Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MP 20

Advertisement

Admin

Admin
Member


அத்தியாயம் – 20

ஜீவாவின் திட்டங்களில் மூலதனம் அவன் அம்மாவிடம் பேசுவதே! எப்படியாவது அவரையும் வினோத்தையும் சமாளித்தால், அன்பரசியை மீட்டுவிடலாம் என யோசித்தான்.

‘அம்மாவ கூட சமாளிக்கலாம் போல, இந்த வினோத்த நினைச்சா தான்?! ஒண்ணும் விளங்க மாட்டேங்குது… அதுக்கும் மேல அவன் கூட மலர் வேற… திட்டுறதுக்கு ஜோடிப் போட்டு கிளம்பிடுங்க ரெண்டும்!! இவங்கள தான்டி எப்போ அன்புகிட்ட பேசி, சரிப் பண்ணி?? ஹ்ம்ம்ம் ரொம்ப குஷ்டம்!”

சுயபச்சாதாபம் பொங்கி வழிய தன் அன்னையிடம் பேசுவதற்கு தகுந்த தருணத்தை பார்த்தான் ஜீவா. அன்று இரவு தன் பிள்ளைகளை தூங்கப் பண்ணிய பிறகு, தன் பெற்றோரின் அறைக் கதவை தட்டினான். கதவை திறந்த லட்சுமி, எதுவுமே பேசாமல் அவன் முகத்தை கேள்விக் குறியோடு நோக்கினார்.

ஜீவாவோ தவறு செய்துவிட்ட வந்த ஸ்கூல் பிள்ளையின் லூக்கோடு இருக்க, இதையெல்லாம் பார்த்த ராகவனே குழம்பிப் போனார். “என்னடா வேணும்?? எதுக்கு இந்த நேரத்துல வந்துருக்க??” ராகவனின் கேள்விக்கு பதிலாக, “கொஞ்ச நேரம் பேசனும்பா…” என்றான்.

அவனுக்கு வழியை விட்டு உள்ளே போய் பெட்டில் படுத்துக் கொண்டார் லட்சுமி. எப்படியும் அவன் தன்னிடம் பேசப் போவதில்லை என்று நினைத்து அவர் படுக்க, மகனோ அவரின் பக்கம் வந்து உட்கார்ந்தது மட்டுமில்லாமல், அவரின் கைகளையும் பற்றிக் கொண்டான்.

“அம்மா நான் உன்கிட்ட தான்மா பேச வந்திருக்கேன். ப்ளீஸ்மா கொஞ்ச நேரம் நான் பேசறத கேளுமா…” ஜீவாவின் குரல் மன்றாடினாலும், லட்சுமி கண்டுக் கொள்ளவில்லை. ராகவன் பார்வையாளறாக மாறிப் போக, லட்சுமி தன் கைகளை அவனிடம் இருந்து எடுத்துக் கொள்வதிலேயே குறியாக இருந்தார்.

“அம்மா ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்… கொஞ்ச நேரம் தான். அப்புறம் நீங்க பேசலைனா கூட பரவாயில்லை. அப்பா சொல்லுங்கபா!” ராகவனும் பையனுக்காக பரிந்து பேச, வேண்டா வெறுப்பாக தலையசைப்பு வந்தது லட்சுமியிடமிருந்து.

அதையே தூண்டுக் கோளாக எண்ணி தன் மன மாற்றத்தை விளக்கி கூறளானான் ஜீவா. அன்பரசியின் செய்கையால் கோவத்தில் டிவோர்ஸ் செய்தது, அவளை மறக்க முடியாமல் மூன்றாண்டாக தவித்தது, அவளை பீச்சில் வெறுப்பேற்றி சீண்டியது, அப்பாவிடம் திட்டு வாங்கியது, யோகா கலை கற்றதில் தன் மனம் அவள் நிலையிலும் யோசிக்க ஆரம்பித்தது, மலர்விழி அவனை அன்பரசிக்காக திட்டியது என அனைத்தையும் தங்கு தடையில்லாமல் கொட்டினான் ஜீவா.

