Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MALARE MOUNAMAA? - 24

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம்: 24
சமீராவின் 'நானே அழிஞ்சாலும் கூட பரவாயில்லை!' என்ற வார்த்தைகளை கேட்டு, சமர்த்தின் மனம் புண்பட்டது.

"வேண்டாம் மீரா. இந்த கோபம் வேண்டாம்.!! எனக்காக நம் காதலுக்காக உன் கோபத்தை குறைத்துக்கொள்ள முயற்சி செய்!! அந்த சகாயத்திற்கு சட்டப்படி தண்டனை கிடைக்க எல்லா வழியிலேயும் முயற்சி செய்யலாம்." என்ற சமர்த்தைப் பார்த்து கசந்த புன்னகை(விரக்தி புன்னகை) புரிந்தாள் சமீரா.

"என்ன மீரா? பதில் பேசு!!"

"சமீர், சட்டம் அவன் கையில் இருக்கு!!"

"அதுக்காக நீயும் சட்டத்தை உன் கையில் எடுத்துப்பியா மீரா?"

"தெரியல சமீர்!! நிறைய யோசிச்சிருக்கேன்!!

"இந்த டைம்ல தான் நீ தைரியமா இருக்கணும் மீரா!! உன்ன பத்தி ஆத்துல சொல்றத கொஞ்சம் தள்ளி போடலாம். சகாயம் கேஸ்ல என்ன செய்யறதுன்னு பார்க்கலாம். நேக்கு இந்த ஊரும் புதுசு, இந்த வேலையும் புதுசு. யாரை நம்பறது, யார் கிட்ட உதவிக் கேட்கறது எதுவுமே நேக்கு தெரில. இதெல்லாம் ஒரு லேர்னிங் எக்ஸ்பீரியன்ஸ் தான் நேக்கு!!

பட் உன்னோட பாயிண்ட் ஆப் வியுல இருந்து பார்த்தா சீக்கிரமே அவனுக்கு தண்டனை கிடைக்கணும்ங்கிறது புரியறது. எப்போ நான் எல்லாத்தையும் கத்துண்டு, புரிஞ்சுண்டு நடவடிக்கை எடுக்கப் போறேனோன்னு நினைச்சா மலைப்பா தான் இருக்கு!! நான் அப்படி செய்வேன், இப்படி செய்வேன். அந்த சகாயம் பெரிய இவனா!! என் கிட்ட இருக்கிற அதிகாரத்தை பயன்படுத்தி அவன் இருக்கிற இடமே தெரியாம இருக்க வைக்க முடியும்ன்னு எல்லாம் என்னால பேச முடியாது மீரா!! நான் பெரிய ஹீரோ எல்லாம் இல்ல!! யதார்த்தவாதி!! ஆட்சியரா நேக்கு அனுபவமும் ரொம்ப குறைச்சல் தான்.

அதே மாதிரி ஒத்தைக்கு ஒத்தை வரியான்னு போய் சண்டையும் போட முடியாதுங்கிறதை விட தெரியாதுங்கிறது தான் உண்மை!! அன்னிக்கு நீ அந்த சகாயத்தை போட்டு அடிக்கறச்ச நேக்கு கொஞ்சம் பயமா இருந்தது!! பாவம் உன் ஆம்படையான்!! ன்னு கூட நினைச்சேன். ஆனா அந்த ஆம்படையானா நானே இருப்பேன்னு அப்போ நேக்கு தெரியாம போய்டுத்து!!" என்ற சமர்த் சமீராவை பரிதாபமாக பார்த்தான்.

சமர்த்தின் பேச்சில் சமீராவின் முகத்தில் பெரிய புன்னகை பூத்தது.

"இப்போ சிரிக்கற அப்றமா கை நீட்டுவியோ? பார்த்து அடிம்மா!! பார்க்கறதுக்கு தான் நான் பெரிய பாடி பில்டர் மாதிரி இருப்பேன். ஆனா பூஞ்சை உடம்பும்மா!! உடம்பு மட்டுமில்ல மனசும் தான்.. கொழந்தை மாதிரி பார்த்துக்கணும் நீ என்னை!!" என்று பெரிதாக சிரித்தான்.

