Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Mangai1.4

Advertisement

Elampooranidesigan

New member
Member
இவர்கள் இருவரும் அருகருகே வீட்டில்தான் இருக்கிறார்கள். தேவ்கு சொந்த ஊர் நன்னியூர்தான். சில வருடங்கள் முன்பு அவன் தந்தை இறந்த பிறகு வேலை காரணமாக பெங்களூரில் தன் தாயுடன் வந்து வசிக்கிறான். கவிக்கு சொந்த ஊர் பெங்களூர். அவளின் பாட்டி ஊர் பொள்ளாச்சி.அங்குதான் பள்ளி படிப்பை முடித்தாள் . இவர்கள் மூவரும் பள்ளிக்கால நண்பர்கள். இவர்கள் இருவரும் மருத்துவர்கள் தேவ் இதயநோய் மருத்துவர் கவி மகப்பேறு மருத்துவர். பெங்களூரில் உள்ள பெரிய மருத்துவமனையில் இருவரும் பணியாற்றி கொண்டிருக்கிறார்கள். விஷ்வா தொழில் சம்பந்தமாக படித்து மேல் படிப்பு வெளிநாட்டில் முடித்து குடும்ப தொழிலை பார்த்து கொண்டிருக்கிறான்.தேவ் அம்மா உறவினர் வீட்டு விசேஷத்திற்கு பொள்ளாச்சி சென்றுள்ளார். கவி பெற்றோர் பெரியமகள் வீட்டுக்கு லண்டன் சென்றுள்ளார்கள். அடுத்த நாள் காலை அப்பெண் கண் விழித்தாள். தேவ் மற்றும் கவி அவள் அருகில் இருந்த அவளை கவனித்து கொண்டிருந்தார்கள். கவி நான் பேசுறது கேக்குதா ம்ம்ம்ம் என்றால் முனகலாக. நான் கவி இவன் தேவ் நாங்க கார்ல வரும் போது எங்க கார்ல நீங்க மோதி விழுந்தீங்க ரொம்ப அடிபட்டு இருந்ததால உங்களை ஹாஸ்பிட்டல்ல சேர்த்தோம் உங்களை கொல்ல சில பேரு முயற்சி பண்ணாங்க அதனால இங்க எங்க வீட்டில் கொண்டு வந்து வைத்து தனியா மருத்துவ பார்த்தோம். தேங்க்ஸ் என் பெயர் மித்ரா நான் சென்னையிலிருந்து வரேன். நான் ஒரு ரிப்போர்ட்டர். கேஸ் விஷயமா பெங்களூர் வந்து சில ரவுடிகளிடம் மாட்டிக்கிட்டேன். என்னோட திங்ஸ் கொஞ்சம் கொடுக்க முடியுமா. அப்படியே லேப்டாப் மற்றும் போன் கொஞ்சம் கொடுக்க முடியுமா என்று கஷ்டப்பட்டு மெதுவா பேசினாள். உங்களுக்கு இன்னும் குணமாகவில்லை அதனால மெதுவா எதுவா இருந்தாலும் பண்ணலாம் என்று கூறிக்கொண்டே அவன் அணிந்திருந்த அவன் சட்டையை எடுத்து கொடுத்தாள். இல்ல இது ரொம்ப அர்ஜென்ட் பரவால்ல நான் சொல்ல சொல்ல நீங்க கொஞ்சம் செய்ங்க. அவள் அணிந்திருந்த சட்டையில் இருந்து ஒரு போவ்ச் எடுத்தாள். அதனுள் ஒரு சிறு சிப் இருந்தது . அதைப்பார்த்த கவி மற்றும் தேவருக்கு ஆச்சரியமாக இருந்தது காரணம் அவர்கள் அந்த சட்டையை துழாவிய போது ஒரு பாக்கெட் தவிர வேறு எதுவும் இல்லை. கவி இதுல இருக்கற டீடெயில்ஸ் நான் சொல்ற நம்பர்கு அனுப்பிடுங்க. அதிர்ச்சியில் இருந்து மீண்ட கவி சரி மித்ரா அனுப்புறேன் நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு. ம்ம்ம் சரி. இதப்பத்தி யார்கிட்டயும் பேசாதீங்க ரெண்டு பேரும். சரி. அதிலிருந்த வீடியோவை பார்த்து இரண்டு பேரும் அதிர்ந்துவிட்டனர் காரணம் அது ஒரு போதைப் பொருள் மற்றும் பெண்களை கடத்தும் கும்பலின் கூட்டம்.முக்கியமாக அதில் உள்ளவர்கள் தமிழகத்தின் மிகப்பெரிய புள்ளிகளும் அரசியல்வாதிகளும். அதை பார்த்த போது அவர்கள் இருவருக்கும் மித்ரா எவ்வளவு பெரிய ஆபத்தில் இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டனர். அதை அவள் சொன்ன நம்பருக்கு அனுப்பி வைத்துவிட்டனர். அந்தநாள் இப்படியே செல்ல அன்று இரவு அந்த நம்பரில் இருந்து கால் வந்தது. கவி போன் எடுத்து பேசினாள் அந்தப்புறம் பேசியவர் யார் என்று தெரிந்து கொண்டு அதிர்ச்சி அடைந்தாள் மித்ரா மருந்தின் உதவியால் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறாள் என்று கூறி பிறகு நடந்தது அனைத்தையும் சொல்லி முடித்தாள். அவர்கள் பேசிய குறுகிய நேரத்தில் அவர்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் அந்தப்புறம் பேசியவர் சேகரித்துவிட்டிருந்தார். சரிமா எங்களுக்கு ஒரு ஹெல்ப்பண்ணுங்க கொஞ்ச நாளைக்கு மித்ரா வெளியில் வரது நல்லது இல்லை. அவளை யாருக்கும் தெரியாம கொஞ்சநாள் எங்காவது இருக்க சொல்லுங்கள். அதுக்கு எனக்கு உங்களோட உதவி வேணும் நான் இப்ப ஹெல்ப் பண்ண முடியாத சூழ்நிலை இருக்கேன். என்ன சுத்தி ஆபத்து இருக்கு. இந்த நம்பரை கூட மாத்திடுங்க. நீங்களும் கொஞ்ச நாள் பெங்களூர்ல இருக்காதீங்க. இந்த பிரச்சனை முடிஞ்சதுக்கு அப்புறம் நான் உங்களை காண்டாக்ட் பண்றேன் உங்களோட ஃபுல்டீடைல் என்கிட்ட இருக்கு. ஓகே சார் கண்டிப்பாக. போனை வைத்த அதிர்ச்சியில் அமைதியாய் அமர்ந்திருந்தாள். என்ன கவி ஏன் இப்படி அமைதியா இருக்க யார் போன்ல பேசினா. தேவ் நான் பேசுனது என்று தமிழகத்தின் முக்கிய மந்திரி ஒருவரின் பெயரைச் சொல்லி அவர் சொன்ன அனைத்து தகவல்களையும் சொன்னால் நாம் நினைத்ததைவிட மிகப் பெரிய பிரச்சனை.மித்ரா மட்டுமல்ல இப்போது நாமளும் இந்த பிரச்சினையில் மாட்டி உள்ளோம்.அன்றிரவு விஷ்வா பெங்களூர் வருவதாக இருந்தது. சரி கவி விஷ்வா வந்தவுடனே இதைபத்தி நம்ம பேசலாம். அதுவரை நாம ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். நான் போய் விஷ்வாவை கூட்டிட்டுவரேன்.
 