அவன் பேசப் பேச அவன் முகத்தில் வழிந்த உணர்ச்சிகளிலேயே அவனை அறிந்துக் கொண்டார் லட்சுமி. அன்னை அல்லவா?? ஆனாலும், அவன் பேசி முடிக்க அமைதிக் காத்தார். “எனக்கு அப்போ தெரியலைமா…. ஒரு கோபம், ஈகோ… சின்ன வயசு! ரொம்ப நாள் அவ பின்னாடி சுத்தி, நீங்க ஒத்துக்காம, கஷ்டப்பட்டு எல்லாம் கல்யாணம் பண்ணிக்கல…

எல்லாமே பிக்சர் பெர்ஃபேக்டா நடந்தது. தனியாளா வளர்ந்ததா என்னன்னு தெரியல, ரொம்ப போஸஸிவ்வா இருந்துட்டேன். ‘எனக்கு மட்டும் தான் அவ’ அப்படின்னு நினைச்சுட்டு, வேற யாரோடவும் அவளோட அன்பை பங்கு போட்டுக்கக் கூட விரும்பல!! இதுவே எங்க அன்பை முறிக்கற அளவுக்கு வரும்னு எதிர்பார்க்கல!!”

அதன் மேல் பேச முடியாமல் அவன் குரல் கமுறவும், தானாக எழுந்து உட்கார்ந்து அவனை கண்கலங்க பார்த்தார் அவன் அன்னை. ராகவன் அவன் முதுகை தட்டிக் கொடுக்க, தன் கண்களில் பொங்கிய கண்ணீரை துடைத்துக் கொண்டு, மேலே பேசினான் ஜீவா.

“அப்போ எனக்கு இருந்த கோவத்துல டிவோர்ஸ் தான் சரியான முடிவா தோணுச்சு. பச், கோவத்துல எடுக்குற முடிவு சரியா இருக்காதுனு சும்மாவா சொன்னாங்க?? இப்போ கூட அவ மேல தப்பேயில்லைனு சொல்ல வரல… பட், அவ பண்ண தப்புக்கு டிவோர்ஸ் வரைக்கும் போயிருக்க வேணாம்னு தோணுது.”

“அவள பிடிக்கலனா டிவோர்ஸ் வாங்கிட்ட அப்புறமாவது சந்தோஷமா இருந்துருக்கனும்ல? இல்லை… எதோ இனிமே வாழ்க்கையில ஒண்ணுமே இல்லாத மாதிரி வெறுமையா தான் இருந்துச்சு! அப்பாவே இந்த லாஸ்ட் ஒரு வருஷத்துல எத்தனை வாட்டி இன்னொரு கல்யாணம் பத்தி பேசிருப்பாரு தெரியுமா?

அவள சுத்தமா மறக்கவே முடியலமா!! எதோ பசங்க இருந்ததால அப்படியே போயிடுச்சு. அவளுக்கு அவங்க கூட இல்ல!! பாவம், ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்மா அவள…”

தன் மடியில் மடிந்து அழும் வளர்ந்த குழந்தையை கட்டிக் கொண்டு தானும் அழுதார் லட்சுமி! அவனுடைய சிறு வயதிலிருந்து எப்போவும் இவ்வளவு கஷ்டப்பட்டு பார்த்ததில்லை அவர். தன் தவறுகளை தன் கண்ணீரிலேயே கரைத்துக் கொள்கிறான் என வெதும்பியது அந்த தாயின் செஞ்சம்! என்ன தான் வளர்ந்து அவனுக்கும் குழந்தைகள் இருந்தாலும், அவன் அவருக்கு என்றும் குழந்தையே என நிருபித்தார்.

அவளுடன் திரும்பவும் சேர அவன் அடுக்கிய காரணங்களிலேயே தெரிந்தது, அவனுக்கு அன்பரசியை இப்போவும் எவ்வளவு பிடிக்கின்றது என்று. தேவை தான் ஒரு பெண்ணின் மனதை காயப்படுத்தியவனுக்கு இது தேவை தான்! ஆனாலும், இப்போது அவள் ஒத்துக் கொள்ள வேண்டுமே!??

