Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MP 19

Advertisement

Admin

Admin
Member

அத்தியாயம் – 19

ஆம், டாக்டர் கூறியதை கேட்டதும் நெஞ்சம் பதைப்புற திரும்பியவன் கண்களில் பட்டது அன்பரசி தான். இவள் தானே அனைத்துக்கும் காரணம் என்று ஓங்கி அறைந்து விட்டான்!

அவன் கை எரிந்த போது தான் அவளை அடித்துவிட்டோம் என அவன் மனதில் பதிந்தது… அதற்குள் நிலேஷை தூக்கிக் கொண்டிருந்த வினோத், ஓடி வந்து அவனை திட்டினான். “ஹே எதுக்கு இப்போ அன்புவ அடிக்கற ஜீ?? உனக்கு என்ன பையித்தியம் பிடிச்சிருக்கா??”

“என்ன எனக்கு பையித்தியமா?? ஆமாடா இவள போய் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டேன் பாரு! எனக்கு பையித்தியம் தான்… எல்லாத்துக்கும் காரணம் இவ தான்!”

ஆபீஸில் இருந்து இவன் காரில் வந்து சேரும் போது, அன்பரசி என்ன செய்துக் கொண்டிருந்தாள் என விளக்கியவன், பின் தன் உணர்வுகளை ஹாஸ்பெட்டல் என்றும் பாராமல் கொட்ட ஆரம்பித்தான்.

“யாருக்கு அடிபட்டா இவளுக்கு என்னடா?? இல்ல, அட்லீஸ்ட் நிலேஷை கூட்டிட்டு போன மாதிரி நிக்கி குட்டியையும் கூட்டிட்டு போயிருக்கலாம்ல?? இப்போ என்னோட நிக்கி, ரத்தம் வந்து… ச்சே! ஒரு வயசு குட்டிடா அவ… எப்படி இதயெல்லாம் தாங்குவா??”

ஜீவா பேசப் பேச அன்பரசியின் அழுகை ஜாஸ்தி ஆனதே தவிர குறைந்தபாடில்லை! என்ன செய்வது?? அவன் கூறுவதும் சரிதானே?? வினோத் ஒரு பக்கம், ஜீவாவை சமாதானப் படுத்த முயன்றான்.

அதில் அவன் வெற்றிகரமாக தோல்வியை தழுவிய போதும், மனம் தளறாமல் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான். மாலையில் ராகவனும் லட்சுமியும் வந்ததும் நிலைமை இன்னும் மோசமானது.

குழந்தையை பார்க்காமல் ஏன் வெளியே போனாள் என ராகவனும் திட்டினார். லட்சுமியும் தன் பங்கு ஆதங்கத்தை கொட்டினாலும், நடந்தது நடந்து போயிற்று, அடுத்து நடக்கவிருப்பதை பார்ப்போம் என அனைவருக்கும் வற்புறுத்தினார். இரவு வரை விடாமல் பிராத்தனை பண்ணிக் கொண்டிருந்த பயனா இல்லை அவர்கள் செய்த புண்ணியமா தெரியவில்லை!

குழந்தைக்கு ஒன்றுமில்லை, இரண்டொரு நாட்களில் வீடு சென்றுவிடலாம் என டாக்டர் உத்திரவாதம் கொடுத்தார். அடுத்த இரண்டு நாட்களும் யாரும் சந்தோஷமாக இல்லை என்றாலும், நிம்மதியுடன் நிக்கித்தாவை வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவை பற்றி மாமியாரும் மருமகளும் ஆலோசனை செய்துக் கொண்டிருக்க, ராகவனும் வினோத்தும் குழந்தைகளின் அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது புயலேன உள்ளே வந்த ஜீவா வேலைக்காரர்களை கிளம்பச் சொன்னான். அடுத்து ஹாலின் நடுவில் நின்றுக் கொண்டு, “எல்லாரும் இங்க வாங்க கொஞ்ச நேரம். பேசணும்.” என்றான் அழுத்தமான குரலில்.

