Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

meera anjali's En Mannan Engae Endru Sollu - 4

Advertisement

meera anjali

Member
Member
hiiiiii.................... friends and sister's eppadi irukenga.... sorry rombave late aakiruchu ud.... padiththuvittu like and comments potunga.... ini seekirama na ud poturen.... stay home stay safe .......






என் மன்னன் எங்கே என்று சொல்லு 4


சேனாதிபதியின் வீட்டு விழா என்றால் சும்மாவா? என்பது போல் அந்த பெரிய மண்டபம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, காது ஜவ்வு கிழியும் அளவுக்கு செண்டு மேளத்தாளம், மறுப்பக்கம் வந்தவர்களை வரவேற்க்கும் பெரியவர்கள் நின்றிருந்தனர். மண்டபத்தின் உள்ளே மெல்லிசை கச்சேரி பிரபல பாடகருடன் நடந்துகொண்டிருந்தது.



சேனதிபதி குடும்பமே முதல் விசேஷம் என்பதால் அனைவரும் மகிழ்ச்சியுடன் அங்குமிங்கும் வந்தவர்களை வரவேற்றுகொண்டும், பேசிக்கொண்டும் இருந்தனர். பெரியவர்கள் தங்களது இணையுடன் வந்தவர்களை பார்த்து நலம் விசாரித்து மணமக்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க அழைத்துகொண்டு சென்றனர்.
சேனதிபதி குடும்பம் இவர்கள் தான் என குறிக்கும் வகையில் பெரியவர்கள் ஒரே மாதிரி உடையில் இருக்க. சிறியவர்கள் கொஞ்சம் வித்தியசமாக ஜோடி, ஜோடியாக ஒரே மாதிரி உடையில் இருந்தனர்.
சிரியவர்கள் தங்களது சொந்தங்களை ஒரு பார்வையில் வரவேற்று, பின் தங்களது நட்பு கூட்டங்களுடன் சேர்ந்து பேசி சிரித்துகொண்டிருந்தனர். இளாவும், சாரிகாவும் மேடையில் இருக்கும் மணமக்களுக்கு துணையாக பக்கத்தில் இருந்தனர்.


”ஹரி, எங்க சுரேன்... மண்டபத்துக்கு வந்ததுல இருந்து அவனை காணோம்.” அங்கம்மாள் மூத்தமகனிடம் விசாரிக்க.



“இங்க தான் இருப்பான்மா... நான் பார்த்துட்டு வரேன்.”



“உன் மகன வரவேற்க்குற இடத்துல நிக்க சொன்னேன்.”


”இதோ அவனை நிக்க சொல்லுறேன் ம்மா.” தாயிடம் இருந்து விலகி சுரேனை தேட ஆரம்பித்தார்.


“சந்தோஷ்.., சுரேன் எங்க”


“தெரியலை பெரியப்பா...”



”சுரேன் அண்ணா, அனிகூட இருந்தாங்க பெரியப்பா.” அவள் சொல்ல


“எங்க இருந்தாங்க...”


”மண்டபத்துல செக்ண்ட் ஃப்ளோர் பெரியப்பா.”



”சுபா, உடனே உன் அண்ணன வரசொல்லு...” அவர் கோவத்தை மறைத்தப்படி.


“சரிங்க ப்பா.”


“ஏய்.. எருமை... எதுக்குடி அண்ணன் இருக்குற இடத்தை சொன்ன. உன்னை இரு வந்து அடி இருக்கு.” அவளிடம் சந்தோஷ், சுபா கோவத்தை காட்டிவிட்டு சென்றார்கள்



”சுரேன் இன்னும் எவ்வளவு நேரம் என்னை உங்ககூட வைச்சுக்க போறீங்க. கீழ அம்மா, அப்பா என்னை தேடுவாங்க. வாங்க போகலாம்... இல்லை என்னை விடுங்க.”



