Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

KUK 23

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் 23

மயக்கம் மெல்ல தெளியத்தொடங்க, சிறையிட்டிருந்த கண்கள் மெதுவாய் பிரிந்தன மைதிலிக்கு. கண்களை கசக்க சொல்லி மூளை உத்தரவிட, அதற்காக கைகள் எழ நினைத்து முடியாமல் போனது. சில நிமிட தொடர் முயற்சியில் கண்களை விரித்து பார்க்க, அவள் கண்ணெதிரே ஒரு சுழலும் நாற்காலியில் கால் மேல் கால் போட்டபடி அமர்ந்திருந்தார் விஸ்வநாதன்.

“என்னம்மா? நல்லா தூக்கமா? நான் யாரு!? எங்க இருக்கேன்னு கேட்டுடமாட்டியே!!? ஹாஹா” என ஆர்ப்பாட்டமாய் சிரித்தார் அவர்.

அவர் பேச்சில் இருந்த பழைய திமிரும் ஆணவமும், அவள் கைகால்களில் கட்டியிருந்த கயிறும் தாங்கள் அவரிடம் அகப்பட்டு விட்டதை அவளுக்கு நொடியில் உணர்த்தின.

“என்ன முழிக்குற? என்னை ஜெயில்ல போட திட்டம் போட்டு வீடுக்குள்ள வருவீங்க? இது எதுவும் தெரியாம நான் உனக்கு ஆரத்தி எடுத்து சொத்து எழுதி கொடுத்தேன்னு நினைச்சியா? வீட்டுக்குள்ள வந்த ரெண்டாம் நாளே உங்களை மோப்பம் பிடிச்சுட்டேன். எங்க சறுக்குனோம்ன்னு யோசிக்குறியா?” என கேட்டவர் அவளின் குழம்பிய முகத்தை கண்டு, “உன் கழுத்துல தொங்குதே... பதினைஞ்சு பவுனுல ராம் அம்மாவோட சங்கிலி...” என்றார்.

அப்போதுதான் மைதிலிக்கும் இது நினைவு வந்தது. ராம் அறையில் இருந்து கொண்டு வந்ததாக சொல்லி ரிஷி கொடுத்தது நினைவில் வர, அவளை கலைத்தார் விஸ்வநாதன்.

“இந்த வீட்டுல இருந்த நகை எப்படிடா கால் முளைச்சு உன் கழுத்துக்கு போச்சுன்னு சந்தேகப்பட்டு உங்களை கவனிக்க ஆரம்பிச்சப்போ தான் ரிஷி உங்ககூட கூட்டு சேர்ந்துருக்கான்னு தெரியவந்துச்சு...” என்றார் அவர்.

“அதை நாந்தான் கண்டுபிடிச்சேன்... அந்த நகை என் கண்ணுல தான் பட்டுச்சு...” என இடைப்புகுந்தார் லக்ஷ்மி.

“உன் சொத்துமதிப்புல கால்வாசி கூட வராத இதை காப்பாத்த, இப்போ நீ உன் உயிரை விடப்போறத நினைச்சா தான் கவலையா இருக்கு...” என அவர் போலியாய் உச்சுக்கொண்டி கொண்டிருக்க, அவள் கண்கள் ராமை தேடிக்கொண்டிருந்தது.

அங்கிருந்த லக்ஷ்மியின் காலடியில் ரிஷி மயங்கி விழுந்து கிடக்க, சந்தோஷ் அந்த தளத்தின் மூலையில் சரிந்து கிடந்தான்.

அவள் தேடலை உணர்ந்தவர்ப்போல், தன் காலை தரையில் உந்தி சுழல் நாற்காலியுடன் வேகமாய் அவளருகே வந்து, “என்ன உன் பைத்தியக்கார புருஷன்ன தேடுறியா?” என்றார்.

அவர் கண்களை நேரே பார்த்துக்கொண்டு, “சும்மா பைத்தியம் பைத்தியம்ன்னு சொல்லிட்டு இருக்காத... அவர் குணமாகுறவரைக்கும் தான் உன்னோட இந்த ஆட்டம் எல்லாம். அவர் மட்டும் சரி ஆகட்டும். அப்பறம் நீ என்ன ஆகுறன்னுமட்டும் பாரு...” என்றாள் கோவமாக.