எல்லோரும் யோசனையான முகத்துடன் ஹாலுக்கு வர, குழந்தைகளை கீழே விளையாட விட்டு ஜீவா அன்பரசியிடம் கத்தான பேப்பர்களை நீட்டினான். எதாவது புதிதாக சொத்து வாங்கியிருக்கிறான் போல என்று அவன் பெற்றவர்கள் நினைக்க, அவன் மனையாளோ என்னவென்று யூகிக்க இயலாமல், ஒரு வரையருக்க முடியாத உணர்வுடன் அதை வாங்கினாள்.

அதை பார்த்த விழிகள் பார்த்தபடியே இருந்தன!!! அவன் காதல் சொல்லும் போது கூட இந்த அளவுக்கு அவள் அதிரவில்லை… ‘விவாகரத்து நோட்டீஸ்’ இந்த இரண்டு வார்த்தைகளே அவள் இதயத்தை தாறுமாறாக உடைக்க போதுமானதாக இருந்தது.

அவள் அதிர்ச்சியை பார்த்து, பேப்பர்களை கைகளில் வாங்கிய வினோத் திகைத்த முகத்துடன் ஜீவாவிடம் கேட்டகவே செய்துவிட்டான். “என்ன ஜீ இது விவாகரத்து நோட்டீஸ் மாதிரி இருக்கு??”

“மாதிரி இல்ல… அதே தான்!” அசால்டாக கூறினான் ஜீவா.

அவன் பெற்றவர்களும் கேள்வி மேல் கேள்வி கேட்க, எல்லாரையும் கையமர்த்தி பதில் கூறினான் ஜீவா. “இதோ இங்க ஒண்ணுமே தெரியாத மாதிரி நிக்கறாளே… இவளுக்கு இப்போ மட்டுமில்ல, எப்போவுமே என்னை விட, என்னோட குழந்தைங்கள விட மத்தவங்க தான் பெருசு!

போதும்! இவளால நான் பட்டது எல்லாம் போதும். இனிமேலும் இவகிட்ட என்னோட குழந்தைங்கள விட்டுட்டு இருக்க முடியாது. அதனால தான் டிவோர்ஸ் பண்றதுனு முடிவு பண்ணிட்டேன்.”

“என்னடா சும்மா என்னோட குழந்தைங்க என்னோட பசங்கனு சொல்ற. அவளுக்கு அவங்க குழந்தைங்க தான்… தெரிஞ்சுக்கோ!” அதட்டியது அவனின் தாய் லட்சுமியே தான். வினோத் பொறுமையாகவே எடுத்துக் கூறினான்.

“ஜீவா கொஞ்சம் பொறுமையா எல்லாத்தையும் பேசிக்கலாம். ப்ளீஸ், ரெண்டு பசங்க வேற இருக்காங்க. உடனே எந்த டெஸிஷனும் எடுக்க வேண்டாம். இப்போ…”

“என்ன பொறுமையா இருக்க சொல்ற? என்னோட நிலைமைல இருந்து பார்த்தா தான் என்னோட வலி தெரியும்! ஒரு குழந்தைக்கு அடிபட்டு, ஒரு குழந்தை காணாம போகி நான் பட்ட அவஸ்த… போதும்பா, உன் ஃபிரண்ட நான் கட்டிட்டு பட்ற அவஸ்த போதும். நான் இந்த முடிவ ஹாஸ்பெட்டல்ல இருக்கும் போதே எடுத்துட்டேன்.

இதுலயிருந்து நான் மாறப் போவதும் இல்ல! இவ இல்லனா என்னால வாழ முடியாதா?? இல்ல குழந்தைங்கள வளர்க்க முடியாதா?? எனக்கும் அதுக்கடுத்து லைஃப் இருக்கும். அதனால தான் இந்த முடிவுக்கு வந்தேன்!” திரும்பி அன்புவை நோக்கி, “நீயும் சைன் பண்ணிட்டனா மூயூச்சுவல் கன்சல்ட்ல ஈசியா டிவோர்ஸ் கிடைச்சிடும்.” என்று சொல்ல வேறு செய்தான்.

அன்புவின் முகம் இதை கேட்டு உணர்வற்று போனது. கண்கள் அதன் ஜீவனை இழந்து, முகமே இருண்டுப் போனது. ஆம், அவளின் ஜீவன் தான் அவளை வேணாம் என்கிறானே?! ஜீவனற்று போகத் தான் செய்யும்.

