Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

meera anjali's En Mannan Engae Endru Sollu 3

Advertisement

meera anjali

Member
Member

என் மன்னன் எங்கே என்று சொல்லு 3



சேனாதிபதி வீட்டில் அனைவரின் சிரிப்பு சத்தமும், பேசும் சத்தமும் கீதமாய் ஒலித்தது. அனைத்து நரேன் ரிஷப்சனுக்கு வந்திருக்கும் நெருங்கிய சொந்தம் பந்தங்கள் தான். ’ஏன் அங்கம்மா, உன் மூத்த பேரன் இருக்கையில ஏன் ரகசியமா இரண்டாவது பேரனுக்கு கல்யாணம் பண்ணிட்டீங்க. இல்ல நரேன் காதல் கதை எதுவும் இருக்கா.’ என நெருங்கிய சொந்ததில் இருந்த அங்கம்மாவின் சித்தி மகள் கேட்க




அந்த ரகசியமே அவருக்கே இன்னும் தெரியாது. மகனிடம் கேட்டால் எதுவும் சொல்லாமல் கல்யாணம் முடிந்துவிட்டது அவ்வளவே என கண்ணன் சொல்லிவிட்டு சென்றது அவருக்கு இன்றும் நினைவு உள்ளது.



”அப்படி எல்லாம் இல்ல தாமரை காதல் தான், பொண்ணு வீட்டுல ஒத்துக்கலை அதான் உடனே கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டான் என் பேரன். நமக்குனு ஒரு சடங்கு, சம்பிரதாயம் இருக்குல அதான் நாமளே ரிஷப்சன் வைக்கலாம் முடிவு பண்ணோம்.”




“ஓ... அப்படியா... நம்ம வீட்டு பையனுக்கு பொண்ணு கொடுக்க வரிசையில நிக்கனும். அது தெரியாத அந்த பொண்ணு வீட்டுக்கு. சரி, பொண்ணு எப்படி அமைதியான பொண்ணா?.”



“பொண்ணுக்கிட்ட ஒரு குறையும் இல்லை, லக்‌ஷனமான பொண்ணு அதோ வரா பாரு.” என தாமரைக்கு நிவியை காட்டினார்
தாமரையை பார்த்து வணக்கம் சொல்லி, ஆசீர்வாதம் வாங்கினாள் நிவி.




“ஆமா, அங்கு பொண்ணு அழக்குக்கு ஏத்த மாதிரி அமைதி தான்.எப்படியோ நரேனுக்கு நல்லபடியா அமைஞ்சிருச்சு, அடுத்து சுரேனுக்கு, எப்படிப்பட்ட பொண்ணு பார்க்க போற.”



“சுரேன் அண்ணாவுக்கு தான் அனி இருக்காளே, அப்புறம் எதுக்கு வெளில பொண்ணு எடுக்கனும்” என மிதுன சொல்ல



“மிதுனா... பெரியவங்க பேசும் போது நீ எதுக்கு இடையில பேசுற. போ... போய் உன் வேலைய பாரு, யாருக்கு யாருனு எங்களுக்கு முடிவு பண்ண தெரியும்.” அங்கு, கோவமாக மிதுனாவை பேசிவிட, அங்கிருந்தவர்கள் எல்லாம் அங்குவின் கோவம் எதற்க்கு என்று புரியாமல் பார்த்தனர்.



“அவ சொல்லுறதுல என்ன தப்பு இருக்கு அங்கு, சுரேனுக்கு அனிதாவ பேசி முடிக்கலாமே. இதுல நீ கோவப்படுறது என்ன நியாயம். சொந்த அண்ணன் மகனுக்கு, தங்கச்சி மகளை கட்டி கொடுத்தா இன்னும் நம்ம குடும்பம் நெருங்கிய சொந்தமா போயிடும்.” என தாமரை கேட்க




”இல்ல தாமரை மிதுனா சின்ன பொண்ணு அவளுக்கு என்ன தெரியும். சுரேனுக்கு நாங்க வெளிய தான் பொண்ணு எடுக்கனும். என் மகளும், அனிக்கு வரன் பார்க்க ஆரம்பிச்சுட்டா. இதுல நான் என்ன செய்ய முடியும், பசங்களோட விருப்பம் தான நமக்கு முக்கியம்.” என தாமரையிடம் மழுப்பி பேசிகொண்டிருந்தார் அங்கு




”அப்போ சாரிகாவுக்கும், இளாவுக்கு வெளிய தான் சம்மந்தம் பண்ணுறீங்களா.”