இவர்கள் இருவரும் அருகருகே வீட்டில்தான் இருக்கிறார்கள்.
தேவ்க்கு சொந்த ஊர் நன்னியூர்தான்.
சில வருடங்கள் முன்பு அவன் தந்தை இறந்த பிறகு வேலை காரணமாக பெங்களூரில் தன் தாயுடன் வந்து வசிக்கிறான்.
கவிக்கு சொந்த ஊர் பெங்களூர்.
அவளின் பாட்டி ஊர் பொள்ளாச்சி.
அங்குதான் பள்ளி படிப்பை முடித்தாள்
இவர்கள் மூவரும் பள்ளிக்கால நண்பர்கள்.
இவர்கள் இருவரும் மருத்துவர்கள்
தேவ் இதயநோய் மருத்துவர்
கவி மகப்பேறு மருத்துவர்.
பெங்களூரில் உள்ள பெரிய மருத்துவமனையில் இருவரும் பணியாற்றி கொண்டிருக்கிறார்கள்.
விஷ்வா தொழில் சம்பந்தமாக படித்து மேல் படிப்பு வெளிநாட்டில் முடித்து குடும்ப தொழிலை பார்த்து கொண்டிருக்கிறான்.
தேவ் அம்மா உறவினர் வீட்டு விசேஷத்திற்கு பொள்ளாச்சி சென்றுள்ளார்.
கவி பெற்றோர் பெரிய மகள் வீட்டுக்கு லண்டன் சென்றுள்ளார்கள்.
அடுத்த நாள் காலை அப்பெண் கண் விழித்தாள்.
தேவ் மற்றும் கவி அவள் அருகில் இருந்து அவளை கவனித்து கொண்டிருந்தார்கள்.
கவி நான் பேசுறது கேக்குதா
ம்ம்ம்ம் என்றாள் முனகலாக.
நான் கவி
இவன் தேவ்
நாங்க கார்ல வரும் போது எங்க கார்ல நீங்க மோதி விழுந்தீங்க
ரொம்ப அடிபட்டு இருந்ததால உங்களை ஹாஸ்பிட்டல்ல சேர்த்தோம்
உங்களை கொல்ல சில பேரு முயற்சி பண்ணாங்க
அதனால இங்க எங்க வீட்டில் கொண்டு வந்து வைத்து தனியா மருத்துவம் பார்த்தோம்.
தேங்க்ஸ்
என் பெயர் மித்ரா
நான் சென்னையிலிருந்து வரேன்.
நான் ஒரு ரிப்போர்ட்டர்.
கேஸ் விஷயமா பெங்களூர் வந்து சில ரவுடிகளிடம் மாட்டிக்கிட்டேன்.
என்னோட திங்ஸ் கொஞ்சம் கொடுக்க முடியுமா?
அப்படியே லேப்டாப் மற்றும் போன் கொஞ்சம் கொடுக்க முடியுமா" என்று கஷ்டப்பட்டு மெதுவா பேசினாள்.
உங்களுக்கு இன்னும் குணமாகவில்லை
அதனால எதுவா இருந்தாலும் மெதுவா பண்ணலாம்"என்று கூறிக் கொண்டே அவள் அணிந்திருந்த அவள் சட்டையை எடுத்து கொடுத்தான்.
இல்ல
இது ரொம்ப அர்ஜென்ட்
பரவால்ல
நான் சொல்ல சொல்ல நீங்க கொஞ்சம் செய்யுங்க.
அவள் அணிந்திருந்த சட்டையில் இருந்து ஒரு போவ்ச் எடுத்தாள்
அதனுள் ஒரு சிறு சிப் இருந்தது
அதைப் பார்த்த கவி மற்றும் தேவ்வுக்கு ஆச்சரியமாக இருந்தது
காரணம் அவர்கள் அந்த சட்டையை துழாவிய போது ஒரு பாக்கெட் தவிர வேறு எதுவும் இல்லை.
கவி இதுல இருக்கற டீடெயில்ஸ் நான் சொல்ற நம்பருக்கு அனுப்பிடுங்க.
அதிர்ச்சியில் இருந்து மீண்ட கவி "சரி மித்ரா அனுப்புறேன்
நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு.
ம்ம்ம் சரி.
இதப்பத்தி யார்கிட்டயும் பேசாதீங்க ரெண்டு பேரும்.
சரி.
அதிலிருந்த வீடியோவை பார்த்து இரண்டு பேரும் அதிர்ந்து விட்டனர்
காரணம் அது ஒரு போதைப் பொருள் மற்றும் பெண்களை கடத்தும் கும்பலின் கூட்டம்.
முக்கியமாக அதில் உள்ளவர்கள் தமிழகத்தின் மிகப் பெரிய புள்ளிகளும் அரசியல்வாதிகளும்.
அதை பார்த்த போது அவர்கள் இருவருக்கும் மித்ரா எவ்வளவு பெரிய ஆபத்தில் இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டனர்.
அதை அவள் சொன்ன நம்பருக்கு அனுப்பி வைத்து விட்டனர்.
அந்த நாள் இப்படியே செல்ல அன்று இரவு அந்த நம்பரில் இருந்து கால் வந்தது.
கவி போன் எடுத்து பேசினாள்
அந்தப்புறம் பேசியவர் யார் என்று தெரிந்து கொண்டு அதிர்ச்சி அடைந்தாள்
மித்ரா மருந்தின் உதவியால் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறாள் என்று கூறி பிறகு நடந்தது அனைத்தையும் சொல்லி முடித்தாள். அவர்கள் பேசிய குறுகிய நேரத்தில் அவர்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் அந்தப்புறம் பேசியவர் சேகரித்து விட்டிருந்தார்.
சரிமா
எங்களுக்கு ஒரு ஹெல்ப் பண்ணுங்க
கொஞ்ச நாளைக்கு மித்ரா வெளியில் வரது நல்லது இல்லை.
அவளை யாருக்கும் தெரியாம கொஞ்ச நாள் எங்காவது இருக்க சொல்லுங்கள்.
அதுக்கு எனக்கு உங்களோட உதவி வேணும்
நான் இப்ப ஹெல்ப் பண்ண முடியாத சூழ்நிலை இருக்கேன்.
என்ன சுத்தி ஆபத்து இருக்கு.
இந்த நம்பரை கூட மாத்திடுங்க.
நீங்களும் கொஞ்ச நாள் பெங்களூர்ல இருக்காதீங்க.
இந்த பிரச்சனை முடிஞ்சதுக்கு அப்புறம் நான் உங்களை காண்டாக்ட் பண்றேன்
உங்களோட ஃபுல் டீடைல் என்கிட்ட இருக்கு.
ஓகே சார்
கண்டிப்பாக.
போனை வைத்த அதிர்ச்சியில் அமைதியாய் அமர்ந்திருந்தாள்.
என்ன கவி
ஏன் இப்படி அமைதியா இருக்க?
யார் போன்ல பேசினா?
தேவ் நான் பேசுனது என்று தமிழகத்தின் முக்கிய மந்திரி ஒருவரின் பெயரைச் சொல்லி அவர் சொன்ன அனைத்து தகவல்களையும் சொன்னாள்
நாம் நினைத்ததை விட மிகப் பெரிய பிரச்சனை.
மித்ரா மட்டுமல்ல இப்போது நாமளும் இந்த பிரச்சினையில் மாட்டி உள்ளோம்.
அன்றிரவு விஷ்வா பெங்களூர் வருவதாக இருந்தது.
சரி கவி
விஷ்வா வந்தவுடனே இதைப் பத்தி நம்ம பேசலாம்.
அதுவரை நாம ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்.
நான் போய் விஷ்வாவை கூட்டிட்டு வரேன்.
 
Last edited:
Top