இதையெல்லாம் தாங்காத லட்சுமி, அவன் சட்டையை பிடித்து “என்னடா நீ பாட்டுக்கு பேசிட்டே போற?? இதுக்கேல்லாம் நான் எப்போவுமே ஒத்துக்க மாட்டேன்! அவ பண்ணது தப்பு தான்டா… ஆனா, டைவோர்ஸ் பண்ற அளவுக்கு அவ என்ன பண்ணா?? கொஞ்சம் யோசிடா…” என்று கோபமாக ஆரம்பித்து கெஞ்சலில் முடித்தார்.

“அம்மா, ப்ளீஸ் இதுல எதுவும் தலையிடாதீங்க… இவ மத்தவங்களுக்குனா மெழுகா உருகுவா! அதே அக்கரை நம்ம குடும்பத்துக்கு மேல இருந்துச்சுனா, இந்த நிலைமை வந்துருக்காது! இப்போ சொல்றேன்மா… ஒண்ணு இந்த வீட்டுல நான் இருக்கனும். இல்ல அவ இருக்கனும்… என்னால இனிமேலும்…..”

“நான் சைன் பண்றேன்!” அன்பரசியின் குரலைக் கேட்டு அந்த அறையில் ஒரு மையான அமைதி நிலவியது சில நொடிகளுக்கு. அவளிடம் இருந்து இவ்வளவு சீக்கிரம் ஒப்புதல் கிடைக்கும் என்று ஜீவாவே எதிர்பார்க்காத போது, மற்றவர்களின் நிலையை சொல்ல தேவையில்லை.

ஜீவா கூறியதை கேட்டு அன்புவின் மனது சொல்லொன்னாத வேதனையை அனுபவித்தது. சில நிமிடங்களுக்குள் ஒருவரை இப்படி அன்னியமாக்க முடியுமா??

என்ன எல்லாம் பேசிவிட்டான்? தன்னை அவனுக்கு துளி கூட பிடிக்கவில்லையா?? அவள் இல்லாமல் கூட அவனால் வாழ முடியுமா?? தன்னால் அப்படி எண்ண கூட இயலவில்லையே.... ஒன்று மட்டும் நன்கு விளங்கியது அந்த பேதைப் பெண்ணிற்கு!

அவனின் அன்பை தான் முழுக்க தொலைத்து விட்டோம்!!! அன்பில்லா இடத்தில் இருக்க, அவள் ஒன்றும் மான இனம் இல்லாதவள் இல்லையே....

“ஹே அவன் தான் புரியாம பேசிட்டு இருக்கானா, நீ வேற ஓகே சொல்ற? கொஞ்ச நேரம் சும்மா இரு. நான் பேசிக்கறேன்.” வினோத் கத்தியதை கேட்டு, கண்ணீரை துடைத்துக் கொண்டு அவனை முன் போல், உணர்ச்சியற்ற முகத்துடன் நோக்கினாள் அன்பு.

“என்னடா பேசப் போற?? அவர் தான் நான் வேண்டாம், வெளியே போன்னு சொல்றாருல… அப்புறம் இங்க இருந்து என்ன பண்ண சொல்ற? அன்பு, மரியாதை இது எதுவுமே இல்லாத இடத்துல நான் எப்படி இருப்பேன் வினோ…

ப்ளீஸ்டா எதுவும் சொல்லாத!” அவ்வளவு நேரம் அடக்கி வைத்துக் கொண்டிருந்த அழுகை பீறிட்டு கிளம்ப, முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தாள். அவள் அழுவதை பார்த்த குழந்தைகளும் அழுவ, அப்போது தான் குழந்தைகளின் நினைவு வந்தது.

இவன் பேசுவதை பார்த்தால், குழந்தைகளை தர மாட்டான் போலவே?? அது எப்படி முடியும்?? கேட்டால் ஜீவாவோ உறுதியாக குழந்தைகள் அவனுடன் தான் இருக்க வேண்டும் என்றான்!

இருவரும் அதனை ஒட்டி சண்டை போட்டுக் கொள்ள, கடைசியில் கையெழுத்து போட்டுவிட்டு, தன்னுடன் நிலேஷை அழைத்துச் செல்ல முடிவெடுத்தாள் அன்பு.

