை முழுதும் ஓங்கி ஒலித்தது.

திடீரென கேட்ட அந்த பலத்த சத்தத்தில், இருவருக்குமே தூக்கி வாரி போட்டது. அதுவரை இருந்த மோனநிலை கலைய, தான் இருக்கும் நிலை உணர்ந்து பதறி எழுந்தாள் மையு.

ராமிற்குமே சில நொடி வரை இருந்த ஏகாந்த வலை அறுபட, மனதை சட்டென ஒரு வெற்றிடம் சூழ்ந்து கொண்டதை போல உணர்ந்தான். என்னவென்று அதை சொல்ல தெரியாமல் மெத்தையில் முதுகு காட்டி படுத்துக்கொண்டான்.

தன் இதயம் வேகமாக துடிப்பதை உணர்ந்து, தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வர, காற்றை உதடு குவித்து ஊதி தள்ளினாள்.

மீண்டும் கதவு 'பட பட'வென அடிக்க, 'இதோ வரேன்' என சொல்லிவிட்டு எழுந்து நின்றவளின் கால்கள் பலமின்றி துவள்ந்தது.

அருகில் இருந்த கண்ணாடியில் தன்னை சரிசெய்துகொண்டு திரும்ப, மெத்தையில் ராம் தலையணையோடு முட்டிக்கொண்டு படுத்திருப்பது தெரிந்தது.

முகத்தில் இருந்த கன்னச்சிவப்பை மறைக்க முயன்றபடி கதவை திறந்தாள் மையு.

வாசலில் யாரும் இல்லாததை கண்டு குழம்பினாள்.
'இடி இடிக்குறமாறி கதவை தட்டிட்டு.....!!! ஒருத்தரும் இல்ல..ஹும்'

அவள் கதவை சாற்ற எத்தனித்தபோது வாயிலின் இடப்பக்கமிருந்து வெளிவந்து 'பேபபப' என மைதிலியிடம் கத்தினான் கௌதம்.

அசராமல் நின்றவளை கண்டு, "அண்ணன் உன்கிட்ட விளையாடுறேன் தங்கச்சி... பயந்துட்டியோ!! பேய் பிசாசை பார்த்த மாறி நிக்குற!?" என்றான் பல்லை காட்டிக்கொண்டு.

கௌதம் அறையின் உள்ளே செல்ல 'ஹும்ம்' என்ற வேக மூச்சுடன் அவனை பின் தொடர்ந்தாள் மையு.

வாசலில் கௌதம் குரல் கேட்டதுமே வெறிகொண்டு எழுந்து அமர்ந்தான் ராம்.

"மச்சான்! செம்ம தூக்கம் போல.. கண்ணு செவந்து இருக்கு...!!"

ராமின் கண்களில் கௌதம் ஒரு பாகிஸ்தான் தீவிரவாதி போலவே தெரிந்தான். எல்லை கோட்டை தாண்டி அத்துமீறி நுழைந்தவனை மனதிற்குள் ஏகே47 கொண்டு சல்லடையாக்கி கொண்டிருந்தான் ராம்.

கட்டிலில் சாய்ந்து அமர்ந்து அவனை வெறித்துக்கொண்டிருந்த ராமின் அருகே சென்று அமர்ந்த கௌதம், "அந்த லட்சுமி ஆன்ட்டி இருக்காங்கள்ளடா! எனக்கு பாதாம் பால் கொடுத்தாங்க. செம்ம டேஸ்ட். தங்கச்சிக்கு கொடுத்தீங்கலான்னு கேட்டேன்.. 'அவங்க கதவடச்சுடாங்க, அதனால தொல்லை பண்ணல..'ன்னு சொல்றாங்க.." என்றான்.

ஒன்றும் சொல்லாது அவனையே பார்த்து (முறைத்து) கொண்டிருந்தான் ராம்.