“போகலாம் டி பொண்டாட்டி... புருஷனுக்கு இந்த ட்ரெஸ் எப்படி இருக்குனு சொல்லு முதல” என தான் அணிந்திருந்த கோட் சூட்டில் அழகாக இருக்கிறதா என அவளிடம் கேட்க. அதுவும் அவளும், அவனும் ஒரே நிறத்தில் மை ப்ளூவில் ஸேரியில் அவளும், க்ரே கலர் கேட், சார்ட் மை ப்ளூவிலும் இருந்தது.



“அழகாக இருக்கீங்க மாமா... உங்களை இன்னும் காதலிக்க தான் தோணுது.” அவனிடம் சொல்லியபடி அவள் கண்ணில் இருந்த மை எடுத்து அவனது காது ஓரத்தில் வைத்தாள் திருஷ்டியாக.



“அப்போ நானும் லவ் யூ டி பொண்டாட்டி...” அவளின் செயலில் இன்னும் அவளை காதலிக்க தோன்றியது அவனுக்கு.



”அழகாக இருக்கேனு சொன்ன என் பொண்டாட்டிக்கு சின்ன பரிசு…” என சொல்லியபடி அவளின் அருகில் வந்து முகத்தை தாங்கியபடி அவளின் இதழில் முத்தம் கொடுக்க தயாரானன்.
அவளோ, “மாமா ப்ளீஸ் இது மண்டபம்... யாரவது வந்திருவாங்க... உங்க காதலை கொஞ்சம் தள்ளி வைங்க.”


“அப்படி யாரும்…” அவன் சொல்ல வருவதற்க்குள்



“டேய் அண்ணா அப்பா, பாட்டி உன்னை தேடுறாங்க. அனிதாவ மாமா தேடுறாங்க.” சொல்லிகொண்டே அவர்களின் அறையின் கதவை தட்டிகொண்டிருந்தாள் சுபா.
வெளியில் சுபாவின் குரல் கேட்டதும், சுரேனை தள்ளிவிட்டு கதவை திறந்துகொண்டு வெளியே வந்தாள் அனி.


“அண்ணி, நாம போகலாம்... அவங்க இன்னும் ரெடி ஆகலை.” உளரிவிடுவோமோ என்பது போல் அவள் படபடக்க, சுபா சரி என அவளை அழைத்துகொண்டு கீழே சென்றுவிட்டாள்.



”உங்களை மாட்டிவிட்டது இந்த மிதுனா தான் அனி. அண்ணா உன்கூட பேசனும் சொல்லி தான் உன்னை நான் மேல அனுப்பி வைச்சேன். அதுகூட யாருக்கு தெரியாமல். ஆனா இந்த மிதுனா பார்த்துட்டா அனி அதை அப்படியே அப்பாக்கிட்ட சொல்லிட்டா. இல்லனா நாங்க எதுக்கு உன்னையும் அண்ணாவையும் தொந்திரவும் செய்ய போறோம்.” அனியின் பதட்டத்தை பார்த்து சுபா விளக்கி சொல்ல.




“அவங்க என்கிட்ட ஒரு மணி நேரமா பேசிட்டு தான் இருந்தாங்க அண்ணி. அதுமட்டுமில்ல ஊருக்கு வந்ததில இருந்து எனக்கு மெசேஜ் மேல மெசேஜ் தான். ஃபங்கஷ்ன்ல அவங்க தான் இந்த வீட்டு பிள்ளையா எல்லா வேலையும் பார்க்கனும் தான.” அவள் வேறு மனநிலையில் சுபாவிடம் பேச



”இங்க என்ன செய்யுற அனி... வரவேற்ப்பு இடத்துல உன்னை பெரியண்ணி வரச்சொன்னாங்க போ... சுபா, உன்னை சாரிகா மேடைக்கு வரச்சொன்னா.” என அனியின் தாய் கண்மனி சொல்லிவிட்டு சென்றார்.
வரவேற்ப்பு இடத்தில் அவள் தாய் சொன்ன மாதிரி பெரியத்தையை காணவில்லை. அதற்க்கு பதில் அவளை பார்த்து சிரித்துகொண்டு இருந்தான் சுரேன். அவளுக்கு புரிந்து போனது இது அவனின் வேலை தான் என்று.




