Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

maayam seithaayadi--2

Advertisement

kannammalsridhar

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் - 2
தஞ்சாவூர் ராஜப்பா நகரில் தாமரைச்செல்வி வீடு..பெரிதுமில்லாத சிறிதுமில்லாத,மட்டப்பா போட்ட கட்டிடம்...உள்ளே அவசியப் பொருட்கள் மட்டுமே இருந்தன...அவையும் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன...தாமரையின் அப்பா புன்சிரிப்புடன் மாலையிடப்பட்ட ஃபோட்டோ ஃப்ரேமுக்குள் இருந்தார். .வாசலில் துளசி மாடத்திற்கு முன்பாக மாக் கோலமிடப்பட்டு, அதில் அகல் விளக்கு ஏற்றப்பட்டிருந்தது..சிறிய வராண்டாவில் தாமரையின் சிவப்பு கலர் ஸ்கூட்டி நின்றிருந்தது.

...அதையடுத்த சிறிய ஹால் .கூடுதல் அக்கறையுடன் சுத்தம் செய்யப்பட்டு நான்கு பிளாஸ்டிக் நாற்காலிகள் ,ஒரு டீபாய் சகிதம், வருவோரை வரவேற்க,தயாராகவே இருந்தது...படுக்கை அறையின் கதவு சார்த்தப்பட்டிருந்தது..தாமரை படிக்கிறாள் போலும்..அடுத்து ஒரு சின்ன அறை ....அதை ஹால் என்ற கணக்கில் சேர்க்க முடியாது..டைனிங் ரூம் என்ற செட்டப்புக்கும் ஒத்து வராத,ஏறக்குறைய ஸ்டோர் ரூம் மாதிரியான அறை....அதில் ஒரு சிறிய ஸ்டீல் டேபிளில் வெற்றிலை பாக்கு,மஞ்சள் குங்குமம்,பூ,ஆகியவை இருந்தது..அதிலிருந்து சமையலறை வாசல்....ஒருவர் வசதியாய் நின்று சமைக்கும் அளவே இருந்தது

....அடுப்பு மேடை மீது,எண்ணை வடிதட்டில்,வாழைக்காய் பஜ்ஜி சுட்டு அடுக்குவைக்கப்பட்டிருக்க,அடுப்பு முன்னாள் நின்றிருந்த தாமரையின் அம்மா சரஸ்வதி,கொதி வென்னீரை எடுத்து,சுர்ரென்று,காபி ஃபில்டரில் ஊற்றி வைத்து விட்டு,மகளுக்கு குரல் கொடுத்தாள் ..
‘’டீ ....தாமரை.’’
படுக்கை அரை கதவு திறந்தது...வெளிவந்தாள் தாமரை..பெண்களுக்கேற்ற உயரம்...அதற்கெனசிகப்பில் தராசில் அளந்து வைத்தாற்போல அளவான சதை...நிற மென்று பார்த்தால், அவள் சிகப்பில் சேர்த்தியில்லைதான்..ஆனால் கருப்பென்றும் சொல்லிவிட முடியாது...ஒரு அழ்கான கலவை நிறம்....காட்டன் புடவை...ஹைநெக்குடன் நீளக்கை வைத்த ரவிக்கை....காதில் சிறிய ஜிமிக்கி...கழுத்தில் சிறிய செயின் ...ஒரு கையில் அகலமான ஒற்றை வளையல்...மறு கையில் வாட்ச்...இதுதான் தாமரை
...எம்.எஸ்ஸீ ...கெமிஸ்ட்ரி படிக்கிறாள்...மேலும்,அவள் ஒரு பட்டிமன்ற பேச்சாளரும் கூட...அவள் படிக்கும் கல்லூரியின்,தமிழ்துறைப் பேராசிரியர் வளவன்,ஒரு பட்டிமன்ற குழு வைத்திருக்கிறார்...அதில் மட்டும் பேசுவாள் தாமரை....மட்டுமல்ல...குழுவின் நட்சத்திரப் பேச்சாளரும் கூட....தஞ்சை மட்டுமின்றி,திருச்சி,மதுரை,கோவை,கும்பகோணம்,என பட்டிமன்ற குழு. வெளியுர்களுக்கும் செல்லும்...அப்பொழுதெல்லாம் சரசுவும் மகளுடன்,காரில் ஏறிக்கொள்வாள்..மகளுக்கு காவலும் ஆயிற்று...பட்டிமன்றத்தையும் ரசித்துக் கொள்ளலாம் என இரட்டை பலன்களை,எண்ணி கிளம்பி விடுவாள்
...சரஸ்வதியின் கணவர் சுப்ரமணியம் இறந்து ,பத்து வருடங்களாகிறது...தாமரை பள்ளிக்கூட மாணவியாக இருந்த காலத்தில்,ஒரு நாள் நிகழ்வு
...கோர்ட்டில் குமாஸ்தாவாக இருந்த அவள் அப்பா,அன்று அலுவலகம் செல்லவில்லை...ஏனெனில் அன்று அவருக்கு,வயிற்று வலியும் வாந்தியும் இருந்தது...சாதாரண வயிற்றுவலி தானே என்று நினைத்த சரசு, சுக்கு,வெல்லம் இரண்டையும் தட்டி, உருண்டையாய் உருட்டி.கணவனிடம் தந்து,வாய்க்குள்,ஒதுக்கிக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்..
...மதியம் போல,
‘’ஆசுபத்திரிக்குப் போயிட்டு வந்துருவமா சரசு ‘’ என்று கேட்ட மனிதரைப் பார்த்து வியந்து போனால் சரசு...இருக்காதா பின்னே...? ஏனெனில் அவரது இயல்பு அப்படி...மருத்துவமனை வாசம் அறியாதவர்...பிடிக்காதவர்..அதை பெருமையாகவும் தம்பட்டம் அடிக்கத் தவறாதவர்....

