Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

maayam seithaayadi---1

Advertisement

kannammalsridhar

Tamil Novel Writer
The Writers Crew
மாயம் செய்தாயடி......
முழு நாவல்

அத்தியாயம் 1
தஞ்சாவூரின் நெருக்கமான பகுதியில் அமைந் திருந்தது யாமினி ஸ்டுடியோ .கடைக்கு சொந்தக்காரரான ஜெயராம் தனது குடும்பத்தினருடன் தனது ஸ்டுடியோவில்,ஃபேமிலி ஃபோட்டோ எடுக்க வந்திருந்தான்.கடையில் பணிபுரியும் போட்டோகிராபர்கள் ரமேஷ் சுந்தர் இருவரும் பரபரப்பாய் இருந்தார்கள்.
‘’ யாமினி குட்டி ...மாமாவைப் பாருடா ‘’—ரமேஷ்.
‘’ யுவன் கண்ணா ..முறைக்காம பிலீசிங்கா பாரு கண்ணு’’----சுந்தர்.
‘’அண்ணன்.....ஸ்மைல் ப்ளீஸ்’’
‘’டேய்....எனக்கேவா ?....கிட்ட வந்தேன்னா கை கால் இருக்காது..’’ என்று ஜெயராம் எகிற ..
ஜெயராம் மனைவி சிவசங்கரி வாய் திறந்தாள் ..
‘’ஜெயா...மரியாதையா சிரிச்சிடுங்க..ஃபோட்டோ நல்ல வரலைன்னா இன்னொரு நாள் வந்து எடுக்கவேண்டியிருக்கும்...’’ என்று அவள் கணவனை மிரட்ட...
‘’தோ ....சிரிச்சிடறேம்மா ...ஐயோ ,,,கத்தி முனையில சிரிக்க சொல்றானுவளே’’ என்று ஜெயராம் போலியாய் புலம்ப ....மொத்த குடும்பமும் சிரிக்க,,,,சந்தர்ப்பத்திற்க்காக காத்திருந்த ரமேஷ் சரியாய் கிளிக்கி விட்டான்...’’அப்பாடா’’ என்றபடி ஜெயராம்,சிவசங்கரி,பிள்ளைகள் யாமினி,யுவன் நால்வரும் அட்டென்ஷன் பொசிஷனிலிருந்து கலைய ,,,,’’அக்கா ,,,ரிலாக்ஸ்டா உக்காருங்க’’ – என்று நாற்காலிகளை நகர்த்திப் போட்டான் சுந்தர்...
‘’கீழே ..நம்ம சேகர் அண்ணன் இந்நேரம் சுட சுட உளுந்த வடை போடுவான்...வாங்கிட்டு வரேங்க்கா’’என்றான் ரமேஷ்...
‘’டேய்..பசங்களா..உங்களுக்கு ஜில்லுனு ஜிகர்தண்டா ஒகேயா’’
‘’சாக்கலேட்’’
‘’அது உண்டு..கட்டாயம் உண்டு’’
‘’டேய்...என்னையும் கொஞ்சம் கவனிங்கடா’’—என்று ஜெயராம் இடுப்பில் கை வைத்தபடி பாவமாய் சொல்ல...
‘’அண்ணே..நீங்கதான் எப்பவும் கடைக்கு வர்றீங்களே!அக்காதான் கடைப்பக்கம் எட்டியே பார்க்க மாட்டாங்க ....ஏதோ ஃஃபேமிலி போட்டோ எடுக்கணும்கறதுக்காக இன்னிக்கு வந்திருக்காங்க..அதானே...நீங்க பீல் பண்ணாதீங்க...’’
‘’நடத்துங்கடா..நடத்துங்க,,’’என்று சொல்லி விட்டு,மரத்தடுப்பறைக்குள் போய்,கணினி முன்பு அமர்ந்தவாறு ,தனது வேலைகளை பார்க்கத்தொடங்கினான் ஜெயராம்..வெளியே போன சுந்தர்,கையில் சூடான வடை பார்சல் மற்றும் சாக்லேட் உடன் வந்தான்..பேப்பர் தட்டுகளில் வடை சட்னியுடன் பரிமாறப்பட்டு,சிவசங்கரி,பிள்ளைகள்.சுந்தர் ரமேஷ் என எல்லோரும் வெட்டிக்கொண்டிருக்க,,வடையின் வாசம் மூக்கைத் துளைத்து,வாய் திறந்து கூவினான் ஜெயராம்...’’டேய்..சுந்தர் ...வெளங்காதவனே...எங்களுக்கும் வாய் இருக்கு...நாங்களும் வடை சாப்பிடுவோம்’’
