Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MP 6

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம் – 6

அன்பரசி அந்த ரூம்மிற்க்குள் வருவதை வினோத்தும் சரி, ஜீவாவும் பார்க்கவில்லை. ஆனால், அவளை பார்த்த நிமிடம் வினோத்தின் கைகள் தானாக இறங்கியது. சில பெருமூச்சுகள் விட்டு, தன் சட்டையை சரி செய்துக் கொண்டு கோபமாக இரண்டு பேரையும் முறைத்தான் ஜீவா.

“என்ன ரெண்டு பேரும் டிராமா பண்றீங்களா? எதுக்கு இப்போ இங்க வந்தீங்க? உங்க கூட சண்டை போடுறதுக்கு எல்லாம் எனக்கு டைமில்ல….”

ஜீவாவின் கத்தலை கேட்டு இரண்டு பேரின் முகமும் இருண்டு போனது. நேராக வினோத்தின் முன் நின்று, “இன்னும் எதுக்குடா இங்க நின்னிட்டு இருக்க? கிளம்பு முதல்ல!” என்று கோபத்தை கட்டுப்படுத்த முயன்றபடி அன்பு கூறினாள்.

அவள் சொன்னதை கேக்காதவன் போல பாவித்து, ஜீவாவின் பக்கம் திரும்பினான் வினோத். “இனிமே நீ இவகிட்ட எதுவும் பேசக் கூடாது. அவகிட்ட எது சொல்லனும்னாலும் என்கிட்ட சொன்னா போதும்!!”

வினோத்தின் ஆர்டரை கேட்டு, ஜீவாவின் புருவங்கள் உயர்ந்தது. “நான் யார்கிட்ட பேசனும்னு நான் முடிவு பண்ணிக்கிறேன்! நீ ஒண்ணும் சொல்ல தேவையில்லை.”

ஜீவா கூறியதை வினோத் மறுத்து, மீண்டும் வாக்குவாதம் முற்றுவதற்க்குள் அன்பரசி வினோத்தின் கைகளை பற்றி, அவனை அந்த அறைக்கு வெளியே இழுத்து வந்தாள். அவர்கள் வெளியே செல்லும் போதும், ஜீவாவும் வினோத்தும் ஒருத்தரை ஒருத்தர் முறைத்தபடி தான் இருந்தனர்.

வெளியே வந்ததும் கைகளை உதறிவிட்டு, அன்பரசியை உறுத்து விழித்தான் வினோ. “நீ எப்படி இங்க வந்த? நான் உன்கிட்ட ஃபிரெண்ட பார்க்க போறேன்னு தான சொன்னேன்?”

அவனின் கோபமான முகத்தை பார்த்து இவளுக்கு பி.பி. ஏறியது. “என்கிட்ட பொய் சொல்லிட்டு வந்ததுமில்லாம என்னையே கேள்வி கேக்கறியா?

சொல்ல மாட்டேன் போடா…” கூற வேண்டியதை கூறாமல், வினோத்தின் சட்டை பாக்கெட்டில் இருந்த கார் சாவியை எடுத்துக் கொண்டு, வேக நடைகள் போட்டு அலுவகத்தின் வாயிலுக்கு சென்றாள் அன்பரசி.

அவளின் பின்னே வந்துக் கொண்டிருந்தவன் திடீரென சடன் பிரேக் போட்டது போல நின்றான். காரணம் அன்பரசி வாயிலில் நின்று மலர்விழியோடு பேசிக் கொண்டிருந்தாள். மலரை பார்த்ததும் கோபம் எல்லாம் பறந்தோட, ஒரு இளகிய மனநிலையுடன் அவர்களிடம் விரைந்தான்.

இவனை பார்த்ததும், ‘ஹாய்’ என கூறிவிட்டு மீண்டும் அன்பரசியிடம் பேச்சை தொடர்ந்தாள் மலர்விழி. அன்புக்கே வினோத்தை பார்த்து பாவமான நேரம், அவளின் மொபைல் ரிங்டோன் அடித்து அவர்களுக்கு, முக்கியமாக வினோத்திற்கு உதவி செய்தது!

அன்பு செல்லை தூக்கிக் கொண்டு சிறிது தூரம் போனவுடன், தன் வேலையை ஆரம்பித்தான். “நீங்க எப்படி இங்க?” கேள்வி கேட்ட வினோத்தை பார்த்து குறும்பாக புன்னகைத்து, “அத நான் கேக்கனும்! நான் இங்க தான் வொர்க் பண்றேன். அதனால இங்க இருக்கேன்…

பட், நீங்க எப்படி ஜீவா சார் ரூம்ல? உங்களுக்கு ஏற்கெனவே அவரை தெரியுமா?” என வினவினாள். ஜீவாவின் பெயரை கேட்டதும், மீண்டும் கோப அவதாரம் எடுக்காமல் இருக்க, மிகவும் முயற்சித்தான் வினோத்.

