Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MP 22

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம் – 22

ஜீவாவின் வருகையை சற்றும் எதிர்பார்க்காதலால், திகைத்து நின்ற அன்பு சில நொடிகளிலேயே சுதாரித்தும் கொண்டாள். எப்படி அவன் பாட்டிற்கு இங்கே தங்கப் போகிறேன் என உள்ளே வரலாம்?? அவனை வழி மறைத்தாள்.

“நில்லுங்க… இப்போ எதுக்கு இங்க தங்கப் போறீங்கனு வந்திருக்கீங்க?? குழந்தைங்க இங்க கொஞ்ச நாள் தான் இருக்கப் போறாங்க! நானே ஒரு வாரம் கழிச்சு அவங்கள அனுப்பிடறேன்.

நீங்க தங்கறது எல்லாம் சரிப்பட்டு வராது, சொல்லிட்டேன்!” அவள் கெத்தான தோரணையுடன் பேசுவதை பார்த்து ஒரு நிமிடம் ஆச்சரியக்குறி தோன்றி மறைந்தது ஜீவாவிடம். அவன் அவளின் முகைத்தை பார்த்துக் கொண்டு நிற்க, ‘அப்பாபா’ என ஓடோடி வந்தனர் அவனின் மழலை செல்வங்கள்.

நிலேஷை முதலில் தூக்கி, ஜுரம் இருக்கிறதா என்று ஆராய்ந்தான். பின் நிக்கித்தாவையும் தூக்கினான். அவன் எடுத்து வந்த பைகளை கவனித்து, “அப்பா என்ன இருக்கு பேக்ல??” என்று வினவினான் நிலேஷ்.

“அப்பா இனிமே இங்க தான்டா குட்டிஸ் இருக்கப் போறேன். ஜாலியா??” அவன் கூறியதை கேட்டு நிலேஷ் அவனின் கழுத்தை கட்டிக் கொண்டான் என்றால், நிக்கித்தா ஒன்றும் புரியவில்லை என்றாலும் அவளும் குதித்து தன் சந்தோஷத்தை தெரிவித்தாள்.

இதையெல்லாம் பார்க்கப் பார்க்க, அங்கே ஒருத்தியின் கோவம் ராக்கெட் அளவுக்கு ஜீவ்வென்று ஏறியது. அதையெல்லாம் மற்ற மூவரும் கண்டுக் கொண்டதாக தெரியவில்லை! ஜீவா குழந்தைகளுடன் உள்ளே சென்று பைகளை வைத்துவிட்டு, மீண்டும் ஹாலுக்கு வந்தான்.

வந்து பார்த்தால் அன்பு முன்பு இருந்தபடியே நின்றிருந்தாள். எப்படி அவளை சமாளிப்பது என்று யோசித்து வந்ததையெல்லாம் நினைவு கூர்ந்து, அவளிடம் சென்றான்.

“என்ன அன்பு அப்படியே இருக்க??” சட்டென்று அவனை ஓரக் கண்ணால், திரும்பி பார்த்து முறைத்தாள். “என்னமா திடீர்னு சும்மா பேய் மாதிரி முறைக்கற? நான் பயந்தே போயிட்டேன்.”

அவன் டாபிக்கை மாற்றுகிறான் என புரிந்தபடியால், கோவத்தை குரலில் நிறுவி, “இப்போ என்ன பிளான்னோட இங்க வந்திருக்கீங்க? குழந்தைகளுக்காக தான் வந்தேன்னு நீங்க சொல்றது நம்பற மாதிரி இல்ல!” என்றாள் முறைப்பு கொஞ்சமும் குறையாமல்.

“ஹே என்ன ராணிமா நான் சொன்னா நம்ப மாட்டியா? சத்தியமா குழந்தைங்க, அவங்களுக்காக மட்டும்ம்ம்ம் தான் வந்தேன்!” அவளின் கண்களையே ஆழ நோக்கி அவன் கூறிய விதத்தில், ‘குழந்தைங்க’ என்று தன்னையும் சேர்த்து குறிப்பிடுகிறானோ என்ற சந்தேகம் வந்தது அன்புக்கு.

அவளின் மன ஓட்டத்தை புரிந்தபடியால், “அதே அதே ராணிமா… உன்னையும் சேர்த்து தான் சொன்னேன். உனக்காகவும் தான் வந்தேன்!” என்றான் அன்பொழுகிய குரலில்.

