Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MALARE MOUNAMAA? - 20

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம்: 20

சகாயம் ஏதோ யோசித்தபடி அமர்ந்துக்கொண்டிருந்தான்.. விக்கிக்கு அவனின் யோசனை பிடிபடவில்லை, பிடிக்கவுமில்லை.

"என்ன சகாயம் நான் மேல வந்துடுவேனோன்னு பயப்படுறியோ?"

"விக்கி அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை, நான் யோசிச்சுக்கிட்டு இருக்கிறது உன்னை பத்தி இல்ல, அந்த கலெக்டரும், அந்த பொண்ணு சமீராவை பத்தியும் தான். நீ ஏன் அவங்களை கொல்லாம வச்சிருக்க?"

"யோவ் சகாயம்! இங்க பாரு எத்தனை கொலை தான் செஞ்சுக்கிட்டு இருக்கிறது? ஏற்கனவே அந்த பிரெஸ்ஸு பெரிசு (விஸ்வநாதன்), பிறகு அது அனுப்பின ஊமையனையும்(லோகு), அனாதை கழுதையும்(சேரன்) போட்டு தள்ளியாச்சு!! நான் மேல வரதுக்கு கொலை செஞ்சாலும் அதுல ஒரு நியாமிருக்கு, நீ மாட்டிக்க கூடாதுன்னு நான் ஏன் அவங்களை கொல்லனும்? அதுமட்டுமில்லை, அவங்க உயிரோடு இருக்கிறது தான் எனக்கு நல்லது!" என்றான் விக்கி

"உனக்கு நல்லதா? புரியலையே விக்கி!"

"இந்த கேசுலேர்ந்து என்னை வெளிய கொண்டு வரவரைக்கும் அவங்க உயிரோட நான் விளையாடமாட்டேன். உன்னையும் அவங்ககிட்ட நெருங்க விடமாட்டேன்.. இப்போ புரியுதா சகாயம்?"

அவனின் கேள்வியில் தலையில் அடித்துக்கொண்டு, "இன்னும் கொஞ்சம் கூட பணம் தரேன் விக்கி! இந்த குண்டுவெடிப்பு கேஸை நீயே டீல் செஞ்சுக்க!"

"பாத்தியா உன் புத்திய காட்டிட்டே!"

"இல்லை விக்கி! என் மேல இப்போ கட்சிக்கு கொஞ்சம் அதிருப்தி! இப்போ போய் இந்த கேசுல நானும் சம்பந்த பட்டிருக்கேன்னு தெரிஞ்சா, என்ன நடக்கும்ன்னு நீயே யோசிச்சு பாரு விக்கி!"

"ஹா. ஹா! யோவ் சகாயம்! உன்னை பத்தி எல்லாருக்கும் ஓரளவிற்கு தெரியும்.. அத்த விட்டுட்டு நம்ம மேட்டரை கவனி!! நீ குண்டுவெடிப்பு கேசுல ஒண்ணும் கிழிக்க வேணாம்.. அதெல்லாம் நானே பார்த்துக்கிறேன்.. இப்போ இந்த தூத்துக்குடில நடத்தப்போற கலவரத்துக்கு மட்டும் கொஞ்சம் கைகொடு.."

தூத்துக்குடியில் இருக்கும் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுகளினால் மக்கள் நோய்வாய் பட்டு அவதிக்குள்ளானதால், அவர்கள் அனைவரும் இணைந்து பலநாட்களாக போராட்டம் நடத்திவருகின்றனர்.

அந்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்குவதே அந்த தொகுதி சட்ட மன்ற உறுப்பினர்.

அவர் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்!!

அதனால் ஆளுங்கட்சிக்கு அனைத்து பக்கமிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியதால், அந்த கட்சியின் தலைமை விக்கிக்கு அழைத்து, அந்த சட்ட மன்ற உறுப்பினரை கொலை செய்ய சொன்னது.

அதற்கு பதிலாக அங்கே நடக்கும் இடை தேர்தலில் விக்கியை நிறுத்த முடிவு செய்திருப்பதையும் விக்கியிடம் கட்சி தலைமை சொல்லியிருந்தது..

அதற்காகவே தான் சகாயத்தை காப்பாற்றி அங்கிருந்த மருத்துவரையும், அவனிடத்திற்கு கூட்டி கொண்டு சென்றான்..

"விக்கி இப்போ சொல்லு அடுத்த குண்டுவெடிப்பு நடத்திடலாமா?"

