Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

morpheus3

Advertisement

Meenaloshini

Tamil Novel Writer
The Writers Crew
morpheus 3
ரோஹினிக்கு பிறர்முன் அழுவது பிடிக்காது முக்கியமாக அழவைத்தவர் முன் .அவள் அழுதால் கேவல் கூட வெளி வராது ஆனால் முகம்தான் வாடிய தக்காளி பழம் போல் ஆகிவிடும் சிவந்து,சுருங்கி.அவள் அழுகாச்சி முகத்தை பார்த்தவர் வெகு சிலரே .
அவள் மேல்தளம் ஏற கால்வைக்கும் போது காரின் ஹார்ன் ஒலி சத்தமாய் கேட்டது" இப்போ என்ன"என்ற எண்ணத்தோடே திரும்பினாள் டிரைவர் அண்ணா தான்.அங்கே பார்க்கிங்கில் நின்ற கார் சன்னல்"கண்ணாடியில் முகத்தை சரிபார்த்துக் கொண்டே காரை நோக்கி சென்றாள்.என்ன தயாண்ணா எதாச்சும் விட்டுட்டு போய்டனா என கேட்டாள் "இல்ல பாப்பா சார்ட்ட சொல்லிட்ட உன் காலேஜ் பக்கத்துல தான் அவர் ஆபிஸ் ரெண்டு பேரயும் ட்ராப் பண்ணிடறேன் ஏறிக்க பாப்பா" என சொன்னார்.
"பார்ரா தடியன் நல்லவன்தான் போல ஸ்டிப் அன்ட் ஸைன் னு நினைச்சேன் பரவால கொஞ்சம் சாப்ட் டச் தான் இல்ல மன்சு "
"மூஞ்சி.. ஏதோ தயாண்ணா கேட்டதுனால விட்ருப்பான் நீ மைன்ட்வாய்ஸ் பேசாம மொத ஏறு விட்டுட்டு போய்ட போறான்"என மன்சு சொல்லியதும் "தடியன் செஞ்சாலும் செய்வான் "என உடனே ஏறி அமர்ந்து கொண்டாள். அவனைப் பார்த்து" ரொம்ப தேங்க்ஸ்" என்றாள்.அவசரமாய் கீபோர்டுடன் சண்டை போட்டு கொண்டிருந்தவன் கைகள் ஒரு நொடி தயங்கி அசைத்தானா இல்லையா என்பதுபோல ஒரு தலையசைப்பும் ,சொன்னானா?இல்லையா?என்பது போல் ஒரு ம் மும் கேட்டது.
"ஆத்தாடி முத்து உதிர்ந்திடுமோ, சாப்ட் டச் கேன்சல் உனக்கு ஸ்டிப் அன்ட் சைன் தான் பொறுத்தம்" என கருவினாள்.காரில் ஒரு ஆழமான அமைதி ஏ.சி.கார் அதனால் சன்னல் கூட மூடி இருந்தது.ரோஹினிக்கு" மைல்ட் க்ளாஸ்ட்ரோ போபியா"(நான்கு பக்கமும் அடைக்கப்பட்ட குறுகிய இடத்தில் இருந்தால் ஏற்படும் பயம்)மனநல மருத்துவர் ஆலோசனைப்படி அதுபோன்ற தருணத்தில் தன் எண்ணத்தை திசைதிருப்புவாள்.இன்று இயர்போன்ஸ் வேறு இல்லை காரில் உள்ள யு.எஸ்.பி.கேபிளில் இணைத்து பாட்டு போட போக அதுவரை கல்குண்டு போல் இருந்தவன் திரும்பி என்ன என்பதுபோல் பார்த்தான் .இல்ல எனக்கு க்ளோஸ்டா இருந்தா வேர்த்து மயக்கம் வரும் அதான் டைவர்ட் பண்ண சாங் கேட்கலாம்னு என தயங்கி தயங்கி சொல்லி முடித்தாள்
அவன் முகத்தில் ஒரு முகசுளிப்பு ."மைல்டாதான் போடுவேன் டிஸ்டப்டா இருந்தா வேணாம் விடுங்க "