அவனின் அக்கரையை கவனிக்கும் மன நிலையில் அவள் இல்லை… “இப்போ நம்ம ரெண்டு பேரும், ஹஸ்பென்ட் ஆன்ட் வைப்ஃ கிடையாது! எந்த தையிரியத்துல இங்க தங்கறேன்னு சொல்றீங்க??”

“உன்னோட கழுத்துல இன்னமும் தொங்குற தாலி, அது மேல இருக்க தைரியத்துல தான் சொல்றேன்!!!”

ஆம், என்ன தான் டிவோர்ஸ் ஆகி இருந்தாலும் தாலியை அன்பரசி கழட்டவில்லை. ஒருபுறம் அவன் மேல் இருந்த காதலாலும், சென்டிமென்டாலும் அவளுக்கு கழட்ட முடியவில்லை என்றால், இன்னொரு புறம் சமூகத்தில் இருக்கும் கயவர்களிடமிருந்து தன்னை காத்து கொள்ளவும் அவள் கழட்டுவது பற்றி யோசிக்காமல் விட்டுவிட்டாள்!

ஜீவா அதை கவனித்தே இருந்தான். அவளை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும். அதனாலயே இப்படி சொன்னது. இருந்தாலும் இதனைக் கொண்டு ஜீவா தன்னை கார்னர் பண்ணுவது அன்பரசிக்கு பொறுக்கவில்லை.

“தாலி மட்டும் இருந்தா போதுமா?? லீகலி நீங்க வேற யாரோ, நான் வேற யாரோ. தெரியும்ல????”

“தெரியும்மா… நல்லாவே தெரியும்!! அதே லீகல் பேப்பர்ல எங்கயும் நீயும் நானும் ஒரே இடத்துல தங்க முடியாதுனு சொல்லலியே?? அப்படி எதாவது இருக்கா என்ன??”

‘சே, என்ன சொன்னாலும் எதாவது சொல்றான்! இவனனனன?!’ ஜீவாவின் புன்னகை பூசிய முகத்தை பார்த்து நறநறவென்று பற்களை கடித்து, அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் அன்பு. உடனே போன் எடுத்து வினோத்தை அழைத்தாள்.

அவன் கண்டிப்பாக இதைப் பற்றி முன்னையே தெரிந்து வைத்திருப்பான் என்பது அன்புவின் மனது யூகித்தது. ஆனால், உண்மையில் வினோத்திற்கு எதுவுமே தெரியாது!

“ஹே வினோ, உடனே வீட்டுக்கு வாடா. இங்க குட்டியோட அப்பா வந்திருக்காரு!”

“அவரு வந்தா எதுக்கு என்னை கூப்பிடற?? நீயே பேசி அனுப்பு…”

“ஆமா, இது எனக்கு தெரியாது பாரு, பெருசா அட்வைஸ் பண்றான். அவரு நிறைய பேக்கோட வந்திருக்காருடா. இனிமே இங்க தான் தங்கப் போறேன்னு சொல்லிட்டு இருக்காரு. நீ வாடா சீக்கிரமா.”

இந்த வாக்கியத்தை கேட்டதும் வினோத்தின் பக்கம் ஒரு சில நொடிகள், மௌனமே நிலவியது. ‘என்ன ஸட்டனா கிளம்பி வந்துருக்கான். என்ன விஷயம் தெரியலையே??’ அதற்குள் அன்பரசியின் குரல் அவனை அதட்டியது!

“என்னடா ஒண்ணுமே பேசாம இருக்க. நான் என்ன சொன்னாலும் எதாவது ஏட்டிக்கு போட்டியா பேசறாரு. நீ வாயேன் சீக்கிரமா…”

“சரி ஓகே. இப்போ கிளம்பறேன்.”

வினோத்திடம் பேசி வைத்ததும், அன்பு அவ்வறையிலேயே தங்கிக் கொண்டாள். ஜீவாவும் மேலும் அவளை தொந்தரவு செய்யாமல் குழந்தைகளுடன் ஐக்கியமாகி விட்டான். வினோத் வந்ததும் தான் வெளியே வந்தாள் அன்பு.

ஜீவாவிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, ஹாலில் அமர்திருந்த இவளிடம் வந்தான். “அவரு இப்போ மொத்தமா மாறி தான வந்திருக்காரு லவ்ஸ். கொஞ்சம் யோசிச்சு முடிவெடுக்கலாமே, இந்த வாட்டி! போன தடவ தான் எல்லாமே அவசரமா சுட்ட தோசை மாதிரி வேகாமையே போயிடுச்சு.