“இல்ல தாமரை, இளாவுக்கும், சாரிகாவுக்கு சுரேன் கல்யாணம் முடிஞ்சதும் அவங்களுக்கு தான் பண்ணனும்.”



“எப்படியோ, நம்ம வீட்டு பொண்ணவாச்சும் கொடுத்து சொந்தம் பிரியாம பார்த்துக்கனும் அங்கு இல்லனா குடும்பம் சிதறி போயிடும். அப்புறம் நம்ம தலமுறைக்கு சொந்த இதுனு சொல்லிகொடுக்கமா போயிரும்.” தாமரை அங்குவிடம் சொல்லிவிட்டு செல்ல, அதை கேட்டுகொண்டே வந்தார் சேனாதிபதி. அவருள் நேற்றைய யோசனை இன்று தாமரை பேசியதில் தெளிவடைந்துவிட்டது.




”மறக்காம என் மாமா பையன் ரிஷப்சனுக்கு வந்திருடா ராஜ். ஹேய் உன்னையும் தான் டி சொல்லுறேன், உன் ஆள் ப்ரஜன் கூப்பிட்டு நீயும் வந்திருங்க முதல் நாளே வாங்க. எங்க பாட்டி வீட்டுல உங்களூக்கு ரூம் செட் பண்ணி வைக்க சொல்லிருக்கேன்”.




“உன் கல்யாணத்துக்கு கூப்பிட்டா பரவாயில்ல, உன் மாமா பையன் ரிஷப்சனுக்கு நாங்க எதுக்குயா.” வேதா தயங்க



“ஆமா... அனி நாங்க எதுக்கு, எங்களுக்கு அன்கம்ப்ர்ட்ட இருக்கும்.” ராஜேஷூ சேர்ந்து சொல்ல



“ஹே, அப்படி எல்லாம் அன்கம்ப்ர்ட்டா இருக்காது. என் மாமா பொண்ணு மிதுனா, சுபா அண்ணி, சாரிகா அண்ணி, சந்து மாமா எல்லாரும் இருக்காங்க செம ஜாலியா இருக்கும். அதுவும் பெரியவங்க எல்லாம் பிஸியா இருப்பாங்க, நாங்க எல்லாம் சேர்ந்து ஒரு குரூப்பா விளையாடுவோம். கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும் பிளீஸ்யா வாங்க என் சைட் உங்களை தான் இன்வைட் பண்ணிருக்கேன்.”




அனி இவ்வளவு கூப்பிட்டு வராமல் அவர்கள் இருக்க முடியாது. ’சரி டி நாங்க வரோம்... என்ன ராஜ் நீயும் வா, ஆனா ப்ரஜன் வர முடியாது சரியா’. வேதா ப்ரஜனை தவிர்த்து அவர்கள் வருவதாக சொல்லவும் தான் அனிக்கு குஷியானது




“ம்ம்... ஓகே... வந்து சேருங்க நான் கிளம்புறேன்.” என கல்லூரியின் வாசல் வர சரியாக, சுரேன் கார் வந்து நின்றது அவள் முன்.
நான் இந்த நேரத்துக்கு தான் கிளம்புறேனு இவனுக்கு எப்படி தெரியும். நான் சொல்லவில்லையே, அப்புறம் எப்படி, சுபா அண்ணிக்கிட்ட நான் பேசவும் இல்லை. அவள் கிளம்பும் நேரம் வந்து நின்ற சுரேனை பார்த்தபடி நின்றனர் மூவர்.




