Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Mezhugup Poovae 3

Advertisement

Admin

Admin
Member

அத்தியாயம் – 3

விழா முடிந்து வீடு திரும்பும் வழியில் வினோத் அன்பரசியிடம் எதுவும் கேட்கவில்லை. அவளும் முகத்தை உம்மென்று வைத்து கொண்டு, எதையோ பறிகொடுத்ததை போல வந்தாள். பார்க்கப் பார்க்க, வினோத்தின் கோபம் கூடியதே தவிர குறையவே இல்லை.

எவ்வளவு முறை கூறுவது? இவளை என்ன செய்து அல்லது சொல்லி மாற்றலாம்? இதை யோசித்தே அரை கிழவன் ஆகிவேனோ? பெருமூச்சை வெளிற்றிவிட்டு, வீட்டிற்கு வண்டியை விரட்டினான்.

ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்ததும், வண்டியை அதனுக்குறிய இடத்தில் விட்டுவிட்டு, அன்பரசியை அவர்களின் அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் சிறுவர்கள் விளையாடும் இடத்திற்க்கு அழைத்து சென்றான்.

அவன் எதை பற்றி பேசப் போகிறான் என யூகித்திவள் போல, “இல்ல வினோ. வீட்டுக்கு போய் பேசலாம் எதுவா இருந்தாலும்”, என கூறி அவன் பதில் பேச இடமளிக்காமல், வீட்டிற்குள் விரைந்தாள்.

இன்றைக்கு அவளிடம் முடிவாக பேசியே ஆக வேண்டும், என மனதில் தீர்மானம் நிறைவேற்றி, மாடிப்படிகளில் தாவினான் வினோத். வீட்டிற்குள் சென்றதும் அன்பரசி உடை மாற்றிவிட்டு, தனக்காக காத்திருந்தவனிடம், “என்ன பேசனும்?” என்றாள்.

அவள் கேட்ட குரல் சாதரணமாக இருந்ததால் மேலும் கடுப்பானான் வினோத். “அவன் ஒருத்தன் என்னடான்னா ஒண்ணுமே நடக்காத மாதிரி பிஹேவ் பண்றான். இவ அதுக்கும் மேல இருப்பா போலுருக்கு! கடவுளே!”

இப்படி மனதிற்க்குளேயே புலம்பினான் வினோத். வெளியே புலம்பல் எல்லாம் இல்லை. எரிமலை தான் வெடித்தது…

“ஹே என்ன ஒண்ணுமே நடக்காத மாதிரி என்ன பேசனும்னு கேக்கற? பங்ஷன்ல என்ன நடந்துச்சுனு நான் பார்த்துட்டு தான் இருந்தேன்…

அவனையே நீ எதுக்கு பார்த்துட்டு இருந்த?? உனக்கு வேற வேலையே இல்லையா? அவன் தான் நம்மள தெரியாத மாதிரியே காட்டிக்கிட்டான்ல? அப்புறம் என்ன?

நீ இந்த மாதிரி பண்றது எனக்கு சுத்தமா பிடிக்கல, சொல்லிட்டேன் அன்பு… அதுக்கப்புறம் உன்னோட இஷ்டம். அவனும் அவனோட மூஞ்சியும்!! பார்த்தாலே உடம்பேல்லாம் பத்திட்டு எரியுது…

அவனை போய் நீ எப்படி தான்…. சே! சரி அதேல்லாம் விடு… இனிமே இந்த மாதிரி பண்ணாத. புரியுதா?? இன்னிக்கே ரொம்ப கோபம் தான்.. இருந்தாலும் உன்னை பார்க்கவும் ரொம்ப பாவமா இருந்துச்சு… அதனால தான் இதோட விட்டுட்டேன்.

என்ன நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன்… எதுவும் சொல்லாம இருக்க?”

இவ்வளவும் ஹாலை அளந்துக் கொண்டே அப்பப்போ அன்பையும் பார்த்தே பேசினான். ஆனால், கடைசியாக அவள் பேசவே இல்லை என்றவுடன் சந்தேகம் வந்து, அவளை திரும்பி பார்க்கவும் தான் தெரிந்தது அவள் கையில் இருந்த பேப்பரை படித்துக் கொண்டிருந்தாள் என.

வந்த கோபத்தில் நேராக அவளிடம் சென்று கையில் இருந்த செய்தித்தாளை பிடுங்கவும் தான், நம் ஹீரோயின் அவன் முகத்தை பார்த்தாள். “நான் பேசிட்டு இருக்கே…” வினோத்தின் குரல் அந்தரத்தில் தொங்கியது.