சோ, இப்போ கொஞ்ச நாள் யோசி… மெதுவா அவர்கிட்ட உன்னோட டெசிஷன சொல்லு…. ஓகே வா??”

“பசிக்குதாடா லூசு??” சிரிப்பை அடக்கியபடி அன்பரசி வினவ, அப்போது தான் எதுக்கு இப்படி கேட்கிறாள் என யோசனை வந்தது நம் அறிவுச் செல்வத்துக்கு! தன்னுடைய தோசை உதாரணம் புரிந்து கேட்கிறாள் என அனுமானித்து, ஆமோதிப்பாக தலையசைத்தான் வினோத்.

கிச்சனில் எல்லோருக்குமாக காபி கலந்தபடியே, அவளுடைய மறுப்பை கூறினாள் அன்பு. “அவரு மாறிட்டாருன்னு இப்போ போய் அவர் கூட வாழச் சொல்றியா வினோ? என்னால முடியாது! அவ்வளவு சீக்கிரம் எதையும் மறைக்க முடியாதுடா. அது மட்டுமில்ல… முன்னவிட இப்போ தான் ரொம்ப வேலை பார்க்குறேன்.

மறுபடியும் இத வெச்சு எங்களுக்குள்ள சண்டை வந்து, திரும்ப பிரிஞ்சு!!! என்னால முடியாது வினோ…”

“சண்டை வராது அன்பு. ஐ பிராமிஸ்!” கிச்சனின் வாசலில் நிக்கி குட்டியை தூக்கி நின்றபடி, ஜீவா தனக்கே உரிய அழுத்தமான குரலில் கூறினான். வினோத் அவ்விடத்தை விட்டு நாசுக்குக்காக நகர பார்க்க மீண்டும் ஜீவாவே அவனை நிறுத்தினான். “நீ இருடா வினோத். எதுவும் ரகசியம் பேசப் போறதில்ல நாங்க.”

“ஜீவா ஃபர்ஸ்ட விட இப்போ நிறைய சோஷியல் வொர்க்கு பண்றேன். என்னால என்னை மாத்திக்க முடியும்னு தோனல! முன்னாடி, நான் பண்ணது தப்பு தான்… பட், அதே தப்ப மறுபடியும் பண்ணக் கூடாதுனு பார்த்துப் பார்த்துப் இருக்கேன்! இப்போ தான் லைப்ஃ ஸ்மூத்தா போயிட்டு இருக்கு.

ப்ளீஸ், என்னை டிஸ்டெர்ப் பண்ணாதிங்க!” கைகளை கட்டிக் கொண்டு, முகத்தில் கெஞ்சல் மிஞ்ச அன்பரசி கேட்டதை பார்த்து, ஜீவா பேசும் முன் வினோத் முந்தினான். “என்ன ஸ்மூத்தா போகுதா??? அப்போ எதுக்கு டெய்லி சாமி கும்பிடும் போது, தூங்கும் போது, இல்ல நிறைய நேரம் சும்மாவே சுவர வெறிச்சு பார்த்து அழற??”

“அது பாப்பாவும், நிலு குட்டியும் என்கூட இல்லனு…..”

“சும்மா எதாவது காரணம் அடுக்காத லவ்ஸ். குழந்தைங்க உன் கூட இருக்கும் போதும் நீ அப்படி தான் இருப்ப! எங்க கிட்டயே பொய் சொல்லாத.”

இவர்களின் உரையாடலை பார்வையாளனாக மாறி கவனித்துக் கொண்டிருந்த, ஜீவா இடை புகுந்தான். “சரி விடு வினோ. அன்பு நான் உன்கிட்ட சொல்ல வந்ததே வேற. எனக்கு நீ இப்போ சோஷியல் வொர்க் பண்றதால எந்த பிராப்ளமும் இல்ல…

அது சம்பந்தமா என்ன ஹெல்ப் வேணும்னாலும் என் கிட்ட கேக்கலாம். நான் முன்ன மாதிரி இல்ல… அது உனக்கு புரியுதா இல்லயா, தெரியல! ஆனா, எனக்கு என்னோட பழைய அன்பரசி, என்னோட ராணிமா வேணும். அவ்வளவு தான்!”