"விடுவேனா நான்? சண்டை போட்டு ரெண்டு கிளாஸ் கொண்டு வந்துட்டேன்ல?! இந்தா மச்சான்... தெம்பா குடி... தங்கச்சி? இது உனக்கு..." இரு டம்பளர்களை அவன் நீட்ட,

"இதுக்கு தான் கதவை உடைக்குற அளவுக்கு தட்டுனீங்களா?" மைதிலிக்கே அவன் மீது கோவம் வந்தபோது ராமை பற்றி சொல்லவே வேண்டாம். கொலைவெறியில் இருந்தான்.

"ஹே என்னடா லேப்டாப்பை கீழ போட்டு வச்சுறுக்கீங்க? ஏதும் சண்டையா?" என சொல்லிக்கொண்டு அதை மேசை மீது எடுத்து வைத்தான் கௌதம்.

"நாங்க குடிச்சுக்குறோம் அண்ணா... நீங்க போய் தூங்குங்க....!!!" என நாசூக்காக அவனை வெளிதள்ள முயன்றாள்.

"பரவால்லம்மா.. தூக்கம் வரல..." என பெரிய மனதுடன் மறுத்தான் கௌதம்.

"எங்களுக்கு தூங்கணும்... இடத்தை காலி பண்ணு.." கௌதமிடம் அடக்கப்பட்ட கோவகுரலில் சொன்னான் ராம்.

"ஓ... சரி மச்சான்... நீங்க தூங்குங்க... நான் கிளம்புறேன்..."

கௌதம் வெளியேறியதும் அந்த அறை முழுதும் பழைய நிசப்தம் நிலவ, முன்பு நிகழ்ந்ததெல்லாம் கண்முன் தோன்றவும், மறைந்திருந்த அவள் கன்னசிவப்பு மெல்ல எட்டிப்பார்த்தது.

புதுவித தயக்கம் அவளை சூழ, ராமை நிமிர்ந்து பார்க்கவே வெட்கம் வந்து தடையிட்டது.
'என்னடா இது தொல்லையா இருக்கு' தனக்கே தன் செய்கை அந்நியமாய் பட, தனக்குள் கேட்டுக்கொண்டாள் மையு. கெளதம் கொடுத்து சென்ற பாதாம் பாலை இருவரும் பருகினர். இயல்பான சூழ்நிலை இருந்திருந்தால் ‘லட்சுமி கொடுத்தனுப்பியது’ என்றதுமே சுதாரித்திருப்பர். இப்போதிருக்கும் ஏகாந்த நிலை எதையும் யோசிக்க விடாமல் செய்துவிட்டது.

மனதை திடப்படுத்தி, ஒருவாறாக நிமிர்ந்து எதிரில் இருந்த ராமை நோக்கினாள் மையு. தன்னையே பார்த்தவாறு அமர்ந்திருக்கும் ராமை கண்டதும், அவள் நுரையீரல் சில நொடி வேலை நிறுத்தம் செய்தது. சட்டென குனிந்து கொண்டாள்.

'ஹோ காட்! திஸ் ஸ் நாட் மி, ஹய்யோ' என சொல்லிக்கொண்டாள் மையு.

ராம் எழுந்து நிற்பது அவளுக்கு தெரிந்தாலும் குனிந்த தலை நிமிராது உதட்டை கடித்து கொண்டு நின்றாள் மையு.

'டெய்லி இவனை தானே பார்க்குறேன்... இன்னைக்கு மட்டும் என்ன ஆச்சு எனக்கு...'

நெருங்கி வந்தவன், "மையு? ஏன் என்னை பார்க்க மாட்டுற? பாரு மையு!" என்றான் ஏக்கத்தோடு.

அப்போதும் நிமிராது நின்றவளின் முகத்தை கையில் ஏந்தி தன்னை பார்க்க செய்தவன் தன் முகத்தருகே கொண்டு வந்து, "கோவமா மையு?" என்றான்.

"ம்ஹும்..." என்றதோடு தன் வெட்கத்தை மறைக்க அவன் நெஞ்சில் சாய்ந்தாள் மைதிலி.