அவனின் முகத்தை தூக்கி கண்ணீரை துடைத்து விட்டு, “எல்லாம் சரி தான்டா… ஆனா, இப்போ நீ போய் பேசுனா அன்பு ஒத்துப்பாளா? எனக்கு என்னவோ அது ரொம்ப கஷ்டம்னு தோணுது…” என்று தன் மனதில் இருந்ததை தயங்காமல் கூறினார்.

ராகவனும் சும்மாயில்லாமல் இன்னும் அவன் மனதில் பயத்தை மூட்டையாக ஏற்றினார்! “அன்பு முன்ன மாதிரி இல்லடா. இப்போ ரொம்ப மாறிட்டா… கொஞ்சமில்ல நிறைய ரிசர்வ்டாகிட்டா. அவள மாத்துறது கஷ்டம் தான்!” இது எல்லாத்தையும் கேட்டுவிட்டு, குனிந்த தலையுடன் அன்று பீச்சில் தங்களுக்குள் நடந்த சண்டையை விவரித்தான் ஜீவா.

‘சப்ப்ப்’ சத்தம் கேட்டதும் தான் தெரிந்தது தன் அன்னை தன்னை அடித்துவிட்டாள் என. பேந்த பேந்த ஜீவா விழிக்க, லட்சுமி தாங்காமல் பொங்கிவிட்டார்!

“என்ன தான்டா நினைச்சுட்டு இருக்க?? நீ என்ன வேணும்னா பண்ணுவியா?? அந்த பொண்ணு ஏற்கனவே ரொம்ப அடிப்பட்டு போயிருக்கா, இதுல நீ வேற வாய்க்கு வந்தபடி பேசிட்டு வந்திருக்க!! நீ எல்லாம் திருந்தவே மட்டடா…”

ஜீவா ஆயிரம் சாரிகளை கூறி அவன் அம்மாவை சமாதானப்படுத்த, ராகவனோ சோர்ந்து போனார். அவன் மனம் திருந்தி வந்ததில் சந்தோஷப்பட்டவர், இப்படி மீண்டும் சொதப்புவான் என துளியும் நினைக்கவில்லை. அவனின் இரண்டாம் திருமணம் பற்றிய பேச்சை எழுப்பினால் தான் அவன் அன்பரசியின் நினைவுகளில் மிதந்து, சீக்கிரம் அவளிடம் சேருவான் என கணக்கு போட்டார்.

அது வேலை செய்யவே மூன்று ஆண்டுகள் ஆகியது. இப்போது அன்புவின் அன்பு கிடைக்க என்ன பாடு பட போகிறானோ என நினைத்து பெருமூச்சு எறிந்தார் அந்த பெரியவர்!!

இவர்களின் எண்ணங்களை ஆகிரமித்த அன்பரசியோ அங்கே கண்ணீரில் மிதந்துக் கொண்டிருந்தாள்!!

****************************************************************************************************

என்ன எல்லாம் பேசிவிட்டான்?? நினைக்கவே வெறுப்பாக இருந்தது அவளுக்கு. கண்களில் பொங்கி வழிந்த நீரில் தன் உள்ளக் காயத்தை ஆற்ற முயன்று தோற்று, கடைசியில் தன் ஆபத்தான்டவனிடமே சரணாகதி அடைந்தாள் அன்பு.

வினோத்தோ விஷயத்தை கேட்டதுமே தலையில் அடித்துக் கொண்டான். “அவனுக்கு தான் அறிவில்லைனு பார்த்தா, நீயும் அதே மாதிரி தான்னு ஃப்ரூவ் பண்ணுற லவ்ஸ்!! எப்பயோ முடிஞ்சு போன லோன் விஷயத்தை தோண்டி எடுத்து, திருப்பி போஸ்ட்மார்ட்டம் பண்றதால என்ன ஆக போகுது, இப்போ??”

மேலும் மேலும் அவன் வசை பாட, கண்களை துடைத்துவிட்டு, காதுகளை பொத்திக் கொண்டு, “ஹப்பாபாபா!! போதும்டா சாமி… கை எடுத்து கும்பிடறேன். ப்ளீஸ் கொஞ்சம் திட்டுறத நிறுத்து.