காரணம், அன்பரசி தன் காதுகளில் இவ்வளவு நேரமாக வைத்து இருந்த பஞ்சை எடுத்தாள். அதுவும் எப்படி? அப்பாவியான ஒரு லுக்கோடு! வினோத் முறைக்கவும் தன்பக்க விளக்கத்தை கொடுத்தாள். “நீ என்னை எப்படியும் நல்லா திட்ட போறேன்னு தெரிஞ்சு போச்சு. நீ திட்டி என்னால அதை தாங்க முடியுமா சொல்லு?

அதான், இப்படி!” கையில் வைத்திருந்த பஞ்சை காட்டி, கண்ணடித்து அவள் சொல்லவும், வினோத்தின் முகம் உடனே ஸ்விச் போட்டது போல் மாறியது. புன்னகையை மலர விட்டு, சண்டைக்கு என்ட் கார்ட் போட்டான் அந்த நல்லவன்.

அதே நேரத்தில், சென்னையின் வேறு ஒரு இடமான அண்ணா நகரில், வீட்டின்னுள்ளே நுழைந்தான் ஜீவா… போர்ட்டிக்கோவில் காரை நிறுத்திவிட்டு, ஹாலில் அவனுக்காக காத்திருந்த அவன் அப்பா ராகவனை பார்த்தான்.

“உனக்காக தான் ரெண்டு பேரும் தூங்காம இருக்காங்க… சீக்கிரமா போப்பா” அவர் கூறியதற்க்கு தலையசைத்தவாரே மாடிப்படிகளை இரண்டிரண்டாக கடந்து, அவன் அறைக்குள்ளே சென்றான்.

அவன் காலெடுத்து வைத்தது தான் தெரியும்… அதற்க்குள், “அப்பாபாபாபா” என கூவிக் கொண்டே இரண்டு பூச்செண்டுகள் வந்து அவனை அணைத்துக் கொண்டன…

இரண்டு பூச்செண்டுகளையும் அள்ளி முகர்ந்து, வலிக்காமல் முத்தம் வைத்து விடுவித்தான் ஜீவா…

தன் உயிருக்குயிரான ஜீவன்களை தூக்கிக் கொண்டு, படுக்கையில் அமர்ந்து அவர்களுடன் பேச்சு கொடுக்கலளானான். ஐந்து வயதான நிலேஷும், நான்கு வயதான நிக்கித்தாவுமே அந்த ஜீவன்கள்…

அவர்களுடன் பேசியே, அன்றைக்கு என்ன நடந்தது என்பதை கேட்டு தெரிந்து கொண்டான். “முதல்ல நிலு குட்டி சொல்லுடா… ரெண்டு பேரும் நைட் என்ன சாப்பிட்டீங்க?”

“அப்பா.. நா சப்பாத்தி சாப்பிட்டேன்… நிக்கி பாப்பா புவா சாப்ட்டா”

“சரி ஓகே… நிக்கி குட்டி என்ன பண்ணீங்க இன்னிக்கு?”

“ப்பாபா.. நா பாட்டி கூட கோபில்(கோவில்) டூடூடூடூடூ கார்ல போனேனே… அண்ணா கூடா விளையாடுனே”

“ஹே சூப்பர்டா.. கோவிலுக்கு போனீங்களா? எந்த கோவில் போனீங்க?”

“ஹரோஹரா கோவிலுக்குப்பா…”

தங்கையை முந்திக் கொண்டு பதில் சொன்னான் நிலேஷ். முருகன் கோவில்லை, நிலேஷ் எப்போதும் ‘ஹரோஹரா’ என்றே சொல்லுவான்.

“அப்புறம் சாக்கி, சப் சப் சாப்பிட்டே நானு” அப்போது தான் சாப்பிட்டது போல, நிக்கித்தா சப்புக் கொட்டி சாப்பிட்டு காட்டிய அழகில், மயங்கி இறுக அணைத்து கொஞ்சினான் ஜீவா…

நிலேஷும் அவளை அணைத்துக் கொள்ள, அவனையும் சேர்த்து அணைத்துக் கொண்டவனுக்கு, இவர்களை மீறி தனக்கு என்ன வேண்டும் என்று தோன்றியது. அப்படி நினைத்த அதே நேரத்தில், பளிச்சென அவளின் முகம் மனக்கண்ணில் தோன்றி மறைந்தது.