"அதெல்லாம் சரி வராது சகாயம், அப்படி செஞ்சா மக்கள் கோபம் ஆளுங்கட்சி மேல தான் திரும்பும். அப்போ எனக்கு யாருமே ஓட்டு போட மாட்டாங்க. கலவரம் செய்யணும் ஆனா செய்யக்கூடாது!! அதே மாதிரி நம்ம கட்சி மேல கோவம் வரக்கூடாது பரிதாபம் தான் வரணும்..

"ஒட்டு எல்லாம் போட வச்சிடலாம் விக்கி. அதுக்கெல்லாம் கைவசம் நிறய ஆளுங்க இருக்கு! எனக்கு என்னமோ குண்டுவெடிப்பு நடத்தறது தான் நல்ல வழி(!) ன்னு நினைக்கிறேன்." என்று சொன்ன சகாயத்தின் வார்த்தைகளில் வன்மம் மட்டுமே இருந்தது..

இவனை(விக்கி) ஒழித்து கட்ட தான் நினைக்கும்போது கட்சி அவனுக்கு முக்கியத்துவம் தருவது சகாயத்திற்கு அறவே பிடித்தம் இல்லை.. அதுமட்டுமில்லாமல் அரசியலில் தன்னை விட ஒரு படி முன்னேறி விடுவானோ என்ற பயமும் சேர்ந்த காரணத்தால் தான் குண்டுவெடிப்பையே வலியுறுத்திக்கொண்டிருந்தான் சகாயம்.

"நான் சொல்வதை நீ கேட்டு நடப்பதற்கு தான் உன்னை கூட்டிக்கிட்டே வந்தேன். இதே மாதிரி பேசிக்கிட்டே இருந்தேன்னு வை, போட்டு தள்ளிட்டு போய்க்கிட்டே இருப்பேன்.

என்ன எனக்கு ஆளுங்க இல்லாம உன் கிட்ட கெஞ்சிட்டு இருக்கேனு நினைப்போ? நீயும் நானும் கூட்டாளிங்கன்னு கட்சில இருக்கிற மத்தவங்களுக்கு தெரிஞ்சா, ஒரு பய நம்ம முன்னாடி வால் ஆட்டமாட்டானானுங்க!

நம்ம மேலயும் ஒரு பயமிருக்கும். அதுக்கு தான் உன்னை என் கூட சேர்த்துக்கிட்டேன். அதனால பெரிய கனா, கினா காணாம நான் சொல்லுவதை மட்டும் செய்.” என்றான் விக்கி.

சகாயம் விக்கியின் மிரட்டலுக்கு அடிபணிந்து தான் ஆக வேண்டியிருந்தது. அவன் உயிர் மீதான ஆசை(!) மற்ற உயிர்களை துச்சமென நினைக்கவைத்தது..

இவர்கள் விக்கியின் இடத்தில் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் தான், பூங்காவில் கோவிந்த், எடிட்டரிடம் சமீராவைப் பற்றி கேட்டுக்கொண்டிருந்தான்.

"என்ன மிஸ்டர். கோவிந்த் ஒண்ணுமே பேசாம இருக்கீங்க?"

"ஒண்ணுமில்லை சார், ப்ளீஸ் கொஞ்சம் புல் டீடெயில்ஸ் கொடுக்கறீங்களா?"
 
"கண்டிப்பா மிஸ்டர். கோவிந்த்!" என்ற எடிட்டர் சமீராவின் வாழ்க்கையை தெரிவிக்க ஆரம்பித்தார்.

முதலில் தானும், விஸ்வநாதனும் நல்ல நண்பர்கள் என்றவர், தொடர்ந்து சமீராவைப் பற்றியும் சொல்ல ஆரம்பித்தார்.

சமீரா வெளியூருக்கு சென்றிருந்த சமயம் நடந்த குண்டுவெடிப்பு, அதற்காக சந்தேகத்தின் பேரில் தந்தை இப்ராஹீமின் கைது, அந்த விபத்தில் தாய் பேகத்தை இழந்தது குறித்த செய்திகளை கோவிந்துடன் அவர் பகிர்ந்துக்கொண்டார்.

அதன்பிறகு சமீராவும் கைதானது, அங்கு அவளுக்கு இழைக்கப்பட்ட அநீதி மற்றும் விஸ்வநாதன் தலையிட்டு அவளை வெளியே எடுத்ததினால் அவருடைய பத்திரிக்கை நிறுவனத்தை விற்றது,

பின் சமீராவின் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு மேல படிக்க வைத்து அவர் விற்ற அவருடைய பத்திரிகை நிறுவனத்திலேயே நிருபராக பணியில் அமர்த்தியதை கூறி நிறுத்தியவர்,

இதை அனைத்தையும் செய்தவர் மந்திரி சகாயம் என்பதையும் எடுத்துரைத்தார்..

