Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Mana (na) m Purinthom - 9

Advertisement

mibrulz

Active member
Member
அத்தியாயம் 9

"அவசரப்படாதீர்கள் நண்பரே.. சொல்றேன்.."
"என்ன ச்சொல்ல போறானோ?" என்று அவனையே பார்த்து கொண்டிருந்தார் எதிர் தரப்பு வக்கீல்.
நகுலை பார்த்து கண்ணடித்தான் நிகில். நகுல் கன்னக்குழி விழும்படி சிரித்து கொண்டே திரும்பி சலீமை பார்த்தான். அவனின் சிரிப்பை புரிந்து கொண்ட ஸலீம் ஒரு பெண்ணை நீதிமன்றத்திற்குள் அழைத்து வந்தான்.
"இவர் தான் நான் சொன்னது நிஜமென்று நிரூபிக்க போகும் நபர்.."
"நீங்கள் ஒருவரை அழைத்து வந்து சாட்சி என்று சொன்னால் எடுபடாது மி.நிகில். சாட்சி ஒருவரை நீங்கள் அறிமுகப் படுத்தும் முன்பு நீங்கள் அதை நீதிமன்றத்திற்கும் எதிர் தரப்புக்கும் தெரிவிக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியாதா?"
"நன்றாக தெரியும் மிஸ்டர்.பி.பி. உங்கள் அலுவலகத்திற்கும் நீதிமன்றத்திற்கும் நேற்றே அனுப்பியுள்ளேன். "
"எங்களுக்கு அப்படி ஏதும் தகவல் வரவில்லை. " பப்ளிக் ப்ரோஸிக்யூடர் தன் ஜூனியரை பார்த்தார்.
அவன் அவர் பக்கம் வந்து அவருடைய பைல் திறந்து ஓர் காகிதத்தை எடுத்து அவர் கையில் கொடுத்தான். அந்த காகிதம் தான் நிகில் அனுப்பி வைத்த காகிதம். அவர் முகமே ஒரு மாதிரியாகி விட்டது.
நீதிபதிக்கும் இதில் நகுல-நிகிலின் கையிருப்பதாக நன்கு தெரிந்தது. சிறு புன்னகையை உதடோரம் படரவிட்டுக் கொண்டே அவர் அந்த பெண்ணை போக்ஸில் ஏற சொன்னார்.
அதன் பிறகு அவரே அந்த பெண்ணிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தார்.
"உங்கள் பேரு?"
"என் பேரு மாயா.."
"நீங்கள் என்ன வேலையில் இருக்கீறீர்கள்.?"
"யுவர் ஓனர். நான் க்லப் டவுண் ஹோடல்ல ரிஸப்ஷனிஸ்டாக வேலை பார்க்கறேன்."
"இந்த வழக்கை பற்றி உங்களுக்கு தெரியுமா? "
தெரியும் என்பது போல் தலையாட்டினாள்.
'' உங்களுக்கு தெரிந்த விஷயங்கள் இங்கு சொல்ல முடியுமா?"
" முடியும் ஸர்."
" அப்போ சொல்லுங்க.."
" ஸர்.. இவர் போன வாரம் இவருடைய ஸெக்ரட்டரி கூட வந்தது உண்மை தான்.."
அந்த பெண் சொல்லி கொண்டிருக்கும் பொழுதே எதிர் தரப்பு வக்கீல் சடாரென்று தன் இருக்கையிலிருந்து எழுந்தார்.
"யுவர் ஓனர்.. வாட் இஸ் திஸ். என்ன நடக்கிறது இங்க..? தெரிஞ்ச விஷயத்தையே திருப்பி திருப்பி சொன்னால் என்ன தான் அர்த்தம்? " நிகிலை பார்த்து ஏளன சிரிப்பை உதிர்த்துவிட்டு
" இவர்கள் தன் ஸாட்சிக்கு சரியாக ஒன்றும் சொல்லி கொடுக்கவில்லை போல.."
நகுலுக்கு கோபம் கூரையை பிய்த்து பறந்தது.