அவளை தானும் அணைத்துக்கொண்டு சிரித்தபடி நின்றுகொண்டான். அந்தநொடி தன் பிரச்சனைகள், கவலைகள், கடமைகள் எல்லாம் மறக்க, தன் கூடு சேர்ந்த பறவை போல நிம்மதியாய் அவனோடு புதைந்துகொண்டாள் மையு.

பூட்டப்படாத அறையின் கதவு குமிழ் திருகி திறக்கப்பட, அந்த சத்தத்தில் சட்டென விலகினாள் மைதிலி. ஏமாற்றத்துடன் ராம் நிற்க, திறந்த கதவின் வழியே,
"மச்சான்... பால் குடிச்சாச்சுன்னா அந்த டம்ளர என்கிட்ட..." என கௌதம் கேட்டு முடிப்பதற்குள் மைதிலி கைகள் வைத்திருந்த, காலி டம்ளரை மின்னல் வேகத்தில் பிடுங்கி, கௌதமை குறி வைத்து வீசினான் ராம்.
"போய் தொலைடா" என ராம் கத்த, பயத்தில் கதவை சாற்றி விட்டு ஓடினான் கௌதம்.
கௌதமின் நிலையை கண்டு குலுங்கி சிரித்தாள் மையு. சிரிக்கும் அவளை பார்த்த ராமிற்கும் கோவம் தளர்ந்து சிரிப்பு வர, அவளுடன் சேர்ந்து சிரித்தபடி அணைத்துக்கொண்டான்.

ராமின் மாற்றத்தை உணர்ந்த மைதிலிக்கு அவன் விரைவில் பூரண குணம் பெறுவான் என்ற நம்பிக்கை அவள் மனதில் வேரூன்றியது.
 
காலையில் கண் விழித்ததும் தனதருகே அமைதியாய் உறங்கும் ராமை சிரிப்புடன் பார்த்தாள் மைதிலி.

கடந்த நெடு நாட்களாய் அவள் தொடர்ந்து பார்க்கும் முகம், முதன் முதலில் பார்த்தபோதே பட்டென மனதில் பதிந்த நின்றது. அந்நியனை எந்த தயக்கமும் இல்லாமல் தன்னுடன் தங்கவைக்க தூண்டிய உணர்வு. சராசரி ஆண்மகனாய் அவன் இல்லாதபோதும், அவனிடம் தன் வாழ்கையை ஒப்படைக்க தோன்றிய நம்பிக்கை.

தனக்கென யாரும் இல்லை என்ற அவளின் நீண்ட வருட கவலையை போக்கவந்த தேவதூதன் போல அவனை எண்ணி, எப்போதும்போல் உறங்கும் அவனின் சிகையை மெல்ல வருடினாள் மைதிலி. அவள் வருடலில் கண்திறந்த ராம் சிரித்துக்கொண்டே சோம்பல் முறித்தான்.

பதிலுக்கு சிரித்தவனிடம், “நல்லா தூங்குனியா ராம்?” என்றாள்.

“ம்ம்ம்.... செம்ம தூக்கம் மையு... எப்போ தூங்குனேன்னே தெரியல”

“எனக்கும் தான்...கதவை லாக் பண்ணிட்டு வந்து படுத்ததுதான் நியாபகம் இருக்கு” அவர்களுக்கு தெரியாது, லட்சுமி பாதமாம் பாலில் கலந்த தூக்க மாத்திரை தான் இவர்களின் ஆழ்ந்த நித்திரைக்கு காரணம் என்பது. வாரிசு உதித்துவிட்டாள் என்ன செய்வது என்ற பயம் அவர்களுக்கு!

“இன்னும் கொஞ்சம் தூங்குவோம் மையு..” என அவளை நெருங்கி படுத்தான் ராம்.