முதலில் லட்சுமி தான் அவளை தடுத்தது! பின் ராகவனும்! வினோத் கனமான இதயத்துடன் அனைத்தையும் பார்த்தபடி இருந்தான். லட்சுமி எவ்வளவோ கூறியும் அவள் கிளம்பவும், அவர் ஜீவாவிடம் சென்றார். “ஹே போக வேண்டாம்னு சொல்லுடா! பாவம்டா எங்கடா போவா அவ??”

“ஏன் அதான் அவளோட எல்லாமுமா இவன் இருக்கானே?? அவனோட வீடு இருக்குல, அங்க போகட்டும்.”

இதன் மேலும் தாங்காமல் ஜீவாவின் சட்டையை பிடித்து, “உன்னை விட அவள நான் நல்லா தான் பார்த்துப்பேன்டா. பாவி, உன்னையே நம்பி வந்த பொண்ண இப்படி பண்றல! நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்டடா!!!” என்று சாபமேவிட்டான்.

இறுதியில், அன்பரசியே வினோத்தை அவனிடம் இருந்து பிரித்து, கண்களில் நிக்கித்தாவை நிரப்பிக் கொண்டு நிலேஷுடன் அவ்வீட்டை விட்டு வெளியேறினாள்!!

****************************************************************************************************

அடுத்த வாரமே இருவரும் வக்கீலின் முன் அமர்ந்து இருந்தனர். இரண்டு பேரும் ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்தனர். குழந்தைகள் தன்னிடம் தான் இருக்க வேண்டும் என்பதே அது.

வக்கீலோ முதலுக்கே மோசமாக ஏன் பிரிய வேண்டும் என கேட்டார். “ஏன்மா பிரியனும் முதல்ல? விட்டுக் கொடுத்து போறதுங்கறது இந்த காலத்து பசங்களுக்கு இருக்கவே மாட்டேங்குது!

அவசர அவசரமா லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்க வேண்டியது! ரொம்ப சீக்கிரமா சண்டை போட்டு டிவோர்ஸ் வேணும்னு கேக்க வேண்டியது… உங்க குழந்தைங்கள பத்தி யோசிச்சு பார்த்தீங்களா??”

“மேடம் எங்களுக்குள்ள பிரச்சனையே இவ குழந்தைங்களை பார்த்துக்க மாட்டேங்கிறாகறது தான்! அதனால, மேல எந்த கேள்வியும் கேக்காம ப்ளீஸ் கோர்ட்டுல கேஸை ஃபைல் பண்ணுங்க!”

ஜீவா இப்படி கூற, அவனை வெளியேற்றிவிட்டு மற்றவளிடம் கேட்க, அன்புவோ வேறு விளக்கம் வைத்திருந்தாள். “என்மேல கொஞ்சம் கூட அன்பும் மரியாதையும் இல்லாதவரோட என்னால எப்படி வாழ முடியும் மேடம்?? ஆசிரமத்துல வளர்ந்தவ நானு. எனக்கு ரொம்ப ரொமான்டிக்கா எல்லாம் இருக்க தெரியல மேடம்.

அதுக்காக அவர் மேலயும், குழந்தைங்க மேலையும் அன்பே இல்லனு சொல்ல முடியுமா? இப்போ கூட அவர் மேல எனக்கு ரொம்பபப அன்பு இருக்கு…. ” விம்மல் வெடித்துக் கொண்டு வர பேச்சு தடைப்பெற்றது.

“பட் நான் இல்லாம கூட அவர் இருப்பார்னு சொல்றப்போ, அதுக்கப்புறம் எனக்கு அவரோட வாழ்க்கையில என்ன இடம் இருக்கு?? மரியாதை இல்லாத இடத்துல என்னால எப்போவுமே இருக்க முடியாது, மேடம்!”

அவள் மிகவும் சுயமரியாதை கொண்டவள் என மீண்டும் அவள் நிரூபிக்க, அதன் மேற்கொண்டு வக்கீல் எதுவும் பேசாமல் கோர்ட்டில் அவரின் வேலையை பார்க்க கிளம்பினார்.