‘’ஐயோ! சாரிண்ணே...சாரிண்ணே..கொண்டு வரேன்’’என்றபடி கையில் டிபனுடன் உள்ளே ஓட...உணவை முடித்த யுவன் அப்பாவிடம் ஓடினான்,,’’டாடி,,,என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?’’என்றபடி அருகில் கிடந்த ஸ்டூல் ஒன்றில் அமர்ந்தான்...கணினியில் இருந்து பார்வையை எடுக்காமலே ‘’கிராஃபிக்ஸ் ஒர்க்’’என்று பதில் தந்தான் ஜெயராம்...
‘’சினிமா எடுக்கறீங்களா’’
‘’அப்பிடித்தான் வச்சிக்கயேன்’’
‘’கிளீயராச் சொல்லுங்க டாடி’’
‘’இல்லடா கண்ணா..போன வாரம் திருச்சிக்கு ஒரு கல்யாண ஆர்டருக்காக போயிட்டு வந்தேன்ல..’’
‘’ஆமாமா..நல்லா நினைவிருக்கு...திருச்சியிலேருந்து எனக்கு கூட ரெய்ன் கோட் வாங்கிட்டு வந்தீங்களே’’
‘’ம்..இதெல்லாம் அந்த கல்யாண வீட்டுல எடுத்துட்டு வந்த போட்டோஸ் தான்..கம்ப்யூடெர்ல தெரியுதுல்ல...இது எல்லாத்தையும் ஒரு ஆல்பமாப் போட்டு அவங்களுக்குத் தரணும்,,,அந்த வேலை தான் நடந்திட்டுருக்கு..’’
‘’டாடி..ஸ்டெப் பை ஸ்டேப்பா சொன்னாத்தான் எனக்குப் புரியும்...எடுத்துட்டு வந்த ஃபோட்டோசை என்ன பண்ணுவீங்க?’’
‘’ஓகே..அதையெல்லாம் முதல்ல,,கம்ப்யூட்டர்ல டவுன்லோட் பண்ணிக்குவோம்..அப்புறம்,,,எந்த போட்டோவை எல்லாம் ஆல்பத்துல வைக்கணும்னு பார்ட்டி கிட்ட கேட்டுக்குவோம்..’’
‘’பார்ட்டின்னா யாரு?’’
‘’எங்களுக்கு ஃபோட்டோ வீடியோ எடுக்க ஆர்டர் தந்திருப்பாங்கல்ல,,,,அவங்களைத்தான் பார்ட்டின்னு சொல்றது’’
‘’ஒகே ...நெக்ஸ்ட்’’
‘’கலர் கரக்சன் பார்த்துட்டு ஃபோட்டோ அடுக்கணும்,,,அது என்னன்னு நானே சொல்லிடறேன்..இப்ப ஒரு மேரேஜுன்னு வையி..அதுல,காலையில் இருந்து நைட்டு வரைக்கும் நடந்த பங்க்ஸன்ஸ் ஆர்டர் மாறாம,ஒன் பை ஒண்ணா அடுக்கணும்.’’
‘’டாடி ,அதுக்குப் பேரு கண்டிநியூட்டிதானே ‘’
‘’பார்ரா..என் சிங்கக்குட்டியை ...அதேதான்,,ஆச்சா!அதுக்கப்புறம் ஃபுல்லா கிராபிக்ஸ் ஒர்க்தான்..அதிலதான் எங்க திறமையிருக்கு...அது முடிஞ்சவுடனே, பிரிண்டிங்,பைண்டிங் ஒர்க்தான்..எல்லா,வேலையும் எங்களுக்கு திருப்தியானதும் ,பார்ட்டிகிட்ட டெலிவரி பண்றோம்,,அவ்ளோதான்’’என்று ஜெயராம் பெரு மூச்சு விட,’’இந்த வேலைக்கெல்லாம்,மொத்தமா எவ்ளோ டைம் ஆகும் டாடி?’’’’
‘’சுமாரா டுவென்டி டேஸ் பிடிக்கும்’’
‘’அப்புறம் உங்களுக்கு ஜாலிதான்...பணம் தருவாங்க..இல்ல டாடி’’
‘’ம்‌....சில பேரு ஹாட் கேஷா கையில தந்துடுவாங்க..சில பேரு இன்ஸால்மென்ட்டுல இழுத்தடிப்பாங்க...இதாவது பரவாயில்லை...ஒரு பூக்கடைக்காரர் வீட்டுக்கு ஆல்பம் போட்டோம்..அவரு என்கிட்ட பணமில்ல ..பூ வாங்கி கழிச்சுக்கங்கணுட்டார் ....’’