“ரொம்ப நேரமாச்சு ராம்... ஒரு பைல் செக் பண்ண சொல்லி மெயில் பண்ணிருந்தாங்க அங்கிள். நேத்து செய்யமுடியல. இப்போ குளிச்சுட்டு வேலைய பார்க்கணும்...”

“ஏன் மையு நேத்து பண்ணமுடில?” என ராம் ஒன்றும் தெரியாதது போல் கேட்க, அவன் குரல் மாறுபாட்டை உணர்ந்தவள், அவன் நெஞ்சில் இருந்து தலை நிமிர்த்தி அவனை பார்த்தாள்.

“வர வர வாலு வளர்ந்துட்டேபோகுது உனக்கு?” என்றதோடு அவன் நெஞ்சில் குத்திவிட்டு எழுந்து குளிக்க சென்றாள் மைதிலி.
“தம்பி காபி?” வீட்டை சுற்றி ஓடிக்கொண்டிருந்த கௌதமிற்கு கொடுக்க காபியுடன் வந்திருந்தார் ரமா பாட்டி.

“அட! நீங்க ஏன் பாட்டி இவ்ளோ தூரம் வரீங்க? ஒரு குரல் குடுத்துருந்தா நானே ஓடி வந்துருப்பேனே!!”

“பரவால்ல தம்பி, இதுல என்ன இருக்கு... ராம் சிநேகிதனுக்கு இதுகூட பண்ண மாட்டேனா?” என அவனுக்கு மட்டும் கேட்கும் ரகசிய குரலில் சொன்னார் பாட்டி.

“அடடா!! பாட்டிக்கும் எல்லாம் தெரியுமோ?”

“எஸ்ஸு... எஸ்ஸு...” என சிரித்துவிட்டு வீட்டுக்குள் செல்ல தொடங்கினார்.

காபியை உறிஞ்சியபடி விழியை சுழற்றியவன் பார்வை வட்டத்தில் காரை துடைத்துக்கொண்டு இருந்த சந்தோஷ் மாட்டினான்.

அவன் அருகே சென்று நின்றுகொண்டு, “க்கும் க்கும்” என கனைத்துகாட்டினான் கெளதம்.

அவனை கண்டுகொள்ளாமல் தன் வேளையில் இருந்தவனை, “ஒருத்தன் எதுக்கு வந்தோம்னே தெரியாம டிரைவர்ராவே மாறிட்டானே... ஹஹா” என்றான் கெளதம்.

“காலைலேயே ஆரம்பிக்காத... போய்டு ஒழுங்கா...” என யாரும் கவனிக்காதபடி அடிக்குரலில் சொன்னான் சந்தோஷ்.

அந்நேரம் ஜாகிங் முடித்து உள்ளே வந்துகொண்டிருந்த விஸ்வநாதன் இவர்களை கண்டு, “என்ன டாக்டர் தம்பி? இங்க நின்னு இவன்கிட்ட என்ன பேசிட்டு இருக்கீங்க?” என்றார் அளவிடும் பார்வையில்.

“ஒழுங்கா வேலை செய்யுறானா இல்லையானு பார்த்துட்டு இருக்கேன் அங்கிள்...”

“காரு துடைக்குறது பத்தி உங்களுக்கு எப்படி தெரியும் தம்பி? முன் அனுபவமா? ஹாஹா” என சொல்லி சிரித்தபடி வீட்டினுள் சென்றார் விஸ்வநாதன்.

செல்லும் அவரையே முறைத்து பார்த்துகொண்டு ‘கிழவனுக்கு குசும்பப்பாரு’ என முனுமுனுத்துக்கொண்டே திரும்பினான் கெளதம்.

துடைத்த காரை மீண்டும் மீண்டும் துடைத்துக்கொண்டு யோசனையில் நின்றான் சந்தோஷ்.