உடனே எதிர்மறையான எண்ணம் எழுவதையும் அவனால் தடுக்க முடியவில்லை… “எனக்கு என்னோட குழந்தைகளை பார்த்துக்க யாரும் தேவையில்ல… முக்கியமா அவ... அவ தான் அவளுக்குனு தனியா ஒரு வாழ்க்கை அமைச்சுக்கிட்டாளே! அப்புறம் என்ன… எனக்கும் என்னோட குழந்தைகளே போதும்…”

அவனையும் மீறி அவன் மனம் அவளை தேடியதோ?? அதற்காக தான், அவனே அவள் தேவையில்லை என்று சுய சமாதானம் சொல்லிக் கொள்கிறானோ? அவனே அறியான்…

ஆனால், ஒரு காலத்தில் அவள் அருகாமையை தேடியது என்னவோ உண்மை…. ரொம்பவும் தேடினான்… ஆனால், அவனுக்கு அது கிடைக்கவே இல்லை! அந்த வலி! இப்போதும் நடுநிசியில் தூக்கம் அவனுக்கு கண்ணாமூச்சி ஆட்டம் காட்டுவதற்க்கும் அவளின் நினைவுகள் கொடுத்த வலியே காரணம்…

அவளை தன்னால் என்றைக்காவது முழுமையாக மறக்க முடிந்தால் நன்றாக இருக்கும். அது ஒன்று தான் இப்போதும் அவன் மனதில் உதித்தது… தான் இப்படி அவளை மறக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்க, அவளோ சந்தோஷமாக இருக்கிறாள்.

தன் கைகளால் விருது வாங்கும் அளவிற்க்கு வளர்ந்து விட்டாள்!!! இப்போதும் சரி, எப்போதும் சரி, அவளுக்கு தான் முக்கியமான ஒன்றாக திக்ழ்ந்ததே இல்லை…

அது தான் அவன் மனதை குத்திக் கிழித்தது…! திடீரென மின்னல் வெட்டியது. என்ன இன்றைக்கு ரொம்பவும் அவளை பற்றி சிந்திக்கிறோம்? சரியில்லையே என யோசித்தவாரே குழந்தைகளை தூங்க வைத்து, தானும் நித்திரா தேவியை அணைத்துக் கொள்ள முயன்றான்.

அவனால் முயல மட்டுமே முடிந்தது! அன்றைய இரவு நித்திரா தேவி அவனை சென்றடைய விடிகாலை ஆனது.

****************************************************************************************************

அன்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் அன்பரசி, ஒரு புன்னகையோடு! நடந்து செல்கையில், ஒரு சில நாட்கள் முன், அன்று விழா முடிந்து வந்த இரவு பஞ்சு எடுத்துவிட்டு, தான் பார்த்ததும் வினோத் சிரித்ததுமே அவள் நினைத்துக் கொண்டது தான், அவளின் புன்னைகையின் காரணம்.

அதற்க்கு பின், தான் கூறியதை கேட்டவனின் முகம் போன போக்கை நினைக்கையில், இப்போதும் சிரிப்பு பொத்திக் கொண்டது அவளுக்கு. “வர வர நீ ரொம்ப ஓவரா, கருத்து கந்தசாமியா பேசற.. இது உனக்கு மட்டுமில்ல, எனக்கும் நல்லதில்ல தெரிஞ்சிக்கோ! போ, போய் புள்ள குட்டிய படிக்க வைக்குற வேலைய பாரு… போப்பா!”

நக்கலாக அன்பு கூறியதும், ஒரு நிமிடம் என்ன பேசுவது என்றே தெரியாமல் முழித்தான் வினோத். பிறகு ஒரு மாதிரியான குரலில், “அதுக்கு நீ தான் வழி பண்ணணும்… என்னை கேட்டா?” என்று பதில் கேள்வி கேட்டு இடத்தை காலி செய்தான்.

அந்த கேள்வி பொட்டில் அறைந்தது போல, இருந்தது அன்பரசிக்கு. தான் வினோத்தின் வாழ்க்கையை கெடுக்கீறோமோ? எப்போதும் நினைப்பது போல், இப்போதும் ஒரே கேள்வி மனதை குழப்பத்தில் ஆழ்த்தியது.

வினோத் கூறுவதை ஏற்கவும் முடியாமல், அதற்காக ‘என்ன நடந்தால் என்ன? எப்படியோ போகட்டும்’ என விடவும் முடியாமல் சில மாதங்களாக அவள் படும் அவஸ்த்தை கொஞ்ச நஞ்சமல்ல.

இப்படியே அவள் யோசித்துக் கொண்டிருக்க, அவளின் வீடும் வந்துவிட்டது. இரவு சமையல் வேலைகளை செய்துவிட்டு, அடுத்து ட்யூஷன் வரவிருக்கும் மாணவர்களை கவனித்தாள் அன்பரசி.

மாணவர்கள் என்றால், அவள் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அல்ல. பக்கத்து ஏரியாவில் இருக்கும் ஏழை மாணவர்கள். அவர்களிடம் பீஸ் என எதுவும் எதிர்ப்பார்க்காமல், அவர்களின் படிப்பை மட்டுமே மேம்படுத்தும் வகுப்புகள் அவை.