இதை கேட்டதும் முன்னும் பின்னும் ஆடி கை தட்டி சிரித்தான் யுவன்..
‘’ம்‌....இதெல்லாம் என்னோட போகட்டும்..நீயாவது நல்லாப் படிச்சு ஒரு வேலையில உக்காருன்னா கேக்கறியா?’’
அப்பா அட்வைசை தொடங்கிய நிமிடத்தில்,சர்ரென்று பாய்ந்து வெளியே ஓடினான் யுவன்..
‘’அக்கா,ஃபோட்டோ சுமாரா என்ன சைசுல இருக்கலாம்?’
‘’என் சைசுக்குப் போட்டுரலாம்மா..’’—யுவன்
‘’உன் உயரத்துக்குப் போட்டா ,அதுக்குப் பேரு பேனர்டா என் அறிவு’’—என்று ரமேஷ் கலாய்க்க ....’’அக்கா,,,12 க்கு 18...ஏ3 சைசு ஒண்ணு இருக்கு,,போடுருவோம்..வீட்டுல,மாடிப்படிக்கு மேல ஒரு காலி இடம் இருக்கில்ல...அதைத்தான் எய்ம் பண்றேன்.’’.
‘’ கரெக்ட்..அப்பிடியே பண்ணிடு ...’’என்றாள் சிவசங்கரி….. மேலும் சிறிது நேரம் கதையடித்து விட்டு,ஜெயராம் குடும்பம் வீட்டுக்கு கிளம்ப,ரமேஷ்,சுந்தர் இருவரும் தங்கள் வேலைகளைத் தொடர்ந்தனர்.. ....ஜெயராம் ஹெட்போனில் பாட்டு கேட்டபடியே கார் ஒட்டி வர ,யுவன் படக்கென்று,அப்பாவின் காதிலிருந்த ஹெட்போனைப் பிடுங்கிப் போட்டான்,,
‘’ஏண்டா? ஏன் உனக்கு இப்பிடி ஒரு கொலைவெறி?’’
‘’நோ,,டாடி ,,,கார் ட்ரைவ் பண்றப்ப உங்களுக்கு ரோட்டுலதான் கான்சண்ட்ரேஷன் இருக்கணும்’’
‘’எங்க கூட பேசிக்கிட்டு வரலாம்ல டாடி’’—யாமினி.
‘’எங்களுக்கும் போர் அடிக்கும்லங்க’’—சிவசங்கரி.
‘’ஒரு ஹெட்போனுக்குப்பின்னால இத்தனை கதையா?,,,ஓகே...என்ன பேசனுமோ பேசுங்க..’’
‘எத்தனயோ நாள் கிளம்பி இன்னிக்குத்தான் அதுக்கு நாள் வாய்ச்சிருக்கு’’
‘’ஃபேமிலி ஃபோட்டோ எடுக்கத்தானே....அது வந்து சிவா ,தொடர்ந்து முகூர்த்த மாசமாவே இருந்துச்சா...அதான் ரொம்ப பிஸி,,இப்ப, ஒரு வாரமாத்தான் மூச்சு விட முடியுது,,,அதனாலதான் இன்னிக்கு,பிளான் பண்னினேன்,,ஹேப்பியா?’’
‘’ஸோ ஹேப்பி’’என மூவரும் கை உயர்த்த,,,அந்த சந்தோசத்தில் காரின் ஸ்பீட் கூடியது...’’
‘’ஜெயா,,ப்ளீஸ் ..காரை நிறுத்துங்க’..என்று சிவசங்கரி கத்த...கார் கிறீச்சீட்டு நின்றது..
‘’என்னம்மா?எதுக்கு நிப்பாட்ட சொன்ன?ஷாப்பிங்க்லாம் இப்ப பண்ண முடியாது...எனக்கு பசிக்குது’என்று எரிச்சலுடன் ஜெயா சிடுசிடுக்க,,
‘’ஐயே ...ரொம்பத்தான்,,நானும் இப்ப ஷாப்பிங் பண்ற மூடுல இல்ல,,.அங்க ஒரு லேடி இடுப்புல பிள்ளையை வச்சிக்கிட்டு பஸ்ஸுக்கு வெயிட் பண்ணுது..கார்ல ஏத்திக்கிட்டு போலாம்’’
‘’அவங்க எங்க போகனுமோ?’’
‘’கேட்டுப் பாக்கலாமே,,நம்ம ரூட்டுல இருந்தா இறக்கி விட்டுப்போகலாம்ல’’
‘’சரி! இறங்கு...யுவன் அம்மா கூடப் போயிட்டு வாடா”