“எப்படி உடனே நான் மாறிடுவேன்னு எதிர்பார்க்கறிங்க?? நான் இப்போ உங்க வீட்டுக்கு வந்தாலும், என்னால பழைய மாதிரி இருக்க முடியாது ஜீவா. அது புரியுதா உங்களுக்கு?? எப்போ நீங்க என்ன சொல்வீங்களோன்னு என்னால இருக்க முடியாது!!”

“ஹப்பாபா!! என்ன சும்மா ரெண்டு பேரும் புரியுதா புரியுதான்னு கத்திட்டு இருக்கீங்க? லவ்ஸ் நீ இப்போ முடிவா என்ன தான் சொல்ற??” வினோத்தின் சலிப்பான குரலுக்கு அவனை முறைத்துவிட்டு, “எனக்கு கொஞ்சம் டைம் வேணும். அது வரைக்கும் யாரும் என்னை எதுவும் கேக்கக் கூடாது…” என்றாள் அன்பரசி.

“கடவுளே!!! இதுக்கு தான் இவ்வளவு பில்டப்பா?? நல்லா டைம் எடுத்துக்கோம்மா…” இதை மட்டும் வினோத்தும் ஜீவாவும் ஒரு சேர கூறினர். ஒரே வித்தியாசம், வினோத் உரக்க கூறினான். ஜீவா மனதில் கவுன்டர் அடித்தான்.

அதன் பின் வந்த நாட்கள், அன்பரசியை தவிர மற்ற எல்லோருக்கும் றெக்கை கட்டி பறந்து சென்றது. வினோத் மற்றும் மலர்விழியின் திருமணம் ஒரு மாதம் கழித்து, நாள் குறிக்கப்பட்டது. அந்த நாள் மிகவும் ஸ்பெஷல்…

ஏன்னென்றால் அது அன்பரசியின் பிறந்த நாள்!! ஐயர் அடுத்த மாதத்தில் மூன்று நாட்கள் தரவும், வினோத்தும் மலர்விழியும் அன்புவின் பிறந்த நாளையே தேர்ந்தெடுத்தனர். கேட்ட அனைவருக்கும், முக்கியமாக அன்புக்கு மிகவும் சந்தோஷம்…

இருந்தாலும் மனதில் ஏதோ ஒன்று கொஞ்ச நாட்களாக நெருடியது. என்ன பயம், எதைப் பற்றிய தவிப்பு என்று அவளாளே முதலில் அறிய முடியவில்லை. என்ன தான் வினோத்தை முழுமையாக நம்பினாலும், திருமணம் என்று ஆன பின் வினோத்தின் கவனம் தன் மனைவி, தன் குடும்பம் என்று சென்றுவிடும்.

அது தான் இயல்பு… அது தான் சரியும் கூட! அப்போது தனக்கென்று யார் இருப்பார், என்ற விடை அறியா கேள்வியே மனதை துவைத்தது. எல்லோருக்கும் இருக்கும் சாதாரண ஆசையான குடும்பம், குழந்தைகள் போன்ற ஆசைகள் தனக்கும் இருக்கக் கூடாதா??

அப்படி என்ன பாவப்பட்ட பிறவி நான்?? குழந்தைங்கள் இருந்தும் இல்லாத நிலைமை…. சிறு வயதிலிருந்து தனியாகவே இருந்தது பெரியதாக தெரியவில்லை. சிறு காலம் உலகத்தின் ஒட்டு மொத்த அன்பையும் வாங்கிவிட்டு, இப்போது ஒன்றுமே இல்லாத நிலை தான் அவளை கொல்லாமல் கொன்றது.

யோசித்து யோசித்தே மண்டை வலித்தது தான் மிச்சம். இப்படியே சென்றால், பையித்தியம் பிடித்துவிடும் போலவே. என்ன செய்வது மனம் மீண்டும் யோசித்த இடத்திலேயெ சுழன்றது.

எங்கு சுழன்றாலும் கடைசியில் வந்து நின்ற இடம், ஜீவா. அவனின் இப்போதைய மாற்றத்தை எந்த அளவுக்கு நம்புவது, அவனுடன் மீண்டும் இணைவது எல்லாம் சாத்தியமா என்றும் சிந்தனை ஓடியது.

ஒரு நிமிடம் அவன் பக்கம் சரிய துவங்கும் மனது, மறு நிமிடமே அவனால் ஆன இழப்புகளை முன் நிறுத்தியது. எதுவாக இருப்பினும், வினோத்தின் கல்யாணத்துக்கு பிறகு பார்க்கலாம். இப்போது அவனின் கல்யாணம் நல்லபடியாக முடிய வேண்டியதே முக்கியம்!