சமீராவும் அவனுடன் சேர்ந்து புன்னகைத்தாள்.

வாய் விட்டு சத்தமாக சிரிப்பது தான் அவளுக்கு மறந்து போய் இருந்ததே!!

சமர்த் அவளின் சிரிப்பை கண்டிப்பாக மீட்டெடுப்பான்.

அவர்கள் அந்த சகாயத்திற்கு எப்படி தண்டனை வாங்கி தருவது என்று மேலும் பேசிக்கொண்டிருந்த போது தான், அறையின் கதவை வேகமாக திறந்து உள்ளே நுழைந்தான் கோவிந்த்.

"மிமீ மீரா நீ 'சமீரா' இல்ல!! நீ எங்காத்து பொண்ணும்மா!! என்னோட தங்கை!! கண்ணன் சித்தப்பா பொண்ணுடா நீ!! என்று அவளின் முகத்தைப் பற்றிக்கொண்டு அலறினான் கோவிந்த்.

"என்னடா சொல்ற கோவிந்தா?" என்று சமர்த் பதைபதைத்தான்.

கோவிந்த் சமர்த்தை கண்டுகொள்ளவேயில்லை. அவனுக்கு மனதிலிருந்த பாரம் குறைந்து லேசாக இருந்தது.

அதேபோல் இத்தனை நாட்களாக தேடித் கொண்டிருந்த தங்கை மீரா கிடைத்துவிட்டாள் என்ற மகிழ்ச்சி, சமீராவை தவிர வேறெதையுமே அவனை கவனிக்க வைக்கவில்லை.

"கோவிந்த்!! கோவிந்த்!!" என்று சமர்த் கோவிந்தை போட்டு உலுக்கினான்.

ம்ஹும்! எதற்குமே கோவிந்த் அசைந்துக்கொடுக்கவில்லை.

சமீராவோ கோவிந்தின் கைகளில் சிக்கி இருக்கும் தன் முகத்தை அசைக்க கூட முடியாமல் அமர்ந்திருந்தாள். கோவிந்தின் பிடி அவ்வளவு இறுக்கமாக இருந்தது.

கோவிந்த் 'ஏன் இப்படி செய்கிறான்?' என்று புரிபடாமல் வலியுடன் அமர்ந்திருந்தாள்.

சில நிமிட இடைவெளியில் அங்கு கண்ணன் ஓடி வந்தார்.

"எங்க என் பொண்ணு கோவிந்தா? இவளா என் பொண்ணு!! இந்த மீரா தான் என் பொண்ணா?" என்ற கண்ணன் கோவிந்தின் பிடியில் சிக்கியிருந்த சமீராவின் முகத்தைப் பற்றி தன்னிடம் இழுத்துக்கொண்டார்.

சமீராவிற்கு என்ன நடக்கிறது என்று புரியவேயில்லை.

கண்ணனின் பின்னால் ஓடிவந்த கிருஷ்ணனும், கோவிந்தின் அலறலில் சமையலறையிலிருந்து ஓடிவந்த சுமித்ராவும், சமீராவின் அருகில் சென்று அமர்ந்து, அவளின் கைகளை பற்றிக்கொண்டனர்.

முகத்தை கோவிந்த்தும், கண்ணனும் பற்றியிருக்க கைகளை ஆளுக்கு ஒன்றாக சுமித்ராவும் கிருஷ்ணனும் பிடித்திருக்க, சமர்த்திற்கு பாவம் அவளை பிடித்துக்கொள்வதற்கு இடமே இல்லாமல், கோவிந்த்தை போட்டு உலுக்கிக் கொண்டிருந்தான்.
 
"டேய் கோவிந்தா!! இப்போ நீ சொல்ல போறயா, இல்லையா? எப்படி நோக்கு இவ தான் நம்ம மீரான்னு தெரியும்?" என்று குரலை உயர்த்தினான் சமர்த்.

அவனுக்கு எழுந்து நின்று இவர்களை போல் ஆர்ப்பரிக்க வேண்டுமென்ற ஆசை இருந்தாலும் அவனின் உடல் நிலை ஒத்துழைக்கவில்லை.