“டேய் போதும்டா... தேச்சு தேச்சு காருல ஓட்டை விழுந்துட போது....” என்றான் கெளதம். அதற்க்கும் அவனிடம் எந்த எதிரொளிப்பும் இல்லாது போக, அவன் யோசனை தோய்ந்த முகத்தை பார்ர்த்து துணுக்குற்றான் கெளதம்

தங்களை சுற்றி யாரும் இல்லாததை உறுதி செய்துகொண்டு, “ஏய் சந்தோஷ்... என்ன ஆச்சுடா? எதுவும் பிரச்சனையா?” என அவன் தோள் தொட்டான் கெளதம்.

“கொஞ்சம் பயமா இருக்கு அண்ணா?” என்றான் சந்தோஷ். பயத்தில் மரியாதையும் கூடவே வந்தது.

“பயமா? என்ன நடந்துச்சு?”

“நேத்து நடுராத்திரி என்னை வந்து எழுப்பி காரை எடுக்க சொன்னாங்க...!”

“யாரு? விஸ்வநாதன்னா?”

“ஆமா... வரதன் வீட்டுக்கு போக சொன்னாரு!”

“நடுராத்திரில அங்க என்ன வேல அவருக்கு?”

“அதை தெரிஞ்சுக்க தான் நானும் அவருக்கு தெரியாம வீடுக்குள்ள போனேன்... அவங்க பேசிகிட்டதை கேட்டதும் என்னவோ தெரியல.. பயமா இருக்கு...”

“என்னனு சொல்லுடா முழுசா...?” என கேட்டான் கெளதம்.

“இங்க இருந்து போன வரதன் சில மணி நேரத்துலயே மைதிலி பத்திய முழு விவரத்தையும் கலெக்ட் பண்ணிட்டான். அதை சொல்லதான் அவரை அந்த நேரத்துல வர சொல்லிருகான்...”

“ஓ!! என்ன பிளான் பண்ணிருக்கானுங்க இப்போ?” என வினவினான் கெளதம்.

“மைதிலியோடது ராம் சொத்தை விட மூணு மடங்கு அதிகம். அவளுக்கும் சொந்தம்ன்னு சொல்லிக்க பெருசா யாரும் இல்லை. இப்போ ராமோட சொத்துக்கு விஸ்வநாதன் கார்டியன்னா இருக்காரு. ஒட்டு மொத்தமா எல்லாமே அவர் கன்ட்ரோல்ல வரதுக்கு, மைதிலியோட ப்ரோபர்டிஸ்ஸ ராம் பேருக்கு மாத்திட்டு, கொஞ்ச நாள்ல ரெண்டு பேரையும் கொன்னுடலாம்ன்னு பேசிட்டு இருந்தாங்க....”

“எவ்வளவு ஈசியா எல்லாத்தையும் பிளான் பண்றானுங்க பாரேன்!! ஒரு உயிரை எடுக்குறதெல்லாம் அவ்வளவு சுலபமா போச்சுல்ல...” என பொருமினான் கெளதம்.

பின், “இதுக்கு ஏன்டா நீ டென்ஷன்னா இருக்க? நம்ம எல்லாம் எதுக்கு இருக்கோம்?’’ என கேட்டான்.

"இல்லை அண்ணா... விஸ்வநாதன் திரும்ப வீட்டுக்கு வந்ததும் நேரே ரிஷி ரூம்க்கு தான் போனாரு... அரை மணி நேரம் கழிச்சு தான் வெளில வந்தாரு. அதான் ஒரே குழப்பமா இருக்கு... ரிஷி நம்மகூட இருந்தே நமக்கு எதிரா பண்றானா? இல்லைனா அந்த நடு ராத்திரில வரதன பார்த்த கையோட எதுக்கு ரிஷியை பார்க்க போனும்?”

“எனக்கும் சந்தேகமா தான் இருக்கு சந்தோஷ்... நம்ம சந்தேகம் உண்மைன்னு ஆச்சுன்னா, ரிஷி மூலம்மா நம்ம எதுக்கு இங்க வந்துருக்கோம்ன்னு விஸ்வநாதனுக்கு தெரிஞ்சுருக்கும்...”