(நகுல இவ்வளவு நாளா காமெடி பீஸா தான பார்த்தோம். இனி கொஞ்சம் கெத்தா பார்போமா..?)

நிகிலுக்கு அவனுடைய கோபம் புரிய அவனின் கைகளில் நன்கு அழுத்தினான். அந்த அழுத்தத்தில் தன் கோபத்தை உள்ளிலடக்கி அவன் ஒரு ஏளன புன்னகையை பி.பியை பார்த்து வீசினான். பின் தன் தொண்டையை சரி செய்து அவனுடைய ஆறு அடி உயரத்திற்கு ஏற்ப நிமிர்ந்து நின்றான்.
இன்னிக்கு பி.பிக்கு பீ..பீ..தான் என்று பி.பி.யுடைய ஜூனியருக்கு நன்றாக தெரிந்தது.
"சரியாக எப்படி சொல்லி கொடுக்கிறது என்று உங்களிடமிருந்து தான் கற்றுக் கொண்டோம்."
"யுவர் ஓனர். மி. நகுல் தேவையில்லாததை பேசுகிறார்."
இவரே வாய் கொடுத்து மாட்டிப்பாராம் அதற்கு மற்றவர்களை குற்றம் சொல்லுவாராம். என்ன ஜன்மமோ.. என்று சத்தமில்லாமல் மனதுக்குள் பொரிந்து தீர்த்தான் அந்த ஜூனியர்.

நிகிலும் மற்ற நண்பர்களும் முதலில் இந்த பி.பியிடம் தான் வேலை பார்த்து வந்தனர். அவருடைய தொழில் தர்மத்தை (அதர்மத்தை) பார்த்து தான் இவர்கள் தங்களுடையதென்று ஓர் நிறுவனத்தை ஆரம்பித்தனர்.

" எப்படி பார்த்தாலும் உங்கள் அளவுக்கு சொல்லி கொடுக்க எங்களால் முடிகிற காரியமா..?" அவன் உதட்டில் சிரிப்பிருந்தாலும் அவன் கண்கள் அனலை கக்கியது.
"யுவர் ஓனர்.." என்று ஏதோ சொல்ல வந்த பி.பியை தன் கையால் போதும் என்ற செய்கை காட்டினார் நீதிபதி. பிறகு மாயாவை பார்த்து
" ம்.. நீங்கள் தொடரலாம்.."
" இவர்களுக்கென்று தனி தனி அறையை நான் தான் ரெடி பண்ணி கொடுத்தேன்.."
"தனி தனி அறை கொடுத்ததால் இவர் அந்த பெண்ணை கொல்ல இயலாது என்று சொல்ல வருகிறீர்களா..?" என்று அந்த பெண்ணை கேட்டார் பி.பி.
"இந்த மனுஷன் அடி வாங்காம ஓய மாட்டாரு.. " சலித்து கொண்டான் ஜூனியர்.
" வை ஆர் யூ ஜம்பிங்க் த கண் மி. பி.பி. நீங்கள் சற்று பொறுமையோடு கேட்டால் உங்களுக்கு புரியும்." நகுல் தன் சீரான குரலில் மொழிந்தான்.
"ப்ளீஸ் பீ ஸீடட் கௌண்ஸல்ஸ். நீங்கள் தொடர்ந்து சொல்லுங்கள். " நீதிபதி மாயாவிடம் கூறினார்.
அடி வாங்கிய மிருகத்தை போல் அந்த மனிதன் தன் இருக்கையில் உட்கார்ந்தார்.
" அந்த பெண்ணின் மரணம் நடந்த அந்த நேரம் மி. ஷர்மா ஹோட்டலில் இருக்கவில்லை."
"அது உங்களுக்கு எப்படி தெரியும்? காவல்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தது என்ன கனவா? இவ்வளவு உறுதியாக கூறுகிறீர்களே உங்களுக்கு தெரியுமா இவர் எங்கே போனார் என்று? "
நகுலுக்கு கோபம் கண் மண் தெரியாமல் கூடி கொண்டே போனது. இந்த அளவுக்கு இந்த மனிதன் கீழே இறங்குவாரா.. சே.. என்றாகி விட்டது.
"அவர் என்னை பார்க்க தான் வந்தார்.."
கூட்டத்தில் இருந்து யாமினியின் குரல் ஒலித்தது.

