Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

maayam seithaayadi-9

Advertisement

kannammalsridhar

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம்-9
‘’அதோ வாராண்டி வாராண்டி வில்லெந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா....அம்மம்மா ...
ஏதோதோ சொன்னானம்மா..!
நான் உங்கள் பக்கத்தில் வந்தேனென்றால்,
மாதங்கள் பனிரெண்டும் குளிரல்லவா...!
மேகங்கள் இல்லாத வானில்லையே...
நீயின்றி எப்போதும் நானில்லையே’’

ஹாலில் படம் பார்த்துக்கொண்டிருக்க,ஜெயராம்-சிவசங்கரி இருவரும்,அலைபேசியில் தங்களுக்குப் பிடித்த பாடலை தங்கள் படுக்கை அறையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்...

‘’சூப்பர் பாட்டு இல்லங்க’’—சிவசங்கரி...

‘’என்ன சிவா....ஜெயான்னு மரியாதையா கூப்பிடறதை விட்டுட்டு, இதென்ன அசிங்கமா இல்லங்க நொல்லங்கனுட்டு’’ ‘’

‘’ஏதோ ஒரு வேகத்துல வந்துருச்சி.....விடுங்க..’’

‘’சிவா...கும்பகோணம் இண்ஸிடெண்ட்டுக்கு அப்புறம்,யாமினியிடம்,சேஞ்ச் ஒண்ணுமில்லையே...நார்மலாத்தானே இருக்கா’’

‘’ஆமா...அவ சாதாரணமா இருக்கா...எனக்குத்தான் மனசுல உறுத்திக்கிட்டேயிருக்கு....சரியா கவனிக்காம இருந்துட்டாமோன்னு தோணுது’’

‘’அப்பிடியெல்லாம் கில்டியாகத் தேவையில்லை சிவா...கெட்ட நேரம் வரும்போது,அது நம்மைக் கண்ணை மறைச்சிடும்...’’
‘’நீங்கதான இந்த விஷயத்தை எடுத்துப் பேசினீங்க ஜெயா’’

‘’கரெக்ட் தான்...நீ இந்த விஷயத்தை மைண்ட்ல போட்டுக் குழப்பறியோன்னு எனக்கு ஒரு டவுட்டு’’

‘’ப்ச ...உண்மைதான் ஜெயா....கும்பேஸ்வரர் தான் பிள்ளையைக் காப்பாத்தி கையில குடுத்திருக்கார்....’’

‘’ஊர்லெர்ந்து அம்மா ஃபோன் பண்ணினாங்க...சிவா’’

‘’நல்லாருக்காங்களா’’
‘’நல்லா இல்லியாம்’’

‘’என்னாச்சு ஜெயா’’
‘’காய்ச்சலாம்...கை கால் மூட்டு வலியாம்...பக்கத்துல,மாமா வீட்டுலேர்ந்துதான் கஞ்சி,இட்லி வருதாம்’’

‘’டாக்டர்கிட்ட காமிச்சுட்டாங்களா’’
‘’ஆமா..மருந்து மாத்திரை,இருமல் டானிக்லாம் குடுத்து இருக்காங்கலாம்...வர்ற சண்டே அன்னிக்கு அம்மாவைப் போயி பார்த்துட்டு வரலாம்னு இருக்கேன்’’

‘’போயிட்டு வாங்க...உங்கம்மாவுக்கு நீங்க ஒரே புள்ள...நியாயமாப் பார்த்தா,அவங்க நம்ம வீட்டுலதான் இருக்கணும்...அவங்களை கவனிக்க வேண்டிய கடமை இருக்கு நமக்கு..’’