"ம்ச் ..இட்ஸ் ஓகே வால்யூம் கம்மியா வை"என்றான் ஒருமையில் .அவன் அழைத்த ஒருமை உறுத்த தான் செய்தது இருப்பினும் எதுவும் கூறவில்லை .இன்னக்கி பல்ப் வாங்கியே நாள் ஒளிமயமா இருக்கு யாரு முகத்துல முழிச்சனோ என புலம்பிக்கொண்டே பாட்டினை ஓடவிட்டாள்.மென்மையாக "மாலை பொழுதின் ஒரு மேடைமிசையே………" என்ற பாடல் ஓடிக்கொண்டிருந்தது எப்போதும் இந்த பாடல்தான் கேட்பாள் அதன் பாடல் வரிகளும்,ஜெய்ஶ்ரீ குரலும் மயிலிறகு வருடுவது போன்ற மென்மையை தரும் கண்ணைமுடி அதில் தொலையத்தொடங்கினாள்.அதில் பயத்தை என்ன உலகத்தையே மறந்துவிடுவாள்.பாடல் முடிந்துவிட அடுத்த பாடல் மாற்ற போனாள்.அந்த ஸ்டிப் அன்ட் ஸைன் இவள் கைபேசியைதான் பார்த்துக் கொண்டிருந்தான்.காலையில் அவள் பெற்ற அனுபவம் நினைவிற்கு வர எப்பொழுதும் போல கேட்காமலே லெக்சர் எடுக்க விழைந்த வாயை வழுக்கட்டாயமாய் மூடிக்கொண்டாள்.அமைதியாக அடுத்த பாடல் மாற்ற
"அது என்ன மூவி"என்ற குரல் கேட்டது.என்கிட்ட பேசறானா இல்ல தயாண்ணா கிட்ட பேசரானா என விழிக்க ."உன்கிட்டதான் இப்ப ப்ளே ஆன சாங் என்ன மூவி ன்னு கேட்டேன்"என மீண்டும் கேட்க .இல்ல அது மூவி இல்ல பாரதியார் பாட்டு.அவர் காதலி கண்ணம்மாக்காக பாடினது .வாய்ஸ் ஜெய்ஶ்ரீ ,இதோட அர்த்தம் அடி மனசு வர வருடும் சில்லுனு போய் ஒரு சிலிர்ப்ப குடுக்கும் ஜெய்ஶ்ரீ வாய்ஸ் ஒரு"மேஜிக்," அவள் சொன்ன விதத்தில் அவனுக்குமே அந்த பாடல் பிடித்து விட்டது "எனக்கு அந்த வரி புரியல ஆனா பிடிச்சிருக்கு" என்றான்
அதன் அர்த்தத்தை ஒவ்வொரு வரியாக சொல்லி முடித்து அவன் முகம் பார்க்க அதில் ஏதோ ஒரு ஆச்சரியம் அது"உன்னிடம் இதை எதிர்பாக்கவில்லை" என சொல்வது போல் தோன்ற இவன் நம்மல பார்த்த மாதிரிதான் காலைல ரயில் அங்கிள பார்த்து வெச்சோமா என்றிருந்தது ,நினைக்க நினைக்க வெட்கமாய் இருந்தது எதிரில் இவள் முகத்தின் பாவங்களை ஒருவன் பார்த்து கொண்டிருந்தது தெரியாமல் மன்சுகுட்டியிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள் "இன்னொரு வாட்டி ப்ளே பன்றிங்களா "என்ற குரல் அவளை களைத்தது .புன்சிரிப்புடன் மீண்டும் பாடலை ஓடவிட்டாள் பாடல் முடியவும் கல்லூரி வரவும் சரியாக இருந்தது .கேபிட்கான பணத்தை எடுத்துதர போக "நானே பே பண்றேன்"என்றான்.சட்டென அவள் பாவம் மாறியது "இல்ல பரவாயில்லை நான் என் ஸேர் தரேன் "என்றாள்."என்கிட்ட இருக்குங்க நானே தரேன் "என மீண்டும் சொல்ல மிக பொறுமையாக ஆனால் அழுத்தமாக சொன்னாள்"உங்க கிட்ட பணம் நிறைய இருந்தா ,இல்லாதவங்க நிறைய பேர் இருக்காங்க அவங்களுக்கு குடுங்க .என்கிட்ட தேவையான பணம் இருக்கு ,ரொம்ப தேங்ஸ் ரைட ஸேர் பண்ணதுக்கு "என சொல்லி பணத்தை கொடுத்துவிட்டு டாட்டா தயாண்ணா பைங்க என சொல்லிச் சென்றாள்.சற்று முன் இருந்த சகஜ நிலை சட்டென உலைய அவள் உருவம் மறையும் வரை பார்த்துவிட்டு மீண்டும் விரல்களால் கீபோர்டுடன் சண்டையிட தொடங்கினான் ஆனால் இம்முறை சிரித்த இதழுடன்.
 
[/QUOTESuperb sis
 
Top