ஓரளவிற்க்கு அதில் வெற்றியும் பெற்று, ஒரு சாதாரண தலையசைப்போடு நிறுத்தியும் கொண்டான். அவனுக்கு மலர்விழி, ஜீவாவின் அலுவகத்தில் வேலை செய்வதே நெருஞ்சி முள்ளாக குத்தியது.

‘சரி வேலை தான… இது இல்லனா, வேற பார்த்துக்க வேண்டியது தான்’ அவனே முடிவும் செய்துக் கொண்டான்! “உங்க வீடு இங்க தான் இருக்கா?” அடுத்த கடலையை வறுக்க ஆய்த்தமானான், அந்த புதுக் காதலன்.

“ம்ஹூம்… இங்க இல்ல, நான் நங்கநல்லூர்ல இருக்கேன். நீங்க?”

“நாங்க தாம்பரம்ல இருக்கோம். இங்க எத்தனை வருஷமா வேலை பார்க்கறீங்க?”

“எத்தனை வருஷமாவா? என்னை பார்த்தா அவ்வளோ வயசான மாதிரியா இருக்கு?”

உறுட்டலான கண்களுடன் மலர்விழி, விழிகளால் கொக்கி போட, கொக்கி எல்லாம் தேவை இல்லை நானே வந்து மாட்டிக் கொள்வேன் என்பது போல, சிரித்தப்படியே சிக்கினான் வினோத்.

இவர்களை தூரத்தில் இருந்தபடி உள்வாங்கினாள் அன்பு. மலர்விழியிடம் சீக்கிரமாக பேச வேண்டும் என மனதில் மீண்டும் உறுதிமொழி எடுத்தாள்.

இவர்கள் பேசுவதை அன்பரசி மட்டும் பார்க்கவில்லை! ஜீவாவும் தான் பார்த்தான். தன் உதவியாளரை கூப்பிட வெளியே வந்தவன், வினோத்தும் மலர்விழியும் பேசுவதை பார்த்து நின்று விட்டான்.

வினோத்தின் முகத்தையும் கண்களையும் வைத்தே கண்டுக் கொண்டான், இதில் நட்பையும் மீறிய ஒன்று இருக்கிறது என்று. ஆனால், நேர் மாறாக மலர் நார்மலாக பேசுவது போல தான் தோன்றியது!

சரியாக தெரியாமல் ஒன்றும் கூற வேண்டாம், என முடிவெடுத்து தன் வேலைகளில் திரும்ப புதையுண்டான்! வினோத்திற்கு மலரை விட்டு வர மனசேயில்லை… ஆனால், அன்பரசியை கருத்தில் கொண்டு விடைப்பெற்றான்.

வெளியே வந்து பார்த்தால், அன்பு காரின் மேல் சாய்ந்தபடி இவனுக்காக காத்திருந்தாள். ஒன்றும் பேசாமல் இவன் காரில் ஏறவும், அன்புவும் ஏறினாள். உட்கார்ந்த அடுத்த நிமிடம், வினோத்தை நக்கலாக பார்த்து, “இந்த ரணகளத்துலயும் உனக்கொரு கிளுகிளுப்பு கேக்குது!” என கூறினாள்.

“எஸ் லவ்ஸ்மா! ஒரே லவ் மூட் தான் நேக்கு டுடே…!”

சிரித்தபடி இருவரும் அமைதியாக, திடீரென உதித்தது கேள்வி, வினோத்திற்க்கு. “ஆமா நீ எப்படி இங்க வந்த? நான் இங்க தான் இருக்கேன்னு உனக்கு எப்படி தெரியும்?”

“நான் மலர்விழி சொல்லி தான் வந்தேன்.”

“என்ன மலரா!!? அவ உனக்கு சொன்னாளா? இது எப்போ நடந்துச்சு…”

வினோத் கொடுத்த ஆச்சரியக்குறியை கிடப்பில் போட்டுவிட்டு, பதிலளித்தாள் அன்பு. “நான் அவளுக்கு சும்மா தான் கால் பண்ணேன். கொஞ்சம் அவள பத்தியும் தெரிஞ்சுப்போம்னு! அவ ஃபோன் எடுத்தவுடனே, ‘வினோத் சாரை இப்போ தான் ஆபிஸ்ல பார்த்தேன்.