“பார்ரா... அதுவரைக்கும் விட்டு வச்சா தானே? நாளைக்கு நியூஸ்பேப்பர்ல தலைப்புசெய்தியே நீங்கதான்... ‘பிரபல பெண் தொழிலதிபர், அவருக்கு சொந்தமான கட்டுமானபணிகள் நடைபெறும் இடத்தை மேற்பார்வையிட்டபோது, எதிர்பாராத மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தில் தன் கணவன் மற்றும் சகோதரனுடன் உடல் கருகி உயிரிழந்தார்’... நல்லா நியூஸ் வாசிக்குறேன் தானே?” என அவர் இளக்காரமாய் கேட்க,

அவரை அலட்சியமாய் பார்த்தபடியே தன் கைகளை விடுவித்துக்கொள்ள முயன்றபடி, “ராம் எங்க?” என்றாள்.

தான் சொன்ன செய்தியை கேட்டு பயத்தில், ‘ஏதும் செஞ்சுடாதீங்க.. எங்களை விட்டுடுங்க... சொத்து தானே வேணும்.. நான் கொடுக்குறேன்..’ என அவள் சொல்லுவாள் என இறுமாப்புடன் அவர் நினைத்திருக்க, அதற்கு நேர்மாறாய் இவளது உதாசீனம் அவரது வெறியை தூண்டியது.

“ஏய் என்ன திமுரா? நீ வந்த நாளுல இருந்து நானும் பார்க்குறேன். மதிக்கவே மாட்டேங்குற... உனக்கு இன்னும் நான் யாருன்னு சரியா தெரியல.. இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சுக்கப்போற...” என ஆவேசமாய் கத்தியபடி “வரதா.....!!! அதுங்களை இழுத்துட்டு வா” என்றார்.

அவர் குரல் கொடுத்த திசை நோக்கி பார்க்க, அங்கு ராமும் கௌதமும் பாதி மயக்கத்தில், கைகள் கட்டப்பட்ட நிலையில் மூர்த்தி மற்றும் வரதனால் இழுத்து வரப்பட்டனர்.

“ரா....ம்....” என அவள் குரல் நடுங்க,
அதில் சற்று மனம் அமைதியுற, “உன்னோட ராம் தான்.. உன் கண்ணு முன்னாடி கொன்னுடலாம்ன்னு தான் நீ முழிக்குற வரைக்கும் வெயிட் பண்ணேன்...” என அவர் சொன்னதும் திரும்பி அவரை பலமாய் முறைத்தாள் மைதிலி.

“என்ன முறைக்குற? முப்பது வருஷமா இதெல்லாம் நமக்குதான் நமக்குதான்னு மனசுக்குள்ள கட்டுன கோட்டை, கைக்கு வர நேரத்துல எங்க இருந்தோ வந்து தட்டிட்டு போனா, விரல் சூப்பிட்டு பார்த்துட்டு இருப்பேன்னு நினைச்சியா? எவன் வந்தாலும் அடிச்சு தூக்கிட்டு போயிட்டே இருப்பேன். கேள்வி கேக்குறவன் வாயில ரெண்டு கட்டு பணத்த வச்சா வாலாட்டிட்டு அவனும் போய்டுவான்...” என்றார்.

ஏளனமாய் உதடு வளைத்த மைதிலி, “என்னை கொல்றது என்ன அவ்ளோ ஈஸின்னு நினைச்சுட்டியா? இல்லை என்னை கொன்னுட்டா ஏன்னு கேக்க யாருமே இல்லன்னு நினைச்சியா? மோர்ஓவர் நான் மும்பைல பொட்டிக்கடை வச்சுருக்கேன்னு நினைப்போ?!! என் அங்கிள் கிட்ட எல்லாம் சொல்லிட்டு தான் வந்துருக்கேன். எப்படியும் நீ தப்பிக்க முடியாது. ஜெயில் தான் உனக்கு...” என நிதானமாய் உரைத்தாள் மைதிலி.

சில நொடிகள் அவளை உற்று பார்த்தவர் பின், “ஹஹஹஹஹா!!!” என ஆர்பாட்ட்டமாய் சிரித்தார். “உன் பின்னாடியே ரெண்டு பேரு வருவானுங்களே? அவங்களை நம்பி சொல்றியா? ஐயோ பாவம்... அவங்க இந்நேரம் எந்த ஹாஸ்பிடல்ல, எப்படி இருக்கானுன்களோ?! தெரியலையே...” என சொல்லிவிட்டு திரும்பினார்.