"நிஜமா கோவிந்தா? இவ என் தங்க(தங்கை)பொண்ணா!! பவி பொண்ணு மீராவா? இவ தானா! இவளே தானா?" என்ற சுமித்ராவிற்கு கண்களில் கண்ணீர் பெருகியது.

"சொல்லேண்டா கோவிந்தா!! எல்லாரும் மாத்தி மாத்தி கேட்டுண்டே இருக்காளோன்னோ, நீ அப்படியே பரப்ரும்மமா நின்னுண்ட்ருக்க!!" என்று கடிந்தார் கோவிந்தின் அப்பா கிருஷ்ணன்.

"என் பொண்ணு கிருஷ்ணன்!!" என்ற கண்ணன் தொடர்ந்து,

"ப்ப.பவி!! பவி பாரு உன் பொண்ண!! அவளே என்னை தேடிண்டு வந்துட்டா.!! ஆனா நேக்கு அவளை தெரியவேயில்லை பவி.!!" என்று காற்றுடன் பேசினார் கண்ணன்.

அவரின் கண்களிலும் கண்ணீர் சொரிந்துக் கொண்டுதான் இருந்தது.

"ஆமாம் சித்தப்பா இது நம்ம மீரா தான்!! வந்துட்டா நம்மக்கிட்ட வந்துட்டா!!" என்றான் கோவிந்த்.

"நோக்கு எப்பிடிடா தெரியும்?" என்றான் சமர்த் திரும்பவும்.

"ந்தோ இத பார்றா!!" என்று கையிலிருந்த குழந்தை மீராவின் 'ஆயுஷ்ஹோம' ஆல்பத்தை சமர்த்திடம் நீட்டினான் கோவிந்த்.

"இது எப்படி நோக்கு கிடைச்சது?" என்று கேட்டார் கிருஷ்ணன்.

"சொல்றேன்ப்பா!! எல்லாம் சொல்றேன்.!!" என்ற கோவிந்த் தன் அம்மாவிடம் திரும்பி, "ம்மா! தொண்டை வறண்டுடுத்து, பாலோ காபியோ தாம்மா! காபி சாப்ட்டுட்டு எல்லாத்தையும் சொல்றேன்." என்றான் கோவிந்த்.

"போடா இப்போ காப்பிதான் ரொம்ப முக்கியமா?" என்று சலித்துக்கொண்டார் கிருஷ்ணன்.

சுமித்ரா பதிலேதும் பேசாமல் காபி கலக்க எழுந்து சென்றார்.

கண்ணன் தான் தன் பெண்ணை விட்டு அகலாமல் அமர்ந்திருந்தார்.

சமர்த்தும் கிருஷ்ணனும் குழந்தை மீராவின் புகைப்படங்களை பார்த்துக்கொண்டிருந்தனர்.

சமீராவிற்கு கண்ணனின் அருகாமை மனதிற்கு பிடித்திருந்தாலும், எந்தவித சொந்தமோ, உரிமையோ இல்லாமல் அவருடன் அமர்ந்திருப்பது ஏதோ முள்ளில் மீது அமர்திருப்பதை போல் இருந்தது. இங்கு நடக்கும் எந்த விஷயங்களும் புரியாமலும் அமர்ந்திருந்தாள்.

அவளுக்கு என்ன தெரியும் இந்த கண்ணன் தான் அவளுடைய சொந்த அப்பா என்று!!

சுமித்ரா அனைவருக்கும் ஹார்லிக்ஸ் கலந்து எடுத்து வந்தார்.

அதை அருந்திக்கொண்டே, "மீரா! நோக்கு இங்க நடக்கறது எதுவுமே புரியலை இல்லை?" என்று கேட்ட கோவிந்திற்கு 'ஆம்!!' என்பதாக தலையை ஆட்டினாள்.

"மீரா! இதோ வோன்(உன்) பக்கத்துல உட்கார்ந்துண்டு இருக்காரே கண்ணன் சித்தப்பா, இவரோட பொண்ண ஒரு வயசு குழந்தையா இருக்கறச்ச தொலைச்சுட்டார்.” என்ற கோவிந்த் அன்று ஶ்ரீபெரும்புதூரில் நடந்தவற்றை கூறலானான்.

