Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Naan... Enathu... Manathu... Episode 11 Precap

AshrafHameedaT

Administrator
Episode 11 - Precap

ஷர்மிளாவும் அவர்களோடு பொருந்த முயன்றாள், ஒட்டாத தன்மை முக சுணக்கம் என்று எதையும் காண்பிக்கவில்லை. உண்மையில் ஒட்ட முடியவில்லை. தனியாய் வளர்ந்தவளுக்கு அந்த சூழலோடு பொருந்த நாள் பிடிக்கும். நான்காம் நாள் நாளை கொண்டு போய் விடலாம் என்று முடிவெடுத்து “நாளைக்கு போகலாம்” என்று சொல்லிவிட,

“இல்லை, வேண்டாம், அவர் வந்து அழைச்சிட்டு போகட்டும்” என்று சொல்லிவிட்டாள். அவளின் குரலுக்கு யாராலும் மறுத்து பேச முடியவில்லை.

------------------------------------------------------------------

ரவீந்திரனுக்கும் தலைக்கு மேல் வேலை இருந்தது. அவன் சீர் குலைத்ததை எல்லாம் சீர் செய்து கொண்டிருந்தான். அதனால் முதலில் இதனை சரி செய்து விடுவோம் என்று பேயாய் உழைத்து கொண்டிருந்தான்.

பத்து நாட்கள் பேப்பர் ஃபாக்டரியில் எல்லாம் சரி செய்து விட்டான். பண பரிவர்த்தனை எல்லாம் சரி செய்து விட்டான். முறுக்கு கம்பிகளின் ஃபாக்டரியில் கேசவனின் பங்கை சரி செய்து அதற்குரிய தாஸ்தாவேஜூகளை அவரிடம் கொண்டு போய் அவரின் பேப்பர் ஃபாக்டரியில் கொடுத்தான்.

------------------------------------------------------------------------------

“அங்கே தான் நைட் கிளம்பறேன். காலையில் போய்டுவேன். பின்ன மதியம் போல கிளம்பி, இங்க நைட் வந்துடுவோம். இந்த நேரம் எல்லாம் உங்க பொண்ணுக்கு ஓகேன்னா” என்று சொல்ல, அவரின் முகத்தில் விரிந்த சிரிப்பு.

“எப்போ வீட்டுக்கு வர்றீங்க?” என்றவரிடம், “ஷர்மிளாவை கேட்டுட்டு சொல்றேன்” என்றான். இப்படி வார்த்தைக்கு வார்த்தை ஷர்மிளாவை கேட்டுட்டு சொல்றேன் என்றது கேசவனுக்கு அப்படி ஒரு திருப்தியை கொடுத்தது.

--------------------------------------------------------------------

மெதுவாய் தட்டினான், அது திறக்கும் வழியாய் காணோம் எனவும் ஃபோன் செய்து “கதவை திற” என,

“யார் நீ? எதுக்கு தொறக்கணும்? முடியாது போடா! சொல்லாம கொள்ளாம விட்டுட்டு போனவனுக்கு எல்லாம் கதவை திறக்க முடியாது” என்று அவளின் வார்த்தைகள் அடுத்த நொடி தெறித்து விழுந்தன.

--------------------------------------------------------------------

“நீ என்னை பழிவாங்கரதுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டயா, அதுக்கு தான் உடனே விட்டுட்டு போயிட்டியா?” என்றாள் கண்களும் உதடுகளும் துடிக்க, இத்தனை வருடத்தில் அவனுக்கு தெரிந்து ஷர்மிளா அழுது அவன் பார்த்ததேயில்லை.

“அப்போ நானு, இப்போ மட்டும் எதுக்கு வந்த? எனக்கு உன்னையே பிடிக்காது, எப்படி உன் வீட்ல இருப்பேன்னு யோசிக்க மாட்டியா?”

“இன்னும் எங்கப்பாவுக்கு லாஸ் பண்ணுவியா, பண்ணிக்கோ, என்னை அடிப்பியா, அடிச்சிக்கோ, எதுவும் நான் செய்ய மாட்டேன்”

“கல்யாணம்னா என்ன அவ்வளவு ஈசியா உனக்கு? நீ இப்படி எல்லாம் பண்ணுவேன்னு தெரிஞ்சிருந்தா, நான் கல்யாணத்துக்கு ஓகே சொல்லாமையே எல்லாம் ஃபேஸ் பண்ணியிருப்பேன்”

“எல்லோர் முன்னையும் என்னை அசிங்கப் படுத்திட்ட நீ. எல்லோர் முன்னையும் இது தான் நீ எனக்கு தேடி தர்ற மரியாதையா? அதுவும் சாதாரண நாள்ன்னா கூடப் பரவாயில்லை. ரூம்ல டெகரேட் செஞ்சு, என்னையும் இதை பண்ணு அதை பண்ணுன்னு அலங்காரம் செய்யச் சொல்லி...”

“சும்மா பேசாத, எனக்கு உன்னை அடிக்கணும் போல, மண்டையை உடைக்கணும் போல ஆத்திரம் வருது”. அருகில் நெருங்கி நின்றவன் “அடிச்சிக்கோ” என்றான்.

ஆக்கமும் எழுத்தும்..
மல்லிகா மணிவண்ணன்
 
Joher

Well-known member
Member
:love: :love: :love:

ஷர்மி அவனுக்கு நீ சளைச்சவ இல்லை.......
விட்டுட்டு போனவன் வந்து கூட்டிட்டு போகட்டும் :D:D:D

அவளை அங்கே விட்டுட்டு வந்து இங்கே பேயாய் உழைக்கிறியே.......
இதுக்கும் கேள்வி வந்துடக்கூடாதுன்னு தானே கம்பி பங்கு இப்போ குடுக்குற........

நைட் கிளம்பி அடுத்த நைட் இங்கேவா :eek::eek::eek:
முதலில் ஷர்மி வரணும் அப்புறம் உங்கம்மா :p:p:p

மினி ஈஷ் மாதிரி அடிவாங்க ரெடியா நிக்குறியே......

அவளோட கேள்வி ரைட் தானே.........
அவ அவங்க வீட்டில் பண்ணினதை நீ உங்க வீட்டுல பண்ணிட்ட......
மரியாதை ரொம்ப முக்கியம் உனக்கு......
அவளுக்கு???
 
Last edited:
Advertisement

Advertisement

Top