அவள் வால்பாறைக்கு சென்றபோது தந்தை போல் எண்ணிய விஸ்வநாதனை பலிகொடுக்க நேரிட்டதையும் கோவிந்திடம் பகிர்ந்துக்கொண்டார்.

"அதன் பிறகு நடந்ததது ஓரளவிற்கு உங்களுக்கே தெரியும் மிஸ்டர். கோவிந்த். நானும் சமீராவை பாலோ செஞ்சுக்கிட்டு தான் இருந்தேன். உங்க பேமிலியோட வந்து சேர்ந்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது.
விஸ்வநாதன் தன்னோட மனைவியையும் அந்த குண்டு வெடிப்புல தான் பலி கொடுத்தார். அப்போதிருந்தே சமீராவை தன் பெண்ணாக தத்தெடுத்து வீட்டில் வைத்துக்கொள்ளவும் பிரியப்பட்டார். ஆனா எதுக்குமே சமீரா ஒத்துக்கவேயில்லை.. ஹாஸ்டல்ல தங்கி தான் படிப்பை முடிச்சா. இப்போ கொஞ்சநாளா தான் உங்க பாமிலியோட தங்கி இருக்கா! அவ வாழ்க்கையிலும் ஒரு நல்லது நடந்தா ஒரு பெண்ணை பெற்ற தகப்பன்ங்கிற முறைல ரொம்ப சந்தோஷப்படுவேன்.!!" என்று கூறியவர் கோவிந்தை திரும்பி பார்த்தார்.

"சார் ப்ளீஸ் எனக்கு கொஞ்சம் யோசிக்க டைம் வேணும். என்னோட பேமிலி ரொம்ப ஆர்தடாக்ஸ்.. சமர்த் வேற்று மதத்து பெண்ணை விரும்பியிருப்பான்னு நினைச்சுக்கூட பார்த்திருக்க மாட்டா. ஏன் நானும், சமர்த்தும் கூட மீராவை வேற்று மத பெண் என்று நினைத்ததில்லை. அதுக்காக மீராவை அப்படியே விட்டுவிட மாட்டேன்.. பட் ஐ நீட் சம் டைம் டு திங்க்!!" என்றான் கோவிந்த்.

"திங்க் பண்ணுங்க கோவிந்த்." என்றவர் ஒரு சிறிய பார்ஸலை நீட்டினார்.

அதைவாங்கியபடியே 'இது என்ன?' என்பது போல் பார்த்தான் கோவிந்த்.

"இதில் சமீராவின் தந்தை இப்ராஹீம் எழுதிய கடிதமும், மற்றும் ஏதோ ஒரு சிறிய பெட்டியும் இருக்கிறது. விஸ்வநாதன் தான் இதை என்னிடம் கொடுத்தான்.
சமீரா அதில் இருக்கும் லெட்டரை தவிர வேறெதையுமே பார்க்காமல் அப்படியே திருப்பிக்கொடுத்துவிட்டாளாம். அதில் ரொம்ப மனக்குறை விஸ்வநாதனிற்கு.
விஸ்வநாதன் இல்லாத நிலையில் இதை சமீராவிடம் சேர்ப்பது தானே முறை. இதை சமீராவிடம் சேர்த்து விடுங்கள் மிஸ்டர். கோவிந்த்." என்று கூறியவர் அங்கிருந்து கிளம்பலானார்.

[சமீராவின் தந்தை இப்ராஹீம், சிறையில் இருந்த போது, அவரை சந்தித்த விஸ்வநாதனிடம் அவர் எழுதிய கடித்தை கொடுத்து, வீட்டினுள் இருக்கும் சிறிய பெட்டியை எப்படியாவது எடுத்து சமீராவிடம் சேர்ப்பிக்க வேண்டினார். அப்படியே அவரின் மன்னிப்பையும் சமீராவிடம் கேட்டதாக சொல்ல சொல்லியிருந்தார்.

விஸ்வநாதனும் சகாயம் ஆட்களுக்கு தெரியாமல் சமீராவின் வீட்டிற்குள் சென்று அந்த சிறிய பெட்டியை எடுத்து சமீராவிடம் கொடுத்தார்.
முதலில் இப்ராஹீம் எழுதிய கடிதத்தை படித்தவள், கண்ணீருடன் அதை அப்படியே மடித்து விஸ்வநாதனிடமே திருப்பிக்கொடுத்தாள். கூடவே "என் அப்பாவின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது!" என்று சொன்னாள்.

