Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MALARE MOUNAMAA? - 14

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம்: 14
இரயில்நிலையத்தின் அருகில் இருந்த ஒரு பிரபல மருத்துவமனையின் தனி அறையில் அனுமதிக்கப்பட்டிருந்தான் சமர்த்..

அருகில் சமீரா அவனையேப் பார்த்திருந்தபடி அமர்ந்திருந்தாள். அவளின் கண்களிலோ அவன் மீதான அளவில்லா காதல்...

அவனுக்கு பின்னந்தலையில் அடிபட்டிருந்ததால் சிறு அறுவைச்சிகிச்சை நடந்திருந்தது. அவனுடைய வண்டி அவனின் காலில் விழுந்ததால் காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. அதற்கும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

அறுவைசிகிச்சை முடிந்து அவனை அப்பொழுதுதான் தனி அறைக்குள் மாற்றியிருந்தனர் மருத்துவர்கள்.

சமீராவுடன் பயணம் செய்த வண்டியில் இருந்து கீழே விழுந்த சமர்த், சமீராவிற்கு அடிபடாதவாறு பார்த்துக்கொண்டான்..

அவள் இடையில் ஏற்கனவே இருந்த கையினால், அவளை அப்படியே தூக்கியவாறே வண்டியில் இருந்து விழுந்தான். சமர்த் கீழிருக்க, சமீரா அவன் மேல் விழுந்து இருந்தாள்.
சமீரா வேறு எந்தப்பக்கமும் விழுந்துவிடக் கூடாது என்று நினைத்திருந்த சமர்த், அவளை இறுக்க அணைத்துப் பிடித்திருந்தான். அதனால் சில சிறு சிறு சிராய்ப்புகள் தவிர வேறு எந்த அடியும் அவளுக்கு படவில்லை.

சமீரா ஒரு வயது குழந்தையாக இருந்த போது நடந்த பேருந்து விபத்தின் போது, குழந்தை மீராவுக்கு அடிபடாதவாறு தாய் பவித்ரா பார்த்துக்கொண்டாள். அந்த சம்பவம் சமீராவின் நினைவில் இருக்கும் என்று சொல்வது சிறிதளவும் நியாயமில்லை. அதைப்பற்றி அவளுக்கு புரிந்திருக்கவும் வாய்ப்பில்லை.

ஆனால் இப்பொழுது சமர்த், அவளுக்கு அடிபடாதவாறு தாங்கிபிடித்து அவளைக் காத்தது சமீராவிற்கு நன்றாக புரிந்தது. அந்த அணைப்பில் தாயின் கதகதப்பையும் நன்றாகவே உணர்ந்தாள்.

அதிலும் அவன் கீழே விழுந்ததும் அவளுக்கு ஏதும் அடிப்பட்டிருக்கிறதா என்று அவளை ஆராய்ந்துப் பார்த்து விட்டு மயங்கியது, அவளின் கண்களில் நீரை வரவழைத்தது..
அவன் மயங்கியவுடன் சிறிது நேரம் அவனின் தலையை அவளின் மடியில் சாய்த்து வைத்து, அவனின் அடர்ந்த சிகையில் கைகளை நுழைத்து கோதிக் கொடுத்தாள். நெற்றியில் கைவைத்து அவனின் புருவங்களை நீவி விட்டாள்.

சில வருடங்களாக அவனுடனே மனதளவில் பேசியே வாழ்க்கையை கழித்தவள் அவள்.. இன்று அவனின் அருகாமை, அவளின் மனதிற்கு மிகவும் இதமாக இருந்தது. அதனால் சமர்த்தை ரசித்துப் பார்த்திருந்தாள்.

அவன் மயங்கியிருப்பது எல்லாம் அவளின் மனதிற்கு புரிபடவேயில்லை.. அவனுக்கு உடனே மருத்துவ உதவி தேவை என்பதையும் அவள் புரிந்துக்கொள்ளவில்லை.
அவன் நெற்றியை தடவிக்கொடுத்த சமீராவின் கைகள் மேலும், அவனின் நாசி, உதடு, கன்னம் என்று முன்னேறின.

சிலபல நிமிடங்கள் சமீராவின் தடவல்கள் தொடர்ந்தன.. சில நிமிடங்கள் கழித்து சமீராவின் தொடை ஈரத்தை உணர்ந்ததால் சமீரா நடப்புக்கு திரும்பினாள்.

