Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

maayam seithaayadi.......intro

Advertisement

kannammalsridhar

Tamil Novel Writer
The Writers Crew
மாயம் செய்தாயாடி.....
கதை பற்றி .......
பொதுவாகவே கதைகளில் கதாபாத்திரங்கள் வேண்டுமானால் கற்பனையாக இருக்கலாம்..ஆனால் கதைக்களம் என்பது ,நம்மைச் சுற்றியுள்ள சமூகத்திலிருந்தே பெறப்படுகிறது...ஏனெனில்.அவைதான் ஏதோ ஒரு ரூபத்தில் நமது எண்ணம் சொல் செயலில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன,,,, சமகால சமூகத்தைக் கருத்தில் கொண்டு,அதன் பிரச்சினைகளை அலசுவதுதான்,ஒரு படைப்பாளியின் கடமையும் கூட...அந்த வகையில் இக்கதையின் நாயகி தாமரை ஒரு பட்டிமன்ற பேச்சாளர்...அவள் அம்மா சரசு...கணவனை இழந்தவள்...மச்சினர் ராகவேந்த்ரா குடும்ப ஆதரவில் ,மகளுடன் வாழ்ந்து வருகிறாள்...ராகவேந்த்ராவிற்க்கு விஜயா என்ற மனைவியும்,ஹரிஹரன்,நந்தினி என்ற இரு பிள்ளைகளும் உண்டு...சகோதரிகள் தாமரை நந்தினி இருவரும் பாசபறவைகள்தான்...
ஆனால் பருவ வயது அவர்களை அப்படியே இருக்க விட்டு விடுமா என்ன...மற்றொரு குடும்பம் ஜெயராம்-சிவசங்கரியினுடையது....அவர்களுக்கு,ஆஸ்திக்கொரு ஆணும்,ஆசைக்கொரு பெண்ணுமாய் இரு குழந்தைகள்...ஜெயராம் சொந்தமாய் ஸ்டுடியோ வைத்திருக்கிறான்...சிவசங்கரி ஒரு பரோபகார பதிவிரதை....வயிறு நிறைந்தவனுக்கு உலகமே அழகாய்தெரியுமென எங்கோ படித்தாளாம்..ஆகையால்,பார்த்தவர்,பசித்தவர்க்கெல்லாம், உண வோ, உதவியோ யோசிக்காமல் செய்வாள்...ஜெயராம் மனைவி போன்ற இயல்பிணன் அல்ல...ஆனால் மனைவியை தடுத்து நிறுத்துபவனுமல்ல....அவளை அவள் போக்கில் செயல்பட அனுமதித் ருப்பவன்...ஆகவே குடும்ப வண்டி குடை சாயாமல் ஓடுகிறது...
இரு குடும்பங்களும் எந்த புள்ளியில் இணைகிறார்கள்....?தாமரை நந்தினி இருவர் திருமணங்கள் என்னவாயிற்று..? காட்சிப்படுத்தல் மட்டுமின்றி.வசனங்களிலும் கவனம் செலுத்தி ரசித்தபடி கதையில் என்னுடன் பயணிக்குமாறு அழைக்கிறேன்.....
அன்புடன்
கண்ணம்மாள் ஸ்ரீதர் ...​
 
Top