சான்ஸ் கிடைச்சவுடனே டிசைன் டிசைனா கழுவி ஊத்துற நீ! ரொம்ப தான்டா, சொல்லிட்டேன்” என்று கத்தினாள் லவ்ஸ். அதன்மேல் அவளிடம் மறைக்க முடியாமல், மலரிடம் அவன் சொன்னது, அதை கேட்டு அவள் ஜீவாவை திட்டியது என எல்லாம் கூறி முடித்தான்.

“அவ அப்படி கேப்பானு எனக்கு தெரியாது. பட், கேட்டதும் அவன் முகத்துல ஷாக் இருந்தாலும், கோவமே வரல லவ்ஸ். எப்போவும் ஏதாவது குத்தற மாதிரி பேசுவான். அப்படி எதுவுமே வரல அவன் கிட்டயிருந்து.

அதான் எனக்கு யோசனையா இருந்துச்சு…” வினோத் முடிக்கவும், அதானே நம்ம இன்னிக்கு திட்டிட்டன அப்போ கூட அவன் சாரி தான கேட்டான்?? திரும்ப எதுவும் திட்டலை, எதுவும் சொல்லலை என்று சிந்தித்தாள் அன்பு.

அவளின் நெரிந்த புருவங்களை பார்த்து, தேவையில்லாமல் குழப்பிட்டோமோ என வருந்தி பேச்சை மாற்றினான் வினோத். “ஹே நாளைக்கு நீ நிச்சயதார்த புடவை எடுக்க வரலையா??”

“லூசு, நான் எப்போடா வரலைனு சொன்னேன்??”

“பின்ன இப்படி நைட் ஃபுல்லா உட்கார்ந்துட்டே இருந்தா நாளைக்கு நீ கடைக்கு வந்த மாதிரி தான்! போ, போய் படு போ!”

அந்த அதட்டலில் தனக்கு இருந்த அக்கரையை நினைத்து, பெருமிதப்பட்டுக் கொண்டு உறங்கச் சென்றாள் அன்பு. அடுத்த விடியல் தனக்கு என்ன வைத்து இருக்கிறதென்று அறியாமல்!

மறுநாள் டி.நகரில் உள்ள பிரபல கடைகள் அனைத்தையும் வலம் வந்தனர் அன்புவும் மலர்விழியும்! வேறு வழியே இல்லாமல், அவர்களுடன் மனதில் கருவியபடியே உடன் சென்றனர் கனேசனும், வினோத்தும்.

பிற்பகல் வேலையில் அனைவருக்கும் துணிமணிகள் எடுத்துவிட, வீடு திரும்பியதும் வினோத்துக்கு ‘அப்பாடா’ என இருந்தது! அவன் வீட்டில் அவன் இலைப்பாற, அப்போது வந்தது ஃபோன் கால், ஜீவாவிடமிருந்து!

புது நம்பர் என்று நினைத்தபடியே எடுத்து பேசிய வினோத்துக்கு தான் ஆச்சரியம். நெஞ்சில் ஆயிரம் எண்ணங்கள் அலைமோத, உதடுகளோ அதை மறைத்து அவனிடம் நார்மலாக பேச முயன்றது.

“ஹலோ, சொல்லுங்க. நான் வினோத் தான் பேசறேன்!” ஒரு நிமிட மௌனத்துக்கு பிறகு, ஜீவா பேசினான்.

“வினோத், நான் உன்கிட்ட கொஞ்சம் நேர்ல பேசனும். மலர்கிட்டயும் தான். எப்போ எங்கனு நீயே அவகிட்ட பேசிட்டு சொல்லு…”

“நான் மீட் பண்றதுக்கு ஓகே சொல்லவேயில்லையே?? அதுக்குள்ள எங்க பார்க்கறதுனு பேசுறிங்க?”