அந்த ஈரம் சமர்த்தின் தலையில் இருந்து வந்த உதிரம் என்பதை அறிந்து, அவனின் கைபேசியை எடுத்து ஆம்புலன்ஸ் சர்விஸுக்கு அழைத்தாள். பின் காவல் நிலையத்திற்கும் அழைத்து தகவல் சொல்லி விட்டு, ஆம்புலன்ஸ் வரவிற்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.

அதுவரை அவளின் மடியிலேயே அவனை வைத்திருந்து, மேலும் உதிரம் வெளியேறிவிடாதவாறு அழுத்தி பிடிக்க முனைந்தாள். அதில் அவளுக்கு தோல்வியே கிட்டியதால் அவனின் தலையை தூக்கிப் பிடித்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.

இவர்களின் வண்டி சென்றுக்கொண்டிருந்த அதே (அதி)வேகத்திலேயே கீழே விழுந்ததால் அதில் இருந்தவர்கள் உயிர் பிழைப்பது அரிது என்று, அவர்களை துரத்தி வந்த வேனில் இருந்தவர்கள், அவர்களாகவே முடிவு செய்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றனர்.

அந்த வண்டியின் அருகே சென்றுப் பார்க்க கூட வேனில் உள்ளவர்கள் முனையவில்லை.. உயிரை எடுக்க வந்தவர்களிடமிருந்து ‘உதவி’ என்ற செயல் கிடைக்கும் என்று சமீராவும் எதிர்பார்க்கவில்லை.

வார நாளாக இருந்ததால் அந்தப் பகுதியிலும் சில வாகனங்களே சென்றுக்கொண்டிருந்தது. அதுவும் இவர்களின் வண்டி கீழே விழுந்த போது அந்த ஆம்னிவேன் தவிர வேறு போக்குவரத்து வாகனங்கள் எதுவுமே செல்லவில்லை.

அந்த தனிமை சமீராவிற்கு மிகவும் வசதியாய் இருந்தது. சமர்த்தை ஆம்புலன்ஸ் வரும் வரை மடியிலேயே வைத்திருந்தாள்.

சிலபல நிமிடங்கள் காத்திருப்பிற்கு பிறகு வந்த ஆம்புலன்சில் சமர்த்துடன் அவளும் ஏறிக்கொண்டாள்.

சில முதலுதவிகள் சமர்த்திற்கு ஆம்புலன்சிலேயே செய்யப்பட்டு, பின் மருத்துவமனையில் அறுவைசிகிச்சையும் செய்யப்பட்டது.
அதுவரை சமீராவும் மருத்துவமனையிலேயே இருந்தாள்.

சமர்த்தின் அலைபேசிக்கு கோவிந்த் தொடர்புக்கொள்ளும் வரை தன்னை சமர்த்தின் துணையாகவே நினைத்திருந்தாள் சமீரா.

கோவிந்தின் அழைப்பில் சமீரா தன்னுணர்வுக்கு மீண்டாள், கூடவே அவளுடைய நிமிர்வும் மீண்டது.

கோவிந்தின் அழைப்பை ஏற்க முதலில் அவள் மனது இடம் அளிக்கவில்லை.. சமர்த்தின் அலைபேசியில் ஒளிர்ந்த கோவிந்தின் புகைப்படத்தையே சில நொடிகள் வெறித்திருந்து விட்டு, கடைசி வினாடியில் அதை எடுத்து காதுக்குக் கொடுத்தாள் சமீரா..

“ஆத்துக்கு போயிட்டியா டா சமீர்? நேக்கு ஆபீஸ்லேர்ந்து கால் வந்துடுத்து.. அதான் நோக்கு லேட்டா கால் பண்றேன்.. “ என்று சமீரா பேசுவதற்கு இடமளிக்காமலே தொடர்ந்து ஏதேதோ பேசிக்கொண்டிருந்தான் கோவிந்த்.

சற்று நேரத்திலேயே பொறுமையிழந்த சமீரா, “ஹ..ல்.லோ..ஓஓஓ..!!!” என்று சத்தமாக பல்லைக்கடித்தாள்..