“என்ன யோசிச்சு முடிச்சுடீயா... வா போகலாம் ஃபிளைட்க்கு நேரம் ஆச்சு.” அவளிடம் இருந்த பேக்கை வாங்கி டிக்கியில் வைத்துவிட்டு அவளை கைப்பிடித்து காரின் முன் சீட்டில் அமர வைத்துவிட்டு சீட் பெல்ட்டை போட்டுவிட்டு, அவன் சென்று காரின் சீட்டில் அமர்ந்து அவளின் தோழர்களை பார்த்து ‘ரிஷப்சன்ல மீட் பண்ணலாம் ஃப்ர்ண்ட்ஸ்’ அவர்களிடமும் விடைபெற்றுகொண்டு அவனது கார் கோயம்புத்தூர் ஏர்போர்ட்டுக்கு சென்றுகொண்டிருந்தது.



காரில் அவன் பக்கத்தில் அமர்ந்து போவது அவளுக்கு பழையது, ஆனால் ரொம்ப நாள் ம்கூம் இல்லை ரொம்ப மாசாம்... ம்கூம் இரண்டு வருஷம் கழிச்சு இப்போ தான் பக்கத்தில அவன்கூட கார் ட்ராவல் கொஞ்சம் நல்லா தான் ஆனா, இவன் இப்போ என்ன பண்ணப்போறானோ அதை நினைச்சா தான் பயமா இருக்கு. அவள் தன் மனதில் நினைத்துகொண்டிருக்க




“இரண்டு வருஷம் கழிச்சு இப்போ தான் இவன் பக்கத்தில கார்ல் போறோம். அடுத்து இவன் என்ன பண்ணப்போறானு பயப்புறீயா தாரா” அவள் மனதில் நினைத்ததை சரியாக அவன் சொல்ல, அவளோ உண்மையை எப்படி கண்டுபிடித்தான் என்பது போல முழித்துகொண்டிருந்தாள்.



”முட்டக்கண்ணி ரொம்ப முழிக்காத... என்கூட வரும் போது நீ இதை தவிர வேற எதையும் நினைக்கமாட்டேனு எனக்கு நல்லவே தெரியும். உன்னை பற்றி எனக்கு தெரியாதா... உன் ஃபிளைட் டைம் மார்னிங் லெவென் ஆனா நீ எனக்கு தெரியாம கிளம்பனும் நினைச்சு நைன்க்கு கிளம்பிட்ட, இதுவும் சரியா.”



அவள் அவனுடன் செல்லகூடாது என நினைத்து தான் தன் தோழர்களிடம் முதலில் கிளம்பவதை சொல்லிருந்தாள் அவர்கள் கண்டிப்பாக சொல்லிருக்கமாட்டார்கள் ஆனால், “அதெப்படி.... உங்களுக்கு...”




“இப்போ தான சொன்னேன், உன்னை பற்றி எனக்கு தான், எனக்கு மட்டும் தான் தெரியும்.” அழுத்தமாக அவளிடம் சொன்னான்
ஏர்ப்போர்ட் வந்ததும், அவளின் பெட்டி மற்றும் ஹேண்ட் பேக்கை எல்லாம் அவளிடம் கொடுத்து. ‘ஆதார்கார்ட், டிக்கெட், எல்லாம் சரியா இருக்கானு பார்த்துக்கோ. உன்னை சந்தோஷ் வந்து பிக்கப் பண்ணிப்பான், சென்னை போனதும் எனக்கு போன் பண்ணு. பார்த்து போ... அப்புறம் ஃபங்க்‌ஷனுக்கு போடுற ட்ரெஸ் எல்லாம் கரெக்ட்டா எடுத்து வைச்சிருக்கியா.”



