Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Mana (na) m Purinthom - 5

Advertisement

Shwetha

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் 5
கதவு சடேர் என சத்தம் போட்டு திறந்தது.
சத்தம் கேட்டு யாமினி திரும்பினாள்.
கோபமே உருவானது போல் நின்றிருந்தான் நிகில்.
" வாட் டு யு திங்க்க் ஓஃப் மி?" அவன் அந்த அலுவலகமே அதுறும் படி கர்ஜித்தான்.
சத்தம் கேட்டு நகுலும் நித்யாவும் அந்த அறைக்குள் ஓடி வந்தனர். நகுல் நிகிலின் இந்த பரிமாணத்தை பார்த்து அதிர்ந்தான். நிகிலின் தோளில் தன் கை அழுத்தம் கொடுத்தான்.
"நிக்ஸ்.. காம் டௌண்."
"என்ன கடுப்பேத்தாதே நகுல். இவள் இப்படி நம்மள அவோய்ட் பண்றதுக்கு நாம என்ன பண்ணினோம்."
"நிக்ஸ்.. நாம அவள் கிட்ட பேசலாம். " நித்யா நிகிலை சமாதானம் பண்ண முயர்சித்தாள்.
நிகில் கோபத்தில் அங்க இருந்த இருக்கயை எட்டி உதைத்தான். அது போய் யாமினியின் காலை மோதி நின்றது.
நித்யா ஓடி போய் விழ இருந்த யாமினியை தாங்கி பிடித்தாள்.
யாமினி விழ போகிறாள் என்று தெரிந்தும் அவளை தாங்கவோ இல்லை தன் கோபத்தை குறைக்கவோ நிகில் தயாராகவில்லை.
யாமினி அவன் முகத்தையே பார்த்து கொண்டிருந்தாள். கண்களில் நீர் தேங்கி நிற்க யாமினி அவன் பக்கம் வருவதற்குள் நிகில் அங்கிருந்து வெளியே சென்று விட்டான்.
அவன் சென்றதும் அவனின் புறக்கணிப்பு தாளாமல் யாமினி தொப்பென்று தரையில் அமர்ந்து அழ ஆரம்பித்தாள்.
நகுலும் நித்யாவும் அவளை சமாதானம் செய்ய வழி தெரியாமல் அவள் பக்கத்தில் இருவரும் அமர்ந்தனர்.
எவ்வளவு நேரம் அப்படியே அழுது கொண்டு இருந்தாளோ தெரியவில்லை. நகுல் தான் தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தான். அவளை எழுப்பி வீட்டுக்கு போக சொன்னான்.
"நகுல், எனக்கு நிகில் கிட்ட பேசணும்."
"பேச வந்த போது பேசாமல் இப்ப பேசணும்னா.. " கடுப்பாகி கேட்டான் நகுல்.
"ஏய்.. அவளே அழுது அழுது ஒரு மாதிரி இருக்கிறாள். இதுல நீ வேற.." நித்யா நகுலை கடிந்தாள்.
"ஸோரி யாமி.. நீ இப்ப நித்யா கூட வீட்டுக்கு கிளம்பு. நாளைக்கு பார்க்கலாம். நாளைக்கு அந்த பெயில் மாட்டர் வேற இருக்கு. நீ போய் ரெஸ்டெடு. நாளைக்கு காலைல நான் வந்து உங்கள் இரண்டு பேரையும் பிக் அப் பண்றேன்."
"சரி, நகுலா.. நான் இவளை கூட்டிகிட்டு கிளம்பறேன். நீயும் பார்த்து போ.. " என்று சொல்லியே நித்யா யாமினியும் கூட்டிட்டு கிளம்பி விட்டாள்.
நகுல் வீட்டுக்கு போகாமல் நிகிலை பார்க்க அவன் வீட்டுக்கு கிளம்பினான்.
நிகிலின் வீடு. அழைப்பு மணியை அழுத்தி கொண்டே இருந்தான் நகுல். சிறிது நேரம் கழித்து நிகிலின் தாய் கௌரி கதைவ திறந்தார்.
"நகுலா.. எப்படி இருக்க..? ரொம்ப நாளாச்சு உங்களை எல்லாம் பார்த்து. உள்ள வாப்பா.."
"நான் நல்லா இருக்கேன் மா.. நீங்க எப்படி இருக்கீங்க? உங்க உடம்பு சரியில்லைனு நிகில் சொன்னான். டாக்டரை பார்த்தீங்களா.."
"இப்ப சரியாயிருக்கேன். பத்மா தான் வந்து கூட்டிட்டு போனா.."
நகுலின் அம்மா பத்மாவதி நிகிலின் அம்மாவுடைய ஆருயிர் தோழி. இருவரின் கணவர்கள் சேர்ந்து பணிபுரிவர்கள் வேறு. அதனால் தோழமை நிரந்தரமாகியது. இருவரின் குழந்தைகளும் இவர்களைப் போல உற்ற தோழர்கள். அது தான் நமக்கு தெரிந்த விஷயமாயிற்றே.
"அம்மா.. உடம்பு பார்த்துக்கங்க.. "
"சரி டா.. இந்த நிகிலுக்கு என்னாச்சு..? ரொம்ப சோர்வா இருக்கான். இரண்டு நாளா முகம் கொடுத்து பேசறதேயில்ல.. ஒழுங்காக சாப்பிடறதும் இல்லை. கேட்டா உன் உடம்ப பார்த்துக்கோ என்கிறான். நீ கொஞ்சம் பேசி பாரேன்."
"பேசறேன் மா.. அவன் எங்கே..?"
"மாடியில் இருக்கான்.. நான் காபி அனுப்பி வைக்கிறேன்." சரி என்று தலையாட்டி இரண்டு படியாக மாடிப் படி ஏறினான்.
நிகிலின் அறை கதவு திறந்து கிடந்தது.
அரவமின்றி உள்ளே நுழைந்தான் நகுல்.
நிகில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான்.
அவனுக்கு கோபம் கட்டுக்கடங்காமல் இருந்தால் இப்படி தான் தன்னை வதைத்து கொண்டிருப்பான். இன்றும் அப்படியே நடக்க நகுலுக்கு எப்படி பேச ஆரம்பிக்கணும் என்று ஒன்றும் புலப்படவில்லை.
"ஹாய்.. நிக்ஸ்.."
"சொல்லு நகுல்."
"ஏன்டா இரண்டு நாளா இப்படி இருக்க? "
"என்கிட்ட கேட்க மட்டும் நல்லா தெரியுது. இல்ல?"
"ஏன்டா..." வடிவேலு பாணியில் கேட்டான் நகுல்.
"ஜோக்கடிக்காதே நகுல்.. அவ கிட்ட கேட்டியா.. ஏன் நம்மள அவோய்ட் பண்ணுறாள் என்று கேட்டியா..? இல்லை ல.. அப்போ என்கிட்ட மட்டும் ஏன்டா கேட்கிறே.."
"டேய்.. நீ இப்படி இருந்ததில்லயே டா.."
"தெரியலை டா.." என்று ச்சொல்லி தலையை அழுந்தி கோதினான்.
நகுலுக்கு ஏதோ புரிகிற மாதிரி இருந்தது.
 
Top