சமர்த்தின் எண்ணிலிருந்து ஒரு பெண்ணின் குரலை சற்றும் எதிர்பார்த்திராத கோவிந்த், “ஹே..!! யார் பேசறது..?” என்று கேட்டான் வேகமாக..

“திஸ் இஸ் சமீரா..!!”
 
கோவிந்தின் காதுகளில் ‘திஸ் இஸ் மீரா’ என்றே விழுந்தது.. இரயிலின் சப்தத்தில் அவனுக்கு ‘சமீரா’ என்பது’ மீரா’ என்றே கேட்டது..

“மீ..ரா..!! யூ..!! இஸ் எவரிதிங் ஆல்ரைட்? வேர் இஸ் சமர்த்?”

சமீராவோ எதுவுமே பேசாமல் “கலெக்டருக்கு அக்சிடன்ட்.. சின்ன சர்ஜரி.. நவ் ஹி இஸ் ஓகே.. கான்ஷியஸ் இன்னும் வரலை..” என்று தந்தி பாஷையில் சொன்ன சமீரா, மருத்துவமனையின் பெயரை சொல்லி சீக்கிரம் அங்கே வருமாறு பணித்தாள்.

அவளிடம் எப்படி நடந்தது என்று கேட்டுக்கொண்டான் கோவிந்த். சமீராவும் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினாள்.. அவள் குரலில் சமர்த் மீதான எந்த உணர்ச்சிகளையும் கோவிந்திடம் காட்டாமலே பேசினாள்.

அதுவரை சமீரா சொல்வதையே கேட்டிருந்த கோவிந்த், “பெருமாளே..!!” என்று சொல்லி, சில நொடிகள் அமைதியாக மனதினுள் சமர்த்திற்காக வேண்டியபடியே, சமீராவுடன் பேசுவதை தொடர்ந்தான்.

“மீரா..! நெக்ஸ்ட் ஸ்டேஷன்ல இறங்கி அங்க வந்துவிடுவேன்.. ப்ளீஸ் அதுவரை அங்கே இருக்க முடியுமா? அவனை தனியா விட்டுட்டு போய்டாதே..!! ப்ளீஸ் மா..!!

நெக்ஸ்ட் ஸ்டேஷன் இன்னும் ஒன் அவர்ல வந்துடும்.. நான் ஹாஸ்பிட்டல் வர எப்படியும் டூ அவர்ஸ் ஆகிடும், அதுவரை நீ அங்க இருக்க முடியுமா?” என்று கோவிந்த் இறைஞ்சினான்.

‘கரும்பு தின்னக் கூலி தேவையா, என்ன?’ என்று மனதினுள் நினைத்து சந்தோஷித்தவள், அதை வெளியே காட்டாதவாறு, “ஓகே.. ஐ வில் டேக் கேர் ஆப் ஹிம்..!! பட் குவிக்கா வரப் பாருங்க மிஸ்டர்..!! என்றாள் கெத்தாக.

“சரி..சரி மீரா..!! டென் ஆர் பிப்டீன் மினிட்ஸ் லேட் ஆனாலும் நான் அங்க வரவரைக்கும் அவனைப் பார்த்துக்கோங்க.. ப்ளீஸ்..!! என்று சொல்லிய கோவிந்த், சமீராவின் பதிலுக்காக காத்திருக்காமல் அலைபேசியை அணைத்தான்.

அடுத்த அரைமணிநேரத்தில் சமர்த்தும் தனியறைக்கு மாற்றப்பட்டான். அது சமீராவிற்கு இன்னும் வசதியாய் ஆனது. அவனையேப் பார்த்தபடி அருகிலேயே அமர்ந்தாள்.

அறையின் கதவைத் திறந்து வந்த செவிலியைப் பெண்ணை பார்த்த சமீரா, ‘என்ன’ என்பது போல் அவரைப் பார்த்தாள்.

“பேசன்ட் இன்னும் ஒரு ஒன் அவர்ல கண் முழிச்சுடுவாங்க..!! ஒன் அவர் கழிச்சு நான் வரேன்.. வாங்க உங்க காயத்துக்கு மருந்து போட்டு விடுகிறேன்..” என்றார் அந்த செவிலியர்.

“ம்ம் இதோ வரேன் நீங்கப் போங்க..!!” என்றாள் சமீரா இன்முகத்துடன்.