‘’ஆமா...நீ சொல்றது சரிதான்....அப்பா இறந்த பிறகும்.அந்த வீடுதான் எனக்கு வசதின்னு சொல்லிட்டு,வீட்டை விட்டு நகரமாட்டேங்கறாங்க.....என்ன செய்ய...?வீட்டை சுத்தி,மாமா அத்தை ,சித்தின்னு சொந்தக்காரங்க இருக்கறதாலப் பாத்துக்கறாங்க....அதனால ஓரளவு நாம கவலையில்லாம இருக்க முடியுது’’

‘’யார் யாருக்கோ ஏதோதோ,செய்யறோமே,,,,சொந்த மாமி யாரை வீட்டுல வச்சிப் பார்க்கலையேன்னு என் மனசாட்சி என்னை அடிக்கடி கேள்வி கேக்கறது’’

‘’உன் மனசாட்சிக்கு பதில் நான் சொல்றேன்....ஊரு உலகத்தைப் போல,மாமியார் வாடையே ஆகாதுன்னு சொல்ற மருமகளா நீ,...மாமியாரை அம்மா மாதிரி பார்த்துக்க,நீ ரெடியாத்தான் இருக்க...அவங்க இங்க வந்து நம்மளோட இருக்க சம்மதிக்கலேன்னா அதுக்கு நீ என்ன செய்வ?....சிவா வயசானவுங்க பிடிவாதத்தை மாத்த முடியுமா?நினைச்சா நினைச்சதுதான்...நம்ம சொன்னபடி கேக்கணும்ங்கிரதை விட,இப்ப அவங்க மனசுக்கு பிடிச்சபடி வாழ்றதுதான் நல்லது...அதான் நானும் பேசாம இருந்துட்டேன்....’’

‘’ஓகே...ஃபீல் பண்ணாதீங்க..ஞாயித்துக் கிழமைக்குள்ள,அத்தைக்கு,காய்ச்சல் சரியாயிடும்ல....குலோ ப்ஜாமூன் செய்யறேன்....கொண்டுபோங்க’’

‘’எனக்கும் ரொம்பப்பிடிக்கும்’’
‘’ஸ்வீட்டே வேண்டாம்பீங்க’’
‘’நான் இந்த குளோப்ஜாமூனை சொன்னேன்...’’ என்று ஜெயராம் மனைவியின் கன்னத்தை தடவ..
‘’கதவு தொறந்திருக்கு’’ என்று கண் ஜாடை காட்டினாள்....

‘’கதவைப் பூட்டிட்டு வாங்கன்னு சொல்றியா’’
‘’ம்ம....கையை காலை வச்சிக்கிட்டு ஒழுங்கா இருன்னு சொல்றேன்’’ என்று சிரித்தாள் சிவசங்கரி..
‘’வாய்தான் போ போங்குது...கண்ணு வா வான்னுல சொல்லுது’’

கணவனது சொல் நயத்தில் மயங்கி சிவசங்கரி தன்னை மறந்து கால கலவென சிரிக்க,...இது போதாதா ஒரு கணவனுக்கு...கதவு வேகமாகத் தாளிடப்பட்டது...

ஜெயராம் வீட்டின் மற்றொரு மங்கல விடியல்...மந்தமாக விடிந்த பொழுது,சுசுறுப்பாக இயங்கத் துவங்கி,பரபரப்பாக ஓடியது ..சிவசங்கரி ஹாலுக்கும் சமையலறைக்கும் இடையே,ரன் எடுத்துக் கொண்டிருந்தாள்....அன்று,புதினா ரைஸ் ,தயிர் சாதம்,உருளைக்கிழங்கு பொரியல்.,நெல்லி ஊறுகாய்,அப்பளம்,வெள்ளரி சாலட்,பப்பாளிப்பழம்....அத்தனையையும் பிள்ளைகளுக்கு டப்பாவில் அடைத்தாள்.

..காலையில் டிபன்,முருங்கைக்கீரை அடை...அதுவும் ஒரு அடுப்பில் தயாராகிக் கொண்டிருந்தது...பிள்ளைகளுக்கு பால் கொடுப்பதற்க்காக,இரண்டு கிளாஸ்களை எடுத்தவள்,ஒன்றைப் போட்டு உடைத்தாள்...அதை அள்ளுகிறேன் பேர்வழி என்று கையையும் கீறிக் கொண்டாள்......ஜெயராம் முதல் உதவி பெட்டியை எடுத்து வந்து,பிளாஸ்திரி போட்டு விட்டான்...