கண்ணனுக்கு அனைத்தும் கண் முன்னே படமாக விரிந்தது. அவருக்கு அன்று மனைவி பவித்ராவுடன் ஶ்ரீபெரும்பூதூர் வந்தது இப்பொழுது தான் நடந்தது போலிருந்தது..

அனைத்தையும் சொல்லி முடித்த கோவிந்த், "நீ தான் மீரா அந்த கொழந்தை!! உன்ன பெத்த அப்பா இவர் தான்!!" என்று கோவிந்த் சொல்லவும், அதிர்ச்சியுடன் பார்த்தாள் சமீரா.

"யெஸ் மீரா!! நீ சமீரா இல்ல! எங்காத்து மீரா.. என்னோட தங்கை!!" என்றவன் "இப்ராஹீம் உன்னை வளர்த்தவர்! பாரு அவர், உன்னை பெத்தவாளுக்கு எழுதியிருக்கும் லெட்டர். பிரிச்சு படிச்சு பாரு. கூடவே இந்த ஆல்பத்தையும் பாரு! அதெல்லாம்விட தன் பொண்ணு தனக்கு கிடைச்சுட்டான்னு உன்னையே பாத்துண்ட்ருக்காரே அவர் கண்ணுல தெரியற சொந்தத்தை பாரு!!" என்று சொல்லும்போது கோவிந்திற்கு தொண்டை அடைத்தது.

"ம்மா!! கார்த்தால வெளில போனேனே எதுக்கு தெரியுமா ம்மா? இவளோட சீப் எடிட்டரை பார்க்கறதுக்கு தான். இவளை பத்தி தெரிஞ்சுண்டு வரத் தான் போனேன்." என்றவன் தொடர்ந்து அவள் இஸ்லாமிய குடும்பத்து பெண் என்று தெரிந்ததும் தான் அடைந்த அதிர்ச்சியுடன் ஆரம்பித்து அனைத்தையும் குடும்பத்தினருடன் பகிர்ந்துக்கொண்டான்.

சமீரா, தன் தந்தை இப்ராஹீம் எழுதிய கடிதத்தை படித்து முடித்தாள்.

அவளுக்கு இந்த அதிர்ச்சியை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. தன்னையும் அவர்களுடனேயே அழைத்து சென்றிருக்கலாம் என்று தான் நினைத்தாள்.

அது நாள் வரை அவர்கள் தாம் பெற்றவர்கள் என்று இருந்தவளுக்கு அவர்கள் தன்னை பெற்றவர்கள் இல்லை என்பதை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை.

"அவர் எல்லாம் என்ன மனுஷன்ம்மா? நம்ம ஆத்து கொழந்தைன்னு தெரிஞ்சிருந்தும், இப்படி எடுத்துண்டு போய்ட்டாரே!! கொழந்தையை இழந்த துக்கம் தாங்காம பவி சித்தி போயே சேர்ந்துட்டாளே!! கண்ணா சித்தப்பா இன்னிவரையும் நடைபிணமா தானே இருக்கார். அவா ரெண்டுபேரும் சந்தோஷமா குழந்தையோடு கழித்து இருக்கவேண்டிய நாட்களை, இப்படி நரகவேதனையோட சித்தப்பா மட்டும் தனியே கழிச்சிண்டு இருக்காரே!! இதெல்லாத்துக்கும் காரணம் அந்த இப்ராஹீம் தான் மா!!"

கோபம் மிகுந்திருந்த கோவிந்த், இப்ராஹீமை தொடர்ந்து வறுத்தெடுத்துக் கொண்டிருந்தான். சமீராவை வளர்த்த அன்னை பேகத்தையும் விட்டு வைக்கவில்லை கோவிந்த்.