“என்ன, என் அம்மா உன்னை வரச்சொன்னாங்கனு அத்தை சொல்லிருப்பாங்களே.”



“உங்க வேலைனு எனக்கு தெரியாதா…? அது தெரிஞ்சு தான் வந்தேன். ஆனா பாட்டி கண்ணுல மட்டும் நாம விழுந்தோம் அவ்வளவு தான்.” அவனிடம் சிரித்துகொண்டே சொல்லி, வந்தவர்களை வரவேற்று கொண்டிருந்தாள்.




”பாட்டி பார்க்கனும் தான உன் பின்னாடி சுத்திட்டு இருக்கேன் பொண்டாட்டி. அப்போ தான எனக்கு உனக்கு இன்னொரு முறை கல்யாணம் செய்து வைப்பாங்க.”



“அப்படி ஒரு நினைப்பு உங்களுக்கு இருந்தா இன்னேரம் நம்ம கல்யாணம் முடிஞ்சுருக்கும் விதி வலியது மாமா” கடை விழியோரம் வந்த கண்ணீரை அவனுக்கு தெரியாமல் சுண்டிவிட்டாள்.
அவளின் பேச்சில் அவன் திகைத்தாலும், அவள் எதுவோ மறைப்பது போல தான் அவனுக்கு தோன்றியது. அது என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டும். என அவன் நினைத்துகொண்டிருக்கும் போது தான், ஒரு புதியவன் அனியை பார்த்து சிரித்துகொண்டே வந்தான்.




”அனித்ரா நீங்க எப்படி இங்க...?” விஜய் ஆச்சர்யமாக கேட்க



“என் மாமா பையன் ஃபங்க்‌ஷன் சொன்னேல... ஆமா நீங்க?”



“நானும் ஆல்ரெடி சொன்னேல, ஃபங்க்‌ஷனுக்கு போகனும் அதுல இங்கவும் ஒரு இன்வைட்.”



“ஓ... வாங்க... சுரேன் மாமா இவங்களை உள்ளே அழைச்சிட்டு போறேன் நீங்க மத்தவங்களை கவனிங்க.” அவனிடம் சொல்லிவிட்டு விஜயை அழைத்துகொண்டு சென்றாள்.



”உங்க போன் கால்க்காக நான் வெயிட் பண்ணேன் அனித்ரா.” அவன், நீ யோசித்தாயா என கேட்க



“இன்னும் யோசிக்கலையே...” அவளும் அவனுக்கு நேரடியாய் பதில் கூறினாள்



”ரொம்ப நாள் எடுத்துக்காதீங்க அனித்ரா...” என் வலியை கொஞ்சமே புரிந்துகொள் என அவன் சொல்ல.



“சரிங்க...”
மேடையில் மணமக்களுக்கு பரிசளித்துவிட்டு கீழ் இறங்கி வந்தவனை பார்த்தாள் சுபா. இவன் எங்கே இங்கே என்பது போல் அவனை பார்த்துகொண்டே மற்றவர்களிடம் பேசிகொண்டிருந்தாள்.
குடும்பத்தில் இருந்த அனைவரிடமும் அவனை அறிமுகப்படுத்தினாள். கண்ணனோ “எப்படிம்மா என் தொழில் நண்பர்னு உனக்கு தெரியும்.” அவளை நன்றி பார்வை பார்த்துவிட்டு விஜயிடம் பேசிகொண்டிருந்தார் கண்ணன்.



”ஓகே அனித்ரா உங்களை மீட் பண்ணது சந்தோஷமா இருக்கு. என் சந்தோஷம் இன்னும் முழுமையாகனும்னா சீக்கிரம் எனக்கு போன் பண்ணுங்க.” அனித்ராவிடம் சொல்லிவிட்டு ஓரக்கண்ணால் சுபாவை பார்த்துவிட்டு சென்றான்.