அன்பரசி இப்படி நினைக்க, ஜீவாவோ எப்படியாவது அவளை தன் பக்கம் இழுப்பது என்ற மனதுடன் தன்னால் முடிந்த வரை போராடினான். வினோத்தையும் தன் உதவிக்கு அழைத்துக் கொண்டான்.

வீட்டில் இருக்கும் நேரம் பெரும்பாலும் ஒரே ரகளையாக சென்றது. “அம்மாவ போய் கூட்டிட்டு வா நிக்கி. நம்ம சேர்ந்து விளையாடலாம்…” ஜீவா கூறியதை உடனே கேட்டு, ஓடுவாள் குழந்தை.

“அம்மா நீயு வா…. ப்பா சொன்னாரு.” மகளை உடம்பு சரியில்லை, என சமாதானப்படுத்தி அனுப்புவாள் அன்பு. மகளே பரவாயில்லை என்று எண்ணும் வகையில் நிலேஷ் ஒரு படி மேலே சென்றான்.

“அம்மா நீயும் அங்க பாட்டி வீட்டுக்கு வாமா… ஜாலியா இக்கும்!! ப்ளீளீஸ்ஸ்ஸ்மாமா” என்று ராகம் பாடினான் குட்டி.

என்ன சொல்வது என்று தெரியாமல் அன்பு முழிக்க, வினோத் விழுந்து விழுந்து சிரித்தான். ஜீவா ஆவலாக அன்புவின் முகத்தை ஆராய, அவளோ குழந்தையின் பேச்சை மாற்றினாள்.

“ஹே நிலு குட்டி நீ கேட்ட சாக்கோ ஸ்டிக்ஸ் மாமா வாங்கிட்டு வந்தாங்க. சாப்பிடலாமா, ஹ்ம்ம்ம்ம்?”

தாய் கண்களை விரித்து கூறவும், நிலேஷும் ஓடிவிட்டான். ஆனால், விஷயத்தை மறக்காமல் அன்று இரவு படுக்க போகும் போது மீண்டும் கேட்டான். ஜீவாவும் அன்பும் வெவ்வேறு அறையில் தங்கினர். குழந்தைகள் அவர்களின் விருப்பம் போல படுத்துக் கொள்வர்.

அன்று அவளுடன் படுத்துக் கொண்ட நிலேஷ் மறுபடியும் அக்கேள்வியை கேட்பான் என அன்பு நினைக்கவில்லை.

அவள் அமைதியாக இருக்கவும், “ம்மாமா ப்ளீஸ்மா… பாட்டி, தாத்தா, அப்பா, நிக்கி பாப்பா, அப்பறம் நீ நானு, எல்லாரும் ஒண்ணா இருக்கலாம்மா. ஓகே சொல்லுமா…” என்று மன்றாடவே செய்தான்.

“நிலு உனக்கு என்னை பிடிக்குமா, இல்ல அப்பாவ ரொம்ப பிடிக்குமாடா?”

“எனக்கு டூ பேரையும் பிடிக்கும். நம்ம பாட்டி வீட்டுக்கு போலாம்ம்ம்ம்ம்ம்!!!”

“ஏன் குட்டி அங்க போனோம்னு சொல்ற?? நம்ம இங்கயே இருக்கலாம்டா…”

“அச்சோ ம்மா… இது ஸ்மால் வீடு! நம்ம அங்க பாட்டி வீட்டுக்கு போலாம்… பிக் வீடு. எல்லாரு இருக்கலாம். ஓகே வா??”

தனக்கு பிடித்த பொம்மையை வாங்கிக் கொடுக்குமாரு, ஏக்கத்துடன் பார்க்கும் பார்வையை நிலேஷ் பார்த்து வைக்க, அன்பரசி செய்வது அறியாமல் கவலைக் கொண்டாள்.

என்னென்னவோ பேசிக் அவனை சரிகட்டி, உறங்க வைப்பதற்குள் அன்பு திணறித்தான் போனாள். மகனை சமாளித்தாகி விட்டது! தத்தளிக்கும் மனதை எப்படி சமாளிப்பது?? ஒரு நிலையற்ற இடத்தில் இருப்பது போல உணர்ந்தாள் அன்பு.

அது சிறிது நாட்களாகவே வினோத்துக்கும் ஜீவாவுக்கும் தெரிந்தது. இருந்தும் அவள் சிந்தனை செய்யட்டும்… செய்து ஒரு நல்ல முடிவுக்கு வந்தால் அனைவருக்கும் சந்தோஷமே!