என்று ஜெயராம் மனைவி,மகனை அரை மனதுடன் அனுப்பி வைத்தான்...இது புதிது இல்லைதான்,,சிவசங்கரியின் இயல்பு அது.. யாருக்கும் மனம் இறங்குவாள்..உதவி என்று வந்து விட்டால்,உறுதியாக இருப்பாள்....கார் கண்ணாடி வழியாகப் பார்த்தான் ஜெயராம்,,,சிவசங்கரி அந்த பெண்ணையும் அழைத்துக்கொண்டுதான் வந்தாள் ..எல்லோரும் காரி ஏற...
‘’சிவா ..அவங்க எங்க போகனுமாம்?’’
‘’நம்ம தெருவுக்கு பின் தெருதான்,,,அவங்க வீட்டுலயே இறக்கி விட்டுடலாம்,,’’
அந்நிய நபர் இருந்ததால் ,அதன் பின் காருக்குள் அதிகம் பேச்சில்லை..இதுதான் சமயெமென,ஜெயராம் மீண்டும் ஹெட்போனை காதில் மாட்டிக்கொள்ளா,பிள்ளைகள் அப்பாவின் அலைபேசியில் கேம் விளையாட,,சிவசங்கரி அந்த பெண்ணுடன் ஏதோ பேசிக்கொண்டு வந்தாள்...அந்தப் பெண்ணை அவள் வீட்டில் இறக்கி விட்டு, தங்கள் வீட்டை அடைந்தனர் ஜெயராம் அன் கோ..
‘’ஏன் மம்மி.அந்த ஆண்ட்டியை கார்ல ஏத்தினீங்க? நான் டாடிக்கிட்டே சொல்லி எக் நூடுல்ஸ் சாப்பிடலாம்னு இருந்தேன்”..
‘’நான் மஷ்ரூம் சூப் குடிக்கலாம்னு பிளான் பண்ணினேன்:;--யாமினி.
‘’நான் சில்லி பரோட்டா”—ஜெயராம்.
‘’ம்ஹூம்..குடும்பமே ஹோட்டல் சாப்பாட்டுக்கு அலையுது...கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..தோ மம்மி,டிரஸ் மாத்திட்டு,சுட சுட ஆனியன் ரோஸ்ட் ரெடி பண்ணிடறேன்’’ என்றபடி சிவசங்கரி உள்ளே போக,,
‘’வாட் ,,டாடி’’என்று யுவன் சலிக்க..
‘’டேய் கண்ணா,,நமக்கு இன்னிக்கு தோசைதான் அள ந்திருக்கான் அந்த சிவபெருமான்’’
‘’டாடி,,அது அந்த சிவன் இல்ல,,,உங்க ஒய்ஃப் சிவா’’
என்று யாமினி டைமிங் காமெடி அடிக்க,,
‘’பார்ரா..யாமினிக்குட்டியோட கம்பெரிசனை..’’என்று ஜெயராம் மகளின் தலையில் கை வைத்து செல்லமாய் அழுத்த.. யுவன் ஹோவென சிரிக்க,,,சமயலறையில் இருந்து தோசை சுடும் சத்தமும் கூடவே மணமும் வர,,...இல்லறமே நல்லறம்....
 
:D :p :D
உங்களுடைய "மாயம் செய்தாயோங்கிற அழகான அருமையான புதிய லவ்லி நாவலுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
கண்ணம்மாள்ஸ்ரீதர் டியர்
 
Last edited:
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கண்ணம்மாள்ஸ்ரீதர் டியர்
 
Last edited:
Top