கோர்ட்டில் வழக்கு நடக்கும் போது, ஜீவா தன் அக்கம் பக்கத்தினர், சவீதா சிஸ்டர், மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் என எல்லாரையும் அழைத்து வந்து சாட்சி சொல்ல வைத்து, அவளை குழந்தைகளை ஒழுங்காக வளர்க்க தெரியாத தாய் என முத்திரை குத்தினான்.

“இதன் மூலம் அன்பரசி, தன் குழந்தைங்களை கவனிப்பதை விட சமூக சேவையில் முதன்மையாக செயல்பட்டிருக்கிறார் என தெளிவாக தெரிந்தது. ஆகவே, குழந்தைங்களை எனது கட்சிக்காரர் ஜீவாவிடமே இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன், யூவர் ஹானர்.”

சில்லு சில்லாக நொறுங்கிப் போனாள் அன்பு! அவளாளும் அவளின் வக்கீலாலும் எதுவும் செய்ய முடியாது போயிற்று. வினோத் அவர்களின் வக்கீலிடம் கண்களை காட்ட, அவர் வாரத்தில் மூன்று நாட்களாவது குழந்தைகள் அன்னையிடம் இருக்க வேண்டும் என வேண்டுக்கோள் விடுத்தார்.

இறுதியில் வார கடைசியான சனிக்கிழமையும் ஞாயிற்றுகிழமையும் குழந்தைகள் அன்பரசியிடம் விட வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜீவானம்சம் பற்றிய பேச்சு எழ, அன்புவின் வக்கீலோ அவள் கூறியபடி, ஜீவானம்சம் தேவையில்லை என உறுதியாக மறுத்துவிட்டார்.

அன்றிலிருந்து மூன்றாம் மாதம், இருவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என கோர்ட்டே தீர்மானித்து விவாகரத்து அளித்தது. விவாகரத்து பேப்பரை கைகளில் வாங்கிய அன்பரசியின் முகம் செத்துப் போனது வினோத்துக்கு புரிந்தபடியால், அவளின் தோள்களை பற்றியபடி அழைத்துச் சென்றான்.

இதை பார்த்த ஜீவாவிற்கு மனதில் ஒரு வெறுமையே தோன்றியது! ஆம், வெறுமையே… ஏன் என்று அவனுக்கே தெரியவில்லை! எதையும் வென்றுவிட்ட உணர்வு அவனுக்கு வரவில்லை. அவளுக்காவது வினோத் இருக்கிறான். தனக்கு??

குழந்தைகள்… அவர்கள் மட்டுமே! ஏன்னென்றால் லட்சுமி அவனிடம் பேசுவதையே விட்டுவிட்டார். அன்பு வீட்டை விட்டு சென்ற அன்றிலிருந்தே! ராகவனும் பட்டும் படாமலும் தான் பேசுவது.

இதை நினைத்த படியே ரூம்மிற்குள் வந்தவனுக்கு வெறுமை மிகையுற, கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வந்தபடி இருந்தது.

****************************************************************************************************

ஜீவா இப்படி இருக்க, அன்பரசியும் அன்றைய பொழுதை அழுதே ஓட்டினாள். குழந்தைகளை வாரம் இரண்டு நாட்கள் தான் பார்க்க முடியும் என்ற நினைப்பே அவளை கொன்றது.

வினோத் அவளை தேற்ற, சிறிது நேரத்தில் எழுந்து உட்கார்ந்து கோபத்தில் மின்னும் விழிகளுடன் கூறினாள். “ஆனா ஒண்ணு மட்டும் வினோ. என்னை அவர் வேண்டாம்னு சொன்னதை கூட மன்னிச்சு விடலாம்டா. பட், எனக்கு குழந்தைங்களை வளர்க்க தெரியாதுனு சொல்லி, என்னை என்னோட குழந்தைங்க கிட்டயிருந்து பிரிச்சத என்னைக்குமே மன்னிக்க முடியாது!!! முடியவே முடியாது!!!”

“சரி சரி பொங்காத… ஷோல்டர எறக்கு லவ்ஸ். ரொம்ப கோவம் வருது உனக்கு…”

வினோத்தின் கேலியை ரசிக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் அன்பு. இவன் மட்டும் இல்லை என்றால் தான் என்னவாகி இருப்போமோ?? தனக்கு அடைக்கலம் கொடுத்து, ஒரு வேலை கிடைக்கும் வரை உறுதுணையாக இருந்து, வேலை கிடைத்தப் பின் அவன் அப்பார்ட்மென்டிலேயே ஒரு வீடை வாடகை எடுத்து, அவளை குடியேற்றி….