அதை தான் விஸ்வநாதன் சிறு பார்ஸல் போன்று செய்து அந்த எடிட்டரிடம் கொடுத்திருந்தார். விஸ்வநாதனும் அந்தப் பெட்டியை திறந்து பார்க்கவில்லை. எடிட்டரும் பார்த்திருக்க மாட்டர் என்றே நம்புவோம்.

அந்த சிறிய பெட்டியில் இருப்பது, குழந்தை மீராவின் ஆயுஷ்ஹோம போட்டோ ஆல்பமும், குழந்தை இப்ராஹீமிற்கு கிடைத்த அன்று மீரா அணிந்திருந்த உடையும் தான். கூடவே மீராவின் தாய் தந்தையிடம் மன்னிப்பு கேட்டு இப்ராஹீம் எழுதியிருந்த கடிதமும் இருந்தது.


இதையெல்லாம் சமீரா அன்றே பார்த்திருந்தால், அவளின் குடும்பத்துடன் இணைந்திருக்கலாம். என்ன செய்வது எல்லாம் அவன் செயல்!!!!]

சில அடிகள் சென்றதும் நின்ற எடிட்டர், "ப்ளீஸ் சமீராவை இப்படியே விட்டுடாதீங்க! இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்!!" என்று கைகூப்பி சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றார்.

கோவிந்திற்கு தான் பெரும் மனக்குழப்பம், 'எப்படி தான் அவளைப் பற்றிய உண்மைகளை வீட்டில் தெரிவிக்க போகிறோமோ?' என்று மிகுந்த கவலைகொண்டான்.

காதலுக்கு தடையில்லை அவனது குடும்பத்தில். அதற்கு அவனின் (கோவிந்த்) கோதை மீதான காதலே சாட்சி!

அவன் விருப்பத்தை அறிந்ததும் ஒரு வார்த்தை கூட மறுத்து பேசாமல் ஒத்துக்கொண்ட குடும்பத்தினர், இங்கு சமீராவை ஏற்பது கடினமே!

குடும்பத்தினர் அனைவரும் சமர்த்தின் மீது கொண்ட நம்பிக்கையே இதுநாள் வரை மீராவின் குலம், கோத்திரத்தை கேட்காமல் இருக்க வைத்தது.

ஆனால் இப்பொழுது மீராவின் பிறப்பைப் பற்றி சொன்னால், சமர்த்தின் மீது இருந்த அனைத்து நம்பிக்கையும் இல்லாமல் போய் விடும்.

'பெருமாளே இதை நான் எப்படி யார் மனதும் புண் படாமல் சொல்லப் போறேனோ? நீ தான் துணை இருக்கணும்!' என்று மனதினுள் வேண்டியவாறே வீட்டை அடைந்தான் கோவிந்த்.

வீட்டிற்குள் நுழையும் போதே வாசலில் தென்பட்டாள் சமீரா. அவளிடம் முதலில் பேசியப்பிறகு மற்றவர்களிடம் பேசலாம் என்ற முடிவெடுத்த கோவிந்த்,

"மீரா!" என்றவன் அவனை திரும்பிப் பார்த்த சமீராவிடம் " ஸ..ச..சமீரா! உன் கிட்ட இதைக் கொடுக்கணும்!" என்றவாறே இப்ராஹீமின் பையை நீட்டினான் கோவிந்த்.

கோவிந்தின் "சமீரா! என்ற அழைப்பு அவளை பேச்சு மூச்சற்று நிற்க வைத்தது.
 
மிகவும் அருமையான பதிவு,
சத்யாஸ்ரீராம் டியர்
 
Last edited:
நினைச்சேன்
மீரா யாருங்கிற உண்மையை சொல்லும் அடையாளம் ஏதாவது இருக்கும்ன்னு நினைச்சேன்
அதே மாதிரியே போட்டோ ஆல்பமும் மீராவின் டிரஸ்ஸும் இருந்திருக்கு
 
ஆயிரம்தான் சமீராவை தங்கமா பார்த்துக்கிட்டாலும் இப்ராஹிம் செய்தது தவறு
மீராவை பெற்றவர்களை
விட்டுப் பிரித்து இப்ராஹிம்
அவளுக்கு துரோகம் செய்து விட்டார்
 
Last edited:
இப்ராஹிம் மீராவை தன்னோடு அழைத்து சென்றதால் பவித்ரா இறந்து விட்டாளே
ஒரு தாயின் இறப்புக்கு இப்ராஹிம் காரணமாகி விட்டார்
 
Top