“ம்ம்... எடுத்து வச்சுருக்கேன், பத்திரமா போயிட்டுவரேன். நீங்களும் பத்திரமா கார் ஓட்டிட்டு வாங்க, அண்ணி பத்திரம். முடிஞ்சா ட்ரைவர் போட்டு கார் ஓட்டுங்க ரொம்ப தூரம் நீங்க ட்ரைவ் பண்ணா, உடம்பு வலிக்கும்”



“இப்போவாச்சு என் பொண்டாட்டிக்கு என்மேல பாசம் வருதே. ஐம் சோ ஹாப்பி டி பொண்டாட்டி, உன் புருஷன் பத்திரமா சென்னை வந்து சேருவேன்.” அவளின் தோளை அணைத்தபடி அவளுக்கு விடைகொடுத்தான்.



அவள் உள்ளே செல்வதை பார்த்துகொண்டே இருந்தான். அவளும், அவனை திரும்பி திரும்பி பார்த்துகொண்டே உள்ளே சென்றாள்.



”இளா அம்மாவ பாட்டி வீட்டுல விட்டுட்டு நீ கம்பெனி கிளம்பு. இன்னைக்கு எனக்கு முக்கியமான விசிட் கலெக்டர் கூட நான் போகனும்.”




“சரிங்கப்பா...”



“அப்போ நீங்களும், இளாவும் எப்போ வருவீங்க.”



“அனித்ராவோட நாங்க மூனு பேரும் வந்திருவோம். நீ முன்னாடி போம்மா கண்மனி.”



“சரிங்க...”




”கண்மனி இன்னைக்கே அத்தை, மாமாகிட்ட பேசிரு அந்த வரன் பற்றி, நான் வரும் வரைக்கும் காத்திருக்க வேண்டாம்.”



“சரிங்க...”




“என்ன வரன்... யாருக்கு?” இளா கேட்க




”உன்னை நான் கம்பெனிக்கு கிளம்ப சொன்னேன், நீ இன்னும் வாட்ஸ்ப் ஸ்டேட்டஸ் போடுறதை நிறுத்தலயா.” மகனை கிளம்ப சொல்லிவிட்டு மனைவியிடம் விடைபெற்று ஆஃபிஸ் சென்றார்.




”ஹாய் அனித்ரா... ஐம் விஜய்.”




“என் பேர் எப்படி உங்களுக்கு தெரியும், நீங்க வேதாகூட அன்னைக்கு வந்தவங்க தான”



”நீ என்னை கவனிக்கலைனு நினைச்சேன், பரவாயில்லை. ஆமா, வேதா அப்பாவோட, பிஸ்னெஸ் பார்ட்னர் பையன் நான்.”



“ஓ... சென்னைக்கா.”




“ஆமா... முக்கியமான ஃபங்கஷன்ஸ் அட்டென் பண்ண நான் போகனும்.”



“ஓ...”




“நீங்க...”



“நானும் சென்னைக்கு தான் போறேன், என் மாமா பையன் ரிஷப்சன் கம்மிங் சண்டே.”



“இதுவே லேட் தானா... அல்ரெடி உங்க ரிலேஷன் வந்திருப்பாங்க”



“ஆமா... ரொம்ப லேட் என் பாட்டி நேத்தே வரசொல்லிருந்தாங்க ஆனா எனக்கு இன்னைகு தான் டிக்கெட் கிடைச்சது.”




“ஓ... அப்புறம் அனித்ரா உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்.”



“என்ன”




”என்ன டா முதல் முறை பேசனும் சொல்லுறானேனு பயப்படாதீங்க. இன்பேக்ட் இது எனக்கு ரொம்ப லேட் இனியும் பேசாம இருந்தா நல்லா இருக்காது.”




என்ன இவங்க இப்படி இழுத்து பேசுறாங்க, எதுவோ சரி இல்லையே...

‘சொல்லுங்க என்ன பேசனும்’



“சுபஸ்ரீ பற்றி தான்...”