“அது ரொம்ப டேன்ஜர் அண்ணா... நம்மலே வந்து மாட்டிக்கிட்ட மாறி ஆகிடும்... என்ன பண்றதுன்னு புரியல இப்போ...”

“நம்ம கேர்புல்லா இருப்போம்டா...என்ன நடக்குதுன்னு பாப்போம்.. ஒருவேள அவரு வேற ஏதாது பேசுறதுக்கு கூட போயிருக்கலாம்ல? ரிஷிட்ட கேப்போம்.... நீ ப்ரீயா விடு.. நான் உள்ள போறேன்...” என சொல்லிவிட்டு நகர்ந்தான் கெளதம்.

குளித்துமுடித்து ஹால்லில் வந்து அமர்ந்திருந்தனர் ராமும் மைதிலியும்.

“எங்க போனீங்க அண்ணா? இவ்ளோ நேரமா காணோம்?” என உள்ளே நுழைந்த கௌதமிடம் கேட்டாள் மைதிலி.

“இன்னைக்கு பாதாம் பால்ல ஸ்பெஷல்லா என்ன போடலாம்ன்னு யோசிச்சுட்டு இருந்துருப்பான்!!” தெளிவான மனநிலைக்கு வந்தபோது தாங்கள் கண்டுக்கொன்டதை இப்போது முறைத்துக்கொண்டே சொன்னான் ராம்.

“பேஷ் பேஷ்... ராமுக்கு கூட மூளை வேலை செய்ய ஆரம்பிச்சுடுச்சே! அடடே.. ஆச்சர்யக்குறி!” வேறு யோசனையில் இருந்ததால் அவன் சொன்னதை என்னவென்றே யோசிக்காமல் மேலும் அவனை வம்புக்கு இழுத்தான் கெளதம்.

“போடா இவனே!!”

“ஸ்டாப் இட் ராம்... நீங்க ரெண்டு பேரும் பேசிக்க ஆரம்பிச்சாலே எனக்கு தலைவலி வந்துடுது... கிண்டர் கார்டன் பேபீஸ் கூட தேவலாம்... பீகேவ் லைக் டாக்டர்ஸ் பார் ஹெவன் சேக்...” என அலுத்துகொண்டாள் மைதிலி.

“கேட்டுச்சா? உன்னதான் சொல்றா மையு...” என கௌதமிடன் மீண்டும் சொற்ப்போருக்கு சென்றான் ராம்.

“டேய் உன்னதான்டா சொல்லுது என் தங்கச்சி...”

“உன்னதான் சொல்லுறா!!!”

“உன்னதான்டா சொல்லுது.. இரு தங்கசிட்டயே கேப்போம்...” என இருவரும் திரும்ப, அங்கே தன் தலையை கைகளில் தாங்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள் மைதிலி.

“பேசி பேசியே என் மையுக்கு தலைவலி வர வச்சுட்டியேடா” என கௌதமை சாடினான் ராம்.

“நீ மட்டும் பேசலையா? நீயும் தானே...!” என பதிலுக்கு கெளதம் ஆரம்பிக்க பொறுமையிழந்த மைதிலி, “ஆஆஆஆ.... hell with you people…. You are testing my patience…. Get lost from my sight…” என சீறத்தொடங்கினாள்.

அந்நேரம் அங்கு வந்த ரிஷி, “என்னாச்சு? அக்கா இவ்ளோ சூடா இருக்காங்க?” என கேட்டான்.

“வெயில்ல ரொம்ப நேரம் நின்னுச்சு... அதான்...” என பதில் சொன்னான் கெளதம்.

“இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தா கூட எனக்கு ஏதாது ஆகிடும்.. நான் கார்டன்ல இருக்கேன்..” என சொல்லிவிட்டு எழுந்தவள், தன்னுடன் ராமும் எழுவதை கண்டு, “நீ எதுக்கு பின்னாடியே வர? ஒழுங்கா இங்கயே இரு...!” என்றாள்.