‘’சரசு.....இந்த லோகத்துல,எனக்கு நினைவு தெரிஞ்சி ,நான் எனக்காக,எந்த ஆஸ்பத்ரி வாசலையும் மிதிச்சதுமில்ல....மிதிக்கப்போறதுமில்ல...நீ தாமரையைப் பிள்ளையாண்டிருந்தப்போ ,உன்னைய அழைச்சுண்டு போயிருக்கேன்,,,வந்திருக்கேன்,,அப்புறமா,குழந்தையைத் தூக்கிண்டு,சளி,காய்ச்சல்னு அலைஞ்சிருக்கேன்,,,,ஆனா, நேக்கு ஒரு உடல் உபாதைன்னு, நான் யாரண்டையும் போயி,நாக்கை நீட்டிண்டு உக்காரலை..ஏதோ கடவுள் பிராப்தம்,,,’’ என்று அடக்கமாக பெருமை அடித்துக் கொள்வார்.. அதில் உண்மை இல்லாமலில்லை.

.வருமுன் காப்பதே சிறந்தது என்ற கொள்கையுடையவர்...உடலுக்கு,நலமில்லையெனில்,உறக்கமும்,உண்ணாவிரதமும்தான்...லங்கனம் பரம ஔஷதம் என்பது அவரது பாலிசி...

‘’ போதுமே உங்க பீத்தல்....சதா பெருமையடிச்சுண்டு......ஒத்துக்கறேன்..ஆண்டவன் உங்களுக்கு.நல்ல தேக ஆரோக்கியத்தை கொடுத்திருக்கார்...பத்திரமா வச்சிக்குங்கோ......யார் காதுலயாவது விழுந்து திருஷ்டியாயிடப்போறது ‘’என்பாள் சரசு...உண்மையில் திருஷ்டிதான் பட்டுவிட்டது போலும்...இல்லையெனில்,சுப்ரமணியமே இப்படி வலிய கிளம்புவாரா மருத்துவமனைக்கு...

..பதிலேதும் பேசவில்லை சரசு....மனதுக்குள் பயம் சூழ்ந்தது..சடாரென்று எதிர்‌மறை சிந்தனைகள் தலை தூக்கின....உடனே கணவனை மனதுக்குள்ளேயே வாழ்த்தி ஒரு மேல் பதிவு போட்டாள் சரசு....ஏனெனில் மனதின் சக்தி பற்றி அவளுக்கு நன்றாகத் தெரியும்..எண்ணங்களே விதைகள்,,அவைகளே விருட்சங்களாகின்றன என்றறிவாள் சரசு...அறிந்தவர் தெரிந்தவர் எவராயினும்,விதியின் கைகளில்,விளையாட்டுப் பொம்மைதானே
...தனது மனப் போராட்டங்களை,வெளிக்காட்டிக்கொள்ளாமல்,வீட்டைப் பூட்டி விட்டு,கணவனுடன் நடையிறங்கினாள் சரசு...மீண்டும் சுமங்கலியாக அவள் அந்த வீட்டு நடையேறப்போவதில்லை என்றறியாதவளாய், இறங்கி நடந்தாள் சரசு..