ராமின் வீட்டிருக்குள் சென்ற நாள் தொட்டு, அவள் பாதுகாப்புக்கென சீருடை அணியாத இரு காவலர்களை ஏற்ப்பாடு செய்திருந்தார் கேசவன்.

இன்னும் முழுதாய் தெளியாத மயக்கத்தில் நால்வரும் கீழே கிடக்க, “லக்ஷ்மி? தண்ணி கொண்டு வந்து இதுங்க மூஞ்சில ஊத்தி எழுப்பு. டேய் கயிறு டைட்டா கட்டிருகீங்க தானே?” என கேட்டு உறுதிபடுத்திக்கொண்டார்.

“மப்டி போலீஸ்ன்னா கண்டுபிடிக்க முடியாதா எங்களுக்கு...? நீங்க இதுக்குள்ள வந்த உடனே அவங்களை வகையா தட்டி அனுப்பியாச்சு. அதனால இந்நேரத்துக்கு ஒருத்தனும் இங்க வர வாய்ப்பே இல்லை...” என்றார் திமிறாய். மெலிதாய் பதட்டம் தொற்றி கொண்டது மைதிலிக்கு.

முகத்தில் தண்ணீர் கொட்டியதும் விழிப்பு வர, எழுந்த நால்வருக்கும் அவர்கள் இருக்கும் சூழ்நிலை யாரும் விளக்காமலே விளங்கியது. கௌதமிற்கு கூட.

“மையு! என்னாச்சு மையு” என கேட்டபடி ராம் அவளிடம் செல்ல, கையிலிருந்த கட்டையால் அவன் முகத்தில் ஓங்கி அடித்தான் வரதன்.

அடித்த வேகத்தில் அவன் கீழே விழ, “ராஆஆஆம்....” என அலறினாள் மைதிலி.

“அட.. சுவிட்ச் அங்க இருக்கோ...?” என சொன்னபடி வரதன் கையில் இருந்த கட்டையை வாங்கியவர், மைதிலியை குரோதமாய் பார்த்தபடி ராம் அருகில் சென்றார்.

“ராம்.... !!! அவனை விடுங்க அப்பா.. வேணாம்...” என ரிஷி அவனிடம் செல்ல முயல, அவனை இழுத்து பிடித்து தடுத்தார் லக்ஷ்மி.

கட்டப்பட்டிருந்த தன் கைகளை சிரமப்பட்டு தரையில் ஊன்றிக்கொண்டு எழ முயற்சித்த ராமை, எழுந்துக்கொள்ள விடாமல் தன் பலம் கொண்டு அவனை தாக்கினார் விஸ்வநாதன். அவருக்கு அருகில் திமிறிக்கொண்டிருந்த மூவரையும் கண்டு, “ஏய் ஏதாது ஹீரோ வேலை பார்க்கலாம்ன்னு நினைச்சீங்க!? ஒவ்வொரு அடியும் அவன் மேல பலமா விழுகும்... சும்மா கத்திட்டு இருக்காம அமைதியா இருங்க...” என்ற எச்சரிக்கையோடு ராமை மீண்டும் தாக்க தொடங்கினார்.

“உனக்கு என்மேல தானே கோவம்? எதுக்கு அவனை அடிக்குற? ராமை விடு..” என அவரை தடுக்க முடியாமல் இருக்கும் தன் நிலையை வெறுத்தபடி கத்தினாள் மைதிலி.

“ம்ம்ம்... அதுவும் சரிதான்....” என கட்டையை தூக்கி வீசிவிட்டு தன் நாற்காலியில் வந்து அமர்ந்துக்கொண்டார் விஸ்வநாதன்.

எழுந்துக்கொள்ள முடியாமல் வழியும் ரத்தத்தோடு தரையில் கிடந்தான் ராம். அவனை காண சகிக்காமல் மைதிலி கண்கள் கண்ணீரை சுரந்தன.

விழிநீர் அவள் விழி மறைக்க, “ராம்? எழுந்துக்கோ ராம்? உனக்கு ஒன்னுமில்லை. ராம்? பேசுறது கேக்குது தானே?” என அவனை மயக்க நிலைக்கு போக விடாதபடி அழுகுரலில் கத்தினாள் மைதிலி.