“மையு?” என ராம் சிணுங்கவும், “சிணுங்காத!! வாயிலையே போடுவேன். இங்கயே உட்காரு ஒழுங்கா...!!” என சொல்லிவிட்டு வெளியே சென்றாள்.

ராம் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு சோபாவில் அமர்ந்துகொள்ள, கெளதம் ரிஷியை பார்த்தான்.

“ரிஷி?”
“சொல்லுங்க”
“நைட் நல்லா தூங்குனியா??” என கேட்டான் கெளதம்.
“ம்ம்ம்.. எப்பவும்போல நல்லா தூங்கிட்டேனே... ஏன் கேக்குறீங்க....?”
“சும்மாதான்... உங்க அப்பா ரொம்ப நேரம் பேசி ப்ளேடு போட்டுடாரோன்னு கேட்டேன்...” என சிரித்தான் கெளதம்.

“அப்பா என்கிட்டே எங்க பேசுனாங்க?” என கேட்டான் ரிஷி.

“நைட் உன்னோட ரூம்க்கு வந்து...”

“என் ரூம்க்கு அவர் ஏன் வரபோறாரு?? என திருப்பி கேட்டான் ரிஷி.

“ஓ! நேத்து நைட் வந்தாரோன்னு நினச்சேன்....!!”

“அதெல்லாம் யாரும் வரல...” என சொல்லிவிட்டு செய்தித்தாளில் மூழ்கினான் ரிஷி.

அப்போது எதேட்சையாய் வீட்டினுள் நுழைந்த சந்தோஷ் செவிகளிலும் ரிஷி சொன்னது விழுந்தது. அவன் குழப்பத்துடன் கௌதமை பார்த்தான். சந்தோஷை பார்த்த கெளதம் மனதில், 'எதுக்கு ரிஷி நம்மகிட்ட மறைக்குறான்?’ என்ற கேள்வி அரித்துக்கொண்டு இருந்தது.

தனது அறையில் இருந்து கிளம்பி வெளியே விஸ்வநாதன், ஹாலில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த ராமை முறைத்தபடி அருகே வந்தார்.

“என்னடா பழசு எல்லாம் மறந்து போச்சா? பொண்டாட்டி வந்ததும் தைரியம் வந்துடுச்சோ?” என்றார் அவனுக்கு கேட்கும் குரலில்.

ராம் ஒன்றும் சொல்லாமல் தலைகுனிந்து அமர்ந்திருக்க, அவரின் கோபமுகதையும், ராமின் பயந்த முகத்தையும் கணக்கிட்டபடி உள்ளே வந்தாள் மைதிலி.

“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்...?!” என விஸ்வநாதனிடம் சொன்னாள் மைதிலி.

சட்டென முகத்தை மாற்றி, “நானும் உன்கிட்ட பேசணும்மா...” என சொன்னவர் மனதில், மைதிலியின் சொத்துகளை ராம் பெயருக்கு மாற்ற சொல்லி எப்படி கேட்பது என வார்தைகளை வடிவமைத்துக்கொண்டிருந்தார்.

“அப்படியா? அப்போ நீங்க சொல்லுங்க... என்ன விஷயம்...!”

“இல்லம்மா. நீயே சொல்லு... நான் பிறகு சொல்றேன்...” என மனதில் ஒத்திகை பார்க்க நேரம் வாங்கிக்கொண்டார் விஸ்வநாதன்.

“வெல்! இதுவரைக்கும் ராம்க்கு கொஞ்சம் ஹெல்த் இஷ்ஷுஸ் இருந்துச்சு. சோ அவர் ப்ரோபர்டீஸ் எல்லாம் உங்க கண்ட்ரோல்ல வச்சுருந்தீங்க. இப்போ அவருக்கு வைஃப் அப்பிடிங்கற முறையில நான் வந்தாச்சு... இனிமே அவரோடது எல்லாத்தையும் நானே நிர்வகிக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன். லீகல்லி அதுக்கான டாக்குமென்ட்ஸ்ஸ நீங்க ரெடி செஞ்சு குடுக்குறீங்களா? இல்லை நானே பண்ணிக்கட்டுமா?”