"இவாளுக்கு கொழந்த பொறக்கலன்னா, நம்மாத்து கொழந்தைய எடுத்துப்பாளா? என்னமா இது நியாயம்? பவி சித்தி 'மீரா மீரா!!' ன்னு சொல்லிண்டே உயிரைவிட்டது, இன்னும் கண்ணு முன்னாடி நிக்கறது. பாவம்ம்மா சித்தி!! இவா செஞ்ச தப்புக்கு உரிய தண்டனை தான் கிடைச்சிருக்கு. அது அந்த இப்ராஹீமிற்கே புரிஞ்சிருக்கு!! இதோ இந்த லெட்டர் கடைசியா மீராக்கு எழுதியிருக்கார் அந்த இப்ராஹீம். அதுல அவரே சொல்லியிருக்கார், ‘ஒரு விதத்துல இந்த தண்டனை அவருக்கு மன நிம்மதி தருது’ ன்னு" என்று மேலும் மேலும் சமீராவின் தந்தையை வறுத்தெடுத்துக்கொண்டிருந்தான் கோவிந்த்.

தன் தாய், தந்தையை இழிவாக பேசுவதை கேட்கவும், பார்க்கவும் விரும்பாமல், கண்களையும், காதுகளையும் மூடிக்கொண்டாள் சமீரா.

தன் பெண்ணையே பார்த்துக்கொண்டிருந்த கண்ணனுக்கு அவள் மனதின் ஆதங்கம் புரிந்தது.

அது நாள் வரை பெற்றவர்கள் என்று இருந்தவர்களை, மூன்றாம் மனிதன் நிந்தித்துக் கொண்டிருப்பதை கேட்க முடியாமல் காதுகளை கைகளால் அடைத்துக்கொண்டு, கண்களை இறுக்கமாக மூடியடி இருந்த தன் பெண்ணின் முகத்தையே சில நொடிகள் ஆழ்ந்துப் பார்த்திருந்தார். பின்,

"போதும் கோவிந்தா!! என் பொண்ணோட அப்பாவையோ, அம்மாவையோ இன்னும் ஒரு வார்த்தை தப்பா பேசினா, என் பெண்ணையும் அழைச்சுண்டு வெளில போய்டுவேன்.!! என்ற கண்ணன், கிருஷ்ணன் மற்றும் சுமித்ராவிடம் திரும்பி,

"கிருஷ்ணன், மன்னி நான் இப்படி பேசறதுக்கு மன்னிச்சுடுங்கோ!! ஆனா நேக்கு வேற வழி தெரியல. இதோ அவளைப் பாருங்கோ, எப்படி உட்கார்ந்துண்டு இருக்கான்னு!! பெத்தவாளை இப்படி நிந்திச்சுண்டே இருந்தா யாருக்கு தான் கேட்டுண்டிருக்க மனசு வரும்? அவளை பொறுத்தவரை இப்ராஹீம் தானே பெத்தவர்!! போறும் கோவிந்தா!! இனிமே அவர்களைப் பத்தி பேசாதே!! என் பெண்ணை நன்னா தைரியமா வளர்த்துருக்கார். நானே வளர்த்து இருந்தா கூட இந்தளவு, தைரியமா, கம்பீரமான ஒரு நிமிர்வோட வளர்த்திருப்பேனோ, என்னமோ நேக்கு தெரியாது. ஆனா இப்ராஹீமும் பேகமும் அவளை நன்னா வளர்த்துருக்கா!! அதுக்கு நான் அவாளுக்கு நன்றி தான் சொல்லணும்!!" என்றவர் மேலே விட்டத்தை பார்த்து கைகூப்பி சேவித்துக்கொண்டார்.

அதுவரை அவரின் அருகாமையை ரசித்தும், ரசிக்காமலும் இரண்டுங்கெட்டான் மனநிலையில் அமர்ந்திருந்த சமீரா, அவரின் கைகளோடு தன் கையை கோர்த்துக்கொண்டு 'தேங்க்ஸ்!!' என்று உதடசைத்தாள்.

கண்ணனோ, அவள் வாயை ஒரு கையால் மூடி, மற்றொரு கையால் அவளின் தலையை தடவிக்கொண்டே, "நானும் உன்னோட அப்பாடா!! நேக்கு நீ தேங்க்ஸ் சொல்வியா?" என்றார்.

அவரின் 'நானும்' என்ற வார்த்தையில் சற்றே அழுத்தம் நிறைந்து இருந்ததை அங்கிருந்தவர்கள் அனைவருமே அறிந்துக்கொண்டார்கள்.
 
அருமையான பதிவு
கண்ணன் மகள் மனசு புரிந்து பேசுவது அருமை
 
Top