இவன் தனக்கு கடவுள் கொடுத்த வரப் பிரசாதம் எனவே எண்ணினாள்.

கண்ணான கண்ணே நீ கலங்காதடி

கண்ணான கண்ணே கண்ணான கண்ணே

நீ கலங்காதடி நீ கலங்காதடி

யார் போனா யார் போனா என்ன

யார் போனா யார் போனா யார் போனா என்ன

நான் இருப்பேனடி நீ கலங்காதடி



ஒரு கணம் ஒரு போதும் பிரியக் கூடாதே

என் உயிரே என் உயிரே நீ அழுகக் கூடாதே

நீ கண்ட கனவு எதுமே கலையக் கூடாதே

நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுகக் கூடாதே



கிடைச்சதை இழக்குறதும்

இழந்தது கிடைக்கிறதும்

அதுக்குப் பழகுறதும் ஞாயம் தானடி

குடுத்ததை எடுக்குறதும்

வேற ஒன்ன குடுக்குறதும்

நடந்ததை மறக்குறதும் வழக்கம் தானடி



கண்ணான கண்ணே ....

****************************************************************************************************

எல்லாவற்றையும் நினைவு கூர்ந்த ஜீவாவுக்கு என்னவெல்லாம் மடத்தனம் செய்து இருக்கிறோம் என புரிந்தது. கோவத்தில் எடுக்கும் எந்த முடிவும் சரியாக அமையாது, என்பதற்கு இவன் வாழ்க்கையை விட வேறு நல்ல எடுத்துக்காட்டு இருக்க முடியாது என்றே எண்ணினான்.

அவள் செய்த தப்பிற்கு தண்டனை கொடுப்பதாக எண்ணி, டிவோர்ஸ் வரை சென்றது அவனின் அறிவற்ற தன்மையை காட்டியது என்றால், இன்று அவளிடம் பணத்தை வாங்காததற்கு பேசிய பேச்சு மூட்டாள் தனத்தின் உச்சக் கட்டம் அன்றோ?

இதை எப்படி சரி செய்வது? அவளிடம் இழந்துவிட்ட நன்மதிப்பை எப்படி பெறுவது? செலவே செய்யாமல் சேர்த்து வைத்திருக்கும் வெறுப்பை எங்கே எப்படி தொலைப்பது??

விடை அறியா கேள்விகளுடன் வீடு நோக்கி பயணப்பட்டான் ஜீவா.

வீட்டில் அவன் நுழையும் போது அவன் கேட்டது எல்லாம் இது தான். “இது வெறும் காகிதம்… உங்க மனசுக்குள்ள இருக்குறதையோ என் மனசுக்குள்ள இருக்குறதையோ இதால நிச்சயம் மாத்த முடியாது…. உங்களுக்கு என்னை பிடிக்கலனா கூட பரவாயில்ல.

பிடிச்சிருக்கு, ஆனா ஒத்துக்க தான் மனசுயில்ல…” ரேவதி டிவியில் ஆவேசமாக மோகனிடம் கேட்டுக் கொண்டிருந்தார்! ‘மௌன ராகம்’ படத்தின் கிளைமாக்ஸ் ஸீன், டிவியில் ஓடிக் கொண்டிருக்க லட்சுமி அதை ரசித்துக் கொண்டிருந்தார்.

சிலையாக நின்றான் ஜீவா… தன்னுடைய ராணியம்மாவும் இது போல தன்னிடம் வர மாட்டாளா என ஏங்கிப் போனான் அந்த திருந்திய கணவன்.

அடுத்து வந்த நாட்களில் என்ன செய்யப் போகிறான் என மனதில் திட்டமிடலானான் ஜீவா…! அந்த திட்டங்கள் நிறைவேறுமா??
 
Jeevavoda kobam avanudiya anbai avanukku illama aakituchu ini eppidi jeeva anbai samathanam pannapora
.Nice epi sis
 
Top