செவிலியர் சென்றதும், சமர்த்தின் அருகில் வந்து நின்று மீண்டும் அவன் முகத்தை லேசாக வருடிக்கொடுத்துவிட்டு செவிலியரைப் பார்க்க சென்றாள்.
அவள் காயங்களுக்கு மருந்திட்டதும் சமர்த் இருந்த அறைக்குள் சென்று அமர்ந்தாள்.

சிலநொடிகளில் சமர்த்தின் அலைபேசி அடித்தது. அதில் ‘மாமி’ என்ற பெயரில் ஒரு முதிர்ந்த பெண்ணின் புகைப்படம் ஒளிர்ந்தது. அது அவளின் பெரியம்மா ‘சுமித்ரா’ என்பது அவளுக்கு தெரிந்திருக்கவில்லை..

அந்தப் பெண்ணின் கண்களில் ஏதோ ஒருவித சொந்தத்தை உணர்ந்த சமீரா, லேசாக அதிர்ந்தபடி அலைபேசியை எடுத்து பேச ஆரம்பித்தாள்.

“ஹலோ..!!”

“அம்மாடி மீரா..!! ரொம்ப நன்றிம்மா.. எங்க ஆத்து பையனை காப்பாத்தி கொடுத்துட்ட..!! கொழந்த நீ நன்னா இருப்பேடா..” என்று எடுத்தவுடனேயே நன்றி கூற ஆரம்பித்தார் சுமித்ரா.

சமீரா ‘மாமி’ யை (சுமித்ராவை) சமர்த்தின் அம்மா என்று நினைத்தவள், “மேடம்..!! கலெக்டர் சார ரூம்க்கு மாத்திட்டாங்க.. இன்னும் கொஞ்ச நேரத்திலே மயக்கமும் தெளிந்து விடும்ன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க..!! எனக்கு உதவ வந்ததால் தான், அவருக்கு இந்த அக்சிடன்டே நடந்தது.. அதுக்கு என்னை திட்டாம நன்றி சொல்றீங்களே மேடம்? திட்டாம இருந்ததுக்கு நான் முதல்ல உங்களுக்கு நன்றி சொல்லிக்கறேன்..!! கூடவே என்னால உங்க பையனுக்கு நடந்ததற்கும் மன்னிப்பும் கேட்டுக்கறேன் மேடம்..!!” என்றாள் சமீரா.

“இதுல வோன்(உன்) தப்பு ஏதுமில்லைடிம்மா மீரா.. அந்த நேரத்தில நோக்கு அவன் உதவலைன்னா தான் தப்பா இருந்திருக்கும்.. அதனால இப்போ என்ன பண்றே, என்னோட நன்றியை மட்டும் வாங்கிண்டுடு..” என்று கலகலத்தாள் சுமித்ரா.

சமீராவின் முகத்திலும் லேசாக புன்னகை எட்டிப் பார்த்தது.

“நன்றி மேடம்..”

“மேடம் எல்லாம் வேண்டாம்மா.. நான் ஒண்ணும் கலெக்டர் சார் அம்மா இல்லை..!! கோவிந்த்தோட அம்மா தான் நான்..!! நீயும் என்னை அம்மான்னே கூப்பிடுடா மீரா..! நான் அங்க கிளம்பி வந்துண்டே இருக்கேன்.. நாளைக்கு வந்து உன்னைப் பார்க்கிறேன்.. போனை இப்போ வச்சிடறேன் மீராம்மா..!!” என்று வேகமாக பேசிவிட்டு வைத்தார் சுமித்ரா.

தங்கை பவித்ராவின் ஜாடையில் இருக்கும் சமீராவை சுமித்ராவினால் எளிதாக அடையாளம் கண்டுபிடிக்க முடிந்திருக்கும், அவள் மீராவாக இருந்திருந்தால்.
ஆனால், முன் நெற்றியை மறைக்கும் அளவிற்கு முடியை பாய் கட் செய்திருந்தவள், எந்தவித அணிகலனும் அணியாமல், பேன்ட்- ஷர்ட் என்ற கோலத்தில் இருந்தவளின் கண்கள் கூட சிறிதாக தான் தெரிந்தது..