ஃபங்கஷன் நல்லபடியாக முடிந்து வந்திருந்த விருந்தினர்களை நல்ல முறையில் அனுப்பி வைத்துவிட்டு. அந்த மண்டபத்திலேயே கொஞ்சம் ரிலாக்ஸ் செய்தனர் குடும்பம் முழுவதும்.



”எல்லாம் நல்லபடியா முடிஞ்சது... எல்லாரும் நம்ம நரேன் நிவி ஜோடி நல்லா இருந்ததுனு சொன்னாங்க.” என அங்காம்மாள் சொல்ல



“அதுமட்டுமா பாட்டி, சுரேன் அண்ணா, அனி ஜோடிகூட சூப்பரா இருந்தது. அதுகடுத்து இளா மாமா, சாரிகா ஜோடியும் நல்லா இருந்ததுனு சின்ன பாட்டி சொல்லிட்டு இருந்தாங்க.” மிதுனா வாய்விட



“என்ன... சுரேன், அனி ஜோடி சூப்பரா இருந்ததா? மிதுனா நீ சின்ன பொண்ணு மாதிரி பேசுனு உனக்கு எத்தனை முறை சொல்லுறது.”



“அனிக்கு மாப்பிள்ளை பார்த்தாச்சு அடுத்து அவளோட நிச்சயம் தான் நடக்க போகுது.” என தன் மகள் கண்மனி சொல்லிருந்த வரனை பிடித்தாதல் அதை சொன்னார் அங்கம்மாள்.
அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியாகமல் ஒருவன் மட்டுமே அதிர்ச்சியாக இருந்தான் அவன் தான் சுரேன். ஓரளவிற்க்கு அனிக்கும் மற்றவர்களுக்கு இவ்விஷயம் தெரியும். ஆனால் யாரும் சுரேனிடம் சொல்லவில்லை. அதனால் ஊரில் இருந்து வந்த சுரேனை அதிகமாய் அனியை பார்க்கவிடாமல் செய்தார்கள் அவர்கள் குடும்பத்தினர்.



”என்ன சொல்லுறீங்க பாட்டி... அனிக்கு நிச்சயமா...?” அவன் கேள்வி பாட்டியிடம் இருந்தாலும், கண்களோ அனியிடம் நிலைத்து நின்றது.
அவளோ தலைகுனிந்து அமர்ந்திருந்தாள்... இவ்விஷயம் அவள் காதில் மிதுனா ரகசியமாய் சொல்லியதால்.



“ஆமா, சுரேன்... உனக்குமே நாங்க பொண்ணு பார்த்தாச்சு.” இன்னொரு அதிர்ச்சியை அவனுக்கு வைத்தார் பாட்டி



“அனிக்கு பார்த்த மாப்பிள்ளை கொல்கத்தாவுல சப்கலெக்ட்ரா இருக்கான். ரொம்ப நல்ல பையன் வீட்டுக்கு ஒரே பையன்.” அவர் சொல்லிகொண்டே போக



”அப்போ அனிக்கு நான் யாரு” என்றபடி வந்தான் அஜய்கிருஷ்ணா.
அவனை யாரும் அங்கு யாரு எதிர்ப்பார்க்கவில்லை. ஒருவரை தவிர. வேறு யாருமில்லை சேனாதிபதி தான். அவருக்கு முன்னே தெரியும் அஜய் இந்தியா வருவது. இப்பொழுதுகூட அவர்தான் விமான நிலையம் சென்று அவனை அழைத்து வந்தது.



“என்ன எல்லாரும் அதியமாவும், அதிர்ச்சியாவும் பார்க்குறீங்க. அப்போ கண்டிப்பா யாரும் என்னை எதிர்ப்பாக்கலை சரியா.”