சவுக்கால் அடிவாங்கியது போல வலிக்க, இமைகளை மூடி ஆழ மூச்செடுத்து தன் நிலையை சரி செய்ய முயன்றான் ஜீவா. பேச்சே வராதலால் எதோ பெரிய விஷயம் தான் என யூகித்து, சரி பேசித்தான் பார்ப்போம் என முடிவெடுத்தான் வினோத்.

“ஓகே நாளைக்கு ஈவ்னிங் நான் உங்க ஆபிஸுக்கு வரேன். பேசலாம். ஓகே வா?”

“தாங்க்ஸ் வினோத். பை!” வினோத்தின் பேச்சில் இருந்த ஒட்டாத தன்மையை கவனிக்க தவறவில்லை ஜீவா. ‘இதுக்கு எல்லாம் பார்த்தா முடியுமா?? இன்னும் எவ்வளவு வாங்க வேண்டியிருக்கு??’ தன்னை தானே தேற்றிக் கொண்டான் ஜீவா.

வினோத்தோ அப்படி என்ன இவன் பேசப் போகிறான் என ஆவலாக அடுத்த நாள் மாலை ஜீவாவின் அலுவகம் போனான். மலர்விழியிடம் ஒன்றும் சொல்லவில்லை. திடீரென்று அவள் முன் போய் நிற்கவும், மலருக்கு ஒன்றும் புரியவில்லை.

“ஹே வினோ, நேத்து தான பார்த்தோம்? திரும்ப எதுக்குடா இப்போ வந்திருக்க??”

ஒரு காதலிக்கே உரிய செல்ல சலிப்புடன் மலர் கேட்ட, வினோத்தோ சிரிக்க ஆரம்பித்தான். “ஹே உங்க பாஸ் தான் நம்ம ரெண்டு பேர்கிட்டயும் எதோ பேசனும்னு சொல்லி, கூப்பிட்டாரு. அதான் வந்தேன்! இருந்தாலும் பேபிமா உனக்கு ரொம்ப தான்.

உன்னை தான் பார்க்க வந்தேன்னு கேக்காமயே முடிவு பண்றது!!” ஒற்றை கண் சிமிட்டி வினோத் மீண்டும் சிரிக்க, ‘பாவி மானத்த வாங்கறான்’ என மனதில் திட்டியபடியே ஜீவாவுக்கு இன்டர்காமில் அழைத்தாள்.

ஜீவாவோ இங்கே பேச வேண்டாம், வெளியே எங்கேயாவது பேசலாம் என சொல்ல, மலரே பக்கத்தில் இருக்கும் கோவிலின் பெயரை கூறி அங்கே வெயிட் பண்ணுவதாக கூறினாள்.

ஜீவாவும் சம்மதம் தெரிவிக்கவும், வினோத்தை அழைத்துக் கொண்டு அந்த கோவிலுக்கு விரைந்தாள். “உன் பாஸுக்கு என்ன தான்டி பிரச்சனை?? ஓவர் பில்டப் குடுக்குறான்.”

“எனக்கு என்ன தெரியும்? நீங்க தான் சொல்லனும். எப்போ கால் பண்ணாரு உங்களுக்கு??” மலரின் கேள்விக்கு பதில் கூறும் போதே, ஜீவாவுக்கும் அன்புக்கு ஏற்பட்ட சண்டையையும் சேர்த்து சொன்னான் வினோத்.

கேட்ட மலர்விழி என்ன கூறுவது என அறியாமல் அமைதி காக்க, கோவிலும் வந்து சேர்ந்தது. பின்னேயே ஜீவாவும் வந்து சேர்ந்தான்.

சில நிமிடங்கள் யாரும் பேசாமல் நிசப்தம் நிலவ, அதை உடைத்து மலரே பேசினாள். “அங்க உட்கார்ந்து பேசலாம், வாங்க” கோவில் படித்துரையில் அமர்ந்ததும் ஜீவாவே பேச்சை எடுத்தான்.