..அதே தெருவில்தான் மருத்துவமனை....உள்ளே கூட்டம் அதிகமில்லை...நாற்காலியில் அமர்ந்தார்கள்...கொள்ளைப் பேச்சு பேசும் சுப்ரமணியம், பிடிக்காமலோ அல்லது முடியாமலோ அமைதி காத்தார்..மனைவியின் தோளில் மென்மையாக சாய்ந்து கொண்டார்.
.
.சரசுவும் எதும் பேசாமல் மனதுக்குள்,ஷஷ்டி கவசம் சொன்னாள்....கீழே விழுந்து விடுவோமோ எனப் பயப்படும் குழந்தை,அம்மா என்றுதானே அழைக்கும்,,,,அதற்குள் மருத்துவர் வந்து விட,,சரசு அவரிடம் விபரம் சொன்னாள்...அமைதியாக கேட்டுக் கொண்டவர்,சரசுவைக் கையமர்த்தி விட்டு, சுப்ரமணியத்தை மட்டும் அழைத்துக் கொண்டு, பரிசோதனை அறைக்குள் போனார்,,,..வெளியே எடுத்துக் கொண்டுதான் வந்தார்கள் அவரை.

....காலையில் வீட்டில் வைத்தே அவருக்கு,முதல் அட்டாக் வந்திருக்கிறது....வாந்தியும் வயிற்று வலியும் தான் அறிகுறிகளாக இருந்திருக்கின்றன....மருத்துவமனை பரிசோதனையின் போதே,அடுத்தடுத்து,இரண்டு அட்டா க்குகள் வந்து,நிமிடத்தில் மருத்துவர்களின்,கை மீறிப் போய் விட்டதாம்.

..இத்தனைக்கும்,மெலிந்த தேகம்தான்..பீடி சிகரெட் அறியாதவர்...கூடி கூத்து தெரியாதவர்....என சொல்லி என்ன...எமனிடம் எதிர் வாதமா செய்ய முடியும்....?வாங்கி வந்த வினைப் பதிவுகளைக் கழித்து விட்டால்.அதிகமாக,ஒரு நொடியும்.உடலில் உயிர் தங்காதென சரசு மாமியார் சொல்லுவாள்...அது போல சுப்ரமணியத்திற்கு,,நேரம் வந்து விட்டது...உயிர்க் கடிகாரம் நின்று விட்டது

,,,சரசுவின் நிலை பரிதாபமாய்ப் போனது...கண் மூடித் திறக்கும் நேரத்தில்,கை பொக்கிஷத்தை களவு கொடுத்தவள்,எவ்வளவு துடிப்பாள்....அதிர்ச்சியிலும்,அன்புக் கணவனது,பிரிவுத்துயரிலும்,ஒரு பாடு அழுது தீர்த்தாள் சரசு....அழுதாலும் அரற்றினாலும்,மாண்டவர் மீண்டு வருவதில்லையே.
..இதையெல்லாம் புத்தி உணர்ந்தாலும்,உணர்வுகளில் சிக்கிய மனம்,அவ்வளவு எளிதில் தன்னை அதன் பாதிப்புகளில் இருந்து விடுவித்துக் கொள்வதில்லை...சுதாரித்த சரசு.மகளுக்கும்.மச்சினர் ராகவேந்த்ராவுக்கும் தகவல் சொன்னாள்.

..மகள் அழக்கூடத் தோன்றாமல்,மலங்க மலங்க விழிப்பதைப் பார்த்து மேலும் துவண்டாள் சரசு....ராகவேந்த்ரா தம்பியின் பிரிவைத் தாள மாட்டாமல், சுவரில் முட்டி அழுதார்...தம்பியை பள்ளியில் சேர்த்தவர்,கல்லூரியில் சேர்த்தவர்,கல்யாணம் செய்து வைத்தவர்,இன்று கருமாதியும் செய்து வைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்...யார் இடித்தால் என்ன,,,உடைத்தால் என்ன....காரியக்கார எமன் தான் கடன் தீர்த்துக்கொண்டான்...நடத்தி அழைத்துப்போனவரை,நான்கு பேர் சேர்ந்து எடுத்து வந்து கண்ணீர் சிந்தி காரியங்கள் முடிந்தது....
 
Last edited:
Top