”அண்ணி பற்றியா... அவங்களை பற்றி பேச என்ன இருக்கு.” அவனை யோசனையாக பார்க்க



“இருக்குங்க நிறையாவே இருக்கு...” ஆரம்பம் முதல் கோவையில் சுபாவை சந்தித்தது வரை சொல்லி முடிக்க. கேட்டுகொண்டிருந்தவளோ இவ்வளவு நடந்திருக்கா என்பது போல் முகத்தை அதிர்சியாகவும், ஆச்சர்யமாகவும் வைத்திருந்தாள்.



”நீங்க தான் எனக்கு ஹெல்ப் பண்ணனும், முடியாது மட்டும் சொல்லாதீங்க அனித்ரா”




“நீங்க சொன்னதை என்னால இப்பவரை நம்ப முடியலை. இதுல ஹெல்ப் கேக்குறீங்க, என்னால முடியுமானு தெரியலைங்க.” அவள் தயங்குவது அவனுக்கு தெரிய




“அனித்ரா இது என் நம்பர்... உங்களுக்கு என்மேல நம்பிக்கை வந்தா எனக்கு போன் பண்ணுங்க.” அவனின் நம்பரையும் விசிடிங்கார்டை கொடுத்துவிட்டு அவன் சென்றுவிட்டான்.



அவள் தான் யோசனையாக இருந்தாள், அவளுக்கு தெரியுமே சுபாவை பற்றி. ஆனால் இது எப்படி சாத்தியம் என்று தான் அவளுக்கு புரியவில்லை. அவளின் பிடித்தமான மாமான் மகளாயிற்றே சுபா.




”உன் அத்தை மகளை பத்திரமா ஏர்ப்போர்ட்ல விட்டு வந்தாச்சா?”



”ம்ம்... இப்போ தான் விட்டு வந்தேன், எனக்கு தான் அவளை தனியா அனுப்ப மனசு இல்லை. அப்பா தான், மாமா அவளுக்கு டிக்கெட் புக் பண்ணிட்டாங்கனு சொல்லிட்டாரு இல்லனா நம்ம கூட அழைச்சுட்டு போயிருக்கலாம்”




“இது ரொம்ப ஓவர் டா அண்ணா... அவளுக்கு டிக்கெட் புக் பண்ணிட்டாங்கனு நான் உன்கிட்ட சொல்லிட்டேன். நீ அது தெரியாம இருந்தேனு நான் நம்பனுமா.” சுபா அவனை முறைத்துப்பார்த்தாள்





”சரி விடு இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா. சரி சீக்கிரம் நாமளும் சென்னை கிளம்பலாம், இன்னேரம் அவ சென்னை போயிருப்பா, தனியா இருப்பா”




“ம்ம்... இப்படியே போச்சுனா உனக்கு முத்திருச்சுனு அர்த்தம்”




”ஆம், ரொம்ப... அவளை நினைச்சாலே நான் நானா இருக்கமாட்டேன். அப்படி அவமேல பைத்தியமா இருக்கேன்.” அவன் உணர்ந்து சொன்னான் என்பதை சுபா அறிந்துகொண்டாள்.




”இங்க இருக்குற சாலிகிராமத்தில் இருந்து வர்றதுக்கு உனக்கு என்ன பதினொருமணி வரை ஆச்சா கண்மனி. இங்க நடக்குற முதல் விசேஷம் நீ தான் முன்னே இருக்கனும் உனக்கு தெரியாதா.” வந்த மகளை வா என அழைக்காமல் இங்கே நீ தான் முக்கியம் என்ற பாவனையில் அவர் கோவப்பட




“அம்மா.. நான் என்ன செய்ய அவர்க்கு தேவையானது செய்துகொடுத்துட்டு, ஒவ்வொருத்தருக்கு ஒன்னொன்னு பார்த்து செய்யனும். அதெல்லாம் முடிச்சுட்டு வர கொஞ்சம் லேட் ஆகிருச்சு அதுக்கு இவ்வளவு கோவமா.”




“அத்தை வந்தவுடனே அண்ணிக்கிட்ட சண்டையா..?” அங்கு வந்தார் மாலதி




“வாங்க அண்ணி...”