மைதிலியிடம் எப்போதும் இருக்கும் நிமிர்வு போய், முதன்முதலாய் அவள் அழுவதை கண்ட ரிஷிக்கு தன் தந்தை மீது ஆத்திரம் மூண்டது.

“அப்பா.. எதுக்குப்பா இப்படி மிருகத்தனமா நடந்துக்குறீங்க? நீங்க பண்ணது எல்லாம் தெரிஞ்சும் கூட அக்கா உங்களை ஒன்னும் சொல்லல தானே? திருந்திடீங்கன்னு நினைச்சேன்னே? எதுக்குப்பா இப்படி?” என விரக்தியாய் கேட்டான் ரிஷி.

“டேய் வாய மூடிட்டு இருடா...” என லக்ஷ்மி அதட்ட, “எங்களை கொன்னுட்டா நீங்க மாட்டிக்க மாட்டீங்கன்னு நினைச்சுட்டு இருக்கீங்களா?” என்றான் கெளதம்.

“கண்டிப்பா வாய்ப்பு இல்லை... மொத்த சொத்தையும் இவ பேருல எழுதி வச்சுட்டேன்னு ஊருக்கே தெரியும். எனக்கு வேற ஹார்ட் அட்டாக் வந்துருக்கு. உடம்பு முடியாதவன். என்ன மூர்த்தி? ஹஹா....” என சிரித்துவிட்டு, “நடக்கபோற தீவிபத்துல என் புள்ளையும் சேர்ந்து செத்துட்டாங்குறப்போ துக்கத்துல இருக்க என்கிட்ட எவனாது கேள்வி கேப்பான்? இல்லை கேக்கதான் தோணுமா?” என்றார் இலகுவாய்.

“அ..ப்...பா!!!!” என ரிஷி திகைக்க, அவனுக்கு சமமாய் அனைவரும் அவரை பார்த்தனர்.

“எனக்காக தான் எல்லாம்ன்னு சொல்லுவீங்களே அப்பா? இப்போ என்னையே?” என நம்பமாட்டாமல் கேட்டான் ரிஷி.

“கொலை பண்றது என்ன புதுசா எங்களுக்கு? முதல் முறை பண்றப்போ தான் பயம், நடுக்கம் எல்லாம். இப்போ அதெல்லாம் பழகி போச்சு...” என அலட்டிகொள்ளாமல் சொன்னார் லக்ஷ்மி.

“எத்தனை கொலை பண்ணிருப்பீங்க இதுவரை?” என்றான் சந்தோஷ்.

“யாரு அது? நம்ம வீட்டு டிரைவரா?” என கேட்டுக்கொண்டே அவனருகில் வந்தவர், “உன்னை கண்டுபுடிக்க தான்டா எனக்கு ரொம்ப நாள் ஆச்சு... இவகிட்ட நான் ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கு வந்த அன்னைக்கு ப்ராஜெக்ட், அப்பான்னு ஏதோ பேசுனதை நான் கேட்டேன். அப்புறம் தான் தெரிஞ்சுது அவங்க திட்டத்தோட பிள்ளையார்சுழியே நீதான்னு...!” என கேட்டபடி அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் விஸ்வநாதன்.

“ஏங்க... இதோ இவனையும் ரெண்டு போடுங்க நல்லா... உங்க பேச்சுக்கேட்டு நான் ஒரு பத்து நாள் வாய மூடுனேன். என்னை வேலை வாங்கியே இடுப்ப உடைச்சுட்டான்... நாசமா போறவன்...” என அங்கிருந்த கௌதமை காட்டினார் லக்ஷ்மி.

ராம் மெல்ல கண்களை திறக்க, அதற்கெனவே காத்திருந்ததை போல,, “ராம்? ராம்? கேக்குதா ராம்? கண்ணை துறந்துக்கோ ராம்.... நம்ம வெளில போய்டலாம்... எழுந்துக்கோ...” என சுற்றி நடப்பது எதையும் கவனிக்காமல் ராம் மீதே கண் பதித்து அமர்ந்திருந்தாள் மைதிலி.

அவளை பார்த்து ஏளனமாய் சிரித்த விஸ்வநாதன், “விட்டா இவளுக்கு பைத்தியம் பிடிச்சுடும் போல... ஹஹா...!!!” என்றார்.