‘’ஏன் சிவா...இப்டி தனியா கிடந்து கஷ்டப்படறே....சமையல் உதவிக்கு ஒரு ஆளைப்போட்டுக்கோன்னு எவ்வளவு நாளா சொல்லிக்கிட்டு இருக்கேன்...’’ என்று பரிவுடன் மனைவியைக் கடிந்து கொண்டான் ஜெயராம்...

‘’அவசியமில்லா ஜெயா...!இன்னிக்கு என்னாச்சுன்னா,யாமினிக்கு தலை வாரி விட்டுட்டு,அதே எண்ணெய் கையால கிளாசை எடுத்தேனா ...கை தவறி வழுக்கிட்டுது’’

‘’சரிதான்....எனக்கும் புரியுது....பசங்களையும் கவனிக்க வேண்டியிருக்கு....அதோட கிச்சன் வேலையும் சேர்ந்துடுதுல்ல....அதான் ஒரு ஹெல்ப் எடுத்துகிட்ட்டா ஈஸியா இருக்குமேன்னு சொல்றேன்’’
‘’எதுக்கு?....தோ...பத்து மணி ஆனா,வீடு ஓ ன்னு ஆயிடப் போறது....அப்புறம் சாயங்காலம் அஞ்சு மணி வரைக்கும் ப்ரீ தான்....காலையில கொஞ்ச நேரம் டென்சனா யிருக்கும்...அதுக்கென்ன செய்யிறது....’’

‘’சரி....சொன்னா கேக்க மாட்ட..நான் இப்பா ஏதாவது ஹெல்ப் பண்ணனுமா?’’
‘’அடை சுட்டாச்சு....சாப்டுங்க...அதுவே பெரிய உதவிதான்’’ என்று எழுந்து அடுப்பு முன்னால் போய் நின்று கொண்டாள்..
..பெண்களின் குணமே இதுதான்...விருப்பப்பட்டு பரபரப்பாய் இருப்பவர்கள்...ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்தவனாய்,இரண்டு அடை தோசைகளை உள்ளே தள்ளி விட்டு,காரை கிளப்பினான்.
.
..இன்று மாலை ,கடையில் கும்பகோணத்து விளக்கை ஏற்றுவதாகத்திட்டம்...வடை,பாயாசம் சகிதம் மாலையில் கடைக்கு வருவதாகச் சொல்லியிருக்கிறாள் சிவசங்கரி....அக்கம் பக்கம் உள்ள கடைக்காரர்களை விளக்கேற்றும் நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டுமெனவும்,வந்தவர்களுக்கு கொடுத்தனுப்ப,தேங்காய்,பழம்,வெற்றிலை,பாக்கு வாங்கி வைக்க வேண்டுமெனவும் ஜெயராமுக்கு மனையாள் உத்தரவு...மீற முடியுமா..
.மாலையில் ரமேஷை கடைக்கு அனுப்பி பொருட்களை வாங்கி வைக்க வேண்டுமென எண்ணியவாறு,காரை நிறுத்தி விட்டு கடைக்குள் நுழைந்தான்...பிள்ளையார் படத்திற்க்கு பூ போட்டு வணங்கி விட்டு,தனது இருக்கையில் அமர்ந்தான்....