மைதிலியிடம் அவளுடைய சொத்துகளை எப்படி பேசி பெயர் மாற்றுவது என அவர் திட்டமிட, அவரைவிட பத்து மடங்கு வேகத்தில் இருந்தாள் மைதிலி.

சந்தோஷ், ‘இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!’

தன்னிடமிருந்து இப்படி ஒரு அடியை அவர் துளியும் எதிர்பார்க்கவில்லை என்பது விஸ்வநாதனின் அதிர்ந்த உருவில் இருந்து கண்டுக்கொண்டாள் மைதிலி. அவள் இதழ்கடையில் நமட்டு சிரிப்பு உருவானது.

கௌதமின் மனதிற்குள், ‘அவர் போட்ட திட்டம் தங்கச்சிக்கு முன்னாடியே தெரிஞ்சுருக்குமோ? நானே சந்தோஷ் சொன்னதை இன்னும் சொல்லலையே? அப்புறம் எப்படி?’ என யோசித்து கொண்டிருந்தான்.

சில நிமிட அமைதியை தனக்கு சாதகமாகிக்கொள்ள எண்ணிய மைதிலி, “ஓகே! நானே ரெடி பண்ணிட்டு சொல்றேன். ஒரு சைன் மட்டும் பண்ணிடுங்க. நான் இப்போ வெளில போணும். கார் யூஸ் பண்ணிக்கலாம் தானே?!” என்றாள்.

அவளின் முதல் அடியில் இருந்தே வெளிவராத அவர், ஏதோ நினைப்பில் தலை ஆட்டினார்.

“ராம்? வா!!” என கைப்பிடித்து அவனை அழைத்தவள், ஒரு தலையசைப்பில் கௌதமை வர சொல்லிவிட்டு வெளியேறினாள்.

‘ஹையோ!! குளிக்கவே இல்லையே இன்னும்!!’ என புலம்பிக்கொண்டே அவளுடன் சென்றான் கெளதம்.

காரின் அருகே நின்ற சந்தோஷிடம், “பீச்க்கு போணும்” என்ற உத்தரவோடு ராமுடன் சென்று அமர்ந்தாள்.

கார் மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்த லக்ஷ்மி கோவத்துடன் வீட்டினுள் சென்றார்.

“ஏங்க!! அவ என்னடான்ன சொத்து முழுக்க எனக்கு வேணுன்னு ஆடிட்டு போறா, நீங்க அசையாம நிக்குறீங்க? குடுக்குறீங்களான்னு கூட கேக்கலை...! முடிவே பண்ணிட்டாளாம்!!! பெரிய மகாராணி இவ, கேட்டதும் நம்ம தூக்கி குடுக்கணும்!!! எவ்ளோ திமிரு பாருங்க அவளுக்கு” என கத்ததொடங்கினார்.

துளிர்த்த வியர்வையை துடைக்க கூட தோன்றாமல், “நான் கணிச்சது உண்மைன்னு ஆகிடுச்சு லக்ஷ்மி! பெரிய தப்பு பண்ணிட்டேன்!!” என்றார்.

அவரை புரியாமல் பார்த்தனர் லக்ஷ்மியும் ரிஷியும்.

-தொடரும்...
 
O my God rishi avanodaya அப்பா vuku உடந்தையா அவுரு ethuku rishi ரூம் la போய் avvallavu நேரம் irunthuthu வந்தாரு... Rishi illaanu solraan... Maiyu சொத்து ah yum vaangitu rendu perayum கொலை pannidanum ah.... Enna aaga pooguthoo தெரியல ah... Super Super Super pa.. Semma semma episode... Eagerly waiting for next episode
 
Top