தான் எப்படி படிப்பிற்க்காக கஷ்டப்பட்டோமோ அதே போல், யாரும் கஷ்டப்படக் கூடாது என்ற நல்லெண்ணம் தான். ஆம், ஒரு அனாதை விடுதியில், வளர்ந்தவள் தான் அன்பரசி.

அங்கே வளர்ந்த போது, அந்த விடுதியை நடத்திய சிஸ்டர் சொல்லியதை இன்றும் கடைப்பிடிக்கிறாள் அன்பு. “நம்மளால முடிஞ்ச அளவுக்கு அடுத்தவங்களுக்கு ஹெல்ப் பண்ணணும்டா அன்பு.

நீ கண்டிப்பா பெரிய ஆளா வருவ… அப்போ இன்னும் நிறைய பேருக்கு நீ உதவி பண்ணனும்.” என்ற நாயகன் பாலிஸியே அது…

இவள் இப்படி உதவி செய்ததால், அடைந்ததும் உண்டு. இழந்ததும் உண்டு. இழப்பை பற்றி நினைக்கையில், மனம் ‘இது வேண்டாமே வேறு நினை’ என்று அறிவுறித்தியது. அவளின் சிந்தனைகளை கலைக்கவே அந்த தொலைப்பேசி அழைப்பு வந்ததோ?

ஹாலில் மாணவர்களால் ஒரே சத்தமாக இருந்ததால், உள் அறைக்கு சென்றாள். புது நம்பராக இருக்கிறதே என்று யோசனையுடனே காதில் வைத்து, ‘ஹலோ’ என்றாள்.

எதிர் முனையில் ஒரு நிமிடம் அமைதி நிலவியது. பிறகு, ஒரு அழுத்தமான குரல், “ஹலோ, ஜீவா பேசறேன்” என்றது.

ஜீவா என்ற பெயரை கேட்டதும் ஒன்றும் புரியாமல், சில நொடிகள் மௌனித்தாள் அன்பு.

‘இவன் எதுக்கு இப்போ கால் பண்றான்?’

அவளின் கேள்விக்கு தானாகவே பதிலளித்தான் அவன். “நாளைக்கு அம்மா வர மாட்டாங்க. நான் தான் வருவேன்! உங்க வீட்டுக்கு வரலாமா இல்ல வெளிய எங்கையாவது மீட் பண்ணலாமா?”

அடேங்கப்பா… என்ன ஒரு உள்குத்து வைக்கிறான்? ‘உங்க வீட்டுக்கு வரலாமா’ என்று அவன் கேட்பதிலேயெ தெரிகிறது, அவனுக்கு வீட்டிற்கு வருவதில் விருப்பம் இல்லை என.

இதில் தான் என்னவோ வர வேண்டாம் என்றது போல், தன் மேல் பழி சொல்வது போல் வரலாமா என கேள்வி வேறு?

போகட்டும் வர இஷ்டமில்லை எனில், நாம் ஏன் வற்புறுத்த வேண்டும்? நொடியில் ஆயிரம் சிந்தனைகள் மூளையில் ஓடி மறைய, அவனுக்கு துடுக்காகவே பதில் கூறினாள்.

“நான் எப்பவுமே யாரையும் என்னோட வீட்டுக்கு வர வேண்டாம்னு சொன்னதில்ல.. ஆனா, உங்களுக்கு இஷ்டமில்லனா, எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை. நாம வெளியவே மீட் பண்ணலாம்.

அப்புறம் அம்மாவுக்கு என்னாச்சு?” அவளின் பதிலில் முளைத்த கோபத்தை அடக்க பெரும் பாடுபட்டான் ஜீவா. ‘வீட்டுக்கே வாங்க… பிராப்ளம் இல்ல’ என்று சொல்லுவாள் என பார்த்தால்…. இவளின் திமிர் இன்னும் குறையவே இல்லை போல!

ஆனால், தான் பதில் அளிக்க வேண்டிய இடத்தில் இருப்பதலால், கோபமான குரலிலேயெ பதில் கூறினான். “அம்மா ஒரு கல்யாணத்துக்கு போறாங்க. நாளைக்கு அஞ்சு மணிக்கு பீச்ல இருப்பேன்.”

அடுத்து அன்பரசிக்கு பீப் சத்தம் தான் கேட்டது. தான் பதில் கூற இடமளிக்காமல் போனை வைக்கிறானா? நாளை வரட்டும்… பார்த்துக் கொள்ளலாம். மனதிற்குள் கறுவிக் கொண்டாள் அன்பரசி.

ஜீவாவும் மனதிற்குள் இதையே தான் சொல்லிக் கொண்டான் என்பதை அவள் அறியவில்லை பாவம்…!




 
Top