“ஆமா அஜூ அண்ணா... எப்படி இருக்கீங்க” இப்பொழுது ஆர்ப்பாட்டமாக அழைத்துகொண்டே அவனது அருகில் சென்றாள் மிதுனா.



“ஹே மிது குட்டி எப்படி இருக்க...” தங்கையை தோளோடு அணைத்துகொண்டு விசாரித்தான்.
அவன் பின்னயே சேனாதிபதியை பார்த்த அங்கம்மாள் எதுவும் பேசாமல் அனைவரையும் வீட்டிற்க்கு கிளம்பச் சொல்லி கட்டளை விதித்தார்.



வரிசையாக வந்து நின்ற கார்களில் இருந்து ஒவ்வொருவராக உள்ளே செல்ல அஜயோ வீட்டின் வாசலில் நின்று பழைய நினைவை எண்ணிப்பார்த்தான். அவ்அன் நிற்பதை பார்த்த சேனாதிபதி தோளில் கை வைத்தபடி “உள்ள வாப்பா...” அவனின் தோளில் கை போட்டபடி அழைத்து சென்றார்.




அனைவரையும் பார்த்து நலம் விசாரித்தவன், பாட்டியின் அருகில் சென்று அவரிடம் “என்னை மறந்துட்டு எப்படி நீங்க அனிக்கு வேற இடத்துல மாப்பிள்ளை பார்க்கலாம். நானும் அனிக்கு முறை பையனு உங்களுக்கு தெரியாதா பாட்டி. இல்லை என்னை முழுசா...” அவன் முடிக்ககூட இல்லை



“என்ன அஜூ இப்படி எல்லாம் பேசுற... நீ எங்க இருந்தாலும் இந்த வீட்டுக்கு மூத்த வாரிசு நீயும் சுரேனு தான்.” பாட்டி குரல் தடுமாற்றத்தில் இருந்ததை சுரேன் குறித்துகொண்டான்.



“அப்புறம் என்ன... எனக்கும் அனிக்கும் தான் கல்யாணம் நடக்கனும். அதுக்கான வேலையை அடுத்த வர்ர நல்ல நாள்ல இருந்து பார்க்க ஆரம்பிக்கலாமே பாட்டி.” என்னவோ அவனே நாள் குறித்துகொண்டு இன்று கல்யாணத்தை வைத்துகொள்ளாலம் என்பது போல் இருந்தது அவனது பேச்சு.


அங்குவோ கண்மனியயும், இளங்கோவையும் பார்க்க. பாட்டியின் பார்வையு தொடர்ந்தது அஜயின் பார்வை, “என்ன அத்தை எனக்கு உங்க பொண்ண கட்டிகொடுக்க மாட்டீங்களா..? சொல்லுங்க மாமா..?” அவர்களிடமும் அவனது அதிரடி பேச்சு இருக்க.
அனியும், சுரேனு இனி என்ன செய்வது என இருவரின் பார்வை இருந்தது. ஏதாவது சொல் என சுரேன் பார்வையில் அனியிடம் சொல்ல. அவளோ, அவனின் பார்வைக்கு பதில் பார்வையில் என்னால் முடியாது தலை மறுப்பாக ஆட்டிகொண்டிருந்தாள். இவளை நம்பினால் வேலைக்கு ஆகாது என முடிவெடுத்தவன் பேச ஆரம்பித்தான்.



“இல்லை... யாரும் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க கூடாது. ஏன்னா, நான்... அனி... நாங்க...” என அவன் சொல்ல முடியாமல் தவிக்க
அவனின் தவிப்பை பார்த்துகொண்டிருந்த அனி அவன் முழுதாக சொல்லிவிடு இல்லையென்றால் நம் காதல் வாழ்க்கையே போய்விடும் என மனதுக்குள் சுரேனை சொல்லிவிடு.