நீங்க எங்க இருக்கீங்கனு’ என்னையே கேக்கறா… அப்புறம் தான் தெரிஞ்சுது நீ இங்க இருக்கேன்னு. எதுக்கு வந்துருப்பேன்னு நல்லாவே தெரியும்!! அதனால தான் பசங்கள பக்கத்து வீட்டு ஆன்டி கிட்ட விட்டுட்டு வந்தேன்.”

இவன் பேயிங் கெஸ்ட்டாக இருக்கும் வீட்டில் பசங்களை சில அவசர சமயங்களில் விடுவது உண்டு. அதே போல் இன்றும் விட்டதால், குழந்தைகளை மனதில் கொண்டு காரை விரைவாக செலுத்தி வீட்டை அடைந்தான் வினோத்.

வீட்டிற்க்கு வந்த அடுத்த ஒரு மணி நேரத்தில், அவர்களை ஜீவாவின் வீட்டில் விடும் நேரம் நெருங்கியதால் மீண்டும் கிளம்பினான் வினோத். வழக்கம் போல், அன்பு அழுகை பாதி அறிவுரை மீதியாக தன் செல்வங்களை வழியனுப்ப, இந்த முறை ஏனோ நிலேஷும் நிக்கித்தாவும் கூட அழ ஆரம்பித்தனர்.

எப்போதும் சிறு சினுங்கல்கள், சில தேம்பல்கள் இருக்கும் தான்! ஏன் சில நாட்கள் நிலேஷ், “அம்மா நீயும் வாம்மா…. ப்ளீஸ்மா” என கெஞ்சியதும் நடந்திருக்கின்றது. ஆனால், அம்மாவை விட்டுட்டு வர மாட்டோம் என அவளை கட்டிக் கொண்டு அழுவது இதுவே முதல் முறை.

வினோத்தை விட அன்பரசி தான் தாங்க மாட்டாமல், அவர்களை கட்டிக் கொண்டு அழுகலானாள். இவர்களை பார்க்கப் பார்க்க, நெஞ்சில் பாரம் ஏறியது போல உணர்ந்தான் வினோத்.

ஒரு வழியாக அவர்களை தேற்றி, ஜீவாவின் வீடு நோக்கி பயனமானான் வினோத். லட்சுமி அம்மா மட்டுமே வீட்டில் இருந்ததால் பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை.

வழக்கம் போல் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு வீட்டிற்கு திரும்பினான். அந்த இரண்டு வார்த்தைகளும் வாசலோடு தான் என்பது குறிப்பிடத்தக்கது! இவன் வீட்டிற்கு வந்தால் எட்டாவது அதியசமாக சிஸ்டர் சவீதாவின் மடியில் அன்பரசி தலை வைத்து அழுதுக் கொண்டிருந்தாள்.

சவீதா சிஸ்டரின் மேற்பார்வையில் நடந்து வரும் அனாதை இல்லத்தில் தான் அன்பரசி வளர்ந்தது. எப்போதாவது அவருக்கே தோன்றினால் தான், இவர்கள் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பிற்க்கு அவரின் வருகை நடந்தேறும்.

இன்று அப்படி வந்திருப்பார் போலும்! இவளின் அழுகையில் மாட்டிக் கொண்டார் பாவம், என யூகித்து அவரை வரவேற்றான் வினோ.

“வாங்க சிஸ்டர். எப்படி இருக்கீங்க? பசங்க எல்லாம் நல்லா இருக்காங்களா?”

“எல்லாரும் நல்லா இருக்காங்கபா. நீ எப்படியிருக்க?”

அழுகை முடிந்து தேம்பிக் கொண்டிருந்த அன்பரசியை முறைத்தபடி பதில் கூறினான். “இதோ பார்க்கறீங்கல சிஸ்டர்… இப்படி அழுதுட்டே இருந்தா நான் எப்படி நல்லா இருக்க முடியும்?”

“இது உனக்கு புரியாது வினோ. அவ நிலைமையில யார் இருந்தாலும் இந்நேரம் ஒரு வழி ஆகி இருப்பாங்க! அதுவும் இன்னிக்கு நிலேஷும் நிக்கித்தாவும் ரொம்ப அழுதாங்களாமே?

பாவம் பசங்க!!! ப்ச்ச், உங்களுக்காக கர்த்தர்கிட்ட நான் ஜெபிக்காத நாளே இல்லப்பா! எல்லாம் நம்ம நேரம்.” அமைதியாக அவர் கூறவும், சில பேசா நிமிடங்கள் கழிய, கண்களை துடைத்து எழுந்து அமர்ந்தாள் அன்பு.

“சிஸ்டர் இத்தனை நாளா என்னை தான் பொண்ணு பார்க்க விடாம பண்ணிட்டு இருந்தான்.