இந்த சமீராவை, ‘மீரா’ வாக அடையாளம் கண்டுக்கொள்வது சுமித்ராவிற்கு சற்று கடினமாகவே இருக்கும் என்பதே உண்மை..

இரண்டரை மணிநேரத்திற்கு பிறகு கோவிந்த் மிகுந்த களைப்புடன் வந்து சேர்ந்தான். சமர்த் பற்றி செவிலியரிடம் கேட்டு அறிந்துக்கொண்டு சமர்த்தின் அறைக்குள் சென்றான்.

அங்கே, நாற்காலியில் அமர்ந்தபடி இருந்த சமீரா, சமர்த் படுத்திருந்த கட்டிலிலேயே தலையை வைத்து, அவனின் ஒரு கையின் மேல் அவளின் கையை அழுந்தப் பற்றிக்கொண்டு உறங்கியிருந்தாள்..

சமர்த்தின் மறுகரம் அவளின் கையின் மேல் இருந்தது.. அவனும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.

செவிலியர் சொன்ன ஒருமணி நேரத்திலேயே சமர்த்திற்கு விழிப்பு தட்டியது.. ஆனால் அதற்குள்ளாகவே சமீரா உறங்கியிருந்தாள் சமர்த்தின் கையைப் பற்றிக்கொண்டு.

அவளுக்கு அளித்திருந்த வலி நிவாரணியின் உதவியால் சீக்கிரமே உறங்கியிருந்த சமீராவை எழுப்ப மனம் இல்லாமல் சமர்த்தை மட்டும் பரிசோதித்துவிட்டு சென்றார் செவிலியர்.

தலை மற்றும் காலில் வலியை உணர்ந்த சமர்த், ‘ம்.மா..!’ என்று ஹீனமாக முனங்கிவிட்டு, லேசாக திரும்பி ஒருக்களித்து படுத்து சமீராவைப் பார்த்தான். தன ஒரு கையை பற்றியிருந்த அவளின் கையின் மேல், அவனுடைய மறு கையை வைத்து, அவளை பார்த்தபடியே தூங்க ஆரம்பித்தான்.

சமர்த்தின் அறைக்குள் சென்ற கோவிந்திற்கு, அவர்களின் பற்றியிருந்த கரங்கள் தெரியவில்லை.. செவிலியர் செல்லும் போது இரவு விளக்கையும் அணைத்து சென்றிருந்ததால் கோவிந்தின் கண்களுக்கு எதுவுமே புலப்படவில்லை.

கோவிந்த் ஸ்விட்ச்சை தேடும்போது அவனின் கை பட்டு, தண்ணீர் பாட்டில் கீழே விழுந்த சப்தத்தில் கண் விழித்தாள் சமீரா. அவள் எழுந்திருந்த வேகத்தில், அவளின் கையின் மேல் இருந்த சமர்த்தின் கரம் கட்டிலின் நுனியில் வேகமாக இடித்ததால் ‘அம்..மா..’ என்று முனங்கியபடியே தூங்கினான் சமர்த்.

“சாரிம்மா..!! தூக்கத்தில டிஸ்டர்ப் பண்ணிட்டேன்..”

“இட்ஸ் ஓகே.. நான் கிளம்பறேன் மிஸ்டர்..” என்ற சமீராவை தடுத்தான் கோவிந்த்.

“இந்த நேரத்தில எப்படிமா தனியா போவ..? இப்போ நீ இங்கயே படுத்துக்கோ..!! காலையில போ மீரா..!!” என்றான் கோவிந்த்.

நடுநிசியில் செல்வதற்கு அவள் பயப்படவில்லை.. ஆனால் சமர்த்தின் அருகாமையை விட்டு செல்ல சற்றே யோசித்தாள். அதை கோவிந்த் அறியாதவாறே செய்தாள்.. அதனால்

“ஓகே..!!! மோர்னிங்கே கிளம்பிக்கறேன்.” என்று சொன்னவள் கீழே படுத்துக்கொண்டு தூங்க ஆரம்பித்தாள்.

கோவிந்த் அவளை அட்டெண்டருக்கு என்று போட்டிருந்த கட்டிலில் படுக்க சொன்னதை மறுத்துவிட்டு, கைகளையே தலையணையாகக் கொண்டு படுத்த சமீராவை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான் கோவிந்த்.
 

Advertisement

Top