“நான் உங்ககிட்ட கொஞ்ச நேரம் மனசுவிட்டு பேசணும். ப்ளீஸ், சொல்றத கேளுங்க…”

தன் தாயிடம் பேசியது போலவே சரளமாக அனைத்தையும் எடுத்து விட்டான் ஜீவா. “என்னோட ஈகோவ மூட்ட கட்டி, உண்மைய ஒத்துக்க இவ்வளவு நாள் ஆகிருக்கு! என்ன தான் இவ்வளவு ரீஸனும் சொன்னாலும் நான் அவளை மூணு வருஷமா கஷ்டப்படுத்தினது தப்பு தான். பட், இனிமே இபப்டி நடக்காதுனு என்னால அசுயர் பண்ண முடியும்.”

ஜீவா கூறியதை வினோத் ஒரு உணர்ச்சியற்ற முகத்துடன் கேட்டதிலேயே தெரிந்தது, அவனுக்கு இன்னும் தன் மேல் முழு நம்பிக்கை வரவில்லை என. மலர்விழியோ எதுவும் பேசாமல் இருவரின் முகத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒரு பெருமூச்சுயை நாசியின் வழியே வெளியிட்டு, தன் மனதில் தோன்றியதை மறைக்காமல் பகிர்ந்தான் வினோத். “நீங்க என்ன தான் சொன்னாலும், என்னால உங்கள அப்படியே மன்னிச்சு பழைய மாதிரி ஏத்துக்க முடியாது ஜீவா. என் கண்ணால லவ்ஸ் இந்த மூணு வருஷமா எவ்வளவு பட்டுட்டானு பார்த்துட்டேன்.

அவ அழாம தூங்காத நாளே இல்லைனு கூட சொல்லலாம். அந்த அளவுக்கு மனசுக்குள்ளயே எல்லாத்தையும் போட்டு அவளையே வருத்திக்கிட்டு…. என்கிட்ட சொன்னா நானும் கஷ்டப்படுவேன்னு பாதி விஷயத்தை சொன்னது கூட கிடையாது.

நானே அவகிட்ட பேசிப் பேசி தான் வாங்குவேன், எல்லாத்தையும். குழந்தைங்கள வைச்சு தான அவள தேத்தினேன், ஓரளவுக்கு! இப்போ கூட அவ பழைய அன்பு இல்ல. ரொம்ப கிளோஸ்ட் ஆகிட்டா அவளுக்குள்ளயே… அதனால தான் எனக்கு திருப்பியும் உங்கள அவளோட லைப்ஃல நுழையறதை ஒத்துக்க முடியல! பட், நீங்க அவள புரிஞ்சிக்கிட்டதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்…

சோ, லவ்ஸ் கிட்ட பேசுங்க… பேசிப் பாருங்க! அவ உங்கள ஏத்துக்கிட்டானா எனக்கு எந்த பிராப்ளமும் இல்ல.” வினோத் பேசி முடித்ததும், ஜீவாவின் முகத்தில் ஒரு உதட்டளவு புன்னகை மட்டுமே!

அதன்பின் அவனிடம் பேசுவது, அவனை வற்புறுத்துவது போல் தோன்ற வாய்ப்பிருப்பதால், பேசாமல் எழுந்துக் கொண்டான் ஜீவா. “அப்போ சரி வினோ. நான் அன்புகிட்ட பேசிக்கறேன். உங்க ரெண்டு பேருக்கும் சண்டே எங்கேஜ்மென்ட்ல? என்னோட பெஸ்ட் விஷ்ஷஸ்!! பை, அப்புறமா பார்க்கலாம்.”

சோர்ந்து போய் செல்லும் ஜீவாவையே சிந்தனை அலைகளுடன் பார்த்தபடி இருந்தனர் இருவரும். அடுத்து என்ன செய்ய வேண்டும் என யோசனையுடன் ஜீவா இருக்க, வீட்டிலிருந்து வந்த ஒரு கால் அனைத்தையும் தவிடு பொடியாக்கியது!!


 
மிகவும் அருமையான பதிவு,
சிந்துலக்ஷ்மி ஜெகன் டியர்
 
Last edited:
சூப்பர் லட்சுமியம்மா
இன்னொரு அறை உங்க பையனுக்கு கொடுங்க
 
Top