“வரேன் அண்ணி... எப்படி இருக்கீங்க ரிஷப்சன் வேலை எல்லாம் எப்படி போகுது.”



“எல்லாம் நல்லபடியா போகுது, அண்ணே, அனி எப்போ வருவாங்க.”



“பெரியம்மா சந்தோஷ் அண்ணா தான் அனிய பிக்ஃகப் பண்ண போறாங்க.” என மிதுனா சொல்ல.



“ஓ... அப்படியா...”



“இளா வரலையா...”



“முக்கியமான போன்கால் சொல்லி வெளிய நின்னு பேசிட்டு இருக்கான் அண்ணி.”




“பாட்டி... எப்படி இருக்கீங்க” பேசியபடி வந்தான் இளா



“வா இளா... எப்படி இருக்க.”



“நல்லா இருக்கேன் பாட்டி... அத்தை எப்படி இருக்கீங்க”



“நல்லா இருக்கேன் இளா. நீ எப்படி இருக்க?”


“நல்லா இருக்கேன் அத்தை... எங்க நரேன் மச்சான், மிதுனாவ..?”



“மாமா... நீங்க நேரடியா சாரிகா எங்கனு கேளுங்க. உங்க முன்னாடியே இருக்குற என்னை பார்க்கமா பெரியாம்மகிட்ட விசாரிக்குறீங்க.” அவன் தேடலை கண்டுப்பிடித்தவள் போல் சொல்லிச் சிரிக்க.



“ஹே வாயடி... காலேஜ் போகலையா?”




“போகலை மாமா... அனி இன்னைக்கு வந்திருவாள அதான் அவகூட என்ஜாய் பண்ணுறதுக்கு வெயிட் பண்ணுறோம்.”



“ஹே இளா... எப்படி இருக்க.. ரொம்ப பிசிமேன் ஆகிட்ட போல.”



‘என்ன செய்யுறது மச்சான்... சொந்தமான கம்பெனி வச்சு நடத்துறேன் இப்போ அதிகமா வேலையும் இருக்கு அதான் உங்களை மட்டுமில்லை நம்ம சந்தோஷ்கூட பார்க்க முடியலை.’



தன் கணவனும், இளாவும் பேசுவதை பார்த்து அருகில் வந்து நின்றாள் நிவி. “என்ன நிவி...” மனைவி அருகில் வந்ததை பார்த்து கேட்க



“நீங்க இன்னும் சாப்பிடலை அதான் கூப்பிட வந்தேன்”



“அதெல்லாம் இருக்கட்டும்... இவன் யாரும் தெரியுமா? இவன் தான் என் மச்சான் இளா. என் அத்தை பையன்... உனக்கு அண்ணன் முறை வேணும்.” முதல் முறையாக அறிமுகம் செய்தான்



”வணக்கம் அண்ணா... எப்படி இருக்கீங்க”



“நல்லா இருக்கேன் மா... உன்னை நல்லா பார்த்துகிறானா.”



“ரொம்ப நல்லா பார்த்துகிறாங்க.”



“எப்படி இருக்க நிவி.”



‘நல்லா இருக்கேன்ம்மா... அப்பா வரலையா.”



‘அந்த மனஷனுக்கு விசிட் போகனுமா, ஈவ்வினிங் வந்திருவாங்க.’
வாசலில் காரின் ஓசை கேட்டு மிதுன வாசலுக்கு செல்ல. அங்கே அனி வந்துகொண்டிருந்தாள்.



”ஹே அனி வந்துட்டா... வா அனி... ரொம்ப மிஸ் பண்ணேன் உன்னை.. வா உள்ள போகலாம்.”



அஜய், “ஒகே டா... நான் சென்னை போனதும் உனக்கு மெசேஜ் பண்ணுறேன்.”



“மச்சி பார்த்து டா, எல்லாரையும் ஹார்ஸா பேசிடாத.” மித்ரன் தன் உயிர் தோழனை கட்டியணைத்து விடைகொடுத்தான்.



இனி சென்னையில்…………






தொடரும்……..




 
Top