“ஏன் அப்பா இப்படி இரக்கமே இல்லாம இருக்கீங்க? மனுஷங்களை விட பணம் தான் முக்கியமா?” என்றான் ரிஷி, அவரை அருவெறுப்புடன் பார்த்தபடி.

அவனுக்கு பதில் சொல்ல விடாமல் தன் கேள்வியில் நின்றான் சந்தோஷ். “இதுவரைக்கும் எத்தனை கொலை பண்ணிருகீங்கன்னு கேட்டேனே...!!?” என்றான் விஸ்வநாதனை பார்த்து.

“உன்கிட்ட லிஸ்ட் கொடுக்கனுமா?” என லக்ஷ்மி இடையிட, “விடு லக்ஷ்மி, சாக போறவன் தானே... நம்மலபத்தி முழுசா தெரிஞ்சுகிட்டே சாகட்டும்...” என சொல்லிவிட்டு சந்தோஷிடம் வந்தார்.

“நான் இதுவரைக்கும் ஒரே ஒரு கொலை தான் பண்ணிருக்கேன். அதுவும் ப்ளான் மட்டும் தான். செஞ்சுமுடிச்ச்சதெல்லாம் நம்ம வரதன் தான்..” என சொல்லி வரதன் முகத்தில் பல்பு எரிந்தது.

“என் மச்சான் என்னை பத்தி தெரிஞ்சுகிட்டு, ராம் சொன்னமாறியே வீட்டை விட்டு வெளியில போன்னு சொல்லிட்டான். நான் என்ன செஞ்சேன் தெரியுமா? அவன் வெளியில போன நேரமா பார்த்து லாரி விட்டு ஏத்திட்டேன்... எப்புடி?” என்றார் அவர்.

“ஓ... உங்க லெவல்க்கு நான் பத்து பதினைஞ்சு கொலை பண்ணிருப்பீங்கன்னு நினைச்சேனே...!!!” என உதடு பிதுக்கினான் சந்தோஷ்.

அவன் தங்களை குறைவாய் சொன்னதை தாங்க முடியாமல், “ஏங்க.. முன்னாடி இருந்து நடந்தது எல்லாம் சொல்லுங்க. அப்போதான் நம்ம மேல கொஞ்சம் பயம் வரும் இதுங்களுக்கு... இல்லை வேணாம் வேணாம் நானே சொல்றேன்..!!” என விஸ்வநாதனை நிறுத்திவிட்டு, அவரே ஆரம்பித்தார் லக்ஷ்மி.

“எனக்கும் இவருக்கும் கல்யாணம் ஆகி நாலு வருஷமா குழந்தை இல்லை... சரி எல்லா சொத்தையும் அனுபவிச்சுட்டு ஜம்முனு வாழ்ந்துடலாம்ன்னு நிம்மதியா இருந்தப்போ தான், என் பாசமலர் எங்கிருந்தோ ஒருத்திய கூட்டிட்டு வந்து இதான் உன் அண்ணின்னு சொல்லிட்டாரு... அவருக்கு புள்ளன்னு வந்துட்டா, எங்க கனவெல்லாம் கலைஞ்சுடுமேன்னு அவ உண்டாகாத மாறி கவனமா எல்லாம் செஞ்சேன். ஆனா, அம்புட்டையும் மீறி இதோ இவன் உதிச்சுட்டான்... அதுக்கு பிறகு நான் என்னனவோ செஞ்சும், ஒன்னும் சரிபடல...” என சலிப்பாய் சொன்னார் லக்ஷ்மி.

“நான் விடுவேன்னா? எட்டாம் மாசம் நடக்குறபோ அவ சுகப்ரசவம் ஆகணும்னு வீட்ட சுத்தி தினமும் நடப்பா... அப்போதான் திடீர்னு எனக்குள்ள அந்த எண்ணம் வந்துச்சு... மொட்டை மாடில இருந்து கீழ இறங்கிட்டு இருந்த இவன் அம்மாவ ஒரு எத்து எத்துனேன். உருண்டு விழுந்ததுல செம்ம அடி... புள்ளையோட சாவான்னு பார்த்தா, புள்ளையை பெத்து கொடுத்துட்டு செத்துட்டா... ஹும்ம்...” என அவர் தன் போக்கில் சொல்லிக்கொண்டிருக்க, அதை கேட்டுக்கொண்டிருந்தோர் மனது கனத்து போனது.