‘’இந்தாங்கண்ணே....இந்த ஆல்பத்துக்கு பி‌ல் போட்டுருங்க’’ என்றான் சுந்தர்...
‘’அண்ணே...எதுத்தாப்புல இருக்கற கேர்ள் ஸ்கூல்ல,ஏதோ பங்க்ஷனாம்...போட்டோ எடுக்கக் கூப்பிட்டாங்க’’
‘’ச்சரி....என்னிக்கு’’
‘’இன்னிக்குத்தான்...’’
‘’அண்ணே....காலையில இருந்து இதுக்குன்னே மேக்கப்லாம் பண்ணிக்கிட்டு காத்துக்கிட்டு இருக்கான் ரமேஸ்‌...நீங்க வந்ததும் சொல்லிட்டுப் போலாம்னு’’
சிரித்தான் ஜெயராம்....
‘’ஓ...அதான் பவுடர் சென்ட் லாம் மணக்கோ.....சரி...போயி போட்டோவை மட்டும் எடுத்துக்கிட்டு,பத்திரமா வா...கடைக்கு ஆள் வேணும்’’
‘’போங்கண்ணே’’ என்றவாறு கைக்காமிராவுடன்,ரமேஷ் வெளியேற.....பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்க இருவர் வந்தனர்,
,,,சுந்தர் எடுத்துக் கொடுக்க,பத்து காபியை கட்டரில் வெட்டி,கவரில் போட்டு தந்தான் ஜெயராம்...

‘’அண்ணே...பருப்பு கடைக்காரர் வந்தாரு’’
‘’என்னவாம்’’

‘’ரெண்டாவது பொண்ணுக்கு கல்யாணமாம்...வீடியோ வேண்டாமாம்..போட்டோ மட்டும் எடுத்துத் தரனுமாம்...’’
‘’போட்டோ எடுக்கரதா பெரிசு...மூத்த பொண்ணு கல்யாணத்துக்கு,வீடியோ ,போட்டோ, எல்லாம் நாமதான் எடுத்தோம்....டி‌வி‌டி,போட்டோ காலேண்டர் எல்லாம் போட்டுக் குடுத்தோம்...மனுஷன் பாதி காசுதான் குடுத்து இருக்காரு,...இன்னும் முழுசா பைசல் பண்ணலையே....இந்தா தாரேன்,அந்தா தாரேன்னு இழுத்துகிட்டுல்ல இருக்காரு’’என்று ஜெயராம் கடுப்படிக்க,

‘’தெரியும்னே...நீங்க என்கிட்ட ஏற்கெனவே சொல்லியிருக்கீங்க...அதான்,அண்ணன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு ஆர்டர் புக் பண்றேன்னு சொல்லி அவரை அனுப்பிட்டேன்’’ என்றான் சுந்தர் உஷாராக....

‘’சமர்த்து...அவரு வந்தார்னா,டேட் இல்ல...வெளியூர் கல்யாணத்துக்கு போறோம்னு சொல்லிடு...அவன் கிட்டேயெல்லாம் நம்மால தொங்கிக்கிட்டு இருக்க முடியாது’’
என்ன செய்வது....மெண் மனசுக்காரர்களையும்,வன் மனசுக்காரர்களாக மாற்றி விடுகிறார்கள் சிலர்..ஒரு பிறந்த நாள் ஆர்டர் வந்தது...அதை புக் செய்து கொண்டிருந்த பொது,ஜெயராமை சுந்தர் கூப்பிட்டான்...

‘’அண்ணே!இன்ஸ்பெக்டர் லைன்ல இருக்காரு...’’

‘’என்னன்னு நீயே வெவரம் கேளேன்...ஏதாவது போட்டோ நெகட்டிவ்,இல்லன்னா பிரிண்ட் கேப்பாங்க’’
‘’இல்லண்ணே....பெர்சனலாம்’’

புருவத்தை சுருக்கியவாறு எழுந்து போய் லேண்ட் லைன் ரிஸீவரை எடுத்தான்...ஜெயராம்




v
 
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கண்ணம்மாள்ஸ்ரீதர் டியர்
 
Last edited:
அச்சோ
போலீஸ் இன்ஸ்பெக்டர் எதுக்கு ஜெயராம்மை கூப்பிடுறாரு?
என்ன பெர்சனல்?
என்ன வில்லங்கம் வரப் போகுதோ?
அடுத்த லவ்லி அப்டேட் சீக்கிரமா கொடுங்க, கண்ணம்மாள் டியர்
 
பருப்புக் கடைக்காரர் இப்படி பணம் கொடுக்காமல் ஜெயராமை ஏமாத்தக் கூடாதுப்பா
 
Top