இப்போ அவனுக்கே ஒரு பொண்ணை புடிச்சிருக்கு. நான் கல்யாணம் பேசறேன்னு சொன்னா ஒத்துக்க மாட்றான். நீங்களே கேட்டு சொல்லுங்க சிஸ்டர்.”

நன்றாக போட்டு கொடுத்த அன்பரசியை கண்டுக்காமல், சிஸ்டரின் பக்கம் திரும்பி, “ஆமா சிஸ்டர். எனக்கு அந்த பொண்ணை புடிச்சிருக்கு! கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு. ஆனா, இவ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கறதா இருந்தா மட்டுமே, நான் பண்ணிப்பேன்.

இதுல, நான் உறுதியா இருக்கேன்.” என அழுத்தமான குரலில் கூறிவிட்டு பேப்பர் படிக்க ஆரம்பித்தான். சிஸ்டருக்கு யாருக்காக பேசுவது என குழப்பாமாக போயிற்று. ஒரு பெண்ணாக யோசிக்கும் போது, வேறோரு திருமணம் வேண்டாம் என கூறும் அன்பையும் அவரால் ஒன்றும் கூற முடியவில்லை.

அதே சமயம் உடன்பிறவா தோழிக்காக வினோத் கூறுவதையும், மறுத்து பேச முடியவில்லை. இதை அவர் அன்பரசியிடம் வெளியிட, அவளுக்கு தோல்வி பெற்ற உணர்வே தோன்றியது.

எப்படியாவது சிஸ்டரிடம் பேசி, வினோத்திடம் சம்மதம் வாங்கி விடலாம் என இருந்தாள். இப்போது சிஸ்டரும் கை விரிக்கவும், அவளை சோர்வு எனும் பேர்வை வந்து போர்த்திக் கொண்டது.

இப்படியே வாக்குவாதமும் சமாதானமுமாக ஒரு வாரம் சென்று மறைய, குழந்தைகள் மீண்டும் இவளிடம் இருந்து பிரிக்கப்பட்டனர். இந்த முறையும் நிலேஷும் நிக்கித்தாவும் அழுகை கூப்பாடு போட்டு அவளையும் உடன் அழைக்க, வினோத் டென்ஷன் ஆனான்.

“ஹே… இதை எல்லாம் அம்மாகிட்ட மட்டும் தான் கேப்பீங்களா? உங்க அப்பாகிட்ட எல்லாத்தையும் கேளுங்க ஃபர்ஸ்ட். அப்புறமா அம்மாகிட்ட கேக்கலாம்.”

தன் வினோ மாமா கூறியதை நிலேஷ் நன்றாகவே உள்வாங்கினான். அதுவே, சிறிது நேரத்தில் சிரித்தபடி, ‘பை’ என தன் அன்னைக்கு கை ஆட்டியபடி செல்ல வைத்தது.

குழந்தைகளை ஜீவாவின் அன்னையிடம் ஒப்படைத்து விட்டு, திரும்பும் வழியில் தான் வினோத் மலர்விழியை பார்த்தது. அதற்கு பின் அவன் என்ன செய்து இருப்பான் என தெரியாததா?

காரை நிறுத்தி விட்டு, இறங்கி மலரிடம் பேச்சை, ச்சே ச்சே கடலை, பட்டானி, சுண்டல் முதல் வரை வறுக்க ஆரம்பித்தான். ஆனால், அவன் அறியாமல் போனது, ஜீவாவும் இதை பார்த்தான் என்பதே!

பார்த்தவுடன் ஜீவாவிற்க்கு தோன்றிய எண்ணம் – “இவன் என்ன மலர் பின்னாடியே சுத்திட்டு இருக்கான்? சிரிச்சு சிரிச்சு பேசியே கவுத்துடுலாம்னு பிளான் பண்றானா?

என்னவா இருக்கும்?” மலரிடம் இதை பற்றி விசாரிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டு, வீடு திரும்பியவனிடம் அவனின் மக்கள் விசாரனை நடத்த ஆர்வமாக இருந்தனர்.

அதிலிருந்து தப்பிக்க முடியாமல் சிக்கினான் ஜீவா! வசமாக!!!!!!!!

Super sema

Naa first time unga story padikiren pa... ஜீவா... அன்பு... Rendu kutties... Vinoth... எல்லா charaters yume semma... Vinoth enna மாறி ஒரு thozhan அன்பு ku chance ah illa... Enna aachi ஜீவா kum அன்பு kum rendu kuzhanthai இருக்கு இப்படி purinji irukaangale... Kuzhanthai kaagavaavathu senthu இருக்க lame...
 
Top