‘மிருகத்தை விட ஈன பிறவி..’ என சொல்லிகொண்டது அவர்கள் மனது.

“அண்ணி மேல உயிரா இருந்த அண்ணன், அவ போனதும் கூடவே போயிடுவாருன்னு ஆவலா இருந்தோம்... எல்லாத்தையும் இந்த சனியன் கெடுத்துடுச்சு.. புள்ளையை பார்த்த சந்தோஷத்துல அவரும் பொண்டாட்டி போனதை தாங்கிகிட்டாரு..” என ராமை காட்டி நொடித்து கொண்டார் லக்ஷ்மி.

தன் தாய் சொன்னதை கேட்டு உச்சகட்ட அதிர்ச்சியில் இருந்தான் ரிஷி. ‘இவள் வயிற்றில் ஏன் பிறந்தோம்?’ என தன்னை தானே வெறுத்தான்.

‘பணத்திற்காக எதையும் செய்வார்கள்’ என்பது மைதிலிக்கு இப்போது தெள்ளதெளிவாய் விளங்கியது. இவர்கள் சதியில் இருந்து தப்பிக்கும் வழியை எண்ணியபடி இருந்தாள்.

“ஏதோ சொகுசுக்கு குறைவில்லாம போய்ட்டு இருந்துச்சு வாழ்கை... பத்து வருஷம் ஆகியும் எனக்கு வயித்துல ஒன்னும் தங்காம போக, டாக்டர் கிட்ட காட்டுனதுக்கு எனக்கு இனி புள்ளதங்க வாய்ப்பே இல்லன்னு சொல்லிட்டான்... சரி இதையே சாக்கா வச்சு, அழுது தீத்து பாதி சொத்தை வாங்கிட்டு செட்டில் ஆகிடலாம்ன்னு நினைச்சோம்... ஆனா அதுலயும் மண்ணை அள்ளி போடுறமாறி ஒன்னு நடந்துச்சு...” என அவர் தலையில் கை வைத்துக்கொள்ள,

“ஹும்ம்... ரிஷி பொறந்துட்டானா??” என சந்தோஷ் கேட்க, “ஆமா...” என வெறுப்பாய் சொன்னார் லக்ஷ்மி.

“இந்த உலகத்துலேயே தனக்குள்ள உருவான உயிரை இவ்ளோ வெறுப்பா சொன்ன முதல் அம்மா நீயாதான் இருப்ப.... ச்சீ” என சொல்லிவிட்டு அவர் முகத்தை பார்க்க பிடிக்காமல் திரும்பிக்கொண்டாள் மைதிலி.

“அவன் பொறந்தான்னு தானே சொன்னேன்... எனக்கு பொறந்தான்னு சொன்னேனா?” என கேட்டு அனைவரையும் அதிர வைத்தார் லக்ஷ்மி.

“அ...ம்...மா.....? அம்மா....??” அதற்குமேல் வார்த்தை வரவில்லை ரிஷிக்கு.

“இந்த வீட்டு வேலைக்காரிக்கு பொறந்தவன் தான் இவன். ராம்க்கு இந்த பயலை பார்த்ததுமே பிடிச்சுபோச்சு. எப்பவும் அவனை தூக்கி வச்சுட்டே சுத்துவான். அவனுக்கு பேருகூட ராம் தான் வச்சான் எதுலயோ பார்த்து. ரிஷி பொறந்த ஒரே வருஷத்துல அவன் அம்மா போய் சேர்ந்துட்டா. அவளுக்கு சொந்தம் பந்தம்ன்னு ஒன்னும் இல்லை. எங்காது அனாதை ஆசிரமத்துல இவனை விட்டுருவாருன்னு பார்த்தா, உங்களுக்கு தான் புள்ளை இல்லையே, இவனை சட்டப்படி தத்து எடுத்துகோங்கன்னு ஒரு குண்டை தூக்கி போட்டுட்டான் என் அண்ணன்...” என அவர் சொன்னதுமே அங்கு மயான அமைதி நிலவியது.

ரிஷியால் ‘தான் ஒரு அனாதை’ என்பதை தாங்கி கொள்ளவே இயலவில்லை.