இப்படியாக சில நாட்கள் ஓட, ஜீவாவை தனக்கு எந்த அளவுக்கு பிடிக்கின்றது என்று தெரிந்து கொண்டாள் அன்பு! அன்று, கிச்சனில் உள்ள அலமாரிகளை சுத்தம் செய்துக் கொண்டிருந்தாள்.

குழந்தைகள் வினோத்துடன் கீழே விளையாட போய் விட்டனர். ஜீவாவும் சென்று தான் இருந்தான். ஆனால், அவனுக்கு வந்த அலுவக தொலைப்பேசி அழைப்பால் மீண்டும் மேலே வந்துவிட்டான். கதவு திறந்தே இருந்ததால், உள்ளே ஹாலில் உட்கார்ந்து பேசி முடித்தான்.

முடித்ததும் அவனின் ராணி நினைவு வர, ‘என்ன செய்யறா?’ என்று உட்புறமாக நோக்கினான். பார்த்தால் கிச்சனில் ஒரு ஸ்டூல் போட்டுக் கொண்டு, மேல் அலமாரியை சுத்தம் செய்திருந்தாள் அன்பு.

உடனே கால்கள் தானாக அவனை நடத்தி அவளின் முன் நிற்க வைத்தது. “ஹே என்ன பண்ற??”

அவனை ஒரு அலட்சியமான பார்வையுடன் எதிர்கொண்டு, “ஹ்ம்ம்ம்… பார்த்தா எப்படி தெரியுது??” என்று நக்காலாக கேட்டாள். “பார்த்தா என்னென்னவோ தெரியுது….”

ஜீவாவின் குரலில் இருந்த வேறுபாட்டை உணர்ந்து அவனின் முகம் பார்த்தாள். அவனின் பார்வை அவளின் இழுத்து சொருகிய புடவையில் நிலைத்திருந்தது. “போதும்!” புடவையை சரி செய்தபடி, ஒரு அதட்டலான குரலுடன் அவனை அதட்டிவிட்டு, அவசர அவசரமாக இறங்கினாள் ஸ்டூலில் இருந்து.

புடவை கால் தடுக்கிவிட, கீழே விழப் போன அவளை இழுத்து பிடித்தான் ஜீவா. பிடித்திருந்த கைகள் அவனையும் அறியாமல், அவளையும் கேட்காமல் இறுக அணைத்தது அவன் மனைவியை! தப்பு தப்பு, அவனின் முன்னாள் மனைவியை…

அந்த எண்ணம் ஆழ ஊன்றியிருந்த அன்பரசியோ, சில நொடிகளிலேயெ அவன் பிடியிலிருந்து விடை பெற திமுறினாள். “விடுங்க. ஜீவா, என்ன பண்றீங்கன்னு தெரிஞ்சு தான் பண்றீங்களா??”

“ஆமா, தெரிஞ்சு தான் பண்றேன்! இந்த மாதிரி நம்ம எவ்வளவு நாள் உட்காந்து பேசிருப்போம். நம்ம வாழ்ந்த வாழ்க்கையெல்லாம் உனக்கு ஞாபகமே இல்லையா ராணி? இல்ல, மறக்கப் பார்க்கறியா??”

ஜீவாவின் கெஞ்சலுடன் கூடிய அழுத்தமான குரல் நிச்சயம் அன்புவை பதம் பார்த்தது! அதுவே, அவளை ஜீவாவின் முகத்தையே கண்களில் வழியும் நீருடன் பார்க்கவும் வைத்தது!

இல்லையென்றால் அதன் பின் ஜீவா அவளை கட்டி அணைத்து, கொடுத்த இதழ் முத்தத்தில் ஒன்றிப் போயிருக்க மாட்டாள்! ஆனால், அந்த இதழ் ஒற்றலில் தன்னை மறந்து, அவனுடன் முழுவதுமாக ஐக்கியமாகிப் போனாள் அவன் அன்பின் அரசி!
 
மிகவும் அருமையான பதிவு,
சிந்துலக்ஷ்மி ஜெகன் டியர்
 
Last edited:
QUOTE="Banumathi jayaraman, post: 28141, member: 20"]
நான்தான் Girst,
சிந்துலக்ஷ்மி டியர்
[/QUOTE]
Girst or First ?
 
Super sis
 
Top