நிகில் அதிர்ந்தான். நகுலை பார்த்தான். அவன் நித்யாவை கொன்று விடும் அளவிற்கு கனல் பார்வை பார்த்தான். நிகிலுக்கு புரிந்தது இவன் தடுத்தும் இவர்கள் இங்கு வந்தது தான் அவனின் கோபத்திற்கு காரணம். எல்லோருக்கும் இந்த செய்தி அதிர்ச்சி என்றால் பி.பிக்கு லட்டு சாப்பிட்ட மாதிரி இனித்தது.
"ஐயோ.. இந்த ஆளுக்கு கண்ணா லட்டு திங்க ஆசையா என்கிற மாதிரி யாமினியின் ஸ்டேட்மென்ட் கிடச்சிடுச்சே.. இப்ப என்னல்லாம் சொல்லி அவளை படுத்த போறாரோ.." வாய் விட்டே முணுமுணுத்தான் ஜூனியர் சிவதாஸ்.

சிவதாஸ் நால்வர்களுடைய நல்ல நண்பன். அவன் தான் இவர்களுக்கு உதவி செய்தான். புது ஸாட்சியை பற்றிய தகவலை உடனே தன் ஸீனியருக்கு அறிவிக்கவில்லை. இப்போ அவனுக்கே யாமினியின் மேல் சிறு கோபம் முளைத்தது.

"மிஸ். யாமினி உங்களுக்கு எது சொல்ல வேண்டும் என்றாலும் போக்ஸில் ஏறி சொலலலாம்." நீதிபதி கூறினார்.
மாயா கீழே இறங்கினாள். யாமினி போக்ஸில் ஏறி பின் நிகிலையும் நகுலையும் ஒரு முறை பார்த்தாள். நகுல் தீ பார்வை பார்த்தான் என்றால் நிகில் அவள் பக்கம் கூட பார்க்கவில்லை. முகம் கடினமானது. அவன் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்.
"இப்படி நீங்கள் ஓவ்வொரு நபரேயும் அனுமதித்தால் சட்டத்தை யாரும் மதிக்க மாட்டார்கள் யுவர் ஓனர்.." பி.பி தன் வில்லங்கமான பேச்சை ஆரம்பித்தார்.
"இது ஒரு கொலை வழக்கு. அதை தீர்மானிக்க வேண்டும் என்றால் சிலதை அனுமதித்தே ஆக வேண்டும்."
"இது ஒரு பெயில் அப்ளிக்கேஷன் மட்டும் தான் யுவர் ஓனர். இங்கே பெயில் கொடுக்க வேண்டுமா வேண்டாமா என்றதை பற்றி மட்டும் தான் நாம் ஆராய வேண்டும். "
"உங்களை மாதிரி வக்கீல்கள் இருந்தால் இத்தேசத்தின் ஒரு நீதிமன்றமும் தன் வேலையை சரியாக பண்ண இயலாது. நான் இந்த வழக்கையே முடிக்கலாம் என்று பார்த்தால் நீங்கள் இப்படி பேசுகிறீர்கள். இங்கு நான் தான் ஜட்ஜ். எனக்கு டிஸ்க்ரீஷ்னரி பவர்ஸ் இருக்கு. நீங்கள் அமர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் உங்களுக்கு என்ன கூற வேண்டுமோ கூறுங்கள் மிஸ். யாமினி "
பி.பி. அசடு வழிந்தார்.
"யுவர் ஓனர். இவர் என் நண்பர். இங்கு வேலை விஷயமாக வந்தார். இவர் என்னை பார்க்க வந்தார். அப்போது தான் இந்த கொலை நடந்திருக்கு."
"எப்படி நீங்கள் இதை உறுதியாக சொல்கிறீர்கள்?"
 
ஏதாவது குறையிருந்தா சொல்லுங்க. நான் பெட்டரா ட்ரை பண்றேன்.
 
Top