“எல்லாம் இந்த ராமால தான். ரிஷி கூடவே இருக்க்கனும்ன்னு அவன் அழவும் தான் அண்ணன் இந்த முடிவு எடுத்தாரு. கொஞ்ச நாளுல இன்னொரு குண்டையும் தூக்கி போட்டாரு. சொத்துல 70% ராம்க்கும், 30% ரிஷிக்கும் பிரிச்சுட்டேன்னு சொன்னாரு பாரு ஆத்திரம்ன்னா ஆத்திரம்...!! அதுலயும் ரிஷி பங்குக்கு எங்களை கார்டியன்னு போட்டுறுந்தான்...” என அரைகுறை மரியாதையில் புலம்பினார் லக்ஷ்மி.

அதுவரை குறுக்கிடாத விஸ்வநாதன், “சொத்தை நிர்வகிக்க முடிஞ்சுதே தவிர, அனுபவிக்க முடில. அதனால அப்போ அப்போ சின்ன சின்னதா மோசடி பண்ணேன். பெருசா பண்றப்போ தான் மச்சான் கண்டுபிடிச்சுட்டான்... பதினெட்டு வயசானா, ரிஷி கைக்கு அவன் பங்கு போயிடுமேன்னு தான் பாசமா இருக்க மாறி அவனை என் கைக்குள்ளையே வச்சுகிட்டோம். இருந்தாலும் அவன் ரத்தத்துலையே இருக்க விசுவாசம், அவனை ராம்க்கு சாதகமா தான் பண்ண வைக்குது...” என சொல்லிக்கொண்டே அவனை பார்த்தார்.

“நாயை குளிப்பாட்டி நடு வீட்டுல வச்சாலும்..... அது........” என பல்லைகடித்துக்கொண்டே தன் கையில் இருந்த கட்டையால் அவன் இடையில் ஓங்கி அடித்தார் விஸ்வநாதன்.

அடுத்தடுத்த அதிர்ச்சியில் மூளையும் மனமும் மரத்து போயிருந்த ரிஷிக்கு அவர் அடித்த அடியால் எந்த பாதிப்பும் இல்லை, கீழே விழுந்ததை தவிர.

கேட்டுக்கொண்டிருந்த மற்றவர்க்கே அதை கிரகிக்க நேரம் பிடிக்க, பாதிக்க பட்டவனுக்கு உடல் உறுப்புகள் வேலை நிறுத்தம் செய்ததை போல ஆயிற்று.

“ஊரு உலகத்தை பொறுத்த வரை நீ என் புள்ளதாண்டா... இங்க நடக்க போற பையர் அக்சிடென்ட்ல நீயும் செத்துபோய்ட்டன்னு வச்சுக்கோ... ஒருத்தனும் என்னை சந்தேகப்படமாட்டான். உன்னை வளர்த்த இந்த அப்பாக்காக செத்துபோயிடுடா ராஜா...” என ரிஷியிடம் சொல்லிக்கொண்டே அவர் கைநீட்டியதும், தன் பின்னால் வைத்திருந்த கத்தியை மூர்த்தி நீட்ட, தன் கைகுட்டையால் அதை வாங்கிக்கொண்டு அவனிடம் சென்றார் விஸ்வநாதன்.

அடுத்து அவர் செய்யப்போகும் காரியம் விளங்க, அவரிடம் செல்ல திமிறிய சந்தோஷ் மற்றும் கௌதமை செல்ல விடாதபடி பிடித்துக்கொண்டனர் மூர்த்தியும் வரதனும்.

வெறித்தபார்வையோடு அவர் முகத்தையே பார்த்துக்கொண்டு “அப்பா... அப்பா....அப்பா...” என விடாமல் சொல்லிக்கொண்டிருந்த ரிஷியை கண்டு மனது குமுறியது... (அங்கு மனம் கொண்டவர்க்கு மட்டும்)

இறுக்கமாய் தூணோடு சேர்த்து கட்டப்பட்டிருந்த கயிறு சதி செய்ய, எழுந்துகொள்ள முடியாமல் தன் கண்ணெதிரே நடக்கப்போவதை எண்ணி தவித்துகொண்டிருந்தாள் மைதிலி. காதிற்குள் சென்றாலும், உடல் ஒத்துழைக்காமல் சரிந்து கிடந்தான் ராம்.

-தொடரும்...
 
Nice.I'm first.waiting for next episode soon
 
Top