“என்னால... என் தாரவ விட்டுக்கொடுக்க முடியாது. சாரி அஜய், எனக்கு என் தாரா, அவளுக்கு நான். அதனால எனக்கு பார்த்த பொண்ண உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க சொல்லுறேன்.” திமிராக பதில் சொன்னான்



அனைவரும் திகைக்க.. அஜய் மட்டும் புன் சிரிப்புடன் அனியின் அருகில் சென்று “நீ சொல்லு அனி என்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லைனு”


சுரேன் மட்டுமின்றி அனைவரும் அனியை பார்க்க. அவள் என்ன பதில் சொல்ல போகிறாள் என்று. சுரேனின் மனமோ “சொல்லு தாரா... நம்ம காதல் பத்தி... அதுக்கும் மேல நடந்ததை சொல்லு டி” அவன் தவிக்க


“என்... எனக்கு... என் அப்பா, அம்மா முடிவு தான் என் மு... டி...வு...” திக்கி திணறி அவள் சொல்லி முடித்துவிட்டு அவளது அறைக்கு ஓட்டம் பிடித்தாள்.


அனைவரும் அனியின் பதிலில் எரிச்சல் அடைந்தாலும், அஜய்க்கு அது வெற்றி தான். பாட்டியோ நிம்மதியாக இருந்தார், சிறியவர்களோ அனியின் மீது கோவமாக இருந்தார்கள்.



“அத்தை, மாமா நீங்களே கேட்டீங்கள... உங்க பொண்ணுக்கு உங்க முடிவு தானம் நீங்க சொல்லுங்க.”


இருவரும் அங்கம்மாவை பார்க்க... அவரோ, “சம்மதம் சொல்லுங்க” கண் மூடி திறந்தார்.



“இப்போ என்ன சொல்லுற சுரேன்.” வெற்றி எனதே பார்வையால் சுரேனை பார்த்தான் அஜய்.



”இங்க இருக்குற எல்லாருக்கு ஒன்னு சொல்லுறேன் எனக்கும், தாரவுக்கு தான் கல்யாணம் நடக்கும். அஜய் உனக்கும் சொல்லுறேன் என் தாராவ உனக்கு எந்த ஜென்மத்திலும் விட்டுகொடுக்கமாட்டேன். இது எங்க காதல் மேல சத்தியம்.” அனைவரையும் கோவமாக சாடிவிட்டு, ஒரு சத்தியத்தையும் செய்துவிட்டு சென்றான்.



”சுரேன்கிட்ட நான் பேசிப்பார்க்குறேன் அஜய். நீ போய் ரெஸ்ட் எடு, சந்தோஷ் அஜய் அழைச்சுட்டு அவன் ரூம்க்கு போ.” ஹரி சொல்ல
அனைவரும் கலைந்து அவரவர் அறைக்கு சென்றனர். சேனாதிபதியோ அஜயின் சொல்லை கேட்டது தவறோ என யோசிக்க ஆரம்பித்தார்.

ஆனால் அங்கம்மாள் மனம் இனி அனியை, சுரேனையும் யாரும் சேர்த்து பேசமாட்டார்கள் என அவர் நிம்மதியாக இருந்தார்.
ஆக மொத்தம் அந்த குடும்பத்தில் ஒரு ஜோடியை தவிர மற்ற அனைவரும் நிம்மதியாக இருப்பது போல் காட்டிகொண்டனர்.
அனியோ தன் தோழர்கள் ஏன் வரவில்லை என்று கூட யோசிக்காமல். சுரேனின் மனம் என்ன பாடுபட்டுகொண்டிருகிறதோ என்னும் தவிப்பில் அவள் அழுது கரைய.


புது தம்பதியர்கள் தங்களது வாழ்க்கையை தொடங்காது தள்ளிப்போட்டனர்.



இப்படி ஆளூக்கு ஒவ்வொரு மனநிலையில் இருக்க. அஜயோ சுகமாக தூங்கிக்கொண்டிருந்தான்.


தொடரும்……………

 
Top